Jump to content

முன்னாள் போராளிகளின் முடிவற்ற சோகங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன்.

ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று.

எனது விடுமுறையில் இலங்‌கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர்.

மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், சில நண்பர் மூலமாக கோரப்பட்ட உதவிகளை ஆராய்வதற்காகவும், நகரத்திற்கப்பால் எம்மவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலும் என்னை இங்கு அழைத்துவந்திருந்தது.

ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

  • விபச்சாரம் செய்யும் முன்னாள் பெண்போராளிகள்,
  • ஏழ்மையினால் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கமுடியாது முகாம்களில் தவிக்கும் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி,
  • தொடைக்கு மேற் பகுதியுடனேயே காலை இழந்து மனைவிகுழந்தைகளை காப்பாற்றுவதற்காக வீதியோரத்தில் சுண்டல் விற்கும் முன்னாள் போராளி,
  • திருமணமாகி பத்தே மாதத்தில் கடல் மோதலொன்றில் காணாதுபோன கேர்ணல் தரத்திலான தனது கணவன் இன்னும் உயிருடன் இருப்பார் என்னும் நம்பிக்கையுடன் தனது 4 வயதுப் பெண்குழந்தையுடன், வாழ்வாதாரம் இன்றி தம்பி தங்கையுடன் முகாமில் தவிக்கும் முன்னாள் பெண் போராளி்,
  • இரு கைகளையும் தோள்மூட்டு்ன் இழந்த தனது முன்னாள் போராளியான மகனை பராமரிக்கும் வயதான தந்தை,
  • இருகண்களையும் இழந்த முன்னாள் ‌போராளி,
  • குழந்தைப்போராளியாய் இயக்கத்தில் இணைக்கப்பட்டு இறுதிப் ‌ ‌போரில் பெற்றோர் சகோதரர்களை இழந்த முன்னாள் போராளி

எனது கடந்த சில நாட்கள் இப்படியான சில மனிதர்களுடன் கடந்து போயிருக்கிறது. அவர்களின் கதைகளைக் கேட்டு கனத்துப்போயிருக்கிறது மனது.

தன்னெதிரே துள்ளித்திரிந்த குழந்தையை அணைதவாறு அழும் பெண் போராளியிடம் ஆறுதலாக ஒரு வார்த்தையும் பேச முடியாது மௌனமாய் கடந்து போன கணங்கள் மிகவும் கொடுமையானவை.

புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் அவர்களின் வாழ்வில் அமைதியில்லை மகிழ்ச்சி என்பது எள்ளளவும் இல்லை. எப்பொழுதும் கண்காணிக்கப்படுகிறார்கள். எவ்வித கொடுப்பனவுகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. தொழில் வாய்ப்புக்கள் குறைவு. கூலி வேலைகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. வயல் வேலைகள் அறுவடை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் குறைந்துள்ளது.

இவ்வாறு இருப்பவர்களிடம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துப்போகிறோம் என்று பணம் பிடுங்கும் மனிதர்களுக்கும் குறைவில்லை. அரசியல் பழிவாங்கல்கள், முன்பிருந்த இயக்கமோதல்கள், காட்டிக்கொடுப்புக்கள், பழிவாங்கல்கள் .... அப்பப்பா எப்படி இதையெல்லாம் கடந்து வாழ்கிறார்கள் என்று யோசிக்கத்தோன்றுகிறது.

நான் சந்தித்திருப்பது ஒரு சிலரையே. இப்படியான போராளிகள் வடக்கு கிழக்கு எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

2012 ம் ஆண்டிலும் மலசலகூடம், குடி நீர் வசதி இன்றி பல கிராமங்கள் இருக்கின்றன. வாகரைக்காடுகளில் உள்ள வேடுவர்களை சந்திக்க அழைத்துபோகிறேன் என்றிருக்கிறார் அவர்களுடன் தொடர்புடையவர் ஒருவர்.

கோயில் கொடுப்பனவாகிய 1500,- ரூபாயுடன் 20 குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஒரு ஆசிரியை,

350 ரூபாய் வருமானத்திற்காக ஒரு நாள் முழுவதும் விறகு பொறுக்கி, பல மைல்கள் சைக்கிலில் பயணித்து விறகு விற்பனை செய்யும் 70 வயது கடந்த முதியவர்,

பாவனையில் இல்லாத பழைய வீதிகளில் இருக்கும் கருங்கட்களை கல்லாலும், கைகளாலும் தொண்டி எடுத்து தனது மூன்றாவது மகளுக்கு திருமணம் நடாத்த முற்படும் ஒருவர்,

இவர்களை சந்தித்த போது வெட்கித் தலைகுனிந்திருந்தேன் புலம்பெயர்ந்த தமிழனாய்.

நாம் என்ன செய்திருக்கிறோம் இவர்களுக்கு?

மனம் பொறுக்காது சில நண்பர்களிடம் அவசர உதவி தேவையானவர்கள‌ை அறிமுகப்படுத்தி அவர்களை நேரடியாகவே உதவுங்கள் என்று கேட்டுக்கொண்ட போது உடனேயே உதவிக்கரங்களை நீட்டிய நெஞ்சங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை என்னிடம்.

மக்கா ... ஊருக்கு போனன் அங்க ஒரு பிரச்சனையும் இல்லை என்று அறிக்கைவிடும் அறிவுஜீவிகளே!!

முக்கிய பெரு வீதிகளுக்கும், மாடிவீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்களையும் சென்று அவர்களுடன் பேசி, உறவாடிப்பாருங்கள், அவர்களின் உயிரோசை உங்களுக்குக் கேட்கலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------

முன்னாள் போராளிகளின் இன்றைய வாழ்க்கைச் சோகங்களையும் போராட்டங்களையும் பற்றிய பல பதிவுகளை எனது பதிவுலகில் காணலாம்

http://visaran.blogspot.com

[size=5]முன்னாள் போராளிகள் பற்றிய பிரஞ்ஞையை எம்மக்களிடமும், மக்களமைப்புக்கள் என்று கூறிக்கொள்பவர்களிடமும் உருவாக்க உதவுங்கள்.[/size]

.......

நீங்கள் இப்பதிவினை முகப்புத்தகத்தில் share செய்து அதன் மூலம் ஒருவருக்கேனும் உதவி கிடைக்கும் எனின் பெரு மகிழ்ச்சியடைவேன்.

நீங்கள் யாரேனும் நேரடியாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவிரும்பினால் கீழ்க்காணும் மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்க.

adsayaa@gmail.com

http://visaran.blogs...og-post_19.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சயன், உங்கள் பதிவுகள் சிலவற்றை யாழில் ஒட்டியிருந்தேன்.

சமூக நோக்குடன் பதியப்பட்ட உங்கள் பதிவுகள் ஒரு சிலரின் வாழ்வுக்கேனும் உதவும் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி கிருபன். எனது பதிவுகளினால் சிலருக்கேனும் உதவி கிடைத்தால் மகிழ்ச்சியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சயன் மிக்க நன்றி

உங்களை போன்றவர்களால் தான் இன்னும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்

இன்னும் பலவற்றை நம் புலம் பெயர்ந்தவர்களுக்கு தெரிவியுங்கள் ......Well-done Bro

Link to comment
Share on other sites

நன்றி சஞ்சயன் உங்கள் பதிவிற்கு.

இற்றைவரை என்னால் இயலுமானதை செய்துபார்த்தேன். கடலில் சிறு துள்ளி மாதிரித்தான் கிடக்கு. எல்லோரும் சேர்ந்து தேர் இழுத்தால்தான் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றிகள், சஞ்சயன்!

நானும், இது போன்ற சிலரைச் சந்தித்தேன்!

மனம் மிகவும் சஞ்சலப்பட்டுப் போனது!

நான் யாரோ ஒரு உறவினருக்காகக், ஐயாயிரம் ரூபாய்க்குக் கருவாடு வாங்கிக் கொண்டிருந்த போது, கையில் ஐம்பது ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு, சூடை மீன்கருவாடுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த, ஒரு சிறுமியின் கண்களில் இருந்த ஏக்கம், இன்னும் எனது மனதில் நிழலாடுகின்றது!

நான் அந்தக் கருவாட்டை வாங்கவில்லை! அந்தச் சிறுமிக்கு, என்ன வேண்டும் என்று கேட்டு, வாங்கி கொடுத்து விட்டு, வந்து விட்டேன்!

அதில் என்ன்னவோ ஒரு சின்னத் திருப்தி எனக்கு!

இங்கு வந்த பின்பு, அந்த உறவினருக்கு, நிலைமையை விளங்கப் படுத்தினேன்!

அவர் என்னுடன் இப்போது கதைப்பதில்லை.

கோபமாம்!

நானும் ஒதுங்கிக் கொண்டு விட்டேன்!

தொடர்ந்து, இப்படியானவற்றை இங்கு பதியுங்கள்!

கொஞ்சப் பேராவது, அங்குள்ள உண்மை நிலையை அறியட்டும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சஞ்சயன் வார்த்தைகளே இல்லை நாதியற்று போய்விட்டோமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

வணக்கம் சஞ்சயன் வார்த்தைகளே இல்லை நாதியற்று போய்விட்டோமா?

நிச்சயமாக இல்லை ஒரளவு உதவிசெய்கின்றனர் அவுஸ்ரேலியாவில் இருந்து பல தமிழ் அமைப்புக்கள் உதவி செய்கின்றன...இன்னும் செய்யமுடியும் ...எம்மவர்கள் உதவி செய்கின்றனர்...

Link to comment
Share on other sites

சஞ்சயன் அண்ணா தொடர்ந்து எம்மக்களின் அவலங்களை இங்கு பதியுங்கள்.

நாட்டுக்கு போய் விட்டு வந்து நாடு எல்லாம் நன்றாக இருப்பதாக கூறுபவர்கள் நாட்டிலுள்ள மனிதர்கள் எப்படி உள்ளார்கள் என்று பார்ப்பது குறைவு. ஒருசிலருக்கு வெளிநாட்டு பணம் கிடைப்பதை வைத்துக்கொண்டு அங்குள்ள மக்கள் அனைவரும் வெளிநாட்டு வசதியுடன் வாழ்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அப்படி கூறுபவர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை.

2 கிழமைக்கு முன் நடந்த ஒரு சம்பவம், யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவர் கிளிநொச்சிக்கு சென்று உதவி வழங்கி விட்டு அங்குள்ள ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தினாராம். அவருக்கு ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மனைவி உண்டு. இது பற்றி கேள்விப்பட்டு அவர்களுக்குள் இப்பொழுது பிரச்சினை.

உதவி எனும் பெயரில் இவ்வாறான அட்டூழியங்களும் நடந்து கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கேள்விப்படும் போது கவலையாக உள்ளது.

பண உதவி வழங்கும் அதேவேளை பாதுகாப்பும் வழங்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு தற்சமயம் எம் நாட்டில் சாத்தியமில்லை.

Link to comment
Share on other sites

நெஞ்சு கனக்கிறது .................வார்த்தைகள் வர மறுக்கிறது...................

எமக்கு கிடைத்த அருமையான ,கிடைக்க முடியாத சந்தர்ப்பத்தை எமது அயண்டயஈனத்தால் பறிகொடுத்து அனாதைகளைபோல் நிற்கும் எம் நிலையை சொல்லுவதற்கு மனிதம் இல்லை ..................அந்த மனிதத்தின் சாயலை முயற்சிகளை மேற்கொள்ளும் உங்களைப்போன்றவர்கள் சிலராவது இருப்பதை நினைத்து மனம் ஓரளவு ஆறுதலடைகிறது .....................தொடருங்கள் சஞ்சஜன் உங்கள் மகத்தான மாண்பான பணியை .............பின் நிற்போம் ....

Link to comment
Share on other sites

  • 2 months later...

நெஞ்சு கனக்கிறது .................வார்த்தைகள் வர மறுக்கிறது...................

எமக்கு கிடைத்த அருமையான ,கிடைக்க முடியாத சந்தர்ப்பத்தை எமது அயண்டயஈனத்தால் பறிகொடுத்து அனாதைகளைபோல் நிற்கும் எம் நிலையை சொல்லுவதற்கு மனிதம் இல்லை ..................அந்த மனிதத்தின் சாயலை முயற்சிகளை மேற்கொள்ளும் உங்களைப்போன்றவர்கள் சிலராவது இருப்பதை நினைத்து மனம் ஓரளவு ஆறுதலடைகிறது .....................தொடருங்கள் சஞ்சஜன் உங்கள் மகத்தான மாண்பான பணியை .............பின் நிற்போம் ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.