Jump to content

கரிக்காய் பொரித்தேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொருளையும் இணைத்துவிடுங்கள் உடையார் :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வானை கிளிந்தெழுர்ந்த பெரிய மேகங்களே தேன்களை கொண்ட மலர்கள் சிதறி விழ மழை பொழிவீர்களே, இரணியன் உயிரை கொன்ற நரசிம்மனிடம் என்னிடம் எடுத்த வளையல்களை எப்போ தருவீர்கள் என கேட்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன், on 12 April 2012 - 06:44 AM, said:

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,

தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,

வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்.

தெரிந்த தமிழை வைத்து, இந்தப் பாட்டுக்களின் கருத்தையும், இதில் சம்பத்தப் பட்டவர்களையும் பற்றி, ஒரு பத்துவரிகளுக்குள், எழுதுங்களேன்!

வாரணம்-யானை யானைகளுடன் பொருதிய மார்பும். வரை-மலை.தன்தாய் ஒவ்வொரு நாளும் வெள்ளியங்கிரி மலைக்குப் போய் வழிபடுவதா அந்த மலையை பெயர்தெடுத்து என் அன்னையின் காலடியில் கொண்டு வந்து சேர்ப்பேன் என்று மலையை பெயர்த்து தோள்களில் ஏற்றினான்.நாரத முனிவருடன் தன் தலையை வெட்டி யாழாகவும் தன்நரம்புகளையே யாழின் நரம்புகளாகப் பாவித்து அவருக்கு ஈடாக தமிழிசையை இசைத்த நாவும். தார் அணி மௌலி பத்தும்-பத்து தலைகளில் ஏறிய மகுடங்களும்,சிவன் கொடுத்த வாளும் (விபிடணணின் துரோகத்தால் )வீரத்தையும் களத்திலே விட்டு விட்டு வெறுங்கையோடு இலங்கை மாநகருக்குள் சென்றான்.

எங்கள் தலைவன் இராவணணின் பெருமைகளை மறைக்க முடியாமல் கம்பர் அவனை இந்த இடத்தில் உயர்த்தி பாடி இகழ்கின்றார்.

இசைபாடி ஈழத்தை ஆண்டவனாம் இராவணனை வசைபாடிச் சென்று விட்டான் வம்பனவன் கம்பனடி!

இது என் சொந்தச் சரக்குத்தான் பிழையுண்டேல் பொறுத்தருள்க.

விடங்கொண்ட மினைப்போலும்

வெந்தணல் மெழுகைப் போலும்

படங்கொண்ட பாம்பின் வாயில்

பற்றிய தேரை போலும்

திடங்கொண்ட இராம பாணம்

செருக்களத்துற்ற போது

கடன்பட்டார் நெஞ்சம் போலே

கலங்கினான் இலங்கை வேந்தன்.

புலவரே, இவ்விடத்தில் இராவணன் பெருமையை அறிய இந்த இணைப்பையும் இதில் இணைக்கின்றேன்

http://www.youtube.com/watch?v=7AppYkc5vL0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானை கிளிந்தெழுர்ந்த பெரிய மேகங்களே தேன்களை கொண்ட மலர்கள் சிதறி விழ மழை பொழிவீர்களே, இரணியன் உயிரை கொன்ற நரசிம்மனிடம் என்னிடம் எடுத்த வளையல்களை எப்போ தருவீர்கள் என கேட்கவும்

இப்படியெல்லாம் மொட்டையாகச் சொல்லக்கூடாது உடையார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் மொட்டையாகச் சொல்லக்கூடாது உடையார்

ண்ணனைத் திருமணம் செய்து கொண்டாலும், அது கனவில் தானே? மின்மினி பறந்தது போல இருந்தது. அவள் நெஞ்சில் நிலையாக இல்லை!

அடுத்துக் கிடைத்த கிருஷ்ணானுபவத்திலும், இவளது அன்பை அதிசயப் படுத்துவதற்காகவும், அதிகப் படுத்துவதற்காகவும், தொடக்கத்திலேயே அவளிடம், 'நான் எப்ப வருவேன், எப்படி வருவேன், என்பது தெரியாது; ஆனால் வர வேண்டிய சமயத்துக்குச் சரியாக வந்துவிடுவேன்!' என்று சொல்லிச் செல்கிறான் கண்ணன்! ஆனால் வரவே இல்லை!

தான் பெற்ற அனுபவத்தை நினைக்கிறாள் நம் பாவை! நினைக்கும்போதெல்லாம் பரவசம்! அதை மீண்டும் பெறவேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது! ஆனால், அவனோ வர மறுக்கிறான்!

அவனுடன் பேசுவதற்கு, மற்றக் கலியுலகத்து ஆண்கள் மாதிரி, Mobile, Pre-Paid SIM Card வாங்கித் தரவில்லை அவன்! எனவே, அவனைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள, அவன் அருகிலேயே எப்போதும் இருக்கும் சங்கிடம் பேசுகின்றாள்.

பாவை கூறியவற்றைப் பொறுமையாகக் கேட்ட சங்கு, பதில் சொல்லாமல் ஓடிவிடுகிறது!

ஓடிய சங்கம், மீண்டும் வரவில்லை! கண்ணனும் வரவில்லை! சங்கு கண்ணனிடம் ஏதாவது சொல்லிற்றா என்றும் தெரியவில்லை! 'சங்கம், கண்ணனின் அந்தரங்கனானதால், அவன் சொன்னதை மட்டுமே கேட்கும், நான் சொன்னால் கேட்காது', என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறாள் பாவை.

சென்ற முறை பிரியும் தருணத்தில், மழைக் காலத்தில் கண்ணன் மீண்டும் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்! மழைக் காலமும் வந்தது. கருமை நிறக் கண்ணன் வரவில்லை. ஆனால் அவன் போல் நிறமுள்ள கருத்த மேகங்கள் முன்னே வந்து நின்றன!

கவலையுற்ற பாவை, மேகங்களை, திருவேங்கவனிடம் தூது அனுப்புகின்றாள்!

***

letter.JPG

காலம் காலமாக, மன்னர்கள், காதலர்கள், மற்றவர்களும், தேவைப்படும்போது தூது அனுப்புவதை வழக்கமாகவே கொண்டு இருந்தனர்.

மன்னர்கள் அனுப்பும் தூதுவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், தூதுவன் இன்னொரு அரசனிடம் செய்தி சொல்ல வேண்டிய முறை என, பல நியதிகள் தமிழ் இலக்கியங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன.

தூதுவன் எப்படி இருக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று, நம் வள்ளுவனார் ஒரு அத்தியாயமே (69-தூது) வகுத்துள்ளார். மாதிரிக்கு, அதில் ஒன்று:

தொகச் சொல்லித, தூவாத நீக்கி, நகச் சொல்லி

நன்றி பயப்பதாம் தூது.

குறள் 69-5

(காரண காரியங்களை எடுத்துச் சொல்லி, இன்னாத சொற்களை நீக்கி, கேட்பவர்கள் மனம் மகிழ உரைத்து, எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடித்து, தம் அரசனுக்கு நன்மை பயப்பவனே தூதன் ஆவான்!)

தூது செல்பவன், நால்வகை உபாயங்களையும் (அறிவுறுத்துதல், கெஞ்சல், மிரட்டல், பொருள் கொடுத்தல்) கையாண்டு, எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்க வேண்டும்!

OgAAAIQPf3DGVDYi9u_Y4Ov3GANYXISAmoNczn_DpwNHSaxRKsBD4ONjBI02WnfJC3oxsJqzW4cgjF44UDAXfe5qyDoAm1T1UAr7UBsDWVFbUG6oSqR0osbjvHLQ.jpg

நம் எல்லோருக்கும் தெரிந்த முதல் தூதுவன் - தூதுவனுக்கு மிகச் சிறந்த உதாரணம் - அனுமனே (அனுமனுடைய தகுதிகளே வள்ளுவன் இந்த அத்தியாயம் எழுதக் காரணமாயிற்று என்றும் கூறப்படுவதுண்டு)!

மன்னர்கள், மனிதர்களையும், அனுமனைப் போன்றோரையும் தூது அனுப்பினாலும், காதலர்கள்/காதலிகள் தனிமையில் தவிக்கும்போது, தூது விடுவது மனிதர்கள் மூலம் அல்ல!

கிளிப்பத்து, குயில் பத்து, புறாக்கடிதம், மயில் பத்து, மேக விடு தூது, என்று, பதில் பேசாதவைகளைப் பல விதமாகத் தூது விடுபவர்களே நம் காதலர்கள்!

dove_and_hand.jpg

இயம்புகின்ற காலத்து எகினம், மயில், கிள்ளை,

பயன் பெறு மேகம், பூவை, பாங்கி,

நயந்த குயில், பேதை, நெஞ்சம், தென்றல்,

பிரமம் ஈரைந்துமே தூதுரைத்து வாங்கும் தொடை.

(அன்னம், கிளி, மயில், மேகம், நாகணவாய்ப் பறவை, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு, தோழி ஆகியோர் தூது செல்லத் தகுந்தவை)

avvaiyar.jpg

மன்னர்களிடையே தூது செல்ல பெரும்பாலும் ஆண்களே அனுப்பப்பட்டாலும், ஒளவையார், அதியமானுக்காக, தொண்டைமானிடம் தூது சென்று, போரை நிறுத்தியதாக வரலாறு உண்டு!

நம் பாவை, மேகத்தையும், குயிலையும் தூது விட, சில ஆழ்வார்கள், மற்ற பறவைகளையும், நெஞ்சத்தையும் தூது விட்டுள்ளனர்!

மதுரைச் சொக்கநாதர் அருளிய 'தமிழ் விடு தூது' எனும் நூல் (உ.வே.சாமிநாத ஐயர் தேடிக் கண்டுபிடித்தது) சற்று வித்தியாசமான தூதாக இருப்பது குறிப்பிடத் தக்கது!

***

மேகத்தைத் தூது விடுபவர்கள், ஏனோ, வெயில் கால வெண் மேகத்தைத் தூது விடுவதில்லை (அவை வெகுதூரம் செல்லாததால் இருக்குமோ?). மழை மேகத்தையும், பொழிகின்ற மழையையும் பற்றித்தான் எழுதுகின்றனர்!

மேக விடு தூதிலும், 'தலைவன் வருவான்' என்று மேகம் செய்தி கூறுதல், 'தலைவனிடம் போய்ச் சொல்' என்று தூது அனுப்புதல், இடியுடனும், மழையுடனும், மேகம் பதில் பேசுதல், போன்ற பல வகைகள் உண்டு!

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய 'திருநறையூர் நம்பி மேக விடு தூது' எனும் கலி வெண்பா இயற்றியுள்ளார் ('இது இவரால் எழுதப் பட்டது அல்ல' என்ற கருத்தும் உண்டு).

ஒரு தலைவி, திருநறையூர் எனும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள நம்பி எம்பெருமான் மீது காதல் கொண்டு, 'நான் அணிந்து கொள்ள, நம்பியிடம் இருந்து துளசி மாலை வாங்கி வா' என்று மேகத்தைத் தூது அனுப்புகிறாள்.

(200 கண்ணிகள் - சிறிய/பெரிய திருமடல்கள் போல் - கொண்டது. கலி வெண்பாக்களுக்கே உரித்தான கணக்கு விவாதம் - 400 வரிகளா, 200 கண்ணிகளா, 100 பாக்களா, எல்லாம் சேர்த்து ஒரே பாடலா? - இதற்கும் உண்டு. எது எப்படி இருந்தாலும், இதன் சொற்சுவையும், பொருட்சுவையும் மிகவும் நன்றாக உள்ளது)

பதிணெண் கீழ்க் கணக்கு நூல்களில், ’கார் நாற்பது’ (மதுரைக் கண்ணன் கூத்தனார் இயற்றியது) எனும் சிறு நூல் உண்டு. மழைக் காலம் வந்து விட்டதை, நூலில் உள்ள ஒவ்வொரு செய்யுளும் உரைக்கும். இது தூது உரைக்கும் நூல் அல்ல என்றாலும், ஒரு செய்யுள்,

கடும் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,

நெடும் காடு நேர் சினம் ஈன - கொடுங்குழாய்!

'இன்னே வருவர் நமர்!' என்று எழில் வானம்

மின்னும், அவர் தூது உரைத்து.

கார் நாற்பது-2

(சூரியன் வெப்பம் குறைந்து, மழைக் காலம் துவங்கி, காட்டில் எல்லாம், சிறு புல்கள் வளர, 'நம் தலைவர் இப்போதே வருவார்' என மேகம் தலைவர் அனுப்பிய தூதை அறிவித்தது என்று, தோழி தலைவியிடம் கூறுகின்றாள்)

'மழைக்காலம் ஆரம்பித்ததே, தூது உரைக்கத் தான்' என்ற பொருளில் வந்துள்ளது.

20080708-RainClouds.jpg

கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழிப் புலவனான காளிதாசன் எழுதிய 'மேகதூதம்' உலகப் புகழ் பெற்றது! தவறு செய்ததனால், குபேரனால் நாட்டை விட்டு விரட்டப்பட்ட ஒரு யக்ஷன், மழைக்கால மேகங்கள் மூலம் தன் மனைவிக்குத் தூது அனுப்புகிறான்!

கலியுகமாயிற்றே! இவன் சொன்னால் மேகங்கள் உடனே தூது செல்லுமா? அவை தூது செல்வதற்கு, ஏதாவது Incentive வேண்டுமே!

'நீ போகும் வழியில், இயற்கைக் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும்; உன் மனம் நிறையும்; நீ போகும் வழியில் எல்லாம் மழை பொழிந்து கொண்டே சென்றால் பலர் உன்னை வாழ்த்துவர்' என்று அவற்றிற்கு, போக வேண்டிய காரணத்தை எடுத்துச் சொல்கிறான்!

111 சந்தங்கள் கொண்ட இந்தக் காவியத்தை, Horace Hayman Wilson எனும் ஆங்கிலேயர், 1813-ஆம் ஆண்டு 'Megha Duta: The Cloud Messenger' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ('Water' படத்திலும் இதைப் பற்றிய குறிப்பு வருகின்றது).

மேகதூதம், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

***

வான் கொண்டு கிளர்ந்தெழுந்த* மாமுகில்காள்!* வேங்கடத்துத்

தேன் கொண்ட மலர் சிதற* திரண்டேறிப் பொழிவீர்காள்!*

ஊன் கொண்ட வள்ளுகிரால்* இரணியனை உடலிடந்தான்*

தான் கொண்ட சரிவளைகள்* தருமாகில் சாற்றுமினே.

நாச்சியார் திருமொழி 8-5

'ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களே! திருமலையிலே உள்ள, தேன் நிறைந்துள்ள மலர்கள் சிதறும்படி, திரளாக மழை பொழியும் மேகங்களே! கூர்மையான நகங்களாலே இரணியன் உயிர் கொண்ட நரசிம்மன், என்னிடம் இருந்து எடுத்துச் சென்ற என் கைவளைகளை திருப்பித் தருவதாக இருக்கிறானா என்று நான் கேட்டதாகச் சொல்லுங்கள்'.

(ஊன் கொண்ட - சதைப் பற்றுள்ள, சக்தி வாய்ந்த; சரிவளை - கைகளில் இருந்து சரிந்து விழும் கைவளைகள்; சாற்றுமின் - சொல்லுங்கள்)

***

இந்தத் திருமொழியின் நான்காம் பாசுரம் வரை, 'மழை பொழியும் மேகங்கள்' என்று சாதாரணமாகக் குறிப்பிட்ட ஆண்டாள், இப்போது, 'கிளர்ந்து எழுங்கள்' (வான் கொண்டு கிளர்ந்தெழுந்த) என்கின்றாள்! எப்படி?

ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளர்ந்து எழ வேண்டுமாம்! இரணியனை வதைக்க நரசிம்மன் தூணில் இருந்து கிளர்ந்து எழுந்தது போல!

narasimha2.JPG

'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' என்று திருப்பாவையில் சொன்ன அதே ஆண்டாள், இங்கு, மலர்கள் அழியும்படி, சிதறும்படி (தேன் கொண்ட மலர் சிதற) ’திரண்டு வந்து மழை பொழியும் மேகங்களே’ (திரண்டேறிப் பொழிவீர்காள்)' என்று சொல்கின்றாள்! ஏன்?

நரசிம்மன், இரணியன் உடன் வந்த அசுரர்கள் சிதறும்படி கிளர்ந்து எழுந்தானாம்! அது போன்று, திருமலையில், 'தேன் ஊறிக் கிடந்த மலர்கள் சிதறும்படி மழை பெய்ய வந்த மேகங்களே!' என்கின்றாள்!

அவை என்ன செய்ய வேண்டுமாம்?

'பிரகலாதன் கூப்பிடாமலேயே, அவனுக்காக, உன் வலிமையான (ஊன் கொண்ட) கைகளால், ஒரு இரணியனை அழிக்க வந்தாய்! ஆனால், நானோ உன்னை அழிக்க வரச் சொல்லவில்லை! என் கைவளைகளை (சரிவளைகள்) மட்டும் திருப்பித் தா! (தருமாகில்)' என்று நரசிம்மனிடம் சொல்ல வேண்டுமாம் (சாற்றுமின்)!

’கைவளைகள்’ என்று கூறாது, ‘சரிவளைகள்’ என்று ஆண்டாள் ஏன் கூற வேண்டும்? கண்ணனைப் பிரிந்த ஏக்கத்தினால், அவள் மிகவும் மெலிந்து போயிருந்தாள். கைகளில் இருந்த வளைகள், கையில் இருந்து சரிந்து விழுந்தன. அதையே கண்ணன் எடுத்துச் சென்றான்!

girl_on_love.jpg

(’சரிவளை’- வினைத் தொகை = சரிந்த வளை, சரிகின்ற வளை, சரியும் வளை!)

"'சக்தியுள்ள கைகளால் இரணியன் உடலைக் கிழித்தாய்! அதே கைகளால், என் வளையைத் திருடிச் சென்றாய்! அதே கைகளால், என் கைகளில் வளைகளை மீண்டும் அணிந்து விடு!' என்று, நான் சொன்னதாக, திருவேங்கட மலையில் இருக்கும் நரசிம்மனிடம் சொல்" என்று மேகத்தின் மூலம் தூது விடுகின்றாள் ஆண்டாள்!

('வளைகளைத் திருப்பித் தா', என்பதன் உள் அர்த்தம், 'நீயே நேரில் வந்து, உன் கைகளால் என் கையில் அணிவித்தால் தான் நான் வளையல்களை அணிவேன்; அதற்காகவாவது, நீ நேரில் வரவேண்டும்' என்பதே!)

(இத்துடன், ஆண்டாள் அனுபவித்த நரசிம்மன் நிறைவு பெறுகிறது. அடுத்து, திருமழிசை ஆழ்வாரின் அனுபவத்தைப் பார்க்கலாம்)

http://aaravamudhu.blogspot.com.au/2010/05/blog-post_8725.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உலவிய கவிஞர்களும் தூது விடுவதில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள் போலும்..

முன்பு ஒரு காலத்தில் வெண்ணிலா எழுதிய தூதுக்கவிதை....இன்னும் மற்றவர்களும் எழுதியிருப்பார்கள் ஒவ்வொன்றாக தேடி எடுத்து வந்து இணைத்துவிடுகிறேன்....யாரும் அவசரப்பட்டு கோபிக்கக்கூடாது. :rolleyes:

marakkaamalsolthumbxa7hg9.jpg

இளங்காலைப் பொழுதினில் இதழ் விரித்து

மலரத் துடித்த போது உன்

வசியப் பார்வை என்னை சட்டென

மலரவைத்தது.

உன்னைப் பார்த்த அந்நிமிடத்தில்

இருந்து என் மனசுக்குள்

எதோ ஒரு தாக்கம்.

இதைத்தான் காதல் என்பார்களோ?

புரியவில்லை..!

எனக்கு புரியவில்லை, கிளியே..!

அவனிடம் ஒரு முறை கேட்டு சொல்

மெளனத்தின் ஓரத்தில்

நெஞ்சின் ஈரத்தில்

வெட்கப்படும் என் மனசு

இராத்திரியில் கனவுகள்

பகலில் அவன் நினைவுகள்

இதுதான் என் வாழ்க்கை

கிளியே இதையும் அவனிடம் சொல்

ஆயிரமாயிரம் கனவுகளில்

அவன் வந்து என் கூந்தல் கோதி

தூக்கத்தை கலைத்து விளையாடி

மகிழ்ந்த அந்த இனிமையான

இரவுகள் அதையும் மறக்கவில்லை நான்

இதையும் அவனிடம் சொல் கிளியே.

பசுவின் மடியினைத் தேடும்

பசுங்கன்றினைப் போல

காளை அவன் மனம் தேடி

பாவை என் மனம் அலைகிறது

என்னவனிடம் இதையும் சொல் கிளியே

இனிப் பேசும் முதல்வார்த்தை

அவனோடு தான் என்றும் அவனின்

இரக்கமான நினைவுகளை என்

இதயவங்கியில் வட்டியில்லாமல்

வைப்புச் செய்து காத்திருக்கிறேன்

இதையும் மறக்காமல் சொல் கிளியே

பசிமறந்து பஞ்சணையும் வெறுத்து

கட்டாந்தரையில் கண்விழித்து

என் வசந்த கால நினைவுகளை

மீட்டிப் பார்க்கிறேன் தினமும்

என் உதடுகள் அவன் பெயரை மட்டுமன்றி

வேறெவர் பெயரும் உச்சரிக்கவில்லை

என் மான்விழிகளில் அவன் பிம்பம் தவிர

வேறெந்த உருவமும் தெரியவில்லை

இவையனைத்தையும் அவனிடம் சொல்வாயென

என் வளர்ப்புக் கிளியே உன்னை தூதனுப்புகிறேன்

யாவற்றையும் மறக்காமல் என்னவன் செவிகளில்

உன் கிளி மொழியில் சொல்லிடுவாயா.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு யாழ்க்கருத்துக்கள உறுப்பிளர் எழுதிய தூதுக்கவிதைதான் யாழில் தேடிக் கிடைக்கவில்லை. வெளியில் இருந்து எடுத்து இணைத்திருக்கிறேன். இவர் ஒரு பழைய யாழ் உறவு இப்போது இந்தப்பக்கம் வருவதில்லை.... என்று எண்ண முடியாது, அநேகமாக வந்து வாசிப்பார் பதிவிடுவதில்லை என்று நினைக்கிறேன். அவரை நாங்கள் மறக்கவில்லை என்பதை இந்தப்பதிவின்மூலம் அவர் அறிந்து கொள்ளட்டும்.

காதல் விடும் தூது...!!

மல்லிகைப் பூவே..!!

மங்கை இவள் உன்முகம்

காணாமல் எனைச் சூடாமல்

முகமலர் வாடி உனைத்தேடி

நொடி தோறும் தவிக்கிறாலென

தூது சொல்வாய் மல்லிகையே..!!

கண்ணாடித் தோழியே..!!

என்தோழி உனைச் சேராமல்

மொழி கேளாமல் எனைமறந்து

விழி அஞ்சனமிழந்து அணிதுறந்து

பூவுடல் மெலிந்து துவழ்கிறாலென

தூது சொல்வாய் என்தோழியே..!!

தென்றல் காற்றே..!!

மென் தீண்டலிலும் தவிப்புற்று

மான் விழிகள் கலக்கமுற்று

அழகோடு பற்றற்று தனிமையில்

தவமுற்று வாடுகிறாள் தையலென

தூது சொல்வாய் காதல்காற்றே..!!

பால் நிலவே..!!

உன் நினைவாலே என்னோடு

நாளும் இப்பாவை தேய்கிறாள்

மனதோடு போராடி விழியோடு

நீராடி தன்னுயிர் நோகிறாலென

தூது சொல்வாய் வெண்ணிலவே..!!

சங்கத் தமிழே..!!

உனைப் பிரிந்து தனைமறந்து

வார்த்தை ஒன்றும் வசப்படாமல்

கண்ணீர் கொண்டு கவியெழுதி

வஞ்சி இவள் காத்திருக்கிறாலென

தூது சொல்வாய் தேன்தமிழே..!!

காதல் நெஞ்சமே..!!

நிதமும் உன்னை நினைத்து

ரிதமாய் உன்பெயர் ஒலித்து

உன்விழி பூக்கும் காதல்பூவை

இப்பூவை சூடவே துடிக்கிறேனென

தூது சொல்வாய் என்நெஞ்சே..!!

யசோதை நந்தனே..!!

பேதை மனதை அறியாயோ?

கோதை கண்ணீர் துடைப்பாயோ?

உனையன்றி யாருமில்லை எனக்கு

உன்அன்பின்றி சக்தியில்லை எனக்கு

தூது சொல்வாய் என்கண்ணா..!!

காதல் கள்வனே..!!

காற்றையும் தூது விட்டேன்..!

கண்ணனையும் தூது விட்டேன்..!!

கானலாகுமோ என் தூது?நீ

காணலாகுமோ என அஞ்சும்

இந்த நெஞ்சம் விடும் தூது

காதல் விடும் தூது...!!

நீயின்றி ஒரு நொடியும் நகருமோ?

நானின்றி உன்னுலகம் சுழலுமோ?

நீயின்றி வாழ்வதில் பொருளேது?

நானின்றி உன்வாழ்வில் ஒளியேது?

அறிந்திருந்தும் ஏன் மௌனிக்கிறாய்?

புரிந்திருந்தும் ஏன் பரிதவிக்கிறாய்?

வருவாயோ என் வாசல் தேடி?

தருவாயோ நம் காதல் நீதி?

விழியோடு உயிர்தேக்கி வழியோடு

காத்திருக்கிறேன் காதலுடன்..!!!

- நித்திலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி அக்கா ஆனால் இன்னும் முழுமையாக,ஆறுதலாக வாசிக்கவில்லை...வாசித்து விட்டு என் கருத்தை எழுதுகிறேன்...பாராட்டுக்கள் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஒரு பாடல் அல்லது கவிதைதான் இணைக்கலாம் என்று நான் முன்பு கூறிய நிபந்தனையை நானே மீள வாங்கிக்கொண்டு இந்தப்பதிவை தொடர்கின்றேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

இயற்றிய

அழகர் கிள்ளைவிடு தூது

காப்பு

வெண்பா

Parrot-bird.jpg

கிளியின் சிறப்புகள்

1 கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு

நீர்கொண்ட பாயல் நிறம்கொண்டு - சீர்கொண்ட

2 வையம் படைக்கும் மதனையும் மேல் கொண்டு இன்பம்

செய்யுங் கிளியரசே செப்பக்கேள் - வையம்எலாம்

3 வேளாண்மை என்னும் விளைவுக்கு நின்வார்த்தை

கேளாதவர் ஆர்காண் கிள்ளையே - நாளும்

4 மலைத்திடும் மாரன் ஒற்றை வண்டிலும் இல்லாமல்

செலுத்திய கால்தேரை முழுத்தேராய்ப் - பெலத்து இழுத்துக்

5 கொண்டுதிரி பச்சைக் குதிராய் உனக்கு எதிரோ

பண்டுதிரி வெய்யோன் பரிஏழும் - கண்ட

6 செகமுழுதும் நீ ஞானதீபமும் நீ என்று

சுகமுனியே சொல்லாரோ சொல்லாய் - வகைவகையாய்

7 எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவை ஆயினும்உன்

ஐவண்ணத்துள்ளே அடங்குமே - மெய்வண்ணம்

8 பார்க்கும்பொழுதில் உனைப் பார்ப்பதி என்பார் என்றோ

மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய் - நாக்குத்

9 தடுமாறுவோரை எல்லாம் தள்ளுவரே உன்னை

விடுவார் ஒருவர் உண்டோ விள்ளாய் - அடுபோர்

10 மறம்தரு சீவகனார் மங்கையரில் தத்தை

சிறந்ததுநின் பேர்படைத்த சீரே - பிறந்தவர்

11 ஆரும் பறவைகளுக்கு அச்சுதன் பேரும் சிவன்தன்

பேரும் பகர்ந்தால் பிழைஅன்றோ - நேர்பெறு வி

12 வேகி ஒருகூடு விட்டு மறு கூடுஅடையும்

யோகி உனக்கு உவமை உண்டோ காண் - நீகீரம்

13 ஆகையால் ஆடை உனக்கு உண்டே பாடகமும்

நீ கொள்வாய் கால் ஆழி நீங்காயே - ஏகாத

14 கற்புடையாய் நீ என்றால் காமனையும் சேர்வாயே

அற்புடைய பெண்கொடி நீ ஆகாயோ - பொற்புடையோர்

15 துன்னிய சாயுச்யம் சுகரூபம் ஆகையால்

அன்னது நின்சொரூபம் அல்லவோ - வன்னி

16 பரிசித்த எல்லாம் பரிசுத்தம் என்றோ

உருசித்த உன்எச்சில் உண்பார் - துரிசு அற்றோர்

17 இன்சொல்லைக் கற்பார் எவர்சொல்லும் நீகற்பாய்

உன்சொல்லைக் கற்கவல்லார் உண்டோ காண் - நின்போலத்

18 தள்ளரிய யோகங்கள் சாதியாதே பச்சைப்

பிள்ளையாய் வாழும் பெரியோர்யார் - உள்உணர்ந்த

19 மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டம்அறப்

பாலனத்தாலே பசி தீர்ப்பாய் - மேல் இனத்தோர்

20 நட்டார் எனினும் நடந்துவரும் பூசைதனை

விட்டார் முகத்தில் விழித்திடாய் - வெட்டும் இரு

21 வாள்அனைய கண்ணார் வளர்க்க வளர்வாய் உறவில்

லாளனைநீ கண்டால் அகன்றிடுவாய் - கேளாய்

22 இருவடிவு கொண்டமையால் எங்கள் பெரிய

திருவடிகள் வீறுஎல்லாம் சேர்வாய் - குருவாய்ச்

23 செப தேசிகர்க்கு எல்லாம் தென்அரங்கர் நாமம்

உபதேசமாக உரைப்பாய் - இபமுலையார்

24 சித்தம் களிகூரச் செவ்விதழில் ஆடவர்போல்

முத்தம் கொடுக்க முகம் கோணாய் - நித்தம் அவர்

25 செவ்விதழ்உன் மூக்கால் சிவந்ததோ உன்மூக்கில்

அவ்விதழின் சிவப்பு உண்டானதோ - செவ்வி இழந்து

26 அண்டருக்குத் தோற்றான் அடல்வேள் ஆநானைநீ

கொண்டு இழுத்தால் ஆகும் குறைஉண்டோ - உண்டாக்கி

27 ஆயுவை நீட்ட அருந்தவத்தோர் பூரகம்செய்

வாயுவைஉன் பின்னே வரவழைப்பாய் - தேயசு ஒளிர்

28 மைப்பிடிக்கும் வேல்கண் மலர்மாதும் சங்கரியும்

கைப்பிடிக்க நீ வங்கணம் பிடித்தாய் - மெய்ப்பிடிக்கும்

29 பச்சை நிறம் அச்சுதற்கும் பார்ப்பதிக்கும் மூன்றனக்கும்

இச்சைபெற வந்தவிதம் எந்தவிதம் - மெச்சும்

30 குருகே உன் நாக்குத்தான் கூழை நாக்கு ஆனது

அரி கீர்த்தனத்தினால் அன்றோ - தெரிவையர்கள்

31 ஆர்த்த விரல் உன்முகம் ஒப்பாகையாலே கையைப்

பார்த்து முகம்அதனைப் பார்என்பார் - சீர்த்திக்

32 கிரிகையிலே காணுங்கால் கிள்ளை அடையாத

பெரியதனம் வீண்அன்றோ பேசாய் - தெரியும்கால்

33 தேறுகனி காவேரி சிந்து கோதாவிரியும்

வீறுபெறுமே நீ விரும்பினால் - கூறில் அனம்

34 உன்னுடைய ஊண்அன்றோ ஊதப் பறந்துபோம்

சின்ன வடிவன்றோ செழும்குயிலும் - என்னே

35 முதுவண்டு இனந்தான் முடிச்சு அவிழ்த்தாலும்

மதுஉண்டாற் பின்னை வாயுண்டோ - எதிரும்

36 கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல

வரும் புறாவுக்கும் ஒரு வாயோ - விரும்புமயில்

37 உற்ற பிணிமுகமே உன்போல் சுகரூபம்

பெற்ற பறவை பிறவுண்டோ - கற்று அறியும்

38 கல்வியும் கேள்வியும் நீ கைக்கொண்டாய் சாரிகைக்குள்

செல்வம் அதில் அள்ளித் தெளித்தாயோ - சொல் வேதம்

39 என் பரி நாலுக்கும் விதி சாரதி வில்வேள்

தன் பரியே உனக்குச் சாரதியார் - வன்போரில்

40 மேவுஞ் சிவன் விழியால் வேள்கருகி நாண்கருகிக்

கூவும் பெரிய குயில்கருகிப் - பாவம்போல்

41 நின்று மறுப்பாடுநாள் நீதான நடுப்படையில்

சென்று மறுப்படாதே வந்தாய் - என்று மாக்

42 காய்க்கும் கனிஅல்லால் காய்பூ என்றால் நாக்கும்

மூக்கு மறுப்பாய் முகம் பாராய் - ஆக்கம்

43 வரையாமல் நன்மை வரத்தினை நல்கும்

அரிதாளை நீ விட்டு அகலாய் - இருகை

44 உனக்குஇல்லை உன்சிறகு இரண்டும் எனக்கில்லை

எனக்கும் உனக்கும் பேதம் ஈதே - மனைக்குள்

45 இதமாய் மனிதருடையனே பழகுவாய் அன்பு

அதனால் முறையிட்டு அழைப்பாய் - மது உண்டு

46 அளிப்பிள்ளை வாய்குழறும் ஆம்பரத்தில்ரேறிக்

களிப்பிள்ளைப் பூங்குயிலும் கத்தும் - கிளிப்பிள்ளை

47 சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர் கொண்டாய்

பின் அத்தைப் போலும் ஒரு பேறுண்டோ - அன்னம் இன்றிப்

48 பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ ஆனாலும்

கால்பிடிப்பார் கோடிபேர் கண்டாயே - மால்பிடித்தோர்

49 கைச்சிலை வேளால் வருந்தும் காமநோய் தீர்ப்பதற்கோ

பச்சிலை ரூபம் படைத்து இருந்தாய் - அச்ச

50 மனப் பேதையார் மால்வனம் சுடவோ வன்னி

எனப் பேர் படைத்தாய் இயம்பாய் - அனத்தை

51 நிலவோ என்பார்கள் நெடுந்துயர் வேழத்தைக்

கொலவோ வரிவடிவம் கொண்டாய் - சிலை நுதலார்

52 கொள்ளை விரகக் கொடும்படையை வெல்லவோ

கிள்ளை வடிவு எடுத்தாய் கிற்பாய் நீ - உள்ளம்

53 மிகஉடை மாதர் விதனம் கெடவோ

சுகவடிவு நீ கொண்டாய் சொல்லாய் - தகவு உடைய

54 தத்தை அடைந்தவர் ஏதத்தை அடையார் என்னும்

வித்தை அடைந்தாய் உனையார் மெச்சவல்லார் - முத்தமிழோர்

55 மாரதி பாரதியார்க்கு உன்னை உவமானிப்பார்

ஆர்அதிகம் ஆர்தாழ்வு அறைந்திடாய் - ஊர்அறிய

56 நெய்யில் கைஇட்டாலும் நீதான் பசுமையென்றே

கையிட்டுச் சுத்திகரிக்கலாம் - மெய்யின்

57 வடிவும் வளைந்த மணிமூக்கும் மாயன்

கோடியில் இருப்பவர் தம் கூறோ - நெடிய மால்

58 விண்டு தறித்து ஊது வேணு கானத்தினிலே

பண்டு தழைத்த பசுந்தழையோ - கொண்ட சிறகு

59 அல்இலங்கு மெய்யானை அன்று அழித்து வீடணன் போய்த்

தொல் இலங்கை கட்டு புதுத்தோரணமோ - நல்வாய்

60 மழலை மொழிதான் மணிவண்ணன் செங்கைக்

குழலின் இசைதானோ கூறாய் - அழகுக்

61 கிளிப்பிள்ளாய் தெள்ளமுதக் கிள்ளாய் நலங்குக்

குளிப்பிள்ளாய் இன்ப ரசக் குஞ்சே - வளிப்பிள்ளை

62 தன்னைத் தாய் போல் எடுத்துச் சஞ்சரிக்கும் சம்பத்தாய்

பின்னைத்தாய் கையில்உறை பெண் தத்தாய் - பொன்ஒத்தாய்

63 முத்திநகர் ஏழில்ஒன்றே முத்தமிழ் வல்லாறில் ஒன்றாய்

ஒத்த தனித் தவ்வரிப் பேர் உற்றது ஒன்றே சுத்தம் உறும்

64 ஐந்து பூதத்தில் ஒன்றே ஆனபடை நான்கில் ஒன்றே

முந்து முதலான பொருள் மூன்றில் ஒன்றே - வந்த

65 இரு பயனில் ஒன்றே இமையே விழியே

பருவ விழியில் உறை பாவாய் - ஒருநாரில்

66 ஏற்றும் திருமலை எய்தப்போய் ஊரெல்லாம்

தூற்றுமலர் கொண்டகதை சொல்லக்கேள் - தோற்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூது காதலர்களுக்கு மட்டுமல்ல....

இங்கு மழலைச் செல்வம் வேண்டி ஆண்டவனுக்குத் தூது விடும் இந்தத் தம்பதியரும் எங்களின் கரிக்காய்த் திரியில் இன்று வலம் வருகிறார்கள். கேளுங்கள்.http://www.youtube.com/watch?v=AfTyz7JxHnw

Link to comment
Share on other sites

யாழில் உலவிய கவிஞர்களும் தூது விடுவதில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள் போலும்..

முன்பு ஒரு காலத்தில் வெண்ணிலா எழுதிய தூதுக்கவிதை....இன்னும் மற்றவர்களும் எழுதியிருப்பார்கள் ஒவ்வொன்றாக தேடி எடுத்து வந்து இணைத்துவிடுகிறேன்....யாரும் அவசரப்பட்டு கோபிக்கக்கூடாது. :rolleyes:

:rolleyes::lol: :lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூது இலக்கியங்கள், பாடல்கள், புதுக்கவிதைகள் இப்படியாகத் தொடரும் இப்பக்கத்தில் தேடலில் கிடைத்த சங்க இலக்கியத் தூதுகளில் பெண்பால் புலவர் ஔவை தனது நட்புக்குப் பாத்திரமான அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்று வஞ்சப்புகழ்ச்சியாக உருவாகிய பாடலும் அதற்கான சம்பவமும் என்னுடைய தேடலில் கூகிளாண்டவர் தந்தது.

நீங்களும் படித்து அறிந்து கொள்ளுங்கள்

ஔவை சென்ற தூது (வாள் மங்கலம்)

karuvikal.jpg

மன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுவது வாள்மங்கலம் ஆகும். அதியமானின் படைக்கருவிகள் பாராட்டப்பட்டமையால் இது வாள்மங்கலம் ஆனது.

தமிழ்த்தூது இலக்கிய வளர்ச்சியில் சங்க இலக்கியம் பெரும்பங்கு வகிக்கிறது.

காமம் மிக்க கழிபடர்கிளவிஎன்னும் அகத்துறை அகம் சார்ந்த தூது இலக்கியம் தோன்றக் காரணமானது.

புறம் சார்ந்த தூதுக்குச் சான்றாக இப்பாடல் அமைகிறது. சங்க காலத்தில் பெண்டிரும் தூது சென்றமை இப்பாடல் வழி அறியமுடிகிறது.

(அவன் தூது விட, தொண்டை மானுழைச் சென்ற ஔவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.)

அதியமான்(அரசன்) – ஔவை (புலவர்) நட்பைத் தமிழுலகம் நன்கறியும்.

ஒருமுறை, தொண்டைமான் என்னும் மன்னன் அதியனை எதிர்த்து போரிட எண்ணினான்.

அதியனோ மாவீரன்,

தொண்டைமான் தன் வீரத்தை அறியாது அழியப்போகிறானே என்று அதியனுக்கு வருத்தம். அதனால், ஔவையாரைத் தொண்டைமானிடம் தூதாக விட்டான்.

தூது சென்ற ஔவையார், அங்கு தொண்டைமானைப் புகழ்ந்தும், அதியனை இகழ்ந்தும் பாடியதே இப்பாடல்..

பாடலின் உட்பொருளை அறிந்த தொண்டைமான் அதியனுக்கு அஞ்சி போரைத் தவிர்த்தான்...

வஞ்சப்புகழ்ச்சி அணிக்குத் தக்க சான்றாக இப்பாடலைக் கொள்ளலாம்.

புறநானூற்றில் 95 வது அமைந்துள்ள இப்பாடல் வாள் மங்கலம் என்னும் துறையில் அமைந்துள்ளது..

இனி பாடலை உரையாடல் வழிக் காண்போம்,

தொண்டைமான் : வாருங்கள் புலவரே...

தமிழுக்குத் தொண்டு செய்யும் புலவரே தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது...

ஔவையார் : எனக்கும் மகிழ்ச்சி மன்னா...

தொண்டைமான் : அதியனின் நாட்டிலிருந்த தாங்கள் வந்திருக்கிறீர்கள்..

எனது வீரம், படை பலம் ஆகியவற்றைத் தாங்கள் அறிந்து கொள்ளுவது அவசியமாகும்...

வாருங்கள்...

பாருங்கள்.......

எனது படைக்கருவிகள் எவ்வளவு புதிதாகவும் கூர்மையாகவும் உள்ளன.............?

ஔவையார் : ஆம் நீ சொல்வது உண்மை மன்னா..... !

தொண்டைமான் : எப்படி இருக்கிறது எனது படைக்கருவிகள்...

ஔவையார் : இக்கருவிகள் மயிலின் தோகையால் அழகு செய்யப்பட்டு மாலை சூட்டப்பட்டு, நெய் பூசப்பட்டு, காவலையுடைய அகன்ற மாடத்தில் உள்ளன..

பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது.

தொண்டைமான் : சரியாகச் சொன்னீர்கள்...

அதியனின் படைக்கருவிகளை விட எனது படைக்கருவிகள் எவ்வளவு புதியன, கூர்மையானவை என்பதைத் தாங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள்....!

ஔவையார் : ஆம் மன்னா...

உனது படைக்கருவிகளைப் போல அதியனின் படைக்கருவிகள் இல்லை. அவனுடைய கூரிய நுனியுடைய வேல் முதலான அவைதாம் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து கொல்லனது பணிக்களரியில் எந்நாளும் கிடக்கின்றன.

தொண்டைமான் : அதியனின் வீரம் உணர்ந்தவனாக அவனோடு போரிட எண்ணிய எண்ணத்தை மாற்றிக்கொண்டான்...

ஔவையார் பாடலின் உட்பொருள்...

ஔவையார் பாடலின் பொருள் மேலோட்டமாகப் பார்த்தால் தொண்டைமானைப் புகழ்வது போலவும் அதியனை இகழ்வது போலவும் அமையும்.

தொண்டைமானின் படைக்கலங்கள் அழகுற விளங்குகின்றன என்னும் புகழ்ச்சிக்கு.......

நீ அதிகம் போர்க்களம் காணாதவன்....

ஆனால் அதியன் போர்க்களத்தில் தான் எந்நாளும் இருப்பவன்...

உனது கருவிகள் மாலை சூட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவன் எந்நாளும் போர் புரிவதால் அவனது படைக்கருவிகள் யாவும் கூர்மையின்றி கொல்லன் களரியில் தான் கிடக்கும் என்பதே உட்பொருளாக அமைகிறது.

இந்த ஆழமான உட்பொருளை தொண்டைமான் உணர்ந்தமையால் அதியனோடு போரிட எண்ணிய எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

இப்பாடல் வழி புறத்தூது மரபினையும், வாள்மங்கலம் என்னும் புறத்துறையையும் அறியமுடிகிறது..

புகழ்வது போல இகழும் வஞ்சப்புகழ்ச்சி அணி அழகாக விளக்கம் பெறுகிறது.

மூலம் - http://gunathamizh.blogspot.ca/2009/07/blog-post_5880.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் விடு தூது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு

காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ

...

கூ.. சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு சுக்குச்சுக்கு

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு

காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு

காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ

...

ல்ல்ல்ல் ல்ல்ல்ல் லலல்லா..

லல்லலலல்லல லலல்லா.. லல்லலலல்லல லாலா..

...

தூது போ ரயிலே ரயிலே.. துடிக்குதொரு குயிலே குயிலே..

என்னென்னவோ என் நெஞ்சிலே

...

தூது போ ரயிலே ரயிலே.. துடிக்குதொரு குயிலே குயிலே..

என்னென்னவோ என் நெஞ்சிலே

பட்டணம் போனா பார்ப்பாயா

பார்த்தொரு சங்கதி கேட்பாயா

கிழக்கே போகும் ரயிலே.. நீதான் எனக்கொரு தோழி

தூது போவாயோ..

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு

காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ

...

நடப்பதோ மார்கழி மாசம்.. தையிலே நிச்சயதார்த்தம்

நாதசுரம்.. மேளம் வரும்

நடப்பதோ மார்கழி மாசம்.. தையிலே நிச்சயதார்த்தம்

நாதசுரம்.. மேளம் வரும்

நெதமும் நெல்லைச் சோறாக்கி.. நெத்திலி மீனைக் குழம்பாக்கி

மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன்

மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு

காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ

கரகர வண்டி காமாட்சி வண்டி.. கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி

கூ.. திரி திரி திரி திரி.. திரி திரி திரி திரி..

ஆ..

...

நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்.. சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்

தூக்கமில்லே.. காத்திருக்கேன்

வீரபாண்டிக் கோயிலிலே.. வருகிற தைப் பொங்கலிலே

வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்

கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு

காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ

பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு

காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ

...

நன்றி சகாறா, நல்லதொரு பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு விடு தூது

சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்

பைதற வெந்த பாலை வெங்காட்டு

அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்

சென்ற நெஞ்சே நீடிய பொருளே

"சூழ்ந்து வா தோழி! பசுமை இல்லாது வெந்து பாழ்பட்ட கொடிய பாலைக்காட்டு அருஞ்சுரத்தில் போன தலைவரிடம், தூதாய்ச் சென்ற என் நெஞ்சு விரைந்து திரும்பி வராது இருக்கிறது; காலமும் நீள்கின்றது. இதன் பொருள் என்ன வென்று தெரியவில்லையே? அதை ஆராய்வோம், வா" என்று தோழியிடம் உரைத்தாளாம். பொதுவாகப் பாலை நிலத்து மரங்கள் இப்படி ஒரு வெறுமை விதர்ப்பைக் காட்டுவதைச் சங்க இலக்கியம் நெடுகவும் அறியமுடியும்.

http://valavu.blogspot.com.au/2007/01/1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார். பாடலை ஒளி, ஒலிவடிவத்தில் இணைத்துவிட்டு வார்த்தைகளில் இணைக்கவில்லை. மறந்துபோய்விட்டேன். நிரவியதற்கு நன்றி உடையார்

இங்கு பாருங்கள் ஒரு புதுக்கவிதை

உயிர் விடு தூது

புறாவை தூதுவிட்டால்

வாராமல் போய் விடுமோ -வன்

நாகத்தை தூதுவிட்டால்

வல்லூறு தூக்கிடுமோ

மேகத்தை தூதுவிட்டால்

காற்றுவந்து கலைத்திடுமோவென்று

உள்ளத்தை தூது விட்டேன்

உயிரையும் தூதுவிட்டேன்

காலையில் உறங்காமல்

கண்களை திற்ந்து வையேன் -

கண்வழியே குதித்திடத்தான்

-தியாகு

மூலம் - http://thiagu1973.bl...2039315265.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்மை அரசு.

———————————

‘ நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சர்

ஆர்க்குஞ் சிலம்பே அணிமுரசா – வேற்படையும்

வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்

ஆளுமே பெண்மை யரசு.

( ஆர்க்கும் = ஒலிக்கும், அணிமுரசு = அழகிய முரசு )

‘ நாணம், மடம், ஆச்சம், பயிர்ப்பு, என்னும் நான்கு குணங்களையே , தேர், யானை, குதிரை, காலாள் என்னும் நான்கு வகை சேனைகளாகக் கொண்டு ; மெய் , வாய் , கண், மூக்கு , செவி எனும் ஐம்பொறிகளையும் வழிச் செல்கின்ற அறிவையே சிறந்த அமைச்சர்களாகக் கொண்டு , காலில் அணிந்துள்ள ஒலிக்கின்ற சிலம்பே அழகிய பேரிகையாய் விளங்க , வேற்படையும் வாட்படையுமே இரு கண்களாக , அவள் பெண் இயல்பாகிய அரசை ஆட்சி புரிகின்றாள்.

‘பெண் இயல்பு’ என்னும் அரசை ஆட்சி செய்கின்றாளாம் தமயந்தி.அதை இப்பாடல் விளக்குகின்றது.

சிலம்பின் இரக்கம்.

—————————

‘மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற

மாட்டா திடையென்று வாய்விட்டு – நாட்டேன்

அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து

புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.’

( மோடு = உயர்வு, கொங்கை = முலை, நூபுரங்கள் = சிலம்புகள் )

‘தமயந்தியினுடைய இடையானது உயர்ந்த இளமுலைகளை அவளது வாழ்நாள் முழுவதும் சுமந்து நிற்கும் வன்மையுடையதாகாதெனக் காலில் அணிந்துள்ள சிலம்புகள் , புதிய தேன் மேலெழும் மலர் சூடிய கூந்தலாளின் இரண்டு அடிகளிலும் வீழ்ந்து அவ்வடிகளுக்கு அணியாக அமைந்து வாய் விட்டுப் புலம்பும்!’

முலைகள் பாரமுடையன; ஆதலின் ,இடை அவற்றைத் தாங்க முடியாமல் ஒடிந்துவிடுமாம்! இதை நினைத்து சிலம்புகள் புலம்புகின்றன.

இதன் பொருளை நான் எழுதவில்;லை எழுதும் பஞ்சியிலும் கவியின் அழகிலும் மயங்கி பொருளோடு தேடி இணைத்து விட்டேன்.மன்னிக்கவும்;.வெண்பாவுக்கு புகழேந்தி என்று சும்மாவா சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி விடு தூது :o :o :o

அருவி விடு தூது

எவ்வளவு அருமையான பாடல் இந்த அருவி விடு தூது.... நாயகி நாயகனுக்கு முத்தங்களை தண்ணீரில் கொடுத்தனுப்பும் கற்பனை வளம் நீங்களும் பார்த்து இரசியுங்கள்

பெண்

மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுதுண்ணு

தாகமுள்ள மச்சானே தண்ணியை நான் தூது விட்டேன்

தண்ணிக்கு இந்தக்கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்

எண்ணிக்கை குறையாமல் எப்போ வந்து தரப்போறே

எப்போ வந்து தரப்போறே

ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை

சேர்ந்திச்சோ சேரலையோ…

ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்தை

சேர்ந்திச்சோ சேரலையோ சிவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒன்று நான் எழுதி ஓடவிட்டேன் தண்ணியிலே…..

ஓலை ஒன்று நான் எழுதி ஓடவிட்டேன் தண்ணியிலே

சேர்ந்திச்சோ சேரலையோ சிவத்த மச்சான் கைகளிலே

ஆண்

அடி கிராமத்து கிளியே என் கிழியாத தாவணியே

அடி கிராமத்து கிளியே என் கிழியாத தாவணியே

குளிரெடுக்கும் சாரலுக்கு குடை புடிக்க வாமயிலே

குளிரெடுக்கும் சாரலுக்கு குடை புடிக்க வாமயிலே

பெண்

குடையும் இல்லை கடையும் இல்லைகூதலுக்கு ஆதரவா

தாவணியை நீ புழிய தலை துவட்ட நான் வரவா?

ஆண்

நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்

அய்த்தை மகன் நான் புழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்

பெண்

ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்தை

சேர்ந்திச்சோ சேரலையோ சிவத்த மச்சான் நெத்தியிலே

பெண்

மலைத் தோட்டத்துக் குயிலு இது உமக்காகப்பாடுதுங்க

மலைத் தோட்டத்துக் குயிலு இது உமக்காகப்பாடுதுங்க

ஆசையை நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க

ஆண்

அருவி போல அழுகிறேனே அறிந்து கொண்டால் ஆகாதோ

முந்தானையின் ஓரம் என்னை முடிந்து கொண்டால் தாகாதோ

பெண்

வக்கணையாம் தாலி வாங்கி வாசலுக்கு வாறதெப்போ

வக்கணையாம் தாலி வாங்கி வாசலுக்கு வாறதெப்போ

உங்க பாதம் பட்ட மண்ணெடுத்து நான் பல்லு விளக்கப்போறதெப்போ?

ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்தை

சேர்ந்திச்சோ சேரலையோ சிவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒன்று நான் எழுதி ஓடவிட்டேன் தண்ணியிலே

சேர்ந்திச்சோ சேரலையோ சிவத்த மச்சான் கைகளிலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூதுப்பாடல்களின் வரிசையில் இந்தப்பாடல் இல்லாமலா?????

முகில் விடு தூது :lol:

http://ww.smashits.c...song-30961.html

வெண்முகிலே......

வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு

என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு

வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு

என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு

சொன்தை நீ அவரிடத்தில் சொல்லு

இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு

சொன்தை நீ அவரிடத்தில் சொல்லு

இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு

என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு...

உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு

உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு

உயிரங்கே.... உடலிங்கே....

உயிரங்கே உடலிங்கு உள்ளதென்றும் சொல்லு

உருவிழந்து மகிழ்விழந்து மருகுவதாய்ச் சொல்லு.....

உருவிழந்து மகிழ்விழந்து மருகுவதாய்ச் சொல்லு

உடலிழந்து போகுமுன்னே ஓடி வரவும் சொல்லு

ஓடி வரவும் சொல்லு...

வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு

என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு

வெண்முகிலே...

ஆடுமயில் ஆடவில்லை என்று மட்டும் சொல்லு

ஆடுமயில் ஆடவில்லை என்று மட்டும் சொல்லு

அழகுநிலா சிரிக்கவில்லை என்பதையும் சொல்லு

வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு - நான்

வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு

வருவதற்குள் நீ விரைந்து வந்து பதிலும் சொல்லு

வந்து பதிலும் சொல்லு

வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு

என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு

வெண்முகிலே...

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்கை??!! :unsure:

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்கை??!! :unsure:

பொதுமக்கள் தமது பழைய காதல் அனுபவங்களை பெருமூச்சுடன் அசைபோடுகின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் தமது பழைய காதல் அனுபவங்களை பெருமூச்சுடன் அசைபோடுகின்றார்கள்?

கலைஞன் உங்களின் கருத்து படிச்சவன் பாட்டைக் கெடுத்த கதையாக இருக்கிறது எதற்கும் ஆரம்பத்தில் இருந்து வாசித்துக் கொண்டு வாருங்கள்...அநேகமாக இவ்வளவையும் வாசிக்க உங்களுக்கு நேரமிருக்காது....

என்ன நடக்குது இங்கை??!! :unsure:

:lol:

எங்களுக்கு இசையைப் பொரிக்கத் தெரியாது அதுதான் கரிக்காய் பொரிக்கிறோம் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கரிக்காய் திரியில் தற்சமயம் தூது பற்றிய சங்க இலக்கியப்பாடல்கள், குறிப்புகள், கவிதைகள்,மற்றும் திரையிசையில் பிரபலமான தமிழ்பாடல்கள் என்று பார்த்துக் கொண்டு வருகிறோம் இன்று இங்கு ஒரு தமிழீழச் சிறுமியின் தூதுப்பாடலை பார்க்கப்போகிறோம். காலத்தால் அழியாத எத்தனையோ இலக்கியங்கள் இருந்தாலும் எங்களின் நிகழ்கால இலக்கியங்கள்…. அவற்றை இன்னும் நாங்கள் இலக்கியங்களாக கருதாத எழுதாத இலக்கியங்களாக எம் கண்முன்னே நாளாந்தம் பார்க்கும் நிகழ்வுகளாக வலம் வருகின்றன அவ்வகையான ஒரு இலக்கியம் ஒரு இராணுவ அடக்குமுறைக்கு உள்ளாகும் இனத்தின் சிறுமி எம்மினக் காவலர்களை நோக்கி காகங்களைத் தூதுவிடும் அழகான அதே நேரம் கண்களைக் கசியவைக்கும் பாடல். காலங்காலமாக புறாக்கள், கிளிகள் , அன்னங்கள், மேகங்கள், சந்திரன், தென்றல் என்று ஒரு அழகியல் தூதிலிருந்து சற்று மாறுபட்டு சாதாரணமாக தாயகத்தில் நாம் எல்லா இடங்களிலும் பார்க்க்க்கூடிய அழகு, இனிமை என்பனவற்றிகு அப்பால் அலங்கோலமான பறவையாக திரியும் காகத்தை தூது விடுதல் என்பது இதுவரை காலமும் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியத் தூதுகளைத் தகர்த்து எறிந்திருக்கிறது…. சரி நான் அதிகம் எழுதி உங்கள் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை நீங்களும் கேளுங்கள் சேர்ந்து பாடுங்கள் நேகமாக எமக்கெல்லாம் இந்தப்பாடல் அதிகம் பரிச்சயமாகவும் மனப்பாடமாகவும் இருக்கும். இதோ

http://www.padippaka...dios&Itemid=154

காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீங்களா

காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீங்களா?

காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீங்களா

காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீங்களா?

கண்டு கதைப்பீர்களா? - இதை - காதில் உரைப்பீர்களா?

காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீங்களா

காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீங்களா?

ஈழநிலத்தில் ஆழப்பதிந்தவர் எங்கள் எதிரியை எட்டி உதைத்தவர் எ

ஈழநிலத்தில் ஆழப்பதிந்தவர் எங்கள் எதிரியை எட்டி உதைத்தவ

வீரபுலிப்படை என்று நாங்கள் வீட்டில் கதைக்கிறோம் இன்று

வீட்டில் கதைக்கிறோம் என்று - இதை

வீசும் புயலைக்கடந்து

காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீங்களா

காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீங்களா?

இந்திய இராணுவம் சுற்றி வளைக்கிறான்

இந்தியில் ஏதோதோ சொல்லி முறைக்கிறான்

இந்திய இராணுவம் சுற்றி வளைக்கிறான்

இந்தியில் ஏதோதோ சொல்லி முறைக்கிறாரன்

பள்ளிக்கு எப்படிப் போவோம்? அவன் பாதையில் நின்றிடின் சாவோம்

பாதையில் நின்றிடில் சாகும் நாம் சாகும் நிலையை உணர்ந்து

காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீங்களா

காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீங்களா?

நள்ளிரவு ஆனதும் நாய்கள் குலைக்குது

நாலு தெருவிலும் ஆமி கலைக்குது

நள்ளிரவு ஆனதும் நாய்கள் குலைக்குது

நாலு தெருவிலும் ஆமி கலைக்க

நாங்கள் துடிப்பொடு சொல்லும் - புலி

நாளை நிலத்தினை வெல்லும்

நாளை நிலத்தினை வெல்ல - நீங்கள்

எங்கள் துயரைச் சுமந்து

காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீங்களா

காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீங்களா?

எத்தனை காலமாய் எங்களைக் காத்தவர்

எங்களுக்காகவே தங்களைத் தேய்த்தவர்

எத்தனை காலமாய் எங்களைக் காத்தவர்

எங்களுக்காகவே தங்களைத் தேய்த்தவர்

எங்கள் நினைவினிலாடும் அவர் எப்ப இனி வருவாரோ

எப்ப இனி வருவாரோ இதை எரியும் நெருப்பில் விரைந்து

காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீங்களா

காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீங்களா?

காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீங்களா

காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீங்களா?

கண்டு கதைப்பீர்களா? - இதை - காதில் உரைப்பீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.