Jump to content

கனடாவில் 12ம் வகுப்பு மாணவனின் உள்ளத்திலிருந்து...........


Recommended Posts

கனடாவில் அறிவகம் எனும் அமைப்பு நகரம் தோறும் தமிழ்பாடசாலைகளை அமைத்து அங்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கான புள்ளிகளையும் புலமைப்பரிசில்களையும் வழங்குகிறது. சென்ற சனிக்கிழமை அவர்களால் நடத்தபடும் பாரதியார் வளாகத்துக்கு செல்லும் வாய்பு எனக்கு கிடைத்தது.அன்று அவர்களால் வருடம் தோறும் நடத்தப்படும் நிகழ்வு நாற்றுமேடை.அன் நிகழ்வில் மாணவர்களின் திறைமை அடிப்படையில் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.அங்கு எனது கண்ணில் மூன்று ஆக்கங்கள் கண்ணில் பட்டன.அதை பன்னிரெண்டாம் தரத்தில் பயிலும் மாணவர்கள் ஆய்வு செய்திருந்தார்கள்.

1,எனது குடும்பம்

2,செம்மொழியாம் தமிழ்மொழி

3,தமிழர்களின் வரலாறு

அதில் என்னை கவர்ந்த ஆக்கத்தை இங்குணைக்கிறேன்.காரணம்.தற்போதைய சூழலில் யதார்த்தமாக தென்பட்டது

p428-full.jpg

எனது குடும்பம்(ஆய்வுக்கட்டுரை)

ஆய்வு செய்தவர் : வருண் ஜெயதேவன்

வகுப்பு நிலை: தரம் 12

ஆசிரியர்: பூங்கோதை பன்னீர்செல்வம்

பாரதியார் வளாகம்

மிஸிசாகா, ஒன்ராறியோ

கனடா.

எனது பெயர் வருண் நான் 12ம் தரத்தில் கல்வி கற்கிறேன். எனது தாய் தந்தையர் இலங்கையிலிருந்து அகதியாக புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறி, நானும், எனது சகோதரனும் அவர்களின் வாரிசாக அதுவும் கனடிய தமிழராக உதித்துள்ளோம்.இங்கே தான் எமக்கு ஒரு சந்தி உருவாகின்றது.இதை நினைக்கும் போது ஜீரணிக்க முடியவுமில்லை.அதை முடிந்தளவு காலத்தின் கட்டாயமாக ஏற்றுகொள்ள வேண்டியுள்ளது போலவும் உள்ளது.

முதலில் எனது தந்தையின் வழியை எடுத்துகொண்டால் எனது பூட்டனார் யாழ்ப்பாணத்தில் வடமராச்சி பகுதியில் இமையாணன் என்ற பகுதியில் மணியகாரனாகவிருந்துள்ளார்.இவரது பெயர் சுப்பிரமணியமாகும்.பின்னர் எனது பாட்டனாரை எடுத்துகொண்டால் மலேசியாவில் புகையிரத நிலைய அதிபராகவிருந்துள்ளார். (இங்கேயும் புலம் பெயர்ந்துள்ளார்கள் கலாச்சாரம் மொழி என்பன பாதுகாக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)எனது தாத்தா இலங்கையில் பிறந்துள்ளார்.அவர் ஒரு எழுது வினைஞர்.அவர் இலங்கையிலேயே வாழ்ந்துள்ளார். அதேபோலஎனது தந்தையின் தாயின் தாயின் வழித்தோன்றலும் சிங்கபூருக்கு இடம் பெயர்ந்து மீண்டும் இலங்கையில் இணைந்த குடும்பம்.(இவர்கள் தொழிலின் நிமிர்தம் இடம் பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது)எனது அப்பம்மா இலங்கையின் வன்னி பகுதியில் தபாலதிபராக பணியாற்றியுள்ளார் பின்பு எனது தந்தை தனது 26வதுவயதில் புலம் பெயர்ந்துள்ளார்.எனது தந்தையுடன் எமது மொழி கலாச்சார விழுமியங்கள் ஆட்டம் காணுகின்றன.

இப்போ எனது தாயின் வழித்தோன்றலைப்பார்ப்போம். அவரின் தந்தை வழி ஒரு ஆச்சார குடும்பம்.எனது பூட்டனார். யாழ்பாணத்தின் தீவகற்ப பகுதியான வேலணை என்ற சிற்றூரில் ஒரு ஆசிரியர். அவருக்கு இரு பெயர்களுண்டு பேரம்பலம் மற்றும் அப்பாத்துரை ஆசிரியர் என்றழைப்பார்கள்.இவர்களுக்கு சொந்தமாக ஒரு ஆலயமும் இருந்ததாக கூறுகிறார்கள்.அவ்வாலயத்தை 'முடி பிள்ளையார் கோவில்' என அழைப்பார்கள்.அதே போல எனது தாத்தாவும் ஒரு ஆசிரியர். அவரை முருகேசபிள்ளை ஆசிரியர் என்றழைப்பார்கள்.இலங்கையை பொறுத்தவரை ஆசிரியர் தொழிலுக்கு பெரிய மதிப்பும் மரியாதையுமிருந்தது.மாதா பிதா குரு தெய்வம் என்ற கூற்றுக்கமைய மதிக்கப்பட்டதாம்.ஆனால் தற்போதுள்ள ஆசிரியர்களின் சில நடத்தைகளால் அந்த நிலை அருகிவருவதாக ஊர் தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்கால ஆசிரியர்கள் புதிய மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் போதனைகளைச்செய்வதிலும்,முக்கியமாக இளம் மாணவர்களை கடிவாளமிட்ட குதிரைபோல நேர்வழியில் செல்லவும் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.ஆனால் தற்போது நாகரீக மோகம் மற்றும் பணம் சம்பாதித்தலே குறியாகவுள்ளது.பாடசாலைக்கு வரும்மாணவர்கள் எல்லோரும் பட்டம் பெறவேண்டும் என்ற நிலை மாறி, நாங்கள் படிப்பிக்கின்றோம். நீங்கள் முடிந்தால் படியுங்கள் என்ற நிலை,தற்போதுள்ள மாணவர்கள் கூட ஆசிரியர்களை மதிப்பதில்லை.இதனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருந்த அன்னியோன்ய நிலையற்றுப்போய் விட்டது. நாம் படித்து பட்டம் பெற வேண்டும், என்று எல்லா மாணவர்களும் நினைப்பதுமில்லை.

இதேபோல எனது தாயின், தாயின் வழித்தோன்றலை எடுத்துக்கொண்டால் எனதுபூட்டனார் ஒரு பிரபல வியாபாரி.அவர் இலங்கையின் தென் கோடியில் தெனியாய என்ற ஊரில் பிரபல வர்த்தகர்.இவர் பெயர் வேலுப்பிள்ளை.இவரின் பட்டப் பெயர் தெனியாய சின்னப்பர்.இலங்கையின் தென் முனையின் பெரு நகரமாகிய காலியில் இவரால் உருவாக்க பட்ட சிவன் கோவில் உண்டு.இதன் மூலம் எமக்கு தெரிவது; எனது மூதாதையர்கள் மொழி,சமயம், கலாச்சாரம் என்பவற்றை முடிந்தளவுபின்பற்றி பொக்கிசப்படுத்தியுமுள்ளார்கள் .

இனி நாம் என்னசெய்ய வேண்டும்.எப்படி இவற்றை பாதுகாக்க போகிறோம்.தற்போது எமது சமுதாயம் நோக்குகின்ற பிரச்சனைகள் பற்றிபார்த்தால்;

என்னுடைய பாடசாலை வாழ்க்கையை இங்கு குறிப்பிடலாம். நான் தற்போது இரு கலாச்சாரத்தில் வாழ வேண்டியுள்ளது.எமது கலாச்சாரம் பாரம்பரியமானதும் கட்டு கோப்பு மிக்கதுமாகும்,அடுத்தது எம்மீது தெரிந்தோ தெரியாமலோ திணிக்கப்படும் பல்லின கலாச்சாரம். இதில் முக்கியமாக கனடிய எதற்கும் சுதந்திரமுள்ள கலாச்சாரம். இது இங்குள்ளவர்களை மிகவும் பாதிக்கின்றது.எம்மவர்களில் சிலர் திறந்துவிட்ட ஆட்டுமந்தயைப்போல நடந்துகொள்கின்றனர்.ஒருசில நேரங்களில் நானும் உணர்கிறேன்.சில வேளைகளில், நாம் கனடாவில் தானே இருக்கிறோம் எதற்காக தமிழ் படிக்க வேண்டும் என்றுகூட சிந்திதிருக்கிறேன்.பின்புதான் தமிழ் எமது மொழி அதை அழியவிடக்கூடாது என்பதை உணர்ந்தேன்.அதேபோல போராட்டக்காலங்களில் கவனயீர்பு நிகழ்சிகள் நடைபெற்ற நேரம்,எதற்காக இவர்கள் கவனயீர்பு நடத்துகிறார்கள் என்றெல்லாம் சிந்திப்பேன்.எனது தந்தையை ஒருமுறை அப்பா!எங்களுக்கு சொந்தகாரர்கள் இலங்கையில் இருக்கிறார்களா? என்று கேட்டேன்.அவர் இல்லையென்று பதிலளித்தார்.அப்போ ஏன் நாம் கவனயீர்பு நிகழ்வுக்கு போக வேண்டும் என்று கேட்டேன்.அப்போது அவர் விபரமாக விளக்கமளித்தார்.ஆனால் இதில் வேதனையுடன் கூறும் விடயம்.எனது அன்றைய நிலைக்கு காரணம் எனது பெற்றோர்தான்.இங்கு தான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சந்தி உருவாகிறது.

தங்களின் அற்ப சொற்ப ஆசைக்காகவும் சமுதாயத்தில் மற்றவர்களோடு போட்டி போட்டுகொண்டு வருமானத்திற்கு அதிக செலவுகளை ஏற்படுத்தி பணத்திண்டாட்டத்தை ஈடு செய்ய, பெற்ற பிள்ளைகளையும் மறந்து தாயும் தந்தையும் பலமணி நேரமாக பணச்சம்பாதிப்பில் ஈடுபடுவார்கள். அப்படி சில நேரம் கிடைத்தால் கூட அதையும் தொலைக்காட்சியில் செலவழிப்பார்கள்.ஒரு சில இடங்களில் பெற்றோரையே காண முடியாது.பெற்ற பிள்ளைக்கு சமைத்து ஊட்ட வேண்டிய தாய் வியாபார நிலையங்களிலும்,குளிரூட்டியிலுருந்தும் பரிமாறுவாள்.

இங்கே தான் நாம் பெற்றோரையும் அவர்களின் பரிவையும் இழக்கின்றோம்.எங்களுக்கு அவர்கள் மீது பற்று பாசம் இல்லை. அவர்களை ஒரு பாதுகாவலராக உணருகிறோம்.இப்போ எங்களுக்கு தேவையான பற்று பாசம் எங்கு கிடைக்கும் என்று தேடும் போது நல்ல இடங்களும் கெட்ட இடங்களும் கிடைகின்றன. இதனால் எமது வாழ்வும் கலாச்சாரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறது.இப்படி பெற்றோர்மீதே பாசத்தை இழந்த எமக்கு மொழிப் பற்று சமயப்பற்று நாட்டு பற்று எப்படி உருவாகும்.இந்த நிலை பிற்காலத்தில் ஏற்படாமல் இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.

இதே போல திருமணத்தை எடுத்துகொண்டால் இங்கு பல முறையற்ற மற்றும் கலப்பு திருமணங்களும் நடக்கின்றன.இங்கும் பிரச்சனைகள் உண்டு.கலப்பு திருமணம் செய்தால் பிறக்ககூடிய பிள்ளை எந்த கலாச்சாரத்தில் வளரும்.எந்த சமயத்தில் அந்த பிள்ளை பிரார்தனை செய்யும்.இதற்கு கணவனும் மனைவியும் பல விட்டு கொடுப்புகளை செய்ய வேண்டியிருக்கும்.இல்லையேல் விவாகரத்து தான் தீர்வு.அப்போது அந்த பிள்ளையின் நிலை என்ன?இதற்காகத்தான் கனடிய சமூகம் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்தல் என்ற முறையை வைத்திருக்கிறது.ஏனெனில் கையொப்பமிடுதல் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் பின் விளைவுகள் உண்டு.

அடுத்து பெற்றாரை பராமரித்தல்,இது வெளி நாட்டிலிருக்கும் புலம் பெயர்ந்தவர்களிடையே பாரிய பிரச்சனையாகவுள்ளது.அவர்களால் இயலுமானவரை பெற்றோரை உபயோகப்படுத்திவிட்டு அவர்கள் நோய்வாய்படும் நேரம் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் விடுதல் ஏற்று கொள்ளகூடியதொன்றல்ல.அவர்கள் சுகதேகியாகவிருக்கும் போது அவர்களை சுதந்திரமாக அனுமதித்தால் அவர்கள் தங்கள் கடைசிக்காலங்களை சந்தோசமாக கழிப்பார்கள்.அவர்கள் மனச்சோர்வற்று வாழ்ந்தால் எம்முடன் நீடூழி காலம் வாழ்வார்கள்.

இவற்றையெல்லாம் கண்ணூடாக பார்க்கும் நானும் என்போன்ற சமுதாயமும் வாழ்கையில் வரும் இன்னல்களையெல்லாம் எதிர் நீச்சல் போட்டுஎம்மையும் எமது பிற்கால சமுதாயத்தையும் மொழி சமய காலாச்சார விழுமியங்களோடு வாழவைப்போமாக.

முற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆய்வு . பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

வருண் ஜெயதேவன் மிக உணர்வாக நன்றாக எழுதியுள்ளார்.

இணைப்பிற்கு நன்றி நீலப் பறவை.

Link to comment
Share on other sites

.

பகிர்ந்தமைக்கு நன்றி BLUE BIRD

நிரந்தரமாகவே தொடர்பற்ற சமுதாயத் துண்டுகளாக மாறுவதற்கு முன் தாயகத்தில் ஒரு சுமூகமான நிலை ஏற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

FACE BOOK ல் முடியாததை யாழ் களம் தீர்த்து வைத்தது.தமிழர்களின் தலைத்தளம் யாழ்

வணக்கம்!

என்னால் தேடிக்கண்டுபிடிக்க முடியாத உறவுகளை யாழ்களம் சேர்த்துவைத்தது.இன்னும் இன்னும் தொடர்புகொள்கிறார்கள்.உங்களுக்கும் உங்கள் இணையத்திற்கும் நன்றி!

உண்மையுடன்

வருண்.

(from e mail)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பிறந்த, 12ம் வகுப்பு மாணவனின் ஆய்வுக் கட்டுரை நன்றாக இருந்தது.

இணைப்பிற்கு நன்றி நீலப்பறவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆய்வுக்கட்டுரை பாராட்டுக்கள்

இணைப்பிற்கு நன்றி நீலப்பறவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு..இணைப்பிற்கு நன்றி

வருண் வாழ்த்துகள் உங்கள் முயற்ச்சிக்கு

Link to comment
Share on other sites

  • 1 year later...

                                                                                                                                                                                                                                                                    

 

சங்கிலிய மன்னன்   (யாழ்ப்பாண இராச்சியம்)

 

13ம் நூற்றாண்டில் ஆரம்பித்த யாழ்ப்பாண இராச்சியத்தில் 17ம் நூற்றாண்டில் ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியன் ஆவார்.இவரது ஆட்சிக்காலம் 1620 வரை இருந்தது என சான்றுகள் உண்டு.ஆனாலும் யாழ்ப்பாண இராச்சியத்தைப்பற்றிய சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்றது.இதனால் சரியான தரவுகள் எடுப்பது கடினமாயுள்ளது என ஆராச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.இதற்கான முக்கிய காரணமாக தற்போதுள்ள போட்டி அரசியல் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்திருக்கிறது.அக்காலத்திலிருந்தே நம்பிக்கை மோசடி,பதவி மோகம் மற்றும் காட்டிக்கொடுப்புகள் போன்றவை இருந்திருக்கின்றன.

           யாழ்ப்பாண இராச்சியம் நல்லூருக்கு முன்னதாக சிங்கை நகர் என்ற பெயருடன்  கிழக்கு கரையோரமாக உள்ள வல்லிபுரம் நகரில் உதய மானதாக சான்றுகள் கூறுகின்றது.கல் வெட்டொன்றில் “'பொங்கொலி நீர்ச் சிங்கை நகர்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது கூட வல்லிபுர ஆழ்வார் திருத்தலத்துடன் பெயர் பெற்று விளங்குகின்றது.அதே போலதென்னிலங்கையில் கோட்டகமவில் கண்டெடுத்த கல் வெட்டில் "சிங்கை நகராரியனைச் சேராவனுரேசர்' என்று தொடர் வருகின்றது.யாழ்ப்பாண இராச்சியத்தின்  வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவ மாலை ஒரு ஒல்லாந்து அதிகாரியான "மேக்கறூன்" என்பவரின் வேண்டு கோளுக்கு இணங்க 1736ம் ஆண்டளவில் வாழ்ந்த மயில்வாகனப் புலவரால் வரையப்பட்டதாகும்.அக்காலத்தில் யாழ்ப்பாண அரசின் எல்லை வன்னிப்பகுதியை முழுவதும் உள்ளடக்கி மேற்கு கரையில் புத்தளம் வரை நீண்டிருந்தது.

                                                              யாழ்பாடி  இறந்த பின்  வாரிசு இல்லாத காரணத்தால் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட கூழங்கைச் சக்கரவர்த்தி முதல் ஆரியச்சக்கரவர்த்திகள்  என்று அழைக்கப்பட்ட வம்சம் போர்த்துக்கீசர் கைப்படும் வரை ஆண்டு வந்தது.ஆனாலும் இவர்கள் பரராசசேகரன் செகராசசேகரன் என்ற பட்ட பெயர்களை மாறி மாறி வைத்து கொண்டு ஆண்டு வந்தனர்.

                  கி பி 1450ல் யாழ்ப்பாணம் தென்னிலங்கையிலிருந்து படையெடுத்துவந்த செண்பகப்பெருமாள் என்ற அரசரிடம் தோல்வியடைந்தது. எனினும் 17 வருடங்களின் பின் தோற்றோடிய கனகசூரிய சிங்கையாரியன்  இந்தியாவிலிருந்து படை திரட்டிவந்து இழந்த நாட்டை மீட்டான்.இதுவரை கிடைத்த தகவல்களின் மூலம் ஈழத்தமிழனின் ஆட்சி ஆரம்பம் முதல் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளமை புலப்படுகின்றது.

                                                 16ம் நூற்றாண்டின் முற் பகுதியில் போத்துக்கீசரின் நடமாட்டம் இலங்கையை அண்டிய பகுதியில் அதிகரித்தது மட்டுமல்லாது இலங்கை அரசியலிலும் தலையிடத்தொடங்கியிருந்தார்கள்.யாழ்ப்பாண இராச்சியத்தின் மீதும் அவர்கள் பார்வை விழத்தவறவில்லை.போர்த்துக்கீசரின் செல்வாக்கால் இலங்கையில் கத்தோலிக்க மதம் தலையெடுக்க ஆரம்பித்தது.யாழ்ப்பாண இராச்சியத்திலும் மதமாற்றங்கள் தொடங்கியபோது யாழ்ப்பாண அரசன் தனது ஆளுகைக்குட்பட்ட மன்னாரில் மதம் மாறியோரைச் சிரச் சேதம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

                                                                          இதைச் சாக்காக வைத்து கொண்டு 1560ல் போர்த்துக்கீசத்தளபதியான டொம் கொன்சுடன்டீனோ டி பிரகன்சா யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து அதனைக்  கைப்பற்றினான்.எனினும் நாட்டுக்குள்ளேயே இருந்து போக்கு காட்டிய அரசன் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இணங்கினான்.எனினும் அவர்களின் கடுமையான நிபந்தனைகளுக்கு இணங்க முடியாத அரசன் தனது சாதுரியத்தால் நாட்டை விட்டு விரட்டினான். ஆனாலும் போர்த்துகீசர் யாழ்ப்பாண அரசுக்கு கீழ்ப்பட்ட மன்னார்த்தீவைத்தாக்கிக் கைப்பற்றி கொண்டனர்.

                    தொடர்ந்து 1591ல் அந்தரே பூர்த்தாடோ எனும் தளபதி தலைமையில் யாழ்ப்பாணம் தாக்கி கைப்பற்றப்பட்டது.இப்போரில் யாழ்ப்பாண அரசன் கொல்லப்பட அவனுடைய மகனுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திஅவனை அரசனாக்கி மீண்டனர்.இதன் பின்னர் 1620வரை போர்த்துக்கீசரின் தயவில் யாழ்ப்பாண மன்னர்கள் நாட்டை ஆண்டு வந்தனர்.1620ல் இராச்சியத்தில் ஏற்பட்ட பதவிப்போட்டிகளால் யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றித் தங்கள் நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததின் மூலம் யாழ்ப்பாண மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு சில சான்றுகள் தற்போதும் உள்ளன.

        

 2011ல் புதிதாக அமைக்கப்பட்ட சிலை                  மந்திரிமனை                                                                   

 

        யாழ்ப்பாண அரசு அதன் உச்சத்தில் கி.பி. 1350.       யமுனா ஏரி      

 

                            

·         சங்கிலித்தோப்பு                                         நல்லூர் கந்தனின் ஆலயம்                                                                                                                                                                                                                                        .                                                                        (தற்போதைய தோற்றம்)

 

 

                                          சங்கிலியனின் ஆட்சிக்காலமானது முதலாம் சங்கிலியன் இரண்டாம் சங்கிலியன் என கட்டம் கட்டமாக வகுக்கப்பட்டுள்ளது.முதலாம் சங்கிலியன் ஏழாம் செகராசசேகரன் ஆவார்.இவருக்கு முன் சிங்கைப்பரராசசேகரன் ஆகிய 6ம் பரராசசேகரன் ஆட்சி செய்தான்.முதலாம் சங்கிலியின் ஆட்சிக்காலம்1519- 1561 வரை நீடித்தது. இவர் ஈழ நல்லூரில் பிறந்தவர்.இவர்1565ல் இறைபதம் எய்தியதாக குறிப்புகள் கூறுகின்றன.இவரின் பின் புவிராஜபண்டாரம் ஆட்சி செய்துள்ளார்.

                                   இவருக்கு அடுத்தபடியாக  1591 ஆம் ஆண்டில் தளபதியான அந்தரே பூர்த்தாடு என்பவன் தலமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயப் படைகள் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு எதிர்மன்னசிங்கம் என்பவனை அரசனாக்கினர். எதிர்மன்னசிங்கம் இறந்தபோது அரசுக்கு வாரிசான அவனது மகன் குழந்தையாக இருந்தான். இதனால், அரசனின் மச்சினனான அரசகேசரி என்பவனைப் பகர ஆளுநராக நியமித்தனர். இதனை விரும்பாத சங்கிலி குமாரன், அரசகேசரியைக் கொல்லுவித்து நிர்வாகத்தைத் தான் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சங்கிலி குமாரன் தொடக்கத்திலிருந்தே போத்துக்கீசரின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்தான். போத்துக்கீசரிடம் தாராளமாக நடந்துகொண்ட அரசன் எதிர்மன்னசிங்கம் தனது இறுதிக்காலத்தில் பாதிரிமாரின் வற்புறுத்தலுக்கு இணங்கிக் கிறிஸ்தவ மதத்தில் சேர உடன்பட்டதாகவும், எனினும் அவர்களின் முயற்சியைச் சங்கிலி குமாரனே தொடர்ந்து முறியடித்து வந்ததாகவும்குவைறோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.

 

                                                         ஒன்பதாம் செகராசசேகரன் இவர் தான் இரண்டாம் சங்கிலி. இவரது ஆட்சிக்காலம் 1617- 1619 வரைதான் நீடித்தது.இவருக்கு மூன்று பெண் குழந்தைகள்.சங்கிலி குமாரன் அந்நியரான போர்த்துக்கேயரின் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தான். இதன்முடிவாக போர்த்துக்கேயர் கொழும்பில் இருந்தும், இந்தியா கோவாவில் இருந்தும் 5000 போர் வீரர்கள் கொண்ட படையணிகளை அனுப்பி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். சங்கிலி குமாரனை கைதுசெய்து கொழும்புக்கு கொண்டுச்சென்றப் போர்த்துக்கேயர், பின்னர் இந்தியா கோவாவிற்கு கொண்டுச்சென்று அங்கே 1621 ஆம் ஆண்டு தூக்கிலிட்டனர்.சங்கிலி குமாரனின் மூன்று பெண்பிள்ளைகளும் போர்த்துக்கேயரினால் கோவா கொண்டுச்செல்லப்பட்டு, போர்த்துகேய அதிகாரிகளினால் உதவியுடன் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சங்கிலி குமாரனின் மூத்தப் பெண் பிள்ளை போர்த்துக்கேய அரச குடும்பத்தில் திருமணம் முடித்துக்கொண்டாள். இவளின் பெயர் சொரர் மறியா டா விஸ்டாகோ  ஆகும். இவள் 1637 ஆண்டளவில் கோவாவில் ஒரு முக்கிய அரசாங்கப் பதவியில் இருந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது. மேலும், இது சம்பந்தமான ஆவணம், யாழ்ப்பாண அரசனுடைய  மகள் இவள் எனவும் குறிப்பிடுகின்றது.1974 ஆம் ஆண்டில் இரண்டாம் சங்கிலியனுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சிலை வைக்கப்பட்டது. இச்சிலையை சிற்பி செல்லையா சிவப்பிரகாசம் என்பவர் செதுக்கினார். 1994 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது இச்சிலை இடித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரசபை 1996-ல் மீண்டும் சிமெந்தினால் செய்து அதே இடத்தில் வைத்தது. 2011 ஆம் ஆண்டில் இச்சிலை யாழ் மாநகரசபையால் உடைக்கப்பட்டு இந்திய சிற்பி கலிகைப்பெருமாள் புருஷோத்தமன் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டு 2011 ஆவணி 3 ஆம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

                                                          முற்றும்

 

ரிஷி ஜெயதேவன்

தரம் 10

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.