Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2013]


Recommended Posts

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம்: யார்? யாருக்கு எதிராகப் போராடுவது? - தமிழக மக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு கடிதம்! மீராபாரதி எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

சீண்டல், தனிநபர் தாக்குதல்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமான விமர்சனக் கருத்துக்களை வைத்து கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 197
  • Created
  • Last Reply

'பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் வீரச்சாவு புகைப்படம் வெளியாகியுள்ளது' என்ற திரியிலிருந்து அதனைத் திசைதிருப்பும் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"முஸ்லிம் பெண்ணின் கியாப் ஆடையில் கைவைத்த பொதுபலசேனா இளைஞர்கள்! – கொதிப்பில் முஸ்லிம்கள்"  திரியில் இடம்பெற்ற  ஒரு இனத்தின்  கலாச்சாரம் மீதான அநாகரீகமான உரையாடல்களுக்குரிய நீக்கப்பட்டன.

Link to comment
Share on other sites

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி எனும் திரியில் இணைக்கப்பட்ட ஒரு படமும் அதனை மேற்கொள் காட்டி எழுதப்பட்ட கருத்தும் நீக்கப்பட்டது. தமிழக இளையவர்களின் போராட்டத்துக்கு பிரச்சனை தரக்கூடிய விடயங்களை இணைப்பதை தவிர்க்கவும். நன்றி

Link to comment
Share on other sites

 *தியாகிகளும் துரோகிகளும்- சாத்திரி' என்ற திரி பிரதான திரியின் கருத்தில் இருந்து முற்றாக திசை திரும்பிச் செல்வதால் பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Facebook இனை மட்டுமே மூலமாக கொண்ட இரண்டு செய்திகள் ஊர் புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

 

செய்திகளை இணைப்பவர்கள் அதற்குரிய சரியான மூலங்களை குறிப்பிடவும். வெறுமனே FB என்று போடுவதோ அல்லது தனி நபரின் FB account இல் இருந்து செய்திகளை இணைப்பை ஒட்டுவதையோ முற்றாகத் தவிர்க்கவும். அதே நேரம் Loyolahungerstrike போன்ற அதிகாரத்துக்கு எதிராக போராடும்க தமிழ் இன விடுதலை சக்திகளை அடையாளப்படுத்தும்  FB account களில் இருந்து செய்திகளை ஒட்டுவதை தொடரலாம். இது பற்றி தெளிவான ஒரு விதி பின்னர் அறிவிக்கப்படும்.

Link to comment
Share on other sites

"யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்" என்ற திரியில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டது.

 

தனிப்பட்ட கோபங்களை திரிகளில் காட்டாதும், குழு மனப்பான்மையில் விமர்சனம் வைக்காதும் ஆரோக்கியமான விதத்தில் விமர்சனங்களை வழங்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

யாழின் கறுப்புப் பட்டியலில் இடப்பட்டுள்ள இணையத்தளத்தில் இருந்து பதியப்பட்ட ஒரு செய்தி ஊர்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

செய்திகள்/கருத்துக்கள் இல்லாமல் படங்களை மட்டும் கொண்டு இரு இடங்களில் தொடங்கப்பட்ட தலைப்புக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

ஊர்ப்புதினம் பகுதியில் மூலம் குறிப்பிடப்படாமல் யாழில் கறுப்புப்பட்டியலில் உள்ள தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட தலைப்பு ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'ஏமாறாதீர்கள், இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றாதீர்கள்": காத்தான்குடியில் துண்டுப்பிரசுரம் விநியோகம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் அகற்றப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

பிரான்சில் 28.03.2013 அன்று அடையாள உண்ணாவிரதம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் அகற்றப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

யாழ் கறுப்புப் பட்டியலிலுள்ள இணையத் தளத்திலிருந்து இணைக்கப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'சுவாமி ரணம்...சுவாமி சரணம்... சுப்பிரமணிய சுவாமி சரணம்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

சென்னைக்கு சென்று விளையாடப் போவதில்லை – தமிழர் முத்தையா முரளீதரன் எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒருமையில் எழுதப்பட்ட கருத்து திருத்தப்பட்டுள்ளது.

 

கள உறவுகள் கண்ணியமான முறையில் விமர்சனக் கருத்துக்களை வைத்து கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

ஊர்ப்புதினம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட தலைப்பு ஒன்று அதில் உள்ள காணொளி ஏற்கனவே வேறு திரியில் இணைக்கப்பட்டதால் நீக்கப்படுகின்றது.

 

கள உறவுகள் செய்திகள்/பதிவுகள் ஏற்கனவே உள்ளனவா என்பதைக் கவனித்து இணையுங்கள்.

Link to comment
Share on other sites

நாற்சந்தியில் உரையாடல் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட திரி இனி அவசியமற்றதால் பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

'4ம் திகதி மட்டக்களப்பில் ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு துண்டுப் பிரசுரம்' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்தும் பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

முஸ்லிம்களுக்கு எதிரான பதற்றமான நிலை நீடித்தால் 30 - 40 வருடங்களில் இலங்கை தீப்பிடித்து எரியும் எனும் திரியில் இருந்து இரு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

 
" வடகொரியா அணு ஆயுத மிரட்டல்: எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுத்தியது அமெரிக்கா!" எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

'தமிழக மாணவர் போராட்டம் தொடர்பான உரையாடல்' எனும் திரியில் கருத்தாடலைத் திசை திருப்பும் வகையில் பதியப்பட்ட இரு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

 

களவிதி: கருத்தாடலைத் திசை திருப்பும் வகையிலோ தலைப்புக்கு தொடர்பில்லாத விதத்திலோ எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்

Link to comment
Share on other sites

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013 என்ற திரியில் இரு அநாகரிகமான கருத்துக்கள் நீக்கப்படுகின்றன.கருத்தாடும் போது நாகரீகமாக கருத்தாடுமாறு அன்போடு கேட்கப்படுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

ஒரு குறிப்பிட்ட உறவை வரச் சொல்லி மீண்டும் கேட்க திறக்கப்பட்ட திரி அகற்றப்படுகின்றது. ஏற்கனவே உரையாடப்பட்டு பூட்டப்பட்ட திரிகளை ஒத்த திரிகளை திறப்பதை தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

'இந்தியா புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்டஈடு வழங்கியது – விக்கிலீக்ஸ்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

கள உறுப்பினர்களின் 'நாகரீகமான' உரையாடல்களின் காரணமாக 'பட்டிமன்றம் சொல்லும் கதை ( அனுபவப்பகிர்வு )' எனும் திரி நாற்சந்திப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு பொய்யை மறைக்க இன்னொரு புரட்டு. ஆக இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறப்பதற்கான எதிர்ப்பு மேல்த்தட்டு வர்க்க யாழ்ப்பாணிகளினால் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழரசுக்கட்சியின் உந்துதலினால் மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு என்று வந்துவிட்டது.  கூறப்பட்டது புரட்டு என்றாலும், அதில் அன்றிருந்த தமிழரசுக் கட்சி மீதான காழ்ப்புணர்வு கொட்டிக் கிடக்கிறது.  ஆக, தமிழர் கண்ட ஜனநாயகவழி அரசியல்வாதிகளில் மிகவும் சிறந்தவரான தந்தை செல்வா அன்று ஆரம்பித்த கட்சியும், அதன் செயற்பாடுகளும் உணர்ச்சியால் தூண்டப்பட்டவை என்ற முடிவிற்கு வந்தாயிற்று. அன்றிருந்த தமிழர்களுக்க்கு ஒரே நம்பிக்கையாக இருந்தவர் செல்வா. அவரது அரசியலே தவறு என்றால், இக்கருத்தாளர் அன்று எந்தப் பக்கம் நின்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது. 
    • என்ன‌ அண்ணா கோலி நீக்க‌மோ இந்த‌ உல‌க‌ கோப்பையில்................................................
    • சீமான் உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு ம‌ண்டை காய் அவ‌ருக்கு அர‌சிய‌ல் எப்ப‌டி  செய்ய‌னும் என்று ந‌ங்கு தெரியும் திராவிட‌ ஊட‌க‌ங்க‌ள் ப‌ல‌ குறுக்க‌ ம‌றுக்க‌ ப‌ல‌ கேள்விக‌ள் கேட்டாலும் ச‌ரியான‌ ப‌திலை சொல்ல‌க் கூடிய‌ ந‌ப‌ர் தான் சீமான்  உங்க‌ளால் அப்ப‌டி ப‌தில் முடியாது?    2009க்கு முத‌ல் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கும் உங்க‌ளுக்கும்  எந்த‌ வித தொட‌ர்வும் இல்லை என்று உங்க‌ள் எழுத்தே காட்டி கொடுக்கு...................2008க‌ளில் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரையும் தூற்றின  ந‌ப‌வ‌ர்க‌ள் சில‌ர் இருந்த‌ன‌ர்  ...........................அவ‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருவ‌ராய் இருக்க‌ கூடும் என்று நினைக்கிறேன் ............................இதுக்கு முத‌ல் யாழில் என்ன‌ பெய‌ரில் எழுதி நீங்க‌ள் என்று கேட்டேன் ஆனால் நீங்க‌ள் மெள‌வுன‌த்தை க‌டை பிடித்த‌ போதே தெரிந்து விட்ட‌து நீங்க‌ள் ப‌ழைய‌ காய் என்று............................த‌மிழ் இன‌த்தின் ச‌பாக் கேடு ஒரு த‌மிழ‌ன் வ‌ள‌ந்து வ‌ந்தால் ம‌ற்ற‌ த‌மிழ‌னுக்கு பிடிக்காது................................ ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரி இப்ப‌ யார் கூட‌ இருக்கிறார் க‌ந்தையா அண்ணா😏....................................................  
    • எதிர்கக வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கான காரணங்களை தேடுவதும் இளைஞர்களை தூண்டி  விடுவதும் தமிழரசு கட்சியின் கைவந்த கலை என்பது இலங்கை அரசியலை புரிந்து கொண்ட அனைவருக்கும் தெரியும்.  பொதுமக்களும் இளைஞர்களும் ஆர்பட்டதில் ஈடுபட்டார்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களை கொம்பு சீவி விட்டது தமிழரசு கட்சியே என்பது வெள்ளிடை மலையாக தெரியும்.  பலகலை கழகம் திருகோணமலையில் அமைத்திருந்தால் அது  தமிழரின் முழுகட்டுப்பாடில் இருந்திருக்காது என்ற ஜதார்த்தத்தை கூட புரிய முற்படவில்லை.  அப்படியே அங்கு திறந்திருந்தாலும்  தமிழரின் கலாச்சார தலைநகரை புறக்கணித்து சிங்கள ஆக்கிரமிப்புக்காக திருகோணமலையில் பல்கலை கழகம் திறந்ததாக புரட்டு கூறி பிரச்சாரம் செய்திருப்பார்கள் இந்த தமிழரசு கட்சியினர் என்பது தமிழரசு கட்சியின் செயல்களை பார்தவர்கள் அனைவருக்கும் புரியும்.  தமிழரசுகட்சி எப்போதுமே தனது உசுப்பேற்றும் அரசியலுக்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் தெரிந்த விடயம் தான்.  அவை எல்லாம் ஆதாரங்கள் அல்ல.. 
    • இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மொட்டு கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றார். முதலாவதாக பாராளுமன்றத் தேர்தலையே நடத்த  வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய  பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் சகல முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி விட்டார் ஜனாதிபதி ரணில்.  கட்சியை ஆரம்பித்ததிலிருந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பல மறைமுக பணிகளை ஆற்றிய பஸில் ராஜபக்ச தனது தவறான கொள்கைகளால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றார். கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே மகிந்தவும் பஸிலும் செய்த தவறுகள். அதை நியாயப்படுத்துவதற்காக கோட்டாபய அரசாங்கத்தில் மகிந்த பிரதமராகவும் பஸில் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்று மக்களை படுகுழிக்குள் தள்ளினர். கோட்டாபய ராஜபக்ச எடுத்த சில முடிவுகளை தட்டிக்கேட்க முடியாது மகிந்த விளங்கினார். ஏனென்றால் அவரது மகன் நாமலுக்கு கோட்டாபய விருப்பிமில்லாமலேயே அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை வழங்கினார். மறுபக்கம் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக விளங்கிய பஸில், மகிந்த காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியில் அமர்ந்து அனைத்து அமைச்சுக்களையும் ஆட்டி வைத்தது போன்று செயற்பட ஆரம்பித்தார். இறுதியில் அனைவரையும் பதவியிறக்க அவர்களுக்கு வாக்களித்த மக்களே வீதிக்கு இறங்கினர். இந்நிலையில் மீண்டும் பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்பும் முயற்சிகளில் கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச கடும் போராட்டம் செய்து வருகின்றார். தனது மகன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மண்விழுந்து விட்டதால் குறைந்தது பிரதமராகவாவது ஆக்கி விட வேண்டும் என்று முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். அதற்காக கட்சியில் உயர் நிலை பதவியில் அவரை அமர்த்தி அழகு பார்க்க முடிவு செய்தார். அதன் படி கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் நாமல் ராஜபக்ச கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். எனினும் அதற்கு ஆப்பு வைக்கும் முகமாக மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ‘நாமலுக்கு ஜனாதிபதியாவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது’ ஊடகங்களுக்கு கருதுத்து தெரிவித்து விட்டார். இது மகிந்தவுக்கும் நாமலுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரசன்னவின் கருத்தை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். சுதந்திர கட்சியின் தலைவராக மகிந்த இருந்த காலத்தில் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட பலர் தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளனர். இடையில் அரசியலுக்கு வந்த நாமல் ராஜபக்சவை அடுத்த மகிந்தவாக ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. மிக முக்கியமாக பஸில் ராஜபக்சவே நாமலை எதிரியாகத்தான் பார்க்கின்றார்.  மகிந்த அரசியலில் இருக்கும் வரை தான் நாமலுக்கு மரியாதை. அவர் ஓய்வு பெற்று விட்டால் கட்சிய. பஸில் ஆக்ரமிப்பார் அல்லது கலைத்து விடுவார். எனவே தள்ளாட்டத்துடன் பாராளுமன்றில் வலம் வருகின்றார் மகிந்த. தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் ஊடகங்களுக்கு கூறி வருகின்றார்.  பொதுஜன பெரமுனவின்  தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டவுடன் நாமல் ராஜபக்ச தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டுள்ளார். தனது நடை உடை பாவனை மற்றும் தலை அலங்காரம் அனைத்திலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். எந்த உடை அணிந்தாலும் மறக்காமல் சிவப்பு சால்வையை கழுத்தில் போட்டுக்கொள்கின்றார்.  தன்னுடன் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் கூட்டங்களை நடத்துகின்றார். கம்பஹா மாவட்டம் பஸிலின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரகலய போராட்டத்துக்குப்பின்னர் , மொட்டு கட்சியில் யார் சென்றாலும் மக்கள் அக்கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. அம்மாவட்டத்தில் மொட்டு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் மீண்டும் கட்சியை கட்டியெழுப்பும் முழுமூச்சில் இறங்கியுள்ளார். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. முன்னாள் தேசிய அமைப்பாளர் பஸிலே இதற்கு முட்டுக்கட்டை போடக்கூடும். நாமலின் கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு அவர் உத்தரவு போடலாம். மகன் நாமலை அரசியலில் உச்ச இடத்துக்கு கொண்டு செல்வதற்கு மகிந்த எடுத்த இறுதி முயற்சியே தேசிய அமைப்பாளர் பதவி. ஆனால் மகிந்த தனது ஆட்சி காலத்தில் தனது புதல்வர்களின் சுகபோக வாழ்வு, ஆடம்பரம், வீண் செலவு போன்றவற்றை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்.  அந்த ஆடம்பர வாழ்க்கையின் வீடியோக்கள் படங்கள் இப்போது வலம் வந்து நாட்டு மக்களை எரிச்சலில் தள்ளியுள்ளன. எனவே அதற்கு நாமல் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.  எல்லாவற்றையும் விட ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராகும் ரணில் விக்ரமசிங்க இந்த நகர்வுகளை அவதானித்துக்கொண்டிருக்கின்றார். எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மகிந்த தரப்பினரை எதிர்கால அரசியலில் ஊக்குவிக்க விரும்பாதவராகவே உள்ளார். தேசிய அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ள நாமலுக்கு இந்நாட்டின் தேசிய அந்தஸ்த்துள்ள ஒரு தலைவராக உருவெடுப்பது சவாலான காரியம் என்றே கூறத் தோன்றுகிறது.  https://www.virakesari.lk/article/180916  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.