Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய விருப்பின்றி அதிலிருந்து என்னை முற்று முழுதாக விடுவித்துக் கொண்டதனால் இந்தப் பக்கத்தை தெரிவு செய்துள்ளேன்..யாயினியின் இந்தப் பக்கத்தையும் புரட்டிப் பார்த்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இன்று முதல் உதயமாகிறது.....

பறவைகள் வலைசை போவது பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.அது போலத் தான் நம்ம நிலைமையும்...குளிர் மற்றும் இதர விடையங்களுக்காக பறவைகள் கூட்டம்,கூடமாக வெப்ப வலய நாடுகளுக்கு சென்று வாழ்ந்து விட்டு மீண்டும் திரும்பும் பழக்கம் உண்டு..அது இயற்கையின் நியதியாக கூட இருக்கலாம்.

Edited by யாயினி
  • Like 16
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக..... உங்களது, பக்கத்தை....
சகோதர, நிலையில் இருந்து... நாம் வாசிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கின்றோம்.  sign0173_zpsa34c29d3.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழும் போது தாங்க வருகின்றவரெல்லாம்

விழும் போது தூக்க வருவதில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் -

,கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்,

கழுபிணி யி­லாத உடலும்,

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்,

... தவறாத சந்தானமும்,

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்,

தடைகள் வாராத கொடையும்,

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு,

துன்பமி­ல் லாத வாழ்வும்,

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய,

தொண்டரொடு கூட்டு கண்டாய்,

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!,

ஆதிகட வூரின் வாழ்வே!,

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!,

அருள்வாமி! அபிராமியே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் ஒவ்வொரு சோகமும்,துன்பமும் கற்றுத் தரவே வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ

Edited by சுவைப்பிரியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுகளை ஆவலுடன் வாசிப்பவர்களில் நானும் ஒருவன்!

 

தொடருங்கள்... யாயினி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுகளை ஆவலுடன் வாசிப்பவர்களில் நானும் ஒருவன்!

 

தொடருங்கள்... யாயினி!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.. நாங்களும் வரவேற்கிறோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய உறவுகள் அனைவருக்கும் காலை வணக்கங்கள்! மற்றும் நாடுகளில் வசிப்பவர்களுக்கு மதிய,மாலை,இரவு வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்...எனக்கு ஆதரவு தந்து செல்லும் அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.என் முயற்சிக்கு சதி செய்வது போல் கணணியும் சில விடையங்களை செய்வதற்கு மறுக்கிறது.

முடிந்தவரைக்கு போராடித் தான் பார்ப்போமே..முகநூல் மீதும் அதனூள் இருக்கும் நட்புக்கள்,உறவுகள் மீதும் எவ்வளவு பிரியமாய் இருந்தவள் இப்படி மாறிட்டாளே என பலரும் எண்ணலாம்.என்ன செய்வது யாயினியும் இரத்தம்,சதை,நகம் போன்றவற்றோடு உங்களைப் போலவே இந்த உலகில் படைக்கபட்ட ஒரு உறவே...ஆகவே அடுத்தவர்களுக்கு ஏற்படக் கூடிய வலிகளையும் நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதல்ல..நல்லா அனுபவிக்கட்டும் என்று விட்டு போனவர்களுக்கு உங்கள் உதவிகள் எல்லாவற்றுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையை விட என்னால் ஒன்றும் சொல்லத் தோன்ற வில்லை.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

தொடருங்கள். :)

உங்களுக்கு இயற்கை மேல் மிகுந்த ரசனை உள்ளது. பூக்கள், குருவிகள். நாய்க்குட்டிகள் போன்றவற்றில் விருப்பம் உள்ளவர். ;)

இத்திரியில் அவையும் வரும் என எண்ணுகிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இன்னும் சில மணித்துளிகளில் கனேடிய யாழ் கள உறவு வல்வை சகாரா அவர்களின் "காவியத்தூது மற்றும் வேங்கையின் பூங்கொடி" என இரு நூல்களின் வெளியீடு நடை பெற இருககிறது...அவரது முயற்சிக்கு எனது பக்கமும் நல் வாழ்த்துக்களை பகிர்ந்து செல்கிறது.

 

 

அடுத்து லண்டன் மா நகரில் எழுத்தாளராக விளங்கும் திருமதி.தமிழரசி சிவா அவர்களின் தந்தையார்  .மு.ஆறுமுகம் பண்டிதர் அவர்களின் நூற்றாண்டு விழா மலர் வெளியீடும்  இனிதே நடை பெற நல் வாழ்த்துக்கள்.

 

 

 

 

 

தொடருங்கள். :)

உங்களுக்கு இயற்கை மேல் மிகுந்த ரசனை உள்ளது. பூக்கள், குருவிகள். நாய்க்குட்டிகள் போன்றவற்றில் விருப்பம் உள்ளவர். ;)

இத்திரியில் அவையும் வரும் என எண்ணுகிறேன். :)

 

எனது கணணியில் சின்னச் சின்ன பிழைகள் ஏற்பட்டுள்ளது..அவை திருத்தியமைக்கபட்டதும்  எல்லாம் இணைக்கப்படும்..

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் ஒவ்வொரு சோகமும்,துன்பமும் கற்றுத் தரவே வருகிறது.

 

இன்பமும் துன்பமும் மனம் எனும் தாய் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் :)

தொடருங்கள் யாயினி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி , உங்களின் எழுத்துக்கள் நன்றாகவே உள்ளன...! தொடருங்கள் , அப்படியே மனதில் எதையாவது போட்டு பாரமேற்றாமல் வழமைபோல் ஏனைய பக்கங்களிலும் உலவிச் செல்லுங்கள்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விவரணையில் (Profile>My settings>Signature) "கையெழுத்து" எனும் பகுதியில் வெற்றிடத்தை தயவு செய்து நீக்கி மாற்றியமையுங்கள்.

 

உங்களின் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் காததூரம் வெறுமையான இடத்தை, அந்த கையெழுத்து பகுதி விட்டுச் செல்கிறது.

 

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விவரணையில் (Profile>My settings>Signature) "கையெழுத்து" எனும் பகுதியில் வெற்றிடத்தை தயவு செய்து நீக்கி மாற்றியமையுங்கள்.

 

உங்களின் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் காததூரம் வெறுமையான இடத்தை, அந்த கையெழுத்து பகுதி விட்டுச் செல்கிறது.

 

நன்றி!

 

ஆ...சரி செய்திட்டன்...சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..மற்றும் கருத்துக்களை பதிபவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் யாயினி ஆவலுடன் வரவேற்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் யாயினி ஆவலுடன் வரவேற்கிறேன்

 

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்கும் பெண்ணை நம்பலாம்

அழும் ஆணை நம்பவே கூடாது.

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. ஜாதி, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. "அத்தம் (ஹஸ்தம்) தொடங்கி பத்து நாள்வரை' என்பது சொல்வழக்கு.

ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா, சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாளிலும் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணத்தன்று தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் "அத்தப் பூக்கோலம்' போட்டு, புத்தாடைகள் அணிந்து தீபாவளி போன்றே பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர்.

மகாபலி மன்னனும் வாமனனும்

ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப்பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னாக பிறந்து சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தான்.

மகாபலி மன்னனின் ஆட்சியில் மக்கள் எந்த துன்பமும் இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அசுரகுலத்தின் அசுரவேக வளர்ச்சியைக் கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் ஜெயிக்கவே தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைய வேண்டி காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால்.

அசுரனாக இருந்தாலும் தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன் மகாபலியின் அரண்மனைக்குச் சென்று தான் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது திருமால் என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தானம்தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மகாபலியை தடுத்தார். இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி மன்னன் குரு சொன்னதை கேளாமல் மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால் ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும், மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற மகாபலி மன்னன் தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அளக்குமாறுக் கூறினான். அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த அவன் பாதாள லோகத்திற்குள் சென்றான்.

அந்த சமயத்தில் மகாபலி சக்ரவர்த்தி, வாமனனிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். அதற்கு வாமனனும் வரமளித்தார். அப்படி தன் மக்களை காண மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளே ஓணத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தங்களை காண வரும் மன்னனை வரவேற்கவும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டவே மலையாள மக்கள் வாசலில் பூக்களால் கோலமிட்டு அதில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

ஓண சத்ய விருந்து

ஓண சத்ய எனப்படும் ஓணவிருந்தில் பரிமாறப்படும் பலகார வகைகளை கேட்டாலே வயிறு நிறைந்து விடும். கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், தோரன்,காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய், எலிசேரி, கூட்டுக்கரி ஆகியவற்றை தலைவாழை இலைபோட்டு பரிமாறப்படும். பின்னர் பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, காவற்றல், விளம்பி, சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து பப்படம் வைத்து உண்ணுவார்கள். பின்னர் சாம்பார் சேர்த்து உண்டபின் பிரதமன் எனப்படும் பாயசாத்தை ஒரு பிடி பிடிப்பார்கள். பின் புளுசேரி கூட்டி, இன்னொரு சுவை, இறுதியாக மோர் கூட்டான் சேர்த்து உண்டு எழுந்தால் வயிறு நிறைந்துவிடும்.

கும்மி கொட்டி விளையாட்டு

விருந்துண்ட பின்பு பெண்கள் ஓணம் சேலை கட்டிக்கொண்டு கோலத்தை சுற்றி கும்மி கொட்டுவர். பின்னர் வீட்டு வாசலில் ஊஞ்சல் கட்டியும், பந்துகள் விளையாடியும் மகிழ்ச்சியுடன் ஓணத்தை கொண்டாடுகின்றனர். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அறிந்த மகாபலி மன்னனும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கிவிட்டு மீண்டும் பாதள லோகம் செல்கின்றார் என்பது புராணகதை.

புதுமணத் தம்பதிகள் இந்த நாளை தலை தீபாவளி போன்று தலை ஓணம் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். கேரளம் மட்டுமின்றி, மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது. மலையாள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் இது கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகும்.

Topics: ஓணம், கேரளா, onam, kerala

Edited by யாயினி
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.