Jump to content

நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் -


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(தொடர் 01)

 

       -சத்ருகன்

 

கடந்த 8 ஆம் திகதி சனிக்­கி­ழமை அதி­காலை  மலே­ஷி­யாவின் கோலா­லம்பூரிலி­ருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி புறப்­பட்ட மலே­ஷிய எயார்­லைன்ஸின் எம்.எச்.370 விமானம் 239 பேருடன் காணாமல் போய் சுமார் பல வாரங்­க­ளா­கின்­றன.

பெய்ஜிங் நோக்­கிச் ­செல்லும் வழியில் அந்த விமானம் திடீர் விபத்­துக்­குள்­ளா­கி­ய­மைக்­கான தட­யங்கள் எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

69plan2.jpgமலே­ஷிய, அமெ­ரிக்க அதி­கா­ரி­களின் அபிப்­பி­ரா­யங்­க­ளின்­படி, அந்த விமானம் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படு­கி­றது. பயணத் திசையை எதிர்­பு­ற­மாக மாற்­றிக்­கொண்டு பய­ணித்­தமை, பாதை மாறி செல்­வ­தற்­கான பயண வழி­காட்டல் முறைமை கணி­னியில் முன்­கூட்­டியே பதி­வு­செய்­தி­ருந்­தமை, பறக்­க­வேண்­டிய உய­ரத்­தை­விட பல ஆயிரம் அடிகள் விமானம் தாழ்­வாக பறந்­தமை, விமா­னத்தின் தொடர்­பு­சா­த­னங்கள் துண்­டிக்­கப்­பட்­டமை, கட்­டுப்­பாட்டு நிலை­யத்­து­ட­னான தொடர்பை இழந்த பின்­னரும் பல மணித்­தி­யா­லங்கள் பயணம் செய்தமை என பல்­வேறு விட­யங்கள் மூலம் அவ்­வி­மானம் கடத்­தப்­பட்­டி­ருக்­கலாம்  என்று சந்­தே­கத்­துக்­கான கார­ணங்­க­ளாக கூறப்­ப­டு­கின்­றன.

இவ்­வே­ளையில் உலகில் இடம்­பெற்ற பல மோச­மான விமானக் கடத்தல் சம்­ப­வங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

அமெ­ரிக்க ரைட் சகோ­த­ரர்கள் 1903 இல் வெற்­றி­க­ர­மான தமது முதல் விமானப் பறப்பை மேற்­கொண்­டனர். அதன்பின் பல்­வேறு நாடு­களின் விஞ்­ஞா­னிகள் சிறந்த முறையில் விமா­னங்­களை தயா­ரிப்­ப­தற்­கான ஆய்­வு­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த வேளையில் சில குற்றவாளி­களின் மூளைகள் விமா­னங்­களை கடத்­து­வது குறித்து சிந்­தித்துக் கொண்­டி­ருந்­தி­ருக்கும் போலும்.

பல நாடு­களில் விமான சேவைகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே உலகின் முத­லா­வது விமானக் கடத்தல் இடம்­பெற்­று­விட்­டது. பதி­வு­செய்­யப்­பட்ட தக­வல்­க­ளின்­படி உலகின்  முதலா­வது விமானக் கடத்தல் தென் அமெ­ரிக்க நாடான பெருவில்  1931 ஆம் ஆண்டு இடம்­பெற்­றது.

அமெ­ரிக்க விமா­னி­யான பெரி ரிக்கார்ட்ஸ் 1931 பெப்­ர­வரி 21 ஆம் திகதி இருவர் பயணம் செய்­யக்­கூ­டிய விமா­ன­மொன்றை பெரு நாட்டின் தலை­நகர் லீமா­வி­லி­ருந்து அரி­குய்பா நக­ருக்கு செலுத்திச் சென்றார். அவ்­வி­மானம் தரை­யி­றங்­கி­ய­வுடன் ஆயுதம் தரித்த சிலர் விமா­னத்தை சூழ்ந்து கொண்­டனர்.

தாம் பெருவின் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக கிளர்ச்­சியில் ஈடு­பட்டுள்ள புரட்சிப் படை­யினர் என ஆயுதபாணிகள் தம்மை அறி­மு­கப்­ப­டுத்திக் கொண்­டனர். பேரி ரிக்­கார்ட்ஸின் விமா­னத்தை தடுத்­து­வைத்த அச்­சிப்­பாய்கள் விமா­னத்தில் தமது துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை எடுத்துச் சென்று அவற்றை லீமா நகரில் வைத்து விமா­னத்­தி­லி­ருந்­த­வாறு கீழே போட வேண்டும் எனக் கூறினார்.

 

69plan1.jpg

தனக்கு வழங்­கப்­பட்ட பயிற்­சிகள், அறி­வு­றுத்­தல்­களை கருத்­திற்­கொண்ட விமானி பெரி ரிக்கார்ட்ஸ், அக்­கோ­ரிக்கையை நிறை­வேற்ற மறுத்தார்.
அதனால் அவ்­வி­மா­னத்தை பறப்­ப­தற்கு கிளர்ச்­சி­யா­ளர்கள் அனு­ம­திக்­க­வில்லை. இந்த இழு­பறி  10 நாட்­க­ளுக்கு மேல் நீடித்­தது.

அவ்­வ­ருடம் மார்ச் 2 ஆம் திகதி விமானி பெரி ரிக்கார்ட்ஸுக்கு திடீ­ரென மகிழ்ச்­சி­யான செய்தி கிடைத்­தது.  தமது போராட்டம் வெற்­றி­பெற்­று­விட்­ட­தாக பெரி ரிக்­கார்ட்­ஸிடம் கிளர்ச்சிப் படை­யினர் தெரி­வித்­தனர்.

விமா­னத்­துடன் பெரி ரிக்கார்ட்ஸ் திரும்பிச் செல்ல அனு­ம­திப்­ப­தாக கூறிய கிளர்ச்­சி­யா­ளர்கள், ஒரே­யொரு நிபந்­த­னையை மாத்­திரம் விதித்­தனர். தமது சகா ஒரு­வரை லீமா நக­ருக்கு ஏற்றிச் செல்ல வேண்டும் என்­பது தான் அந்த நிபந்­தனை.

அதை பெரி ரிக்கார்ட்ஸ் ஏற்­றுக்­கொள்ள, சேதம் எது­வு­மின்றி விமா­னத்தை விடு­வித்­தனர் கிளர்ச்­சி­யா­ளர்கள்.

(இச்­சம்­பவம் இடம்­பெற்று பல வரு­டங்­க­ளுக்குப் பின்னர் இவர் செலுத்திச் சென்ற மற்­றொரு விமா­னமும்  கடத்தல் முயற்­சி­யில் சிக்­கிக்­கொண்­டது தனிக்­கதை)  அக்­கா­லத்து விமா­னங்­களைப் போலவே விமான உலகின் முத­லா­வது விமானக் கடத்தல் முறை­மையும் நோக்­கமும் எளி­மை­யாக இருந்­தன.

ஆனால், எல்லா விமானக் கடத்­தல்­க­ளுமே அப்­படி எளி­மை­யா­ன­தாக இருக்­க­வில்லை. கொடூ­ர­மான கடத்தல் காரர்­க­ளிடம் சிக்­கிய விமா­னி­களும் பய­ணி­களும் அநி­யா­ய­மாக உயி­ரி­ழந்த பல சம்­ப­வங்கள் வர­லாற்றில் இடம்­பெற்­றுள்­ளன.

 

69plan4.jpg

ஆட்­சி­மாற்­றங்கள், புரட்­சிகள், நாடு­க­ளுக்­கி­டை­யி­லான பாரிய யுத்­தங்­க­ளுக்கும் விமானக் கடத்தல் சம்­ப­வங்கள் அடிப்­ப­டை­யாக அமைந்­தி­ருந்­தன.
விமா­னங்­களைக் கடத்­து­வது கடும் பயங்­க­ர­வாதச் செய­லாக கரு­தப்­ப­டு­கி­றது. இக்­க­டத்தல் அச்­சு­றுத்­தல்கள் கார­ண­மாக விமானப் பய­ணத்­து­றை­யிலும் சோத­னைகள், கெடு­பி­டிகள் அதி­க­ரித்­தன.

பயங்­க­ர­வாதத் திட்­டங்கள், அர­சியல் நோக்­கங்கள் மாத்­திரம் விமானக் கடத்­தல்­க­ளுக்கு கார­ண­மாக அமை­ய­வில்லை.

அச்­சு­றுத்தி கப்பப் பணம் பெறு­வ­தற்­காக, புக­ழுக்­காக, தமது சகாக்­களை விடு­விப்­ப­தற்­காக, தஞ்சம் கோரு­வ­தற்­காக விமா­னங்­களைக் கடத்­தி­ய­வர்கள் ஒரு­பு­ற­மி­ருக்க “திரிலுக்­காக” விமா­னங்­களைக் கடத்­திய மன­நிலை கோளாறு கொண்­ட­வர்­களும் உள்­ளனர்.

நூற்­றுக்­க­ணக்­கானோர் பயணம் செய்யும் விமா­னங்கள் கடத்­தப்­ப­டும்­போது அப்­ப­ய­ணி­களின் உயிர் குறித்த அச்சம் கார­ண­மாக பதை­ப­தைப்பு அதி­க­ரிக்­கி­றது.

இதனால் விமானக் கடத்­தல்­களை முடி­வுக்கு கொண்­டு­வர பல்வேறு வழிகளில் அரசுகள் முயற்சிப்பது வழக்கம். அதிரடி தாக்குதல்கள் மூலம் விமானக் கடத்தல்கள் முறியடிக்கப்பட்ட அல்லது முடிவுக்கு கொண்டுவரப்பட்ட சம்பவங்களும் உண்டு. கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி விமானத்தையும் மனித உயிர்களையும் காப்பாற்ற வேண்டிய நெருக்கடிக்கு அரசுகள் தள்ளப்பட்ட வரலாறும் உண்டு.

இலங்கையரினாலும் வெளிநாடொன்றின் பாரிய  பயணிகள் விமானமொன்று கடத்தப்பட்டமையும் வரலாறாக உள்ளது. அக்கடத்தலுக்கான காரணம் பெரும்பாலான விமானக் கடத்தல்களுக்கான காரணத்தைவிட வித்தியாசமானது.     (தொடரும்)

 

(மெட்ரோ நியூஸ் வார இதழ் 21-03-2014)

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=69&display=0#sthash.EWY9T7MD.dpuf
Link to comment
Share on other sites

ஒருவரின் கைத்தொலைபேசியும்(பயணிகளின்) வேலை செய்யவில்லையா?  ஒருவர் கூட தொலைபேசியை பாவிக்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

(தொடர் 01)

------

 உலகின்  முதலா­வது விமானக் கடத்தல் தென் அமெ­ரிக்க நாடான பெருவில்  1931 ஆம் ஆண்டு இடம்­பெற்­றது.

அமெ­ரிக்க விமா­னி­யான பெரி ரிக்கார்ட்ஸ் 1931 பெப்­ர­வரி 21 ஆம் திகதி இருவர் பயணம் செய்­யக்­கூ­டிய விமா­ன­மொன்றை பெரு நாட்டின் தலை­நகர் லீமா­வி­லி­ருந்து அரி­குய்பா நக­ருக்கு செலுத்திச் சென்றார். அவ்­வி­மானம் தரை­யி­றங்­கி­ய­வுடன் ஆயுதம் தரித்த சிலர் விமா­னத்தை சூழ்ந்து கொண்­டனர்.

 

விமான‌க் க‌ட‌த்த‌ல், 1931´ம் ஆண்டில் இருந்து ஆர‌ம்பிப்பதால்...

இத் தொடர் சுவராசியமாக போகும் என நினைக்கின்றேன்.

அரிய, புதிய தகவல்களை வாசிக்க ஆவலாக உள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் கைத்தொலைபேசியும்(பயணிகளின்) வேலை செய்யவில்லையா?  ஒருவர் கூட தொலைபேசியை பாவிக்கவில்லையா?

 

விஞ்ஞானம் முன்னேறியுள்ள காலத்திலும்

விமானம் கடத்தப் பட்டு, 25 நாட்கள் ஆகும் நிலையில்...

இதுவரை எவ்வித உருப்படியான தகவல்களும் கிடைக்கவில்லை. இதனை வைத்துப் பார்க்கும் போது.... எல்லோரின் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு.... விமானக் கடத்தலில்,  புதிய அத்தியாயம் ஒன்றை... ஏதோ ஒரு நாடோ, தீவீரவாத அமைப்போ கண்டுபிடித்துள்ளதாக நினைக்கின்றேன்.

 

இப்போது அந்த விமானத்தை, தாங்களும் தேடுவதாக..... "பாவ்லா" காட்டிக் கொண்டிருக்கும், உலகின் பெரிய நாடுகள் கூட, இதில் சம்பந்தப் பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

இப்போது அந்த விமானத்தை, தாங்களும் தேடுவதாக..... "பாவ்லா" காட்டிக் கொண்டிருக்கும், உலகின் பெரிய நாடுகள் கூட, இதில் சம்பந்தப் பட்டிருக்கலாம்.

 

 

இந்த சந்தேகம் எனக்கும் உண்டு. விமானியின் மீது பழியை போடவும் சில நாடுகளூம் அதன் ஊடகங்களும் பகீரதப்பிரயத்தனம் எடுப்ப்தை பார்க்கும் போது மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது.
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் 02:

 

1931ஆம் ஆண்டு பெரு நாட்டில் இடம்­பெற்ற உலகின் முத­லா­வது விமானக் கடத்தல் சம்­ப­வத்­தின்­போது, விமா­னத்தை தடுத்­து­வைத்த கிளர்ச்­சி­யா­ளர்கள், 10 நாட்­க­ளின்பின் தமது சகா ஒரு­வரை அரி­குய்பா நக­ரி­லி­ருந்து தலைநகர் லீமா­வுக்கு  ஏற்­றிச்­செல்ல வேண்டும் என்ற ஒரே­யொரு நிபந்­த­னை­யுடன் விமா­னத்­தையும் அமெ­ரிக்க விமானி பிரையன் ரிக்­கார்ட்­ஸையும் விடு­வித்­தனர்.

ஆனால் அதன்பின் நடந்த விமானக் கடத்­தல்கள் அவ்­வ­ளவு இல­கு­வாக முடிந்­து­வி­ட­வில்லை. 1932 ஆம் ஆண்டு பிரே­ஸிலின் பான் எயார் டோ பிரேஸில் நிறு­வ­னத்­துக்­கு­ சொந்­த­மான விமா­ன­மொன்று அந்­நி­று­வ­னத்தின் விமானத் தரிப்­பி­டத்­தி­லி­ருந்து மூன்று நபர்­களால் கடத்­தப்­பட்­டது. அவர்கள் பண­யக்­கைதியாக ஒரு­வரை ஏற்றிச் சென்­றனர்.

 

72hijack-china3.jpg

 

கடத்­தல்­கா­ரர்­களில் எவ­ருக்கும் முறை­யான விமா­ன­மோட்டல் பயிற்­சிகள் இருக்­க­வில்லை. எப்­ப­டியோ விமானத்தை கிளப்­பிக்­கொண்டு அவர்கள் பறந்­தனர். ஆனால், சாவோ ஜோவா டி மெரிட்டி எனும் நகரில் அவ்­வி­மானம் வீழ்ந்து நொருங்­கி­யது. விமா­னத்­தி­லி­ருந்த நால்­வரும் உயி­ரி­ழந்­தனர். பிரே­ஸிலில் இடம்­பெற்ற முதல் விமானக் கடத்தல் இது.

 

இக்­க­டத்­த­லின்­போது இடம்­பெற்ற விபத்தே நால்வர் உயி­ரி­ழப்­ப­தற்கு கார­ண­மா­கி­யது.   விமானக் கடத்­த­லொன்­றின்­போது கொலை இடம்­பெற்ற முத­லா­வது சம்­பவம் 1939 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றது.

அமெ­ரிக்­காவின் மிசோரி மாநி­லத்தில் கார்ல் பைவென்ஸ் எனும் விமானி, ஏர்னஸ்ட் பி. பிளெட்ச் என்­ப­வ­ருக்கு விமானம் செலுத்­து­வ­தற்­கான பயிற்­சி­களை வழங்க முன்­வந்தார்.

 

விமானி கார்ல் பைவென்ஸ், முன் ஆச­னத்­தி­லி­ருந்து விமா­னத்தை செலுத்­திக்­கொண்டே விமானம் செலுத்­து­வது குறித்து விளக்கிக் கொண்­டி­ருந்தார். ஏர்னஸ்ட் பிளெட்ச் பின் ஆச­னத்தில் இருந்தார். விமானம் பறந்­து­கொண்­டி­ருந்­த­போது ஏர்­னஸ்டட் பிளெட்ச் திடீ­ரென தனது கைத்­துப்­பாக்­கியை உருவி விமானி கார்லின் தலையில் இரு­த­ட­வைகள் பின்­னா­லி­ருந்­த­வாறு சுட்டார். எதற்­காக தாக்­கப்­பட்டோம், எதனால் தாக்­கப்­பட்டோம் எனத் தெரி­யா­ம­லேயே  இறந்­து­போனார் விமானப் பயிற்­றுநர் கார்ல் பைவென்ஸ். அக்­கா­லத்தில் 20 ஆம் நூற்­றாண்டின் மிக அதிர்ச்­சி­க­ர­மான குற்­றச்­செ­யல்­களில் ஒன்­றாக அது நோக்­கப்­பட்­டது.

 

கொலை­யாளி ஏர்னஸ்ட் பிளெட்­சுக்கு ஆயுள்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 2001 ஆம் ஆண்டு அவர் கால­மானார்.

 

1947 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி ருமேனி­யாவில்  உள்ளூர் சேவையில் ஈடு­பட்­டி­ருந்த விமா­ன­மொன்றை ருமேனிய இரா­ணுவ அதி­காரிகள் மூவர் கடத்­தினர். ருமெ­னி­யாவின் கம்யூனிஸ ஆட்­சி­யி­லி­ருந்து தப்­பு­வதே இவர்­களின் நோக்­க­மாக இருந்­தது. இவ்­வி­மானம் துருக்­கியின் கனாக்­கலே நகரில் தரை­யி­றக்­கப்­பட்டு கடத்­தல்­கா­ரர்கள் அர­சியல் தஞ்சம் கோரினர்.  இவ்­வி­மா­னத்தின் தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் ஒருவர் கடத்­தல்­கா­ரர்­களால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

 

1948.07.16 ஆம் திகதி, கதே பசுபிக் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான மிஸ் மெக்கவ் எனும், சீ பிளேன் ரக விமா­ன­மொன்று சீனாவின் முத்து நதி கழி­முகத்தி­லி­ருந்து கடத்­தப்­பட்­டது. 23 பய­ணி­களும் 3 ஊழி­யர்­களும் விமா­னத்தில் இருந்­தனர்.

 

விமா­னத்தைக் கடத்தி கொள்­ளை­ய­டிப்­பதும் கப்பம் வசூ­லிப்­பதும் இக்­கூட்டத்தின் நோக்­க­மாக இருந்­தது. மேக்­கா­வி­லி­ருந்து ஹொங்கொங் நோக்கி செல்லவிருந்த இவ்­வி­மானம் கடத்தலின் பின்  வீழ்ந்­தது நொருங்­கி­யது. விமா­னத்­தி­லி­ருந்த ஒரே­யொ­ருவர் மாத்­திரம் உயிர் தப்­பினார். ஹுவாங் யூ எனும் இந்­நபர் வேறு யாரு­மல்ல. விமான கடத்தல் திட்­டத்தின் சூத்­தி­ர­தாரி இவர்தான். விமானம் விழு­வ­தற்­கு­முன்­னரே அவ­சரக் கத­வுக்­கூ­டாக குதித்­ததால் அவர் உயிர் தப்­பினார்.

 

விமானக் கடத்தல் திட்­டத்தின் சூத்­தி­ர­தாரி தானே என ஒப்­புக்­கொண்ட ஹுவாங் யூவை மெக்கவ் பொலிஸார் மெக்கவ் நீதி­மன்றில் ஆஜர் செய்தனர்.

 

தற்­போது சீனாவின் ஒரு பகு­தி­யா­க­வுள்ள மெக்கவ் தீவா­னது 1999 ஆம் ஆண்­டு­வரை போர்த்­துக்­கலின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேற்­படி விமானம் ஹொங்­கொங்கில் பதிவு செய்­யப்­பட்­டது என்­ப­தாலும் பெரும்­பா­லான பய­ணிகள் ஹொங்­கொங்கை சேர்ந்­த­வர்கள் என்­ப­தாலும் ஹொங்­கொங்­கில்தான் இவ்­வ­ழக்கு விசா­ரிக்­கப்­பட வேண்டும் என மெக்கவ் நீதி­மன்றம் தெரி­வித்­தது.

 

72hijack-china2.jpgஅப்­போது ஹொங்­கொங்­கா­னது பிரிட்­டனின் நிர்வாகத்தில் இருந்தது. விமானம் ஹொங்­கொங்கில் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­த­ போ­திலும் சம்­பவம் நடை­பெற்­றது சீனப் பிராந்­தி­யத்தில் என்­பதால் சீனா­வில்தான் இவ்­வ­ழக்கு நடை­பெற வேண்டும் எனவும் தனக்கு இவ்­வ­ழக்கை விசா­ரிக்க அதி­கா­ரமில்லை எனவும் ஹொங்­கொங்­கி­லுள்ள பிரித்தானிய கால­னித்­துவ அர­சாங்கம் தெரி­வித்­தது.

 

ஹுவாங் யூ மீதான வழக்கை விசா­ரிப்­ப­தற்கு யாரு­மில்­லா­ததால், 1951 ஜூன் 11 ஆம் திகதி அவர் மெக்கவ் சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்டு பின்னர் சீனா­வுக்கு நாடு கடத்­தப்­பட்டார்.

 

1931 இலி­ருந்து 1948 ஆம் ஆண்டு வரை­யான 9 வரு­ட­கா­லத்தில் உலகில் 15 விமானக் கடத்­தல்­களே இடம்­பெற்­றி­ருந்­தன. ஆனால், 1958 முதல் 1967 வரை­யான காலத்தில் 48 விமா­னங்கள் கடத்­தப்­பட்­டன. அதா­வது வரு­டத்­துக்கு சரா­ச­ரி­யாக 5 விமா­னங்கள் கடத்­தப்­பட்­டன.

 

1968 ஆண்டு இந்த எண்­ணிக்கை 38 ஆக இருந்தது. ஆனால் 1969 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிக அதிகமான விமானக் கடத்தல்கள் இடம்பெற்ற ஆண்டாகும். அவ்வருடம் மாத்திரம் 82 விமானங்கள் கடத்தப்பட்டன.

இப்போது  உலகில்   எங்காவது  விமானக் கடத்தல்கள், நடந்தால் காற்சட்டையை சுருட்டி மடித்துக்கொண்டு கடத்தலை முறியடிக்க உதவிக்கு விரைகிறதல்லவா அமெரிக்கா. ஆனால், இதே அமெரிக்கா, ஒரு காலத்தில் விமானக் கடத்தல்களை வரவேற்றுக்கொண்டிருந்தமை வரலாறு. அது ஏன், அதன் விளைவுகள் என்ன என்பதை அடுத்த இதழில் பார்க்கலாம்.

 

(தொடரும்....)

 

(மெட்ரோ நியூஸ்  வார இதழ் 28-03-2014)

- See more at: http://metronews.lk/feature.php?feature=72&display=0#sthash.lxuzZBJo.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்: 03

 

1950களுக்கு முன்னர் வரை விமானக் கடத்­தல் சம்­ப­வங்கள் அமெ­ரிக்­காவில் அரி­தா­ன­வை­யாக இருந்­தன. ஆனால், 1950களின் பிற்­ப­கு­தியில் நிலைமை மாறி­யது. 1958 முதல் 1969 ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் உலகின் மேற்கு அரைக்­கோளப் பகு­தியில் விமா­னக்­க­டத்­தல்கள் சடு­தி­யாக அதி­க­ரித்­தன.

 

இவற்றில் பெரும்­பா­லான விமானக் கடத்­தல்கள் அமெ­ரிக்கா மற்றும் கியூபா தொடர்­பா­ன­வை­யாக இருந்­தன. 1958 முதல் 1969 வரை உலகில் 177 விமானக் கடத்தல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­தாக பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. இவற்றில் 77 சத­வீ­த­மா­னவை மேற்கு அரைக்­கோளப் பகு­தியில் இடம்­பெற்­றன. அதுவும் 77 சத­வீ­த­மான சம்­ப­வங்­களில் விமா­னக்­க­டத்­தல்கள் கியூபாவில் ஆரம்­பித்­த­­வை­யாகவோ கியூபாவை நோக்கி திசை திருப்­பப்­பட்­ட­வை­யா­கவோ இருந்­தன.

 

அமெ­ரிக்­காவின் தெற்­கி­லுள்ள புளோ­ரிடா மாநி­லத்­துக்கும் கியூபாவுக்கும் இடை­யி­லான தூரம் வெறும் 145 கிலோ­மீற்­றர்­கள்தான்.

 

75plan2.jpgகியூப வான்­ப­ரப்பில் முத­லா­வது விமானக் கடத்தல் 1958 ஏப்ரல் 9 ஆம் திகதி இடம்­பெற்­றது. அது  அமெ­ரிக்க ஆத­ர­வு­கொண்ட ஜனா­தி­பதி படிஸ்­டாவின் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பிடெல் ெகஸ்ட்ரோ தலை­மை­யி­லான புரட்சிப் படை­யினர் போராட்­டங்­களில் ஈடு­பட்­டி­ருந்த காலம். கியூபாவின் சி.46 ரக விமா­ன­மொன்றை விமான ஊழி­யர்கள் நால்­வரே கடத்தி அமெ­ரிக்­காவின் மியாமி நகரில் தரை­யி­றக்­கி­யபின் அர­சியல் புக­லிடம் கோரினர்.

 

அச்­சம்­பவம் இடம்­பெற்று 4 நாட்­க­ளின்பின், 1958 ஏப்ரல் 3 ஆம் திகதி கியூபாவில் இரண்­டா­வது விமானக் கடத்தல் இடம்­பெற்­றது. கியூபாவின் தேசிய விமான சேவை­யான கியூபானா நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான பய­ணிகள் விமா­ன­மொன்று தலை­நகர் ஹவா­னா­வி­லி­ருந்து கியூபாவின் மத்­திய பகு­தி­யி­லுள்ள சான்ட்ட கிளேரா நக­ருக்குப் புறப்­பட்­டது. ஆனால் அவ்­வி­மா­னத்தை 3 ஊழி­யர்கள் அமெ­ரிக்­காவின் மியாமி நகரில் தரை­யி­றக்கி அர­சியல் புக­லிடம் கோரினர்.

 

75_gulf-of-mexico.jpg1958 ஒக்­டோ­பரில் கியூப விமா­ன­மொன்றை 14 பய­ணி­க­

ளுடன் புரட்­சி­யா­ளர்கள் கடத்தி புரட்­சிப்­ப­டை­யி­னரின் ஆதிக்­கத்­தி­லி­ருந்த பகு­தியில் தரை­யி­றக்­கினர். அமெ­ரிக்­காவின் கவ­னத்தை ஈர்த்து, ஜெனரல் படிஸ்­டாவின் அர­சாங்­கத்­துக்கு அமெ­ரிக்கா ஆயு­தங்­களை வழங்­கா­ம­லி­ருக்கச் செய்­வதே கடத்­தலின் நோக்கம் என  புரட்­சி­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.

1958 நவம்பர் முதலாம் திகதி கியூபானா விமா­ன­மொ­ன்று அமெ­ரிக்­காவின் மியாமி நக­ரி­லி­ருந்து கியூபாவின் ஹவானா நகரை நோக்கி புறப்­பட்­டது. ஆனால் அதை கியூப புரட்­சி­யா­ளர்கள் கடத்­தினர்.  ரவுல் ெகஸ்ட்­ரோவின் புரட்சிப் படை­யி­ன­ருக்கு ஆயு­தங்­களை விநி­யோ­கிப்­ப­தற்­காக கியூபாவின் கிழக்குப் பகு­தி­யி­லுள்ள சிய­ராக கிறிஸ்­டலில் விமா­னத்தை தரை­யி­றக்க முயற்­சிக்­கப்­பட்­டது.

 

75kennady1.jpgஆனால் இர­வு­நேரம் நெருங்­கிக்­கொண்­டி­ருந்­தது. விமா­னத்தின் எரி­பொருள் தீர்ந்­து­கொண்­டி­ருந்­தது. அதனால் சீனித் தொழிற்­சா­லை­யொன்றில் அவ­ச­ர­மாக விமா­னத்தை தரை­யி­றக்க கடத்­தல்­கா­ரர்கள் முயற்­சித்­தனர்.  எனினும், அங்கு தரை­யி­றங்கும் முயற்­சியில் கட­லி­லேயே விமானம் விழுந்து உடைந்­தது. விமா­னத்­தி­லி­ருந்த 17 பேர் உயி­ரி­ழந்­தனர். 6 பேர் காயங்­க­ளுடன் உயிர் தப்­பினர். ஜெனரல் படிஸ்­டாவின் அர­சாங்­கத்­துக்கு அமெ­ரிக்கா ஆயு­தங்­களை வழங்­கக்­கூ­டாது என வலி­யு­றுத்­து­வதே தமது நோக்கம் என புரட்சிப் படை­யினர் தெரி­வித்­தனர்.

 

1959 முற்­ப­கு­தியில் பிடெல் கெஸ்ட்ரோ தலை­மை­யி­லான புரட்சிப் படை­யி­னரின் புரட்சி வெற்றி பெற்­றது. ஜெனரல் படிஸ்­டாவின் ஆட்சி கவிழ்க்­கப்­பட்டு  1959 பெப்­ர­வரி 16 ஆம் திகதி கியூபாவின் பிர­த­ம­ராக பிடெல் ெகஸ்ட்ரோ பத­வி­யேற்றார்.

 

இதன்­பின்னர் கியூபா விமானக் கடத்­தல்கள் குறை­வ­டைந்­த­ன­வையா என்றால் இல்லை என்­பதே பதில். பிடெல் ெகஸ்ட்ரோ அதி­கா­ரத்­துக்கு வந்­ததை முன்னாள் ஜனா­தி­பதி படிஸ்­டாவின் விசு­வா­சி­களும் மக்­களில் சிலரும் விரும்­ப­வில்லை. அவர்கள் விமா­னங்­களைக் கடத்தி நாட்­டை­விட்டு தப்­பிக்க முயற்­சித்­தனர்.

 

75castro2.jpg1959 ஏப்ரல் 15 ஆம் திகதி மியா­மி­யி­லிருந்து 3 ஊழி­யர்கள் 19 பய­ணி­க­ளுடன்  புறப்­பட்ட கியூப விமா­ன­மொன்று மியா­மிக்கு கடத்­தப்­பட்­டது. கடத்­தல்­கா­ரர்கள் நால்வர் முன்னாள் ஜனா­தி­பதி படிஸ்­டாவின் ஆத­ர­வா­ளர்கள்.  இவர்­களில் மூவர் இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்­க­ளா­கவும் ஒருவர் விமானப் பொறி­யி­ய­லா­ள­ரா­கவும் இருந்­தனர் பின்னர் இவ்­வி­மா­னத்தை கியூபாவிடம் அமெ­ரிக்கா ஒப்­ப­டைத்­தது.ஆனால், தனது ஆத­ர­வா­ள­ரான ஜெனரல் படிஸ்­டாவின் ஆட்­சியை கவிழ்த்­து­விட்டு அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றிய பிடெல் ெகஸ்ட்­ரோவின் அர­சாங்­கத்தை அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை.

 

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஐஸ­னோ­வரின் நிர்­வா­கமும் 1961 இல் பத­விக்கு வந்த ஜனா­தி­பதி ேஜான்.எப்.கென்­ன­டியின் நிர்­வா­கமும் தனது கரை­யோ­ரத்­தி­லி­ருந்து வெறும் 145 கிலோ­மீற்றர் தூரத்­தி­லுள்ள நாடொன்றில் கம்யூனிஸ ஆட்சி நடை­பெ­று­வது குறித்து கவலை கொண்­டி­ருந்­தன.

கம்யூனிஸ ஆட்­சிக்கு எதி­ரான ஒரு பிர­சார யுக்­தி­யாக, கம்யூனிஸ ஆட்­சியை விரும்­ப­வில்லை எனக் கூறி அந்­நா­டு­க­ளி­லி­ருந்து தப்பி வரு­ப­வர்­களை எல்லாம் வர­வேற்­பதில் அமெ­ரிக்­காவும் ஏனைய மேற்­கு­லக நாடு­களும் ஆர்வம் காட்­டின.

 

இதனால், கியூபாவி­லி­ருந்து தப்­பி­வந்து அமெ­ரிக்­காவில் அர­சியல் புக­லிடம் கோரு­வ­தையும் ஒரு பிர­சார வெற்­றி­யாக அமெ­ரிக்கா நோக்­கி­யது. இதன் ஒரு அங்­க­மாக கியூபாவி­லி­ருந்து அமெ­ரிக்­கா­வுக்கு விமா­னங்கள் கடத்­தி­வந்து புக­லிடம் கோரப்­படும் சம்­ப­வங்­க­ளையும் அமெ­ரிக்கா பிர­சார வெற்­றி­யா­கத்தான் கரு­தி­யது. இப்­போது உள்­ளதைப் போல் விமானக் கடத்­தல்­களை  பயங்­க­ர­வாத குற்­ற­மாகக் கருதும் சட்­டங்கள் அப்­போது அமெ­ரிக்­காவில் இருக்­க­வில்லை. மாறாக, கியூபாவி­லி­ருந்து வந்த விமானக் கடத்தல் காரர்களுக்கு அமெரிக்காவில் புகலிடம் அளிக்கப்பட்டதுடன் கியூபாவினால் பணம் வழங்கப்பட வேண்டியுள்ள கம்பனிகளும் தனி நபர்களுக்கும் அவ்விமானங்களை அமெரிக்க நீதிமன்றங்கள் விநியோகிப்பதற்கும் அமெரிக்க அரசாங்கம் அனுமதியளித்தது.

 

“கெடுவான் கேடு நினைப்பான்” என்ற கதையாக அமெரிக்க அரசாங்கத்தின் இத்தகைய போக்கு அமெரிக்காவையும் திருப்பித் தாக்கத் தொடங்கியது. கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு மாத்திரமல்லாமல், அப்படியே எதிர்த்திசையிலும் கடத்தல்கள் இடம்பெற்றன. இதனால் பெரும் திண்டாட்டத்தை எதிர்கொள்ள ஆரம்பித்தது அமெரிக்கா.  

 

              (தொடரும்)

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=75&display=0#sthash.dbvlSURB.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்: 04

 

கியூபாவில் பிடெல் கஸ்ட்ரோ ஆட்­சிக்கு வந்­தபின் கியூப விமா­னங்­களில் அமெ­ரிக்­கா­வுக்கு வந்து அர­சியல் புக­லிடம் கோரும் சம்­பவங்­களை கம்யூனிஸியத்­துக்கு எதி­ரான பி­ரசா­ரப்­போரில் கிடைத்த வெற்­றி­யாக அமெ­ரிக்கா கரு­தி­யது. இதனால் கியூப விமா­னங்கள் அமெ­ரிக்­கா­வுக்கு கடத்­தப்­படும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­தன.

 

ஆனால், அதிக காலம் இந்­நிலை நீடிக்­க­வில்லை. அமெ­ரிக்­கா­வி­லி­ருந்தும் கியூபாவுக்கு விமா­னங்கள் கடத்­தப்­படும் சம்­ப­வங்­களும் சில வரு­டங்­களில் ஆரம்­ப­மா­கின.

 

1961 மே முதலாம் திக­திதான் அமெ­ரிக்க விமா­ன­மொன்று கடத்­தப்­பட்ட முதல் சம்­பவம் இடம்­பெற்­றது. அன்­டு­லியோ ரொமிரெஸ் ஓர்ட்டிஸ் என்­பவர் கியூபாவுக்கு குடி­பெ­யர விரும்­பினார். அவ்­வே­ளையில் அமெ­ரிக்­கா­வுக்கும் கியூபாவுக்கும் உற­வி­லான ராஜ­தந்­திர உற­வுகள் முறி­வ­டைந்­தி­ருந்­தன. அந்­நி­லையில் கியூபாவில் குடி­யேற விரும்­பிய ரமிரெஸ் ஓர்ட்டிஸ் கையாண்ட வழி விமானக் கடத்தல்.

 

அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்­தி­லி­ருந்து புறப்­பட்ட விமா­ன­மொன்றை கியூபாவுக்கு கடத்­தினார் ஓர்ட்டிஸ்.

 

1961 ஆம் ஆண்டில்  35 வய­தா­ன­வ­ராக இருந்த அமெ­ரிக்கப் பிர­ஜை­யான அன்­டூ­லியோ ரமிரெஸ் ஓர்ட்டிஸ், கொரிய யுத்­தத்­தின்­போது அமெ­ரிக்கப் படையில் பணி­யாற்­றி­யவர். 1961 மே முதலாம் திகதி மியாமி நக­ரி­லி­ருந்து புளொ­ரிடா மாநி­லத்தின் தென்­ப­குதி எல்­லை­யி­லுள்ள கீ வெஸ்ட் தீவு நோக்கி புறப்­பட்ட நெஷனல் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் விமா­ன­மொன்றில்  ஏறினார்.

 

அக்­கா­லத்தில் விமானப் பயணி களையும், அவர்களின் பொதிகளையும் அமெரிக்க விமாநிலையங்களில் சோதனை­யிடும் வழக்கம் இருக்­க­வில்லை. ஓர்ட்­டி­ஸ் துப்­பாக்­கி­யொன்­றையும் கத்­தி­யொன்­றையும் தன்­னுடன் எடுத்துச் சென்­றி­ருந்தார்.

 

அவ்­வி­மானம் பறந்­து­கொண்­டி­ருந்த­போது விமா­னிக்கு துண்­டுச்­சீட்டை அனுப்­பிய ரமிரெஸ் ஓர்ட்டிஸ்,  விமா­னத்தை தகர்க்­கக்­கூ­டிய அள­வுக்கு வெடிப்­பொ­ருட்கள் தன்­னிடம் இருப்­ப­தா­கவும் விமா­னத்தை கியூபாவின் ஹாவானா நக­ருக்கு கொண்டு செல்­லு­மாறும் அத்­துண்­டுச்­சீட்டில் தெரி­வித்­தி­ருந்தார். வேறு வழி­யின்றி விமா­னத்தை ஹவா­னா­வுக்கு கொண்டு சென்றார் விமானி.

 

77elpaso1.jpgஅதற்­குமுன்  அமெ­ரிக்­காவில் உள்ளூர் விமான நிறு­வ­னங்கள் எதுவும் விமானக் கடத்தல் சம்­ப­வங்­களை எதிர்­நோக்­கிய அனு­ப­வ­மில்­லா­ததால், அவ்­வி­மானம் அதற்­கு­ரிய பாதை­யி­லி­ருந்து மறைந்­ததும் அவ்­வி­மானம் கடலில் வீழ்ந்­து­விட்­டது என்றே அமெ­ரிக்க அதி­கா­ரிகள் கரு­தினர். தனது விமானம் கியூபாவுக்கு விமானம் கடத்­தப்­பட்­டு­விட்­டது என்­பது அமெ­ரிக்­கா­வுக்கு புதிய அதிர்ச்சி அனு­ப­வ­மாக இருந்­தது.

 

கியூபாவில் இறங்­கிய ரமிரெஸ் ஓர்டிஸ் கியூபாவில் அர­சியல் புக­லிடம் கோரினார். அவ­ருக்கு புக­லிடம் அளிக்­கப்­பட்­டது. ஆனால் பின்னர் அவர் அங்கு மகிழ்ச்­சி­யக இருக்­க­வில்லை. அவர் எதிர்­நோக்­கிய நெருக்­க­டி­களை பின்னர் பார்க்­கலாம்.

 

அச்­சம்­ப­வத்தின் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து கியூபாவுக்கு விமா­னங்­களைக் கடத்­து­வது அடிக்­கடி இடம்­பெறும் நிகழ்­வாக மாறிப்­போ­னது.

விமா­னத்தில் ஏறி­யபின் “டேக் மி ஹவானா” (என்னை ஹவா­னா­வுக்கு கொண்­டுபோ) என்று கூறு­வது அமெ­ரிக்­காவில் நன்கு பிர­பல்­ய­மான ஒரு வச­ன­மா­கி­யது.

 

1931 ஆம் ஆண்டில் உலகின் முத­லா­வது விமானக் கடத்தல் சம்­ப­வத்தை எதிர்­கொண்ட அமெ­ரிக்க விமானி பிரையன் ரிக்காட்ஸ் மீண்டும் அவ்­வா­றான ஒரு சம்­ப­வத்தை எதிர்­கொண்டார் என இத்­தொ­டரின் முதல் அங்­கத்தில் குறிப்­பிட்­டி­ருந்தோம் அல்­லவா? அவர் எதிர்­நோக்­கிய இரண்­டா­வது சம்­பவம் 1961 ஆண்டில் இடம்­பெற்­றது.

 

அப்­போது கொண்­டி­னென்டல் விமான சேவை நிறு­வ­னத்தின் போயிங் 707 ரக பய­ணிகள் விமா­ன­மொன்றின் விமானி­யாக ரிக்கார்ட்ஸ் இருந்தார். அவர் லொஸ் ஏஞ்­சல்­ஸி­லி­ருந்து செலுத்­திய விமானம் பீனிக்ஸ் மற்றும் டெக்ஸாஸ் மாநி­லத்தின், எல் பஸோ, நக­ரங்­க­ளுக்­கூ­டாக சான் அன்­டா­னியோ நகரம் நோக்கி புறப்­பட்­டது.  எல் பஸோ நகரம் நோக்கி விமானம் சென்­று­கொண்­டி­ருந்­த­போது  தந்­தையும் மக­னு­மான இருவர் அவ்­வி­மா­னத்தை கியூபாவுக்கு கடத்­தத்­திட்­ட­மிட்­டனர். லியோன் பியர்டன், அவரின் 16 வயது மகன் கொடி பியர்டன் ஆகி­யோரே இந்­ந­பர்­க­ளாவர்.

 

77elpaso300.jpgஅமெ­ரிக்கா வாழ்­வ­தற்கு பொருத்­த­மில்­லாத நாடு எனவும் கியூபாவில் புதி­தாக ஆட்­சிக்கு வந்த பிடெல் கஸ்ட்­ரோ­வுக்கு 54 இலட்சம் டொலர் பெறு­ம­தி­யான விமா­னத்தை பரிசாக வழங்க விரும்­பு­வ­தா­கவும் இவர்கள் கூறினர். அதற்­காக கஸ்ட்ரோ தம்மை பாராட்டி வெகு­ம­தி­ய­ளிப்பார் எனவும் அதன்பின் கியூபாவி­லேயே தாம் வசிக்­கலாம் என அவர்கள் நம்­பினர்.

எல்­பஸோ நகரில் விமா­னத்­திற்கு எரி­பொருள் நிரப்­பி­யபின் கியூபாவுக்கு விமா­னத்தை கொண்டு செல்­லப்­போ­வ­தாக லியோன் பியர்டன் தெரி­வித்தார். இத்­த­கவல் அமெ­ரிக்க ஜனா­தி­பதி கென்­ன­டிக்கு தெரி­விக்­கப்­பட்­டது.

 

 

தனது எதி­ரா­ளிக்கு மற்­றொரு அர­சியல் துருப்பு­சீட்டு கிடைப்­பதை விரும்­பாத ஜனா­தி­பதி கென்­னடி விமானம் டெக்­சா­ஸி­லி­ருந்து புறப்­ப­டு­வதை தடுக்க அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள உத்­த­ர­விட்டார். எல் பஸோவில் விமானம் தரை­யி­றக்­கப்­பட்­ட­வுடன் எவ்.ஐ.பி. பொலிஸார் வரும்­வரை  பழு­து­பார்க்கும் பாவனையில் ஊழி­யர்கள் விமா­னத்தை தாம­தப்­ப­டுத்­தினர்.

 

ஆனால், தாம­தத்தால் எரிச்­ச­லை­டைந்த லியோன் பியர்­டென்­ வி­மா­னி­களை மிரட்டி விமா­னத்தை கிளப்­பு­மாறு உத்­த­ர­விட்டார். விமானம் ஒடு­பா­தையில் ஓடத் தயா­ரா­ன­போது 4 கார்­களில் துரத்திச் சென்­றனர். விமா­னத்தின் டயர்கள் சுடப்­பட்­டதால் அவ்­வி­மானம் புறப்­ப­டு­வது தடுக்­கப்­பட்­டது. லியோன் பியர்­ட­னுமம் கொடி பியர்­டனும் கைதா­கினர்.

 

ஆனால், அதை­ய­டுத்த தசாப்­த­காலம் உலகில் மிக­அ­திக விமானக் கடத்­தல்கள் இடம்­பெற்­ற­தொரு காலப்­ப­கு­தி­யாகும்.

 

1958 முதல் 1969 வரை உலகின் மேற்கு அரைக்­கோ­ளத்தில் விமானக் கடத்­தல்கள் என்­பது அடிக்­கடி இடம்­பெறும் விட­ய­மாக மாறி­யி­ருந்­தது. அவற்றில் பெரும்­பா­லான அமெ­ரிக்க விமானக் கடத்­தல்கள்  கியூபாவை மைய­மாகக் கொண்­டி­ருந்­தன.

 

 அதா­வது, 1958 முதல் 1969 வரை­யான உலகில் இடம்­பெற்ற விமானக் கடத்­தல்­களின் எண்­ணிக்கை 177. இவற்றில் 80 சத­வீ­த­மான விமானக் கடத்­தல்கள் மேற்கு அரைக்­கோளப் பகு­தி­யி­லேயே இடம்­பெற்­றன.

 

அத்­துடன் 77 சத­வீ­த­மான விமானக் கடத்­தல்கள் ஒன்றில் கியூபாவில் ஆரம்­பித்­த­வை­யா­கவோ அல்லது கியூபாவுக்கு விமானம் திசை திருப்பப்படும் சம்பவமாகவோ இருந்தன.

 

கியூபாவுக்கு விமானங்கள் கடத்தப்படுவதை தடுப்பது எப்படி என அங்கலாய்த்த அமெரிக்க எவ்.பி.ஐ. அதிகாரிகள் புளோரிடாவின் தெற்கிலுள்ள கீ வெஸ்ட் நகரில் ஹவானா விமான நிலையத்தைப் போன்ற மாதிரி தோன்றமொன்றை ஏற்படுத்துவது குறித்தும் யோசித்தனர்.

 

இதன்மூலம் விமானத்தை கடத்துபவர்கள் தாம் ஹவானாவை அடைந்துவிட்டதாக எண்ணி கீ வெஸ்ட் நகரில் இறங்கக்கூடும் என்பது எவ்.பி.ஐ. அதிகாரிகளின் எண்ணமாக இருந்தது.  விமானக் கடத்தல் சம்பவங்கள் அந்தளவுக்கு மோசமாக ஆரம்பித்திருந்தன.

                                       (தொடரும்)-

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=77&display=0#sthash.KJ6iGX38.dpuf

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
நடுவானில் நிகழ்ந்த பயங்கரங்கள்: உலகை உலுக்கிய விமானக் கடத்தல்கள் (5) - See more at:
 
 

1960களின் இறு­தியில் திடீ­ரென அதி­க­ரித்த விமானக் கடத்­தல்கள் அமெ­ரிக்க அரசை கவ­லை­கொள்ளச் செய்­தன. 1968 முதல் 1972 வரை­யான காலப்­பகுதியில் உலகில் 326 விமானக் கடத்தல் முயற்­சிகள் இடம்­பெற்­றன. அதா­வது, 5.6 நாட்­க­ளுக்கு ஒரு தடவை ஒரு விமானக் கடத்தல் முயற்சி இடம்­பெற்­றது.

 

80Mexico2.jpg

 

 

அதே காலப்­ப­கு­தியில் அமெ­ரிக்­காவில் தனி நபர்­களால் 137 விமானக் கடத்தல் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இது 13.3 நாட்­க­ளுக்கு ஒரு விமானக் கடத்தல் முயற்சி என்ற விகி­தத்தில் இருந்­தது.

 

1969 ஆம் ஆண்டு 82 விமானக் கடத்தல்கள் இடம்­பெற்­றன. விமானக் கடத்­தல்­களை தடுப்­ப­தற்கு  ஏதேனும் செய்தாகவேண்டும் என அமெ­ரிக்கா உணர ஆரம்­பித்­தது.

 

கியூபாவுடன் உடன்­பா­டொன்றை செய்­து­கொள்­வ­தற்­காக சர்­வ­தேச முக­வரங்­க­ளுக்­கூ­டாக கியூபா பிர­தி­தி­நி­தி­களை தொடர்­பு­கொள்ளும் நட­வ­டிக்­கையை அமெ­ரிக்கா தீவி­ர­மாக்­கி­யது. 1969 ஆம் ஆண்டு விமானக் கடத்­தல்­கா­ரர்­க­ளையும் கடத்­தப்­படும் விமா­னங்­களை திருப்பி அனுப்­பு­வ­தற்கு இணங்கும் உடன்­படிக்கையில் கியூபாவும் மெக்­ஸி­கோவும் கையெ­ழுத்­திட்­டன.

1973 ஆம் ஆண்டு விமானக் கடத்­தல்­களின் வர­லாற்றில் ஒரு திருப்­பு­முனை­யான ஆண்­டாக அமைந்­தது. அந்த ஆண்­டுதான் அமெ­ரிக்­காவும் கியூபாவும் விமானக் கடத்­தல்­கா­ரர்­க­ளுக்கு எதிராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தற்கு அல்­லது சட்ட நட­வ­டிக்­கைக்­காக அவர்­களை மற்­றைய நாட்­டுக்கு திருப்பி அனுப்­பு­வ­தற்கு உறு­தி­ய­ளித்து உடன்­பா­டொன்றை செய்­து­கொண்­டன. தாய்வான், சீனா முத­லான வேறு பல நாடு­க­ளு­டனும் அமெ­ரிக்கா இத்­த­கைய உடன்­ப­டிக்­கை­களை செய்­து­கொண்­டது.

 

அத்­துடன் விமானப் பய­ணி­க­ளையும் பொதி­க­ளையும் மெட்டல் டிடெக்டர் கருவி கூலம் சோத­னை­யிட வேண்டு­மென்ற அமெ­ரிக்க மத்­திய அரசின் திட்டம் அமெ­ரிக்­காவில் முதல் தட­வை­யாக அமு­லுக்கு வந்­தது.

 

இந்­ந­ட­வ­டிக்­கை­க­ளுக்கு பலன் கிடைத்­தது. 1973 ஆம் ஆண்­டின்பின் விமானக் கடத்­தல்­களின் எண்­ணிக்கை குறையத் தொடங்­கி­யது. 1977 இல் அமெ­ரிக்­காவுட­னான  உடன்­ப­டிக்­கையை பிடெல் கஸ்ட்ரோ ரத்துச் செய்தார். அதை­ய­டுத்து அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து கியூபாவுக்கு விமானங்கள் கடத்­தப்­ப­டு­வது மீண்டும் அதி­க­ரித்­தது.

 

எனினும் உடன்­படிக்கை மீண்டும் அமுல்­ப­டுத்­தப்­பட்­டபின் மீண்டும் 1968 முதல் 1977 வரை வரு­டாந்தம் சரா­ச­ரி­யாக 41 விமானக் கடத்­தல்கள் இடம்­பெற்ற நிலையில்  1978 முதல் 1988 வரை­யான பத்­தாண்டு காலத்தில் வரு­டாந்தம் சரா­ச­ரி­யாக 26 விமானக் கடத்­தல்­களே இடம்­பெற்­றன.

 

அதே­வேளை அமெ­ரிக்க விமா­னங்­களை கியூபாவுக்கு கடத்திச் சென்­ற­வர்கள் கியூபாவில் எதிர்­பார்த்த வர­வேற்பை பெற­வில்லை.  அமெரிக்க விமா­ன­மொன்றை முதல் தட­வை­யாக கடத்­திய அன்­டு­லியோ  ரமிரெஸ் ஓர்­டிஸும் பெரும் சோத­னை­களை கியூபாவில் பெரும் துன்­பங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது.

 

80ortiz.jpg1961 மே முதலாம் திகதி அமெ­ரிக்­காவின் நெஷனல் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் 337 ஆம் இலக்க விமானம் அமெரிக்­காவின் புளொ­ரிடா மாநி­லத்தின் மியா­மி­யி­லி­ருந்து அம்­மா­நிலத்தின் தென் முனை­யி­லுள்ள கீ வெஸ்ட் நக­ருக்­கு­சென்­று­கொண்­டி­ருந்­த­போது விமா­னியின் கழுத்தில் கத்­தியை வைத்தார் ஓர்ட்டிஸ். 'இன்னும் 30 நிமி­டங்­களில் நான் கியூபா தலை­நகர் ஹவா­னாவை பார்க்­க­வில்லை என்றால் நாம் அனை­வரும் இறந்­து­விடுவோம்' என ஓர்ட்டிஸ் மிரட்­டினான்.

 

விமா­னத்தை கியூபாவுக்கு கடத்­து­வதற்கு ஓர்ட்டிஸ் கூறிய கார­ணமும் விநோ­த­மா­ன­தாக இருந்­தது.

 

பிடெல் கஸ்ட்­ரோவை கொல்­வ­தற்­காக டொமி­னிக்கன் குடி­ய­ரசின் ஜனா­திப­தி­யான ரபாயெல் ட்ருஜிலோ தனக்கு ஒரு இலட்சம் டொலர்கள் வழங்க முன்­வந்த­தா­கவும், இந்த சதி குறித்து கஸ்ட்ரோ­வுக்கு தகவல் சொல்­வ­தற்­காக தான் கியூபாவுக்கு செல்ல வேண்டும் எனவும்   ஓர்ட்டிஸ் தெரி­வித்தார்

விமானி வேறு வழி­யின்றி ஹவானாவுக்கு விமா­னத்தை கொண்டு சென்றார்.

அக்­க­டத்­த­லுக்கு முன்னர் அமெ­ரிக்க பய­ணிகள் விமா­னங்கள் எதுவும்  கடத்­தப்­பட்ட வர­லாறு இருக்­க­வில்லை என்­பதால் அமெ­ரிக்க அதி­கா­ரிகள் என்ன நடந்­தது எனத் தெரி­யாமல் குழம்­பி­யதைப் போலவே, ஹாவா­னா­வி­லுள்ள விமானக் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­களும் அமெ­ரிக்க விமா­ன­மொன்று அத்­து­மீறி வரு­வதை அறிந்து குழப்­ப­ம­டைந்­தனர்.

 

விமா­னத்தை சுட்­டுத்­தள்­ளப்­போ­வ­தாக கியூபா அதி­கா­ரிகள் எச்­ச­ரித்­தனர். எனினும், பின்னர் விமா­னத்தை தரை­யி­றங்க அனு­ம­தித்­தனர். கியூபா படை­யினர் ஓர்ட்­டி­ஸையும் அவ­னது பொதி­க­ளையும் வாக­னத்தில் ஏற்­றிக்­கொண்டு விரைந்­தனர்.

 

கியூபாவில் அர­சியல்  புக­லிடம் கோரினார் ஓர்ட்டிஸ். அவர் அங்கு இருக்க அனு­ம­திக்­கட்­ட­போ­திலும்  பின்னர் கியூபாவை விட்டு தப்பிச் செல்ல முற்­பட்­ட­தை­ய­டுத்து அவர் கைது செய்யப்­பட்டு 6 வருட சிறைத்­தண்­டனை அளிக்­கப்­பட்­டது. ஓர்ட்­டிஸை உள­வாளி என கியூபா அதி­கா­ரிகள் சந்­தே­கித்­தமை இதற்கு காரணம்.

 

1968 இல் கியூபா சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யான ஓர்ட்டிஸ் ஹவா­னா­வி­லுள்ள சுவிட்­ஸர்­லாந்து தூத­ர­கத்­துக்­கூ­டாக கியூபாவை விட்டு வெளி­யேற முயற்­சித்தார்.  ஆனால் அவர் நாட்­டை­விட்டு வெளி­யேற கியூபா அர­சாங்கம் அனு­ம­திக்­க­வில்லை.

 

1972 ஆம் ஆண்டு சிறிய கட்­டு­ம­ர­மொன்றின் மூலம் கியூபாவி­லி­ருந்து தப்பிச் செல்ல ஓர்ட்டிஸ் முயற்­சித்தார். இரு நாட்கள் கடலில் பயணம் செய்த நிலையில் கியூபா படை­யி­னரின் பட­குகள் சுற்­றி­வ­ளைத்­தன.

 

கைது செய்யப்பட்ட ஓர்ட்­டி­ஸுக்கு மீண்டும் 3 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஓர்ட்டிஸ் 1975 ஆம் ஆண்டு ஜமைக்காவை சென்றடைந்தபோது கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அடுத்த வருடம் ஓர்ட்டிஸுக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை விதித்தது.

ஆனால், அனைத்து விமானக் கடத்தல் காரர்களும் அன்டுலியோ,  ரமிரெஸ், ஓர்டிஸ் போன்று வெறுமனே அரசியல் சார்ந்த நோக்கம் கொண்டவர்களாக இருக்கவில்லை. அவர்களில் பலரின் நோக்கங்களும் அதை நிறை வேற்றுவதற்கான செயற்பாடுகளும் பயங்கரமான வையாக இருந்தன.     

                                                         (தொடரும்)

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=80&display=0#sthash.mHucvWzN.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"கார்லோஸ்" இன் காலம் வரும்போது இந்த திரி கோடி கட்டி பறக்கும்.
விமான கடத்தல் என்றால் கார்லோஸ்தான் யாருக்கும் முதலில் நினைவுக்கு வருவார்.
Link to comment
Share on other sites

ஒருவரின் கைத்தொலைபேசியும்(பயணிகளின்) வேலை செய்யவில்லையா?  ஒருவர் கூட தொலைபேசியை பாவிக்கவில்லையா?

 

அவ்வளவு உயரத்தில் அவ்வளவு வேகத்தில் கைத்தொலைபேசியால் சிக்னலை அனுப்பவும் பெறவும் முடியாது

  வேண்டுமென்றால் யாராவது விமானத்திலிருந்து உங்கள் நண்பருக்கோ உறவினருக்கோ தொடர்பு கொண்டு பாருங்கள்

விஞ்ஞானம் முன்னேறியுள்ள காலத்திலும்

விமானம் கடத்தப் பட்டு, 25 நாட்கள் ஆகும் நிலையில்...

இதுவரை எவ்வித உருப்படியான தகவல்களும் கிடைக்கவில்லை. இதனை வைத்துப் பார்க்கும் போது.... எல்லோரின் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு.... விமானக் கடத்தலில்,  புதிய அத்தியாயம் ஒன்றை... ஏதோ ஒரு நாடோ, தீவீரவாத அமைப்போ கண்டுபிடித்துள்ளதாக நினைக்கின்றேன்.

 

இப்போது அந்த விமானத்தை, தாங்களும் தேடுவதாக..... "பாவ்லா" காட்டிக் கொண்டிருக்கும், உலகின் பெரிய நாடுகள் கூட, இதில் சம்பந்தப் பட்டிருக்கலாம்.

 

 நம்மால் கடலடியில்  11000 அடி ஆழத்திற்கு கீழே சென்று தேட முடியாது

 மேலும் விழுந்ததாக சந்தேகிக்கப்பட்ட இடம் அதிக ஆழமும் கடலடி நீரோட்டமும் உள்ள இடம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 நம்மால் கடலடியில்  11000 அடி ஆழத்திற்கு கீழே சென்று தேட முடியாது

 மேலும் விழுந்ததாக சந்தேகிக்கப்பட்ட இடம் அதிக ஆழமும் கடலடி நீரோட்டமும் உள்ள இடம்

 

 

கீழே ஏன் தேடவேண்டும் ?
விமானத்தில் இருக்கும் 1/3 பங்கு பொருட்கள் மிதக்க கூடியவைதானே ?
Link to comment
Share on other sites

அவ்வளவு உயரத்தில் அவ்வளவு வேகத்தில் கைத்தொலைபேசியால் சிக்னலை அனுப்பவும் பெறவும் முடியாது

  வேண்டுமென்றால் யாராவது விமானத்திலிருந்து உங்கள் நண்பருக்கோ உறவினருக்கோ தொடர்பு கொண்டு பாருங்கள்

 

 நம்மால் கடலடியில்  11000 அடி ஆழத்திற்கு கீழே சென்று தேட முடியாது

 மேலும் விழுந்ததாக சந்தேகிக்கப்பட்ட இடம் அதிக ஆழமும் கடலடி நீரோட்டமும் உள்ள இடம்

 

 

அத்திலாந்து கடலில் விழுந்த பிரான்ஸ் விமான துண்டுகள் எப்படி கண்டு பிடிக்கப்பட்டன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பகுதி: 06
 
 

82heading.jpg

 

லே­ஷிய எயார்­லைன்ஸின்ஸ் நிறு வனத்தின் எம்.எச்.370 விமானம் 239 பேருடன் காணாமல் போய், பல வாரங்­க­ளா­கின்றன. கோலா­லம்பூரிலி­ருந்து மார்ச் 8 ஆம் திகதி சீனாவின் பெய்ஜிங் நகரை நோக்கி புறப்­பட்ட விமானம் தெற்கு நோக்கி பறந்த நிலையில் இந்து சமுத்­தி­ரத்தில் தென் பகு­தியில் வீழ்ந்­தி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கிறது. இதனால் அவுஸ்­தி­ரே­லிய கரை­யோ­ரத்­தி­லி­ருந்து 1000 கிலோ­மீற்­றர்­க­ளுக்கு அப்பால் தேடு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டன.

 

ஆனால், இது­வரை அவ்­வி­மானத்தின் எந்தத் தட­யமும் கண்­டறி­யப்­ப­ட­வில்லை.  இவ்­வி­மா­னத்தை யாரா­வது கடத்­தி­யி­ருக்­கலாம் என விமானம் காணாமல் போய் ஒரு வாரத்தில் மலே­ஷிய பிரதமர் தெரி­வித்­தி­ருந்தார்.

 

இவ்­வி­மானம்  பயங்­க­ர­வா­தி­களால் கடத்­தப்­பட்டு ஆப்­கா­னிஸ்­தானில் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பயணிகள் பண­யக்­கை­தி­க­ளாக உள்­ள­தா­கவும் ரஷ்ய உள­வுத்­துறை வட்­டாரங்கள் தெரி­வித்­த­தாக அண்மையில் செய்திகள் வெளி­யா­கின.

 

ஏற்­கெ­னவே இவ்­வி­மானம் இந்து சமுத்­திர தென் பகு­தி­யி­லுள்ள டியகோ கார்­சியா தீவின் அமெ­ரிக்கப் படைத்­த­ளத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டி­ருக்­கலாம் எனவும் வதந்­திகள் வெளி­யா­கின. இதை அமெ­ரிக்கா மறுத்­தது.

 

இவ்­வி­மானம் எங்­கேனும் தரை­யிறக்­கப்­பட்­ட­மைக்­கான நம்­ப­க­மான தக­வல்கள் வெளி­வ­ர­ாவிட்­டாலும்,      எம்.எச் 370 விமானம் யாரோ நபரினால் அல்­லது குழு­வினால்  கடத்­தப்­பட்ட நிலையில் விபத்­துக்­குள்­ளா­கி இருக்கலாம் ­என்ற கருத்­துகள் வலு­வ­டைந்து வரு­கின்றன.

எம்.எச்.370 விமானம் கடத்­தப்­பட்டிருக்­கலாம் என்ற ஊகங்கள் வெளி­வரத் தொடங்­கிய வேளை­யிலேயே உலகை உலுக்­கிய விமானக் கடத்­தல்கள் குறித்த இத்­தொடர் ஆரம்பிக்­கப்­பட்­டது.

 

எவ்­வா­றெ­னினும், மலே­ஷிய விமான­மொன்று கடத்­தப்­பட்ட முதல் சம்­பவம் இது­வல்ல. மலே­ஷி­யாவின் வர­லாற்றில் மிகப் பயங்­க­ர­மான விமானக் கடத்தல் சம்­பவம் 1977 ஆம் ஆண்டு இடம்­பெற்­றது. 100 பேர் அச்­சம்­ப­வத்தில் கொல்­லப்­பட்­டனர்.

கடந்த மாதம் வரை மலே­ஷியா எதிர்­கொண்ட மிக மோச­மான விமான அனர்த்­த­மாக அச்­சம்­பவம் இருந்­தது.

 

82malaysia2.jpg

 

அந்த விமா­னமும் மலே­ஷிய எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மா­னதுதான். எம்.எச். 653 எனும் அவ்வி­மானம் போயிங் 737-200 ரகத்தைச் சேர்ந்­தது.

 

1977 டிசெம்பர் 4 ஆம் திகதி இரவு 7.21 மணிக்கு மலே­ஷி­யாவின் பெனாங் நக­ரி­லி­ருந்து தலை­நகர் கோலாம்பூர் நோக்கி அவ்­வி­மானம் புறப்­பட்­டது. மலே­ஷிய விவ­சா­யத்­துறை அமைச்சர் டத்தோ அலி ஹாஜி அஹமட், ஜப்­பானுக்­கான கியூபா தூதுவர் மரியா கார்­சியா இசா­வுஸ்­டெகுய் உட்­பட 97 பய­ணி­களும் 7 ஊழி­யர்­க­ளு­மாக 100 பேர் அவ்­வி­மானத்தில் இருந்­தனர்.

விமானம் புறப்­பட்டு சுமார் 33 நிமிடங்­க­ளின்பின்,  கோலா­லம்பூர் சுபாங் விமான நிலை­யத்தில் தரை­யிறங்­கு­வ­தற்கு தயா­ராகிக் கொண்டிருந்­த­போது கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­க­ளுக்கு அந்த

அதிர்ச்சித் தகவல் கிடைத்­தது.

 

 

82malaysia1.jpgவிமா­னத்தில் இனந்­தெ­ரி­யாத கடத்தல்காரர் ஒருவர் இருப்­பதாக விமான ஊழியர் ஒருவர் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­களுக்குத் தெரி­வித்தார். அவ்­வே­ளையில் 4000 அடி உய­ரத்தில் விமானம் பறந்­து­கொண்­டி­ருந்­தது. இத்­த­கவல் உரிய அதி­கா­ரி­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்டு விமான நிலை­யத்தில் அவ­ச­ர­கால ஏற்­பா­டுகள் துரி­த­மாக மேற்­கொள்­ளப்­பட்­டன.

 

ஆனால், அங்கு விமானம் தரை­யிறங்­க­வில்லை. சில நிமிடங்­க­ளின்பின் “நாம் சிங்கப்பூர் நோக்கி சென்­று­கொண்­டி­ருக்­கிறோம்” என விமான  ஊழியர் ஒருவர் தகவல் கொடுத்தார். ஆனால், அந்த  விமானம் சிங்­கப்பூர் விமான நிலை­யத்­தையும் சென்ற­டை­ய­வில்லை.

அதன்பின் சில நிமி­டங்­களில் இரு துப்­பாக்கிப் பிர­யோக சத்தங்கள் விமானி அறையின் ஒலிப்­ப­திக்­க­ரு­வியில் பதி­வாகி­யமை புல­னாய்­வா­ளர்­களால் பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டது.

அன்­றி­ரவு 08.15 மணி­யளவில் விமானத்­து­டனான சகலதொடர்­பு­களும் துண்­டிக்­கப்­பட்­டன. இரவு 8.36மணி­ய­ளவில் வெடிப்புச் சத்த­மொன்றை தாம் கேட்­ட­தா­கவும் எரிந்த பொருட்­களின் சிதை­வுகள் தரையில் காணப்­ப­டு­வ­தா­கவும் மலே­ஷி­யாவின் டான்ஜூங் குப்பாங் எனும் கிரா­மத்­தி­லுள்ள மக்கள் தெரி­வித்­தனர். அவை எம்.எச்.653 விமானத்தின் சிதை­வுகள் என்­பது பின்னர் கண்­டு­பிடிக்­கப்­பட்­டது.

 

 

விமா­னத்­தி­லி­ருந்த 100 பேரும் உயிரி­ழந்­தி­ருந்­தனர். அவர்­களின் உடல்கள் அடை­யாளம் தெரி­யா­த­ளவு சிதைந்­திருந்­தன. அவர்­களின் உடல்கள் பாரிய புதை­கு­ழி­களில் அடக்கம் செய்­யப்­பட்­டன.

விமா­னத்­தி­லி­ருந்த அனை­வ­ருமே உயி­ரி­ழந்­த நிலையில் அச்­சம்­பவம் இடம்­பெற்று சுமார் 37 வரு­டங்கள் கடந்த பின்­னரும் அவ்­வி­மா­னத்தை கடத்­தியவர் யார் என்­பது இன்­று­வரை கண்ட­றி­யப்­ப­ட­வில்லை.

வானில் அசா­தா­ர­ண­மான வகையில் ஏறி இறங்­கிய அவ்­வி­மானம் பின்னர் ஏறத்­தாழ செங்­குத்­தாக தரையில் மோதி­ய­தை நேரில் கண்­ட­தாக சிலர் தெரி­வித்­தனர். அதே­வேளை விமானம் விழு­வ­தற்கு முன் தீப்­பற்­றியதை அவதானித்­ததா­கவும் வெடிப்­புச்­சத்தம் கேட்­ட­தா­கவும் சிலர் கூறினர்.

இரு துப்­பாக்கிப் பிர­யோக சத்­தங்களும் விமா­னி­யையும் துணை விமா­னி­யையும் சுட்­டுக்­கொல்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தினால் ஏற்­பட்­டது என்­பது தெளி­வா­கி­யது. விமா­னிகள் கொல்­லப்­பட்­டபின் தொழிற்சார் ரீதியில் முறையான விதத்தில் விமானம் கையா­ளப்­ப­டாத நிலையில் அது தாறு மாறாக பறந்து விபத்­துக்­குள்­ளா­ன­தாக விசா­ரணை நடத்­திய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

 

82malaysia3.jpg

 

எனினும் விமா­னியின் அறைக்குள் யாரோ அத்­து­மீறி பிர­வே­சிப்­பது முதல் விமா­னி­யையும் துணை விமானி­யையும் சுட்­டுக்­கொல்­வது வரை ஒலிப்­ப­திவுக் கரு­வியில் பல விடயங்கள் பதி­வா­கி­யி­ருந்­தன. ஆனால், அக்­கொடூ­ரத்தை புரிந்த நபர் அல்­லது நபர்கள் யார் என்­ப­தையோ கடத்தலின் நோக்கம் என்ன என்­பதையோ புல­னாய்வு அதி­கா­ரி­களால் கண்­ட­றி­யவே முடியவில்லை.

 

எம்.எச்.370 விமானத்திற்கு என்ன நடந்தது என சில வாரங்களாக பலர் விடை தேடும் நிலையில், எம்.எச் 653 விமானத்தின் மர்மம் துலங்காமல் 37 வருடங்களாக தாம் தவிப்பதாகவும் அவ்விமானத்தில்  பயணம் செய்து உயிரிழந்த ரிச்சர்ட் ஷெரிங்டன் என்பவரின் மகன் டொம் ஷெரிங்கடன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

தனது தந்தையின் மரணத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தாம் இன்னும் விடுபடவில்லை என    எம்.எச்.653 விமானத்தின் தலைமை விமானியான கெப்டன் ஜி.கே கன்ஜூரின் மகளான தேவிகா கன்ஜூர் கூறுகிறார். வரலாற்றின் மிக மர்மமான விமானக் கடத்தல்களில் ஒன்றாக   எம்.எச்.653 விவகாரமும் நீடிக்கிறது.                 

 

(தொடரும்)

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=82&display=0#sthash.pHNsdhde.dpuf

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து கப்பப் பணத்துடன் குதித்த கடத்தல்காரன் - See more at: http://www.metronews.lk/feature.php?feature=85&display=0#sthash.L6NHoYgj.dpuf

 

பாகம்: 07

 

1961 முதல் ஏரா­ள­மான அமெ­ரிக்க விமா­னங்கள் கடத்­தப்­பட்ட சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்ள போதிலும் அவற்றில் கடத்­தல்­கா­ரர்கள் யார், அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என இன்­று­வரை கண்­டு­பி­டிக்க முடி­யாத ஒரே­யொரு சம்­பவம் 1971 ஆம் ஆண்டு இடம்­பெற்­றது.

விமா­ன­மொன்றை கடத்தி கப்பம் கோரிய ஒருவன், 2 இலட்சம் அமெரிக்க டொலர் பணத்­தையும் எடுத்­துக்­கொண்டு,  பறந்­து­கொண்­டி­ருந்த  விமானத்­தி­லி­ருந்து குதித்தான். அதன்பின் என்ன நடந்­தது என்­பது இன்­று­வரை எவருக்கும் புரி­யாத புதி­ராக உள்­ளது.

அது அமெ­ரிக்­காவின் நோர்த்வெஸ்ட் ஓரியன்ட் எயாலைன்ஸ் நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான விமானம். போயிங் 727:100 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் நோர்த்வெஸ்ட் ஓரியன்ட் 305 எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது.

85_nadu1.jpg1971 நவம்பர் 24 ஆம் திகதி பிற்­பகல் 2.50 மணிக்கு , அமெரிக்­காவின் ஓரிகன்ட் மாநி­லத்­திலுள்ள போர்ட்லேண்ட் நக­ரி­லிருந்து ெவாஷிங்டன் மாநி­லத்­தி­லுள்ள சியாட்டில் நக­ருக்கு அந்த விமானம் புறப்­பட்­டது. விமா­னத்தில் மூன்­றி­லொரு பங்கு ஆச­னங்­களே நிறைந்­தி­ருந்­தன. 37 பய­ணி­களும் 6 ஊழி­யர்­களும் அதில் இருந்­தனர்.

 

தன்னை டேன் கூப்பர் எனக் கூறிக்­கொண்ட அந்த மனிதன், விமா­னத்தில் பின்­ப­கு­தி­யி­லுள்ள ஆச­ன­மொன்றில் அமர்ந்­தி­ருந்தான். (இவன் தற்­போது டி.பீ. கூப்பர் என்ற பெய­ரி­லேயே குறிப்­பி­டப்­ப­டு­கிறான். அதற்­கான கார­ணத்தை பின்னர் பார்க்­கலாம்) சிகரெட் ஒன்றை பற்­ற­வைத்­துக்­ கொண்டான். விஸ்­கியும் சோடாவும் தரு­மாறு விமான சிப்­பந்­தி­களிடம் கோரினான்.

 

85db23001.jpgசிறிது நேரத்­தின்பின், விமா­னத்தின் பின்­க­த­வுக்கு அரு­கி­லுள்ள ஆசனமொன்றில் அமர்ந்­தி­ருந்த விமானப் பணிப்­பெண்­ணான புளோரன்ஸ் ஷப்ன­ரிடம் மடிக்­கப்­பட்ட துண்­டுக்­கா­கி­த­மென்றை நீட்டினான் கூப்பர்.

 

தனி­மையில் வாடும் ஆண்கள் சிலர், விமா­னத்தில் பய­ணம் ­செய்யும்போது, அழ­கிய விமானப் பணிப்­பெண்­களுக்கு தமது தொலை­பேசி இலக்­கத்தை கொடுத்து அவர்­க­ளுடன் தொடர்பை ஏற்­ப­டுத்த விரும்­பு­வது புது­மை­யா­ன­தல்ல.

 

எனவே, தன்­னிடம் கூப்பர் துண்­டுக்­கா­கி­தத்தை கொடுத்­த­போது, யாரோ ஒரு வர்த்­தகர் தனது தொலை­பேசி இலக்­கத்தை தரு­கிறார் போலும் என புளோரன்ஸ் எண்­ணினார். அதை அந்த நபரின் முகத்­துக்கு நேரே வீசி எறிய முடி­யாதே. அதனால் அக்காகிதத்தை பிரித்­துக்­கூடப் பார்க்காமல் தனது பணப்­பைக்குள் போட்­டுக்­கொண்டார் புளோரன்ஸ். ஆனால், இதை அவதானித்த கூப்பர், அந்த விமானப் பணிப்­பெண்ணை அழைத்து மெது­வான குரலில், “மிஸ், நீங்கள் அந்த குறிப்பை பார்ப்­பது நல்லது. என்­னிடம் ஒரு குண்டு உள்ளது” என்றான்.

பீதி தொற்­றிக்­கொள்ள, அக்­கா­கி­தத்தை எடுத்துப் பிரித்தார் புளோரன்ஸ். அது தொலை­பேசி இலக்கம் எழு­தப்­பட்ட காகி­த­மல்ல. தெளி­வாக அது தட்­டச்சு செய்­யப்­பட்­டி­ருந்தது.

"எனது பெட்­டியில் ஒரு குண்டு உள்ளது. தேவை­யானால் அதனை நான் பயன்­ப­டுத்­துவேன். நீங்கள் எனக்கு அருகி­லுள்ள ஆச­னத்தில் அமர்ந்­து­கொள்ள வேண்டும். நீங்கள் கடத்­தப்­பட்டுள்­ளீர்கள்." - இதுதான் அந்த காகி­கத்தி­லி­ருந்த வார்த்­தை­களின் தமிழாக்கம்.

 

 

விப­ரீ­தங்­களை தவிர்ப்­ப­தற்­காக, கூப்பர் கூறி­ய­படி அவ­னுக்கு அரு­கிலுள்ள ஆச­னத்தில் அமர்ந்­து­கொண்டார் புளோரன்ஸ். ஆனால் தைரி­யத்தை வர­வ­ழைத்­துக்­கொண்டு, குண்டை பார்க்க முடி­யுமா என மெது­வாக கூப்­ப­ரிடம் அவர் கேட்டார். பெட்­டியை திறந்து காட்­டினான் கூப்பர். அதில் வெடிப்­பொருட்கள் போன்ற 8 சிவப்பு உருளைகள் காணப்­பட்­டன. அவை வயர்­க­ளுடன் இணைக்­கப்­பட்டி­ருந்­தன. பெரிய பெற்­றரி ஒன்றும் காணப்­பட்­டது.

அந்தப் பெட்­டியை மூடி­வைத்த கூப்பர். தனது நிபந்தனைகளை முன்­வைத்தான். தனக்கு 2 இலட்சம் டொலர் பணம் வேண்டும். நான்கு பர­சூட்கள் வழங்­கப்­படவேண்டும். விமானம் ஷியாட்டில் நகரை அடைந்­த­வுடன் விமா­னத்­துக்கு எரி­பொருள் நிரப்­பு­வ­தற்­காக எரி­பொருள் வண்­டி­யொன்று நிறுத்­தி­வைக்­கப்­பட வேண்டும் என்­பன கூப்­பரின் பிர­தான நிபந்தனைகள் விமா­னி­களின் அறைக்குச் சென்ற புளோரன்ஸ், கூப்­பரின் நிபந்தனைகள் தொடர்­பாக விமா­னி­க­ளுக்கு தெரி­வித்தார்.

 

 

இவ்­வி­ட­யத்தை விமா­னி­யான வில்லியம் ஸ்கொட், ஷியாட்டில் டக்­கோமா விமானப் போக்­கு­வ­ரத்துப் பிரிவுக்கு அறி­வித்தார். அவர்கள் மூலம் மத்­திய, மாநில அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் கொடுக்­கப்­பட்­டது.  "சிறு தொழில்­நுட்ப சிக்கல் கார­ண­மாக" ஷியாட்டில் நகரை விமானம் அடை­வதில் சற்று தாமதம் ஏற்­பட்­டுள்­ள­தாக ஏனைய 36 பய­ணி­க­ளுக்கும் தெரி­விக்­கப்­பட்­டது.
கூப்பர் கோரிய கப்­பப்­ப­ணத்தை கொடுப்­ப­தற்கு நோர்த்வெஸ்ட் ஓரியன்ட் விமான சேவை நிறு­வ­னத்தின் தலை­வ­ரான  டொனால்ட் நைரோப் சம்­ம­தித்தார்.

 

 

85dba.jpgகூப்பர் கோரிய கப்­பப்­பணம், பர­சூட்­க­ளுடன் பொலிஸார் தயா­ரா­கு­வ­தற்கும்  அவ­சர சேவைப் பிரி­வி­னரை திரட்­டு­வதற்கும் அவ­காசம் அளிப்­ப­தற்­காக சுமார் இரு மணித்­தி­யா­லங்கள் வானில் வட்­ட­மிட்­டுக்­கொண்­டி­ருந்­தது அவ்­வி­மானம்.  

 

எவ்.பி.ஐ. மற்றும் -ஷியாட்டில் பொலிஸ் அதி­கா­ரிகள் ஷியாட்டில் நக­ரி­லுள்ள பல வங்கி­க­ளி­லி­ருந்து பணத்தை திரட்­டினர். 20 டொலர் தாள்கள் 10,000 நோட்­டுகள் சேரிக்­கப்­பட்­டன. அவை ஒவ்­வொன்றும் மைக்­ரோ­பி­லி­மினால் படம்­பி­டிக்­கப்­பட்டன.

 

 

இந்த பண நோட்­டுகள் கட்­டு­க­ளாக கட்­டப்­பட்­டன. அதி­கா­ரிகள் ஏற்­பாடு செய்­தி­ருந்த இரா­ணுவ பர­சூட்­களை   கூப்பர் ஏற்­றுக்­கொள்ள மறுத்தான். தனக்கு சிவி­லி­யன்கள் பயன்­ப­டுத்தும் பர­சூட்கள் வேண்டும் எனக் கோரினான்.  அதை­ய­டுத்து உள்ளூர் ஸ்கைடைவிங் பயிற்சிப் பாட­சா­லை­யொன்­றி­லி­ருந்து பர­சூட்­களை சேக­ரித்­தனர் ஷியாட்டில் பொலிஸார்.

கூப்­பரின் கோரிக்கை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக மாலை 5.24 மணிக்கு கூப்­ப­ருக்கு தக­வல்­கொ­டுக்­கப்­பட்­டது. 5.39 மணிக்கு ஷியாட்டில் டக்­கோமா விமான நிலை­யத்தில் விமானம் தரை­யி­றங்­கி­யது. அதை தனி­ய­மை­யான ஓரிடத்துக்கு நகர்த்தி செல்­லு­மாறு கூப்பர் உத்­த­ர­விட்டான். விமான சேவை நிறு­வ­னத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் பணத்­தையும் பர­சூட்­க­ளையும் விமா­னத்தின் பின்­புற படி­கட்­டுகள் வழி­யாக கூப்­பரிடம் சமர்­பித்தார். அதன்பின் பய­ணிகள், புளோரன்ஸ் ஷப்னர், மூத்த விமான சிப்­பந்­தி­யான அலிஸ் ஹன்கொக் ஆகி­யோரை கூப்பர் விடு­தலை செய்தான்.

 

 

எரி­பொருள் நிரப்­பப்­ப­டும்­போது தனது அடுத்த பய­ணத்­திட்டம் குறித்து விமா­னி­க­ளிடம் கூப்பர் விப­ரித்தான். தென்­கி­ழக்கு திசையில் மெக்­ஸிகோ நோக்கி செல்லவேண்டும். முடிந்­த­ளவு குறைந்த பட்ச வேகத்தில் (சுமார் 100 நொட்ஸ், அதா­வது மணித்­தி­யா­லத்­துக்கு 190 கி.மீ. வேகத்தில்) 10,000 அடி­க­ளு­ககு குறைந்த உய­ரத்தில் விமானம் பறக்க வேண்டும் என்றான்.

 

 

கூப்­பரின் உத்­த­ர­வு­களை கடுப்­புடன் கேட்­டுக்­கொண்­டி­ருந்த இணை விமானி வில்­லியம் ரட்­டாக்ஸெக், "இந்த விமானம் ஒரே தட­வையில் அதிக பட்­ச­மாக பறக்­கக்­சூ­கூ­டிய தூரம் 1000 மைல்கள் (1600 கி.மீ.) தான். எனவே மெக்­ஸிகோ சிட்­டிக்கு செல்­வ­தற்­குமுன் மீண்டும் எரி­பொருள் நிரப்ப வேண்­டி­யிருக்கும் எனக் கூறினார்.

கலந்­து­ரை­யா­டலின் பின் அமெரிக் காவின் நெவேடா மாநி­லத்தின் ரெனோ நகரில் மீண்டும் எரி­பொருள் நிரப்ப இணக்கம் காணப்­பட்­டது.

 

 

இறு­தியில், மீண்டும் விமானம் புறப்­ப­டும்­போது, பின்­புற கதவு திறந்­தி­ருப்­ப­துடன் படி­கட்டும் கீழி­றக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் என கூப்பர் கோரினான். அது பாது­காப்­பா­னது அல்ல என விமான சேவை நிறு­வனம் ஆட்­சே­பித்­தது. ஆனால் அது பாது­காப்­பா­ன­துதான் என கூப்பர் கூறினான்.

எனினும் இது தொடர்­பாக விவா­திப்­ப­தை­விட விமானம் பறக்­கும்­போது தானே படிக்­கட்டை கீழி­றக்கி கொள்­ளலாம் என அவன் தீர்­மா­னித்­துக்­கொண்டான்.

இரவு 7.40 மணிக்கு மீண்டும் விமானம் புறப்­பட்­டது. கூப்பர், விமா­னிகள் இருவர்,  ஒரு விமானப் பணிப்பெண், விமான பொறி­யி­ய­லாளர் ஒருவர் ஆகியோர் மாத்­தி­ரமே விமா­னத்தில் இருந்­தனர். கூப்­பரின் பார்­வைக்குத் தென் படாதவகையில், அமெ­ரிக்க விமானப் படையின் இரு யுத்த விமா­னங்கள் நோர்த்வெஸ்ட் ஓரியன்ட் 305 விமா­னத்தை பின் தொடர்ந்தன. பிளைட் 305 விமானத்துக்கு மேலாக ஒன்றும் கீழாக ஒன்றுமாக விமானப்படை விமானங்கள் பறந்துகொண்டிருந்தன.

 

 

விமானிகள், ஊழியர்கள் இருவரையும் விமானிகளின் அறைக்குள் கதவை மூடிவிட்டு இருக்குமாறு கூறிவிட்டு விமானத்தின் பின்புறம் சென்றான் கூப்பர்.  இரவு 8.00 மணியளவில் விமானி அறைக்குள் எச்சரிக்கை விளக்குள் ஒளிர்ந்தன. உள்ளே காற்று வீசியது.  விமானத்தின் பின்புற படிகட்டு திறக்கப்பட்டுவிட்டது என்பதை அவை உணர்த்தின. உதவி வழங்குவதற்கு தயாரென விமானத்தின் இண்டர்கொம் மூலம் ஊழியர்கள் அறிவித்தனர்.

 

ஆனால் அதை கூப்பர் நிராகரித்தான். சிறிது நேரத்தில் கூப்பர் விமானத்திலிருந்து காணாமல் போனான். பின்னாளில் விமானக் கடத்தல்காரர்கள் சிலருக்கு மானசீக குருவானன் டிபீ. கூப்பர். அவனுக்கு என்ன நடந்தது? யார் அவன்?

 

                                                (தொடரும்)

 

(-சத்ருகன்)

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=85&display=0#sthash.L6NHoYgj.dpuf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.