Jump to content

கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போரில் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கங்களும். உங்களை பிரிந்து கவலையில் வாடும் உற்றார் உறவினர்களுக்கு அழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும் :(

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

irancandle.gif

தாய் மண்ணிற்காகத் தம் இன்னுயிரைக் கொடையாக்கிய மாவீரர்களுக்கும் மக்களுக்கும் வீர வணக்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும் உரித்தாகுக!!

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலில் தமது இனிய உயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள், பொதுமக்கள் எல்லோருக்கும் வீரவணக்கங்கள்;

கண்ணீர் அஞ்சலிகள். உயிர்பிழைத்து இன்றும் துன்பவாழ்வு வாழும் எம் சகோதரர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

துவண்டு விடாமல் தொடர்ந்து 'பறப்போம்'. 'சிறகை ஒடுக்கிச் சிதைந்து அழியாது' தொடர்வோம். எமது இலக்கை அடையும்வரை

ஓர்மத்துடன் உழைப்போம்.

வீடில்லை. ஓய்ந்த தலையைச் சாய்க்கக்

கூடில்லை. என்றால், என்னதான் உண்டோ?

எதுவும் இல்லை. எல்லையில் வானமும்

பதைக்கும் உன் சிறை இரண்டுமே உண்டு.

பறவையே, இதுகேள்; பதறி விழாதே,

சிறகைச் சுருக்கிச் சிதைந்து அழியாதே.

பறவையே, இது கேள்;

http://www.yarl.com/forum3/index.php?showtopic=102350

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Link to comment
Share on other sites

மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் போராடி வீரமரணத்தைத் தழுவிய அனைவருக்கும் வீரவணக்கங்கள்!!!

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த அனைத்து போராளிகளுக்கும் மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

.

சிங்கள இனத்தின்

ஒப்பாரி ஓலம்

ஒருநாள்,

உள்ளக் கிடக்கையின்

அனலை ஆற்றும்.

பிஞ்சுகள், கர்பிணிகள், பெற்றோர், இளையோர், முதியோர், போராளிகள்..

நெஞ்சு பதைத்த இந்நாட்களில்..

உங்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

அஞ்சலிசெலுத்துறதுக்கும் ஆரவாரிக்கிறதுக்கும்

வீரமுடன் வீறாப்போடு துள்ளியெழுகிறோம்...!???

உங்கள் இதயத்தில் கைவைத்துச் சொல்லுங்கள்..

அது உண்மையானதா என்று!!!

அஞ்சலிகளும் வீரவணக்கமும் தேவைதான்,

இல்லையென்று சொல்லவில்லை!

ஆனால் எதற்கு..ஏன்...? என யோசித்தால்,

இதையெல்லாம் எங்களுக்கேன் சொல்கின்றீர்கள் எனக் கேட்பார்கள்,

அந்த உயிரில்லாமற்போன தியாக சீலர்கள்!

முடிந்தால்.... உருப்படியாய் எதையாவது செய்யுங்கள்!

நானும் உருப்படியா ஒண்டும் செய்யேல..........

அதனால்....

என் கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கமும்!

உறவுகளே...... காலம் கனிந்திருக்கின்றது,

இப்பொழுதும் அமைதியாய் இருந்தால் அழிந்துபோகும் நம் இனம்!

வெறும் வார்த்தைகளில் இல்லாமல்...

செயலில் காட்ட நம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

வலியோர் ஒன்றாய்ச் சேர்ந்து எமது சிறு இனத்தை வதைத்த நாள் இன்று. உலகம் பார்த்திருந்தது. எமது இனத்தின் ஓலமிட்ட குரலைக் கேட்டிருந்தது. ஆனாலும் குருடாயும் செவிடாயும் நடித்திருந்தது.

தர்மத்தின் நியாயத் தீர்ப்பு என்றோ ஒருநாள் எழுதப்படும். அப்போது நானிருப்பின் முழுமனத்துடன் அழிக்கப்பட்ட எமது உறவுகளுக்காய் அஞ்சலிப்பேன். அதுவரை காத்திருப்பேன்.

Animated_Candle_Burning.gif?o=17

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் முடிவுகள் தனிமனிதர்களிலும், தமிழ் சமூகத்திலும் ஏற்படுத்திய மாற்றங்கள் அளவிட முடியாதது. திரும்பவேமாட்டோம் என்ற தேர்களை எல்லாம் வலம் இடம் மாறி ஓட வைத்துள்ளது. போலியாகத்தன்னும் இருந்த கொஞ்சநெஞ்ச அடையாளம் எல்லாம் தொலைத்து நிற்கிறோம். விடுதலைக்காக உயிரையே கொடுத்த சமூகம் இன்று அடுத்த வேளை உணவுக்காய் கையேந்துகிற நிலைக்கு வந்து நிற்கிறது. 77 இல் சுயநிர்ணய உரிமையை சொன்ன தலமைகள்; காளியின் கொடிதான் சிங்கம் என்று புதுப்பரணி படுகிறார்கள். மாவிரர்களை தந்த பெற்றோர் அண்ணன் தம்பி அக்காமார் இன்று "எல்லாம் முடித்து போய்விட்டது என்று" எதுவுமே சொல்லுகிறார்கள் இல்லை.

வீணே காலம் தெரியாமல் "என்றோ ஒருநாள் தமிழ் ஈழம் வரும்" என்று கிளி சாத்திரம் சொல்லாமல்; மாவிரர்களையும், காவிய நாயகர்களையும் மக்களையும் மண்ணையும் ஒருகணம் மனதில் இருத்துவோம்.

"வீழ்ந்தது தோல்வியல்ல, வீழ்ந்தும் எழமுடியாமல் இருப்பதே தோல்வி"

நன்றி

Link to comment
Share on other sites

களமாடி மரணித்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

இறுதிப் போரில் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் ,

என் கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கங்களும்.....

Link to comment
Share on other sites

சிங்களக் காட்டுமிராண்டிகளால்,

x உலகின் போலி ஜனநாயகவாதிகளின், போலி அகிம்சாவாதிகளின் துணையுடன்,

x பாதை மாறியவர்கள், ஒட்டுண்ணிகள், கைக்கூலிகள் துணையுடன்,

x நயவஞ்சகர்கள் சகுனிகள் சூழ்ச்சி செய்ய,

x சந்தர்ப்பவாதிகளின் உதவியுடன்,

x ஐ. நா. சபை போன்றவர்கள் கடமைகளை மறந்து வேடிக்கை பார்க்க,

படுகொலை செய்யப்பட்ட அனைத்து அப்பாவி தமிழ் மக்களுக்கும், வீரப் போராளிகளுக்கும், களத் தளபதிகள் மற்றும் தலைமைகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும்!

"தமிழினப் படுகொலைகளை 60 வருடங்களுக்கு மேலாக செய்துவரும் சிங்களப் பயங்கரவாதிகளுக்கும், அவ்வப்போது அவர்களுக்கு துணை நின்றவர்களுக்கும் உரிய தண்டனைகள் கிடைக்கும் வரை,

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்டும் வரை,

தமிழ் மக்களுக்கு முழுச்சுதந்திரம் கிடைக்கும் வரை

ஓய மாட்டோம்"

என்ற உறுதிமொழிகளை இத் தினத்தில் மீண்டுமொருமுறை உரைத்து, உணர்ந்து நிற்கிறோம்.

Link to comment
Share on other sites

ஆண்டுகள் மூன்றாகினாலும் ஆறாத நினைவுகள். வடுக்கள். தம்முயிர் நீத்த எம் மக்களுக்கும் எம்மைக் காக்கப் போராடிய அண்ணன்மார், அக்காமார், தம்பிமார் தங்கைகள் எல்லாருக்கும் என் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

இறுதிப் போரில் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கங்களும்....!

Link to comment
Share on other sites

தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக இறுதிவரை போரிட்டு வீரகாவியமான தலைவர் வே.பிரபாகரன், தளபதிகள், போராளிகள், குடும்பங்கள், பொதுமக்கள் அனைவருக்கும் வீர வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

சர்வதேசத்தின் சு+ழ்ச்சியுடன் சிங்கள இனவெறி அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு இலக்காகி மரணித்த எம் தமிழ் உறவுகள் அனைவரையும் நினைவில் கொள்கிறேன்.

நீங்கள் எழுப்பிய கோரவொலி அன்று சர்வதேசத்திற்குக் கேட்கவில்லை. ஆனாலும் இந்நிலை மாறி எம் தமிழ் மண்ணில் வாழும் அத்தனை உறவுகளும் நிம்மதியாய் வாழும் நாள் விரைவில் வர வேண்டும். அப்போது உம்மை எந்தவித அடக்குமுறையுமின்றி எம்மண்ணில் மீண்டும் நினைவில் கொள்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 இதே மே 18 காலப் பகுதியில் தாயக மண்ணில் முள்ளிவாய்க்காலில் எம் தமிழ் சொந்தங்கள் சர்வதேச கூட்டுச் சதியில்.. கேட்பார் யாரும் இன்றி சிங்கள இனவெறி எதிரிகளால் வேட்டையாடப்பட்டு ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட நினைவு நாள் இன்றாகும். இன்றைய தினத்தில் அன்று உயிர் நீத்த மக்களுக்கும் போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலியும் வீர வணக்கமும்.. செலுத்துகின்றோம்.

Link to comment
Share on other sites

கொடிய எதிரியின் குண்டுகளுக்கு இரையாகி மாண்டுபோன எனது உடன் பிறவா உறவுகளுக்கும் தாயாக மீட்புக்காய் இறுதிவரை போராடி வீழ்ந்த மாவீரர்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் அத்தனை மனிதாபிமானமும் செத்துப்போன நாட்கள் இவை

தாயக விடுதலை வேண்டி இறுதிவரை போராடிய மாவீரர்களுக்கும், அவர்களோடு உறுதுணையாக நின்று விடியலுக்கான யாகத்தில் ஆகுதி ஆன அனைத்து மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த அனைத்துப் பொதுமக்களுக்கும், போராளிகளுக்கும் வீர வணக்கங்களும்,கண்ணீர் அஞ்சலிகளும் .. :( :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.