Jump to content

சிறிலங்கா செல்லும் பாதை-ஒரு செய்தி அலசல்


Recommended Posts

யாழ்க்கள செய்திக் குழுமத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த வாரச் செய்தி ஆய்வை நான் எழுதுகிறேன்.இதைப் ஆய்வென்றாமல் அலசல் என்றால் தான் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் தமிழ் பத்திரிகை உலகில் எழுதப்படும் அலசல்கள் எல்லாமுமே ஆய்வென்று சொல்லப்படுவது முதலில் தவறானது.மேலும் செய்திகளை சுய பார்வையில் தருவது அலசலே தவிர ஆய்வல்ல.

எனது கவனத்தை ஈர்த்த பிரதானாமான செய்தி சிறிலங்காவின் பொருளாதாரம் பற்றியது.இது பற்றி பல கட்டுரைகள் ப்லூம்பேர்க்,மற்றும் ரொய்ட்டர்ஸ் வெளியிட்டிருந்தார்கள்.அதனைத

Link to comment
Share on other sites

நாரதரின் அலசல் நன்று. அதில் உங்களது அலசலின் முடிவில் தெரிவிக்கப்பட்ட விடயம் எனக்கு உடன்பாடானது. யுத்தம் பற்றிய வினைவுகள் தென்னிலங்கைச் சிங்களவர்களுக்கு பெருமளவில் மறைக்கப்படுகின்றது. இவைகளையெல்லாம் மீறி யுத்தம் பற்றிய செய்தியும் அது பற்றிய பயமும் சிங்கள மக்களிடம் ஏற்படும்போது அனைத்து வழிகளும் சீராகலாம் என்பது எனது கருத்து. இதனைக் களந்தான் தீர்மானிக்கக் கூடியது. யுத்தம் செய்வதற்கு இராணுவத்தினர் மறுக்கும் நிலையொன்று உருவாக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

அருமை நாரதர்.

  • அலசலிற்கு எடுத்துக் கொண்ட பொருளாதாரம் என்ற கருப் பொருள்.
  • அலசிய முறை, அதல் நேர்மையாக மூலங்களோடு மேற்கோள்காட்டிய புளும்பேர்க் றொயிற்றேர்ஸ் போன்றவர்களின் ஆய்வு முடிவுகள்.

வரிக்கு வரி மொழிபெயர்பு செய்து போட்டே மூலம்போடாத புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் உலகில் இது முன்உதாரணமாக இருக்கட்டும்.

இந்த அலசலை முழுமைப் படுத்த பின்வரும் விடையங்களை உள்ளடக்கி இருக்கலாம்.

  1. சிறீலங்கா தனது வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையை நிரப்ப infrastructure development என்று soveregin bond மூலம் நிதியை பெற முயற்சிப்பது . தற்பொழுது உள்ள subprime mortgage meltdown இனால் வந்த credit crunch இல் இது எந்தளவிற்கு வெற்றி பெறும்? அத்தோடு சிறீலங்காவின் credit rating இன் பலவீன நிலை அதை மேலும் பலவீனப்படுத்தக் கூடிய வசதிகளை கொண்டிருக்கும் புலிகள்.
  2. யப்பான் அமெரிக்க நலன்களிற்கு மறைமுகமாக fund பண்ணும் முகவர் நாடு என்பதற்கு யப்பான் அண்மையில் பலஸ்தீனத்தில் அப்பாஸ் தரப்பிற்கு தெரிவு செய்து நிதி உதவி செய்ததை குறிப்பிடலாம்.
  3. சிறீலங்கா தனது ஏற்றுமதி கடந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக தம்பட்டம் அடிக்கிறது. இதற்கான 1 முக்கியகாரணி தொடர்ச்சியாகப் பலவீனமடைந்துவரும் சிறீலங்கா நாணம் சிறீலங்கத்தயாரிப்புகளை உலகச் சந்தையில் மலிவாக்கிறது.
  4. சிறீலங்காவின் வெளிநாட்டு நாணய இருப்பு (foreign currency reserves) மற்றும் அதன் சர்வதேச வர்த்தகம் என்பது பெரும்பாலும் அமெரிக்க வெள்ளியில் தான் நடக்கிறது. அமெரிக்க வெள்ளியின் அண்மைக்கால வீழ்ச்சி என்பது வீழ்ந்து கொண்டே இருக்கும் சிறீலங்காவின் நாணயத்திற்கு தற்காலிகமாக எதிர்மறையான சாதகமான தாக்கத்தைத் தருகிறது. ஆனால் நீண்டகால நோக்கில் உலக பொருளாதாரத்தில் அமெரிக்க வெள்ளிக்கு இருக்கக் கூடிய பலவீன நிலை என்பது இன்னொரு பாதகமான விடையமாக சிறீலங்காவிற்கு இருக்கப் போகிறது.

யப்பான் சிறீலங்கா இனப் பிரச்சனை விவகாரத்தில் தலையிடுவதையும் இணைத் தலமைநாடுகளின் அங்கத்தவராக இருந்ததையும் இந்தியாவிற்கு எதிரான ஒருவிடையமாக சித்தரித்து சிற்றின்பம் கண்டவர்கள் நமது ஊடகங்கள் கடந்த சில வருடங்களாக :lol: . இந்தக் கற்பனைப் புலம்பல்கள் மத்தியில் அமெரிக்கா - யப்பான் - இந்தியா அச்சை நம்மவர்களிற்கு தொளிவு படுத்தியது நல்லவிடையம். யப்பானிற்கு என்று பெரிய அளவில் தனித்த ஒரு நிகழ்ச்சி நிரல் இருப்பதாகத் தெரியவில்லை. வெறுமனே இன்னொரு தரப்பு என்ற தேற்றப்பாட்டாக இயங்கும் முகவரே என்பதே அவர்களது வெளியுறவுக் கொள்கையாக இருக்கிறது.

பொதுவாக தெளிவு படுத்தப்படாமல் அங்கலாய்க்கப்படும் விடையம்...

புலிகள் செய்யப் போவதாக எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் அந்த அடுத்த நடவடிக்கைகள் (இதை பற்றியும் அது சிறீலங்கா மீது ஏற்படுத்தக் கூடி தாக்க பற்றியும் பல்வேறு தரப்பினர் வித்தை வித்தையாக வருணிப்பதற்கு இதுவரை முயன்றதைக் கண்டு மலர்களும் பெண்களும் பொறுமைப்படப் போயினம் :D ) மேற்கு கூறிய அமொரிக்க - (யப்பான்) - இந்தியா என்ற கூட்டுத் தரப்பின் அணுகுமுறையில் பாரிய மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த அணுகுமுறை மாற்றம் என்பது நாம் இருக்கும் தற்போதைய அவல நிலையில் பாரியதாக தெரியலாம். அத்தோடு பாரியதாக தெரிய வைக்க முயற்சிப்பார்கள் மாற்றத்தை காட்டுபவர்கள். அது எமது நம்பிக்கையை மீளப் பெறுவதற்கும் புலிகள் மீது ஒருவகை அழுத்தத்தை கொடுக்கும் முயற்சி. எனவே இது பற்றி நாம் தெளிவு பெறவேண்டும் அதாவது அந்த அணுகுமுறை மாற்றம் என்பது வெளிப்பார்வையில் பாரியதாகச் சோடிக்கப்படும். மூடிய அறைக்குள் நிகழும் பேச்சுவார்த்தைகள் பேரம்பேசல்கள் வழமைபோல் இறுக்கமாகத்தான் இருக்கும். அதேபோல் வரக் கூடிய மாற்றம் என்பது நிரந்தரமானது அல்ல என்பதையும் தெளிவாக உணரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா.. போற பாதை இருக்கட்டும்.. தமிழர் போராட்டம் போற பாதையை அலசுங்கோ..!

சிறீலங்கா ஒவ்வொரு ஈழப்போரிலும் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தி இருக்கிறதே தவிர.. இழந்திடவில்லை..! :angry: :lol:

Link to comment
Share on other sites

இன்றைய காலகட்டத்தில் அவசியமான செய்தி அலசல். பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட உங்கள் அலசலும் - அலசிய விதமும் நன்று. ஒரு தாக்குதல் ஏற்படுத்தக் கூடிய உடனடி விளைவுகள் தாண்டி, வெவ்வேறு மட்டங்களில் அதன் விளைவுகள் எதிரொலிக்கும் என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். எப்ப, எங்க தாக்குதல் நடக்கும் - எப்ப ஒரு பாரிய யுத்தநடவடிக்கைதொடங்கும் என்கிற ஆய்வுகளையும், பரபரப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும

Link to comment
Share on other sites

நாரதரின் அலசலும், குறுக்காலபோவானின் பதில்களும் நன்றாக இருக்கிறது.

வெளினாட்டுச் செலவணி இலங்கைக்கு செல்வதற்கு அதிகளவில் சிங்களவரை விட புலம் பெயர்ந்த தமிழர்களே உதவுகிறார்கள். அவர்கள் தங்களது உறவுகளுக்கு பணத்தினை கனடா, ஜரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அனுப்புகிறார்கள். இதில் இருந்து இலங்கைக்கு அன்னிய செலவணி மூலம் பணம் கிடைக்கிறது.

இப்பொழுது மத்திய வங்கியில் இருந்து அரசு பணத்தை எடுக்கிறது. மத்திய வங்கி வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் வங்கியில் பணத்தை வைப்பிலிட விரும்புவார்கள்(குறிப்பாக தமிழர்கள் தான் அதிகளவு சேமிப்பு பழக்கமுடையவர்கள்). வங்கியில் மக்களுக்கு வழங்கும் கடன் உதவிகள் குறைக்கப்பட்டு வருகிறது அல்லது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணம் வெளியே செல்லாமல் வங்கியில் இருக்க அரசு விரும்புகிறது. ஆனால் வங்கியில் இருந்து பெறப்படும் பணம், மகிந்தா அரசின் முழுமையான தேவைகளுக்கு நிவர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

//As already explained a large number of persons, both males and females are goingabroad for employment (See Appendix (2)). Though they are employed, such personsare not included in the employed population within Sri Lanka and therefore getsexcluded from the labour force within the country. This however, helps to ease the unemployment problem within Sri Lanka and the remittance from those employed abroad to Sri Lanka is one of the main source of foreign exchange to the country. In1998, the total private remittances from abroad was Rs.64,585 million (US $ 999 million) and in 2002 it has increased to Rs. 123,183 million (US $ 1,287 million). //

//SRI LANKA’S

MIGRANT LABOR REMITTANCES:

Enhancing the Quality and Outreach of

the Rural Remittance Infrastructure

Esperanza Lasagabaster

Samuel Munzele Maimbo

Sriyani Hulugalle

World Bank Policy Research Working Paper 3789, December 2005//

http://www-wds.worldbank.org/servlet/WDSCo...PDF/wps3789.pdf

Table 1 Estimates of Workers’ Remittances Channeled through the Formal Financial Infrastructure

(US$ Billion)

1999 2000 2001 2002 2003 2004 2003 (per capita US$)

Sri Lanka 1.0 1.2 1.2 1.3 1.3 1.3 67.7

Sri Lanka: as percent GDP 6.8 7.1 7.5 7.9 7.1 7.1

Source: World Bank (2005)

//Significantly, remittances are larger1and more stable2 than foreign direct investment

(FDI), and on a per capita basis, workers’ remittances to Sri Lanka are the highest in South

Asia (Figure 1). In recent times, remittances to Sri Lanka have exceeded FDI inflows by 2 to

3 times; more than doubled net receipts of foreign assistance; and reached close to 25

percent of export earnings, second only to the garment industry and ahead of tourism and

tea -- the island’s traditional export industry. They account for 7 percent of gross domestic

product. At the microeconomic level, about 10 percent of households are recipient of

overseas and domestic remittances. Overseas and domestic remittances constitute as much

as 20.7 percent and 9.1 percent, respectively, of total income of recipient households,

according to the 2001/2002 household survey.//

//Remittance flows are set to continue increasing as unskilled workers continue to migrate to the

Middle East (Annex 1). For the unskilled worker, temporary migration to the Middle East4

brings in earnings that are 8 times greater than what could be expected at home.5 The Sri

Lanka Bureau of Foreign Employment (SLBFE) estimates that 49 percent and 21 percent of

Sri Lankans departing to work overseas in 2003 were housemaids or unskilled, respectively

(Figure 2). Notably, nearly 70 percent of Sri Lankan temporary migrants are female (Annex

1); most of them working as housemaids. Just over one percent of all migrant workers are

classified as skilled.//

//It is also debating the

capacity of formal financial institutions to facilitate migration policies and the challenge of

enhancing the quality and outreach of the remittance infrastructure, especially in the face of

an active informal remittance sector. To the extent remittances are transferred through

formal financial institutions, the government’s balance of payments benefits from the

increased foreign-exchange reserves. In addition, the anonymity that is possible through

informal remittance systems renders remittance systems highly vulnerable to abuse and

illegal activities. Like other governments in remittance recipient countries, the Sri Lankan

authorities are interested in having as much of the remittance flows go through formal

conduits//

//Areas of conflict are also more likely to be linked to informal methods of money transfers. The

northern parts of Sri Lanka, for example, have limited formal financial services. Migrants

from that region resort to the Hawala system and in-kind remittance services to make

remittances. Informal remittance services are also attractive to the undocumented

immigrants, who may not be permitted to have bank accounts or do business with formal

institutions. This is said to be particularly important to Sri Lankan migrants based in Italy.//

//To the extent remittances are transferred through formal

networks, the government’s balance of payments benefits from the increased foreignexchange

reserves and the risks posed by informal networks are minimized.//

மேலுள்ள பந்தியின் படி வங்களினூடாக சிறிலங்காவிற்கு அனுப்பப் படும் பணமே ,அரசின் அன்னியச் செலவாணிக் கணக்கில் காட்டப்படுகிறது.வெளி நாட்டு செல்லும் எழுபது சதவீதமானோர் வீட்டுப்பணியாளர்கள்.அத்தோடு தேயிலை ஏற்றுமது வெளி நாட்டு முதலீடு இவை எவற்றையும் விட இந்த பணியாளர்கள் அனுப்பும் பணமே மிக அதிகமாக இருக்கிறது.2004 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 7 சதவிகிதமாக இருக்கிறது.1.3 பில்லியன் பணம் இவ்வாறு 2004 ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளது.

ஆகவே சிறிலங்காவிற்குப் பணம் அனுப்ப வேண்டுமாயின் அது அரசுக்கு முண்டு கொடுக்கும் செயலாக இல்லாமல் இருக்க வேண்டும் எனில் வங்கி நடைமுறைக்குள்ளாக பணத்தை அனுப்ப வேண்டாம்.

Link to comment
Share on other sites

19,930 கோடி ரூபாய்கள் இலங்கைக்கான 2007 ம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவீனாமாகும்... அதில் 10,000 கோடி ரூபாய்கள் தமிழருக்கு சொந்தமானது... இதை விளங்கி கொள்ளும் வரை இலங்கை பொருளாதாரம் ஆட்டம் தான் கொள்ள முடியும்... ! விழுந்து விட போவதில்லை...!

மத்திய கிழக்கு பணியாளர்கள் தரும் பணம் இலங்கைக்கு போரினால் புலம்பெயர்ந்த தமிழர்கள் தருவதோடு ஒப்பிடும் போது அது சோழ பொரி... ! கட்டுரையாளர் இதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்...!!

இதை முதலில் பார்க்க வேண்டாம்.... ( கட்டுரையை வாசித்த பின்னர் இதை பார்க்கவும், குழப்பமடைவதை தவிர்க்கலாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரே உங்கள் ஆய்வுரைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Worker Remittances என்பது நான் அறிந்தவரையில் தொழில் ரீதியில் வெளிநாடு போனவர்களால் ஊருக்கு அனுப்ப படும் சம்பளம்...

North America

South and Central America

European Union

Eastern Europe

Europe Other

Far East Asia

Australia

நாடுகளில் இருந்து இலங்கைக்கு வெள்ளை பணமாக வங்கிகளுக்கே அனுப்புவோர் அனுப்பும் பணத்தொகையே 777 மில்லியன் அமெரிக்க டொலர்களா...???? கேட்கவே தலைசுத்துதே... !

அப்ப பொருட்களாக இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் போதும்... சுங்கமாகவும், தீர்வையாகவும் போக ஏற்றுமதி செய்த பொருட்களை குடும்பமாக வாங்கி கொடுக்கும் அன்னிய செலவாளி எவ்வளவு....??? உண்டியல் மூலம் இலங்கைக்குள் தள்ள்ளிவிடும் பணத்தின் அளவீடு என்ன...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் பொருளாதார வீழ்ச்சியை தொட்டு சென்று இருக்கிறீர்கள்.

வாழ்த்துகள் நாரதர். தொடர்ந்து இதுபோன்ற ஆக்கங்கள் வெளிவர வேண்டும். உங்கள் திறமை வெளிப்பட வேண்டும்.

புலம் பெயர்ந்தவர்கள் வங்கி மூலம் பணம் அனுப்புவதை நிறுத்துவதோடு, சிறிலங்கா தயாரிப்பு பொருட்களை புறக்கணிப்பது மூலமும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைக்கும் பணத்தை தடைசெய்ய முடியும்.

விடுதரலைப்புலிகளின் தந்திரோபாய யுக்கிகள் தான் சிறிலங்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

சிறீலங்கா.. போற பாதை இருக்கட்டும்.. தமிழர் போராட்டம் போற பாதையை அலசுங்கோ..!

சிறீலங்கா ஒவ்வொரு ஈழப்போரிலும் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தி இருக்கிறதே தவிர.. இழந்திடவில்லை..! :angry: :mellow:

ஈழ போராட்டதை மையப்படுத்தி ஆராய்வது நல்லதுதான். அதுக்கு இலங்கை அரசாங்கம் பலமாக இருக்க வேண்டாமா.? இப்ப ஒரு முப்பது வருசமாய் இலங்கை படைகள் சண்டை பிடிக்கினம். அவர்கள் சாதித்தது என்ன.? தங்களது சொந்த நாட்டுக்கை இடங்களை பிடிச்சு போட்டம் எண்டு கொண்டாட்டங்களை செய்ததை தவிர. அண்டைக்கும் சரி இண்டைக்கும் சரி தமிழர் போராட்டத்தின் வழங்களும் பன்முக படுத்த பட்ட தன்மையும் வளர்ந்து இருப்பதால்தான், இலங்கை இன்னும் ஒரு நாட்டை வெண்ற சந்தோசத்தை கொண்டாடுகிறது.

30 வருட போரிலை இலங்கை அரசாங்கம் என்னத்தை சாதித்து விட்டது.? புலிகளின் 19 ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளை பலிகொண்டு விட்டோம் என்பதா.? அதனால் போராட்டத்தின் பின்னால் அவர்களின் உறவுகள் எல்லாம் திரண்டு நிற்பதை அவர்களால் தடுக்க முடிந்ததா.? இல்லை 60,000 மக்களை கொன்று மக்களை பயமுறுத்தி வைக்க பார்க்கிறதே அதுவா ? . அவர்களால் செத்து போனவர்களின் உறவுகள் விடுதலைக்கு உரம் சேர்ப்பதை தடுக்க முடிகிறதா.? நாளாந்தம் தாயகத்தில் எதிரி துன்புறுத்துகிறான் எண்றால் அங்கு நாளாந்தம் யார் எப்படி போனால் எனக்கு என்ன எண்று இருந்த உறவுகள் தமிழர் தாயகத்தை நோக்கி தள்ள படுகிறார்கள் எண்று அர்த்தம். அவர்களின் புலம் பெயர்ந்த உறவுகள் தங்களின் கடமையை செய்ய வைக்க முன் தள்ள படுகிறனர்.

அதோடு நில்லாமல் தமிழர் பிரதேசம் உட்பாடு என்கிற ஐக்கிய இலங்கைக்காய் செலவளிக்கபடும் பணம் இலங்கை சிங்களவரின் தாயகத்தை மேம்படுத்த பயன் பட்டு இருக்குமானால் சிங்கள பகுதிகளை, அந்த மக்களை இந்த 30 வருடங்களில் உலக பணக்காறர்கள் வரிசையில் அமர்த்தி இருக்க முடியும். ஆனால் இந்த காலகட்டத்தில் தமிழர் பகுதிகளில் சில சுறண்டல்கள் நடந்தாலும் அவை சிங்கள இராணுவத்தை பலப்படுத்த தேவையான பணத்தை ஈட்டி கொடுக்கவில்லை. இலங்கை சிங்களவர்களையும் வளப்படுத்தவில்லை..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.