Jump to content

தமிழின் தொன்மை


Recommended Posts

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவங்களுள் சிந்து சமவெளி எழுத்துக்களே மிகப் பழமையானவை. ஏறக்குறைய கிமு 3000 -2500 காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிந்துவெளி எழுத்துக்களை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்த டாக்டர்

ஆஸ்கோ பர்போலா (Asko parpola) மற்றும் திரு ஐராவதம் மகாதேவன் முதலான அறிஞர்கள் இது தமிழின் தொன்மையான வடிவமாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். என்றாலும் இதனை ஒரு ஊகமாக வெளியிடமுடிந்ததே தவிர ஆதாரபூர்வமாக நிரூபிக்க சான்றுகளில்லை. சிந்துவெளிக்குப் பிறகு இந்திய எழுத்துத் தடயங்களில் ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது.நால்வேதங்களும் உபநிடதங்களும் இக்காலகட்டத்தில் இயற்றப்பட்டிருந்தாலும் அவை எழுத்து வடிவம் பெறவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.வேதங்களை சுருதி -ஸ்மிருதி என்று குறிப்பிடுவது வழக்கம் “வேதங்கள் 18ம் நூற்றாண்டுவரைகூட

எழுத்து வடிவம் பெறவில்லை” என்று கூறப்படுகிறது.பரம்பரை பரம்பரையாக இன்றுவரை வாய்மொழியாகவே வேதம் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது. சிந்துவெளிக்குப்பிறகு இந்தியாவல் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுச் சாசனம் அசோகரின் சாசனமாகும். இந்த எழுத்து வடிவங்களை பிராம்மி என்று குறிப்பிடுவார்கள்.அசோகரின் கல்வெட்டே மிகத் தொன்மையானது என்பதால் பிராம்மியே இந்திய எழுத்து வடிவங்களுக்குத் தாய் என்பதான ஒரு பிரமை உண்டாகிவிட்டது.வரலாற்றறிஞர்களும் இதனை ஒப்புக்கொண்டு இதனைப் பின்புலமாகக் கொண்டே ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தனர்.இதே அசோகர் காலத்தையொட்டி தமிழ் நாட்டிலும் பல கல்வெட்டுத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இவை முற்காலத் தமிழ் எழுத்துக்களாகும். இவற்றுக்கும் பிராம்மிக்கும் உள்ள தொடர்ப்பைக் கருத்தில் கொண்டு தமிழ் எழுத்து வடிவமே பிராம்மியிலுருந்துதான் உருவானது என்னும் கருத்து ஏறக்குறைய நாற்பதாண்டு காலமாக நிலைபெற்றுவிட்டது.பிராம்மியிலிருந்து கிளர்ந்த எழுத்து வடிவம் ஆதலின் இவ்வெழுத்துக்களை தமிழ் பிராம்மி என்று குறிப்பிடும் அளவிற்கு தமிழின் பிராம்மி சார்பு குறிப்பிடப்பட்டது. தமிழின் மிகத் தொன்மையான இலக்கியப் பாரம்பரியத்தை நினைவில் கொள்ளாமலே மேற்கூறிய தமிழ் பிராம்மி பற்றிய கருத்துக்கள் ஆழமாக வேரூன்றப்பட்டன.

தமிழகத்தின் மற்றொரு தொல்லியல் இமயம்

டாக்டர் சுப்பராயலுவின் தலைமையில் நடந்த கொடுமணல் ஆய்விலும் அழகன்குளம் ஆய்விலும் கிடைத்த சில தடயங்கள் தமிழின் எழுத்து வடிவம் பிராம்மிக்கு முற்பட்டது என்பதைச் சுட்டுவதாக அமைந்திருந்தது. தமிழகத்தின் ஆய்வாளர்களில் மூத்தவர்கள் சிலர் கருத்தரங்கங்களில் இதுபற்றிய கருத்தை முன்வைத்தும் இதனை அதிகம் கண்டுகொள்வாரில்லை.எத்தனைதான் மண்ணில் மூடி மறைத்தாலும் உண்மைக்கென்று ஒரு தார்மீக சக்தி உண்டல்லவா ? அந்த உண்மை சில வருடங்களுக்கு முன் நடந்த மாங்குளம் மற்றும் கொடுமணல் ஆய்வில் முதன் முதலில் தலைகாட்டியது. இதற்கடுத்ததாக சென்ற மாதம் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற் கல்வெட்டுக்கள் தமிழின் எழுத்து வடிவமே இந்தியாவில் மிகத் தொன்மையானது என்று ஆழமாகவும் அறுதியிட்டும் அறிஞர்கள் கூறுவதற்கு அரணாக அமைந்தது. இதனைப் பற்றிய மிக விரிவான செய்திகளை சென்ற வரலாறு இதழில் பெருமிதத்துடன் வெளியிட்டோம்.இவ்வெழுத்துக்களை தமிழ் பிராம்மி என்று குறிப்பிடாமல் தமிழி என்னும் பெயரால் குறிப்பிட ஆரம்பித்துள்ளனர் அறிஞர்கள்.இன்னும் ஒரே ஒரு கண்ணிதான் மிச்சமிருந்தது. அது என்னவெனில் இந்தியாவின் ஆகத் தொன்மையான சிந்துவெளி எழுத்துக்களுக்கும் தொன்மைத் தமிழி எழுத்துக்களுக்கும் உள்ளதான தொடர்பாகும். இது ஏன் முக்கியமானது எனில் தமிழி தனித்துத் தமிழ்நாட்டில் வளர்ந்த எழுத்து வடிவமா அல்லது சிந்து சமவெளியில் எழுதப்பட்டதே தமிழின் மிக முற்பட்ட வடிவம்தானா என்பது இந்தத் தொடர்பைப் புரிந்துகொண்டால்தான் விளங்கும். நாம் “இந்த நூற்றாண்டின் இணையற்ற

கண்டுபிடிப்பு” என்று குறிப்பிடும் வரலாற்றுத் தடயமானது இந்த முக்கியக் கண்ணியை முன்வைக்கிறது,தென்தமிழ் நாட்டில் மயிலாடுதுறைக்கருகே செம்பியன் கண்டியூர் என்கிற இடத்தில் பள்ளி ஆசிரியர் திரு சண்முகநாதன் தனது தோட்டத்தில் குழிவெட்ட முற்படுகையில் இந்த முற்காலக் கற்கருவியைக் கண்டறிந்தார். இதில் சில எழுத்து வடிவங்களைக் கண்ட அவர் தனது நண்பருக்கு இதனைக் கொடுக்க, உரிய கரங்களை இது சென்றடைந்து இதன் மகத்துவம் உலகிற்கு அறிமுகமானது. புதிய கற்காலத்தைச் (Neolithic – 4500 BC to 2000 BC) சேர்ந்த இக் கற்கருவி சிந்து வெளி எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதனை மிக அரிய தடயமாக்கிக் காட்டுகிறது. ஐராவதம் தனது ஆய்வு வழி இந்த எழுத்துக்களை படித்து வெளியிட்டுள்ளார்.

இக்கண்டுபிடிப்பின் மூலம் -

1. சிந்துவெளி எழுத்துக்கள் தமிழகம் வரை பரவியிருந்தன என்பது நிலைநாட்டப்பட்டுவிட்டது

2. தமிழின் எழுத்து வடிவமான தமிழிக்கும் சிந்துவெளி எழுத்துக்களுக்கும் இருக்கும் நெருக்கம் நிலைபெறுகிறது

3. சிந்துவெளி எழுத்துக்கள் தமிழாக இருந்திருக்கலாம் என்னும் அறிஞர்களின் ஊகம் சரியானதே என்பதற்கு இது ஒரு முக்கியத் தடயமாகும்

4. சிந்து வெளி எழுத்துக்கள் பற்றிய ஆய்வுகளை பண்டைய தமிழக எழுத்துக்களை பின்புலமாக வைத்துத் தொடர்வதற்கு வழியேற்பட்டுள்ளது ஹீராஸ் பாதிரியார் முதல் ஐராவதம் மகாதேவன் வரையிலான அறிஞர்கள் சிந்துவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே என மொழிந்த கூற்று இப்போது ஆதாரபூர்வமான உண்மையாக நிலைபெறுவதற்கு வழியேற்பட்டுள்ளது. தமிழியின் பின்புலத்தில் சிந்துவெளி எழுத்துக்கள் படிக்கப்படும் நாள் அதிகத் தொலைவிலில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி. ஆனால் இவை எம்மோடு மறைந்துவிடுமா? என்ற ஐயம் எழுகிறது. இவை எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுமா?

Link to comment
Share on other sites

தனக்கென ஒரு நாடு சமைக்காத தமிழுக்கு இந்த பட்டுக்குஞ்சங்கள் தேவை இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.