Jump to content

கூடங்குள மின்சாரம் முழுவதும் வேண்டும்: ஜெ


akootha

Recommended Posts

[size=4]கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் இந்த கோரிக்கை ஏற்கப்படுமானால், மின் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழகத்திற்கு, ஓரளவு விடிவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.[/size]

[size=4]இந்திய - ரஷ்ய கூட்டு ஒப்பந்தத்தில், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு மின் உலைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், முதலாவது அணு உலையில் மின் உற்பத்திக்கான அனைத்து முதற்கட்டப் பணிகளும் முடிந்து விட்டன.எரிபொருளான யுரேனியம் நிரப்புவதற்கு முன்,டம்மி பியூல் எனப்படும் மாதிரி எரிபொருள் நிரப்பி, பின் அவற்றை அகற்றி, அனைத்து கட்ட சோதனைகளும் முடிந்து விட்டன. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலையில், யுரேனியம் எரிபொருள் நிரப்ப, இந்திய அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம், அனுமதியும் வழங்கியுள்ளது.[/size]

[size=4]மூன்றாவது முறை:

இதையடுத்து, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள், அடுத்த சில நாட்களில் நிரப்பும் பணி துவக்கப்பட இருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா[/size]

[size=4]இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, மீண்டும் அதை வலியுறுத்தும் வகையில் மூன்றாவது முறையாக நேற்றுகடிதம் எழுதியுள்ளார்.[/size]

[size=4]அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 1000 மெகாவாட் திறன் கொண்ட முதல் யூனிட்டில் இருந்து உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க தாங்கள் உதவ வேண்டும் எனக் கோரி, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 25 ஆகிய தேதிகளில் தங்களுக்கு நான் கடிதம் எழுதி இருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த கடிதங்களுக்கு தங்களிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை. கூடங்குளம் அணு மின் நிலைய முதல் யூனிட்டில், அடுத்த சில தினங்களில் எரிபொருள் நிரப்பும் பணி துவங்க இருப்பதாக நான் அறிகிறேன்.இந்த சந்தர்ப்பத்தில் என் முந்தைய வேண்டுகோளை தங்களுக்கு நினைவுபடுத்தி, விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன். இந்த விஷயத்தில், தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்பீர்கள் என்று நான் நம்புகிறேன். தங்களின் விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அந்தகடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்

கோடைக்காலம் முடிவுக்கு வந்துள்ளதால், தமிழகத்தில் தற்போது மின் பயன்பாடு சற்று குறைந்துள்ளது. இருப்பினும், தேவைக்கேற்ப மின் வினியோகத்தை வழங்குவதில், மின் வாரியம் தடுமாறி வருகிறது. இந்நிலையில், கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய தமிழகத்தின் அவசரத் தேவையை புரிந்து கொண்டு, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.[/size]

http://tamil.yahoo.com/க-டங்க-ள-்-ல்-191400282.html;_ylt=Ak6yrN1iNLXqi_Igv4jpoyuZBtx_;_ylu=X3oDMTQxdW9tYXF0BG1pdANNZWdhdHJvbiBUYW1pbCBOZXdzIEhvbWUEcGtnAzkxZTFlYzlhLWZmZjctM2VjMi05YjA5LTg2MzMyYmJlOGY1OQRwb3MDMwRzZWMDbWVnYXRyb24EdmVyAzBlMWEyYzU4LWVhMzgtMTFlMS05YmYzLTJmZWUzNjgwY2FkMg--;_ylg=X3oDMTI5YnQ5N2Y1BGludGwDaW4EbGFuZwN0YS1pbgRwc3RhaWQDBHBzdGNhdAPgrprgr4bgrq_gr43grqTgrr_grpXgrrPgr40EcHQDc2VjdGlvbnM-;_ylv=3

Link to comment
Share on other sites

ஏனைய மாநிலங்கள் மின்சாரம் தங்களுக்கு வேண்டுமெனில் சொந்தமாக ஒரு அணுமின் நிலையத்தை அமைத்து மின்சாரத்தை

பெறவேண்டியது தானே.

தமிழகத்துக்கே மின்சாரம் போதாத போது ஏன் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும்?

தண்ணீரை அதிகமாக வைத்திருக்கும் கேரள மாநிலம் தமிழ் நாட்டுக்கு கொடுக்க முன் வரவில்லையே!!!

Link to comment
Share on other sites

[size=4]தமிழகம் பொருளாதார ரீதியாக முன்னேற மலிவான மின்சாரம் தேவை.[/size]

[size=4]அதற்குபிறகே தானம் செய்ய வேண்டும் ( [/size][size=4]காவிரி பிரச்சனையில் படித்த பாடம்[/size][size=4]) .[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசைப் பொறுத்தளவில் தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களுக்கு நல்லது நடப்பதே மிகவும் விரும்பும் தமிழ்நாட்டில் உள்ள வளங்கள் மற்றைய மாநிலங்களுடன் பயிரவேண்டும் மற்றைய மாநிலங்களில் உள்ள நீர் உட்பட எந்த வளங்களையும் பகுந்தளிக்க மத்திய அரசுக்கு ஒருபோதும் மனம் வந்தது கிடையாது

வாழ்க உங்கள் தேசியப்பற்று வந்தே மாதரம் ஜே கிந் என்று கத்தி கொண்டு இருங்கோ ..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய மாநிலங்கள் மின்சாரம் தங்களுக்கு வேண்டுமெனில் சொந்தமாக ஒரு அணுமின் நிலையத்தை அமைத்து மின்சாரத்தை

பெறவேண்டியது தானே.

தமிழகத்துக்கே மின்சாரம் போதாத போது ஏன் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும்?

தண்ணீரை அதிகமாக வைத்திருக்கும் கேரள மாநிலம் தமிழ் நாட்டுக்கு கொடுக்க முன் வரவில்லையே!!!

தோழர் நுணாவிலான் எப்பயுமே டமாஸ் தான் :) :) அந்த மின்சாரம் முழுவதும் தங்களுக்கே வரணும் எண்று கேரள முதல்வர் தெரித்துவித்து இருக்கார் :lol: :lol:

டிஸ்கி:

இளிச்சவாயன் பொண்டாட்டி ஊருக்கெல்லாம் வெப்பாட்டி இதற்கு எதாவது மாற்று கருத்து இருக்கா...? :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

மோடிதானே மின்சாரம் விற்க திரிகிறார். அங்கே மிஞ்சியிருக்கும் மின்சாரத்தையும் மிஸ்டர் சிங் தமிழ் நாட்டுக்கு பெற்றுத்தந்தால் என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.