Jump to content

இந்தியாவின் பல்டி.நாம் என்ன செய்யப் போகிறோம்?


Recommended Posts

இந்தியாவின் பல்டி.நாம் என்ன செய்யப் போகிறோம்?

ஈழத் தமிழர்கள் நிலை
மட்டுமல்ல உலகத் தமிழர்களின் நிலையும் இன்று மிக மோசமான நிலைக்கு
தள்ளப்பட்டு வருகிறது.இந்திய மத்திய அரசு தமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த
தமிழர்களையும் அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ள ஆரம்பித்த நிலையில், சிலர்
இன்னமும் தெரிந்தோ தெரியாமலோ ஆதரித்து மத்திய அரசுடனான மயக்கத்தில்
இருந்து வருகிறார்கள்.

தமிழர்களின் முழு உணர்வுகளையும் புறக்கணித்து
இந்தியா இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளும் என யாரும் எதிர்பார்த்திருக்க
முடியாது. புத்தன் பிறந்த மண்,அகிம்சை பேசிய மண்,பங்களா
தேசத்திற்காகவும்,தென் ஆபிரிக்காவிற்காகவும் குரல் கொடுத்த மண், இன்று
சிலரின் சொந்த நலன்களுக்காக, அவை எல்லாவற்றையும் விற்று நிற்கிறது.

இலங்கைக்கு அதிக உதவிகளை தற்போது இந்தியா அறிவித்துள்ளது. இராணுவ பயிற்சி நிச்சமாகி தொடருகிறது.
ஈழப் போரில் இராணுவ ஆயுதங்கள் மட்டுமல்ல, இராணுவ அதிகாரிகளின் நேரடி உதவிகளும் சென்றடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக
கட்சிகளின் எதிர்ப்பும்,அதற்கு வெளியுறவு அமைச்சரின் பதிலும், இந்தியாவின்
நிலைப்பாட்டை உறுதிப் படுத்தியுள்ளது. இந்த நிலையில் புதிய முடிவொன்றை
இந்தியா அறிவித்துள்ளது. அதாவது இலங்கை அமெரிக்காவுடன் பேச வேண்டும்
என்பது தான். அதை நன்றாக உள்வாங்கி சிந்தித்தால், இலங்கை அமெரிக்காவுடன்
பேசினால், அமெரிக்காவின் சில கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் போர்க்
குற்றம்,இன அழிப்பு இவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்
என்பதாகும்.இதற்கு இந்தியா,இலங்கையை பேச வைக்க வழி செய்து உதவும்.

இந்த
நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மனங்கள், நிலைப்பாடுகள்,எதிர்ப்புக்கள்
எவையும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு சிறிது கூட ஆதரவாக இருக்காது என்ற நிலை
இந்தியாவினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.. அமெரிக்காவின் தீர்மானத்தினாலும்
கூட,பரமேஸ்வரனின் நேர்காணலில் சொல்லப்பட்டது போல், எதுவும் நடந்துவிடப்
போவதில்லை. இலங்கை தப்பித்துக் கொள்ள,இந்தியாவால் தப்பிக்க வைக்க, நல்ல
சந்தர்ப்பம் தற்போது கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஏன்
இந்தியா இலங்கையை காப்பாற்ற இவ்வளவு முனைப்புக் கொள்கிறது? ராஜபக்சே
கூண்டில் ஏற்றப்பட்டால, இந்தியாவும் கூண்டில் ஏற்றப்பட,போர்க்குற்றம் செய்ய
உதவிய சாட்சியங்கள் வெளிவரும் பட்சத்தில், சாத்தியம் உண்டா? இந்தியாவின்
உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சமா?என்ற கேள்விகள் எழ
ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் தமிழர்களின்

போராட்டங்களும்,உணர்வுகளும்,இனப்படுகொலையின் சாட்சியங்களும் கனவாகிப் போகுமா?

இந்தியா
நிச்சயம் மனம் மாறப் போவதில்லை.சென்ற ஆண்டைப் போல் ஏதாவது மாற்றத்தைக்
கொண்டு வந்து செயலற்ற நிலைக்குத் தள்ளும்.இல்லையேல் தற்போதய இந்தியாவின்
நிலைப்பாட்டால்,அதாவது அமெரிக்காவுடன் இலங்கை பேச வேண்டும் என்ற
கருத்தால்,தீர்மானம் சத்தற்று போலியாக மாறி விடும் நிலை ஏற்படும். ஏனெனில்
இந்தியா மட்டுமல்ல அமெரிகா மற்றும் அனைத்து நாடுகளும் தங்கள் சொந்த
பிராந்திய நலன்களிலேயே அதிக அக்கறை கொள்வதால், மனித உயிர்களை அந்த
உயிர்களுக்கு ஏற்பட்ட அக்கிரம அநியாயங்களை எண்ணிப் பார்க்கப் போவதில்லை
என்பது என்னவோ கசப்பான உண்மைதான்.

இந்த நிலையில் நாம் என்ன செய்யப்
போகிறோம்? அழுத்தங்கள் தொடர வேண்டும்.தமிழகத்தில் இருந்து காங்கிரஸ்
ஆதரவுக் கட்சிகள் ஒரம் கட்டப்பட்டு ஒதுக்கப்படல் வேண்டும்.ஒன்றுபட்டு
போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.இல்லையேல் மனிதம் செத்து விடும்.நீதி
பொய்த்து விடும்.இந்த நிலை அனைத்து நாடுகளிலும் தொடரும். ஏன் தமிழகமும்
அதற்கு விதிவிலக்காகி விட முடியாது.


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.com/t31607-topic#ixzz2MRC5alz8

Under Creative Commons License: Attribution
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.