Jump to content

ஜிம்பாவே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர்


Recommended Posts

கிளென் மேக்ஸ்வெல் அதிரடியில் ஆஸ்திரேலியா 350 ரன்கள் குவிப்பு
 

 

முத்தர்ப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல் போட்டியில் ஜிம்பாவேயிற்கு எதிராக ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ரன்களைக் குவித்தது.

 

ஜிம்பாவே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று ஹராரேயில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாவே கேப்டன் எல்டன் சிகும்பரா ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்டிங் பற்றி அறியாமல் முதலில் பேட் செய்ய அழைத்தார்.

பிராட் ஹேடின், ஆரோன் ஃபின்ச் ஜோடி அதிரடியாகத் தொடங்கி 18 ஓவர்களில் 98 ரன்கள் சேர்த்து அபாரத் தொடக்கம் கண்டனர். பன்யாங்கரா, மற்றும் சடரா என்ற பவுலர்கள் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டனர்.

48 ரன்களில் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்த பிராட் ஹேடின் முதலில் சிகும்பரா பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். ஆரோன் பின்ச் சரியான விளாசல் பார்மில் இருந்தார்.

 

அவர் 79 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்து நயும்பு பந்தில் அவுட் ஆனார். 30வது ஓவரில் 145 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இருந்தது ஆஸ்திரேலியா. கேப்டன் பெய்லி 14 ரன்களில் ஆட்டமிழக்க 36.2 ஓவர்களில் 1787/3 என்று இருந்தது.

அப்போது இணைந்த அதிரடி ஜோடி கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் ஜோடி 9 ஓவர்களில் 109 ரன்களை விளாசினர். மேக்ஸ்வெல் சிக்சர் மழை பொழியத்தொடங்கினார். ஒரு பந்தை மட்டையைத் திருப்பி ரிவர்ஸ் ஷாட் ஆடி பாயிண்ட் திசையில் சிக்சர் அடித்தது ஜிம்பாவேயை மிரளச் செய்தது.

28 பந்துகளில் அரைசதம் கண்டார் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் தன் பங்கிற்கு அடித்து ஆடி 83 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சர்கள் சகிதம் 89 ரன்கள் எடுத்து 45.2வது ஓவரில் அவுட் ஆனார்.

 

ஆனால் மேக்ஸ்வெல் அதிரடி தொடர்ந்தது அவர் 46 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 93 ரன்கள் விளாசினார். ஒரு ஆஸ்திரேலிய அதிரடி சத சாதனை நிகழ்த்தப்படலாம் என்று எதிர்பார்த்த போது, அனைத்து சேதங்களையும் ஏற்படுத்திய மேக்ஸ்வெல் 48வது ஓவரில் அவுட் ஆனார்.

மேக்ஸ்வெல் அவுட் ஆகும் போது 47.4 ஓவர்களில் 317 ரன்களை எடுத்திருந்தது ஆஸ்திரேலியா, கடைசியில் மிட்செல் ஜான்சன் இறங்கி 10 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்களை எடுத்தார். கடைசி 5 ஓவர்களில் 69 ரன்களை விளாசினர் ஆஸ்திரேலியா. கடைசி 10 ஓவர்களில் 147 ரன்கள் விளாசப்பட்டது.

 

இந்த மைதானத்தின் அதிக பட்ச ஒருநாள் ஸ்கோரான 350 ரன்களை ஆஸ்திரேலியா எட்டியது. 300 ரன்களுக்கும் அதிகமாக ஆஸ்திரேலியா இதையும் சேர்த்து 76வது முறையாக எடுக்கிறது. இந்தியா 78 முறை 300 ரன்களைக் கடந்துள்ளது.

இலக்கைத் துரத்த ஜிம்பாவே இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்குகிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-350-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6350173.ece

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி: சுருண்டது ஜிம்பாப்வே
ஆகஸ்ட் 25, 2014.

ஹராரே: முத்தரப்பு ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில், ஜிம்பாப்வே அணியை 198 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.    

 

ஜிம்பாப்வே சென்றுள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள், முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. ஹராரேயில் நேற்று நடந்த முதல் போட்டியில், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இடது கால் தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக, ஜார்ஜ் பெய்லி கேப்டனாக செயல்பட்டார். ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் எல்டன் சிகும்புரா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.     

மேக்ஸ்வெல் விளாசல்: ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச், பிராட் ஹாடின் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்த போது, ஹாடின் (46) அவுட்டானார். அபாரமாக ஆடிய பின்ச், அரைசதம் அடித்தார். இவர், 67 ரன்களுக்கு ‘பெவிலியன்’ திரும்பினார். கேப்டன் ஜார்ஜ் பெய்லி (14) ஏமாற்றினார். பின் இணைந்த மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஜோடி அதிரடி காட்டியது. ஜிம்பாப்வே பவுலர்களை துவம்சம் செய்த இவர்கள், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். நான்காவது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்த போது மார்ஷ் (89) அவுட்டானார்.     

 

அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் (1), ‘ரன்–அவுட்’ ஆனார். மறுமுனையில் அசத்திய மேக்ஸ்வெல், 46 பந்தில் 93 ரன்கள் (5 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். கடைசி நேரத்தில் மிட்சல் ஜான்சன் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 350 ரன்கள் குவித்தது. ஜான்சன் (20), பால்க்னர் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.     

கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு ஹாமில்டன் மசகட்சா (70), சிகண்டர் ராஜா (33) ஆறுதல் தந்தனர். பிரண்டன் டெய்லர் (10), கேப்டன் எல்டன் சிகும்புரா (0), வில்லியம்ஸ் (1) உள்ளிட்டோர் ஏமாற்ற, ஜிம்பாப்வே அணி 39.3 ஓவரில் 152 ரன்களுக்கு சுருண்டு, படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டீவன் ஸ்மித் 3, மிட்சல் ஸ்டார்க், நாதன் லியான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.     

ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷ் தட்டிச் சென்றார்.

 

http://sports.dinamalar.com/2014/08/1408981102/AustraliaZimbabweOneDayCricketTriSeriesMaxwell.html

Link to comment
Share on other sites

ஜான்சன் அடித்த அதிரடி சிக்ஸர்: வர்ணனையாளர் அறை கண்ணாடி உடைப்பு
 

 

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன் அடித்த சிக்ஸரால் வர்ணனையாளர்கள் அறையில் இருந்த கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம், ஹராரேவில் நேற்று நடந்தது.

ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது, 49-வது ஓவரின் மூன்றாவது பந்தை அந்த அணியின் வீரர் மிட்சல் ஜான்சன் சந்தித்தார். பன்யங்கரா வீசிய அந்த பந்தை, ஜான்சன் நேராக சிக்ஸருக்கு விளாச, பந்து நேராக வர்ணனையாளர்கள் உட்கார்ந்திருந்த அறையை நோக்கி உயரச் சென்று, அங்கிருக்கும் கண்ணாடியை உடைத்தது.

 

வர்ணனை செய்து கொண்டிருந்த நீல் மான்த்ராப் மற்றும் பேங்க்வா ஆகியோர் அதிர்ச்சியுற்றனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடைந்த கண்ணாடித் துகள்களை பேங்க்வா மேஜையிலிருந்து சிரித்துக் கொண்டே அப்புறப்படுத்தினார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

http://youtu.be/wAdige-5q_s

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6353134.ece

 

 

Link to comment
Share on other sites

டிவிலியர்ஸ், டுபிளேசி அதிரடி சதம்: ஆஸ்திரேலியாவின் 327 ரன்களை ஊதியது தென் ஆப்பிரிக்கா

 

 

ஜிம்பாவேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா எடுத்த 327 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்காவின் டுபிளேசி மற்றும் டிவிலியர்ஸ் தங்களது அதிரடி சதங்கள் மூலம் ஒன்றுமில்லாமல் செய்து அபார வெற்றியைச் சாதித்தனர்.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தது. ஏரோன் பின்ச் சதம் எடுக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 46.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து மிக எளிதாக 328 ரன்களை எடுத்து கடினமான வெற்றி இலக்கை ஊதித்தள்ளியது.

 

டுபிளேசி 98 பந்துகளில் 11 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 106 ரன்களை விளாசினார். கேப்டன் ஏ.பி.டிவிலியர்ஸ் 82 பந்துகளில் சதம் எடுத்து மொத்தமாக 106 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிச்கர்களுடன் 136 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 29 ஓவர்களில் 206 ரன்களை மிகவும் சாதுரியமான அதிரடியில் சேர்த்தனர். டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த டுபிளேசி இன்று தன் முதல் ஒருநாள் சதத்தையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்தார்.

குவிண்டன் டி காக் 19 ரன்களில் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். ஆம்லா 24 ரன்கள் எடுத்து கேன் ரிச்சர்ட்சன் பந்தில் அவுட் ஆனார். இருவரும் இணைந்து துவக்க விக்கெட்டுக்காக 7.2 ஓவர்களில் 44 ரன்கள் என்ற வகையில் சுமாரான விரைவுத் துவக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். 9 ஓவர்கள் முடிவில் 51/2 என்ற நிலையில் டுபிளேசியும் கேப்டன் டிவிலியர்ஸும் இணைந்தனர்.

 

முதலில் நிதானத்தைக் கடைபிடித்து குளிர்பான இடைவேளையின் போது 16 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஸ்கோரை நகர்த்தினர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆஸ்திரேலிய பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்தினர். மிட்செல் ஜான்சன், ஸ்டார்க், பாக்னர், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரது பந்து வீச்சுகள் மைதானம் முழுதும் சிதறடிக்கப்பட்டது.

52/2 என்ற நிலையிலிருந்து 35வது ஓவரில் ஸ்கோர் 221/2 என்ற நிலையை எட்டியபோது, மிட்செல் ஜான்சன் பந்தில் அவரிடமே டிவிலியர்ஸ் ஒரு கேட்சைக் கொடுக்க அவர் அதனை தவற விட்டார். அப்போது டிவிலியர்ஸ் 78 ரன்களில் இருந்தார். 2 பந்துகள் கழித்து எட்ஜ் ஒன்று பிராட் ஹேடினின் கைகளில் சிக்காமல் சென்றது. அடுத்த ஓவரில் கேன் ரிச்சர்ட்சன் ஒரு பந்தை வீச அதனை டிவிலியர்ஸ் நேராக பாயிண்ட் திசையில் அடிக்க அந்த எளிதான கேட்சை கேப்டன் பெய்லி தவற விட்டார்.

 

டுபிளேசி சதம் எடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்தை வானில் அடித்து அவுட் ஆகும் போது தென் ஆப்பிரிக்க்காவுக்கு 12 ஓவர்களில் 71 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் டிவிலியர்ஸ், டுமினி (33 நாட் அவுட்) ஆகியோர் அணியை பாதுகாப்பாக 20 பந்துகள் மீதம் வைத்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

நேதன் லயனை அணியில் சேர்த்திருந்தால் ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் போதும் என்று நினைத்து விட்டார் ஆஸி. கேப்டன் ஜார்ஜ் பெய்லி.

 

முன்னதாக ஆஸ்திரேலியா அணியில் ஏரோன் பின்ச் 116 பந்துகளில் 102 ரன்களை எடுத்தார். அவருடன் பிலிப் ஹியூஸ் (51) சேர்ந்து அரைசதம் கண்டார். கேப்டன் ஜார்ஜ் பெய்லி 66 ரன்கள் எடுத்தார். ஏரோன் பின்ச், பிலிப் ஹியூஸுடன் இணைந்து 92 ரன்களையும், பெய்லியுடன் இணைந்து 114 ரன்களையும் பகிர்ந்து கொண்டனர். கடைசியில் மிட்செல் ஜான்சன் 8 பந்துகளில் 23 ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட்டதில் ஜான்சன் 2 சிக்சர்களை அடித்தார்.

தென் ஆப்பிரிக்க அணியில் மோர்னி மோர்கெல் 63 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டேல் ஸ்டெய்ன் 1 விக்கெட்டை 51 ரன்களுக்குக் கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே அணிகள் வரும் வெள்ளிக்கிழமை அடுத்த ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-327-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article6357405.ece

 

Link to comment
Share on other sites

தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம்
ஆகஸ்ட் 29, 2014.

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு லீக் போட்டியில், 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள ஆஸ்திரேலிய, தென் ஆப்ரிக்க அணிகள், முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. ஹராரேயில் நேற்று நடந்த போட்டியில், தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் எல்டன் சிகும்புரா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

சூப்பர் துவக்கம்:

தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஹசிம் ஆம்லா, குயின்டன் டி காக் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்த போது ஆம்லா (66) அவுட்டானார்.

 

உட்சேயா ‘ஹாட்ரிக்’:

ஆட்டத்தின் 27வது ஓவரை வீசிய உட்சேயா, ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இந்த ஓவரின் 4வது பந்தில் குயின்டன் டி காக் (76) அவுட்டானார். அடுத்த இரண்டு பந்தில் ரோசோவ், டேவிட் மில்லர் ‘டக்–அவுட்’ ஆனார்கள். அடுத்து வந்த டுமினி (2), டுபிளசி (15), மெக்லாரன் (6), ஸ்டைன் (10), அபாட் (6) சொற்ப ரன்னில் நடையை கட்டினர். கடைசி நேரத்தில் பங்கிசோ, இம்ரான் தாகிர் ஜோடி ஆறுதல் தர, அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடந்தது. பத்தாவது விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்த போது பங்கிசோ (13) அவுட்டானார்.

தென் ஆப்ரிக்க அணி 49.5 ஓவரில் 231 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. தாகிர் (23) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே சார்பில் உட்சேயா 5 விக்கெட் வீழ்த்தினார்.

 

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு மவோயோ (0) ‘ரன்–அவுட்’ ஆனார். ஹாமில்டன் மசகட்சா (25) நிலைக்கவில்லை. பிரண்டன் டெய்லர் ‘டக்–அவுட்’ ஆனார். மற்றொரு துவக்க வீரர் சிகந்தர் ராஜா (35) ஆறுதல் தந்தார். ‘மிடில்–ஆர்டரில்’ களமிறங்கிய வில்லியம்ஸ் (46), வாலர் (20), கேப்டன் சிகும்புரா (22)  ஓரளவு கைகொடுத்தனர். உட்சேயா (5) உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஏமாற்ற, ஜிம்பாப்வே அணி 38.3 ஓவரில் 170 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன், மெக்லாரன் தலா 3, பங்கிசோ 2 விக்கெட் கைப்பற்றினர். இதன்மூலம், ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்திய தென் ஆப்ரிக்க அணி, இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

ஆட்டநாயகன் விருதை ஜிம்பாப்வே அணியின் உட்சேயா கைப்பற்றினார்.

 

 

http://sports.dinamalar.com/2014/08/1409332540/QuintonDeKocksouthafrica.html

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே
ஆகஸ்ட் 31, 2014.

ஹராரே: முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில், ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.

ஜிம்பாப்வே சென்றுள்ள ஆஸ்திரேலிய, தென் ஆப்ரிக்க அணிகள், முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. ஹராரேயில் நேற்று நடந்த 4வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. காயம் காரணமாக முதலிரண்டு போட்டியில் விளையாடாத ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்,  நேற்று களமிறங்கினார். ‘டாஸ்’ வென்ற இவர், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.     

 

கிளார்க் அரைசதம்: ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் (10), பிலிப் ஹியுஸ் (11) ஜோடி ஏமாற்றியது. அடுத்து வந்த ஜார்ஜ் பெய்லி (1), மேக்ஸ்வெல் (13), மிட்சல் மார்ஷ் (15) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும், மனம் தளராமல் போராடிய கேப்டன் மைக்கேல் கிளார்க், அரைசதம் அடித்தார். இவர், 68 ரன்கள் எடுத்திருந்த போது, ‘ரிட்டையர்ட் ஹர்ட்’ முறையில் ‘பெவிலியன்’ திரும்பினார்.     

 

ஹாடின் ஆறுதல்: ஜேம்ஸ் பால்க்னர் (0), மிட்சல் ஸ்டார்க் (3) சொதப்பினர். பின் இணைந்த பிராட் ஹாடின், பென் கட்டிங் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. எட்டாவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த போது கட்டிங் (26) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ஹாடின் (49) அரைசத வாய்ப்பை இழந்தார்.     

ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. கிளார்க் (68), நாதன் லியான் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஜிம்பாப்வே சார்பில் உட்சேயா, டிரிபனோ, வில்லியம்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

சிகும்புரா அசத்தல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு சிகந்தர் ராஜா (22), மவோயோ (15) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த ஹாமில்டன் மசகட்சா (18), ஸ்டார்க் வேகத்தில் போல்டானார். பிரண்டன் டெய்லர் (32) ஆறுதல் தந்தார். வில்லியம்ஸ் (4), வாலர் (11), டிரிபனோ (3) ஏமாற்றினர். விக்கெட் சரிந்தாலும், மனம் தளராமல் போராடிய கேப்டன் எல்டன் சிகும்புரா, ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்து அரைசதம் அடித்தார். ஸ்டார்க் பந்தை சிக்சருக்கு அனுப்பிய உட்சேயா, வெற்றியை உறுதி செய்தார்.

 

31 ஆண்டுகளுக்கு பின்: ஜிம்பாப்வே அணி 48 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிகும்புரா (52), உட்சேயா (30) அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம், ஒருநாள் அரங்கில் ஜிம்பாப்வே அணி, 31 ஆண்டுகளுக்கு பின், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. கடைசியாக 1983ல் நாட்டிங்காமில் நடந்த போட்டியில், ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

 

 

http://sports.dinamalar.com/2014/08/1409505284/AustraliaZimbabweOneDayCricketTriSeriesChigumbura.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்,சிம்பாப்பேயிடம் தோத்திட்டுது:D

Link to comment
Share on other sites

டுபிளேசியின் அதிரடி சதம் வீண்: தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிக்குள் ஆஸ்திரேலியா நுழைவு

 

ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை 62 ரன்கள் வித்தியாசத்தில் போனஸ் புள்ளியுடன் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 44 ஓவர்களில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது.

 

இருந்தாலும் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மீண்டும் மோதுகின்றன. இன்று தென் ஆப்பிரிக்க அணியில் டுபிளேசி 109 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் விளாசி 126 ரன்கள் எடுத்து 8வது விக்கெட்டாக அவுட் ஆனார். அவர் அவுட் ஆகும் போது தென் ஆப்பிரிக்க வெற்றிக்குத் தேவை 49 பந்துகளில் 69ரன்கள். ஆனால் அவர் ரிச்சர்ட்சன் பந்தில் விசித்திரமாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். ரிச்சர்ட்சன் வீசிய பந்தை பின்னால் சென்று மிட்விக்கெட் திசையில் தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க ஓட முயன்றார். ஆனால் அவரது வலது கால் ஆஃப் ஸ்டம்பின் அடியில் பட்டது பைல்கல் கீழே விழ அவர் ஹிட் விக்கெட் ஆனார்.

 

முன்னதாக ஆம்லா (17), குவிண்டன் டி காக் (1) வெளியேறினர். புதிய பந்து வீச்சு உத்திகளைக் கண்டுபிடித்துக் கொண்ட நேதன் லயன் மிக முக்கியவிக்கெட்டான டிவிலியர்ஸ் (6) விக்கெட்டைக் கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா 15.4 ஓவர்களில் 64/3 என்று ஆனது. டுமினியும் 16 ரன்களில் வெளியேற 22.5 ஓவர்களில் 93/4 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா. அதிரடி மன்னன் டி.ஏ. மில்லர், டுபிளேசியுடன் நிலைத்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 3 ரன்களில் மிட்செல் ஜான்சன் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். இது ஜான்சனின் சிறப்பான பந்து மில்லரின் ஸ்டம்ப் பறந்தது.

 

முன்னதாக, டுபிளேசி 57 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் அரைசதம் கண்டார். மெக்லாரன் களமிறங்கி திணறி 17 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்தபோது தென் ஆப்பிரிக்க்கா, 30 ஒவர்களில் 123/5 என்று தட்டுத் தடுமாறியது. அப்போது டுபிளேசி மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை மேலேறி வந்து லாங் ஆனில் மிகப்பெரிய சிக்சரை அடித்து அதிரடியைத் தொடங்கினார். மீண்டும் 2 ஓவர்கள் கழித்து மிட்செல் ஸ்டார்க் பந்தை மேலேறி வந்து நேராக மற்றுமொரு சக்தி வாய்ந்த சிக்சரை அடித்தார். பிறகு நேதன் லயன் பந்தை ஒதுங்கிக் கொண்டு இம்முறை லாங் ஆஃபில் மற்றொரு சிக்சரை விளாசினார். 97 ரன்களில் டுபிளேசி இருந்தபோது 24 ரன்கள் எடுத்த மெக்லாரன் அவுட் ஆனார். பிறகு 94 பந்துகளில் தனது சதத்தை எடுத்தார் அவர். அதில் 7 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும்.

 

சதம் அடித்த பிறகு மீண்டும் மிட்செல் ஸ்டார்க் பந்தை இரண்டு சிக்சர்கள் விளாசினார். ஆனால் டேல் ஸ்டெய்ன் 5 ரன்களில் ரன் அவுட் ஆக மீண்டும் ஒரு பின்னடைவு. கடைசியாக 126 ரன்களில் டுபிளேசி ஹிட் விக்கெட் ஆக, 220 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா 44 ஓவர்களில் ஆட்டமிழந்தது. ஜான்சன், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

முன்னதாக ஆஸ்திரேலியா அணியில் பிலிப் ஹியூஸ் 92 பந்துகளில் 85 ரன்களை எடுக்க ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களையும், ஜார்ஜ் பெய்லி 32 ரன்களையும், மேக்ஸ்வெல் 2 ரன்களையும் எடுக்க அந்த அணி 34.4 ஓவர்களில் 152/4 என்று ஆனது. பெய்லி அவுட் ஆகும்போது 41.2 ஓவர்களில் 187/5 என்று இருந்தது. அப்போது மிட்செல் மார்ஷ் அதிரடியை உக்கிரப்படுத்தினார். அவர் 51 பந்துகளில் 5 பவுண்டரி 7சிக்சர்களுடன் 86 ரன்களை விளாசி எடுத்தார். அதிலும் டேல் ஸ்டெய்னின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்தார் மிட்செல் மார்ஷ்.

 

இதனால் கடைசி 52 பந்துகளில் 95 ரன்கள் குவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 282 ரன்களை எட்டியது. ஒருவித்தில் மிட்செல் மார்ஷ் இன்னிங்ஸ்தான் இந்த வெற்றிக்குக் காரணம், ஆனால் அவரைவிடவும் சிறப்பாக ஆடிய டுபிளேசி இன்னிங்ஸ் வீணானது. ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/article6373730.ece

 

Link to comment
Share on other sites

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா
 

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.

ஹராரேவில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 51 பந்துகளில் 7 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 86, பில் ஹியூஸ் 85 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டூ பிளெஸ்ஸி சதமடித்தபோதும் எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன் களில் நடையைக் கட்டியதால் 44 ஓவர்களில் 220 ரன் களுக்கு சுருண்டது. 109 பந்து களைச் சந்தித்த டூ பிளெஸ்ஸி 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்தார்
,

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6378677.ece

Link to comment
Share on other sites

முத்தரப்புத் தொடர்: தென் ஆப்பிரிக்கா சாம்பியன்
 

 

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா.

ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் ஆரோன் பிஞ்சும், பில் ஹியூஸும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை தொடங்கினார்.

அந்த அணி 25 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் டேல் ஸ்டெயின். பில் ஹியூஸ் 15 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த ஸ்டீவன் ஸ்மித் 10 ரன்களில் நடையைக் கட்டினார்.

 

இதையடுத்து பிஞ்சுடன் இணைந்தார் கேப்டன் பெய்லி. இந்த ஜோடியும் 33 ரன்களே சேர்த்தது. பெய்லி 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மிட்செல் மார்ஷ் களமிறங்க, மறுமுனையில் ஆரோன் பிஞ்ச் 72 பந்துகளில் அரைசதம் கண்டார்.

பிஞ்சை 54 ரன்களில் கிளீன் போல்டாக்கிய ஸ்டெயின், அடுத்த பந்தில் கிளன் மேக்ஸ்வெல்லை (0) வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலியா சரிவுக்குள்ளானது. மார்ஷ் 27 ரன்களிலும், பிராட் ஹேடின், மிட்செல் ஜான்சன் ஆகியோர் தலா 6 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் 38 ஓவர்களில் 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா.

 

ஆனால் 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜேம்ஸ் பாக்னர்-மிட்செல் ஸ்டார்க் ஜோடி, ஆஸ்திரேலியாவை சரிவிலிருந்து மீட்டது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 48-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா.

கடைசி ஓவரின் 4-வது பந்தில் பாக்னர் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. மிட்செல் ஸ்டார்க் 46 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டெயின் 10 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

டூ பிளெஸ்ஸி அபாரம்

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 7 ரன்களில் ஆட்டமிழக்க, ஆம்லாவுடன் இணைந்தார் டூ பிளெஸ்ஸி. ஒருபுறம் ஆம்லா நிதானமாகஆட, மறுமுனையில் அசத்தலாக ஆடி ரன் சேர்த்தார் டூ பிளெஸ்ஸி.

இதனால் 20-வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 100 ரன்களை எட்டியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய டூ பிளெஸ்ஸி 45 பந்துகளில் அரை சதமடித்தார்.

டிவில்லியர்ஸ் அரைசதம்

டூபிளெஸ்ஸியை தொடர்ந்து ஆம்லா 72 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் 51 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வேயன் பர்னெல் 6 ரன்களில் வெளியேற, கேப்டன் டிவில்லியர்ஸ் களம்புகுந்தார்.

அதிரடியாக ஆடிய அவர், பாக்னர் வீசிய 40-வது ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசி 39 பந்துகளில் அரைசதத்தை அடித்தார்.

4 ரன்களில் நழுவிய சதம்

ஸ்கோர் சமநிலையை எட்டியபோது 96 ரன்கள் எடுத்தி ருந்த டூ பிளெஸ்ஸி, துரதிருஷ்ட வசமாக ஆட்டமிழந்தார். அவர் 99 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.

எனினும் அடுத்த பந்தில் டிவில்லியர்ஸ் பவுண்டரி அடிக்க, 40.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா. டிவில்லியர்ஸ் 41 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/article6388124.ece

 

Link to comment
Share on other sites

ஆஸி.யை வீழ்த்தி சாம்பியனாது தென்னாபிரிக்கா, நழுவியது டு பிளிஸ்சிஸ் சாதனை

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. டு பிளிஸ்சிஸ் சாதனை சதத்தை நழுவ விட்டார்.
தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த  தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலிய அணிகள் கிண்ணத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஹராரே மைதானத்தில் நேற்று சந்தித்தன.

முதலில் பேட் செய்த அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. உலகின் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், ‘ஸ்விங்’, ‘இன்ஸ்விங்’ தாக்குதலில் அவுஸ்திரேலியாவை மிரள வைத்தார். ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களுடன் பரிதாபமாக காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜேம்ஸ் பவுல்க்னெரும் (39 ஓட்டங்கள்), மிட்செல் ஸ்டார்க்கும் (29 ஓட்டங்கள்) 9–வது விக்கெட்டுக்கு 71 ஓட்டங்களை திரட்டி அணியை ஒரு வழியாக 200 ஓட்டங்களை கடக்க வைத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்களை; சேர்த்தது. ஆரோன் பிஞ்ச் 54 ஓட்டங்கள்,  ஜோர்ஜ் பெய்லி 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். தென்னாபிரிக்கா தரப்பில் ஸ்டெயின் 10 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 34 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மோர்னே மோர்கல், வெய்ன் பார்னல் தலா 2 விக்கெட்டும், இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.


அடுத்து ஆடிய தென்னாபிரிக்காh 40.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 221 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது.

அம்லா 51 ஓட்டங்களையும், பாப் டு பிளிஸ்சிஸ் 96 ஓட்டங்களையும் (99 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), டிவில்லியர்ஸ் 57 ஓட்டங்களையும் (41 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.


நான்கு ரன்னில் சதத்தை கோட்டை விட்ட 30 வயதான பாப் டு பிளிஸ்சிஸ் ஏற்கனவே லீக் சுற்றில் மூன்று சதங்கள் (அவுஸ்திரேலியாவுடன் 106, 126 ஓட்டங்கள், ஜிம்பாப்வேயுடன் 121 ஓட்டங்கள்) அடித்திருந்தார்.

இந்த ஆட்டத்தில் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவையாக இருந்த போது, பிளிஸ்சிஸ்சின் சதத்திற்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பவுண்டரிக்கு முயற்சித்த அவர் ஜோன்சனின் பந்து வீச்சில் பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார். இதிலும் அவர் சதம் அடித்திருந்தால் ஒரு தொடரில் 4 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற புதிய சரித்திரத்திற்கு சொந்தக்காரர் ஆகியிருப்பார். அந்த சாதனை மயிரிழையில் நழுவி போனது.

என்றாலும் ஒரு தொடரில் அதிகபட்சமாக 3 சதங்கள் அடித்தோரின் பட்டியலில் 15 பேரில் ஒருவராக அவர் இணைந்திருக்கிறார். அத்துடன் மொத்தம் 464 ஓட்டங்கள் குவித்திருக்கும் அவர் முத்தரப்பு ஒரு நாள் தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் சேகரித்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு 1998ஆம் ஆண்டு நடந்த இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகள் இடையிலான தொடரில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 5 ஆட்டத்தில் 435 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது..

 

http://www.virakesari.lk/articles/2014/09/07/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.