Jump to content

இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: உ.பி., ராஜஸ்தானில் கடும் வீழ்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை | படம்: பிடிஐ

9 மாநில இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கை ஓங்கியுள்ளது; ராஜஸ்தானிலும் ஆளும் பாஜகவுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது.

 

 

மூன்று மக்களவை மற்றும் உ.பி.யின் 11, ராஜஸ்தானின் 4, குஜராத்தின் 9, மேற்கு வங்காளத்தின் 2, அசாமின் 3 மற்றும் சிக்கிம், திரிபுரா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் 33 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. அத்தனை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. குஜராத் வதோதரா மக்களவை தொகுதி, மணிநகர் சட்டப்பேரவை தொகுதி, மேற்குவங்கத்தின் பசிராத் தக்‌ஷின் சட்டப்பேரவை தொகுதிகள் என அங்கொன்றும் இங்கொன்றுமாக பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் பரவலாக தோல்வியை தழுவியுள்ளது.

 

 

ராஜஸ்தானில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு:

 

 

ராஜஸ்தான் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

வெயர், நசீராபாத், சுராஜ்கர், கோட்டா ஆகிய 4 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை காங்கிரசிடம் பாஜக இழந்துள்ளது. கோட்டா தொகுதியை மட்டும் அக்கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் அம்மாநில பாஜக தலைவர் அசோக் பர்னமி கூறும்போது: "மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம். கட்சித் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து செயல்படுவோம்" என்றார்.

தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்திலேயே முதல்வர் வசுந்தரா ராஜேவை

சந்தித்த மாநில பாஜக தலைவர் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்துள்ளார்.

 

மேற்குவங்கத்தில் மலர்ந்த தாமரை:

 

மேற்குவங்கத்தில் பசிராத் தக்‌ஷின், சவுரிங்கீ ஆகிய 2 சட்டபேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளில், பாஜக வேட்பாளர் ஷமிக் பட்டாச்சார்யா பசிராத் தக்‌ஷின் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சவுரிங்கீ தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

 

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் ஹூசைன் கூறியதாவது: சில இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. முடிவுகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. மக்கள் உள்ளூர் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளனர். அதே வேளையில் மேற்குவங்கத்தில் தாமரை மலர்ந்துள்ளது மிகவும் நல்ல செய்தி.

 

இடைத்தேர்தல் முடிவுகளை தேசிய மற்றும் மாநில அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகக் கூடாது என்றார்.

 

குஜராத்தில் 7 இடங்களில் பாஜக வெற்றி:

 

குஜராத் மாநிலத்தில் 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒரு மக்களவை தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 6 சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு மக்களவை தொகுதி என மொத்தம் 7 இடங்களிலும் காங்கிரஸ் 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக குஜராத்தின் 26 மாவட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல் குஜராத் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீசா, மங்ரோல், கம்பாலியா ஆகிய மூன்று தொகுதிகளை காங்கிரசிடம் பாஜக இழந்துள்ளது.

இருப்பினும், குஜராத் மாநிலம் வதோதரா மக்களவை தொகுதியில் பாஜக 3 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திகல் வெற்றி பெற்றுள்ளது.

 

நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாரணாசி, வதோதரா தொகுதிகளில் வதோதரா தொகுதியிலிருந்து அவர் ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

 

பாஜக வேட்பாளர் ரஞ்சன்பென் பட் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர ராவத்தைவிட 3,29,507 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவந்திகா சிங் அறிவித்தார்.

 

மேடக்கை தக்கவைத்துக் கொண்ட தெலங்கானா

 

தெலங்கானாவின் மேடக் மக்களவை தொகுதியில், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் வேட்பாளர் கே.பிரபாகர் ரெட்டி 3,61,277 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

தெலங்கானா முதல்வரானதால் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தெலங்கானாவின் மேடக் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

 

உ.பி.யில் சமாஜ்வாதி கை ஓங்கியது

 

உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதிக்கும் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் 7 இடங்களில் வெற்றி, 4 இடங்களில் முன்னிலை என சமாஜ்வாதி கட்சியின் கை ஓங்கியுள்ளது.

தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்: "மக்களவை தேர்தலில் மதவாத சக்திகளால் மக்கள் கவரப்பட்டனர். ஆனால் இப்போது அவர்கள் உண்மை நிலை உணர்ந்துள்ளனர். மதவாத சக்திகளை தோற்கடித்துள்ளனர்" என்றார்.

 

அசாமில் காங்கிரஸ் வெற்றி

 

அசாமின் லக்கிபூர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்தீப் கோலா, பாஜக வேட்பாளரை 9172 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ராஜ்தீப் கோலா பெற்ற மொத்த வாக்குகள் 40,090 ஆகும். மொத்தம் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

 

சிக்கிமில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி

 

சிக்கிம் மாநிலத்தில் சுயேட்சை வேட்பாளர் ரூப் நாராயணன் சாம்லிங் வெற்றி பெற்றார். இம்மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. களத்தில் பாஜக, காங்கிரஸ், சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளும் இருந்தன. இம்மூன்று கட்சி வேட்பாளர்களையும் வீழ்த்தி சுயேட்சை வேட்பாளர் ரூப் நாராயணன் சாம்லிங் வெற்றி பெற்றுள்ளார்.

 

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி:

 

திரிபுராவில் நடந்த ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரவத் சவுத்ரி வெற்றி பெற்றார். விவசாயத் துறை முன்னாள் ஊழியரான இவர் 21,759 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

 

மோடி அலை ஓய்ந்ததா?

 

9 மாநில இடைத்தேர்தலில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அடித்த மோடி அலை இன்னும் தொடர்கிறதா என ஆவலுடன் எதிர்பார்க்கப்ட்ட நிலையில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பிஹார் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், மக்களவை தேர்தலில் அடித்த மோடி அலை ஓய்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

காங்கிரஸ் கருத்து

 

இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 9 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமையாத நிலையில், பிரித்தாளும் அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. 

 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article6415787.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.
    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.