Jump to content

இலங்கை மனித உரிமைகள் மேம்பாடு குறித்து ஐ.நா.வுக்கு அறிக்கை அனுப்புகிறது


Recommended Posts

[size=2]

[size=4]ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை ஒன்றை இலங்கை ஐ.நா.வுக்கு அனுப்ப உள்ளதாக அமைச்சரும் மனித உரிமைகளுக்கான விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]ஜெனிவாவில் இயங்கும் மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமர்வை முன்வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.[/size][/size]

[size=2]

[size=4]இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டதையும், தொடர்ந்து மீறப்பட்டுக் கொண்டிருப்பதையும் கண்டித்து கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான மேம்பாட்டுக்காக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், அதற்காக குறித்த கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.[/size][/size]

[size=2]

[size=4] இந்த இறுதி அவகாசத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான சமிக்ஞைகள் கிடைக்காதவிடத்து இலங்கைக்கு எதிரான இறுக்கமான நடவடிக்கைகளில் தாம் இறங்க நேரிடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும்தொனியில் தெரிவித்திருந்தன.[/size][/size]

[size=2]

[size=4]எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபையின் அமர்வின்போது மீண்டும் இலங்கைப் பிரச்சினை கிளப்பப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரை வழங்கப்பட்ட காலத்துக்குள் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசு முன்னேற்றகரமாக செயற்படாதவிடத்து அதுதொடர்பாக இந்த அமர்வில் ஆராய்ந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடும் எனவும் ஊகிக்கப்படுகிறது.[/size][/size]

[size=2]

[size=4]இந்தநிலையிலேயே இலங்கையில் குறித்த காலப்பகுதிக்குள் இனநல்லிணக்கம், மனித உரிமைகள் என்பன தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகளை அறிக்கை வடிவில் இலங்கை தயாரித்துள்ளது. சில உறுப்பு நாடுகளின் ஆய்வுக்காகவும் இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை அனுப்பப்படவுள்ளது. [/size][/size]

[size=2]

[size=4]ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்புதலுக்காகக் கையளிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கை, இன்று ஜெனிவாவுக்கு அனுப்பிவைக் கப்படும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]"நவம்பர் மாதம் நிகழும் அமர்வில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்தியா உட்பட மூன்று நாடுகள் இந்த ஆவணத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பின்னரே அமர்வின் ஆய்வுக்குச் சமர்ப்பிக்கப்படும்'' என்றும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இலங்கை தீர்வுகளைக் கண்டுள்ளது. அத்துடன் மனித உரிமைகள் விடயத்திலும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனவே நவம்பரில் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வில் பெரும்பாலான உறுப்பு நாடுகளின் ஆதரவும், உதவியும் இலங்கைக்குக் கிட்டுமென்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=135721252023646184[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=4]

]"நவம்பர் மாதம் நிகழும் அமர்வில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்தியா உட்பட மூன்று நாடுகள் இந்த ஆவணத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பின்னரே அமர்வின் ஆய்வுக்குச் சமர்ப்பிக்கப்படும்'' என்றும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.[/size][/size]

அந்த மூன்று நாடுகள் .. கிந்தியா சீனா மற்றும் ஈரான்

தோழர் .. அந்த ஆவணத்தில் தமிழர்களே இல்லை என்று சொல்கிறேன் நான் அப்புறம் எப்புடி இனசிக்கல் வரும்..? ரெல் ரெல் மீ..

டிஸ்கி:

பொருளாதார நிபுணர் என்றால் பொருளாதார நிபுணர்தான் கரெக்டாக அடிகோடிட்டு காண்பித்து இருக்கார் :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.