Jump to content

தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு


Recommended Posts

தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு.

 

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள கொடுவாமடு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட தம்பனாம்வெளி கிராமத்தில் பாடசாலைக் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் தேன்சிட்டு உளவள அமைப்பின் ஒருநாள் விழிப்பணர்வு செயலமர்வு 06.03.2014அன்று நடைபெற்றது.

DSCF6276_1-1024x682.jpg

நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் உதயசிறீதர் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை , கிராமசேவையாளர் கோகுலன், அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா , நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் உப அமைப்பாளர் ரஜிக்காந்தன் மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜெனன் அவர்களும் பங்கேற்றிருந்தார்கள்.

இப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்றலில் மிகவும் பின் தங்கிய நிலமையில் காணப்படுகின்றனர். குடும்ப வறுமை , மற்றும் போரின் பாதிப்புகளினாலும் முற்று முழுதான பொருளாதார வீழ்ச்சியடைந்த நிலையில் வாழும் குடும்பங்களுக்கான மாற்றத்தை ஊக்குவிக்கும் நிகழ்வாக இச்செயலமர்வு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கான ஆதரவினை டென்மார்க்கிலிருந்து வினோதினி அவர்கள் வழங்கியிருந்தார். வினோதினியின் தந்தையாரின் நினைவுநாளான 6ம் திகதி இக்கிராமத்தின் பாலர்பாடசாலையின் பாலர்கள் 25பேருக்கும் மதிய உணவும் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

இப்பகுதிக்கான பாலர் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவரும் கொடுப்பனவின்றியே தமது சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இங்கு வருகைதரும் 25பாலர்களுக்குமான அடிப்படைத் தேவைகளையும் மற்றும் மேலதிக உதவிகளையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

இப்பகுதியிலிருந்து ஒரேயொரு மாணவன் மட்டுமே உயர்தரத்தில் கணிதப்பிரிவில் கற்றுக் கொண்டிருக்கிறார். இவரது குடும்ப நிலமை வறுமைக் கோட்டின் இருப்பதால் தொடர்ந்து கல்வியை கற்றலில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளார். இம்மாணவனுக்கான கல்விக்கான உதவியினை கிராம சேவகர் கேட்டுக் கொண்டார்.

தேன்சிட்டு உளவள அமைப்பானது இனிவரும் காலங்களில் மாதாந்தம் இத்தகைய விழிப்பூட்டல் கருத்தரங்குகளை கிராமம் தோறும் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தேவைப்படும் நிதியுதவி கிடைக்குமாயின் இப்பணியை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.

DSCF6267-150x150.jpg DSCF6276-150x150.jpg DSCF6277-150x150.jpg

DSCF6278-150x150.jpg DSCF6280-150x150.jpg DSCF6286-150x150.jpg

DSCF6287-150x150.jpg DSCF6303-150x150.jpg DSCF6317-150x150.jpg

DSCF6325-150x150.jpg DSCF6276_1-150x150.jpg

      உதவுவதற்கு:-

Telephone:  Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

Paypal Account – nesakkaram@gmail.com

 

http://nesakkaram.org/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.