Jump to content

இலங்கையை புறக்கணிப்போம் !-Boycott Sri -Lanka Campaign


Recommended Posts

இலங்கையை புறக்கணிப்போம் !-Boycott Sri -Lanka Campaign

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட இனப் படுகொலைகளும் அதற்கான ஆதாரங்களும் விவாதங்களும் உலக அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டு வரும் இவ்வேளையில், ஈழத் தமிழ் மக்களுக்கான போராட்டத்திற்கு இன்னும் வலிமை சேர்க்கும் வகையில் தாய்த்தமிழகத்தைச் சேர்ந்த  SAVE TAMILS என்னும்  அமைப்பு   Boycott Sri -Lanka - இலங்கையை புறக்கணிப்போம் என்னும் பிரச்சார போராட்டத்தை தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக  முன்னெடுத்து வருகிறார்கள்.

 

தாயகத்தில் வாழும் எம் உறவுகளுக்கு பேச்சுரிமை இல்லாத நிலையிலும் அவர்களுக்கான தமிழக, புலம் பெயர்  தமிழ் மக்களது அறப் போராட்டம் இன்னும் இன்னும் பல் மடங்கு பலம் கொண்டு எழும் என்பதை உலகத்திற்கு  இந்த SAVE-TAMILS இளையோர் பறை சாற்றுகின்றனர்.

 

கடந்த கார்த்திகை மாதம், தாயகத்திலிருந்தும், தமிழகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பல அரசியல் பிரமுகர்களும் தமிழர் அமைப்புகளும் கலந்து கொண்ட  உலகத் தமிழர் மாநாட்டை  பிரித்தானிய தமிழர் பேரவை லண்டனில் ஏற்பாடு செய்திருந்தது. அந்த மாநாட்டில்,இலங்கைக்கெதிராக பல்வேறு வகையிலும் பல திசைகளிலும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென்றும், தாயகத்தில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்றும் சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கோள்ளப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .இதன் தொடர்ச்சியாக மேற்படி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை தீட்டியது.


அண்மையில் பி.த.பே.விடுத்த வேண்டுகோளுக்கமைய தமிழக அமைப்புக்கள் சிறிலங்காவைப் புறக்கணி, சிறிலங்காவின் பொருட்கள், சுற்றுலா மற்றும் கிரிக்கட் என்பனவற்றைப் புறக்கணி என்ற போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன.

 

இந்த வகையான சிறிய தீப்பொறிகளே,  இன்று தமிழ் நாட்டிலும் உலகளவிலும் பெரியதொரு  தீப்பந்தமாய் உருபெற்று, எங்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலையினை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட உதவுகின்றது. இது காலத்தின் அவசியம், இதன் அடிப்படையில் வையகப் பரப்பெங்கும் வாழுகின்ற அனைத்து தமிழ் மக்களும், தமிழ் அமைப்புகளும், தமிழ் நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சிகளும்  "Boycott  Sri  Lanka " போன்ற பரப்புரைகளை முன்னெடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம்.


--

media@tamilsforum.com

 

working together for peace with justice and dignity

Link to comment
Share on other sites

  • 1 month later...
முள்ளிவாய்க்களில் எம் இனத்தை அடித்து கொன்றழித்த சிங்களம் நாடு கடந்தும் அடிக்கிறது என்றால் உலகத்தில் தமிழன் என்ன அனாதையா?  பிரிந்து கிடக்கும் தமிழினமே ஒன்றாக நீயிருந்தால் காலால் உன் தங்கையை,அக்காவை உன் உடன் பிறந்தவளை இப்படி காலால் சிங்களவன் உதைவானா படை பெரிதென்றால் கிட்ட வந்திருக்க மாட்டான் ஒன்றுமை இருந்திருந்தால் இது நடந்திருக்குமா ? ஜனநாயக வழியை சிங்களதேசம் வன்முறை வழியால் எதிர்கிறது. தமிழன் அகிம்சையின் வழிவந்தவன் தீலீபனை ஈன்ற தமிழ் சிங்களவனின் வன்முறைக்கு ஜனநாயக வழியில் மீண்டும் மீண்டும் முறியடிப்போம்.அதற்க்கு எம்மை நாம் தாயார் படுத்த வேண்டும் அதாவது ஒன்றாக நாம் நிற்பதே தயார் படுத்தலாகும். 20ம் திகதி காடிஃப் நகரில் மீண்டும் ஒரு கிரிகெட் போட்டி நடைபெற இருக்கிறது. அதில் இலங்கை அணி விளையாடாவும் உள்ளது. எனவே அதன் முன்னால் மற்றுமொரு பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்த இளைஞர்கள் முடிவுசெய்துள்ளார்கள். தமிழர்களின் ஒற்றுமை அங்கே பறை சாற்றுங்கள் நாங்கள் வன்முறையாளர்கள் இல்லை சுகந்திர போராட்ட இனம் என்பதை பறை சாற்றுவோம். அமைப்பு பேதமின்றி தமிழன் என்று ஒரு அமைப்பின் கீழ் அணிதிரளுவோம் இதிலும் இணையா தமிழன் எப்போது ஒன்றுபடுவான் தமிழர் நாம் ஒன்றுபட சிங்களம் நேற்று களம் அமைத்து கொடுத்துள்ளது. ஒன்றுபடுவோம்.
 
சரவணை மைந்தன் 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.