Jump to content

இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2014


Recommended Posts

முதல் டெஸ்ட்: முரளி விஜய் சதம்

ஜூலை 09, 2014.நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முரளி விஜய், சதம் அடித்து அசத்தினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாட்டிங்காமில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் சீனியர் வீரர் காம்பிர், ரோகித் சர்மா இடம்பெறவில்லை. ஸ்டூவர்ட் பின்னி அறிமுக வாய்ப்பு பெற்றார்.

 

விஜய் அசத்தல்:

இந்திய அணிக்கு முரளி விஜய், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் முரளி விஜய் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். தவான் (12) ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெளியேறினார். இதன் பின் வந்த புஜாரா, முரளி விஜய்க்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார். ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் முரளி விஜய் இரண்டு பவுண்டரி விளாசினார்.

 

தோனி அரைசதம்:

ஆண்டர்சன் வேகத்தில் புஜாரா (38) வெளியேறினார். கோஹ்லி(1) ஏமாற்றினார். ரகானேவும் 32 ரன்களில் திரும்பினார். இதன் பின் வந்த தோனி, முரளி விஜய்யுடன் கைகோர்த்தார். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ‘ஸ்கோர்’ சீராக உயர்ந்தது. முரளி விஜய் டெஸ்ட் அரங்கில் நான்காவது சதத்தை பதிவு செய்தார். ரூட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தோனி 30வது அரை சதம் எட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் (122), தோனி (50) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/07/1404928020/muralivijaycricket.html

Link to comment
Share on other sites

புவனேஷ்வர், ஷமி சாதனை
ஜூலை 10, 2014.

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி அரைசதம் அடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் இந்திய அணி 457 ரன்கள் குவித்தது.

 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் (122), கேப்டன் தோனி (50) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு முரளி விஜய், தோனி ஜோடி பொறுப்பாக ஆடியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த போது, ஆண்டர்சன் ‘வேகத்தில்’ முரளி விஜய் (146) அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா (25) ஏமாற்றினார். கேப்டன் தோனி (82) ‘ரன்–அவுட்’ ஆனார். அறிமுக வீரர் ஸ்டூவர்ட் பின்னி (1), இஷாந்த் சர்மா (1) சொற்ப ரன்னில் ‘பெவிலியன்’ திரும்பினர்.

 

பின் இணைந்த புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் டெஸ்ட் அரங்கில் தங்களது முதல் அரைசதத்தை பதிவு செய்தனர். பத்தாவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த போது, புவனேஷ்வர் குமார் (58) அவுட்டானார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 457 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஷமி (51) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3, பிராட், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

குக் ஏமாற்றம்:

பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக் (5) ஏமாற்றினார். இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. ராப்சன் (20), பாலன்ஸ் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் முகமது ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

3

இங்கிலாந்துக்கு எதிராக 457 ரன்கள் எடுத்த இந்திய அணி, நாட்டிங்காம் மைதானத்தில் தனது 3வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ஏற்கனவே இங்கு  521 (1996), 481 (2007) ரன்கள் எடுத்திருந்தது.

 

10

பேட்டிங்கில் அசத்திய இந்தியாவின் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஜோடி 111 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்டில், 10வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது. இதற்கு முன், ஓவல் மைதானத்தில் 2007ல் நடந்த டெஸ்டில், இந்தியாவின் கும்ளே, ஸ்ரீசாந்த் ஜோடி 10வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது.

* டெஸ்ட் அரங்கில் 10வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி வரிசையில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில், 2004ல் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில், 10வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்த இந்தியாவின் ஜாகிர் கான், சச்சின் ஜோடி உள்ளது.

6

இந்தியாவின் முரளி விஜய், கேப்டன் தோனி ஜோடி 5 விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் 5 விக்கெட்டுக்கு 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த 6வது இந்திய ஜோடி என்ற பெருமை பெற்றது.

 

http://sports.dinamalar.com/2014/07/1405014059/BhuvneshwarKumarcricket.html

 

 

Link to comment
Share on other sites

இந்திய வேகங்கள் அசத்தல்
ஜூலை 11, 2014.

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இஷாந்த், புவனேஷ்வர் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் அசத்தினர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 457 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இரண்டாம் நாள் முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. ராப்சன் (20), பாலன்ஸ் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

விக்கெட் சரிவு:

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஷமி பந்துவீச்சில் ராப்சன் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்தார். தன் பங்கிற்கு இஷாந்த் பந்தை பாலன்ஸ் பவுண்டரிக்கு விரட்டினார்.  இருவரும் அரைசதம் கடந்தனர்.

 

இஷாந்த் அசத்தல்:

இதற்கு பின் இஷாந்த் மிரட்டினார். இவரது ‘வேகத்தில்’ ராப்சன் (59), பாலன்ஸ் (71), இயான் பெல்(25) அவுட்டாகினர். மொயின் அலி 14 ரன்களில் திரும்பினார். புவனேஷ்வர் வேகத்தில் பிரையர் (5), ஸ்டோக்ஸ் (0) வெளியேறினர். பின் வந்த பிராட், ஜோ ரூட்டுடன் கைகோர்த்தார். ஷமி ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரி விளாசினர்.

 

புவனேஷ்வர் மிரட்டல்:

இஷாந்த் பந்துவீச்சில் பிராட் மூன்று பவுண்டரி அடித்து மிரட்டினார். தவிர, இந்த ஜோடி ‘பாலோ–ஆனை’ தவிர்த்தது. எட்டாவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தபோது, பிராட் (47) ஆட்டமிழந்தார். மீண்டும் வந்த புவனேஷ்வர் இம்முறை பிளங்கெட்டை(7) வெளியேற்றினார். ஜோ ரூட் அரை சதம் எட்டினார்.

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்து, 105 ரன்கள் பின்தங்கியிருந்தது. ஜோ ரூட் (78), ஜேம்ஸ் ஆண்டர்சன் (23) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/07/1405098912/ishantindia.html

 

 

இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 4, புவனேஷ்வர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

Link to comment
Share on other sites

இங்கிலாந்தில் 'இந்திய ஆட்டக்களம்’ : டிரெண்ட் பிரிட்ஜ் பிட்ச் அமைப்பாளர் மன்னிப்பு
 

 

டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டிக்காக அமைக்கப்பட்ட பிட்ச் பற்றி இங்கிலாந்து வீரர்களிடையே அதிருத்தி எழுந்துள்ளது. இந்தியாவிற்காக இந்தியாவில் இருப்பது போல பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனங்கள் எழவே பிட்ச் தயாரிப்பாளரான ஸ்டீவ் பர்க்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

பிட்சில் பந்துகளில் வேகம் இல்லை, ஸ்விங்கும் இல்லை. ஒன்றுமேயில்லை என்று ஆண்டர்சன் போன்ற வீச்சாளர்கள் கூறியுள்ளனர். 5 நாட்கள் நல்ல கேட் கலெக்‌ஷன் வர வேண்டும் என்பதற்காக பிட்ச் அமைக்கப்பட்டதாக முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

பஞ்சு மெத்தை ஆட்டக்களம் இங்கிலாந்தில் எப்போதும் அமைக்கப்பட மாட்டாது. காரணம் அங்கு பிட்ச் அமைப்பாளர்களை அணியின் கேப்டன் நிர்பந்தம் செய்ய முடியாது. ஓரளவுக்கு பிட்ச் கியூரேட்டர்கள் சுதந்திரமாகவே அங்கு செயல்படுவர். மேலும் பேட், பந்து இரண்டுக்கும் சவாலான போட்டி இருப்பதை அவர்கள் விரும்புவார்கள்.

ஆனால் நேற்றைய பிட்சில் புல் இருந்ததற்கான அறிகுறி கூட இல்லை. பேட்டிங் ஆட்டக்களமாக இருந்ததாலேயே தோனி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஜோகன்னஸ்பர்கிலும் பேட்டிங் தேர்வு செய்தாரே என்று கேட்கலாம், ஆனால் முதல் நாள் பிட்சில் ஈரப்பதம் கொஞ்சம் இருந்ததால் பந்துகள் அவ்வளவாக பவுன்ஸ் ஆகாது. ஸ்விங்கும் இருக்காது. பிட்ச் வெயிலில் காயக்காய வேகம்பிடிக்கும். ஆகவே அங்கு பேட்டிங் எடுத்ததும் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருந்ததால்தான்.

2011ஆம் ஆண்டு இந்திய அணி 0-4 என்று தோற்றதற்குக் காரணம் பிட்சில் பவுன்ஸ் இருந்ததும், பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆனதுமே. இந்த முறை முதல் நாள் பிட்சிலேயே இவற்றைக் காண முடியவில்லை.

வர்ணனை செய்துகொண்டிருந்த வாசிம் அக்ரம், "பந்தில் வேகமும் இல்லை, பிட்சில் பவுன்சும் இல்லை, ஆட்டத்தில் எதுவும் நடக்கவும் இல்லை” என்றார்.

80 ரன்கள் அடித்த பிறகும் கூட மட்டையான இந்த பிட்சில் லியாம் பிளங்கெட் வீசிய ஷாட் பிட்ச் பந்தில் லேசாக அடிவாங்கினார் என்றால் உயிரோட்டமுள்ள பிட்சில் அவர் அரைசதம் அடிக்க மிகுந்த சிரமப்பட்டிருப்பார் என்பதே உண்மை.

 

இந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பிட்ச் பற்றி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்:

”இந்தப் பிட்சில் ஆடுவது வெறுப்பாக உள்ளது, இப்போது ஒன்றும் செய்ய முடியாது, மீதமுள்ள 6 விக்கெட்டுகளை வீழ்த்துவது எப்படி என்பதில் எனது கவனம் உள்ளது.

பிட்ச் தயாரிப்பாளர் ஸ்டீவ் பர்க்ஸ் கூறுகையில், "உயிரோட்டமுள்ள பிட்சையே தயாரிக்க நினைத்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு அமையவில்லை, பிட்சிற்கு அடியே நிறைய ஈரப்பதம் உள்ளது இதனால்தான் பந்துகளில் வேகம் இல்லை. வெயில் பட்டு பிட்ச் கொஞ்சம் காயத் தொடங்கினால் மாற்றம் ஏற்படலாம்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6197216.ece

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணி வெற்றிக்கு 20 விக்கெட்டுக்களை எடுக்க வேண்டும். அஸ்வினை இந்த அணியில் சேர்த்து இருக்க வேண்டும். இவர் துடுப்பாட்டமும் பறவாய் இல்லை.

Link to comment
Share on other sites

10 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்- ஜேம்ஸ் அண்டர்சன் ஜோடி புதிய சாதனை
2014-07-12 17:40:06

 

தற்போது நொட்டிங்ஹாமில் நடைபெறும் இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில்  ஜோ ரூட், ஜேம்ஸ்  அண்டர்சன் ஆகியோர் இச்சாதனையை முறியடித்துள்ளனர். சற்றுமுன்வரை இவ்விருவரும் 10 ஆவது விக்கெட்டுக்காக 163 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

5 ஆவது வரிசை வீரரான ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 131 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 11 ஆவது வரிசை துடுப்பாட்ட வீரரான ஜேம்ஸ் அண்டர்சன் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 461 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6140#sthash.anw1b3GT.dpuf

Link to comment
Share on other sites

அஷ்வின் என்ன குப்பைத்தொட்டியா: மார்ட்டின் குரோவ் ஆவேசம்
ஜூலை 12, 2014.

 

நாட்டிங்காம்: ‘‘முதல் டெஸ்டில் அஷ்வினை நீக்கியது புரியாத புதிராக உள்ளது. இவரை, ரோட்டின் ஓரத்தில் வைக்கப்படும் குப்பைத்தொட்டியை போல கருதுகின்றனர்,’’ என, மார்ட்டின் குரோவ் தெரிவித்தார்.

 

நாட்டிங்காமில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் தேர்வு ஏமாற்றம் அளித்தது. அனுபவ சுழற்பந்துவீச்சாளரான தமிழகத்தின் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். இதன் காரணமாக, இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்தியா திணறியது.

 

இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் கூறியது:

டெஸ்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வீரர் அஷ்வின் தான். பின்வரிசை பேட்ஸ்மேனாக சராசரியாக 40 ரன்கள் எடுத்துள்ளார். தோனி, கோஹ்லி, புஜாராவுக்கு அடுத்து அஷ்வினை தான் தேர்வு செய்ய வேண்டும். தற்போது, இவரை வெறும் பார்வையாளராக வைத்திருப்பதன் காரணத்தை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். இவர் வங்கியின் மானேஜர் போன்றவர். ஆனால், கொள்ளையர் போல நடத்துகின்றனர். இவரை, ரோட்டின் ஓரத்தில் வைக்கப்படும் குப்பைத்தொட்டி போல கருதுகின்றனர். அதே நேரத்தில், ஸ்டூவர்ட் பின்னியை சிறந்த டெஸ்ட் வீரராக போற்றி, அறிமுக வாய்ப்பு அளிக்கின்றனர்.

 

இங்கிலாந்தை நிலைகுலையச் செய்ய சிறந்த ‘ஸ்பின்னர்’ தேவை. இதற்கு அஷ்வின் தான் முதல் தேர்வாக இருக்க வேண்டும். இவரால் 8வது வீரராக பேட் செய்யவும் முடியும். இந்திய டெஸ்ட் வரலாற்றில் ‘ஆல்–ரவுண்டராக’ சாதனை படைத்த இவரை, ஒரு மூலையில் அமரச் செய்திருப்பது புரியாத புதிராக உள்ளது.

இவ்வாறு மார்ட்டின் குரோவ் கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/07/1405179578/ashwinindiacricket.html

 

 

Link to comment
Share on other sites

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் சமநிலை நோக்கி?
ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2014

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலை முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்தப் போட்டியின் இறுதி நாள் இன்றாகும். நேற்றைய நான்காம் நாள் முடிவில் இந்தியா அணி தமது இரண்டாம் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களைப் பெற்று 128 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.


இதில் முரளி விஜய் 52 ஓட்டங்களையும், செற்றேஸ்வர் புஜாரா 55 ஓட்டங்களையும் பெற்றனர். மூயேன் அலி இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். முன்னதாக தமது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 496 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 154 ஓட்டங்களையும், இறுதித் துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் அன்டர்சன்   81 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரும் இணைந்து இறுதி விக்கெட் இணைப்பாட்டமாக 198 ஓட்டங்களைப் பெற்றனர். இறுதி விக்கெட் இணைப்பாட்டமாக பெறப்பட்ட கூடுதலான ஓட்டங்கள் என்ற சாதனையை இந்த ஜோடி பெற்றுள்ளது. 111 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து சாதனையாக இந்த சாதனை புரியப்பட்டுள்ளது. கரி பலன்ஸ் 71 ஓட்டங்களையும், சாம் ரொப்சன் 59 ஓட்டங்களையும் இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தில் பெற்றனர். புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்களையும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்களையும், மொஹமட் சமி 2 விக்கெட்களையும் இந்தியாவின் பந்துவீச்சில் கைப்பற்றினர்.

இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 457 ஓட்டங்களைப் பெற்று  சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் முரளி விஜய் 146 ஓட்டங்களையும், டோனி 82 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 58 ஓட்டங்களையும், மொஹமட் சமி 51 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி விக்கெட் இணைப்பாட்டமாக மொஹமட் சமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் 112 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கெட்களையும், ஸ்டுவோர்ட் ப்ரோட், பென் ஸ்டோக் ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/117800-2014-07-13-02-42-07.html

Link to comment
Share on other sites

கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் டிரா

 

நாட்டிங்காம்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி 'டிரா' ஆனது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரன்ட்பிரிட்ஜில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 457 ரன்கள், இங்கிலாந்து 496 ரன்கள் எடுத்தன.

 

நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு ஸ்டுவர்ட் பின்னி (78), புவனேஷ்வர் (63*) அரைசதம் அடித்து கைகொடுத்தனர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 391 ரன்கள் எடுத்திருந்த போது 'டிக்ளேர்' செய்தது. போட்டியில் 15 ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்ததால் இங்கிலாந்து கேப்டன் குக், போட்டியை முடித்துககொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து இரு அணி கேப்டன்கள் சம்மதத்தின் பேரில் முதல் டெஸ்ட் 'டிராவில்' முடிந்தது.

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1020699

Link to comment
Share on other sites

லார்ட்சில் ரகானே ராஜ்யம்: மீண்டது இந்தியா
ஜூலை 17, 2014.

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், அஜின்கியா ரகானே சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. ‘வேகத்தில்’ அசத்திய ஆண்டர்சன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று  துவங்கியது. இரு அணிகளும், முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

விஜய் ஏமாற்றம்:

இந்திய அணிக்கு முரளி விஜய், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆண்டர்சன் ‘வேகத்தில்’ தவான் (7) மீண்டும் ஏமாற்றினார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில், ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் முரளி விஜய் கொடுத்த ‘கேட்சை’ இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மாட் பிரையர் கோட்டைவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய முரளி விஜய் (24), பிளங்கட் பந்தில் அவுட்டானார்.

 

தோனி சொதப்பல்:

அடுத்து வந்த விராத் கோஹ்லி (25), ஆண்டர்சன் பந்தில் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் ‘வேகத்தில்’ புஜாரா (28) போல்டானார். கேப்டன் தோனி (1), ஸ்டூவர்ட் பிராட்டிடம் சிக்கினார். மொயீன் அலி ‘சுழலில்’ ரவிந்திர ஜடேஜா (3) ‘பெவிலியன்’ திரும்பினார்.

 

ரகானே ராஜ்யம்:

பின் இணைந்த அஜின்கியா ரகானே, புவனேஷ்வர் குமார் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பொறுப்பாக ஆடிய இவர்கள், இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளிக்க, அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது.  எட்டாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த போது, பிராட் ‘வேகத்தி்ல்’ புவனேஷ்வர் (36) போல்டானார். அபாரமாக ஆடிய ரகானே, ஆண்டர்சன் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். இவர், 103 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ஷமி (14), இஷாந்த் சர்மா (12) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 4, பிராட் 2, பிளங்கட், ஸ்டோக்ஸ், மொயீன் அலி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

 

9

அபாரமாக ஆடிய ரகானே, லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த 9வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக வினோ மன்கத் (184 ரன், 1952), வெங்சர்க்கார் (1979–103 ரன், 1982–157 ரன், 1986–126* ரன்), குண்டப்பா விஸ்வநாத் (113, 1979), ரவி சாஸ்திரி (100, 1990), அசார் (121, 1990), கங்குலி (131, 1996), அகார்கர் (109*, 2002), டிராவிட் (103*, 2011) ஆகியோர் லார்ட்சில் சதம் அடித்தனர்.

 

233

இந்தியாவின் முரளி விஜய் விக்கெட்டை கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், அதிக விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து பவுலர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இதுவரை 55 டெஸ்டில் 233 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் பிரட் ட்ருமேன் (229), இயான் போத்தம் (226) உள்ளனர்.

72

லார்ட்ஸ் மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில், சக சீனியர் வீரர் இயான் போத்தம்மை (69 விக்கெட், 15 டெஸ்ட்) முந்தி, முதலிடம் பிடித்தார் ஆண்டர்சன். இங்கு 16வது டெஸ்டில் விளையாடும் ஆண்டர்சன், இதுவரை 72 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

65

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலர்கள் வரிசையில், ஆண்டர்சன் முதலிடம் பிடித்தார். இந்தியாவுக்கு எதிராக 16வது டெஸ்டில் விளையாடும் இவர், இதுவரை 65 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இவரை அடுத்து அன்டர்வுட், வில்லிஸ் தலா 62 விக்கெட் சாய்த்தனர்.

250

இந்திய கேப்டன் தோனியை அவுட்டாக்கிய ஸ்டூவர்ட் பிராட், டெஸ்ட் அரங்கில் தனது 250வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 8வது இங்கிலாந்து பவுலரானார். இதுவரை இவர், 71 டெஸ்டில் 251 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இயான் போத்தம் (383 விக்கெட்), ஆண்டர்சன் (361), வில்லிஸ் (325) ஆகியோர் உள்ளனர்.

 

 

http://sports.dinamalar.com/2014/07/1405619697/rahaneindiacricket.html

Link to comment
Share on other sites

புவனேஷ்வர் அசத்தல் பந்துவீச்சு: கேரி பேலன்ஸ் சதம்

ஜூலை 18, 2014.

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில், இந்தியாவின் புவனேஷ்வர் குமார் ‘வேகத்தில்’ அசத்த, இங்கிலாந்து அணி ரன் சேர்க்க திணறுகிறது. பொறுப்பாக ஆடிய கேரி பேலன்ஸ் மட்டும் சதம் அடித்து ஆறுதல் தந்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ஷமி (14), இஷாந்த் சர்மா (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஷமி ஏமாற்றம்:

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. இந்தியாவின் முகமது ஷமி (19), பென் ஸ்டோக் பந்தில் அவுட்டானார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 295 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இஷாந்த் சர்மா (12) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4, ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் தலா 2, பிளங்கட், மொயீன் அலி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

புவனேஷ்வர் அசத்தல்:

பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு, புவனேஷ்வர் குமார் நெருக்கடி தந்தார். இவரது அசத்தல் பந்துவீச்சில், கேப்டன் அலெஸ்டர் குக் (10), சாம் ராப்சன் (17), இயான் பெல் (16) சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினர். அடுத்து வந்த ஜோ ரூட் (13), ரவிந்திர ஜடேஜாவின் ‘சுழலில்’ சிக்கினார்.

பேலன்ஸ் அபாரம்:

பின் இணைந்த கேரி பேலன்ஸ், மொயீன் அலி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. அபாரமாக ஆடிய பேலன்ஸ், ஸ்டூவர்ட் பின்னி பந்தை பவுண்டரிக்கு விரட்டி, டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்த போது, முரளி விஜய் பந்தில் மொயீன் அலி (32) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய பேலன்ஸ் (110), புவனேஷ்வர் ‘வேகத்தில்’ வெளியேறினார்.

இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்து, 76 ரன்கள் பின்தங்கி இருந்தது. மாட் பிரையர் (2), லியாம் பிளங்கட் (4) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

295

மொத்தம் 295 ரன்கள் எடுத்த இந்திய அணி, லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில், முதல் இன்னிங்சில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 1952ல் நடந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்தது.

100

இந்தியாவின் முகமது ஷமி கொடுத்த ‘கேட்சை’ அருமையாக பிடித்த இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், டெஸ்ட் அரங்கில் தனது 100வது ‘கேட்சை’ பதிவு செய்தார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 7வது இங்கிலாந்து பீல்டரானார். முதலிடத்தில் ஸ்டிராஸ் (121) உள்ளார்.

56

குக், ராப்சன், பேலன்ஸ் கொடுத்த ‘கேட்சை’ பிடித்த கேப்டன் தோனி (56), இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில், அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விளங்கிய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவரை அடுத்து, முன்னாள் இங்கிலாந்து கீப்பர் ஆலன் நாட் (54) உள்ளார்.

110

அபாரமாக ஆடிய இங்கிலாந்தின் கேரி பேலன்ஸ் 110 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 2வது சதம் அடித்த இவர், தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். முன்னதாக இலங்கைக்கு எதிராக 104 ரன்கள் எடுத்தார். தவிர இவர், லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்தடுத்து சதம் அடித்தார்.

1

இங்கிலாந்தின் மொயீன் அலியை அவுட்டாக்கிய இந்தியாவின் முரளி விஜய், டெஸ்ட் அரங்கில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார்.

http://sports.dinamalar.com/2014/07/1405703923/BhuvneshwarKumarcricket.html

Link to comment
Share on other sites

முரளி விஜய் அரைசதம்: இந்திய அணி முன்னிலை

ஜூலை 19, 2014.

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் துாணாக நின்று அரைசதம் கடந்த முரளி விஜய், இந்திய அணிக்கு நம்பிக்கை தந்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 295 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. மாட் பிரையர் (2), பிளங்கட் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

புவனேஷ்வர் அபாரம்:

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. பிளங்கட் சற்று வேகமாக ரன்கள் சேர்த்தார். முகமது ஷமி வேகத்தில், 23 ரன்னுக்கு அவுட்டான பிரையர், சரிவைத் துவக்கி வைத்தார்.

அடுத்து வந்த புவனேஷ்வர் குமார், பென் ஸ்டோக்சை ‘டக்’ அவுட்டாக்கினார். அதே ஓவரில் ஸ்டூவர்ட் பிராட்டும் (4) அவுட்டாகினார்.

மறுமுனையில் சற்று வேகம் காட்டிய பிளங்கட், புவனேஷ்வர் குமார் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்தார். முதல் டெஸ்டில் தன்னை ‘தள்ளி’ சர்ச்சை கிளப்பிய ஆண்டர்சனை (19), ரவிந்திர ஜடேஜா வெளியேற்ற, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்த பிளங்கட் (55), அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 6, ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தவான் ஏமாற்றம்:

முதல் இன்னிங்சில் 24 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. டெஸ்ட் அரங்கில் சமீபத்திய போட்டிகளில் (2, 12, 29, 7 ரன்கள்) ஏமாற்றிய ஷிகர் தவான் நேற்றும் சொதப்பினார்.

இவர், 31 ரன்னுக்கு ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டாகினார். அடுத்து முரளி விஜயுடன், புஜாரா இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பவுலர்களை கவனமாக எதிர்கொண்டது.

திடீர் சரிவு:

இரண்டாவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த போது, பிளங்கட் பந்தில் புஜாரா (43) அவுட்டானார். இவரது அடுத்த பந்தில், விராத் கோஹ்லி (0), வந்த வேகத்தில் போல்டாகி மீண்டும் ஏமாற்றினார்.

ரகானே ‘அவுட்’ சர்ச்சை:

முதல் இன்னிங்சில் சதம் அடித்த ரகானே, இம்முறை 5 ரன்னுக்கு ஸ்டூவர்ட் பிராட் பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானார். பந்து இவரது கை பட்டையில் பட்டு பறந்தது. இதனை ஓடிச் சென்று பிடித்த விக்கெட் கீப்பர் பிரையர் ‘அப்பீல்’ செய்தார். அம்பயர் ஆக்சன் போர்டு (ஆஸி.,), ரகானேவின் ‘கிளவுசில்’ பட்டதாக நினைத்து தவறாக ‘அவுட்’ கொடுத்தார். ‘ரீப்ளேயில்’, பந்து ‘கிளவுசில்’ படவேயில்லை என்பது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து ஒரு விக்கெட்டுக்கு 118 ரன்கள் என்றிருந்த இந்திய அணி, அடுத்த 5 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதற்கு பின் மனம் தளராமல் போராடிய முரளிவிஜய், ஆண்டர்சன் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்து, இத்தொடரில் 2வது, டெஸ்ட் அரங்கில் 6வது அரைசதம் கடந்தார்.

இவருடன் இணைந்த கேப்டன் தோனி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து, 145 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. முரளி விஜய் (59), தோனி (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று நான்காவது நாளில், இந்திய வீரர்கள் சற்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், இங்கிலாந்து அணிக்கு வலுவான இலக்கை நிர்ணயித்து நெருக்கடி தரலாம்.

மூன்றாவது வீரர்

நேற்று 82 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், தனது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார்.

* லார்ட்ஸ் மைதானத்தில் 6 விக்கெட் கைப்பற்றிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.

* இம்மைதானத்தில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய இரண்டாவது இந்திய வீரர் இவர் தான். இதற்கு முன், 1936ல் அமர்சிங் 35 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். பிஷன்சிங் பேடி (226/6 விக்.,) 3வது இடத்தை பெற்றார்.

* முதல் டெஸ்டில் 5, நேற்று 6 விக்கெட் சாய்த்த புவனேஷ்வர் குமார், இங்கிலாந்து மண்ணில் இரு 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய 8 வது இந்திய வீரர் ஆனார்.

* தவிர, அடுத்தடுத்த இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் இவர் தான்.

0, 0, 0

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், கடைசியாக பங்கேற்ற நான்கு ஒருநாள் போட்டி மற்றும் தற்போதைய டெஸ்டில் எடுத்த ரன்கள் 0, 5, 4, 0, 0, 0

1936

கடந்த 1936ல் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி முதலில் களமிறங்கி 147 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 134 ரன்னுக்கு சுருண்டது.

இதன் பின் லார்ட்சில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த 7 டெஸ்டிலும், முன்னிலை பெறவே இல்லை.

11

கடந்த 2013ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சென்னை டெஸ்டில் அறிமுகம் ஆனார் புவனேஷ்வர் குமார். இவரது முதல் 11 இன்னிங்சில் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 9. ஆனால், கடைசி இரு இன்னிங்சில், மொத்தம் 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

லண்டனில் கோஹ்லி–அனுஷ்கா

இந்திய அணியின் விராத் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் நல்ல ‘நண்பர்களாக’ உள்ளனர். இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கம்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திணறும் கோஹ்லி, முதல் டெஸ்டில் 1, 8 மற்றும் லார்ட்சின் முதல் இன்னிங்சில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதனால், இவருக்கு ஆறுதல் தர, துருக்கியில் ஷூட்டிங்கிற்கு சென்ற அனுஷ்கா, அங்கிருந்து நேராக லண்டனுக்கு போயுள்ளார்.

இவர், இந்திய வீரர்கள் தங்கியுள்ள மத்திய லண்டன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளார். இங்கிருந்து மாலையில் இருவரும் ஒன்றாக வெளியே கிளம்பினர்.

இவரது வருகை, விராத் கோஹ்லிக்கு உற்சாகம் தந்து, பேட்டிங்கில் எழுச்சி கண்டால் நல்லது.

http://sports.dinamalar.com/2014/07/1405790685/kohliindiacricket.html

Link to comment
Share on other sites

ஜடேஜா, புவனேஷ்வர் அரைசதம்: வலுவான நிலையில் இந்தியா
ஜூலை 20, 2014.

 

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார் அரைசதம் அடிக்க, இந்திய அணி, வலுவான நிலையை எட்டியது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட், ‘டிரா’வில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 295, இங்கிலாந்து 319 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் (59), தோனி (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

விஜய் பரிதாபம்:

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு கேப்டன் தோனி (19) ஏமாற்றினார். அடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி (0), மொயீன் அலி ‘சுழலில்’ சிக்கினார். பொறுப்பாக ஆடிய முரளி விஜய் (95), ஆண்டர்சன் பந்தில் அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவி்ட்டார்.

 

ஜடேஜா அபாரம்:

பின் இணைந்த ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், இந்திய அணிக்கு வலுவான முன்னிலை பெற்றுத் தந்தனர். அபாரமாக ஆடிய ஜடேஜா, டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். எட்டாவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்த போது, ஸ்டோக்ஸ் ‘வேகத்தில்’ ஜடேஜா (68) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த முகமது ஷமி (0), மொயீன் அலியிடம் சரணடைந்தார்.

 

புவனேஷ்வர் அரைசதம்:

மறுமுனையில் அசத்திய புவனேஷ்வர் குமார், ஸ்டோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, டெஸ்ட் அரங்கில் தனது 3வது அரைசதம் அடித்தார். இவர், 52 ரன்கள் எடுத்த போது ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டானார். இரண்டாவது இன்னிங்சில், இந்திய அணி 342 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 318 ரன்கள் முன்னிலை பெற்றது. இஷாந்த் சர்மா (0) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், பிளங்கட் தலா 3, மொயீன் அலி 2, ஆண்டர்சன், பிராட் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின், 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு சாம் ராப்சன் (7) ஏமாற்றினார். தேநீர் இடைவேளைக்கு சற்று முன், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்து, 301 ரன்கள் பின்தங்கி இருந்தது. கேப்டன் அலெஸ்டர் குக் (5), கேரி பேலன்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

முதல் முறை

அபாரமாக ஆடிய இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 68 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். முன்னதாக கடந்த ஆண்டு டில்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 43 ரன்கள் எடுத்தார்.

 

சாதனை

அசத்தலாக ஆடிய இந்தியாவின் புவனேஷ்வர் குமார் (52), தனது 3வது அரைசதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில், ஒரு தொடரில் 9வது வீரராக களமிறங்கி, மூன்று அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

‘வில்லன்’ ரூட்

ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில், ஒரு ரன் எடுத்த நிலையில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை இங்கிலாந்தின் ஜோ ரூட் கோட்டைவிட்டார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட புவனேஷ்வர் 52 ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். இதனால் இங்கிலாந்து ரசிகர்களின் வில்லனாக ஜோ ரூட் மாறினார்.

 

 

http://sports.dinamalar.com/2014/07/1405876602/jadejacricket.html

Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

 

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட், 'டிரா' ஆனது.இரண்டாவது டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 295, இங்கிலாந்து 319 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 342 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 319 ரன்களை நிர்ணயித்தது. இந்த கடின இலக்கை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 223 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடந்த 1986ம் ஆண்டுக்குப்பின், லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பெறும் டெஸ்ட் வெற்றி இது. மேலும், கடந்த 2011ம் ஆண்டுக்குப்பின், அந்நிய மண்ணில் இந்திய அணி பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1026949

Link to comment
Share on other sites

சபாஷ் இஷாந்த்: லார்ட்சில் இந்தியா வெற்றி

ஜூலை 20, 2014

லண்டன்: பரபரப்பான லார்ட்ஸ் டெஸ்டில் ‘வேகத்தில்’ மிரட்டிய இஷாந்த் சர்மா 7 விக்கெட் கைப்பற்ற, இந்திய அணி, இங்கிலாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட், ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் வரலாற்று சிறப்புமிக்க லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 295, இங்கிலாந்து 319 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 342 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நான்காவது நாள் ஆட்ட முடிவில், 4 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து, 214 ரன்கள் பின்தங்கி இருந்தது.

ரூட் அரைசதம்: நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஜோ ரூட், மொயீன் அலி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஒரு மணி நேரத்தில் 35 ரன்கள் மட்டும் எடுத்தனர். பின், இஷாந்த் சர்மா ஓவரில் 3 பவுண்டரி அடித்த ஜோ ரூட், தனது 5வது அரைசதம் கடந்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 101 ரன்கள் சேர்த்தது. உணவு இடைவேளைக்கு சற்று முன், இஷாந்த் சர்மா ‘பவுன்சரில்’ மொயீன் அலி (39) அவுட்டாக, சற்று ஆறுதல் கிடைத்தது. இது தான் போட்டியில் திருப்பம் ஏற்பட உதவியது.

இங்கிலாந்து ‘சரண்டர்: உணவு இடைவேளைக்குப் பின் இஷாந்த் சர்மா விஸ்வரூபம் எடுத்தார். இவரது அசுர வேகப்பந்துவீச்சில் இங்கிலாந்து அணி அப்படியே ‘சரண்டர்’ ஆனது. முதலில் மாட் பிரையர் (12) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய இஷாந்த், அடுத்து வந்த பென் ஸ்டோக்சை, ‘டக்’ அவுட்டாக்கினார். இந்திய அணிக்கு நீண்ட நேரமாக தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ஜோ ரூட்டையும் (66) இதே ஓவரில், இஷாந்த் சர்மா பெவிலியன் அனுப்ப, வெற்றி நம்பிக்கை அதிகரித்தது.

அடுத்த சில நிமிடங்களில் ஸ்டூவர்ட் பிராட்டையும் (8) வெளியேற்றினார் இஷாந்த் சர்மா. உணவு இடைவேளையின் போது, 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் என்றிருந்த இங்கிலாந்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து, 216க்கு 9 என, தடுமாற, அணியின் தோல்வி உறுதியானது.

சபாஷ் ஜடேஜா: கடைசியில் ஆண்டர்சனை (2), ரவிந்திர ஜடேஜா ரன் அவுட்டாக்க, கேப்டன் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் வெற்றி உற்சாகத்தில் மிதந்தனர். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 223 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1–0 என, முன்னிலை பெற்றது.

ஆட்டநாயகனாக இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது டெஸ்ட் வரும் 27ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது.

கபில்தேவுக்கு அடுத்து

கடந்த 1986ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி (341, 136/5 ரன்கள்) லார்ட்ஸ் டெஸ்டில், இங்கிலாந்து அணியை (294, 180 ரன்கள்), 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் பின், தோனியின் இந்திய அணி இங்கு வென்றுள்ளது.

புதிய வரலாறு

கடந்த 1986ல் இந்திய அணி லார்ட்சில் வென்றது. இப்போது 28 ஆண்டுகள் கழித்து, இம்மைதானத்தில் 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, புதிய வரலாறு படைத்தது.

3 ஆண்டு இடைவெளி

கடந்த 1983ல் கபில்தேவின் இந்திய அணி உலக கோப்பை வென்றது. அடுத்த மூன்று ஆண்டுகளில், அதாவது 1986ல் லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி முதல் வெற்றியை பெற்றது. இதேபோல, 2011ல் உலக கோப்பை வென்றது தோனி தலைமையிலான இந்திய அணி. சரியாக 3 ஆண்டுகள் கழித்து, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் வென்றது, அபூர்வமாக இருந்தது.

தோல்விக்கு முற்றுப்புள்ளி

கடந்த 2011ல் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி முதல் டெஸ்டில் வென்றது. இதன் பின் அடுத்த இரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது. பின், இங்கிலாந்து (0–4), ஆஸ்திரேலியா (0–4) தொடரை முழுமையாக இழந்தது.

பின், தென் ஆப்ரிக்கா (0–1), நியூசிலாந்துக்கு எதிரான (0–1) தலா இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 தோல்வி, 2 ’டிரா’ செய்தது. இப்படி, அன்னிய மண்ணில் பங்கேற்ற 15 டெஸ்டில், 10 தோல்வி, 5 ‘டிரா’ செய்த இந்திய அணி, 16வது டெஸ்டில் தான் வெற்றி பெற்றுள்ளது.

முதன் முறை

லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் புவனேஷ்வர் குமார் 6, இரண்டாவது இன்னிங்சில் இஷாந்த் சர்மா 7 விக்கெட் சாய்த்தனர். அன்னிய மண்ணில் ஒரே டெஸ்டில், இந்திய அணியின் இரு வேகப்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றுவது இது தான் முதன் முறை.

1

அன்னிய மண்ணில் 300 அல்லது அதற்கும் மேல் இலக்கு நிர்ணயித்த போட்டிகளில் இந்திய அணி பெரும்பாலும் வெற்றி பெற்றது. கடந்த 1977ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் மட்டும் தோற்றது.

1,124 நாட்கள்

இந்திய அணி கடைசியாக 2011ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான, ஜமைக்கா டெஸ்டில் ஜூன் 23ல் வெற்றி பெற்றது. இதன் பின், 1,124 நாட்கள் கழித்து, அதாவது 3 ஆண்டுக்குப் பின், இப்போது தான், அன்னிய மண்ணில் வெற்றி பெற்றது.

78 ஆண்டு சாதனை தகர்ந்தது

கடந்த 1936ல் இந்திய அணியின் அமர்சிங், லார்ட்ஸ் மைதானத்தில் 35 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தியது தான் சிறந்த பவுலிங்காக இருந்தது. இப்போது, 74 ரன்னுக்கு 7 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா, லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பான பவுலிங்கை பவுலிங் செய்தார்.

இது தான் ‘பெஸ்ட்’

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. கடந்த பிப்., மாதம் நியூசிலாந்துக்கு எதிரான வெலலிங்டன் டெஸ்டில், 51 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தியது தான் இவரது சிறந்த பவுலிங்காக இருந்தது, நேற்று 74 ரன்னுக்கு 7 விக்கெட் சாய்க்க, இதுவே இவரது ‘பெஸ்ட்’ ஆக அமைந்தது.

* தவிர, அன்னிய மண்ணில் 7 விக்கெட் வீழ்த்திய, இந்திய அணியின் முதல் வேகப்பந்து வீச்சாளர் இவர் தான்.

6

சச்சின் ஓய்வுக்குப் பின் பங்கேற்ற 5 டெஸ்டில் இந்திய அணி 3ல் ‘டிரா’ செய்து, 2ல் தோற்றது. 6வது முறையாக லார்ட்சில் களமிறங்கிய இந்திய அணி, முதல் வெற்றியை பதிவு செய்தது.

17 க்கு 2

இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் லார்ட்ஸ் மைதானத்தில் மொத்தம் 17 டெஸ்டில் பங்கேற்றது. இதில் 11 போட்டிகளில் தோற்ற இந்திய அணி 4ல் ‘டிரா’ செய்தது. 1986 மற்றும் இப்போது என, 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

வாழ்த்து மழையில்...

லார்ட்சில் இந்திய அணி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு, கிரிக்கெட் உலகின் பிரபலங்கள் ‘டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்தனர். இதன் விவரம்:

* பிஷன் சிங் பேடி (இந்திய அணி முன்னாள் கேப்டன்):

இஷாந்த் சர்மா சிறப்பாக செயல்பட்டார். வெல்டன் இந்தியா. இப்போதைய நிலையில், இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளர் தேவையில்லை. தலைமை ஆசிரியர் தான் வேண்டும்.

* மஞ்ச்ரேக்கர் (முன்னாள் இந்திய வீரர்):

உணவு இடைவேளை முடிந்த பின் திரும்பிய இங்கிலாந்து அணி, தற்கொலை செய்து கொண்டது போல, ஒரு மணி நேரத்தில் ஆல் அவுட்டானது. 5 நாட்களும் அசத்திய இந்திய அணி, இந்த வெற்றிக்கு தகுதியானது தான்.

* ஷேன் வார்ன் (ஆஸி.,):

உணவு இடைவேளைக்குப் பின் வந்த ஒரு மணி நேரம், இங்கிலாந்து அணிக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அசத்தலாக செயல்பட்ட இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி விட்டது. ஆடுகளத்தில் பச்சை புற்கள் நிறைந்து, வேகப்பந்துக்கு சாதகமாக இருந்த நிலையில், ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து வாய்ப்பை வீணடித்து விட்டது.

* அலெக் ஸ்டூவர்ட் (இங்கிலாந்து முன்னாள் கேப்டன்):

இங்கிலாந்துக்கு சாதகமான ஆடுகளத்தில், அவர்களை விட சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். லார்ட்சில் பெற்ற இந்த சிறப்பான வெற்றிக்கு முழுத் தகுதி இந்தியாவுக்கு உள்ளது.

* மைக்கேல் வான் (இங்கிலாந்து முன்னாள் கேப்டன்):

ஒரு மணி நேரத்தில் எல்லாம் மாறி விட்டது. சரியான தலைமை பண்பு இல்லை. பேட்டிங், பவுலிங் மோசமாக உள்ளது. இங்கிலாந்து அணியை நினைத்தால் பயமாக உள்ளது. கட்டாயம் மாற்றம் தேவை.

தோனிக்கு பெருமை

இஷாந்த் சர்மா கூறுகையில்,‘‘ கேப்டன் தோனி அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். அனைத்து வீரர்களையும் உற்சாகப்படுத்துகிறார். ‘தேவையான உயரம் உன்னிடம் உள்ளது, நல்ல ‘பவுன்சராக’ வீசவும்,’ என, என்னிடம் தெரிவித்தார். இப்போட்டியில் வீழ்த்திய அனைத்து விக்கெட்டுகளும் என்னுடையது அல்ல, தோனிக்குத் தான் சேரும்,’’ என்றார்.

என்றும் நினைவில் நிற்கும்

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ 2011, இங்கிலாந்து தொடரில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். தற்போதைய லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி, என்றென்றும் நினைவில் நிற்கும். ஏனெனில், இந்திய அணியில் உள்ள தற்போதைய வீரர்கள் பெரும்பாலும், இங்கிலாந்து மண்ணில் (தோனி, இஷாந்த், காம்பிர் தவிர) டெஸ்டில் பங்கேற்றதே இல்லை. இருப்பினும், சிறப்பாக செயல்பட்டு அசத்தினர்,’’ என்றார்.

http://sports.dinamalar.com/2014/07/1405876602/jadejacricket.html

Link to comment
Share on other sites

சாதனை வீரர் இஷாந்த் வேதனை: பாராட்டை எதிர்பார்த்து ஏமாற்றம்

ஜூலை 22, 2014.

லண்டன்: ‘‘தனது திறமையை சக அணி வீரர்கள் தவிர, மற்றவர்கள் யாரும் பாராட்டவில்லை,’’ என, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா புலம்பியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆன நிலையில், லார்ட்சில் இரண்டாவது டெஸ்ட் நடந்தது.

இதில் வேகப்பந்து வீச்சில் எழுச்சி கண்ட இஷாந்த் சர்மா, ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளாக போட்டுத் தாக்கி, 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதனால், இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பின், லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. இதுகுறித்து இஷாந்த் சர்மா, 25, கூறியது:

கடந்த 2011 தொடரில் லார்ட்ஸ் டெஸ்டில், முதலில் சிறப்பாக பவுலிங் செய்தாலும், விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. மீண்டும் பவுலிங் செய்ய வந்த போது, குறுகிய இடைவெளியில் 4 விக்கெட் கிடைத்தது.

நேரம் வரும்:

இம்முறை இது தான் எனது மனதில் இருந்தது. இந்த ஆடுகளத்தில் மொத்தமாக விக்கெட்டுகளை கைப்பற்றலாம் என்று தெரியும். இதனால், எனது திட்டத்தை செயல்படுத்த, சரியான நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருந்தேன்.

கடைசியில் சாதிக்க முடிந்தது. இதையே தான் புவனேஷ்வர், முகமது ஷமியிடமும் கூறினேன். தவிர, பயிற்சியாளர் பிளட்சரும் அதிக ‘பவுன்சராக’ பவுலிங் செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தினார்.

கற்றுக் கொண்டேன்:

இத்திட்டம் சில நேரங்களில் சரியாக இருக்கும், சில நேரங்களில் ஒத்துவராமல் போகும். எதுவும் திடீரென நடந்துவிடாது என்பதை நன்றாக கற்றுக் கொண்டேன்.

சமமான ஆடுகளத்தில் தொடர்ந்து பிடிவாதமாக, ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளை வீசும் போது, எதிர்பார்க்காத அளவில் பலன் கிடைத்துவிடும்.

முதல் அனுபவம்:

லார்ட்சில் இப்படித்தான் நடந்தது. இதற்கு முன் ஒரே இன்னிங்சில் ‘ஷார்ட் பிட்ச்’ பவுலிங்கை கொண்டு பல வீரர்களை ‘அவுட்’ செய்ததில்லை. முதன் முறையாக இப்போது தான் நடந்தது. புதிய அனுபவமாக இருந்தாலும், தொடர்ந்து சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்.

யாரும் வரவேற்கவில்லை:

அதேநேரம், எனது திறமையை சக வீரர்கள் தவிர, மற்றவர்கள் வரவேற்பதில்லை. இப்போது கூட, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதால் தான் பாராட்டுகின்றனர்.

ஆனால், எனது திட்டம் வேலை செய்யாமல், அதிக ரன்களை விட்டுக் கொடுத்துவிட்டால், அவ்வளவு தான். ஏனெனில், 80 ஓவர்கள் வீசப்பட்ட பந்தில், தொடர்ந்து ‘பவுன்சராக’ வீசிக் கொண்டிருந்தேன்.

இது போதும்:

இதைத் தான் நான் எப்போதும் விரும்புவேன். இதில் நல்ல அனுபவம் உள்ளது. மற்றபடி, வெளியில் இருந்து யார் என்ன சொன்னாலும் அது என்னை பாதிக்காது.

ஏனெனில், எனது வீரர்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அணிக்காக போதிய திறமை வெளிப்படுத்துகிறேன், இதை அவர்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட, இது மட்டும் எனக்கு போதும்.

இவ்வாறு இஷாந்த் சர்மா கூறினார்.

http://sports.dinamalar.com/2014/07/1406050506/ishantindia.html

Link to comment
Share on other sites

இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா: இன்று மூன்றாவது டெஸ்ட் ஆரம்பம்
ஜூலை 26, 2014.

சவுத்தாம்ப்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் இன்று துவங்குகிறது. இதில் மீண்டும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட், ‘டிரா’வில் முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில், எழுச்சி கண்ட இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 1–0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் இன்று துவங்குகிறது.

 

பவுலர்கள் பார்முலா:

முதலிரண்டு டெஸ்டில், ஐந்து பவுலர்களுடன் களமிறங்கியது, இந்திய அணிக்கு பயனுள்ளதாக அமைந்தது. இதன்மூலம் லார்ட்ஸ் டெஸ்டில் வென்று, 1–0 என முன்னிலை பெற்றது. இந்திய அணி மீண்டும் 7 பேட்ஸ்மேன்கள், 4 பவுலர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது, பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்கும்.

 

வருவாரா ரோகித்:

லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் ‘ஆல்–ரவுண்டராக’ இடம் பிடித்த ஸ்டூவர்ட் பின்னி, ஒரு ஓவர் கூட வீசவில்லை. இவரது ‘பேட்டிங்’ செயல்பாடும் திருப்தி அளிக்கவில்லை. இப்போட்டியில் ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் பந்துவீசியது ஆச்சர்யம் அளித்தது. எனவே, ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு, ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். இதன்மூலம் ‘மிடில்–ஆர்டரை’ பலப்படுத்தி, ரோகித்தை ‘பார்ட் டைம்’ பவுலராகவும் பயன்படுத்தலாம்.

 

விராத் எழுச்சி:

துவக்க வீரராக முரளி விஜய் அசத்துகிறார். ஆனால் ஷிகர் தவான் சோபிக்காதது ஏமாற்றம். இதேபோல விராத் கோஹ்லியின் ‘பார்ம்’ கவலை அளிக்கிறது. மூன்றாவது வீரராக களமிறங்கும் புஜாரா, அதிக ரன் சேர்க்க முயற்சித்தால் நல்லது. லார்ட்சில் சதம் அடித்த அஜின்கியா ரகானே, மீண்டும் சாதிக்கலாம். ‘மிடில்–ஆர்டரில்’ கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா கைகொடுக்கும் பட்சத்தில், வலுவான ஸ்கோரை பெறலாம்.

 

இஷாந்த் நம்பிக்கை:

லார்ட்ஸ் டெஸ்டில் ‘வேகத்தில்’ மி்ரட்டிய இஷாந்த் சர்மா, 7 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டநாயகனாக ஜொலித்த இவர், மீண்டும் அசத்தலாம். இதுவரை 11 விக்கெட் கைப்பற்றிய மற்றொரு இளம் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரின், விக்கெட் வேட்டை தொடரலாம். இவர்களுக்கு முகமது ஷமி ஒத்துழைப்பு தந்தால், வேகத்தின் பலம் அதிகரிக்கும். ‘சுழலில்’ ரவிந்திர ஜடேஜா ஆறுதல் தருகிறார்.

 

இங்கிலாந்து கவலை:

இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர் குக்கின் ‘பார்ம்’ கவலை அளிக்கிறது. இவர் எழுச்சி கண்டால் நல்லது. முதலிரண்டு டெஸ்டில் சதம் அடித்த ஜோ ரூட், கேரி பேலன்ஸ் மீண்டும் கைகொடுக்கலாம். மாட் பிரையருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக அறிமுகமாகும் ஜாஸ் பட்டலர், பேட்டிங்கிலும் அசத்தலாம். ‘வேகத்தில்’ ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், பிளங்கட் சாதிக்கலாம். ‘சுழலில்’ மொயீன் அலி நம்பிக்கை அளிக்கிறார்.

 

http://sports.dinamalar.com/2014/07/1406394492/ishantindia.html

Link to comment
Share on other sites

இந்திய பவுலர்கள் ஏமாற்றம் * கேரி பேலன்ஸ் சதம்

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய பவுலர்கள் ஏமாற்றினர். இங்கிலாந்தின் கேரி பேலன்ஸ் சதம் கடந்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா, 1–0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட், சவுத்தாம்ப்டனில் நேற்று துவங்கியது.

ரோகித் வருகை:

இந்திய அணியில் இஷாந்த் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு பங்கஜ் சிங், ரோகித் சர்மா சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

குக் ‘அவுட்’ சர்ச்சை:

இங்கிலாந்துக்கு கேப்டன் அலெஸ்டர் குக், சாம் ராப்சன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த போது, முகமது ஷமி ‘வேகத்தில்’ ராப்சன் (26) அவுட்டானார். இழந்த ‘பார்மை’ மீட்ட குக், டெஸ்ட் அரங்கில் 36வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர், ஜடேஜா ‘சுழலில்’ சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானார். இவர் அடித்த பந்து, ‘பேட்டில்’ லேசாக உரசிச் செல்ல, அதனை அருமையாக பிடித்த தோனி ‘அப்பீல்’ செய்தார். அம்பயர் ஏராஸ்மசும் ‘அவுட்’ கொடுக்க, சதத்தை நழுவவிட்ட விரக்தியில்

வெளியேறினார் குக்(95).

தொடர்ந்து அசத்திய கேரி பேலன்ஸ், டெஸ்ட் அரங்கில் 3வது சதத்தை பூர்த்தி செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. பேலன்ஸ் (104), இயான் பெல் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி சார்பில் ஷமி, ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இஷாந்த் சர்மா ‘அவுட்’

வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, கணுக்கால் காயம் காரணமாக, நேற்று துவங்கிய மூன்றாவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார். இது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

லார்ட்சில் நடந்த 2வது டெஸ்டில், ‘வேகத்தில்’ மிரட்டிய இஷாந்த், 7 விக்கெட் கைப்பற்றி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வித்திட்டார். காயம் காரணமாக இவர், கடந்த இரு தினங்களாக நடந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை.

282

சவுத்தாம்ப்டனில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில், இளம் மிதவேகப்பந்துவீச்சாளர் பங்கஜ் சிங், 29, அறிமுக வீரராக களமிறங்கினார். இதன்மூலம் இவர், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்ற 282வது வீரர் என்ற பெருமை பெற்றார். இவருக்கு, முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி, டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை வழங்கி கவுரவித்தார்.

புத்தகம் படித்த அஷ்வின்

நாட்டிங்காம், லார்ட்ஸ் போட்டிகளை தொடர்ந்து, சவுத்தாம்ப்டனில் நேற்று துவங்கிய 3வது டெஸ்டிலும் விளையாடும் லெவன் அணியில் அஷ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் ‘பெவிலியனில்’ சகவீரர்களுடன் அமர்ந்திருந்த இவர், புத்தகம் படித்தார்.

தப்பினார் கேப்டன்

இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், 15 ரன்கள் எடுத்திருந்த போது, பங்கஜ் சிங் பந்தில் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை, 3வது ‘சிலிப்பில்’ இருந்த ரவிந்திர ஜடேஜா கோட்டைவிட்டார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட குக், அரைசதம் கடந்தார்.

http://sports.dinamalar.com/2014/07/1406484374/GaryBallance.html

Link to comment
Share on other sites

இக்கட்டான நிலையில் இந்தியா: இயான் பெல் சதம்
ஜூலை 28, 2014.

 

சவுத்தாம்ப்டன்: மூன்றாவது டெஸ்டின், இரண்டாவது நாளிலும் இந்திய பவுலர்கள் ஏமாற்றினர். இயான் பெல் சதம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 569 ரன்கள் குவித்தது.

 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில், இந்தியா, 1–0 என, முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. பேலன்ஸ் (104), இயான் பெல் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

பெல் சதம்:

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் நாள் ஆமை வேகத்தில் நகர்ந்த ஸ்கோர், நேற்று வேகமாக உயர்ந்தது. பங்கஜ் சிங் ஓவரில் பெல் இரு பவுண்டரி அடிக்க, மறுமுனையில் பேலன்ஸ், புவனேஷ்வர் ஓவரில் 3 பவுண்டரி விளாசினார்.

 

மூன்றாவது விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்த நிலையில் பேலன்ஸ், 156 ரன்னுக்கு அவுட்டானார். அடுத்து வந்த ஜோ ரூட் (3) வந்த வேகத்தில் புவனேஷ்வர் குமாரிடம் சிக்கினார்.

ரவிந்திர ஜடேஜா வீசிய 32வது ஓவரில், விஸ்வரூபம் எடுத்த பெல், தலா 2 சிக்சர், 2 பவுண்டரி என, விளாசி, டெஸ்ட் அரங்கில் 21வது சதம் கடந்தார்.

மறுமுனையில், புவனேஷ்வர், மொயீன் அலியை (12) அவுட்டாக்கி சற்று ஆறுதல் தந்தார். பின் பெல், பட்லர் இணைந்து மின்னல் வேகத்தில் ரன்கள் சேர்க்க, ஸ்கோர் 500 ரன்களை கடந்தது.

 

மீண்டும் பவுலிங் செய்ய வந்த புவனேஷ்வர், இம்முறை பெல்லை (167) வெளியேற்றினார். பட்லர் 85 ரன்னுக்கு ஜடேஜா சுழலில் போல்டாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 569 ரன்கள் எடுத்து, "டிக்ளேர்' செய்தது.

இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 3, ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

தவான் ஏமாற்றம்:

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு, வழக்கம் போல ஷிகர் தவான் (6) விரைவில் அவுட்டாகி ஏமாற்றினார். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்து, 544 ரன்கள் பின்தங்கியுள்ளது. முரளிவிஜய் (11), புஜாரா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

சிக்கலில் இந்தியா:

"பாலோ– ஆன்' தவிர்க்க இந்தியாவுக்கு இன்னும் 345 ரன்கள் தேவைப்படுகிறது. விஜய், தோனி, கோஹ்லி, புஜாரா உள்ளிட்டோர் பேட்டிங்கில் கைகொடுத்தால் மட்டுமே இக்கட்டான நிலையில் இருந்து மீள முடியும்.

 

 

http://sports.dinamalar.com/2014/07/1406569000/bellengland.html

Link to comment
Share on other sites

இங்கிலாந்து பிடியில் இந்தியா * ‘பாலோ–ஆன்’ தவிர்க்குமா

ஜூலை 30, 2014.

சவுத்தாம்ப்டன்: மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து பிடியில் இந்திய அணி வசமாக சிக்கியுள்ளது. ‘பாலோ–ஆன்’ தவிர்க்க இன்னும் 47 ரன்கள் தேவைப்படுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில், இந்தியா, 1–0 என, முன்னிலை வகிக்கிறது.

மூன்றாவது டெஸ்ட், சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இந்திய பவுலர்கள் சொதப்ப, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 569 ரன்கள் குவித்து, ‘டிக்ளேர்’ செய்தது. பின் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்திருந்தது.

சொதப்பல் ‘பேட்டிங்’:

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணியின் ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ‘ஷாட்’ அடித்து ஏமாற்றினர். ஸ்டூவர்ட் பிராட் ‘வேகத்தில்’ புஜாரா(24) அவுட்டானார். இத்தொடரில் சிறப்பாக ‘பேட்’ செய்த முரளி விஜய்(35), இம்முறை பிராட் பந்தில் போல்டாகி அதிர்ச்சி தந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த விராத் கோஹ்லி(39) ஆண்டர்சனிடம் ‘சரண்டராக’, இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து தவித்தது.

ரகானே அரைசதம்:

பின் ரகானே, ரோகித் சர்மா சேர்ந்து போராடினர். பொறுப்பாக ஆடிய ரகானே அரைசதம் அடித்தார். மொயின் அலி ‘சுழலில்’ ரோகித் (28), ரகானே(54) அவுட்டாக, மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. ரவிந்திர ஜடேஜா(31), புவனேஷ்வர் குமார்(19) கைகொடுக்க தவறினர். தனிநபராக போராடிய கேப்டன் தோனி அரைசதம் கடந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. தோனி(50), முகமது சமி(4) அவுட்டாகாமல் இருந்தனர்.

இங்கிலாந்து சார்பில் பிராட், ஆண்டர்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தோனி கையில்:

தற்போது 246 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணிக்கு, ‘பாலோ–ஆன்’ தவிர்க்க 47 ரன்கள் தேவைப்படுகிறது. இன்று தோனி கைகொடுத்தால் மட்டுமே பெரும் சிக்கலில் இருந்து தப்ப முடியும்.

மொயீனுக்கு ‘தடை’

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பட்டை அணிந்து விளையாட இங்கிலாந்து வீரர் மொயீன் அலிக்கு ஐ.சி.சி., தடை விதித்தது.

சவுத்தாம்ப்டன் டெஸ்டின் முதல் இரண்டு நாட்களில் மொயீன் அலி, தனது மணிக்கட்டு பகுதியில் ‘காசா பகுதியை காப்பாற்றுங்கள்; பாலஸ்தீனத்துக்கு அரசியல் சுதந்திரம் அளியுங்கள்’ என, எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பட்டை அணிந்து விளையாடினர். இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.,) விதிமுறைக்கு எதிரானது. இதன்படி சர்வதேச போட்டிகளின் போது அரசியல், மதம், இனம் தொடர்பான பிரச்னைகளை எழுப்பும் வாசகங்களை அணிந்து வீரர்கள் விளையாடக் கூடாது.

இதையடுத்து மொயின் அலியுடன், ஐ.சி.சி., ‘மேட்ச் ரெப்ரி’ டேவிட் பூன் விவாதித்தார். இது மனிதாபிமான செயல் என்ற இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் வாதத்தை ஏற்க மறுத்தார். பின் சர்ச்சைக்குரிய பட்டை அணிந்து விளையாட மொயீன் அலிக்கு தடை விதித்தார்.

இப்பிரச்னையில் மொயீனுக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கிரிக்கெட்டில் இத்தகைய சம்பவம் நடப்பது முதல் முறையல்ல. ஏற்கனவே 2003, உலக கோப்பை தொடரின் போது ஆண்டி பிளவர், ஹென்ரி ஒலங்கோ ஆகியோர் ஜிம்பாப்வேயில் நிலவும் அரசியல் சர்வாதிகார போக்கை கண்டித்து கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

http://sports.dinamalar.com/2014/07/1406660946/EnglandincontrolasIndiatest.html

Link to comment
Share on other sites

3வது டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 445 ரன்கள்
 

 

சவுத்தாம்டன் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனால் இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 445 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று இன்னமும் 37 ஒவர்கள் மீதமுள்ள நிலையில் ஷிகர் தவான், முரளி விஜய் ஜோடி 2வது இன்னிங்சில் களமிறங்கியுள்ளது. ஆகமொத்தம் இந்தியா 127 ஓவர்களை வெற்றிகரமாக தடுத்தாட்கொள்ள வேண்டும்.

 

இந்தியா இன்று தன் முதல் இன்னிங்ஸில் 330 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது. பொதுவாக ஒரு அணி 229 ரன்கள் முன்னிலை பெற்று களமிறங்கும்போது எதிரணி ஒன்றும் செய்ய முடியாது. விரைவு ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் அவ்வளவே. ஆனால் அது இந்திய பவுலிங்கை வைத்துக் கொண்டு சுலபமல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

 

இங்கிலாந்து சுமார் 40 ஓவர்களில் 205 ரன்களை எட்டியது. ராப்சன் விக்கெட்டை புவனேஷ் குமார் அற்புதமான அவுட் ஸ்விங்கரில் வீழ்த்தியதை தவிர நல்ல பந்து வீச்சு இல்லை. மொகமது ஷமி 4 ஓவர்களையே வீசினார் அவரை கேரி பேலன்ஸ் லாங் ஆஃபில் அடித்த சிக்சர் மூலம் இங்கிலாந்து என்ன மனோநிலையில் களமிறங்கியது என்பது புரியவைக்கப்பட்டது. அவர் லைன் மற்றும் லெந்த் ஆகியவற்றைத் தொலைத்து விட்டார். யாராவது ஷமிக்கு அதனைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் நல்லது.

 

ஜடேஜா, அதாவது ரன் குவிப்பை கட்டுப்படுத்தும் பவுலர் என்ற ‘பெயர்’ போனவர், இங்கிலாந்து இன்றும் அவரைப் புரட்டி எடுத்தது. 10 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதிலும் கேரி பாலன்ஸ் நாட் அவுட்டிற்கு அவுட் கொடுக்கப்பட்டது. அவர் 48 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 

இயன் பெல் இறங்கி தன் பங்கிற்கு ஒரு விரைவு 23 ரன்களை எடுத்து ஜடேஜாவிடம் பவுல்டு ஆனார். ஜடேஜாவின் லெக் ஸ்டம்ப் பந்து வீச்சு அதிசயமாகக் கைகொடுத்த ஒரு தருணம்.

106/3 என்ற நிலையில் ஜோ ரூட், கேப்டன் குக் இணைந்து ஸ்கோரை 205 ரன்களுக்கு 14 ஓவர்களில் உயர்த்தினர். ஜோ ரூட் 41 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் பவுல்டு ஆனார். அத்துடன் டிக்ளேர் செய்தார் குக். அவர் 70 நாட் அவுட்.

 

இங்கிலாந்து மொத்தம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 774 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. இதுதான் முழு ஆதிக்கத்திற்கான சிறந்த உதாரணம். அதிர்ஷ்டம் கெட்ட பங்கஜ் சிங் 10 ஓவர்கள் வீசி 4 மைடன்களுடன் 33 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டியுள்ளார்.

 

இதுவே அவரது கடைசி டெஸ்ட்டானாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியா 13/0 என்று ஆடி வருகிறது. டிரா செய்ய முயற்சி செய்து ஆடி தோல்வி தழுவுவதற்குப் பதிலாக வெற்றிக்கு ஒரு மோது மோதிப் பார்க்கலாம். ஆனால் தோனி மிகவும் பாரம்பரியமான மனநிலை படைத்த கேப்டன்.

மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இதனை வெற்றிக்காக ஆடி தோல்வியடைந்தால் தொடர் சமநிலை எய்திவிடும், அதற்குப் பதிலாக டிரா செய்தால் ஒரு வெற்றியுடன் முன்னிலையைத் தக்கவைக்க முடியும் எனவே அந்த முடிவே சிறந்தது என்று நினைத்தாலும் தவறில்லை.

 

 

http://tamil.thehindu.com/sports/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-445-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6264852.ece

 

 

Link to comment
Share on other sites

தோல்வி பாதையில் இந்தியா: மீண்டும் சொதப்பல் பேட்டிங்
ஜூலை 30, 2014.
 

 

சவுத்தாம்ப்டன்: மூன்றாவது டெஸ்டில் ‘பேட்டிங்கில்’ சொதப்பிய இந்திய அணி படுதோல்வியை நோக்கி செல்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில், இந்தியா, 1–0 என, முன்னிலை வகிக்கிறது.

மூன்றாவது டெஸ்ட், சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இந்திய பவுலர்கள் சொதப்ப, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 569 ரன்கள் குவித்து, ‘டிக்ளேர்’ செய்தது.

மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 323 ரன்கள் எடுத்தது.

 

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. ‘பாலோ–ஆன்’ தவிர்க்க 47 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இந்தியா களமிறங்கியது. தோனி(50), முகமது சமி(5) வந்த வேகத்தில் வெளியேற, கூடுதலாக 7 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 330 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, ‘பாலோ–ஆன்’ ஆனது.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

 

பவுலர்களுக்கு ஓய்வு அளிக்கும் நோக்கில் இந்தியாவுக்கு ‘பாலோ–ஆன்’ கொடுக்காத இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ராப்சன்(13) ஏமாற்றினார். பேலன்ஸ் 38 ரன்களுக்கு ரவிந்திர ஜடேஜா ‘சுழலில்’ வீழ்ந்தார். அதிரடியாக ரன் சேர்த்த இயான் பெல்(23), ஜோ ரூட்(56), ஜடேஜா வலையில் சிக்கினர். மீண்டும் அசத்திய கேப்டன் அலெஸ்டர் குக், அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்து, ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 445 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. குக்(70) அவுட்டாகாமல் இருந்தார்.

 

விக்கெட் சரிவு:

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மீண்டும் ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். முரளி விஜய்(12) அநியாயமாக ரன் அவுட்டானார். மொயின் அலி ‘சுழலில்’ புஜாரா(2) வெளியேறினார். ஷிகர் தவான்(37) தாக்குப்பிடிக்கவில்லை. மொயின் அலியிடம் விராத் கோஹ்லியும்(28) சிக்கினார்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து, 333 ரன்கள் பின்தங்கியிருந்தது. ரகானே(18), ரோகித் சர்மா(6) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியின் பிடியில் இருந்து தப்புவது கடினம்.

‘சேஸ்’ செய்ய முடியுமா

டெஸ்ட் வரலாற்றில், நான்காவது இன்னிங்சில் அதிபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 418/7 ரன்களை(எதிர், ஆஸி., ஆன்டிகுவா, 2003) ‘சேஸ்’ செய்து வென்றது.

* இந்தியாவை பொறுத்தவரை அதிபட்சமாக 406/4 ரன்களை(எதிர், வெ.இண்டீஸ், டிரினிடாட், 1976)  ‘சேஸ்’ செய்து வெற்றி பெற்றது.

* பின் 2008ல் இந்திய அணி இரண்டாவது அதிகபட்சமாக 387/4 ரன்களை(எதிர், இங்கிலாந்து, சென்னை, 2008) ‘சேஸ்’ செய்து வென்றது.

* 1979ல், ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில், 438 ரன்களை விரட்டிய இந்தியா, 429 ரன்கள் எடுத்து, ‘டிரா’ செய்தது.

இன்றைய கடைசி நாளில் இந்திய அணி தப்புவது கடினம் தான். தோனி உள்ளிட்டோர் கைகொடுத்தால் ‘டிரா’ செய்யலாம்.

 

திருந்தாத ஆண்டர்சன்

ஜடேஜாவுடன் ‘தள்ளு’ விவகாரத்தில் சிக்கிய இங்கிலாந்தின் ஆண்டர்சன், நேற்று ஆட்டம் முடியும் போது ரகானேவை பார்த்து ஏதோ கூறி மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தினார். பின் அம்பயர் ராடு டக்கர் தலையிட்டு சமாதானம் செய்தார்.

 

ஜடேஜா ‘அப்பீல்’ அனுமதி

‘தள்ளு’ விவகாரத்தில் ரவிந்திர ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து ‘அப்பீல்’ செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்தது. இதன் இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ஜடேஜாவை பிடித்து தள்ளினார். இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விசாரித்து வருகிறது.

இதில், ஆண்டர்சனை நோக்கி மிரட்டும் வகையில் சென்றதாக கூறி ஜடேஜாவுக்கு முதல் டெஸ்ட் போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஐ.சி.சி.,யின் இந்த முடிவை ஏற்க மறுத்த இந்திய கிரிக்கெட் போர்டு ‘அப்பீல்’ செய்ய முடிவு செய்தது. இதற்கு ஐ.சி.சி., நேற்று அனுமதி அளித்தது. இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. அப்போது ஆண்டர்சன் தவறு குறித்தும் விசாரிக்கப்படும். இந்திய தரப்பில் தோனி, ஜடேஜா, பிசியோதரபிஸ்ட் ஸ்பீச்லி, பயிற்சியாளர் பிளட்சர் மற்றும் வக்கீல் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.

 

http://sports.dinamalar.com/2014/07/1406743837/kohliindiacricket.html

 

Link to comment
Share on other sites

மொயீன் அலி சுழலில் சுருண்டது இந்தியா: இங்கிலாந்து அபார வெற்றி

 

சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தன் 2வது இன்னிங்சில் 178 ரன்களுக்குச் சுருண்டது. இங்கிலாந்து 266 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடரை சமன் செய்தது இங்கிலாந்து.

 

112/4 என்று களமிறங்கிய இந்தியா உணவு இடைவேளைக்கு முன்னரே மீதி விக்கெட்டுகளை இழந்து 66.4 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொயீன் அலி என்ற பகுதி நேர ஆஃப் ஸ்பின்னர் 67 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அஜிங்க்ய ரஹானே ஒரு முனையில் 52 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்ததே இந்தியாவுக்கு ஒரே ஆறுதல்.

 

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா இங்கிலாந்தை பவுன்ஸ் செய்து வீழ்த்த ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சூரர்கள் என்று கருதப்பட்ட இந்திய அணி மொயீன் அலியின் மென்மையான ஆஃப் ஸ்பின் பந்து வீச்சில் அவரிடம் 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தோற்றுள்ளது.

 

இன்று களமிறங்கியவுடன் ரோகித் சர்மா முதலில் ஆண்டர்சன் வீசிய வெளியே சென்ற பந்தைத் தேவையில்லாமல் தொட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மிக மோசமான ஷாட். முதல் இன்னிங்ஸிலும் பொறுப்பற்ற ஷாட்டினால் அவுட் ஆனார் ரோகித் சர்மா.

தோனி அடுத்ததாக ஆண்டர்சன் வீசிய பந்தை மிகவும் தடுமாற்றத்துடன் ஆட பந்து மட்டையின் விளிம்பில் பட்டு பட்லர் கையில் தஞ்சமடைந்தது.

ரஹானே, ஜடேஜா ஜோடி இணைந்து 32 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை 152 ரன்களுக்கு உயர்த்திய போது, மொயீன் அலி வீச வந்தார். ஜடேஜா 15 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி வீசிய பந்தை டிரைவ் ஆட சற்று கூடுதலாக முன்னே வர தானே யார்க் செய்து கொண்டு பவுல்டு ஆனார்.

 

அதே ஓவரின் 5வது பந்தில் புவனேஷ் குமார், மொயீன் அலி வீசிய பந்தை முன்னால் காலை நீட்டி தடுத்தாட முயன்றார் பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆகி மட்டையின் விளிம்பில் பட்டு பின்னால் ஆண்டர்சனிடம் கேட்ச் ஆனது.

பிறகு மொகமது ஷமியையும் ரன் எடுக்கும் முன்னரே பவுல்டு செய்தார். பங்கஜ் சிங், மொயீன் அலியை 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அவரையும் பவுல்டு செய்தார் மொயீன் அலி. இந்தியா 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபத் தோல்வியை அடைந்தது.

 

மொயீன் அலி மொத்தம் 8 விக்கெட்டுகளை இந்தப் போட்டியில் கைப்பற்றினார். 10 டெஸ்ட் போட்டிகள் வெற்றியைக் காணாத இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்து மகிழ்வூட்டிய பெருமை இந்திய அணியைச் சாரும்.

 

மொயீன் அலி முதல் இன்னிங்ஸில் ரஹானே, ரோகித் சர்மாவை வீழ்த்தினார். 2வது இன்னிங்ஸில் புஜாரா, கோலி, ஜடேஜா, புவனேஷ் குமார், ஷமி, பங்கஜ் சிங்ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் இனிமேல் இதுபோன்று விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியுமா என்பது சந்தேகமாக இருந்தாலும், இந்த ஒரு டெஸ்ட் போட்டியை அவர் மறக்கமுடியாதவாறு இந்திய பேட்டிங் அவருக்கு அமைந்தது.

 

முரளி விஜய் அனாவசியமாக ரன் அவுட் ஆனதிலிருந்து சரிவு தொடங்கியது, ஷிகர் தவன் அதன் பிறகு தவறை உணர்ந்து ஆடியிருக்க வேண்டும் ஆனால் ஜோ ரூட் என்ற மற்றொரு பகுதிநேர வீச்சாளரின் மென்மையான ஆஃப் ஸ்பின்னிற்கு எட்ஜ் செய்து அவுட் ஆனார். அந்த நிலையிலிருந்து ஆண்டர்சன், மொயீன் அலி ஆதிக்கம்.

பவுன்ஸ் செய்து இந்தியா கடந்த டெஸ்ட்டில் வெற்றி பெற ஸ்பின் செய்து இங்கிலாந்து இந்தப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியிருப்பது சிறந்த ஐரனி. அதைவிடவும் சிறந்த நகைமுரண், அஸ்வின் என்ற ஆஃப் ஸ்பின்னரை உட்கார வைத்து விட்டு இங்கிலாந்தின் பகுதி நேர ஆஃப் ஸ்பின்னரிடம் சொதப்பி இந்தியா தோல்வி தழுவியதே.

ஆண்டர்சன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6268117.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.