Jump to content

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......


Recommended Posts

ஹ்ம்ம் 50000 ஆயிரம் மாவீரர்களுக்கு மேல் களப்பலியாகி போராடிய எமது போராட்டம் கடைசியில் திரைப்படங்களுக்கு எதிராக போராடுவதிலும் அது சம்மந்தமான அடிதடிகளிலும் வந்து நிற்கின்றது.......

Link to comment
Share on other sites

  • Replies 3.2k
  • Created
  • Last Reply

வைக்கோ அவர்கள் பா ஜ க வோடு கூட்டணி வைத்ததை கடுமையாக எதிர்த்த சீமான் இன்று அதே பாஜக வோடு ஒரே மேடையில்

Link to comment
Share on other sites

தமிழ் சினிமாவில் படைப்பாளிகளுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது.. படம் இயக்க வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு 'Updated' ஆக இல்லாததால், 'Outdated' ஆகிவிடுவார்கள்

இரு ஆண்டுகளுக்கு முன் 'வித்தகன்' பார்த்திபனைப் பார்த்தபோது நமக்கும் இதே நினைப்பு வந்தது. ஆனால் அந்த நினைப்பை அழித்துவிட்டார் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' பார்த்திபன்

படத்தின் தலைப்பு, தொழில்நுட்ப கலைஞர்களைத் தேர்வு செய்தது, காட்சிகள், கேமிரா கோணங்கள் என அனைத்து விஷயங்களும் புதிதாக இருக்க வேண்டும் என்பதில் ஏக கவனமாக இருந்திருக்கிறார் பார்த்திபன். வசனங்களில் மட்டும், அதே நக்கல், நையாண்டி, குத்தல், புத்திசாலித்தனம்!

ஆரம்ப நிமிடங்களிலிருந்து இடைவேளை வரையிலான ஒவ்வொரு காட்சிக்கும், வசனத்துக்கும் கைத்தட்டல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது... அடுத்த வசனத்தை கேட்க விடுங்கய்யா என்று சொல்லும் அளவுக்கு!

கதை இல்லாத படம் இது என்றுதான் பார்த்திபன் இந்தப் படத்தை அறிமுகப்படுத்துகிறார். ஆனால் வெள்ளைத்திரையைக் காட்ட முடியாதே. எனவே படத்தில் சில கதைகள் இருக்கவே செய்கின்றன.

Link to comment
Share on other sites

டக்கி மாமா சைக்கிள்ல டபிள்ஸ் போக கூப்பிட்ட போது வடக்கு முதலமைச்சர் விக்கி மாமாவும் போய் இருந்தா எப்பிடி இருக்கும் எண்டு கற்பனை பண்ணி பாத்தன் சிரிப்ப அடக்க முடியல்ல......

Link to comment
Share on other sites

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.

இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆம்..! இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்".

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கி கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ்க்கண்டம்.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடந்தான் "குமரிக்கண்டம்".

ஏழு தெங்கநாடு, ஏழு மதுரைநாடு, ஏழு முன்பலைநாடு, ஏழு பின்பலைநாடு, ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரைநாடு, ஏழு குரும்பனைநாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது.

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது.குமர ிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.

தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் சிவன், முருகர், அகத்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில் அனைத்துமே அழிந்துவிட்டது. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது . இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

Link to comment
Share on other sites

லிங்குசாமியிடம் நான்கு கதைகள் கேட்டு, அதில் இதை நான் தேர்ந்தெடுத்தேன் என்று சூர்யா அழுத்தமா சொன்ன போதே, மண்டைக்குள் மணியடித்தது. கதைத் தேர்வை முழுக்க முழுக்க ஹீரோக்களை நம்பி ஒப்படைப்பதன் பலனை பலமுறை பார்த்ததுதான் தமிழ் சினிமா!

Link to comment
Share on other sites

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 29 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர்.

Link to comment
Share on other sites

சில லட்சங்களே கொண்ட ஒரு மக்கள் தொகையின் லட்சியத்தை உயிர் மூச்சாக கொண்ட சில ஆயிரம் பேர்களை கொண்ட படையணியை உலகின் அதிபலம் பொருந்திய 30 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் கூடி அழித்து விட்டு இப்போ எப்பிடி அழித்தோம் என்று கொழும்பில் மாநாடு வேற அதில் உலக நாடுகளின் உயர் படையதிகாரிகள் வேற கலந்துகிறாங்கலாம்

வெக்கம் கெட்டவங்களா

Link to comment
Share on other sites

நியூஸ்: மனைவியிடம் அடிவாங்கிய அமைச்சர்/////////

இந்த விஷயம் ஓன்று தாய்யா அமைச்சரில் இருந்து சாதாரண மக்கள் வரை பாகுபாடே இல்லாம கிடைக்குது.....

Link to comment
Share on other sites

தி மு க வில் யார் யாருக்கு என்ன என்ன பதவிகள் கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ....தினமலர் நிருபர்கள் தங்க இஷ்டத்துக்கு இவருக்கு கொடுக்கணும் அவருக்கு கொடுக்கணும் எண்டு எழுதி தள்ளுறாங்க.......மொத்தத்தில் தினமலருக்கு தி மு க வ தினமும் குழப்பி விட்டா சரி........

Link to comment
Share on other sites

சிட்னியில் ஒரு வாரமா நல்ல மழை அடிச்சு ஊத்த போகுதாம் ஜாலி தான் நல்லா நித்தா கொள்ளலாம்......

Link to comment
Share on other sites

யோவ் அவனும் கிறிஸ்டியன்

நானும் கிறிஸ்டியன்

மொழி பற்று இனப்பற்று எல்லாத்தையும் விட எனக்கு மதப்பற்று தான் டா முக்கியம்......

இப்பிடிக்கு

சீமானின் மனது.......

Link to comment
Share on other sites

Sources : Tamil Super Star Rajinikanth likely to be BJP's CM candidate for 2016. Modi's blue eyed boy cum henchman Amit Shah in talks with Rajini. Rajini likely to announce his joining BJP to coincide with the release of his next flick 'Linga' and fill it with punch dialogues to the nightmare of Tamil film buffs.

Link to comment
Share on other sites

உலகில் மனிதர்கள் வசிக்க மிகச்சிறந்த நகரங்களில் முதல் 10 இடங்களுக்குள் ஆஸ்திரேலியாவின் 4 நகரங்கள் வந்திருகின்றது முதல் இடத்தை மெல்பேர்ன் நகரம் கைப்பற்றி இருக்கின்றது 139 நகரங்களில் நடாத்தப்பட ஆய்வுகளில் melbourne நகரம் முதலாவதாகவும் adelaide நகரம் 5 ஆவதாகவும் sydney 7 ஆவதாகவும் perth 9 ஆவதாகவும் என்று முதல் பத்து இடங்களில் 4 இடங்களை கைப்பற்றி இருக்கின்றன.....

இதற்க்கு காரணம் ஆஸ்திரேலியா மக்களின் உழைப்பு அந்த உழைப்பிலே தமிழ் மக்களின் உழைப்பும் இருக்கின்றது என்பதில் தமிழர்கள் தாரளமாக பெருமைப்பட்டு கொள்ளலாம்.....

Link to comment
Share on other sites

சர்ச்சைக்குரிய புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

ஹா ஹா ஒலகத்தில யாரோட வேணும் எண்டாலும் இங்கிலீஷ் பேசிடலாம் பட் சில சீனாக்காரங்க கூட

முடியல்ல .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஒலகத்தில யாரோட வேணும் எண்டாலும் இங்கிலீஷ் பேசிடலாம் பட் சில சீனாக்காரங்க கூட

முடியல்ல .....

 

 

பிரெஞ்சிலும் அப்படித்தான். :lol:

 

ஏன் 

கார் ஓட்டம்??

வீதியில்  கண்டாலே

நான் ஒதுங்கி  செல்லும்  ஒரே இனம் அவர்கள் தான். :D

Link to comment
Share on other sites

புலிப்பார்வை படத்தில் தமிழ் அமைப்புகள் எதிர்க்கும் காட்சிகள் நீக்கப்படும். அவர்களுக்கு படம்போட்டு காண்பித்த பின்னரே படத்தை வெளியிடுவோம்.

இயக்குனர் பிரவீன்காந்தி

அதையும் மீறி படத்தை தமிழ் அமைப்புகள் எதிர்தால் எவ்வளவு கோடி இழப்பு ஏற்பட்டலாலும் படத்தை திரையிட மாட்டேன் -

வேந்தர் மூவிஸ் மதன்..

Link to comment
Share on other sites

இன்று ஒரு தமிழக உறவோடு உரையாடிய போது அவர் கூறியது

இரு இனத்தவன் உரையாடும்போது மகிழ்ச்சியாய் இருப்பார்கள் ்்ஆனால் நாமோ ்்் ஒருவிதமான சோகம் இருக்குள்ள ்்்நான் உனர்கிறேன் அண்ணே

அதற்க்கு நான் கூறியது

தோல்வி அடையாத போராட்டங்களே இல்லை .....நிச்சயம் ஒரு நாள் வெல்லுவோம் நம்பிக்கையோடு இருங்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு தமிழக உறவோடு உரையாடிய போது அவர் கூறியது

இரு இனத்தவன் உரையாடும்போது மகிழ்ச்சியாய் இருப்பார்கள் ்்ஆனால் நாமோ ்்் ஒருவிதமான சோகம் இருக்குள்ள ்்்நான் உனர்கிறேன் அண்ணே

அதற்க்கு நான் கூறியது

தோல்வி அடையாத போராட்டங்களே இல்லை .....நிச்சயம் ஒரு நாள் வெல்லுவோம் நம்பிக்கையோடு இருங்கள்.....

 

 

இன்றைய  தமிழக நிலை தான் அவரது வெறுப்புக்கு காரணம்

அதை நாம் வளர்த்துவிடக்கூடாது

 

நாம் தமிழர் கட்சிக்கும்

மாணவர் அமைப்புக்களுக்கும் இடையில் பிரிவினைகளை தவிர்க்கணும்

இது வளர்ந்தால்

சிங்களத்தை வெல்லவே முடியாது

Link to comment
Share on other sites

அந்த தமிழக உறவு மேலும் கூறியது....

தமிழினத்தின் விளைச்சல் நிலங்களில் பயிரைவிட கோரைகளே அதிகம் உள்ளன

ஒன்றில் பெருமை கொள்வோம் ்்்்ஒரு தமிழன் தயவு இல்லாமல் ஒரு தமிழனை அனுவளவும் அசைக்கமுடியாது ்்்ராவணன் காலம் முதல்

Link to comment
Share on other sites

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று ஒரு திருமண விழாவில் பேசியதன் ஒரு பகுதி.....

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வாழ்க்கையில் முன்னேறும் போது பல தடைகள் வரலாம். தடைகள் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். தடைகளைக் கண்டதும் மலைத்துப் போய் மனம் தளர்ந்து விடுபவர்களால் வெற்றியை அடைய முடியாது. தடைகளைத் தகர்த்தெறியக் கூடிய மனப்பாங்கினை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்பமும், துன்பமும் வாழ்க்கையின் இரு பக்கங்கள். வாழ்க்கை என்றால் அதில் தொல்லை இருக்கும்; கவலை இருக்கும்; இவற்றிக்கு இடையே இன்பமும் இருக்கும். அப்படி இருந்தால் தான், அந்த வாழ்க்கை முழுமையானதாக, சுவையானதாக, பயனுள்ளதாக இருக்கும்.

தோல்வி காணாத மனிதன் முழு மனிதன் அல்ல என்றார் அறிஞர் அறிஸ்டோட்டில். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும், துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள். கடவுள் மீதும், உங்கள் திறமையின் மீதும் முழு நம்பிக்கை வைத்தால் துன்பங்களை முறியடித்து வெற்றியை எட்டுவது நிச்சயம். ‘எல்லாம் நன்மைக்கே' என்று எடுத்துக் கொள்ளும் பக்குவம் ஏற்பட்டால், தடைகளைத் தாண்டி, இலக்கை நோக்கி பயணம் செய்ய அது வழி வகுக்கும். நிச்சயம் நன்மையைப் பெறலாம்.

Link to comment
Share on other sites

அடுத்து வரும் 10 நாட்களும் தினம் ஒரு உலகத்தில் உள்ள முதன்மையான 10 சக்தி வாய்ந்த ராணுவங்கள் பற்றி பார்போம்......

முதலில்

ஈடு இணையில்லாத அளவிற்கு 612 பில்லியன் அமெரிக்க டாலரை பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு ஒதுக்கியுள்ள அமெரிக்காவின் ராணுவம் மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும், நுட்பம் வாய்ந்ததாகவும் செயல்படுகிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு 19 விமானம் தாங்கிகளை வைத்துள்ளது அமெரிக்கா. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் விமான தாங்கிகளையும் கூட்டினாலும் கூட இவர்களுக்கு அருகில் செல்ல முடியாது; அதன் எண்ணிக்கை மொத்தம் 14 மட்டுமே. உங்களுக்கு தெரியுமா - பாதுகாப்பிற்காக பட்டியலில் உள்ள அடுத்த 10 நாடுகள் செலவழிக்கும் கூட்டு தொகையை விட அமெரிக்க அதிகமாக செலவிடுகிறது. அதனால் தான் உலகத்தில் உள்ள மிகப்பெரிய சக்தி வாய்ந்த ராணுவத்தை அமெரிக்கா கொண்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் மனிதர்கள் வசிக்க மிகச்சிறந்த நகரங்களில் முதல் 10 இடங்களுக்குள் ஆஸ்திரேலியாவின் 4 நகரங்கள் வந்திருகின்றது முதல் இடத்தை மெல்பேர்ன் நகரம் கைப்பற்றி இருக்கின்றது 139 நகரங்களில் நடாத்தப்பட ஆய்வுகளில் melbourne நகரம் முதலாவதாகவும் adelaide நகரம் 5 ஆவதாகவும் sydney 7 ஆவதாகவும் perth 9 ஆவதாகவும் என்று முதல் பத்து இடங்களில் 4 இடங்களை கைப்பற்றி இருக்கின்றன.....

இதற்க்கு காரணம் ஆஸ்திரேலியா மக்களின் உழைப்பு அந்த உழைப்பிலே தமிழ் மக்களின் உழைப்பும் இருக்கின்றது என்பதில் தமிழர்கள் தாரளமாக பெருமைப்பட்டு கொள்ளலாம்.....

 

இதுக்கை கனடாவின்ரை நகரங்களும் முன்னுக்கைதான் நிக்கிது.sign0142_zps3b64015e.gif.....ஜேர்மனி கிட்டவும் வரேல்லை ok_zps70445ec4.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.