Jump to content

கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் எழுர்ச்சியுடன் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு


Recommended Posts

கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் எழுர்ச்சியுடன் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு

நேற்று ஜூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஸ்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் சதுர்க்கத்தில் நினைவு கூர்ந்தார்கள்.http://www.pathivu.com/news/32603/57//d,article_full.aspx
balck-july-canada-1.JPG
இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கேடுப்பதாகவும் தோளோடு தோள் நிறுக்கும் தோழர்களாக தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம் எனவும் எமக்கான குரலாக தாம் என்றும் பாராளுமனறத்தில் ஒலிப்போம் எனவும் உறுதி அளித்தார்கள்.
balck-july-canada-2.JPG
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட International Assosiation of Genocide Scholars இன் தலைவரும் பேராசிரியருமான Danial Ferenstein சிறப்புரை ஆற்றினார். அவரது நம்பிக்கையூட்டும் உரையை கேட்பதற்கு என மக்கள் ஆர்வத்தோடு செவிமடுத்தனர்.
balck-july-canada-3.JPG

ஈழ  மண்ணில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை வலியுறுத்தி பேசினார். உலகெங்கிலும் இனப்படுகொலைகள் நடைபெற்றிருந்தாலும் எங்குமே நடைபெறாத கொடிய இனப்படுகொலை வடிவம் தமிழீழத்தில் நடைபெற்றது என்றார்.
balck-july-canada-4.JPG

உலகெங்கும் இனப்படுகொலைகள் இனப்படுகொலையின் சில கூறுகளை கொண்டிருந்தாலும் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை ஒன்றே இனப்படுகொலையின் அத்தனை கூறுகளையும் தாங்கி நிற்கின்றது என்றார்.
balck-july-canada-5.JPG

எமக்கான குரலாக ஒலிக்க மாந்த நேயம் உள்ள பல மேநாட்டாளர்கள் இன்று தாயராக உள்ள நிலையில் தமிழர்கள் நாம் எம் மக்களுக்கான எம் குரலை ஓங்கி ஒலிப்போமாக.  

வீழ்வது தோல்வி அல்ல. மீண்டும் எழாதிருப்பதே தோல்வி.
balck-july-canada-6.JPG
balck-july-canada-7.JPG
balck-july-canada-12.JPGbalck-july-canada-13.JPGbalck-july-canada-14.JPGbalck-july-canada-16.JPGbalck-july-canada-19.JPGbalck-july-canada-22.JPGbalck-july-canada-23.JPGbalck-july-canada-25.JPGbalck-july-canada-26.JPG

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.