Jump to content

கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு – கிழக்கில் ஆதரவு யாருக்கு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

SLMC அரசாங்கத்துடனான பேரம் பேசலுக்கு TNAயை பகடைக் காயாகப் பயன்படுத்துகிறதா? இணைப்பு 2

Tna%20meeting._CI.png

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு இரத்தாகியுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை 7 மணியளவில் பம்பலப்பிடியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் காரியலயத்தில் நடைபெற ஏற்பாடகியிருந்தது.

இந்த பேச்சுவார்தைக்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் மாவை சேனாதிராஜா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்களநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இன்றைய கூட்டம் 7 மணியளிவல் ஆரம்பமாகவிருந்த நிலையில் 7 மணிக்கு முன்னதாக கூட்டமைப்பின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தந்திருந்தனர்.

எனினும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் எவரும் சென்றிருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளா ஹசன் அலியுடன் தொடர்பு கொண்ட போது தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதியுடன் அலரி மாளிகையில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், தாங்களும் அவரின் வருகைக்காக காத்திருப்பதாகவும், தலைவர் வந்தவுடன் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேலும் அரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுடன் தொடர்பு கொண்ட போது அவர்களின் தொலைபேசிகள் செயல் இழக்கச் செய்யப்பட்டிருந்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தாமும் பேச்சுவார்த்தையை கைவிட்டு மீண்டும் தமது இல்லங்களுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியவில்லையாயின் அறிவித்திருக்கலாம் என்றும் கூறினார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பின் முக்கியஸ்த்தர்கள் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடனான பேரம் பேசலுக்கு தமிழ்க் கூட்டமைப்பை பகடைக் காயாகப் பயன்படுத்துகிறதா? அல்லது தமிழ்க் கூட்டமைப்பை காத்திருக்க வைத்து கழுத்தறுத்ததா? அல்லது மகிந்த சகோதரர்களி ன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் இருந்தார்களா? என விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக தான் மரியாதை வைத்திருக்கும் வயதிலும் அரசியலிலும் மூத்தவரான இரா சம்பந்தனை காத்திருக்க வைத்து அமைச்சர் ஹக்கீம் அவமதித்தாரா என்ற கேள்விகள் பலரிடையே எழுப்பப்பட்டுள்ளன.

கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு – கிழக்கில் ஆதரவு யாருக்கு?

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்தையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு ஆதரவைக் கோருவதுடன், முதலமைச்சர் பதவி உட்பட மேலும் பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரசின் இறுதி முடிவு நாளைய தினம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் வெளியிடப்படவுள்ளது.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முடிவுகளின் அடிப்படையில் அங்கு ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சியும் பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு ஆசனத்தையும் சேர்த்து 15 ஆசனங்களை வெற்றிக்கொண்டுள்ளது.

11 ஆசனங்களை வென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் மொத்தமாக 15 ஆசனங்களை தன்னகத்தே கொண்டுள்ளன.

இந்த நிலையில் 7 ஆசனங்களை வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இரு தரப்புக்கும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

எனினும் முதலமைச்சர் பதவி தமக்கு தேவை என்ற நிலைப்பாட்டுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தமது யோசனையை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் நேற்று இலங்கை அரசதரப்பினருடன் முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபையில் புதியதொரு ஆட்சியை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அமையவுள்ள கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பொறுப்பொன்றும் மு.காவுக்கு வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் வெளிவராத நிiலியல் கூட்டமைப்பினருடனான முஸ்லிம் காங்கிரஸின் இந்த சந்திப்பானது வெறும் கண்துடைப்பு நாடகம் என அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82947/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

இன்றைய கூட்டம் 7 மணியளிவல் ஆரம்பமாகவிருந்த நிலையில் 7 மணிக்கு முன்னதாக கூட்டமைப்பின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தந்திருந்தனர்.

எனினும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் எவரும் சென்றிருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளா ஹசன் அலியுடன் தொடர்பு கொண்ட போது தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதியுடன் அலரி மாளிகையில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், தாங்களும் அவரின் வருகைக்காக காத்திருப்பதாகவும், தலைவர் வந்தவுடன் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேலும் அரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுடன் தொடர்பு கொண்ட போது அவர்களின் தொலைபேசிகள் செயல் இழக்கச் செய்யப்பட்டிருந்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியவில்லையாயின் அறிவித்திருக்கலாம் என்றும் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவர்கள் இரத்தத்தில் ஓடும் ஈனப் புத்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்படிப்பட்டவர்களுக்கும் துதிபாட ஒருசில "தமிழர்" உள்ளனர்!

Link to comment
Share on other sites

முஸ்லீம் காங்கிரஸ்; கிழக்கு மாகாண மக்களுக்கு பாரிய துரோகம் செய்துள்ளது, முஸ்லீம்; மக்களனினதும் தமிழ் மக்களினதும் ஒற்றுமையை உலகுக்கு காட்ட வேண்டிய காலத்தில் முஸ்லீம் காங்கிரஸ் தனது துரோகத்தனத்தை உலகுக்குக் காட்டியுள்ளது, கிழக்கு மாகாணத்தில் அரச எதிர்பு உச்ச நிலையில் இருப்பதை அறிந்து, தான் அரசுக்கு எதிரனவன் என நாடகமாடி, தமிழ் முஸலீம் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற்று வென்றபின் வேதாளக் கதைபோல் அரசில் இணைகிறார் இவர் தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் வருவதை விரும்பாத ஒரு சுயநலவாதி. தமிழ் மக்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டுமென்று பேச்சு வந்தால் தனி அலகு கேட்பார். பின்னர் அரச தரப்புக்கு தாவி விடுவார். அமைதியாக இருப்பார். வேதாளத்துக்கும் முருங்கை மரத்துக்கும் என்ன தொடர்போ அதுபோல்தான் ; ரவூப் ஹக்கீமுக்கும் அரசாங்கத்துக்கும் உளன்ள தொடர்பு.

Link to comment
Share on other sites

முசிலிம் காங்கிரசு கிழக்கிலங்கை இசுலாமிய மக்களுக்கு இழைக்கும் துரோகம் அவர்களை கிழக்கில் இருந்தும் வெளியேற்றும்.

Link to comment
Share on other sites

[size=4]சம்பந்தர்- ஹக்கீம் சந்திப்பு நடந்தது; முடிவு இல்லை[/size]

பி.பி.சி

[size=3]கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்று தமக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி தாங்கள் காத்திருந்தும் தமக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்று தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தனர். இந்தப் பின்னணியிலேயே இரண்டு தரப்பினருக்கும் இடையில் இன்று இந்த சந்திப்பு நடந்திருக்கின்றது. நேற்று சனிக்கிழமையும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ்க் கூட்டமைப்பினர், தாம் தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸின் அறிவிப்புக்காக காத்திருப்பதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக அழைப்பு விடுத்தால் அதுபற்றி ஆராய்ந்து பார்க்கலாம் என்றும் கூட்டமைப்பு கூறியது. கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையை கருத்தில்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுக்கவேண்டும் என்று தாங்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு இன்றைய சந்திப்பின்போது சுட்டிக்காட்டியதாக சம்பந்தன் பிபிசியிடம் கூறினார். தமது கருத்துக்களை மிக அவதானமாக ஆராய்ந்துவருவதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறியதாகவும் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததாகவும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார். இன்னும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் முஸ்லிம் காங்கிரஸ் முடிவொன்றை எடுக்கும்வரை கால அவகாசம் வழங்குவதே பொருத்தமானது என்று தான் கருதுவதாகவும் சம்பந்தன் மேலும் கூறினார்.[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.