Jump to content

மூளையைக் காசாக்க ஒரு வழி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூளையைக் காசாக்க ஒரு வழி!

 

இது பகிடி...

கனடா போய் உறவுகள் நண்பர்களைப் பார்த்து வந்தது முழுக் குடும்பத்துக்குமே பெரிய சந்தோஷம். சந்தோஷத்தோடு கனேடிய குடும்ப உறவுகளின் வாழ்க்கை முறைகள் வசதிகள் பற்றிய ஆச்சரியமும் என்னைத் தொற்றிக் கொண்டு விட்டது. பாரிய காற்றோட்டமான வீடுகள், அழகிய பூந்தோட்டங்கள் நிறைந்த வளவுகள், நாய்க்குட்டி, பூனைக் குட்டி, கரீபியன் தீவுகளுக்கு உல்லாசப் பயணம் என்று நல்ல "சோக்கான" வாழ்க்கை நான் சந்தித்த கனேடியத் தமிழருக்கு. நாங்கள் இங்க உழைக்கிற உழைப்பு எங்களுக்கு  சாதாரணமாக வாழவே போதுமாயிருக்கு! என்ன தான் பிழையாகச் செய்கிறோம்? எண்டு யோசித்த போது, ஏதாவது சைட் பிசினஸ் செய்யலாம் எண்ட எண்ணம் வந்தது. எனக்கு பிசினஸ் எண்டாலே என்ன எண்டு தெரியாது, இதில எப்படி முதலீடு போட்டு இலாபம் பாக்கிறது? அதனால நேரத்தையும், இப்ப செய்யும் தொழிலையும் வைச்சுக் கொண்டு ஏதாவது செய்யலாம் எண்டு தேடல் நடக்குது :D .

 

இது சீரியஸ்..

இப்படியான தேடலில் துறை சார் அறிவை எப்படி முதலீடு இல்லாமல் பயன் படுத்தலாம் என்று தேடிய போது கீழ் வரும் இணைப்பிலுள்ள தகவல் கிடைத்தது. நேச்சர் (Nature) விஞ்ஞான சஞ்சிகை ஒரு தனியார் "திறமை" தேடும் நிறுவனத்தோடு இணைந்து நடாத்தி வரும் ஒரு திறன் போட்டி இது. பொறியியல், உயிரியல், மருத்துவம், பொருளியல், கணணியியல் ஆகிய பல் வேறு துறைகளிலும் தீர்த்து வைக்க வேண்டிய பிரச்சினைகளை இங்கே பணப்பரிசுடனும், காலவரையறையுடனும் பட்டியலிட்டு திறனாளர்களைக் கூவி அழைக்கிறார்கள். யாழில் இந்தப் பந்தயத்தில் கலந்து கொண்டு வெல்லக் கூடிய விண்ணர்கள் நிறைய இருப்பதால் இந்த இணைப்பைத் தருகிறேன். உங்கள் துறைக்குரிய பகுதிகளில் முயற்சி செய்து பாருங்கள். பணப்பரிசை வெண்டால் யாழ் நிர்வாக நிதிக்கு ஒரு 10% அதிலிருந்து கொடுங்கள் :D !

 

https://www.innocentive.com/ar/challenge/browse

 

நன்றி!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி!

 

நேரத்தை  வீணாகப்பொக்காமல்

தம்பிமாரெல்லாம் ஏதாவது வழிகளில் உழைக்கணும்

இதுவே எனது அவா..

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு ஜஸ்ரின்.

 

ஆனால் பிறைஸ் மணி [ money ]  தான் கம்மி.  :wub:

 

நாம முயற்சிக்கக் கூடியது....

 

https://www.innocentive.com/ar/challenge/9933584

 

 

https://www.innocentive.com/ar/challenge/9933343

 

 

https://www.innocentive.com/ar/challenge/9933519

 

 

இதைப்போல் சில புறொஜெக்டுகள் செய்ததால் அனுபவம் உண்டு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி !
(இது சீரியஸ் )
 
 
Marijuana: America's Next
$100 Billion Industry 
Here's why a tiny investment today — before it becomes legal nationwide —
could make you A LOT of money.
MORAL PART? I dont know...
(இது சற்று முன்பு நான் FB இல் எழுதியது. பகிடி என்று சொல்ல முடியாது moral issue வை விட்டு விட்டு பார்த்தால் சீரியசான ஒரு எதிர்கால முதலீடு)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.