Jump to content

நாடுகடந்த தமிழீழம் பெருமையடைகிறது (முகமூடி கிழிபடுது)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம்.

மா.ஜெயக்குமார்.

a_Kunaseelan.jpgஇத்தால் சகல புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேதாவிகளுக்கு இத்தால் அறியத்தருகின்றோம்.

தமது ஆட்படை பற்றியும், தமது செல்வாக்கு பற்றியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், புலம் பெயர் பரப்பெங்கும் பொங்கு புகழ் பாடிவரும் இந்த கூட்டம், இன்று அட்லீஸ் ஒரு எம் பி பதவிக்கு ஆள் இல்லாமல், ஈபிடிபி உறுப்பினராகவும், பின்னர் ஈபிடிபி மாற்றுக் கட்சி உறுப்பினராகவும், முழு நேர புலி யெதிர்ப்பு உணர்வாளராகவும், செயற்பாட்டாளராகவுமிருந்த குணசீலன் வன்னியசிங்கம் என்கின்றவரை நாடுகடந்த தமிழீழ எம்பியாக தெரிவு செய்துள்ளனர். இவர் ஈபிடிபியில் இருக்கும் போது, ஈபிடிபியின் சகல வழங்களையும் பயன் படுத்தி, புலம் பெயர் தேசத்தில் தன்னையும், தனது குடும்பத்தையும் வளம் படுத்திக் கொண்டவர்.

1990 முதல் 1996 வரை தீவுப் பகுதியில் புலிகளுக்கெதிராக நடந்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் பொறுப்பானவர் இவர் என்பதும், இவர் செய்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும் வக்காலத்து வாங்கப் போய்த்தான் இன்று, இராமேஸ்வரன். முகவரியற்றுப் போய் இருக்கின்றார். ஆனால் முரட்டுத்தனம் உள்ள இவருக்கு தமிழீழ அரசு முகவரி வழங்கி மீண்டும் ஒரு தரம் அந்த மாவீரர்களின் முகத்தில் கரியை பூசிக் கொள்கின்றது. இவ்வாறான செயற்பாட்டாளர்களை அருகில் இணைத்து வைத்துக்கொண்டவர்களை நம்பியா தாய்க்குலம் நாடுகடந்த தமிழீழத்துக்கு தாலிக்கொடிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

30/7/1996 இல் இவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நவமணி பத்திரிகையில் பேட்டி அளித்ததுடன், அதே டக்ளஸ் தேவானந்தா கடந்த வருடம் இங்கிலாந்து வந்த போது அவருடன் இணைந்து வேலை செய்வதாக வாக்குறுதியும் அளித்திருந்தார். அது மட்டுமல்லாமல் டக்ளஸ் தேவானந்தாவின் தற்போதைய இங்கிலாந்து பிரதிநிதிகளுடன் இன்றும் நேரடி தொடர்பில் இருப்பதை, இங்கிலாந்தில் தற்போது வசிக்கும் நெப்போலியனை கேட்டால் தெரியும்.

தமிழா உனக்கேன் இந்த சாபக்கேடு. இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல. அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்களால்தான். வாழ்க நாடுகடந்த தமிழீழத்தின் பொதுப்பணி.

படம்: நாடு கடந்த தமிழீழத்திற்காக தாலி வழங்கும் நிகழ்வொன்றில் வி.உருத்திரகுமாருடன் குணசீலன் வன்னியசிங்கம் (நடுவில் நிற்பவ

http://aaivuu.wordpress.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.