Jump to content

தென்னாபிரிக்காவின் முயற்சி கைகூடுமா? செல்வரட்னம் சிறிதரன்-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
south%20africa_CI.jpg
 
 
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகப் போக்கு காட்டி, இழுத்தடிப்பதில் இலங்கைக்கு நிகர் யாருமே இல்லையென்றே தோன்றுகின்றது. இந்த விடயத்தில் பெரும் கில்லாடிகளாக இலங்கை அரசுகள் செயற்பட்டிருப்பதை வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. 
 
இலங்கையின் எரியும் பிரச்சி;னையாக இனப்பிரச்சினை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. யுத்த மோதல்களின் மூலம் இந்தப் பிரச்சினை சர்வதேச மட்டத்திற்கு மேலெழுந்திருந்தது. பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும் பார்க்க யுத்தத்திற்கு முடிவு காண வேண்டும் என்பதில் அரசு மிகுந்த அக்கறையோடு செயற்பட்டது. அதற்கு ஆதாரமாக உலக பயங்கரவாதப் போக்கைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகளை சர்வதேச நாடுகளின் உதவியோடு அழித்தொழித்தது. ஆயினும் யுத்த மோதல்களுக்கு அடிப்படையான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் சர்வதேச நாடுகளின் உதவிகளையும் ஒத்துழைப்பையும் அரசு உதாசீனம் செய்வதிலேயே முனைப்பாக இருக்கி;ன்றது. 
 
யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் நோர்வே அரசின் அனுசரணையுடன் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சியிலும் பார்க்க, விடுதலைப் புலிகளை ஓரங்கட்டுவதிலும், சர்வதேச அரங்கில் அவர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதைக் காட்டுவதிலேயே அரச தரப்பினர் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தனர். 
 
பேச்சுவார்த்தைகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட சில விடயங்களைக் கூட, அரசு நiமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கவில்லை. அவ்வாறான ஒரு முயற்சியின் மூலம், சமாதான முயற்சியில் தனக்குள்ள உண்மையான அக்கறையை அரசு வெளிப்படுத்துவதற்கு முனையவில்லை. பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகள் விடாப்பிடியராக இருந்திருக்கலாம். இல்லையென்பதற்கில்லை. இறைமையுள்ள அரசாங்கம் என்ற வகையிலும், நாட்டு மக்கள் அனைவரினதும் நன்மைகளில் அக்கறை கொண்டிருக்க வேண்டிய பொறுப்பு விடுதலைப்புலிகளிலும் பார்க்க, அரசு என்ற ரீதியில் தனக்கு பொறுப்பு இருக்கின்றது என்ற வகையிலும் அரசாங்கம் நாட்டில் சமாதானத்தை உருவாக்குவதற்குரிய காரியங்கள் பலவரற்றைச் செய்திருக்கலாம். ஆனால் அவைகள் செய்யப்படவில்லை. 
 
யுத்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற பேச்சுக்கள்
 
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததும், பேச்சுவார்த்தைகளின் மூலமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று இந்த அரசாங்கம் வாய் ஓயாமல் யுத்தத்தி;ற்கு முன்னர் கூறி வந்தது. ஆனால், யுத்தம் முடிவடைந்ததும், பேச்சுவார்த்தைகள் பற்றி வாயn திறக்கவில்லை. பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல தடவைகளில் வலியுறுத்தி வந்ததன் பின்னணியில், இந்தியாவின் அழுத்தம் காரணமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை அரசு நடத்தியது. 
 
ஒரு வருட காலம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தைகளிலும், ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்கள் அல்லது இணக்கம் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு பின்னடித்திருந்தது. பேச்சுவார்த்தைகளிலும் நாணயம் நேர்மை என்பன கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூற முடியவில்லை. மாறாக இடக்கு முடக்காக பேச்சுக்களில் நடந்து கொண்டதையே காண முடிந்தது. இறுதியாக, ஒரு வருடம் நீடித்த பேச்சுவார்த்தைகள், அதிகாரபூர்மற்றது என்று வாய்கூசாமல் அடித்துக்; கூறியதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முரண்டு பிடித்தது. 
 
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும், பேச்சுக்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே குழப்பினர் என்ற பழிச்சொல்லுக்கு அவர்களை ஆளாக்குவதிலேயே அரச தரப்பினர் குறியாக இருந்தனர். ஆயினும் பேச்சுவார்த்தைகளின்போது பல தடவைகளில் எரிச்சலடைந்து பொறுமை இழந்த போதிலும், பேச்சுவார்த்தைகள் தங்களால்தான் குழும்பியது என்ற நிலைமைக்கு ஆளாகாமல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மிகவும் கவனமாக நடந்து கொண்டிருந்தனர். 
 
இறுதி நாள் பேச்சுக்காக இரு தரப்பினரும் திர்மானித்திந்ததற்கமைவாக, பேச்சுக்கள் நடைபெற்ற இடத்திற்குக் கூட்டமைப்பினர் சென்று காவலிருந்தனர். ஆனால், அரச தரப்பினர் வரவே இல்லை. இந்த நிலையிலேயே அந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்தது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே பேச்சுவார்த்தைகளைக் குழப்பினர் என்று பின்னர் அரசாங்கம் தெரிவித்த போதிலும், கூட்டமைப்பினருடன் அரச தரப்பு கட்சியொன்றே பேச்சுக்கள் நடத்தியதாகவும், அந்தப் பேச்சுக்கள் அரசாங்கத்துடன் நடத்தப்படவில்லை. அரசு அதில் கலந்து கொள்ளவில்லை என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்தக் கேலிக் கூத்தை நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், சர்வதேசமும் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தது. 
 
பாராளுமன்றத் தெரிவுக்குழு 
 
கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, பாராளுமன்றத் தெரிவுக்குழு பற்றிய யோசனையை அரசாங்கம் முன்வைத்திருந்தது. பேச்சுவார்த்தைகளில் பலதரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும். பலதரப்பு கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வகையில் இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டு, அங்கு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று தனது நிலைப்பாட்டை அரசு வெளியிட்டிருந்தது.
 
எனினும் நேரடி பேச்சுவார்த்தைகளில் அரசியல் தீர்வு தொடர்பாக ஓர் இணக்கப்பாட்டை எட்டியதன் பின்னர், அது தொடர்பாக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பேசித் தீர்மானங்களை மேற்கொள்ளலாம் என்று தனது நிலைப்பாட்டை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெளிவாக அரசாங்கத்திடம் முனைவைத்திருந்திருந்தது. இதே நிலைப்பாட்டைத்தான் இப்போதும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கொண்டிருக்கின்றது. 
 
ஆனாhல், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எல்லா விடயங்களையும் எல்லோரிடமும் பேசலாம். அத்தகைய ஒரு பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சி;னைகளுக்குத் தீர்வு காணலாம் என்று அரசாங்கம் பிடிவாதமாக இருந்து வருகின்றது. அதேநேரம் அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நேரடியாக நடைபெற்ற  பேச்சுவார்த்தைகளையே அதிகாரபூர்மற்றது, செல்லுபடியாகாதது என்று வாய் கூசாமல் கூறிய அரசாங்கத்தின் செயற்பாட்டில் நம்பிக்கை இல்லை, எனவே, இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும் நம்பிக்கையில்லை என்று கூறி, அதில் பங்கெடுக்கப் போவதில்லை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது இறுதி முடிவாகத் தெரிவித்திருந்தது. 
 
இதனையடுத்து. அரசுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் செயலிழந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் தென்னாபிரிக்காவின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம், ஓர் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்ற புதிய யோசனையும் காய்நகர்த்தலும் ஆரம்பமாகியிருக்கின்றன. 
 
தென்னாபிரிக்க முயற்சி 
 
இனப்பிரச்சினையொன்றில் உண்மைகளைக் கண்டறிந்து நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான ஆணைக்குழு (ரீ ஆர் சி) என்ற அமைப்பின் ஊடாக, அரசியல் தீர்வு கண்டுள்ள அனுபவத்தைக் கொண்டுள்ள தென்னாபிரிக்காவின் வழி நடத்தலானது, இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கும், நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கும் பேருதவியாக இருக்கும் என்று பலரும் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். 
 
இந்த அடிப்படையில்தான் இரண்டொரு வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிமின் முயற்சியில், இலங்கை அரசாங்கத்தின் அனுமதியோடு தென்னாபிரிக்க நாட்டின் அனுபவங்கள் பற்றிய முன்னறிவைப் பெறுவதற்காக முதலில் அரச தரப்பு குழுவினரும், தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் குழுவினரும் அங்கு சென்று பலதரப்பட்டவர்களையும் சந்தித்து, நிலைமைகளையும், அவர்களுடைய செயற்பாடுகளையும் கண்டறிந்து திரும்பியிருந்தனர். 
 
இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் குழுவினரை இலங்கை ஜனாதிபதி சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. அப்போதைய சூழலில் அவருக்கு இருந்த பொதுநலவாய மாநாடு தொடர்பிலான நெருக்கடிகள் அல்லது வேளைப்பளு காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெறாத காரணத்தினர், தென்னாபிரிக்க முயற்சியில் ஆரம்பத்திலேயே ஒரு தொய்வு ஏற்பட்டிருந்தது.
 
ஆயினும், பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொழும்பு வந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமா அவர்களும் இலங்கை ஜனாதிபதியும் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது, தென்னாபிரிக்காவின் உண்மைகளைக் கண்டறிந்து நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான ஆணைக்குழு (ரீ ஆர் சி) பொன்ற அமைப்பொன்றை உருவாக்கி போருக்குப் பின்னரான இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவுவது பற்றி பேசி முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக தென்னாபிரிக்க ஜனாதிபதி அப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையும் சந்தித்து, விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். 
 
அப்போது, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் முயற்சியில் இலங்கை அரசாங்கத்துடன் தங்களுக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவங்கள் பற்றி தமிழ்;த்தேசிய கூட்டமைப்பினர் எடுத்துக் கூறி தமது எதிர்பார்ப்புக்கள் பற்றியும் விபரித்திருந்தனர். இதனையடுத்து இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கும்,   தென் சூடானில் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்குமான சிறப்பு தூதுவராக சிறில் ரமபோசா என்பவரை  தென்னாபிரிக்க ஜனாதிபதி நியமித்திருந்தார். 
 
இலங்கைக்கான சிறப்பு தூதுவராக தென்னாபிரிக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள சிறில் ரமபோசா என்பவரே தென்னாபிரிக்க தேசிய காங்கிரசின் பிரதித் தலைவராவார். தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையடுத்து, மே மாதமளவில் ஜனாதிபதி தேர்தலும் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளே அங்கு ஜனாதிபதியைத் தெரிவு செய்வார்கள். இந்தத் தேர்தலில் ரமபோச அவர்கள் தென்னாபிரிக்காவின் உபஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கான சூழல் நிலவுகின்றது. இந்த வகையில் தென்னாபிரிக்க அரசியல் வட்டாரங்களில் பலமும், அதிகார வல்லமையும் கொண்டவராகத் திகழ்கின்றார். எனவே, இலங்கையில் அரசியல் தீர்வொன்றைக் காணும் விடயத்தில் தென்னாபிரிக்காவின் பங்களிப்பின் கதாநாயகனாகிய சிறில் ரமபோசா செயற்திறன் மிக்கவராகச் செயற்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.  
 
கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் 
 
இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை அரச தூதுக்குழுவொன்று  ஐநா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடருக்கு முன்னதாக தென்னாபிரிக்காவுக்குச் சென்றிருந்தது. மார்ச் மாதம் நடைபெற்ற ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோருவதற்காகவே இந்தக் குழு சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அரசியல் தீர்வு விடயம் பற்றியும் அங்கு பேசப்பட்டதாகவும் தெரிகின்றது. 
 
முன்னதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தென்னாபிரிக்க ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியபோது, அந்த நாட்டின் சமாதான முயற்சியானது, எந்த வகையிலும் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையையோ அல்லது இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற உரிமை மீறல் நடவடிக்கைகள் பற்றிய பொறுப்பு கூறல் விடயத்தையோ பாதிக்கத் தக்கதாக அமையக் கூடாது என்பதைக் குறிப்பிட்டிருந்தனர். 
 
இத்தகைய பின்னணியி;ல்தான் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கி;ன்ற சூழலில் அண்மையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தென்னாபிரிக்க சிறப்புத் தூதுவர் சிறில் ரமபோசாவின் அழைப்பின்பேரில் அங்கு சென்று பேச்சுக்கள் நடத்திவிட்டுத் திரும்பியிருக்கின்றனர். 
 
ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக ஐநா விசாரணையொன்றை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயமானது, இந்த விசாரணை நடவடிக்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் பொதுவாக நிலவியது. கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி;னரும் தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம் இதனை வெளிப்படையாகவே தெரிவித்து கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் தென்னாபிரிக்க விஜயத்தைக் கண்டித்திருந்தார். 
 
ஆயினும் ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தி;ற்கமைவாக சர்வதேச விசாரணையொன்றுக்கு ஒத்துழைக்கவே முடியாது என்று முற்று முழுதாக மறுத்துள்ள அரசாங்கம் இப்போது கட்டவிழ்ந்த காளையாகத் திமிறிக் கொண்ருக்கின்றது. இந்த நிலையில் தென்னாபிரிக்காவின் அனுசரணை அல்லது மத்தி;யஸ்தத்துடன் (தென்னாபிர்pக்கா மத்தியஸ்தம் வகிக்கின்ற ஒரு பேச்சுவார்த்தைக்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கூறியுள்ளார்) கூடிய சமாதான முயற்சியானது, இலங்கை அரசாங்கத்தை யானைப்பாகனின் அங்குசத்தைப் போன்று ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவும் என்ற நம்பிக்கையும் பலரிடம் காணப்படுகின்றது. இந்த நம்பிக்கை சரியானதே என்று ஆய்வாளர்களும் கருதுகின்றார்கள்.
 
தென்னாபிரிக்காவுக்குச் சென்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அரச தரப்பினர் மட்டுமல்லாமல், அங்குள்ள தமிழ் மக்களின் முக்கியஸ்தர்கள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஆர்வமுள்ள முக்கிய செயற்பாட்டாளர்களையும் சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்கள். தென்னாபிரிக்காவின் முயற்சி குறித்து அங்குள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கையீனம் பற்றியும் கூட்டமைப்பினர் தெரிந்து கொண்டிருக்கின்றனர். முக்கியமாக ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையின்போது வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தென்னாபிரிக்கா விலகியிருந்தது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அந்த அரசு மீது சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்ததையும் இவர்கள் அறிந்து கொண்டனர். எனினும், சமாதான முயற்சியில் தென்னாபிரிக்கா தனது சிறப்பான பங்களிப்பை நல்க முடியும் என்பதைக் கூட்டமைப்பினர் அவர்களுக்கு எடுத்துரைத்திருக்கின்றார்கள். இந்த நிலையில் தென்னாபிரிக்காவை, வழி தவறிப்போகாமல் பார்த்துக் கொள்வதில் அங்கு உள்நாட்டிலேயே வழியேற்பட்டிருக்கின்றது என்பதும் தெளிவாகின்றது. 
 
தென்னாபிரிக்க அரசும் முக்கியஸ்தர்களும், தென்னாபிரிக்காவை அனுசரணையாளராக இலங்கையின் சமாதான முயற்சியில் ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாகக் கோரியிருப்பiதை கூட்டமைப்பு தூதுக்குழுவினரிடம் கோடி காட்டியிருக்கின்றனர். இதன் மூலம் அர்த்தமுள்ள ஒரு சமாதான முயற்சி முன்னெடுக்கப்படலாம் என்பதே கூட்டமைப்பினரின் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாக இருக்கின்றது. ஆனால் உள்நாட்டில் அரசு நடந்து கொள்கின்ற விதமானது அதற்கு நேர்மாறாகவே காணப்படுகின்றது. 
 
என்ன நடக்கின்றது?
 
தென்னாபிரிக்காவின் அனுசரணையுடன் கூடிய சமாதான முயற்சியும், அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்குரிய ஏற்பாடு பற்றியும் அரசாங்கம் எதிர்மறையான கருத்தையே கொண்டிருக்கின்றது. இதனை அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமாகிய கெஹெலிய ரம்புக்வெல்ல வெளிப்படுத்தியிருக்கின்றார். பேச்சுவார்த்தைகள் என்ற்hல், அது, தெரிவுக்குழுவிலேயே நடைபெற வேண்டும். இரு முனைப் பேச்சுக்கள் இடம்பெறுவதற்கு சாத்தியமே கிடையாது. தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் மட்டும் அரசு பேச்சுக்களை நடத்தமாட்டாது என்று அறுதியிட்டு அவர் கூறியிருக்கின்றார். அது மட்டுமல்லாமல், தெரிவுக்குழுவுக்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வரவேண்டும் என்றும் வலிந்து வற்புறுத்தி அவர் அழைத்திருக்கின்றார். 
 
வெளிநாட்டு அனுசரணையோ அல்லது மத்தியஸ்தமோ பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையில்லை. உள்ளுரில் எமக்குள்ளேயே பேச்சுக்கள் நடத்தி தீர்வு காண முடியும். அதற்கு அரசாங்கம் மேற்கொள்கின்ற வழிகளில் கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது, 
 
தென்னாபிரிக்க அரசாங்கத்துடனும், முக்கியஸ்தர்களுடனும் சமாதான முயற்சிகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பு பற்றியெல்லாம் பேச்சுக்களை நடத்திவிட்டு, இப்போது அதற்கு எதிர்மாறான நிலைப்பாடு குறித்து அரசாங்கத் தரப்பில் இருந்து சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்படுவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான நல்ல அறிகுறியாகத் தென்படவில்லை. அத்துடன் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசரமான அரசியல் காரியம் இப்போதைக்கு சரியான திசையில் முன்னெடுப்பதற்கான நிலைமை குறித்தும் நம்பகமான நிலைமைகள் காணப்படவில்லை.
 
மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய நிலைமையே தென்படுகின்றது.
 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.