Jump to content

மனம் திறக்கிறார் கோபிநாத்

Recommended Posts

மனம் திறக்கிறார் கோபிநாத்

indira.JPG

  'இன்று ஊடகங்களின் வழியாகத்தான் மொழி கற்பிக்கப்படுகிறது. இன்று பொதுத்தமிழ், வட்டார வழக்குகளை மீறி வந்திருக்கிறது.' 

'ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது மிகப்பெரும் குற்றமாகாது' 

'ஒருவர் நல்ல தமிழில் பேசும்போது அவர் நல்ல தமிழில் பேசுகிறார் என்று பாராட்ட வேண்டாம்'

'தமிழ் மொழியை ஒரு உணர்வு பூர்வமான ஒரு சடங்காக பார்ப்பதை நிறுத்தவேண்டும். மொழி கற்றலின் அடிப்படையில் பார்க்கவேண்டிய ஒன்று'

கடந்தவாரம் ஒரு மாலை வேளை சென்னை கோடாம்பாக்கத்தின் ரங்கராஜன்புரம் ஓரிரு வாகனங்களை மட்டுமே உள்வாங்கி கொண்டு அமைதியாக இருந்தது. பெல்லவி அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே கீழே தமிழகத்திற்கே  உரித்தான ஒரு சிறிய பெட்டிக்கடை பெஞ்சு, மடித்து கட்டிய வேட்டியோடு டீயை ருசித்து கொண்டிருக்கும் மனிதர்களோடு விஜய் டீவி புகழ் கோபிநாத்தும் டீ கிளாசோடு நின்றுகொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு இளைஞன் கோபியை பார்த்து "ஆ... கோபி சார் நீங்களா உங்களை பேஸ்புக், டுவிட்டர்னு தேடிக்கிட்டிருக்கிறேன். நீங்க எங்கே சார் இங்கே?" என்கிறார் ஆச்சரியத்தோடு. "டேய் உன்ன யாருடா அங்கெல்லாம் தேடச்சொன்னது? நேரா ரங்கராஜபுரத்திற்கு வா நான் இந்த பெட்டிக்கடையில்தான் இருப்பேன்," என்று அலட்டல் இல்லாமல் பதில் வந்து விழுந்தது.

barath.jpg

கோபிநாத் புதுக்கோட்டை அறந்தாங்கியை பிறப்பிடமாக கொண்டவர். அறந்தாங்கி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆரம்பகல்வியை கற்றிருக்கிறார். அதற்குப் பிறகு சென்னையில் சில காலம் படித்திருக்கிறாராம்.

"செய்தியாளர் என்பதுதான் என்னுடைய அடையாளம். மற்றவைகள் எல்லாம் அதில் இருந்து வந்த பிற அடையாளங்கள்தான். திரைக்கு முன்னாலும் பின்னாலும் பணியாற்றி வருகிறேன். ஆரம்பத்தில் என்.டீவி, சி.என்.பி.சீ ஆகியவைகளில் செய்தியாளராக பணியாற்றியிருக்கிறேன். 

நான் தொலைக்காட்சிகளில் செய்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சமூகத்தின் பின்புலத்தை ஒட்டியதாகவே இருக்கிறது. சிகரம் தொட்ட தமிழர்கள், சிகரம் தொட்ட மனிதர்கள், மக்கள் யார் பக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம்," என்று சொல்லும்போது அவர் முகத்தில் ஒரு புன்னகை.

ஏழு வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக பயணிக்கும் நீயா, நானா? பற்றி கேட்டோம். "நீயா நானா ஒரு டீம் வொர்க். இரு துருவங்களைச் சேர்ந்த மனிதர்கள் அறிவு ரீதியாக மோதினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம்தான் அந்த நிகழ்ச்சி. மக்களின் மன ஓட்டத்தை முழுவதுமாக வெளிப்படுத்த ஒரு பொது மேடை அமைத்து கொடுத்திருக்கிறோம்.

பொசிடிவ்வை, நெகடிவ் வெறுப்பதும், நெகடிவ்வை பொசிட்டிவ் வெறுப்பது வாடிக்கையாகிவிட்ட இந்தக் காலத்தில் இந்த நிகழ்ச்சி பலவிதமான கருத்துக்களின் சங்கமம் என்றுதான் சொல்லவேண்டும். மறுத்து சொல்ல ஆளில்லாத நிலையில் நான் சொல்லும் கருத்தெல்லாம் சரியாகத்தான் தெரியும். ஆனால் ஒருத்தர் அந்தக் கருத்தை மறுத்துச் சொல்லும்போது எனது கருத்து மறுபரிசீலனை செய்யப்படுகிறது. அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராகவும் இருக்கிறோம். பொசிடிவ்வும், நெகடிவ்வும் சேராமல் நமக்கு மின்சாரம் வருமா? அது மாதிரிதான் இதுவும்.

0371.jpg
ஆரம்பத்தில் ஒரு மணிநேரமாக தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பிறகு 2 மணி நேரமாக மாற்றப்பட்டது. பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருப்பதால் நேரமும் அதிகரிக்கப்பட்டது. தமிழர்கள் இயல்பாகவே கருத்துக்களை முன்வைப்பதில் கில்லாடிகள். அதனால் நமது மக்கள் பேசுவதை பார்த்து நாம் ஆச்சரியப்பட அவசியமில்லை. அவர்களுக்கு இப்போது பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். நாங்கள் பேச்சாளர்களை தேர்வு செய்வதில்லை. சாதாரண மனிதர்களைத்தான் தெரிவு செய்கிறோம். அப்படி தெரிவு  செய்பவர்களிடம் பேச வைத்து ஒத்திகை எதுவும் பார்ப்பதில்லை. ஒத்திகையில் அவர்கள் எல்லாவற்றையும் பேசிவிட்டால் பிறகு அவர்கள் எப்படி மேடையில் பேசுவார்கள்? நான் அவர்களை நேரிடையாக நிகழ்ச்சியில்தான் சந்திக்கிறேன்," என்று சொல்லும் கோபியிடம், ஆச்சர்யம், அமானுஷ்யம் ஆகிய சொற்களை நீங்கள் உச்சரிக்கும்போது அது தனி அழகாக இருக்கிறதே, எப்படி கண்டு பிடித்தீர்கள்? என்று கேட்டோம்.

"அந்த வார்த்தையே ஒரு மிரட்சியானதுதான். நடந்தது என்ன இயக்குனர் சாய்ராம்தான் அந்த வார்த்தையை என்னிடம் சொன்னார். பிறகு அந்த வார்த்தையை பேசிய பிறகு அவரே என்னை பாராட்டவும் செய்தார். நான் எனது எழுத்துக்களிலும், பேச்சிலும் நிறைய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். நீங்கள் உட்பட எல்லோரும் இந்த ஆர்ச்சர்யம், அமானுஷ்யம் பற்றிதான் பேசுகிறீர்கள். flexiblity நெகிழ்வுத்திறன் என்ற வார்த்தையை நான் மட்டும்தான் ஊடகத்தில் பயன்படுத்துகிறேன். 

ஏனென்றால் இன்று ஊடகத்தின் வழியாகத்தான் மொழி கற்பிக்கப்படுகிறது. வட்டார வழக்குகள் குறைந்துப்போய் பொதுத் தமிழ் வந்து விட்டது. ஊடகம் சொல்வதுதான்  தமிழென்று ஆகிவிட்டது. அப்படி பார்த்தீர்கள் என்றாள் நெகிழ்வுதிறனில் தொடங்கி, சமூக விழுமியங்கள் வரை நான் நிறைய தமிழ் சொற்களை அறிமுகம் செய்கிறேன். இப்படியான வார்த்தைகளை நான் பயன்படுத்தவதற்கு காரணம், ஊடகத்தின் வழியாகத்தான் மொழி எல்லோருக்கும் போய்ச் சேருகிறது. திசைவழி என்ற வார்த்தையை கோபிநாத் சொல்கிறாரே என்று கோபிநாத்தை விரும்புகிறவர்கள். அதைப் பற்றி பேசுகிறார்கள். அந்த சொல்லைப் பற்றி ஆராயவும் செய்கிறார்கள். அதனால் அமானுஷ்யம் மட்டும் கோபிநாத் அறிமுகம் செய்தது அல்ல, அதை விட அழகான பல வார்த்தைகளை நான் அறிமுகம் செய்திருக்கிறேன்," என்று படபடத்தவர் மீண்டும் பேசினார்.

indu-02.jpg
"தமிழில் நல்ல தமிழ் கெட்ட தமிழ் என்று எதுவும் கிடையாது. தமிழே நல்ல தமிழ்தான். புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் பேசினால் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அல்லது தமிழில் மட்டுமே பேசுவார்கள். ஆனால் நாம் ஆங்கிலம் கலந்த ஒரு தமிழை பேசுகிறோம். அது மிகப் பெரிய குற்றமாகாது. ஏன் என்றால் எனக்கு ஆங்கிலத்தை விட தமிழ் பலமான மொழி என்பது தெரியும். இதனால் தமிழுக்கு ஒன்றும் ஆகிவிடாது. இது ஒரு செம்மொழி. இதற்கு தன்னை காப்பாற்றி கொள்கிற, தன்னை தற்காத்துக் கொண்டு தன்னை மென்மேலும் வலுப்படுத்திக்கொள்கிற தன்மை உள்ளது. எல்லா இலக்கண அளவுகளும் அதுக்குள்ளேயே இருக்கு. அதனால் இந்த மொழியையெல்லாம் நாம் காப்பாற்ற முடியாது. 

மொழிதான் நம்மள காப்பாற்றும். அதனால் யாரும் தமிழில் பேசும்போது நீங்கள் ரொம்ப அருமையாக நல்ல தமிழில் பேசுகிறீர்கள் என்று யாரையும் பாராட்டுவதை முதலில் நிறுத்தனும். ஏனென்றால் அது ஒரு கூடுதல் சிறப்பு மாதிரி தெரிகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ் பேசினால் பாராட்டுகிறார்கள். தாய்மொழியை பேசுவதற்கு எதற்கு பாராட்டனும்? ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகிறவர்கள் என்ற விமர்சனத்தை ஒரு பக்கம் வைத்து விட்டு முடிந்தவரை தமிழில் பேசுங்கள். தானாகவே மற்றவனும் பேசுவான். 

ரஷ்யன் லத்தீன் மொழியில் பேசனும் என்றுதான் ஆசைப்படுகிறான். ஒவ்வொருவரும் மற்ற மொழிகளின் மீது தீராத காதலோடுதான் இருக்கிறார்கள். அடுத்தவன் வீட்டு மல்லிகை அதிகம் மணக்கும் என்பதுபோல. இது யதார்த்தத்தில் இருக்கக்கூடிய உண்மை. ஏனென்றால் தன் மொழியின் மீது உள்ள ஆளுமை தெரியாதவர்களாக இருப்பதால், இந்த பிறமொழி காதல் உண்டாகிறது. மொழிக்கலப்பு என்பது இப்போது வந்த ஒன்றல்ல. அது கால காலமாக இருந்து வருகிறது. இனிமேலாவது மொழியை உணர்வுபூர்வமான ஒரு சடங்காக பார்க்காதீர்கள். அது கற்றலின் அடிப்படையில்தான் பார்க்கவேண்டியது.

Neeya-Naana-Gopinath.jpg
கணனிக்குள் தமிழை கொண்டு வருவது, கணனி வழியாக தமிழை கொண்டுபோய் சேர்ப்பது என்ற காலக்கட்டத்தில நாம் இருக்கிறோம். இப்போ அதைதான் செய்யவேண்டும். அதை விட்டு விட்டு எல்லோரும் செந் தமிழில் பேசுங்கள் என்பதெல்லாம் எவ்வளவு தூரம் சரிபட்டு வரும் என்பது எனக்குப் புரியவில்லை. எனக்கு என் மொழியை அழகாக பேச முடியும் என்கிற ஒரு நம்பிக்கை இருக்கிறது. ரொம்பவும் மொடர்னாக தமிழை பேசமுடியும். அதற்கான முன்னுதாரணங்கள் எவ்வளவோ இருக்கின்றன. மயில்வாகனம், கே.எஸ். ராஜா, அப்துல் ஹமீத் போன்றவர்கள் தமிழில் மிக அழகாக பேசுபவர்கள். இவ்வளவு ஸ்டைலாக எவனுக்கு தமிழ் பேச முடியும்? ஆனால் ஆங்கிலத்தில்தான் அழகாக பேச முடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் என்பது ஒரு இசை மொழி. அதைப் பயன்படுத்த வாய்மொழியால் அந்த பழக்கத்தை நீங்கள் உருவாக்கவேண்டும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. மொழி என்பது புரிதலுக்கானது என்று ஒருத்தன் நினைக்கிறான். மொழி என்பது எனது அடையாளம் என்று இன்னொருத்தன் நினைக்கிறான். மொழி என்பதை அடையாளமாக நினைப்பவன் மற்றவனுக்கு அந்த உணர்வை ஏற்படுத்தவேண்டும்.

gobinath-nadanthathu-enna.jpg
நான் மொழியை எனது அடையாளமாக நினைக்கவில்லை. என் மொழி மற்ற மொழிகளை விட சிறப்பானதாக இருப்பதனால் நான் தமிழில் பேசுகிறேன். எனினும் இந்த சிறப்பை ஒரு தகுதியாக பார்க்கவேண்டிய அவசியமில்லை. இதை சிறப்பு தகுதியாக பார்க்கவேண்டும் என்பதுதான் எனக்கு பிரச்சினையாக தோன்றுகிறது," என்ற கோபி செல் மணியடிக்க ஒரே வரியில் பதிலளித்துவிட்டு நம்மிடம் தொடர்ந்தார்.

"நிறைய தேடல் என்னிடம் இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதி வைத்து பாடமாக்கி பிறகு கெமராவுக்குள் முன்பாக சொல்வது என் அகராதியிலேயே கிடையாது. டைரக்டர் விசயத்தை சொல்வார்,நான் அதை உள்வாங்கி கொண்டு பேச ஆரம்பிப்பேன் அவ்வளவுதான். என்னிடம் ஸ்கிரிப்ட் தந்தால் எனக்கு பேச்சே வராது", என்றவரிடம், உங்களுக்கு மற்றவர்களின் தாக்கம் இருக்கிறதா என்று வினவினோம்.

"நான் ஒன்றும் சுயம்பு இல்லை நிறைய பேரின் தாக்கம் எனக்குள் இருக்கிறது மனிதனே குரங்கோட தாக்கம்தானே!

இத்தனை நூற்றாண்டுகளுக்கு பிறகும் மனிதன் குரங்கின் தாக்கமாகத்தானே இருக்கிறான். ரவி பெர்ணாட்சாவில் தொடங்கி, கே.எஸ்.ராஜா, உதுமான்கனி, அப்துல் ஹமீது என்று எல்லோருடைய தாக்கமும் எனக்குள் இருக்கிறது. இதை தாண்டி முன்னால் உள்ள டீக் கடையில் கறிவேப்பிலை விற்கிற பாட்டி, பக்கத்து கடையில் வடை சுடுகிற அண்ணன், பரோட்டா மாஸ்டர் இவங்களுடைய தாக்கமும் என்னிடம் இருக்கிறது. தாக்கம் என்பது பெரிய மனிதர்கள், தலைவர்கள் ஏற்படுத்துவது அல்ல. எதிர்வீட்டுக்காரராகவோ, பக்கத்து வீட்டுக்காரராகவோ கூட இருக்கலாம்," என்றவரிடம் உங்களின் நிகழ்ச்சிகள் சிலவற்றில் உலக நாயகன் கமலை நீங்கள் கொஞ்சம் அதிகமாக புகழ்வதாக தெரிகிறதே என்று கோபியின் வாயைக் கிளறினோம். விழிகளை அகல விரித்த கோபி எம்மை நிமிர்ந்து பார்த்தார்.

"தமிழ் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள ஒரு பெரிய கலைஞன். இந்தப் படம் ஓடுமா ஓடாதா என்று ஒரு சாதாரண ரசிகனுக்குத் தெரியும்போது அது கமலுக்கு தெரியாதா? ஆனால் அப்படியும் அவர் அதில் சில ரிஸ்க் எடுக்கிறார் என்றால் தான் நிற்கிற ஊடகத்தின் வழியாக ஒரு தகவலை சொல்ல வேண்டும் என்கிற தவிப்பு அவரிடம் இருக்கிறது. அந்த வகையில் அவர் பாராட்டுக்குறியவர்," என்று சொல்லி தமது நேர்காணலை கோபிநாத் நிறைவு செய்தார்.

http://tamilvamban.blogspot.ca/2013/02/blog-post_3188.html

Link to comment
Share on other sites

மொழிக்கலப்பிற்கு நன்றாகத்தான் வக்காலத்து வாங்குகிறார் கோபிநாத்.

இவருக்கு முக்கியமாக ஜேர்மனி தொலைக்காட்சி ஊடகங்களைக் காட்ட வேண்டும்.

எந்த அந்நிய மொழிப்படங்கள் என்றாலும், ஜேர்மன் மொழிமாற்றமோ.. அல்லது ஜேர்மன் மொழிபெயர்ப்பு வசனங்களோ இன்றி வெளிவராது. 

அது அவர்கள் தங்களுடைய மொழிக்கு கொடுக்கும் மரியாதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
'ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது மிகப்பெரும் குற்றமாகாது' 

தமிழ் கலந்து ஆங்கிலம் பேசுவது மிகப்பெரிய ..............?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியர் தாய் மொழியை தாய் பாலுக்கு ஈடாக சொல்லுபவர்கள்.எவ்வளவு இலகுவான எடுத்துகாட்டு.

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் ஆங்கிலம் கலக்காது தமிழ் பேசுவதென்பது இப்போதைக்கு நடக்காத காரியம்.  அங்கு தெருவுக்குத் தெரு ஆங்கிலப் பாடசாலைகள்தான் குவிந்து கிடக்கின்றன.  அப்படியே அரசாங்கப் பள்ளியில் படித்தாலும் கல்லூரி சென்ற பின்பு ஆங்கிலம்தான்.   என்னைப் பொறுத்தவரை, அவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.  அங்கிருக்கும் அரசியலுக்குள் அவர்கள் செய்வது அதிகமாகவே எனக்குத் தெரிகிறது.  வளர்ச்சியடைந்த, சுதந்திரமான ஜேர்மனியையும் இந்தியாவின் ஒரு மூலைக்குள் அரசியல் புயலுக்குள் அகப்பட்டிருக்கும் தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது சரியாகத் தெரியவில்லை.  தமிழ்நாடு ஒரு தனிநாடாக இருந்தால் ஒப்பிடுவதில் அர்த்தம் இருக்கிறது.  முயற்சி செய்பவர்களுக்கு நாமும் ஒத்துழைப்போமே!!!

இந்தியாவும் சுதந்திர ஜனநாயக நாடுதான். ஆனால் இப்படியான ஊடகங்களும் அதன் தொழிலாளிகளும்தான் தமிழ்நாட்டின் சீர்குலைவுக்கு முக்கியமான ஒரு காரணம்.

தமிழ்நாட்டு ஒலி, ஒளி ஊடக மொழிக்கலப்புப்போல வேறு எந்த மொழி ஊடகங்களிலும் பார்த்ததில்லை.

இவர்கள் திட்டமிட்டே இதை செய்கிறார்கள் அல்லது இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதே எனது எண்ணம்.

Link to comment
Share on other sites

இந்தியாதான் சுதந்திர நாடே தவிர, தமிழ்நாடு அல்ல.  தமிழ்நாட்டில் வசித்தவர்களுக்குத்தான் அங்கு ஆங்கிலம் எவ்வாறு ஊறிப்போயுள்ளது என்று தெரியும்.   கிராமப்புறங்களிலும் வசதியற்றவர்களும்தான் தமிழில் கல்வி பயில்கிறார்களே தவிர, கொஞ்சம் வசதி படைத்தவர்கள்கூட ஆங்கிலப் பாடசாலையில்தான் படிக்கிறார்கள்.  அதனைவிட, இந்த ஊடகங்களில் பணியாற்றுபவர்களும் வேற்று மாநிலத்தவர்கள்தான்.  அப்படியிருக்கும்போது, தமிழ் எப்படி வளரும்?  இருபதுக்கொருவர் மட்டும் தமிழன் இருந்தால் உடனடியாக மாற்றங்களைக் கொண்டுவரமுடியாது.  மெதுவாகத்தான் கொண்டுவரமுடியும்.    முதலில் தமிழன் தனக்கென ஒரு ஊடகத்தை உருவாக்கட்டும்.  பின்னர், மொழிக்கலப்பைப் பற்றிப் பேசுவோம். 

Link to comment
Share on other sites

இதைப்பற்றி பேசுவதானால் நிறைய பேசலாம்.. தமிழ்நாடு அண்ணாத்துரை.. காமராஜர் ஆகியோரது கைகளிலும் இருந்துதான் இன்று இந்த நிலையில் தமிழனை கவர்ச்சியாலும் உணர்ச்சியாலும் ஏமாற்றி, வேற்று இனத்தவர்களால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

முக்கியமாக அதிகாரமும் ஊடக பலமும் பிரச்சாரமும் தமிழனுக்கு ஆதரவாக உச்சமடையக்கூடாது என்பது சரியாக நெறிப்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை.

தமிழ்நாட்டில் உண்மையான தமிழ் திறமைகள் என்றுமே பாராட்டப்பட்டதுமில்லை... கௌரவிக்கப்பட்டதுமில்லை.

கோபிநாத் ஊடகத்துறைக்கு வர முதல் திறமையான துணி வியாபாரி. அன்றைய வியாபாரத்தை வெற்றிகரமாக செய்வார் என அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

அதேபோலத்தான் தற்போதும் தனது தொழிலை திறமையாகச் செய்கிறார்.

மற்றும்படி.. தமிழ் இனத்திற்கு நன்மை என்ன செய்கிறார் அல்லது செய்ய முயற்சிக்கிறார் என்பதை நீங்கள்தான் கூறவேண்டும்?!

Link to comment
Share on other sites

மொழி ஒருவனுக்கு அடயாளமாகாது. தேசமே ஒருவனுக்கு அடயாளமாகும். ஜெர்மனி என்றொரு தேசமே மொழிக்கு முதலான அடயாளம்.

காவிக்கொண்டு திரியக்கூடிய எதுவும் ஒருவனுக்கு நிரந்தர அடயளாமாகமுடியாது. புலம்பெயர்ந்தவர்கள் தேசத்தை தவிர கோயில்கள் கடவுள்கள் சாதிளை தம்முடன் காவிக்கொண்டு திரிகின்றனர் அதே போலவே மொழியையும் காவிக்கொண்டு திரிகின்றனர். தம்முடன் காவிச்செல்லும் இவ்வாறன விசயங்களை வைத்துக்கொண்டு கற்பனையில் தம்மை ஒரு தேசமாகவும் இனமாகவும் கருதுகின்றனர்.

எவனொருவன் தொடர்ந்து வாழ்ந்த பூர்வீக நிலத்தை பின்தள்ளி மொழியையும் இதர விசயங்களை முன்வைத்து தமது அடயாளமாக முன்வைக்கின்றானோ அவன் ஒரு தேசத்துக்குரியவனோ இல்லை இனத்துக்குரியவனோ இல்லை.

மொழி ஒரு தொடர்பாடல் கருவி. அதற்கு தேவை இருக்கும் வரையே அது பாவனையில் இருக்கும். என்னுமொரு மொழி பேசும் தேசத்தில் அதன் தேவை படிப்படியாக இல்லாது போவது இயற்கையானது. ஒரு தேசமில்லாமல் மொழி நீண்டகாலம் உயிர்வாழமுடியாது.

ஒரு தேசம் அமைவதை தடுப்பதில் தேசீயத்தை காவிச்செல்ல முடியும் என போதிக்கும் புலம்பெயர் தமிழர்கள் சிங்களவர்களை விட பலமான காரணமாக இருக்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழன் மொழிப்பற்று குறித்து அக்கறைப்படுவது தன்னை நியாயப்படுத்தவே அன்றி வேறில்லை.

பூர்வீக நிலமில்லாமல் உலகின் எங்கேனும் இனமாக வாழ முடியும் என்று மொழியை தனது அடயாளமாக கூடவே சாதிகள் மதங்கள் கடவுகள்களையும் தன்னுடன் வைத்திருக்க முற்படுகின்றான். இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளில் தொடர்பாடல் கருவியின் தேவை அற்றுப்போகும் போது மொழி ஒருவனது அடயாளமாகமுடியாது என்பது உண்மையாகும்.

அரை குறையாய் தமிழ் பேசினாலும் அது பூர்வீக நிலத்தில் இருந்து போசும் போது பெறுமதியானது. சொந்த தேசத்தில் வாழ்தலுக்கான பெருளாதார தேவைகளுடனும் அன்றாட வாழ்வியலுடன் தொடர்பாடல் கருவியின் அவசியம் இணைந்திருக்கும் போது அது பெறுமதியானது. புலம்பெயர்ந்த தமிழன் சுத்தமாக தமிழ்பேசினாலும் அதன் பெறுமதி 0. சொந்த நிலம் என்பது 0 முன்னால் போடும் 1 போன்றது.

இங்கிருந்துகொண்டு தமிழ்நாட்டு தமிழை திருத்த முற்படுவது சந்திரனைப் பார்த்து ஊழைவிடுவதை விட மோசமானது.

Link to comment
Share on other sites

இதைப்பற்றி பேசுவதானால் நிறைய பேசலாம்.. தமிழ்நாடு அண்ணாத்துரை.. காமராஜர் ஆகியோரது கைகளிலும் இருந்துதான் இன்று இந்த நிலையில் தமிழனை கவர்ச்சியாலும் உணர்ச்சியாலும் ஏமாற்றி, வேற்று இனத்தவர்களால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

முக்கியமாக அதிகாரமும் ஊடக பலமும் பிரச்சாரமும் தமிழனுக்கு ஆதரவாக உச்சமடையக்கூடாது என்பது சரியாக நெறிப்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை.

தமிழ்நாட்டில் உண்மையான தமிழ் திறமைகள் என்றுமே பாராட்டப்பட்டதுமில்லை... கௌரவிக்கப்பட்டதுமில்லை.

கோபிநாத் ஊடகத்துறைக்கு வர முதல் திறமையான துணி வியாபாரி. அன்றைய வியாபாரத்தை வெற்றிகரமாக செய்வார் என அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

அதேபோலத்தான் தற்போதும் தனது தொழிலை திறமையாகச் செய்கிறார்.

மற்றும்படி.. தமிழ் இனத்திற்கு நன்மை என்ன செய்கிறார் அல்லது செய்ய முயற்சிக்கிறார் என்பதை நீங்கள்தான் கூறவேண்டும்?!

சோழியான், அண்ணாத்துரை, காமராஜர் போன்றவர்களைக் குறிப்பிடுகிறீர்கள்.  கருணாநிதியை வளர்த்து விட்டவரும் அண்ணாதுரை.  அவரும் ஒரு அரசியல்வாதிதான்.  அப்போது எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் அண்ணாவின் தி.மு.க. தொண்டர்களாக இருந்தார்கள்.  ஒருமுறை ஒரு பிரச்சாரக்கூட்டத்தில் அண்ணாதுரை கருணாநிதிக்கு ஒரு மோதிரத்தை அணிவித்துக் கௌரவித்திருந்தார்.  கூட்டத்தின் பின்னர், எம்.ஜி.ஆர் அண்ணாதுரையிடம், கருணாநிதிக்கு மட்டும் அவர் எப்படிமோதிரம் அணிவித்துக் கௌரவிக்கலாம் எனக் கேள்வி எழுப்பினார்,  அதற்கு அண்ணாதுரை, அவன் தனது செலவில் அதனைச் செய்வித்து பிரச்சார மேடையில் வைத்து அணிவிக்குமாறு கேட்டான்.  நீயும் மோதிரத்தைத் தந்து அணிவிக்கச் சொல்லியிருந்தால் அணிவித்திருப்பேன் எனக் கூறினாராம்.  

அதேபோல, காமராஜரும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை  இந்திக்காரிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தவர்தான். காமராஜரை நான் மதிக்கிறேன்.  அதே நேரத்தில் அவரையும் ஒரு முழு உதாரணமாகக் கூறமுடியாது.    

நாம் போற்றிப் பேசும் எம்.ஜி.ஆர்கூட ஒரு மலையாளிதான்.

துணிகள் விற்ற  ஒருவர், இப்போது தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னால் முடிந்ததைச் செய்கிறார்.  அவர் துணி வியாபாரியாக இருக்கவில்லை.  அவரது ஊரைவிட்டுச் சென்னை வந்தபின்பு கஸ்டத்தின் நிமித்தம் சில மாதங்கள் (நாட்கள்) துணிகள் விற்றார்.  அதனைக்கூட அவரது அண்ணன் பார்த்துவிட்டு தன்னுடன் அழைத்துச் சென்று உதவினார்.   தமிழ்நாட்டில் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்து இந்தளவிற்கு வளர்ந்து இவ்வளவு செய்வது ஒரு பெரிய விடயம்தான்.  இவர், மற்றவர்களைப் போல் சினிமாவிற்குள் நுழையவில்லையே.  இவர் செய்யும் நிகழ்ச்சிகள்கூட ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையே.  புலம்பெயர்ந்து வாழும் எமக்கு வேண்டுமானால் அவை உபயோகமற்றதாக, நகைப்புக்குரியவை போல் தெரியலாம்.  ஆனால், தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு அவை யதார்த்தமானவை. 

உலகத்தில் யாருமே பூரணமானவர்கள்(Perfect) இல்லை.   அவரை ஊக்குவித்து மேலதிகமாகச் செய்ய வைக்கலாமே.  இப்படி எல்லோரையுமே நாம் ஒதுக்கினால் எமக்கு எதுவும் மிஞ்சப் போவதில்லை.   மீண்டும் சொல்கிறேன்.  போரட்டத்தின் பேராலும் போராளிகளின் பேராலும் எம்மினத்தையே சுரண்டிக் கொண்டிருப்பவர்களைவிட இவர்கள் எவ்வளவோ மேல்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபிநாத்தின் நிகழ்ச்சிகளைப்பார்த்தவகையில்

சமூக  அக்கறையோடு

தமிழ் உணர்வோடு

கள நிலைமை  கருத்தில் எடுத்து

வெல்லப்படும்படியான சில யுக்திகளுடனேயே  அவர் செயற்படுவது தெரிகிறது

எனவே அவரை உற்சாகப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

அரை குறையாய் தமிழ் பேசினாலும் அது பூர்வீக நிலத்தில் இருந்து போசும் போது பெறுமதியானது.

சொந்த தேசத்தில் வாழ்தலுக்கான பெருளாதார தேவைகளுடனும் அன்றாட வாழ்வியலுடன் தொடர்பாடல் கருவியின் அவசியம் இணைந்திருக்கும் போது அது பெறுமதியானது. புலம்பெயர்ந்த தமிழன் சுத்தமாக தமிழ்பேசினாலும் அதன் பெறுமதி 0. சொந்த நிலம் என்பது 0 முன்னால் போடும் 1 போன்றது.

இங்கிருந்துகொண்டு தமிழ்நாட்டு தமிழை திருத்த முற்படுவது சந்திரனைப் பார்த்து ஊழைவிடுவதை விட மோசமானது.

இந்தக்கருத்து

நடைமுறையை  விலத்தி  நிற்கிறது

தமிழக தலைவர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று

புலம் பெயர் ஈழத்தமிழரின் தமிழ் மீதான தாகமும் செயல் முறைகளும்  அதற்கான முயற்சிகளும்.

சண்டமாருதனின் எழுத்துக்கள்

எந்த முயற்சிகளுமற்ற

அதனைச்செய்வோரையும்  சோர்வடைய  வைத்து

எல்லாம் முடிந்தது என

நிரந்தரமாக  பிரிக்கும் பேராசையில் எழுதப்பட்டிருப்பது புரிகிறது :(  :(  :(

அதே நேரம்

தமிழ் வாழும்

அதை உலகமெலாம் கொண்டு சென்று சேர்த்து

வளர்த்த பெருமை ஈழத்தமிழரையே  சாரும்

காலம் பதில் சொல்லும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே காவிக்கொண்ட திரியும் எதுவும் அடையாளமாகது என்பது பொருத்தமற்றது. தேசங்கள் உருவாக முதல் அவர்கள் பேசிய மொழி தான் அவர்களின் அடையாளம். நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கியபொழுது அது அவர்களின் தேசமாகியது. அந்த மொழி பேசுகின்ற அனைவரும் அவர்களின் தேசத்தவர்களானார்கள். டொச் (German) மொழி பேசியதால் "Deutschland" (Germany) என்றழைக்கப்படுகின்றது. பிரேஞ் மொழி பேசியதால் France என்றானது. இத்தாலி மொழி பேசியதால் இத்தாலி என்றானது. ஒரு இனம் பேசிய மொழியே அவர்களின் தேசத்தை அடையாளப்படுத்தியது (மாறாக தேசம் மொழியை அடையாளப்படுத்தவில்லை). 

என்னை அடையாளப்படுத்தும் எதையும் நான் தொலைத்துவிட்டால் நான் ஒரு அனாதை. என்னை அடையாளப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது என் மொழி. அபூர்ப உயிரனங்களை காப்பதில் காட்டும் அக்கறையை நாம் ஒரு மொழியின் பாதுகாப்பு மீது காட்டுவதில்லை. 

தமிழ்நாடு திருந்தாது. எனவே அதனை மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்பது போல் உள்ளது சிலரின் கருத்து. அன்று தொட்டு இன்று வரை நாமும் அடிமையாக இருந்துவிட்டோம். இனியும் அப்படியே இருந்துவிட்டு போகலாம். எதற்காக அதனை மாற்ற முயற்சி செய்வான்? 

கோபிநாத் ஒரு ஊடக வியாபாரி. அதனை அவர் நன்றே செய்கின்றார். வியாபாரம் என்று வந்தபின்னர் அங்கே பணம் மட்டுமே முன்னிற்கும். பணம் பத்தும் செய்யும் என்பது கோபிநாத்தின் விடயத்தில் பொருந்தும். 

Link to comment
Share on other sites

சோழியான், அண்ணாத்துரை, காமராஜர் போன்றவர்களைக் குறிப்பிடுகிறீர்கள்.  கருணாநிதியை வளர்த்து விட்டவரும் அண்ணாதுரை.  அவரும் ஒரு அரசியல்வாதிதான்.

நான் ஏன் இதை குறிப்பிட்டேன் என்றால் தமிழ்நாடு தமிழரின் கையில் இருந்தும் வேற்று மொழியாளர்களின் கைகளுக்கு சென்றது என்பதற்காக. மற்றும்படி யார் யாரை வளர்த்துவிட்டார்கள் என்பதற்காக அல்ல... யாரும் யாரையும் வளர்க்க முடியாது... திறமை உள்ளவர்களை சந்தர்ப்பம் தேடிச் செல்வதுதான் உண்மை. அண்ணாத்துரை அவர்கள் தனக்குப் பிறகு ஆட்சி பதவியில் அமர்த்த விரும்பியது நெடுஞ்செழியன் என்ற தமிழனை.. கருணாநிதியையோ அல்லது எம்ஜிஆரையோ அல்ல. அவர்கள் தமது திறமைகள் ஊடாக கட்சியின் துணையுடன் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை. 

 அப்போது எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் அண்ணாவின் தி.மு.க. தொண்டர்களாக இருந்தார்கள்.  ஒருமுறை ஒரு பிரச்சாரக்கூட்டத்தில் அண்ணாதுரை கருணாநிதிக்கு ஒரு மோதிரத்தை அணிவித்துக் கௌரவித்திருந்தார்.  கூட்டத்தின் பின்னர், எம்.ஜி.ஆர் அண்ணாதுரையிடம், கருணாநிதிக்கு மட்டும் அவர் எப்படிமோதிரம் அணிவித்துக் கௌரவிக்கலாம் எனக் கேள்வி எழுப்பினார்,  அதற்கு அண்ணாதுரை, அவன் தனது செலவில் அதனைச் செய்வித்து பிரச்சார மேடையில் வைத்து அணிவிக்குமாறு கேட்டான்.  நீயும் மோதிரத்தைத் தந்து அணிவிக்கச் சொல்லியிருந்தால் அணிவித்திருப்பேன் எனக் கூறினாராம்.  

அதேபோல, காமராஜரும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை  இந்திக்காரிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தவர்தான். காமராஜரை நான் மதிக்கிறேன்.  அதே நேரத்தில் அவரையும் ஒரு முழு உதாரணமாகக் கூறமுடியாது.

அவர் நினைத்தாலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வட இந்தியர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. அவர் தனது வாய்ப்பை இந்திரா காந்தி அம்மையாருக்கு அளித்து தனது மரியாதையைத் தக்க அல்லது ஓங்க வைத்துக் கொண்டார்.

நாம் போற்றிப் பேசும் எம்.ஜி.ஆர்கூட ஒரு மலையாளிதான்.

துணிகள் விற்ற  ஒருவர், இப்போது தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னால் முடிந்ததைச் செய்கிறார்.  அவர் துணி வியாபாரியாக இருக்கவில்லை.  அவரது ஊரைவிட்டுச் சென்னை வந்தபின்பு கஸ்டத்தின் நிமித்தம் சில மாதங்கள் (நாட்கள்) துணிகள் விற்றார்.  அதனைக்கூட அவரது அண்ணன் பார்த்துவிட்டு தன்னுடன் அழைத்துச் சென்று உதவினார்.   தமிழ்நாட்டில் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்து இந்தளவிற்கு வளர்ந்து இவ்வளவு செய்வது ஒரு பெரிய விடயம்தான்.  இவர், மற்றவர்களைப் போல் சினிமாவிற்குள் நுழையவில்லையே.  இவர் செய்யும் நிகழ்ச்சிகள்கூட ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையே.  புலம்பெயர்ந்து வாழும் எமக்கு வேண்டுமானால் அவை உபயோகமற்றதாக, நகைப்புக்குரியவை போல் தெரியலாம்.  ஆனால், தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு அவை யதார்த்தமானவை. 

அவர் துணி விற்கட்டும், சோப்பு விற்கட்டும்.. நான் சொல்ல வந்த விடயம் அவர் திறமையான வியாபாரி. துணி விற்பதற்கும் அவருக்கு மொழியறிவு உதவியது.. தற்போதும் உதவுகிறது. 

உலகத்தில் யாருமே பூரணமானவர்கள்(Perfect) இல்லை.   அவரை ஊக்குவித்து மேலதிகமாகச் செய்ய வைக்கலாமே.  இப்படி எல்லோரையுமே நாம் ஒதுக்கினால் எமக்கு எதுவும் மிஞ்சப் போவதில்லை.   மீண்டும் சொல்கிறேன்.  போரட்டத்தின் பேராலும் போராளிகளின் பேராலும் எம்மினத்தையே சுரண்டிக் கொண்டிருப்பவர்களைவிட இவர்கள் எவ்வளவோ மேல்.  

நாம் தற்போது இந்த தலைப்பில் போராட்டத்தைப்பற்றி பேசவில்லை. போராட்டத்தைப்பற்றி பேசும்போது அதைப்பற்றி கருத்தாடுவோம்.. அதற்குள் கோபிநாத் போன்ற வியாபாரிகள் வரமாட்டார்கள் என நம்புகிறேன்.

நீங்கள் தற்போது தமிழ்நாடு தமிழ்நாடு என்று சென்னையைத்தான் குறிப்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டின் முக்கிய ஊடகங்களூம் அதிகாரங்களூம் வசதி வாய்ப்புகளூம் சென்னையை மையப்படுத்தித்தான் குவிக்கப்பட்டிருக்கின்றன.. வேற்று மாநிலத்தவரது ஆதிக்க முதலீடுகளும் சென்னையில்தான் நிறைந்திருக்கின்றன. எனினும் சென்னைக்கு வெளியே தமிழ்நாட்டின் பெரிய பகுதியும் கலப்பற்ற தமிழர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் எடுங்கள்!

Link to comment
Share on other sites

இங்கே காவிக்கொண்ட திரியும் எதுவும் அடையாளமாகது என்பது பொருத்தமற்றது. தேசங்கள் உருவாக முதல் அவர்கள் பேசிய மொழி தான் அவர்களின் அடையாளம். நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கியபொழுது அது அவர்களின் தேசமாகியது. அந்த மொழி பேசுகின்ற அனைவரும் அவர்களின் தேசத்தவர்களானார்கள். டொச் (German) மொழி பேசியதால் "Deutschland" (Germany) என்றழைக்கப்படுகின்றது. பிரேஞ் மொழி பேசியதால் France என்றானது. இத்தாலி மொழி பேசியதால் இத்தாலி என்றானது. ஒரு இனம் பேசிய மொழியே அவர்களின் தேசத்தை அடையாளப்படுத்தியது (மாறாக தேசம் மொழியை அடையாளப்படுத்தவில்லை). 

என்னை அடையாளப்படுத்தும் எதையும் நான் தொலைத்துவிட்டால் நான் ஒரு அனாதை. என்னை அடையாளப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது என் மொழி. அபூர்ப உயிரனங்களை காப்பதில் காட்டும் அக்கறையை நாம் ஒரு மொழியின் பாதுகாப்பு மீது காட்டுவதில்லை. 

தமிழ்நாடு திருந்தாது. எனவே அதனை மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்பது போல் உள்ளது சிலரின் கருத்து. அன்று தொட்டு இன்று வரை நாமும் அடிமையாக இருந்துவிட்டோம். இனியும் அப்படியே இருந்துவிட்டு போகலாம். எதற்காக அதனை மாற்ற முயற்சி செய்வான்? 

கோபிநாத் ஒரு ஊடக வியாபாரி. அதனை அவர் நன்றே செய்கின்றார். வியாபாரம் என்று வந்தபின்னர் அங்கே பணம் மட்டுமே முன்னிற்கும். பணம் பத்தும் செய்யும் என்பது கோபிநாத்தின் விடயத்தில் பொருந்தும்.

மொழிதான் தேசங்களை உருவாக்கியது என்றால் இன்று உலகில் பல்லாயிரம் தேசங்கள் இருக்கவேண்டும் ஏனெனில் இருக்கும் மொழிகளை விட அழிந்த மொழிகள் பன்மடங்கு அதிகம். அரச ராட்சியங்கள் விரிவடைந்த போது பல நூறு வட்டார மொழிகளை கொன்று தின்றுதான் தமிழும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது.

கடந்த நூற்றாண்டுவரை தமிழ் சாதீயவாரியான அடக்குமுறைக்கு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. தமிழில் புலமை உள்ளவர்கள் பிரசங்கங்கள் செய்யக் கூடியவர்கள் செய்யுள் இயற்றக் கூடியவர்கள் அதை வைத்து சமயவாரியக பிழைக்கவும் சமூகத்தை சுரண்டவும் செய்தனர். தமிழ் வரக்க சாதீயில் உயர்ந்தவனின் உடமையாக இருந்தது. வறுமைப்பட்டவனும் சாதியில் கீழானவன் என்று வரையறுக்கப்பட்டவனும் மொழி கற்பது முற்றாக நிராகரிககப்பட்டது. இன்று தமிழ்மொழி பேசுபவன் எல்லாம் தமிழன் என்று பீத்திக்கொள்ள முற்படும் இதே மொழிதான் நேற்று இனத்தை சிதைக்கும் கருவிகளில் ஒன்றாக இருந்தது.

இப்ப கூட சாதீ ஒன்றும் பாரக்கவேண்டாம் நானும் தமிழன் நீயும் தமிழன் ஏனெண்ட ரெண்டுபேரும் தேன்தமிழை தித்திக்க பேசுகின்றோம் ஆகவே சம்மந்தியாகலாம் கலியாணம் கட்டலாம் என்ற நிலையால இருக்கின்றது. நீ அந்தப் பிரதேசம் நான் இந்தப் பிரதேசம் அந்த மதம் இந்த மதம் என்ற பேதம் வேண்டாம் ஏனென்றால் நாங்கள் அமுதுக்கு நிகரான தமிழ் மொழியை பேசுகின்றோம் என்ற நிலையா இருக்கின்றது? எதுவும் இல்லை. மாறாக இந்த முரண்பாடுகளை பேசி திட்டி வசைபாடி னையப்புடைத்து வளர்க்கவும் எதிரிகளை சம்பாதிக்கவுமே மொழி பயன்படுகின்றது.

உங்களை அடயாளப்படுத்தும் எதையும் தொலைக்க மாட்டேன் என்று மொழி சாதி மதம் என உங்களை தொலைப்பதற்கான அத்தனையையும் தேசத்தை விட பிரதானமானது என்று கருதியதால் தான் ஒரு தேசமின்றி அனாதைகளாக இருக்கின்றோம். பரதேசிகளாக அலைகின்றோம். அதை நியாயப்படுத்தி எதையும் சாதிக்க முடியாது. ஒருவேளை தேமதுரத் தமிழை உலகமெல்லாம் பரப்பி பின்னர் பரப்பிய இடங்கள் எல்லாததையும் தமிழனின் நாடுகளாக பிடித்து உலகையே தமிழீழமாக மாற்றும் திட்டம் உங்களிடம் இருக்கலாம் ஏனனில் உங்கள் கருத்துப்படி மொழிதான் தேசங்களை உருவாக்குகின்றது. அப்படியானால் அது ஒரு மெகா திட்டமாகத்தான் இருக்கும்.

அங்கால் ஒருவர் கழிசடைக் கோபிநாத் என்கின்றார் மபியா உடகம் என்கின்றனர் ஊடக வியாபாரி என்கினறனர்

என்கண்முன்னால் களிசடை கோபிநாத், டிடி போன்றோருக்கு அம்மணமாக நின்று ஆரத்தி எடுக்கும் எம்மவர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=139164#entry1003903

இவை எல்லாம் நீ அந்தச் சாதீ நான் உயர்ந்த சாதீ நீ அந்தப் பிரதேசத்தவன் நான் இந்தப் பிரதேசத்தவன் என்ற மரபணு ஊடாக கடத்தப்படும் மனோபாவத்தில் இருந்து வருகின்றது. இது ஒரு நோய். என்னுமொரு தேசத்தவனை எந்த யோசனையும் இன்றி எந்தவித அடிப்படைத் தகுதியும் இன்றி இழிவாகப்பேசுவது என்பது ஒரு சைக்கோ மனநிலையே.

இறந்தவர்களின் மாவீரர் தினத்தை கூட ஒன்றாக நினைவுகூர வக்கில்லாதவர்களுக்கு அடுத்தவனை சுட்டிக்காட்ட என்ன அடிப்படைத் தகுதி இருக்கின்றது? நாங்கள் காலாகாலம் சாதீகளாக அடிபட்டோம் மதங்களாக பிழவுபட்டோம் பிரதேசங்களாக பிழவுபட்டோம் இயக்கங்களாக பிளவுபட்டு மோதி ரத்த ஆற்றை ஓடவிட்டோம் புலம்பெயர்ந்து தேசீயத்தை மாவீரர் தினத்தை கூறுபோட்டோம் அதை வைத்து ஊடக வியாபாரம் நடத்தினோம் அந்த வியாபரத்துக்கு இந்தியத் திரைப்படக் கலைஞர்களை பாவித்தோம் இவ்வாறான இவற்றை எல்லாம் செய்துகொண்டு என்னுமொரு தேசத்தவனை கழிசடை என்பதற்கும் திட்டுவதற்கும் தூற்றுவதற்கும் என்ன தகுதி இருக்கின்றது. முதலில் சைக்கோத்தனமாக பிதற்றுவதை கைவிடுவது அவசியமானது. அடுத்தவன் மீது கைநீட்ட முதல் எனது யோக்கியதை என்ன சீத்துவக்கேட்டில் உள்ளது என்ற புரிதலுக்கே தகுதியற்ற மட்டமான நிலையிலேயே இருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

கோபிநாத்தின் பேட்டியில் சொன்ன விடயங்கள் பற்றியும் யாரும் எழுதுங்கோ . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கோபிநாத்தின் நிகழ்ச்சிகளைப்பார்த்தவகையில்

சமூக  அக்கறையோடு

தமிழ் உணர்வோடு

கள நிலைமை  கருத்தில் எடுத்து

வெல்லப்படும்படியான சில யுக்திகளுடனேயே  அவர் செயற்படுவது தெரிகிறது

எனவே அவரை உற்சாகப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

இந்தக்கருத்து

நடைமுறையை  விலத்தி  நிற்கிறது

தமிழக தலைவர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று

புலம் பெயர் ஈழத்தமிழரின் தமிழ் மீதான தாகமும் செயல் முறைகளும்  அதற்கான முயற்சிகளும்.

சண்டமாருதனின் எழுத்துக்கள்

எந்த முயற்சிகளுமற்ற

அதனைச்செய்வோரையும்  சோர்வடைய  வைத்து

எல்லாம் முடிந்தது என

நிரந்தரமாக  பிரிக்கும் பேராசையில் எழுதப்பட்டிருப்பது புரிகிறது :(  :(  :(

அதே நேரம்

தமிழ் வாழும்

அதை உலகமெலாம் கொண்டு சென்று சேர்த்து

வளர்த்த பெருமை ஈழத்தமிழரையே  சாரும்

காலம் பதில் சொல்லும்..

நடைமுறைக்குச் சாத்தியமில்லாத நம்பிக்கைகளை வளர்ப்பதும் வைத்திருப்பதும் அதை ஊக்கிவிப்பதைபோல் ஆபத்தான விசயம் எதுவும் கிடையாது. அவற்றைக் களையும்போதே நடைமுகக்கு சாத்தியமான விசயம் எதுவென்ற சிந்தனையாவது வரமுடியும். நான்கு வருடங்களுக்கு முதல் திறக்கப்பட்ட ந க அரசு என்ற நடமுறைக்குச் சாத்தியமற்ற கதவு அத்தனை சாத்தியமான கதவுகளையும் அடைத்தது அதனையும் அன்றில் இருந்து இன்றுவரை எதிர்க்கின்றேன். அதே போல்தான் மொழியும் அதை வைத்து ஒரு துரும்புக்கும் பிரயோசனம் கிடையாது. நா க அரசு ஆரம்பித்தபோதும் அது சார்ந்த முயற்சிகளின் போதும் தாயகமக்களுடன் இணைந்து அவர்கள் செயற்பாட்டிற்கே பின்நிறக்க முடியும் என்றேன். இப்போது மொழி என்ற விசயத்திலும் மொழியை வைத்திருப்பதை விட தேசத்தில் ஒரு சிறு நிலப்பரப்பையாவது வாங்க வைத்திருக்க முற்படுங்கள் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் வாழ முற்படுங்கள் என்பதே அடிப்படைக் கருத்து. அதற்கு சிங்களவர்கள் விடமாட்டார்கள் என்றால் அதற்கா போராடுவதே போராட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழிதான் தேசங்களை உருவாக்கியது என்றால் இன்று உலகில் பல்லாயிரம் தேசங்கள் இருக்கவேண்டும் ஏனெனில் இருக்கும் மொழிகளை விட அழிந்த மொழிகள் பன்மடங்கு அதிகம். அரச ராட்சியங்கள் விரிவடைந்த போது பல நூறு வட்டார மொழிகளை கொன்று தின்றுதான் தமிழும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது.

இதை தானே அண்ணே நானும் எழுதினான். மொழி அழியும் போது அதனுடன் அந்த தேசமும் இல்லாது போகும். இத்தாலி பேசுகிறவன் இல்லாமல் போனால் எதற்கு இத்தாலி என்று ஒரு தேசம்? அந்த தேசத்தை ஆழுகின்றவன் தனது மொழியில் ஒரு பெயரை வைத்துவிட்டு போவான். இலங்கையில் சிங்களவர்களின் கையோங்கிய போது அதனை சிறி லங்கா என்று மாத்தவில்லையா? அவன் மொழி பேசும் தேசத்தை அவனின் மொழிக்கேற்றாற்போல் மாத்தினான். இப்பொழுது நீங்கள் வாழும் நாட்டில் அந்த நாட்டவர்களை விட தமிழர்கள் அதிகமானால் என்ன ஒரு 100 வருடங்களில் நடக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள்? அது ஒரு தமிழ் தேசமாகவே பார்க்கப்படும். 

இங்கு வட்டார மொழி பற்றி பேசவில்லை. தமிழ் என்பது ஒரு வட்டாரா மொழி அல்ல. 

கடந்த நூற்றாண்டுவரை தமிழ் சாதீயவாரியான அடக்குமுறைக்கு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. தமிழில் புலமை உள்ளவர்கள் பிரசங்கங்கள் செய்யக் கூடியவர்கள் செய்யுள் இயற்றக் கூடியவர்கள் அதை வைத்து சமயவாரியக பிழைக்கவும் சமூகத்தை சுரண்டவும் செய்தனர். தமிழ் வரக்க சாதீயில் உயர்ந்தவனின் உடமையாக இருந்தது. வறுமைப்பட்டவனும் சாதியில் கீழானவன் என்று வரையறுக்கப்பட்டவனும் மொழி கற்பது முற்றாக நிராகரிககப்பட்டது. இன்று தமிழ்மொழி பேசுபவன் எல்லாம் தமிழன் என்று பீத்திக்கொள்ள முற்படும் இதே மொழிதான் நேற்று இனத்தை சிதைக்கும் கருவிகளில் ஒன்றாக இருந்தது.

இப்ப கூட சாதீ ஒன்றும் பாரக்கவேண்டாம் நானும் தமிழன் நீயும் தமிழன் ஏனெண்ட ரெண்டுபேரும் தேன்தமிழை தித்திக்க பேசுகின்றோம் ஆகவே சம்மந்தியாகலாம் கலியாணம் கட்டலாம் என்ற நிலையால இருக்கின்றது. நீ அந்தப் பிரதேசம் நான் இந்தப் பிரதேசம் அந்த மதம் இந்த மதம் என்ற பேதம் வேண்டாம் ஏனென்றால் நாங்கள் அமுதுக்கு நிகரான தமிழ் மொழியை பேசுகின்றோம் என்ற நிலையா இருக்கின்றது? எதுவும் இல்லை. மாறாக இந்த முரண்பாடுகளை பேசி திட்டி வசைபாடி னையப்புடைத்து வளர்க்கவும் எதிரிகளை சம்பாதிக்கவுமே மொழி பயன்படுகின்றது.

உங்களை அடயாளப்படுத்தும் எதையும் தொலைக்க மாட்டேன் என்று மொழி சாதி மதம் என உங்களை தொலைப்பதற்கான அத்தனையையும் தேசத்தை விட பிரதானமானது என்று கருதியதால் தான் ஒரு தேசமின்றி அனாதைகளாக இருக்கின்றோம். பரதேசிகளாக அலைகின்றோம். அதை நியாயப்படுத்தி எதையும் சாதிக்க முடியாது. ஒருவேளை தேமதுரத் தமிழை உலகமெல்லாம் பரப்பி பின்னர் பரப்பிய இடங்கள் எல்லாததையும் தமிழனின் நாடுகளாக பிடித்து உலகையே தமிழீழமாக மாற்றும் திட்டம் உங்களிடம் இருக்கலாம் ஏனனில் உங்கள் கருத்துப்படி மொழிதான் தேசங்களை உருவாக்குகின்றது. அப்படியானால் அது ஒரு மெகா திட்டமாகத்தான் இருக்கும்.

அங்கால் ஒருவர் கழிசடைக் கோபிநாத் என்கின்றார் மபியா உடகம் என்கின்றனர் ஊடக வியாபாரி என்கினறனர்

உங்கட சாதி வெறிக்கு வேற ஒன்டும் கிடைக்கேலையோ? சாதி என்பது மதத்திலிருந்து பிறந்தது. அதை கொண்டு வந்து மொழியுடன் சேர்ப்பதை என்னவென்று சொல்வது? 

கத்தியால் ஒருவனை கொலை செய்துவிட்டு கத்தி மீது பழி போடுவது சரியா? மொழியை வைத்து நீங்கள் சாதி வளர்த்துவிட்டு உங்களை குற்றம் சொல்லாமல் மொழியை சொல்வது எந்த விதத்தில் நியாயம்? 

Link to comment
Share on other sites

நடைமுறைக்குச் சாத்தியமில்லாத நம்பிக்கைகளை வளர்ப்பதும் வைத்திருப்பதும் அதை ஊக்கிவிப்பதைபோல் ஆபத்தான விசயம் எதுவும் கிடையாது. அவற்றைக் களையும்போதே நடைமுகக்கு சாத்தியமான விசயம் எதுவென்ற சிந்தனையாவது வரமுடியும். நான்கு வருடங்களுக்கு முதல் திறக்கப்பட்ட ந க அரசு என்ற நடமுறைக்குச் சாத்தியமற்ற கதவு அத்தனை சாத்தியமான கதவுகளையும் அடைத்தது அதனையும் அன்றில் இருந்து இன்றுவரை எதிர்க்கின்றேன். அதே போல்தான் மொழியும் அதை வைத்து ஒரு துரும்புக்கும் பிரயோசனம் கிடையாது. நா க அரசு ஆரம்பித்தபோதும் அது சார்ந்த முயற்சிகளின் போதும் தாயகமக்களுடன் இணைந்து அவர்கள் செயற்பாட்டிற்கே பின்நிறக்க முடியும் என்றேன். இப்போது மொழி என்ற விசயத்திலும் மொழியை வைத்திருப்பதை விட தேசத்தில் ஒரு சிறு நிலப்பரப்பையாவது வாங்க வைத்திருக்க முற்படுங்கள் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் வாழ முற்படுங்கள் என்பதே அடிப்படைக் கருத்து. அதற்கு சிங்களவர்கள் விடமாட்டார்கள் என்றால் அதற்கா போராடுவதே போராட்டம்.

அவருக்கு சீரியஸ் ஆக பதில் எழுதிய உங்களை நினைக்க தான் பாவமாக இருக்கு . :icon_mrgreen: .அவர் விடயத்தில் அவர் வலு தெளிவு .

விட்டால் பிரான்ஸ் ஜெர்மன் எல்லாம் தமிழை தேசிய மொழியாக்கி காட்ட போகின்றேன் தடுக்காதீர்கள் என்றும் சொல்வார் .

Link to comment
Share on other sites

இதை தானே அண்ணே நானும் எழுதினான். மொழி அழியும் போது அதனுடன் அந்த தேசமும் இல்லாது போகும். இத்தாலி பேசுகிறவன் இல்லாமல் போனால் எதற்கு இத்தாலி என்று ஒரு தேசம்? அந்த தேசத்தை ஆழுகின்றவன் தனது மொழியில் ஒரு பெயரை வைத்துவிட்டு போவான். இலங்கையில் சிங்களவர்களின் கையோங்கிய போது அதனை சிறி லங்கா என்று மாத்தவில்லையா? அவன் மொழி பேசும் தேசத்தை அவனின் மொழிக்கேற்றாற்போல் மாத்தினான். இப்பொழுது நீங்கள் வாழும் நாட்டில் அந்த நாட்டவர்களை விட தமிழர்கள் அதிகமானால் என்ன ஒரு 100 வருடங்களில் நடக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள்? அது ஒரு தமிழ் தேசமாகவே பார்க்கப்படும். 

இங்கு வட்டார மொழி பற்றி பேசவில்லை. தமிழ் என்பது ஒரு வட்டாரா மொழி அல்ல. 

உங்கட சாதி வெறிக்கு வேற ஒன்டும் கிடைக்கேலையோ? சாதி என்பது மதத்திலிருந்து பிறந்தது. அதை கொண்டு வந்து மொழியுடன் சேர்ப்பதை என்னவென்று சொல்வது? 

கத்தியால் ஒருவனை கொலை செய்துவிட்டு கத்தி மீது பழி போடுவது சரியா? மொழியை வைத்து நீங்கள் சாதி வளர்த்துவிட்டு உங்களை குற்றம் சொல்லாமல் மொழியை சொல்வது எந்த விதத்தில் நியாயம்? 

உங்கள் கருத்துப்போக்கில் நல்ல நோக்கங்கள் இருப்பதால் அவற்றுடன் நான் பலவிடத்தில் முரண்படவில்லை மாறாக ஆதரிக்கின்றேன். இதே விடயத்தில் நான் சொல்ல முற்படுவது மொழியை நாம் எமது செந்த பூர்விக நிலத்தில் தக்கவைப்பது குறித்தே. தேசத்தில் இருந்து தேசீயக் கூறுகளை பிரித்தெடுத்து பிறிதொரு இடத்தில் தக்கவைக்க முற்படுவது தேசத்தை அழிப்பதற்கு நிகரானது என்பதையே. தேசம் என்ற பிரதான தளத்தில் தான் மற்றவைகள் உயிர்வாழ முடியும் என்பதையே. அவற்றில் எம்மவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதே யதார்த்தம். இந்த யதார்த்தத்துடனனே எனது கருத்துக்கள் முரண்படுகின்றது.

தமிழ் வட்டார மொழி இல்லை ஆனால் தமிழ் வளர பல வட்டாரமொழிகள் தமது உயிரை உரமாக்கியது என்பதே நான் சொன்னது.

சாதீ மதத்தில் இருந்து பிறந்தது அதே நேரம் சைவமும் தமிழும் இரண்டறக் கலந்தது என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

உரையாடல்கள் ஏதோ ஒரு பொதுவான புரிதல் நோக்கி செல்லும் போது அவைகள் ஆரோக்கியமானது- நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழும் ஆங்கிலமும் இருவேறுபட்ட மொழிகள் ஆங்கிலம் பேசுவதனால் ஆங்கிலேயர் ஆகிவிடமுடியாது மொழியையும் அடையாளத்தையும் போட்டு குழப்புவதாக இத்திரி அமைந்து விட்டது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.