Jump to content

2014 IPL 7 செய்திகளும்... கருத்துக்களும்


Recommended Posts

ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது!

 

டெல்லி: ஏழாவது ஐ.பி.எல். போட்டிகளை துபாய், வங்காளதேசம், இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

 

12-ipl-7-600_zps56fc2007.jpg

 

 

 

 

 

 

16வது லோக்சபா தேர்தலும், 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் ஒரே நேரத்தில் வருவதால், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் தேர்தல் முடியும் வரை அதற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது! இதனால் 7-வது ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது, எந்த தேதியில் நடத்துவது என்பதில் குழப்பம் நீடித்தது. இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் போட்டிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது பி.சி.சி.ஐ. 7-வது ஐ.பி.எல். போட்டியை துபாய், வங்காளதேசம், இந்தியாவில் நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐ.பி.எல். போட்டி முதலில் துபாயில் தொடங்கும் என்றும், பின்னர் போட்டிகள் வங்காள தேசத்தில் நடைபெறும் என்றும் இறுதியாக போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.in/news/sports/ipl-7-will-be-held-uae-bangladesh-india-195448.html

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply

எமிரேட்சில் பிரிமியர் தொடர் துவக்கம்
மார்ச் 12, 2014.

 

 

புதுடில்லி: ஏழாவது பிரிமியர் தொடர் வரும் ஏப்., 16ல் ஐக்கிய எமிரேட்சில் ஆரம்பமாகிறது. கடைசி கட்ட போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும்.

ஏழாவது பிரிமியர் தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது(ஏப்.,16–ஜூன் 1). இதே காலக்கட்டத்தில் லோக்சபா தேர்தல் நடப்பதால், போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், இந்தியா என 3 நாடுகளில் பிரிமியர் தொடரை நடத்த, இந்திய கிரிக்கெட் (பி.சி.சி.ஐ.,) போர்டு முடிவு செய்துள்ளது. இதன்படி, முதல் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஏப்., 16ல் ஆரம்பமாக உள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் வெளியிட்ட செய்தி:

ஏழாவது பிரிமியர் தொடரை 3 கட்டமாக நடத்த முடிவு செய்துள்ளோம். ஏப்ரல் 16–30 வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இங்கு குறைந்தபட்சம் 16 போட்டிகள் நடக்கும். மே 1–12 வரை உள்ள நாட்களில், மத்திய அரசு பாதுகாப்பு தந்தால், இந்தியாவில் போட்டிகள் நடத்தப்படும். ஒருவேளை, அனுமதி கிடைக்காவிடில், வங்கதேசத்தில் அரங்கேறும். கடைசியாக மே 13ம் தேதி முதல், ஜூன் 1 வரை, ‘பிளே–ஆப்’ உட்பட மீதமுள்ள போட்டிகள் இந்தியாவில் கண்டிப்பாக நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மே 16ல் எந்தவித போட்டியும் இருக்காது. தொடருக்கான முழுமையான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                        

இரண்டாவது முறை                       

பிரிமியர் தொடர் வேறு இடத்தில் நடப்பது இது இரண்டாவது முறை. ஏற்கனவே 2009ல் லோக்சபா தேர்தல் காரணமாக, தொடர் முழுவதும் தென் ஆப்ரிக்காவில் நடந்தது.       

போட்டிகள் குறைப்பு                       

கடந்த முறை 9 அணிகள் தொடரில் பங்கேற்றன. தவிர, 54 நாட்கள் 76 போட்டிகள் அரங்கேறின. சில மாதங்களுக்கு முன் புனே அணி நீக்கப்பட்டது. இதனால், இந்த ஆண்டு 47 நாட்களாகவும், போட்டிகள் 60ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.

ஐ.சி.சி., வரவேற்பு           

பி.சி.சி.ஐ., முடிவு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறுகையில்,“ ஐக்கிய அரபு எமிரேட்சில் 2013ல் ‘டுவென்டி-20’ உலக கோப்பை தகுதிச் சுற்று, இந்த ஆண்டு 19வயது உலக கோப்பை தொடர்கள் வெற்றிகரமாக நடந்தது. இப்போது பிரிமியர் தொடரின் முதற்கட்ட போட்டிகளை நடத்துவது, இங்குள்ள மக்களுக்கு நல்ல செய்தி. இது வரவேற்கத்தக்கது,” என்றார்.

வாழ்நாள் தடை     

பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘‘கடந்த தொடரில் நடந்த ‘ஸ்பாட்–பிக்ஸிங்’ சூதாட்டத்தை தொடர்ந்து, இம்முறை வீரர்கள் மற்றும் ஒவ்வொரு அணிகளின் நிர்வாகத்திற்கும், கடுமையான சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏழாவது பிரிமியர் லீக் தொடரில் நடக்கும் ஒவ்வொரு போட்டியும், பி.சி.சி.ஐ.,யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு சார்பில் தீவிரமாக கண்கானிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வீரர்கள் மற்றும் அணிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும்,’’ என்றார்.

http://sports.dinamalar.com/2014/03/1394643721/PremierLeagueCricketUAEBangladeshIndia.html

Link to comment
Share on other sites

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித் தலைவராக வொட்சன்
செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2014

 

ராஜஸ்தான் அணித் தலைவராக ஷேன் வொட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் தொடர் 2008ஆம் ஆண்டு ஆரம்பித்தது முதல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தொடர்ந்து விளையாடி வருகின்றார் ஷேன் வொட்சன். சர்வதேசப் போட்டிகளின் மீள் வருகைக்கும் இந்த அணியும் ஐ.பி.எல் தொடரும் முக்கிய காரணமாக வொட்சனுக்கு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

ராகுல் டிராவிட் சகலவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகியமையே இந்த பதவி அமுல்ப்படுத்தலுக்கு காரணமாகும். ராகுல் டிராவிட் முகாமைத்துவத்தில் ஈடுபடவுள்ளார். ஆலோசகராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு இது நல்ல வாய்ப்பு எனவும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தொடர்ச்சியாக தனக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கி வருவதாகவும், மீண்டும் ஒரு தடவை 2008ஆம் ஆண்டுபோல் வெற்றியை நோக்கி அணியை வழி நடத்தி செல்வேன் என்றும் ஷேன் வொட்சன் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/102790-2014-03-11-01-51-41.html

Link to comment
Share on other sites

மார்ச் 17, 2014.

 

புதுடில்லி: பிரிமியர் லீக் தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி நியமிக்கப்பட்டார்.

ஏழாவது பிரிமியர் லீக் தொடர் வரும் ஏப்., 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கவுள்ளது. இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய ‘டுவென்டி–20’ அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி, ரூ. 3.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். முன்னதாக இவர், சென்னை அணியில் விளையாடினார். ஆனால் இவருக்கு லெவன் அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரை தவிர ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் (ரூ. 6.50 கோடி), ஷான் மார்ஷ் (ரூ. 2.20 கோடி), மேக்ஸ்வெல் (ரூ. 6 கோடி), இந்தியாவின் சேவக் (ரூ. 3.20 கோடி), புஜாரா (ரூ. 1.90 கோடி) ஆகியோரும் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற குழப்பம் நீடித்தது. சேவக் அல்லது ஜார்ஜ் பெய்லி கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. முடிவில் ஜார்ஜ் பெய்லிக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆஸ்திரேலிய வீரரானார். முன்னதாக கில்கிறிஸ்ட் கேப்டனாக செயல்பட்டார்.

இதுகுறித்து பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறுகையில், ‘‘பஞ்சாப் அணி நிர்வாகம் ஒருமனதாக ஜார்ஜ் பெய்லியை கேப்டனாக தேர்வு செய்தது. இவர், ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலிய உள்ளூர் அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். இந்த அனுபவம், பிரிமியர் லீக் தொடரில் கைகொடுக்கும்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/03/1395071458/BaileycaptainKingsXIPunjab.html

Link to comment
Share on other sites

டில்லி அணி கேப்டன் பீட்டர்சன் *தினேஷ் கார்த்திக் துணைக்கேப்டன்
மார்ச் 18, 2014.

 

புதுடில்லி: டில்லி அணியின் கேப்டனாக கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டார். துணைக்கேப்டன் பொறுப்பை தினேஷ் கார்த்திக் பெற்றார்.

ஏழாவது பிரிமியர் ‘டுவென்டி–20’ தொடர் வரும் ஏப்ரல் 16ம் தேதி துவங்க உள்ளது. இதில் பங்கேற்கும் டில்லி அணியின் கேப்டனாக இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டார்.

இவர், கடந்த 2012ல் டில்லி அணிக்காக 8 போட்டிகளில் பங்கேற்று 305 ரன்கள் குவித்தார். கடந்த தொடரில் காயம் காரணாக கலந்து கொள்ளவில்லை. இம்முறை நடந்த வீரர்கள் ஏலத்தில், பீட்டர்சனை ‘ஜோக்கர் கார்டு’ முறையில் ரூ. 9 கோடிக்கு டில்லி அணி தக்க வைத்தது.

டில்லி அணி நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்,‘ ஏழாவது பிரிமியர் தொடரில், எங்கள் அணி கேப்டனாக கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் துணைக்கேப்டனாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளார்,’’ என தெரிவிக்கப்பட்டது.

கெவின் பீட்டர்சன் கூறுகையில்,‘‘ கேப்டன் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இளம் வீரர்கள் அடங்கிய சிறப்பான அணியாக நாங்கள் உள்ளோம். பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனுடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி,’’ என்றார்.

கார்த்திக் மகிழ்ச்சி:

இம்முறை ரூ.12.5 கோடிக்கு டில்லி அணியால் தினேஷ் கார்த்திக் வாங்கப்பட்டார். இதுவரை 97 போட்டியில் விளையாடியுள்ள இவர் 1741 ரன்கள் எடுத்துள்ளார்.

கார்த்திக் கூறுகையில்,‘‘டில்லி அணியின் துணைக்கேப்டனாக நியமித்தது மகிழ்ச்சி. என்னால் முடிந்தளவுக்கு பங்களிப்பை தருவேன். தவிர, அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வேன்,’’ என்றார்.

கிறிஸ்டன் கூறுகையில்,‘‘பீட்டர்சனுடன் இணைந்து செயல்புரிவதை ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ளேன். தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/03/1395158006/DelhiDaredevilsKevinPietersencaptainKarthikdeputy.html

Link to comment
Share on other sites

அபுதாபியில் அதிரடி திருவிழா ஆரம்பம்
மார்ச் 19, 2014.

 

சென்னை: ஏழாவது பிரிமியர் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன.     

ஏழாவது பிரிமியர் தொடர் வரும் ஏப்., 16ல் துவங்கி, ஜூன் 1 வரை நடக்கவுள்ளது. இந்தியாவில் ஏப்., 7 முதல் மே 12 வரை 9 கட்டமாக லோக்சபா தேர்தல் நடப்பதால், இத்தொடருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என, மத்திய உள்துறை அமைச்சகம் கைவிரித்தது.

இதனால், போட்டிகள் நடத்தும் இடம், அட்டவணைகள் குறித்து இறுதி முடிவு செய்யப்படாமல் இருந்தது. இதுகுறித்து ஆலோசிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், பிரிமியர் அணி உரிமையாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்சில் பிரிமியர் தொடரின் முதற்கட்ட போட்டிகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.      

இதன்படி, ஏப்., 16 முதல் 30 வரையிலான முதல் பிரிவில், மூன்று இடங்களில் 20 போட்டிகள் நடக்கும். அதாவது, அபுதாபி, துபாயில் தலா 7, சார்ஜாவில் 6 போட்டிகள் நடக்கவுள்ளன. அபுதாபியில் துவங்கும் முதல் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணி, கோல்கட்டா அணியை சந்திக்கிறது.      

சென்னை அணி தனது முதல் போட்டியில் (ஏப்., 18), இங்கு பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. தவிர, கடந்த ஆண்டு 54 நாட்களில் 76 போட்டிகள் நடந்தன. இம்முறை புனே அணி விலகல், பொதுத்தேர்தல் காரணமாக, 47 நாட்களில் 60 போட்டிகள் மட்டும் நடக்கும்.     

அடுத்து எங்கே: இரண்டாவது கட்ட போட்டிகள் மே 1 முதல் 12 வரை வங்கதேசத்தில் நடத்தலாம் என, தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அரசு அனுமதிக்கும் பட்சத்தில், இவை இந்தியாவுக்கு மாற்றப்படும்.      

மூன்றாவது மற்றும் இறுதி கட்ட போட்டித்தொடர் மே 13 முதல் ஜூன் 1 வரை இந்தியாவில் நடத்தப்படும். இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும்.     

உலகம் சுற்றும் தொடர்     

கடந்த 2009ல் இந்தியாவில் நடந்த லோக்சபா தேர்தல் காரணமாக, பிரிமியர் தொடர் தென் ஆப்ரிக்காவில் முழுமையாக நடந்தது. இதில் பெருமளவில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டதாக வழக்கு பதியப்பட்டது.      

தவிர, ஏழாவது தொடரை நடத்த, தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு அதிக பணம் கேட்டதாக தெரிகிறது. இதுபோன்ற காரணத்தால், இம்முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம் என, பிரிமியர் தொடர் உலகம் சுற்றுகிறது.     

14 ஆண்டுக்குப் பின்     

சூதாட்ட புக்கிகளின் சொர்க்கபுரி துபாய், சார்ஜா திகழ்கிறது. கடந்த 2000ல் இந்திய கிரிக்கெட்டில் சூதாட்டம் புயல் வீசியது. இதில் சிக்கிய தென் ஆப்ரிக்க அணியின் அப்போதைய கேப்டன் குரோன்யே உள்ளிட்டோர் பிடிபட்டனர்.      

பின் சார்ஜாவில் இந்திய அணி பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.      

கடந்த 2006ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அபுதாபியில் மட்டும் விளையாடின. இப்போது 14 ஆண்டுகள் கழித்து முதன் முறையாக இந்திய வீரர்கள் துபாய், சார்ஜாவில் விளையாட உள்ளனர்.

 

http://sports.dinamalar.com/2014/03/1395245621/IPLCricketSchedule.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது : நீதிமன்றம் பரிந்துரை

 

நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று பிசிசிஐக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள், நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அனுமதிகக் கூடாது என்று ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிசிசிஐக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்றும் இவருக்கு பதிலாக சுனில் கவாஸ்கரை இடைக்கால தலைவராக நியமிக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் மேற்குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவை நாளை நீதிபதிகள் பிறப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் தோனி மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/?q=node/362470

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குத் தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்

 

 

  டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு ஐபிஎல் 7வது தொடரில் பங்கேற்பதில் எந்தத் தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின்போது இந்த இரு அணிகளும்தான் ஸ்பாட் பிக்ஸிங், மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கின. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சிக்கி கைதானார்கள். அதேபோல சென்னை அணியின் குருநாத் மெய்யப்பனும் பெருமளவில் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நடிகர் வின்டு உள்ளிட்டோர் போலீஸில் வாக்குமூலம் அளித்திருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குத் தடை இல்லை- சுப்ரீம் கோர்ட் இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவும் சூதாட்டடத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் இரு அணிகள் மீதும் கடுமையான புகார்கள் உள்ள காரணத்தால் அவர்களை 7வது ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று நேற்று உச்சநீதிமன்றம் தனது பரிந்துரையில் கூறியிருந்தது. ஆனால் அப்படிச் செய்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று உச்சநீதிமன்றத்திடம் கிரிக்கெட் வாரியம் தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இரு அணிகளுக்கும் தடை இலலை என்று அறிவித்தது. மேலும், 7வது ஐபிஎல் தொடருக்கும் தடை விதிக்கப்படாது என்றும், இந்தத் தொடரில் புதிய வீரர்கள் சேர்க்கப்படுவதற்கும் ஆட்சேபனை கிடையாது என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/sports/no-ban-csk-rr-rules-sc-196682.html

Link to comment
Share on other sites

மேலும் ஒரு தீர்ப்பில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களுக்கு கிரிக்கட் வாரியத்தில் தலைமைப் பதவி வழங்கவேண்டும் என நீதிபதிகள் பரிந்துரைத்தார்களாம். :o இப்படிப்பட்ட கூத்துக்கள் இந்தியாவில்தான் நடக்கும். :blink:

Link to comment
Share on other sites

மேலும் ஒரு தீர்ப்பில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களுக்கு கிரிக்கட் வாரியத்தில் தலைமைப் பதவி வழங்கவேண்டும் என நீதிபதிகள் பரிந்துரைத்தார்களாம். :o இப்படிப்பட்ட கூத்துக்கள் இந்தியாவில்தான் நடக்கும். :blink:

 

கவாஸ்கரை  இடைக்கால தலைவராக  சுப்ரீம்கோர்ட் இன்று அறிவித்து உள்ளது.

Link to comment
Share on other sites

கவாஸ்கரை இடைக்கால தலைவராக சுப்ரீம்கோர்ட் இன்று அறிவித்து உள்ளது.

ஒரு தனி நபரை இவ்வாறு ஒரு அரசு சார்பற்ற அமைப்புக்கு இடைக்கால தலைவராக ஒரு நீதிமன்றம் அறிவிப்பது எந்தச்சட்டத்தின் அடிப்படையில்??

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.,-பொறுப்பு கவாஸ்கரிடம் - சீனிவாசன் பொறுப்பும் பறித்தது கோர்ட்

 

 

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச்பிக்ஸிங் வழக்குகளில் நியாயமான விசாரணைக்கு வழிவகை ஏற்படுத்தும் வகையில சுப்ரீம் கோர்ட் தனது அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. இன்றைய உத்தரவின்படி பி.சி.சி.ஐ., சேர்மன் பொறுப்பில் இதன் 5 துணைத்தலைவர்களில் ஒருவர் இடைக்கால தலைவராக செயல்படுவார் என்றும் , குறிப்பாக ஐ.பி.எல்., விவகாரங்களை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கவாஸ்கர் கவனிப்பார் என்றும் அதே நேரத்தில் பி.சி.சி.ஐ., விவகாரத்தில் அவர் தலையிட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் பெரும் சூதாட்டம் நடந்தது. சில விளையாட்டு வீரர்கள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் இந்த மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் மும்பை போலீசார் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத்சந்திலா, அங்கீத்சவான் ஆகிய 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ராஜஸ்தான் அணி உரிமையாளர்ராஜ்குந்த்ரா, சென்னை அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட் கண்காணிப்பில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சீனிவாசன் பி.சி.சி.ஐ., சேர்மன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் இது ஏற்க முடியாது என்று வாதிட்டனர்.

இந்நிலையில் தோனியை மையமாக வைத்து ஒரு புயல் புறப்பட துவங்கியது சால்வே என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார் . இந்த மனுவில் இந்திய அணி மற்றும் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து வரும் தோனியும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணையில் வக்கீல் நீதபதி முன் வைத்த வாதுரையில், தோனிக்கு தெரிந்து சில விஷயங்கள் நடந்திருக்கிறது. தோனி மேட்பிக்ஸிங் குறித்து விசாரணக்கமிட்டியிடம் தவறான தகவலை கொடுத்துள்ளார். இதனால் இவரும் ஒரு குற்றவாளியே . இவர் முட்கல் கமிட்டி முன்பு தனது வாக்குமூலத்தை அளிக்க வேண்டும். மேலும் குருநாத்மெய்யப்பன் மீதான நடவடிக்கையில் சீனிவாசன் இடையூறாக உள்ளது. என்றும் கூறினார்.

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியை சஸ்பெண்ட் செய்ய நேற்று யோசனை தெரிவித்தனர். இது தொடர்பான பி.சி.சி.ஐ விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கான உத்தரவை நாளை ( இன்று ) பிறப்பிப்போம் என்றும் கூறினர்.

நீதிபதிகள் இன்று தங்களது உத்தரவை பிறப்பித்தனர். இந்த உத்தரவில் , பி.சி.சி.ஐ., சேர்மனாக இருக்கும் சீனிவாசன் பதவி பறிக்கப்பட்டது.

ஐ.பி.எல், தொடர்பான பணிகள் முழுமையாக கவனிக்க சுனில் சுனில் கவாஸ்கர் நியமிக்கப்படுகிறார். மேலும் இந்தியா சிமென்ட்ஸ் ஊழியர்கள் பி.சி.சி.ஐ யில் இருந்து முழுமையாக விலகி கொள்ள வேண்டும். பி.சி.சி.ஐ., சேர்மன் பொறுப்பில் துணைத்தலைவர்களில் ஒருவர் இந்த பொறுப்பை கவனித்து கொள்ள வேண்டும். விசாரணை முடியும் வரை இது நடைமுறையில் இருக்கும். ( இதன்படி சீனிவாசன் சேர்மன் பொறுப்பை இழந்தார்) . மேலும் சென்னை, ராஜஸ்தான் அணி ஐ.பி.எல்.,போட்டியில் பங்கேற்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=943128


ஒரு தனி நபரை இவ்வாறு ஒரு அரசு சார்பற்ற அமைப்புக்கு இடைக்கால தலைவராக ஒரு நீதிமன்றம் அறிவிப்பது எந்தச்சட்டத்தின் அடிப்படையில்??

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் பதவிக்கு கவாஸ்கரின் பெயரை ஏன் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்பது தொடர்பாக சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. உச்சநீதிமன்ற பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி ஏ.கே. பட்நாயக்தான், கவாஸ்கர் பெயரை வலியுறுத்தி அவரை இடைக்காலத் தலைவராக அறிவித்துள்ளார். நீதிபதி பட்நாயக் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/revealed-how-gavaskar-s-name-came-up-supreme-court-196720.html

 

இந்த செய்தியை பாருங்கள் இசை, நீதிபதி பட்நாயக் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரராம்.

 

இதை இங்கு முழுமையாக இணைக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

கேப்டன் பதவி வேண்டாமய்யா.,'- தோனி , சென்னை அணியில் இருந்து விலக முடிவு

 

 

சென்னை: ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி பெரும் கலக்கத்தை சந்தித்து வருகிறது , இதன் அடுத்தக்கட்ட காட்சியாக சென்னை அணியின் கேப்டன் தோனி தன்னை விடுவிக்குமாறு இந்த அணியின் நிர்வாகிகளில் ஒருவரான சீனிவாசனிடம் கோரியுள்ளார். இதனையடுத்து இந்த அணியில் இருந்து அவர் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பி.சி.சி.ஐ., சேர்மன் பொறுப்பில் இதன் 5 துணைத்தலைவர்களில் ஒருவர் இடைக்கால தலைவராக செயல்படுவார் என்றும் , குறிப்பாக ஐ.பி.எல்., விவகாரங்களை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கவாஸ்கர் கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் பெரும் சூதாட்டம் நடந்தது. சில விளையாட்டு வீரர்கள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் இந்த மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் மும்பை போலீசார் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத்சந்திலா, அங்கீத்சவான் ஆகிய 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ்குந்த்ரா, சென்னை அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட் கண்காணிப்பில் நடந்து வருகிறது.

 

இந்நிலையில் தோனியை மையமாக வைத்து ஒரு புயல் புறப்பட துவங்கியது. சால்வே என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார் . இந்த மனுவில் தோனிக்கு தெரிந்து சில விஷயங்கள் நடந்திருக்கிறது. தோனி மேட்ச்பிக்ஸிங் குறித்து விசாரணைக் கமிட்டியிடம் தவறான தகவலை கொடுத்துள்ளார். குருநாதன் மெய்யப்பனை காப்பாற்றும் வகையில் செயல்படுகிறார். இதனால் இவரும் ஒரு குற்றவாளியே என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணி ஐ.பி.எல்., தொடரில் வெளியேற்ற நீதிபதிகள் முடிவு செய்தவனர். ஆனால் விளையாட்டு ரசிகர்களின் ஆவலை கருத்தில் கொண்டு சஸ்பெண்ட் செய்யவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தோனி சென்னை அணியில் இருந்து விலகிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

போனில் தோனி பேச்சு : இது தொடர்பாக டாக்காவில் இருக்கும் தோனி, சீனிவாசனிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதில் தமது பெயருக்கு களங்கம் ஏற்படுவது பெரும் கவலை அளிக்கிறது. இதனால் நான் பெரிதும் மனதளவில் பாதிக்கப்ட்டு வருகிறேன். எனவே சென்னை அணி கேப்டன் பொறுப்பில் இருந்து என்னை விடுவியுங்கள் என்று கூறினாராம். இந்தியா கிமென்ட்ஸ்சிலும் தமக்கு எவ்வித பொறுப்பும் வேண்டாம் என்றும் கேட்டுள்ளார். இது குறித்து சீனிவாசன் முடிவை விரைவில் தெரிவிப்பதாக கூறினாராம். இதனால் தோனி சென்னை அணியில் தொடர்ந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றே சென்னை வட்டாரம் தெரிவிக்கிறது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=943843

Link to comment
Share on other sites

ஏற்கனவே மதராசி என்று இளக்காரம் ஹிந்தியருக்கு.. அதுக்குள்ளை இது வேறையா??

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மைக் ஹஸ்சியிடமிருந்து சீரான பேட்டிங்கை கற்றுக் கொள்வேன் -ரோகித் சர்மா

ஞாயிறு, 13 ஏப்ரல் 2014

 

 

நெருக்கடிகளை சமாளித்து தொடர்ச்சியாக ரன் குவிப்பது எப்படி என்ற யுக்தியை மைக் ஹஸ்சியிடம் இருந்து கற்றக் கொள்ள விரும்புவதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந்தேதி அபுதாபியில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பட்டத்தை தக்க வைத்துக் கொள்வதில் தீவிர முனைப்பு காட்டி வரும் மும்பை அணியில் கடந்த ஆண்டு விளையாடிய சச்சின் தெண்டுல்கர், ரிக்கிபாண்டிங் ஓய்வு பெற்று விட்டனர். புதிய ஏலத்தில் மிட்செல் ஜான்சன், வெய்ன் சுமித் இடம் மாறி விட்டனர். ஆனாலும் மைக் ஹஸ்சியின் வருகை மும்பை அணிக்கு பலம் சேர்க்கும். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரன் மழை பொழிந்த ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்சியை ரூ.5 கோடிக்கு மும்பை அணி வாங்கி இருக்கிறது.

 

http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-114041300005_1.html

Link to comment
Share on other sites

சர்ச்சையை கடந்து சாதிப்போம்: ரெய்னா நம்பிக்கை
ஏப்ரல் 13, 2014.

 

சென்னை: ‘‘சூதாட்டம் தொடர்பான சர்ச்சைகள், சென்னை அணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது,’’ என, ரெய்னா தெரிவித்தார்.

ஆறாவது பிரிமியர் லீக் தொடரில் வெடித்த சூதாட்ட சர்ச்சையில் சென்னை அணியின் சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினர். இது தொடர்பாக விசாரித்த நீதிபதி முத்கல் கமிட்டியிடம் சென்னை அணி கேப்டன் தோனி தவறான வாக்குமூலம் அளித்தததாக இன்னொரு சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், ஏழாவது பிரிமியர் லீக் தொடர் வரும் ஏப்., 16ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) துவங்குகிறது.

 

இதுகுறித்து சென்னை அணியின் ரெய்னா கூறியது: ஏழாவது பிரிமியர் லீக் தொடருக்கு சில புதிய வீரர்கள் எங்கள் அணியில் இணைந்துள்ளனர். பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித் உள்ளிட்டோரின் புதிய வரவால் பேட்டிங்கின் பலம் அதிகரித்துள்ளது. கேப்டன் தோனி அணிக்கு கூடுதல் வலு சேர்க்கிறார். இதேபோல வெஸ்ட் இண்டீசின் சாமுவேல் பத்ரி, சுழற்பந்துவீச்சின் பலத்தை அதிகரித்துள்ளார்.

 

சூதாட்ட சர்ச்சைகள் குறித்த செய்திகள் எங்கள் அணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. தற்போது எங்கள் கவனம் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி தேடித் தருவதில் மட்டுமே உள்ளது.கடந்த ஆறு தொடர்களில் சென்னை அணிக்காக விளையாடும் வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கும், அணி நிர்வாகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) ஆடுகளங்கள் குறித்து எவ்வித நெருக்கடியும் இல்லை. 2006ல் அபுதாபியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு.

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது என்னை பாராட்டிய அவர், பேட்டிங் குறித்து நிறைய ஆலோசனைகள் வழங்கினார். பிரிமியர் லீக் தொடரில் முழுத்திறமையை வெளிப்படுத்துவேன்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/04/1397404540/rainaiplchennai.html

Link to comment
Share on other sites

கெவின் பீட்டர்சன் சந்தேகம்
ஏப்ரல் 13, 2014.

 

புதுடில்லி: வலது கை விரலில் காயமடைந்த டில்லி அணி கேப்டன் கெவின் பீட்டர்சன், பெங்களூரு அணிக்கு எதிராக வரும் 17ம் தேதி நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.

 

ஏழாவது பிரிமியர் லீக் தொடருக்கான டில்லி அணியின் கேப்டனாக இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டார். கடந்த வாரம் டில்லி அணி வீரர்களோடு இணைந்த இவர், வலைப்பயிற்சியின் போது வலது கை விரலில் காயமடைந்தார். இதனால் இவர், பேட்டிங் பயிற்சியை தவிர்த்தார். டில்லி அணி தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை வரும் ஏப்., 17ம் தேதி எதிர்கொள்கிறது. இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இப்போட்டியில் பீட்டர்சன் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று டில்லி அணி வீரர்களுக்கு இடையில் பயிற்சி போட்டி நடக்கவுள்ளது. இதில் பீட்டர்சன் பங்கேற்று உடற்தகுதியை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுகுறித்து டில்லி அணியின் தலைமை அதிகாரி (சி.இ.ஓ.,) ஹேமந்த் கூறுகையில், ‘‘முதல் போட்டியில் பீட்டர்சன் விளையாடுவாரா எனத் தெரியவில்லை. நான், இன்று தான் அணியினரோடு இணைய உள்ளேன். அதன்பின் தான் உண்மை நிலவரம் தெரிய வரும். இன்று பயிற்சி போட்டி நடக்கிறது. இதில் இவரை பங்கேற்க வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தினால், நேரடியாக பிரிமியர் லீக் போட்டியில் பங்கேற்பார்,’’ என்றார்.

 

பீட்டர்சன் கூறுகையில், ‘‘வலைப்பயிற்சியின் போது காயமடைந்ததால், பேட்டிங் பயிற்சியை புறக்கணித்தேன். காயத்தினால் பெரிய அளவில் பாதிப்பு கிடையாது. இருப்பினும் பாதுகாப்புக்காக ‘பேண்டேஜ்’ சுற்றி உள்ளேன்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/04/1397404862/KevinPietersencricket.html

Link to comment
Share on other sites

ஏழாவது தொடரில் அதிசயம் நடக்குமா: கோஹ்லி எதிர்பார்ப்பு
ஏப்ரல் 13, 2014.

 

 

மும்பை: ‘‘கடந்த ஆறு பிரிமியர் தொடரில் பெங்களூரு அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏழாவது  தொடரில் கோப்பை வென்று சாதிக்கும்,’’ என, கேப்டன் விராத் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்தார்.

 

ஏழாவது பிரிமியர் லீக் தொடருக்கான முதற்கட்ட போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வரும் ஏப்., 16ம் தேதி துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள பெங்களூரு அணி, கடந்த ஆறு தொடர்களில் இரண்டு முறை (2009, 2011) பைனல் வரை சென்றது. ஆனாலும் கோப்பை வெல்ல முடியவில்லை.

இம்முறை விராத் கோஹ்லி தலைமையில்  சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுகுறித்து கோஹ்லி கூறியது: ஏழாவது பிரிமியர் லீக் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஏனெனில், தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், பிரிமியர் லீக் தொடரில் ‘ரிலாக்சாக’ விளையாடலாம். இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு நிறைய மகிழ்ச்சி காத்திருக்கிறது. இதனை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

ஒவ்வொரு முறையும் பெங்களூரு அணிக்கு கோப்பை வென்று தர முயற்சிப்போம். ஆனால் ஒருமுறை கூட கோப்பை வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம். இம்முறை அணியில் திறமையான வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முயற்சிப்போம்.

இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/04/1397404428/kohliindiaipl.html

Link to comment
Share on other sites

திக்க உதவிய பிரிமியர் தொடர்: மகிழ்ச்சியில் ரகானே
ஏப்ரல் 14, 2014.

 

 

 

புதுடில்லி: ‘‘தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, பிரிமியர் தொடர் தான் கைகொடுத்தது,’’ என, இந்திய வீரர் ரகானே தெரிவித்தார்.

இந்திய அணியின் இளம் வீரர் அஜிகின்யா ரகானே, 25. பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக (54 போட்டி, 1,316 ரன்கள்) விளையாடும் இவர், இந்திய அணியில் இடம் பெற்ற போதும், நீண்ட காலமாக விளையாடும் லெவனில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.

சமீபத்திய தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து தொடர்களை அடுத்து, டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடித்த ரகானே, ஒருநாள், ‘டுவென்டி–20’ அணியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து ரகானே கூறியது:

ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக அதிகப்படியான ரன்களை எடுத்துள்ளேன். இருப்பினும், பிரிமியர் தொடரில் தான், சர்வதேச வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் சந்தித்துள்ளேன். இந்த பவுலர்களின் பலம் என்ன, பலவீனம் என்ன, இவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது போன்ற, நல்ல திட்டங்கள், இத்தொடரில் தான் கிடைத்தது.

இது தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்களை துணிச்சலுடன் எதிர்கொள்ள, பெரிதும் நம்பிக்கை கொடுத்தது. இதனால் தான், தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து மண்ணில் நன்கு செயல்பட ஊக்கமாக அமைந்தது.

கடந்த ஆறாவது தொடரில் (18 போட்டி, 488 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை கொடுத்தது தான், இந்திய அணியில் களமிறங்க உதவியது. இதேபோல, இந்த ஆண்டும் சிறப்பான ஆட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளேன்.

இதற்காக, எனக்கு நானே நெருக்கடி கொடுத்துக் கொள்ள விரும்ப மாட்டேன். ராஜஸ்தான் அணியில் தரமான வீரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அணி எப்படி செயல்படும் என்ற விவரம் தெரியும் என்பதால், விரைவில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

கடந்த ஆண்டுகளில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு, இப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டது தான் முக்கிய காரணம்.

இவ்வாறு ரகானே கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/04/1397482631/RahaneIndianPremierLeagueCricket.html

Link to comment
Share on other sites

7 ஆவது இந்­தியன் பிரி­மியர் லீக் : மும்பை – கொல்­கத்தா இன்று பலப்­ப­ரீட்­சை

 

 

ஏழாவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) இருபது–-20 தொடர் இன்று அபு தாபியில் ஆரம்பமாகின்றது. நடப்பு சம் பியன் மும்பை இந்தியன்ஸ்-– கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான லீக் போட்டியுடன் அதிரடி நிறைந்த இந்த ஐ.பி.எல். இன் 7 ஆவது அத்தியாயம் களம் காணுகின்றது.
கடந்த ஆண்டு 6 ஆவது தொடரில் பூதாகரமாக வெடித்த சூதாட்டச் சர்ச்சை களுக்கு மத்தியிலும் அவை தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையிலும் இம்முறை இரு வேறு நாடுகளில் களம் காணவுள்ள 7 ஆவது தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூதாட்ட சர்ச்சைகள் காரணமாக இத்தொடரின் தொடக்க விழா, விருந்து பசார நிகழ்ச்சியாக நேற்று அபுதாபி நட் சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

உலக கிரிக்கெட் ரசிகர்களை தன்னகத்தே கட்டிப்போடும் விறுவிறுப்பும் அதிரடியும் நிறைந்த ஐ.பி.எல். தொடரின் 7 ஆவது அத்தியாயம் இன்று ஆரம்பமாகிறது.

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில் இம்முறை நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், பெங்களூர் ரோயல் சலென் ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டில்லி டேர்டெவில்ஸ், சண் ரைசர்ஸ் ஆகிய 8 அணிகள் களமிறங்குகின்றன.

இதனிடையே இம்முறை தொடர் இரு வேறு நாடுகளில் களம் காணுகின்றது. தொடர் நடைபெறும் குறித்த கால ப்பகுதியில் இந்திய பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதல் கட்டமும் இந்தியாவில் 2 ஆவது கட்டமுமாக தொடர் நடைபெறவுள்ளது.

இந்நிலையிலேயே தொடரின் முதல் கட்டப் போட்டிகள் இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகின்றன. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அங்கு நடைபெறவுள்ள இம் முதல் கட்ட போட்டிகளில் இன்று தொடரின் முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 14 ஆட்டங்கள் இருக்கும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஓப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இம்முறை ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 24 வீரர்கள் மட்டும் தக்கவைக்கப்பட ஏனைய வீரர்கள் அனைவரும் ஏலத்தில் விடப்பட்டனர். இதனால் ஒவ்வொரு அணியிலும் முன்பு விளையாடிய வீரர்கள் தற்போது வேறு அணியில் இடம் பெற்று உள்ளனர். எனவே வீரர்களின் மாற்றத்தால் இம்முறை ஐ.பி.எல். போட்டி முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

http://www.virakesari.lk/articles/2014/04/16/7-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%C2%AD%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E2%80%93-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%C2%AD%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AF%88

Link to comment
Share on other sites

அதிரடி திருவிழா ஆரம்பம்: இன்று மும்பை, கோல்கட்டா மோதல்
ஏப்ரல் 15, 2014.

 

அபுதாபி: பந்துக்கு பந்து பரபரப்பான ஐ.பி.எல்., கிரிக்கெட் திருவிழா இன்று துவங்குகிறது. ‘சிக்சர்’ மன்னர்களின் வாணவேடிக்கை, ‘சுழல்’ நாயகர்களின் மந்திர ஜாலம், சினிமா நட்சத்திரங்களின் ஆரவாரம் என 41 நாட்களுக்கு ரசிகர்களுக்கு ‘சூப்பர்’ விருந்து காத்திருக்கிறது.

 

இந்-திய கிரிக்-கெட் போர்-டு- (பி.சி.சி.ஐ.,) சார்-பில் இந்-தி-யன் பிரி-மி-யர் லீக்-(ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’-

தொடர் 2008ல் துவங்கப்பட்டது.

 

ஓயாத சூதாட்டம்:

கடந்த முறை ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோர் ‘ஸ்பாட்–பிக்சிங்கில்’  ஈடுபட்டது அம்பலமானது. இவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணியின் சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் ஆகியோரும் சூதாட்ட புயலில் சிக்கினர்.

 

கவாஸ்கர் பொறுப்பு:

இதையடுத்து பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் ஓரங்கட்டப்பட்டார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பி.சி.சி.ஐ., இடைக்கால தலைவராக கவாஸ்கர்(ஐ.பி.எல்., பணிகள் மட்டும்) நியமிக்கப்பட்டார். தற்போது, சர்ச்சைகளை கடந்து ஏழாவது பிரிமியர் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று ஆரம்பமாகிறது. சூதாட்டத்துக்கு பெயர் பெற்ற சார்ஜா, அபுதாபி போன்ற இடங்களில் ஆரம்ப கட்ட போட்டிகள் நடப்பது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்ணும் கருத்துமாக ஆய்வு செய்து,  எவ்வித பிரச்னையின்றி தொடரை நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு கவாஸ்கருக்கு உண்டு.

 

அணி மாறிய வீரர்கள்:

சமீபத்திய ஏலத்தில் முன்னணி வீரர்கள் அணி மாற நேரிட்டது. கடந்த காலங்களில் சென்னை அணிக்காக விளையாடிய மைக்கேல் ஹசி, மும்பைக்கு தாவினார். டில்லிக்காக ஆடிய சேவக், தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார். இதே போல பஞ்சாப் அணி வீரராக இதுவரை அடையாளம் காணப்பட்ட யுவராஜ் சிங், இம்முறை பெங்களூரு அணிக்காக பங்கேற்க உள்ளார். இப்படி அணிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், ரசிகர்களுக்கு புது அனுபவத்தை அளிக்கும்.

 

சென்னை முன்னிலை:

கோப்பை வெல்லக்கூடிய அணிகளின் வரிசையில் வழக்கம் போல சென்னை கிங்ஸ் முன்னிலை வகிக்கிறது. இதற்கு ‘பினிஷிங்’ திறன் படைத்த கேப்டன் தோனி, ‘டுவென்டி–20’ ஸ்பெஷலிஸ்ட் ரெய்னா ஆகியோர் இடம் பெற்றிருப்பது முக்கிய காரணம். இருவரும் தங்கள் மீதான சூதாட்ட களங்கத்தை கடந்து சாதிக்க வேண்டும். மைக்கேல் ஹசி, முரளி விஜய் இல்லாததால் துவக்கத்தில் பிரச்னை எழலாம். இவர்களுக்கு பதில் டுபிளசி, டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் போன்றவர்கள் களமிறக்கப்படலாம். மெக்கலம் அதிரடி காட்டினால், சென்னை வெற்றி எளிதாகும். பந்துவீச்சில் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, ஹில்பெனாஸ், ஈஷ்வர் பாண்டே என பெரிய படை உண்டு. 2013, பைனலில் மும்பையிடம் தோற்ற சென்னை அணி, இம்முறை, கோப்பை வெல்ல முயற்-சிக்-க-லாம்.

 

 

‘குரு’ சச்சின்:

அடுத்து, ‘ந-டப்பு சாம்-பி-ய-ன்’ மும்பை அணி சாதிக்கலாம். இந்த அணியில் பெரிய அளவில் மாற்றம் நிகழாதது பலம். கேப்டன் ரோகித் சர்மா, போலார்டு, அம்பதி ராயுடு வலு சேர்க்கின்றனர். கோரி ஆண்டர்சன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பவுலிங்கில் மலிங்கா, ஹர்பஜன், பிரக்யான் ஓஜா, ஜாகிர் கான் மிரட்டலாம். ஆலோசகராக சச்சின் இருப்பது மிகப் பெரும் பலம்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, கேப்டன் காம்பிரை நம்பி களமிறங்குகிறது. அனுபவ காலிஸ், ‘சுழல் மாயாவி’ சுனில் நரைன் நம்பிக்கை தருகின்றனர்.

 

கடந்த முறை சூதாட்ட வலையில் சிக்கிய ராஜஸ்தான் அணியை இம்முறை கேப்டன் வாட்சன் கரை சேர்க்க வேண்டும். சஞ்சு சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி, பிராட் ஹாட்ஜ், பால்க்னர் உள்ளனர்.

 

டில்லி அணிக்கு, அதிக விலைக்கு வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக்(ரூ. 12.5 கோடி), கேப்டன் கெவின் பீட்டர்சன்(ரூ. 9 கோடி), கைகொடுக்க வேண்டும். தமிழக வீரர் முரளி விஜய் துவக்கத்தில் அசத்தலாம்.

 

ஐதராபாத் அணி ஷிகர் தவான் தலைமையில் களம் காண்கிறது. டேரன் சமி, இஷாந்த் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.

‘காஸ்ட்லி’ யுவராஜ்:

விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி எப்படியும் கோப்பை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் உள்ளது. இதற்காக யுவராஜை அதிபட்சமாக ரூ. 14 கோடி கொடுத்து வாங்கியது. அதிரடி ஆட்டக்காரரான கெய்ல், டிவிலியர்ஸ், ‘சுழல் மன்னன்’ முரளிதரன் இருப்பது பலம்.

சேவக் நம்பிக்கை:

பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி இம்முறை பட்டையை கிளப்பலாம். கேப்டன் ஜார்ஜ் பெய்லி, சேவக், மிட்சல் ஜான்சன், திசரா பெரேரா, மேக்ஸ்வெல் இருப்பதால், அசுர பலத்துடன் காட்சி அளிக்கிறது.

இம்முறை வீரர்கள் அணி மாறியுள்ளதால், எந்த அணி சாதிக்கும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். கடைசி பந்து வரை ‘டென்ஷன்’ எகிறும் ஐ.பி.எல்., போட்டிகளில், பதட்டத்தை சமாளிக்கும் அணிக்கே கோப்பை வசப்படும்.

 

ரூ. 30 கோடி பரிசு

ஐ.சி.சி., நடத்தும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு தரப்படும் (ரூ. 18 கோடி) பரிசுப்பணத்தை விட, பிரிமியர் தொடரில் அதிகமான பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

மொத்தம் ரூ. 30 கோடி பரிசு கொண்ட இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 13 கோடி கிடைக்கும். இரண்டாவது இடம் பெறும் அணி ரூ. 8 கோடியை கொண்டு செல்லும். அடுத்த இரு இடம் பிடிக்கும் அணிகளுக்கு ரூ. 5 கோடி, ரூ. 4 கோடி தரப்படும்.

 

41 நாட்கள், 60 போட்டி

ஏழாவது பிரிமியர் தொடரில் இன்று முதல் வரும் ஜூன் 1 வரை மொத்தம் 41 நாட்களில் 60 போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் 19 நாட்களில் மாலை 4.00, இரவு 8.00 மணி என, இரண்டு போட்டிகள் நடக்கும்.

 

6 நாட்கள் ஓய்வு

ஐக்கிய அரபு எமிரேட்சில் 20 போட்டிகள் முடிந்த பின், மே 1ல் ஓய்வு தரப்பட்டு, மே 2 முதல் இந்தியாவில் போட்டிகள் நடக்கும். பின், போதுத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக மே 16, 17ல் போட்டிகள் கிடையாது. தவிர, மே 26, 29, 31ல் ஓய்வு என, மொத்தம் இந்த ஆண்டு 6 நாட்கள் போட்டிகள் இருக்காது.

 

பைனலுக்கு செல்வது எப்படி

ஏழாவது பிரிமியர் தொடரில் (ஏப்., 16 முதல் ஜூன் 1 வரை) மொத்தம் எட்டு அணிகள் மட்டும் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோதும்.

56 லீக் போட்டிகள் முடிந்த பின், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பெறும் அணிகள், அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

 

இதில் 3 போட்டிகள் நடக்கும்:

தகுதிச்சுற்று 1: புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பெற்ற அணிகள் இதில் மோதும். வெற்றி பெறும் அணி நேரடியாக ஜூன் 1ல் நடக்கும் பைனலுக்கு முன்னேறும்.

* எலிமினேட்டர்: பட்டியலில் 3, 4 வது இடம் பெறும் அணிகள் இதில் பங்கேற்கும். இதில் வெற்றி பெறும் அணி தகுதிச்சுற்று 2க்கு முன்னேறும். தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

 

தகுதிச்சுற்று 2: தகுதிச்சுற்று 1ல் தோற்ற அணியும், எலிமினேட்டர் போட்டியில் வென்ற அணியும் மோதும். வெற்றி பெறும் அணி பைனலுக்கு செல்லும். தோற்கும் அணி 3வது இடம் பெற்று, சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெறும்.

 

பைனல்: கடைசியாக ( 60வது போட்டி) தகுதிச்சுற்று 1, 2 ல் வென்ற அணிகள் மும்பையில், ஜூன் 1ல் நடக்கும் பைனலில் மோதும்.

ஆட்ட நாயகன்

அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையில் பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் முன்னிலை வகிக்கிறார். இவர், 15 முறை ஆட்ட நாயகன் விருது வென்றார். இவரை அடுத்து யூசுப் பதான் (13 முறை), மைக்கேல் ஹசி (10), சேவக் (10), தோனி (10) அதிக முறை இவ்விருதை வென்றனர்.

 

சிறந்து பந்துவீச்சு

ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலர்கள் வரிசையில், ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சோகைல் தன்வீர் முன்னிலை வகிக்கிறார். இவர், 2008ல் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவரில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார்.

 

* அனில் கும்ளே, இஷாந்த் சர்மா, மலிங்கா, ரவிந்திர ஜடேஜா, பால்க்னர், அமித் மிஸ்ரா, ஹர்பஜன் சிங், சுனில் நரைன், முனாப் படேல், பாலாஜி, மாஸ்கரனாஸ், உனத்கத் ஆகியோர் ஒரு இன்னிங்சில் தலா 5 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

 

சூப்பர் கீப்பர்

அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர் வரிசையில், பஞ்சாப் அணிக்காக விளையாடிய கில்கிறிஸ்ட் முன்னிலை வகிக்கிறார். இவர், 80 போட்டியில் 67 விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டார். இவரை அடுத்து சென்னையின் கேப்டன் தோனி (62 விக்.,), மும்பையின் தினேஷ் கார்த்திக் (58) ஆகியோர் உள்ளனர்.

 

அசத்தல் பீல்டர்

அதிக ‘கேட்ச்’ பிடித்த வீரர்கள் வரிசையில், சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா முதலிடம் வகிக்கிறார். இவர், 99 போட்டியில் 52 ‘கேட்ச்’ பிடித்துள்ளார். இவரை அடுத்து மும்பையின் ரோகித் சர்மா (49 கேட்ச்), சென்னையின் டுவைன் பிராவோ (41), பெங்களூருவின் விராத் கோஹ்லி (35) ஆகியோர் உள்ளனர்.

 

வெற்றிக் கூட்டணி

பிரிமியர் தொடரில், 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட், ஷான் மார்ஷ் ஜோடி முதலிடம் பிடித்தது. கடந்த 2011ல் பெங்களூரு அணிக்கு எதிராக 2வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 206 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இடத்தில் பெங்களூருவின் கிறிஸ் கெய்ல், விராத் கோஹ்லி ஜோடி (204* ரன்கள், எதிர்–டில்லி, 2012) உள்ளது.

 

அனுபவம் அதிகம்

பிரிமியர் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில், சென்னையின் சுரேஷ் ரெய்னா முதலிடம் வகிக்கிறார். இதுவரை இவர் 99 போட்டியில் பங்கேற்றுள்ளார். இவரை அடுத்து ரோகித் சர்மா (97), தோனி (96), பத்ரிநாத் (95), விராத் கோஹ்லி (93), தினேஷ் கார்த்தி (92), யூசுப் பதான் (91), ராபின் உத்தப்பா (91), காலிஸ் (90) ஆகியோர் அதிக போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் பெற்றுள்ளனர்.

 

சபாஷ் தோனி

அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த பெருமையை சென்னையின் தோனி தன்வசப்படுத்தியுள்ளார். இவர், 96 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். தவிர, அதிக வெற்றியை ருசித்த கேப்டன்கள் வரிசையிலும் முன்னிலை வகிக்கிறார். இதுவரை 96 போட்டியில் 58 வெற்றி, 37 தோல்வியை பெற்றுத் தந்துள்ளார். ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

 

* கில்கிறிஸ்ட் (74 போட்டி), காம்பிர் (63), வார்ன் (55), சேவக் (52), சச்சின் (51) ஆகியோர் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளனர்.

சதங்களின் நாயகர்கள்

பிரிமியர் தொடரில் இதுவரை 28 சதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 4 சதம் அடித்துள்ளார்.

* கில்கிறிஸ்ட், முரளி விஜய், டேவிட் வார்னர் தலா 2 சதம் அடித்தனர்.

 

* பிரண்டன் மெக்கலம், ரோகித் சர்மா, வாட்சன், மைக்கேல் ஹசி, சைமண்ட்ஸ், ஜெயசூர்யா, ஷான் மார்ஷ், டிவிலியர்ஸ், மணிஷ் பாண்டே, யூசுப் பதான், மகிளா ஜெயவர்தனா, பால் வல்தாட்டி, சச்சின், சேவக், அஜின்கியா ரகானே, கெவின் பீட்டர்சன், சுரேஷ் ரெய்னா, டேவிட் மில்லர் ஆகியோர் தலா ஒரு முறை சதம் அடித்தனர்.

 

அரைசத வேந்தர்கள்

அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில், கோல்கட்டா அணியின் கவுதம் காம்பிர் முன்னிலை வகிக்கிறார். இவர், 88 போட்டியில் 20 அரைசதம் அடித்துள்ளார்.

* சென்னையின் சுரேஷ் ரெய்னா, மும்பையின் ரோகித் சர்மா தலா 18 அரைசதம் அடித்துள்ளனர்.

 

* பெங்களூருவின் கிறிஸ் கெய்ல், பஞ்சாப் அணியின் ஷான் மார்ஷ், ஐதராபாத்தின் ஷிகர் தவான், பெங்களூருவின் காலிஸ் தலா 16 அரைசதம் பதிவு செய்னர்.

* டில்லியின் சேவக் 15, பெங்களூருவின் விராத் கோஹ்லி 14, சென்னையின் தோனி 13 அரைசதம் அடித்துள்ளனர்.

 

சிக்சர் மன்னர்கள்

அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில், பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இவர், 59 போட்டியில் 180 சிக்சர் அடித்துள்ளார். இவரை அடுத்து சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா (115 சிக்சர்), மும்பை அணியின் ரோகித் சர்மா (110) அதிக சிக்சர் அடித்துள்ளனர். இவர்களை தவிர, யூசுப் பதான் (95 சிக்சர்), கில்கிறிஸ்ட் (92), தோனி (89), சேவக் (85), யுவராஜ் சிங் (82), வாட்சன் (81) ஆகியோர் சிக்சர் மழை பொழிந்தனர்.

 

‘டக்–அவுட்’ சோகம்

அதிக முறை ‘டக்–அவுட்’டான வீரர்கள் வரிசையில், ஐதராபாத் அணியின் அமித் மிஸ்ரா முன்னிலை வகிக்கிறார். இவர், 76 போட்டியில் 9 முறை ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். ரோகித் சர்மா, மணிஷ் பாண்டே, காலிஸ் தலா 8 முறை ‘டக்–அவுட்’ ஆனார்கள். ஷேன் வார்ன், பிரவீண் குமார், பியுஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், பார்த்திவ் படேல், கில்கிறிஸ்ட், காம்பிர் தலா 6 முறை ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.

 

மும்பை–கோல்கட்டா முதல் மோதல்

பிரிமியர் தொடரில் சச்சின் ஓய்வுக்குப் பின் முதன் முறையாக களமிறங்கும் மும்பை அணி, இன்று காம்பிரின் கோல்கட்டாவை எதிர்கொள்கிறது.

கடந்த பிரிமியர் தொடருடன் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் ஓய்வு பெற்றார். இருப்பினும், அணியின் ‘நட்சத்திரம்’ என்று அறிவிக்கப்பட்ட இவர், மும்பை வீரர்களுடன் இருப்பது, பெரும் துாண்டுகோலாக அமையலாம்.

 

இம்முறை நிறைய வீரர்கள் அணி மாறிய போதும், கேப்டன் ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, போலார்டு, மலிங்கா, ஹர்பஜன், பிரக்யான் ஓஜா உள்ளிட்டோர் இங்கு தான் உள்ளனர்.

புதிய வரவாக வந்துள்ள மைக் ஹசி, கடந்த தொடரில் (17 போட்டி, 733 ரன்கள்) அதிக ரன்கள் குவித்தவர். ரூ. 5 கோடிக்கு வாங்கப்பட்ட இவர், ரோகித் சர்மாவுடன் இணைந்து அணிக்கு நல்ல துவக்கம் தர காத்திருக்கிறார்.

 

பின் வரிசையில் வரும் கோரி ஆண்டர்சன், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 36 பந்தில் சதம் அடித்தவர். இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

 

மலிங்கா மட்டும்:

பவுலிங்கை பொறுத்தவரையில் கடந்த தொடரில் மிரட்டிய மிட்சல் ஜான்சன், பஞ்சாப் அணிக்கு சென்று விட்டதால், இம்முறை வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவை மட்டும் நம்பியுள்ளது.

 

இவருக்கும் நாள் சரியில்லை என்றால், மும்பை பாடு திண்டாட்டம் தான். ஏனெனில், ஓய்வு பெறும் நிலையிலுள்ள ஜாகிர் கான் எந்தளவுக்கு கைகொடுப்பார் எனத் தெரியவில்லை. சுழலில் ‘சீனியர்கள்’ ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா அனுபவம் கைகொடுக்கும்.

 

காம்பிர் நம்பிக்கை:

கோல்கட்டா அணியில் கேப்டன் காம்பிர், காலிஸ், உத்தப்பா, யூசுப் பதான், சாகிப் அல் ஹசன் என, சிறப்பான பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளனர். இருப்பினும், தனி நபராக போட்டியை வென்று தரும் வகையில் யார் இருப்பர் என்பது தான் பெரிய எதிர்பார்ப்பு.

 

பவுலிங்கில், சுழல் மாயாவி சுனில் நரைன், பியுஸ் சாவ்லா உள்ளது பலம் தான். வேகப்பந்து வீச்சில் மார்னே மார்கல், உமேஷ் யாதவ், ரஞ்சிக் கோப்பை தொடரில் அசத்திய வினய் குமார் உள்ளனர்.

 

சுத்தப்படுத்துவோம்

சூதாட்டம் குறித்து செய்தி வெளியான போதெல்லாம், எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்தவர் தோனி. இன்று துவங்கும் பிரிமியர் தொடரை சுத்தம் செய்வது குறித்து இவர் கூறுகையில்,‘‘ பிரிமியர் தொடரை நன்கு ‘சலவை’ செய்து சுத்தமாக வைத்துக் கொள்வோம்,’’ என, நகைச்சுவையாக கூறினார்.

 

டிக்கெட் காலி

பிரிமியர் தொடரின் துவக்க போட்டிகள்  இம்முறை அன்னிய மண்ணில்(ஐக்கிய அரபு எமிரேட்சில்) நடக்கிறது. 14 ஆண்டுக்கு பின், இந்திய வீரர்கள் இங்கு விளையாடுவதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று முதல் வரும் நான்கு போட்டிகளுக்குரிய டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

 

பயிற்சியில் சச்சின்

கடந்த ஆண்டு அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் விடை பெற்றவர் சச்சின். ஏழாவது பிரிமியர் தொடரில் மும்பை அணியின் ‘நட்சத்திரம்’ என, அறிவிக்கப்பட்ட இவர், நேற்று அணியினருடன் இணைந்து ‘ஜாலியாக’ வலைப் பயிற்சியில் ஈடுபட்டார்

 

schudule3_zps80c609b9.jpg

 

box13_zpsc461cb5f.jpg

 

http://sports.dinamalar.com/2014/04/1397583008/dhoniiplchennai.html

Link to comment
Share on other sites

சென்னை அணியின் இலக்கு என்ன * சொல்கிறார் கேப்டன் தோனி
ஏப்ரல் 16, 2014.

 

அபுதாபி: ‘‘ஏழாவது பிரிமியர் லீக் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவதே சென்னை அணியின் முதல் இலக்கு,’’ என, கேப்டன் தோனி தெரிவித்தார்.

ஏழாவது பிரிமியர் லீக் தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள தோனி தலைமையிலான சென்னை அணி, தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியை அபுதாபியில் நாளை எதிர்கொள்கிறது.

 

இத்தொடர் குறித்து தோனி கூறியது: ஏழாவது பிரிமியர் லீக் தொடரில், தட்பவெப்பநிலை முக்கிய பங்குவகிக்கும். ஐக்கிய அரபு எமிரேட்சில் நிலவும் வானிலைக்கேற்ப, வீரர்கள் தங்களை விரைவில் மாற்றிக் கொள்ளும் பட்சத்தில் போட்டியில் சாதிக்கலாம். இந்தியாவில் மும்பை, சென்னை, கோல்கட்டாவில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்ததாக இருக்கும். ஆனால் டில்லியில் மிகவும் வறண்ட வானிலை காணப்படும். இதேபோல தான் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் இருக்கும்.வீரர்கள் கடுமையான சவாலை சந்திக்க வேண்டும். போட்டி துவங்கிவிட்டால் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை.

 

கோப்பை வெல்வது குறித்து சிந்திக்கவில்லை. முதலில் எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல், துவக்கத்தில் இருந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தக்கவைக்க வேண்டும். குறைந்தபட்சம் அரையிறுதி வரை முன்னேற வேண்டும் என்பதே முதல் இலக்கு.

முதலாவது பிரிமியர் தொடரில் விளையாடிய நிறைய வீரர்கள் தற்போதும் எங்கள் அணியில் இருப்பது பலம். கடந்த தொடர்களில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்.

இவ்வாறு தோனி கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/04/1397667455/dhonichennaiipl.html

Link to comment
Share on other sites

கோல்கட்டா அணிக்கு கலக்கல் வெற்றி *மும்பைக்கு முதல் ‘அடி’

ஏப்ரல் 16, 2014.

அபுதாபி: ஏழாவது ஐ.பி.எல்., லீக் தொடரின் முதல் வெற்றியை கோல்கட்டா அணி பதிவு செய்தது. நேற்றைய லீக் போட்டியில் மும்பை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று துவங்கின. அபுதாபியில் நடந்த முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணி, கோல்கட்டா அணியை சந்தித்தது.

‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

காம்பிர் ஏமாற்றம்:

கோல்கட்டா அணிக்கு காம்பிர், காலிஸ் இணைந்து துவக்கம் கொடுத்தனர். ஜாகிர் கான் வீசிய முதல் ஓவரில், உதிரியாக ஒரு ரன் கிடைத்தது.

அடுத்து வந்த மலிங்கா, வழக்கம் போல தனது வேலையை காட்டினார். இவரது ‘சூப்பர் யார்க்கரில்’ காம்பிர், ரன்கணக்கை துவக்காமல் போல்டாகினார்.

பின் வந்த மணிஷ் பாண்டே, கோரி ஆண்டர்சன் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என, அடுத்தடுத்து விளாசினார். இதன் பின் இருவரும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோல்கட்டா அணி 6 ஓவரில், 31 ரன்கள் மட்டும் எடுத்தது.

திடீர் வேகம்:

அடுத்து ரன்வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியது இந்த ஜோடி. ஹர்பஜன், ஓஜா பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிய பாண்டே, இத்தொடரில் முதல் அரைசதம் கடந்தார்.

மறுபுறம், மலிங்கா பந்தில் பவுண்டரி அடித்த காலிஸ், ஓஜா ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 20 ரன்கள் எடுக்க, கோல்கட்டா அணி 15 ஓவரில் 110 ரன்களை எட்டியது. காலிசும் தன்பங்கிற்கு அரைசதம் எட்டினார்.

மலிங்கா பந்தில் சிக்சர் அடித்த பாண்டே (64), அவரிடமே வீழ்ந்தார். உத்தப்பா (1), சாகிப் அல் ஹசன் (1) ஏமாற்றினர். காலிஸ் (72) ஆண்டர்சனின் அசத்தல்‘ கேட்ச்சில்’ பெவிலியன் திரும்பினார்.

கடைசி ஓவரில், சூர்ய குமார் யாதவ் 3 பவுண்டரிகள் அடிக்க, கோல்கட்டா அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. சூர்ய குமார் யாதவ் (13), யூசுப் பதான் (4) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் மலிங்கா 4 விக்கெட் சாய்த்தார்.

ராயுடு நம்பிக்கை:

சற்று கடின இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு மைக் ஹசி, தாரே ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. 13 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த ஹசி, சுனில் நரைன் ‘சுழலில்’ சிக்கினார். ஆதித்ய தாரேயும் (24) நீடிக்கவில்லை.

பின் இணைந்த ராயுடு, கேப்டன் ரோகித் சர்மா ஜோடி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், கடைசி 30 பந்தில், மும்பை அணியின் வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்டன.

இந்நிலையில், ரோகித் சர்மா (27) அவுட்டானார். சற்று நம்பிக்கை தந்த அம்பதி ராயுடுவும் (48) அரைசத வாய்ப்பை இழந்து, வெளியேற மும்பை அணியின் வெற்றிக்கு சிக்கலானது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டர்சன் (2), அணியை கைவிட்டார். ஹர்பஜன் (0), கவுதம் (7) அடுத்தடுத்து அவுட்டாக, மும்பை அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து, 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

கோல்கட்டா அணியின் சுனில் நரைன், 4 விக்கெட் கைப்பற்றினார்.

http://sports.dinamalar.com/2014/04/1397664558/kalliskolkattaipl.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.