Jump to content

பயிரை மேயும் வேலிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட்

 

friend+2.jpg

சில நாட்களுக்கு முன் சிலி நாட்டிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரை சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. பெயர் வலேரியா. இவர் ஒரு நாடக கலைஞர். அண்மையில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் சென்று அங்கு பயில்கின்ற மாணவர்களையும் சந்தித்து பயிற்சிகளை வழங்கியிருந்தார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள இவர் இரு பெண் குழந்தைகளின் தாய்;. கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இந்தியாவில் வசித்து வருகின்றார். அவருடன் இப்போது கொழும்பில் வசித்து வருகின்றவரான அமெரிக்க பெண்ணான இவோன் என்பரும் என்னை சந்தித்தித்தார். இவோன் ஒரு எழுத்தாளர். தற்போதும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றார். இவருக்கு பிடித்த துறை பொருளாதாரம். மூவரும் கதைப்பதற்கு என்றே விஹாரமாதேவி பூங்காவில் சந்தித்தோம். அவரவர் குடும்பங்கள் தற்போதைய பணிகள் என்று ஆரம்பித்த அந்த உரையாடலில் அவர்கள் இருவரும் கூறிய பல விடயங்கள் நான் வளர்ந்த, வாழ்கின்ற சமூகத்தின் வரம்புகளை தாண்டியதாகவே இருந்தது.

அவர்கள் இருவரும் தம்முடைய பாலியல் உறவுகள், தமது ஆண் நண்பர்கள் பற்றிய விளக்கம் , விவாகரத்து என்று மிக சகஜமாக பேசும் போது தட்டுத்தடுமாறி என்னுடைய படிப்பு பற்றியும், நண்பர்கள் பற்றியும், விடுதி வாழ்க்கை பற்றியும் பேசிய என்னால் எம் சமூக வரம்புகள் பற்றி தான் சிந்திக்க முடிந்தது. அதில் அவர் பகிர்ந்த இரு விடயங்கள் பற்றியதே இந்த பதிவு. முதலாவது பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி அடுத்த விடயம் எம்மவர்களின் ஆணாதிக்க சிந்தனைகள்.

'என்னுடைய இரு பெண் பிள்ளைகளையும் யாராவது ஆண் மடியில் இருத்திப் பேசினால் கூட தயவுசெய்து பிள்ளைகளை ஆசனத்தில் அமர்த்தி பேசுங்கள். பிள்ளைகளை தொட்டுப் பேசுவதெல்லாம் வேண்டாம்' என்று நான் அவர்களிடம் வெளிப்படையாக சொல்லிடுவன் என்ற கருத்தினை வலேரியா தெரிவித்தார். இன்றைய நம்முடைய பத்திரிகைகளை புரட்டுங்கள். வெளியாட்களை விடவும் வேலியே பயிரை மேய்ந்த கதைகள் எத்தனை??? தமது தந்தை, தமையன், தாத்தா, மாமா என்று தெரிந்த ஒருவரினாலேயே பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்ட குழந்தைகள், பெண்கள் எத்தனை?

நம் குழந்தைகள் சிறுவயதாகவே இருக்கும் போது அவர்களுக்கு வருகின்றவர்கள் , போகின்றவர்கள் எல்லோருக்கும் முத்தம் கொடுக்கவும், ஏதாவது பொருளைக்காட்டினால் அதை வாங்கிவிட்டு அவர்களது மடியில் அல்லது கைக்கு தாவவும் தான் பழக்குகின்றோம். நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு யாராவது உன்னை தொட்டால் எம்மிடம் வந்து சொல்ல வேண்டும் என்று பழக்கிக்கொடுக்கின்றோம்? முதலாவது எமக்குள் 'பாலியல் உறவுகள்' குறித்த கண்ணோட்டம் எவ்வாறிருக்கின்றது? நம்முள் பெரும்பாலானோர் பிறப்புறுப்புக்களிலான உறவே பாலியல் உறவு என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம். 'தொடுகை' மூலம் திருப்தியடைகின்ற எம்மை சுற்றியுள்ள வக்கிரகாரர்களையும், இவ்வாறான தொடுகைகளின் மூலம் உளவியல் ரீதியாக எதிர்காலத்தில் பாதிப்படையவுள்ள எம் குழந்தைகள் குறித்தும் எம்முள் பலருக்கு தெரிவதில்லை.... அதைவிட அவதானிப்பதில்லை என்று சொல்லாம்.

இவ்வாறு சொன்னவுடன் நவநாகரீக உடைகள் குறித்து பேசும் சிலர் இருக்கின்றார்கள். அந்தக்காலத்தில் ஜாக்கெட்டே இல்லாமல் புடவை கட்டிய கிழவிகளை விடவா இன்றைய உடைகளும் அதை அணிபவர்களும் 'செக்ஸியாக' இருக்கின்றார்கள். சுற்றியிருப்பவர்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது அன்றிலிருந்தே தொடர்கின்றதொன்று. ஆனால் தற்போது தான் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன என்ற யதார்த்தத்தினை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்னர் சமூகத்தினாலும், குடும்பத்தின் கௌரவங்களுக்காகவும் மூடி மறைத்தவைகளின் நீள்ச்சியே இன்று வெளிவருகின்ற விடயங்கள்.

அடுத்ததான என் நண்பிகள் பகிர்ந்த விடயம் 'ஆணாதிக்க சிந்தனைகள்' குறித்தது. வீட்டுக்குள் தன் மனைவியை ஒரு அடிமையாக நடத்துபவர்கள் சமூகத்தின் முன் காட்டுகின்ற சில படங்கள் பற்றிய கருத்துக்கள்... ' என்னுடைய திருமணம் காதல் திருமணம். பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாகவே என்னுடைய நாட்டை விட்டு புறப்பட்டேன். ஆரம்பத்தில் அன்பாகதானிருந்தார். என்னையும் சுதந்திர பெண்ணாக தான் நடத்தினார். ஆனால் இந்தியா வந்தவுடன் அவர் குணங்கள் மாறிவிட்டது. தன்னுடைய சமயம், கலாசாரம் என அனைத்தையும் பின்பற்ற என்னை வற்புறுத்தினார். இது தொடர்பில் எமக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுவதுண்டு. சில நேரங்களில் இது நாட்கணக்கிலும் தொடரும். அந்நாட்களில் என்னை ஒருவிதமான அருவருப்பானவளாக தான் பார்ப்பார். தப்பித்தவறி என் கை அவரில் பட்டால் கூட போதும் உடனே கையை நீரினால் கழுவுவார். நான் நாள் முழுவதும் அழுது கொண்டும் சாப்பிடாமலும் இருந்த நாட்கள் உண்டு. ஏனென்று கூட கேட்கமாட்டார். ஆனால் ஏதாவது பார்ட்டிக்கு போனால் எல்லோருக்கும் முன் என் தோளில் கையை போட்டு அரவணைத்துக்கொண்டிருப்பார், என்னை முதலில் சாப்பிட சொல்லி வற்புறுத்தி எனக்கும் பரிமாறுவார். ஒருமுறை இவ்வாறு அடுத்தவர்கள் முன் நடிக்கும் போது தான் பொதுவிடத்தில் வைத்து அவரை கேள்வி கேட்டேன். இதுவே விவாகரத்து வரை சென்றது' அதே வரிகளை மீண்டும் வாசித்து விட்டு இறுதி வரிகளை மட்டும் நீக்கிப்பாருங்கள். அநேகருடைய வலிகளை இது சொல்லும். ஆனால் என்ன 90 வீதமானவர்களுக்கு விவாகரத்தாகி இருக்காது அவ்வளவு தான். நம் குடும்ப மானம் முக்கியம்.. கல்லானாலும் புல்லானாலும் தாலி கட்டியவர் அல்லவா? இந்த கல்லுக்கும் புல்லுக்கும் தான் நெற்றியில் சிவப்பு பொட்டும் நெஞ்சில் நம் வீட்டுப்பணத்தில் வாங்கி கட்டிய தாலியும் சுமக்கின்றோம்.... நெஞ்சில் கூடவே கொஞ்சம் வலியையும் சுமக்க மாட்டோமா என்ன?

கூடவே அவர்கள் சொன்னதொரு விடயம் தங்கள் சமூகத்து ஆண்கள் இவ்வாறு விவாகரத்து ஆனாலும் 'தொடுகை தீட்டுகள்' பார்ப்பதில்லை என்பது. நம்முடைய படைப்புகளில் 'பெண்களை போற்றுகின்றோம்.. காண்பவற்றினையெல்லாம் பெண்களாகவே உவமிக்கின்றோம்.. நதிகள் முதல் புயல்கள் வரை பெண் பெயர்களை சூட்டுகின்றோம். ஆனால் நம் அருகில் நிற்கின்ற பெண்ணை மதிக்கின்றோமா? என்று நம்மையே கேட்டுக்கொண்டால் பதில்கள் மட்டும் மௌனமாக இருக்கும்...

ஆக நம்முடைய சமூதாயத்தில் மேலைத்தேய நாகரீகம் என்று சொல்லிக்கொண்டே உடையில், உணவில் மாற்றங்கள் உண்டாகி விட்டன. ஆனால் எமது குழந்தைகள் , பெண்கள் விடயங்களில் மட்டும் இன்றும் பல தசாப்தங்கள் பின் தள்ளியே இருக்கின்றோம் என்றே தோன்றுகிறது.

 

இன்றிலிருந்தாவது நம் பெண் குழந்தைகளுக்கு மாமாக்களின் மடிக்கு தாவாமல்... ஒரு வேளை மாமாவோ, அண்ணாவோ , மச்சானோ எங்கே தொட்டாலும் அதை எம்முடன் பகிர்ந்துகொள்ளவும் கற்றுக்கொடுப்போம்... அதே ஆண் குழந்தை என்றால் 'நீ சாண் என்றாலும் ஆண்' என்று சொல்லி வளர்க்காமல் 'உன் தங்கையே ஆனாலும் அவளுக்கு என்று உணர்வு, உன்னளவிலான உரிமை உண்டு' என்று சிறு வயதிலேயே 'பெண்'க்கு மதிப்பளிக்க பழக்குவோம். பயிரை மட்டும் காப்பதல்ல வேலியையும் நாம் தான் சீர்படுத்த வேண்டுமல்லவா??

 

 

http://www.penniyam.com/2014/07/blog-post_15.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு  நன்றி ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில வக்கிரம் பிடித்த பெண்களாலும் ஆண்களாலும் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் குழந்தைகள் மனதில் வக்கிரத்தை விதைப்பது அபந்தமானது.

 

குழந்தைகள்.. எல்லா உணர்வுகளையும் பெற்றோரிடம் இருந்தும்.. பெரியவர்கள் இடம் இருந்து தெரிந்து கொள்ளும் நிலையில்.. அவன் தொட்டால் வீட்ட வந்து சொல்லு என்பது எல்லாம்.. குழந்தைகளை சமூக வாழ்வியலுக்கு அப்பால் நகர்த்திச் செல்லும் சமூக வாழ்விழந்தவர்களின் வக்கிரம் என்று தான் சொல்ல வேண்டும்.

 

குழந்தைகளுக்கு பரிசம்.. பாசம்.. நேசம்.. கோபம்.. கண்டிப்பு எல்லாம் ஊட்டப்படவே வேண்டும். அதனை தவறாக பயன்படுத்தல் மட்டுமே தவிர்க்கப்பட வேண்டும். கண்காணிக்கப்பட வேண்டும். குழந்தைகளை கடும் கண்டிப்போடு வளர்ப்பது கூட நாளை அவர்கள் கடும்போக்காளர்களாக தோன்றும் நிலையை தோற்றுவிக்கலாம்.

 

சில எழுத்தாளர் தம்மை சுற்றிய சூழலை மையமாக வைத்து உலகை எடை போடுவதும்.. வகைப்படுத்தும்.. வழிகாட்டுவதும்.. எப்போது நேர்த்தியானதாக இருக்க முடியாது.

 

இது விடயத்தில்.. சரியான சமூகவியல்.. அறிவியல் அறிவும் அறிவுரையும் பெறப்படுதலே குழந்தைகளின் வளர்ந்த சமூகத்தின் சமூக வாழ்விற்கு அவசியம். ஒரு சிலரின் வக்கிரமான அனுபவங்களின் அடிப்படையில் எழும் எழுத்துக்களை சமூக வழிகாட்டலாகக் கொள்வது ஆபத்தான பின் விளைவுகளைக் கூட கொணரலாம். தாங்கள் அனுபவிக்காததை பிறர் அனுபவிக்கக் கூடாது என்ற வக்கிரமும் இதில் அடங்கி இருக்கலாம்.

 

இப்படியான எழுத்துக்கள் நிச்சயமாக சமூக.. மற்றும் அறிவியலாளர்களால் ஆய்ந்து அறியப்பட்டு முன்மொழியப்பட்டால் அன்றி.. இவற்றை ஏற்றுக் கொள்வதில்.. பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும்..!

 

துர்நடத்தையாளர்களை இலகுவாக இனங்காண முடியும். ஆனால் மனதளவில் வக்கிரம் கொண்டுள்ளோரை அடையாளம் காண்பது கடினம். அதில் எழுத்தாளர்கள் சிலரும் அடக்கம். :icon_idea:


தாதியருக்கான உளவியல் படிப்பில்..

 

ஒரு தாய் சொல்கிறாள்..

 

என் குழந்தை கேட்டால்.. அம்மா நான் எப்படிப் பிறந்தேன் என்று..

 

அதற்கு நான் அவளுக்கு நீ எப்படிப் பிறந்தாய் என்பதை... தன் பிறப்புறுப்பை காண்பித்து விளக்கினேன் என்று.

 

அதன் பின் அவள் அது தொடர்பான கேள்வியை கேட்பதில்லை என்று.

 

இதனை உளவியல் நூல் பகிர்ந்து கொள்கிறது. அதனை அது சரியான அணுகுமுறை என்றும் இயம்பி நிற்கிறது.

 

ஆனால் ஒரு வக்கிரமான எழுத்தாளன் இதே சம்பவத்தை வக்கிரமாக எழுத முடியும்.

 

எனவே எழுதப்படுவை எல்லாம் உண்மையான சமூகவியல் அக்கறையோடு அறிவியல் மயப்படுத்தியா எழுதப்படுகின்றன என்ற ஆராய்தலின் பின் தான் இப்படியான ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட வேண்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

70களில் ஃபீடோஃபைல்கள் குழந்தைகளுடன் உறவு வைப்பதற்கு அனுமதி வேண்டும் என்று ஒரு குழு பிரித்தானியாவில் இயங்கியது. அவர்களது செயற்பாடுகள் அரச உயர்மட்டங்கள் வரை ஊடுருவி இருந்ததும், இதனைப் பற்றிய அறிக்கை ஒன்று 80களில் காணாமல் போகச் செய்யப்பட்டதும், அதைப் பற்றிய புதிய விசாரணைகளும் தற்போது பிரித்தானியாவில் பரபரப்பான விடயங்களாக உள்ளன.

குழந்தைகளைத் தொட்டுப் பழகுவது இன்றைய காலகட்டத்தில் சந்தேகமான பார்வையை உண்டாக்கியுள்ளது. எதற்கு வீண்பிரச்சினை என்று பள்ளிகளில் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்துகின்றார்கள். இதைத்தான் மேலேயுள்ள கட்டுரையும் சொல்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீடோக்களை உருவாக்கியதே தவறான உளவியல் ரீதியற்ற அணுகுமுறைகள் தான்.. என்ற கண்டிப்பும் அறிவியல் ரீதியாக வெளியிடப்பட்டுள்ளன.

 

ஒரு காலத்தில்.. சிறுவர்களை மதித்த உலகம் இன்று.. சிறுவர் துஸ்பிரயோகம் என்ற ஒன்றை இனங்காட்டப் போய் அது பெருகி நிற்பதை காண்கிறோம்.

 

சில பெண்ணிய பிசாசுங்கள்.. எந்த சமூகவியல்.. அறிவியல் ஆய்வும் இன்றி தங்களின் சொந்த வக்கிர சிந்தனைகளை சமூக வெளியில் விதைப்பதும் கூட ஆபத்தான விளைவுகளை உருவாக்கலாம்.

 

குழந்தைகளை தொடக் கூடாது என்று சட்டம் இல்லை. பல முதன்னிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தொட்டுத்தான் பிள்ளைகளுக்கு படிப்பிக்கிறார்கள். அது புகட்டப்படும் கல்வி முறையில் ஒன்று. காரணம்.. பிள்ளைகள் சிலவற்றை தொடுகை மூலம் புரிந்து கொள்கின்றன. சிலவற்றை பார்வை மூலமும்.. சிலவற்றை.. கேள்வி மூலமும்.. புரிந்து கொள்ள அவ்வாறு செய்யப்படுகின்றன.

 

தனிப்பட்ட முறையில்.. தொட்டுப் பேசுவதை தவிர்க்கக் கோரலாமே தவிர.. அங்கிள் தொட்டால்.. அது கீழ்த்தரமான நோக்கம் கொண்டது ஆன்ரி தொட்டால் அது உயரிய நோக்கம் கொண்டது என்ற எண்ணப்பாடுகளை போதிக்கும் பெண்ணிய கீழ்த்தரமான எழுத்துக்கள் தான் ஆபத்தானது. ஆன்ரிகளின் தொடுகையிலும் தவறான நோக்கங்கள் இருக்கலாம். அவற்றை கடக்க வேண்டின் பிள்ளைகள் தொடுகையின் வகை உணரும் வண்ணம் வளர்க்கப்படுதல் அவசியம்..! தொடவே கூடாது என்று வளர்த்தலே பின்னர் ஆபத்துக்களை விளைவிக்கும்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸிற்கு ஆன்ரிகள் தொட்டுப் பிரச்சினை கொடுக்கவில்லை என்று நினைக்கின்றேன்.

சிறுவர் துஸ்பிரயோகம் பல்வேறு நாடுகளிலும் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படாமல் இருந்ததால் தமது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவர்கள் பலர் இருக்கின்றார்கள் என்றும் ஆய்வுகள் சொல்லுகின்றன.

இப்போதும் ஜப்பானில் மங்கா கார்ட்டூன்களிலும், அனிமேசன்களிலும் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களையும், வன்புணர்வுகளையும் கட்டுப்படுத்த சட்டத்தில் இடமில்லை என்பது ஆச்சரியமான விடயம்தான்.

http://www.bbc.co.uk/news/world-asia-27898841

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.