Jump to content

கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணம்:


Mayuran

Recommended Posts

கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பரிதாபகரமாக மரணித்துள்ளார்.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியினை சேர்ந்த இரண்டு குழந்தைகளது தாயாரான அவர் பலவீனமானவுடல் நிலையில் இருப்பதாகவும் அடுத்ததொரு கருத்தரிப்பிற்கான கால அவகாசம் தேவை எனக்கூறியே கட்டாயப்படுத்தி குறித்த கர்ப்பத்தடை ஊசி போடப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த தடுப்பூசி போடப்பட்டவேளையில் இந்த இளம் தாயான 26 வயதுடைய சதீஸ்குமார் மஞ்சுளா இருமாத காலம் கருத்தரித்த நிலையில் இருந்ததாகவும் அதையும் மீறி குறித்த கர்ப்பத்தடை  ஊசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில்  அவரதுடல் நிலை மோசமடையத் தொடங்கியதனால் பின்னர் அதற்கு மாற்றீடான தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதனைத் தொடர்ந்தும் மிகமோசமான உடல் பாதிப்பிற்குள்ளாகி கோமா நிலைக்கு சென்ற வேளை கடந்த 24ம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இந்தப் பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 4 நாடகளாக சிகிச்சைபெற்றிருந்த அவர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று (930.11.13) பரிதாகரமாக இன்று மரணமடைந்துள்ளாhர். பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் சொந்த இடத்திற்கு எடுத்துச் செலலப்பட்டுள்ளது.

இதனிடையே அவ்வாறு கர்ப்பத்தடையூசி போடப்பட்ட பலபெண்கள் போதிய கவனிப்பு இன்மை மற்றும் நோய் தொற்றுக்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99701/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

பரிதாபகரமான முடிவு.. ஆழ்ந்த இரங்கல்கள் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன இருக்கிறது??!!

Link to comment
Share on other sites

ஆத்திரம் ,கோபம் .....................முடியல ................என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன் .
 
 
ஆழ்ந்த இரங்கல்கள் தாயே ...........
Link to comment
Share on other sites

உண்மைதான் இத்தகைய செய்திகளைப் பார்க்கும்போதுதான் எமது கையாலாகத்தனத்தையும் இயலாமையையும் நினைத்து மனம் குமுறுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.