Jump to content

நாட்டார் கலைகளில் ஒருபார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டார் கலைகளில் ஒருபார்வை

– ‘தமிழ்க்கவி’

நாட்டார் கலைகள் என்றால் என்ன? நாட்டார் கலைகள்தான் ஒவ்வொரு நாட்டுக்கும்’ ஒவ்வொரு இன மக்களுக்கும ; பாரம்பரியமானது என்று சொல்லக்கூடிய பண்பாடு பழக்கவழக்கங்கள் உண்டு.அவை நாட்டு மக்களின் வாழ்வாதாரம. ;. கூடவே இவர்கள் இன்னார் என இனங்காட்டுவதும்’ இவர்களது கலை பண்பாடு பழக்க வழக்கம்தான்.

நாட்டாரியல் ஆய்வுகள் நாடுகள் தோறும் செய்யப்பட்டு வந்தாலும் அமெரிக்கா .பிரித்தானியா போன்ற நாடுகளே இதற்காக பெரும் பொருட்செலவில் நிறுவனங்களை அமைத்துள்ளன.முந்நாளில் நாடுகாண் பயணங்களை மேற்கொண்டு வளமிக்க நாடுகளைக் கண்டுபிடித்து அவற்றை ஆக்கிரமித்து தம் பலத்தால் ஆட்சி புரிந்த போர்த்துக்கீசியரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயருமே முதலில் நம் நாடுகளின் கலை கலாச்சாரம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.அது அவர்களின் இனஅழிப்பு ஆட்சி வெறிக்கு மிகவும் அவசியமாக இருந்தது.

ஒருமக்களினத்தை அழித்தொழிப்பதற்கு மிகவும் பயன்பட்டது எனவும் கூறலாம். ஆச்சரியப்படத்தக்க வகையில் எமது கலைகளை வைத்தே எம்மைக் கலைத்த வித்தையை இவர்கள் செய்தார்கள்.

கலை என்றால் அழகு. கலை என்றால் ஆடை . கலை என்றால ; ஆண்மான் கலை என்றால வித்தை கலை என்றால் குழப்பு .கலை என்றால் துரத்து.

கலை என்ற வேர்ச் சொல்லிலிருந்தே கலாச்சாரம் வந்தது..கலாச்சாரத்தோடு பண்பாடு வந்தது பண் என்றால் இசை. இசையென்பது பாடல். புhடலென்பது மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருத்தல் வேண்டும் அது பாடுபவர் வாத்தியம் கேட்பவர் என மூன்றையும் இணைக்க வேண்டும். பாடுபவரும் வாத்தியமும் இணைந்தும் கேட்பவரை அது ஈர்க்கவில்லையென்றால் அது இசையல்ல வெறும் இரைச்சலேயாம். இதுபோன்றே வாத்தியம் வேறுபட்டாலும். புhடகர் வேறுபட்டாலும் இசை இசையாது. மூன்றும் பண்பட்டதே இசை.

பாடுதல் என்ற வினைக்கு பாடல் வேண்டும்.பாடுதற்கு இசை வேண்டும். பாடு என்ற சொல்லுக்கு கிராமிய வழக்கில்பல பொருள் உண்டு

‘பாடு பாத்துப் போடப்பா’ வளம் பார்த்துப்போடு என்று பொருள்.புகையிலையைப் பாடம் பண்ணுவார்கள்.ஒன்றன் மீதொன்றாய் பாடுபார்த்து அடுக்குவதே பாடம் ;பண்ணுதல். பாடம்பண்ண பாடுபொருளாய் இருக்க வேண்டும்.

அந்தக்கால மக்களின் கல்விமுறை பாடம் பண்ணுவதாகவே அமைந்திருந்தது.எழுது கருவிகளோ அச்சு முறைகளோ இல்லாத காலம்.அனைத்தும் கர்ண பரப்புரைகளாகவே இருந்தது. அதாவது காதால் கேட்டு வாயால் பரப்புவது. (கர்ணம் என்றால் காது) இந்தக்கல்வி பாடமாக்குவதையே முக்கியமாகக் கொண்டிருந்தது எனவே அக்கால ஆய்வுகள் அனைத்தும் பாடல்களாகவே குறித்துள்ளனர். வைத்தியம். சுpற்பம். ஜோதி;டம்.அறநெறிகள் புராண இதிகாசங்கள் இலக்கியங்கள் அனைத்தும் பாடல்களால் அமைக்கப்பட்டன. ஆகையால் இவை கர்ண பரப்புரைக்கதைகளெனப்பட்டன.

‘சொற்கள் என்பவை மலர்கள் எனக்கொண்டால் வசனமென்பது ஆய்ந்துவைத்த மலர்கள். புhடல் என்பது கட்டிவைத்த மலர்கள் கூடையிலிருந்து ஆய்ந்த மலரைத்தூக்கினால் அந்த மலர் மட்டுமே கையில் வரும். கட்டிவைத்த மலரைத்தூக்கினால் அது மாலையாக மேலே வரும். செய்யுள். வேண்பா. புhடல் என்பவை கட்டிவைத்த பூக்கள் ‘-கி. ஆ. பெ.விசுவநாதம்.

இதனாலேயே வைத்தியம் சிற்பம் சோதிடம் அறநெறிகள் அனைத்துமே பாடலாக செய்யப்பட்டன. செய்யப்பட்டதால் செய்யுள்கள் ஆயின் பாடல்களில் சீர் ;தளை யாப்பு இலக்கணம் என சேர்க்கப்பட்டன.ஏற்கெனவே மக்களிடம் இசையோடு பேசும் ஆற்றலிருந்தது. தேவையுமிருந்தது.

எதுகை மோனையோடு கூடிய பழமொழிகள், பாடல்கள், விடுகதைகள். நிறையவே இருக்கின்றன.

பாருங்கள் மனிதனுடைய அன்றாட வாழ்க்கை முறையைக்கூட ஒருவைத்திய நிகண்டு எப்படி எழுதியிருக்கிறது என்று. பற்பசை துரிசு(பிறஸ்) என்பன இல்லாத காலம்;; காலையில் எப்படிப் பல் விளக்கலாம் என்பதைச் சொல்கிறது. பாடல் வெண்பா வகையைச் சேர்ந்தது

‘கல்லும் மணலும் கரியுடன் பாளைகளும்

வுல்லதொரு வைக்கோலும் வைத்து நிதம்- பல்லதனை

தேய்ப்பாரேயாமாகில் சேராளே சீதேவி

வுhய்த்திடுவாள் மூதேவி வந்து’

அன்றைய மக்களின் பற்களைப்பற்றி சித்தர்கள் கொண்ட அக்கறை அதற்கான தீர்வையும் தருகிறது

‘வேலுக்குப் பல்லுறுதி; வேம்புக்குப் பல்லிறுகும்

பூலுக்குப் போகம் பொலியுஙகாண் – ஆலுக்கு

தண்டாமரையாளும் சேர்வளே நாயுருவி

கண்டால் வசீகரமாங்காண்’

வேலமரம் வேம்பு பூலாங்கொடி ஆல் நாயுருவி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணங்குறிக்கப்படுகிறது. வேல் பல்லை உறிதியாக்கம் வேம்பு பல்லை இறுக வைக்கும். பூல் தாதுவிருத்திக்கு ஆல் தண்தாமரையிலிருக்கும் இலட்சுமியைச் சேர்க்கும். நாயுருவிக்கு முக வசீகரம் கிட்டும்

இநதப்பாடலை பாடமாக்குவதற்கு அதன் சீர் தளை எதுகை மோனை என்பன துணை புரிகின்றன. நாட்டார் பாடல்களிலும் விரவி நிற்கும் சந்தங்கள் அவற்றைப் பாடமாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளன.

நாட்டார் கலை வடிவஙகள. புல. எனினும் வழக்கம் போல அவற்றை நான்குபெரும் பிரிவுகளில் பிரித்துப்பார்க்கலாம்..பாடல்கள். புழமொழிகள்.விடுகதைகள் கதைகள்

எழுதப்பட்ட வரலாறு இல்லாத ஒரு மக்கள் கூட்டம் எந்த நாட்டவர் என்பதையும் அவர்கள் வரலாறு என்ன என்பதையும் அறிய…. ஆவர்களது கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள முதியவர்களின் பாரம்பரியக் கதைகள் பாடல்கள் பழ்க்க வழக்கங்கள் என்பவற்றைக் கண்டு அதைக்கொண்டு வரலாற்றை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது அமெரிக்க நாட்டார் ஆய்வு மையத்தின்.; சிரேஷ்ட உறுப்பினரான ஜாக் பெல்லர் குறிப்பிட்டள்ளார். அதை குமாரி ஜயவர்த்தனவும் பல்தேசிய ஆய்வாளர்கள் அங்கீகரித்துமுள்ளனர்

தமிழர்களுடைய பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் என்பவைபற்றிய ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தாலும் அவை பட்டம் பெறுவதற்கும் மேலதிகாரிகளைத் திருப்தி செய்வதற்குமாகவே உள்ளன. இவை பெரும்பாலும் சாதிய மத இணக்கப்பாடுகளில் ஒரு மெத்தனமான போக்கைக் கொண்டவையாகவே அமைந்துள்ளன.

உளளதை உள்ளபடி உரைத்தால் அது கட்டுரைதான் . உள்ளதை உணர்ந்தபடி உரைத்தால் அது இலக்கியமாகிவிடும். நூன் இதை இலக்கியமாகவே செய்ய விளைகிறேன் . ஏற்கெனவே உள்ள படிமங்கள் மாறினாலும் அவை இசைந்தும் வரலாம ;.எனினும் மேற்கோள்கள் பாடல்கள் என எடுத்தாளப்படுபவை எல்லாம் காலத்தை காட்டும் கண்ணாடியாகத்தெரியும்

‘தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்’ இந்தப் பழ மொழியின் கருத்து என்ன? தொட்டிலிலே தொடங்கும் பாடல் சுடுகாடுவரை வருகிறது என்பதுதான். மனித வாழ்க்கை தாலாட்டில் தொடங்கி ஒப்பாரியில் முடிகிறது. இந்த இடை வெளியில் எவ்வளவு இருக்கிறது. எழுத்தறிவு இல்லாத கிராமத்துப்பெண்ணுக்கும் வக்கணையாக ஒப்பாரி வைக்கும் திறன் எதுகை மோனையோடு பாடும் சடங்குப்பாடல்கள் விழாப்பாடல்களினதும் தொழிற் பாடல்களினதும் நயம் சந்தம் அடஅடஅட….பார்ப்போமா?

மருத்துவிச்சிப்பாடல், தாலாட்டு விளையாட்டு, நாப்பயிற்சி மனனப்பயிற்சி கேள்விபதில் வாழ்க்கை நெறிகள் , விடுகதைகள் காதல் பிரிவு சிலேடை தொழிற்பாடல்கள் கப்பல்பாடல் மீனவர்பாட்டு வேட்டைப்பாட்டு உழவர்பாடல்கள். விழ்ப்பாடல்கள் வேடிக்கைப்பாடல்கள் வரலாற்றுபர்பாடல்கள். மலைகயத்துமக்கள் துயர் போர்க்காலப்பாடல்கள். ம்…..தொட்டிலில் தொடங்குவோமா காத்திருங்கள்.

http://malaigal.com/?p=5360

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டார் கலைகள் – 2

– தமிழ்க்கவி

உலகம் முழுவதுமே இன்று உரிமைக்கான போராட்டங்கள் மலிந்துள்ளன . குறிப்பாக பெண்கள் தொடர்பிலான விழிப்புணர்வு பெருகிவிட்டது . அதேயளவுக்கு பெண்மீதான ஓடுக்குதல்களும் அதிகரித்தே வருகின்றன.

அதற்கான காரணம்பற்றியெல்லாம் நான் ஆராய வரவில்லை. நான் பேச விளைவதெல்லாம்…இந்த பெண்விடுதலையோடு தன்விடுதலையை அதாவது தன் உரிமைகளை இழந்து நிற்கும் ஒரு சமூகம் பற்றித்தான் .

இவர்கள் ஒருபோதும் தமது உர்pமைக்காகப் போராடும் வலுவற்றவர்கள் தமது உரிமைபற்றி எதுவும் தெரியாத அறியாதவர்கள். ஏதோ நடப்பது நடக்கட்டும் என்று ஏற்கவும் முடியாமல் தமக்குள்ளேயே புழுங்கி அந்த வடுக்களோடு வளர்ந்து…பலர் உருப்பட்டாலும், சிலர் சமுதாயத்தின் கிருமிகளாகவும் மாறிவிடுகின்றனர்.

குழந்தைகள் பற்றிய என் மதிப்பீடு இது. குழந்தைகளுக்கு இப்போது தாய்ப்பாலும் இல்லை தாலாட்டும் இல்லை. அம்மா அருகிருந்து ஊட்டும் புட்டிப்பாiலாவது வாய்க்கிறதா? அதுவும் இல்லை . புட்டியில் பாலை ஊற்றி தலையணையை முட்டுக்கொடுத்து புட்டியைவைத்து குழந்தையின் வாய்க்குள் சூப்பியைத்திணித்துவிட்டுப் போய்விடுகிறார்கள். குழந்தை தலையணை அம்மாவுpடம் பாலைக குடித்துவிட்டு மீதமுள்ள சூப்பியை வாய் வலிக்கச் சூப்பிக்கொண்டே தலையணை அம்மாவுட்ன் உறங்கப்பழகிவிடுகிறது எங்கள்குழந்தைகளும’; பாட்டுக் கேட்டுத்தான் உறங்குகின்றன என்ற நவீன உலகத்தாய்மார் உண ;டு வானொலிப்பெட்டியை இயக்கி பிள்ளைக்கருகில் வைத்துவிட்டால்’ ஹூஇஸ்த ஹீரோ’…..சொக்காப்பலா….சிங்கம்டான்ஸ் என இதயத்தைதுடிக்கவைத்து உறங்கச்செய்ய எத்தனை பாடல்கள். இடையே தானாக வரும் இளையராஜர்வின் பாடல்களும் உண்டு .

நாட்டார் கலைகளில் மருத்துவிச்சிப்பாடலுக்கு பின் வருவது மருத்துவிச்சியை வாழ்த்தும் பாடல் . எள்ளுப்பொதியோடும் வந்தீரோ தம்பி

எல்லை மலையேறி வந்தீரோதம்பி.

கொhள்ளுப் பொதியோடும் வந்தீரோதம்பி

கொல்லி மலைநாடும் கண்டீரோதம்பி என வாழ்த்தி நீளும் இதன்பின்னாக தாலாட்டுப்பாடலே முன்நிற்கிறது .

‘ கண்ணுக்கு மையழகு கவிதைக்குப் பொய்யழகு’ என்ற கவிஞன் எதை மனதில் கொண்டு பாடினானோ ….தாய் தன் தாலாட்டில் பெரும்பாலும் பொய்களையே கட்டிவிடுகிறாள்.

ஆர் ஆரோ….ஆர்இவரோ ….என்று ஆரம்பித்து

ஆரடித்தோ நீயழுதாய்

ஆடித்தாரைச் சொல்லியழு…..என்கிறாள் பின் பிள்ளை பேசாது என்பது நினைவுக்குவர,

புhட்டி அடித்தாளோ பரிந்தெடுக்கும் கையாலே

பூட்டிஅடித்தாளோ பூவரசங்கம்பாலே….

.சரிசரி போனது போகட்டும்இனி சமாதானம் பண்ணலாம் என விளைகிறாள் தனது பொய்களை கவியாக்க தொடங்கினாள்

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு….

தொட்டிலுமோ பொன்னாலே…தொடுகயிறோ முத்தாலே….

ஏப்படிப்பட்டபொய்,

தொட்டில் கட்டுவதோ தான் கட்டிக்கட்டிக் கரைந்து போன நூல்புடவை. ரொம்ப மென்மையான குளிர்மையான சேலை. அதை முடிசுசுப்போட ஆடுமாடு கட்டி அறுந்த பழங்கயிறு. இது தானாம் பொன்னும் முத்தும்? தொட்டில் சேலைபற்றிய லயிப்பில்லாத கிராமவாசிகள் யார்? அண்மையில் கேட்ட ஒருபாடல்,

அம்மாவோட சேலை அது ஆகாயத்தைப்போல ;. ஏன அருமையாக இருந்தது இந்த சேலையிலே உறங்கும் குழந்தைக்கு அது பொன்தான் என்ற கருத்தில் பாடினாளோ? புpள்ளை சமாதானமாகவில்லையா?

அடுத்த பொய்,

அல்லியை மணமுடித்த அர்ச்சுனனாம் உன்மாமன்

பிள்ளை விளையாட புள்ளிமான் கொண்டுவாரார்

என் மைந்தன் விளையாட மான் வேட்டையாடி வரார்

அடித்தாரை சொல்லியழு ஆக்கினைகள் செய்துவைப்போம்

தொட்டாரை சொல்லியழு தோள்விலங்கு போட்டுவைப்போம்.

தாலாட்டுகளில் வௌ;வேறுவிதமான பாடல்கள் உணடு; இந்தப்பாடல்களிலே நாட்டு நடப்புகள் ஊர்ச்சிறப்புக்கள் பேசப்படுவதுண்டு

தம்பிக் கோட்டை கொடிதேசம் கொத்தணிகள ஆயிரமாம்…..;

கோட்டை வாசலிலே கொத்தமல்லி பூப்பூக்கும்

கொத்துமல்லி பூப்10க்க கொடிமிளகோ காய்காய்க்கும்

ஆணையிட்டா செய்வதற்கோ ஆயிரம் பேரிருக்கார்.

குழந்தையின் அழகு குறித்து விபரிக்கவும் தாலாட்டு தவறுவதில்லை.

தேனே…திரவியமே தெவிட்டாத தௌ;ளமுதே.

மானே மரகதமே மாசில்லா சோதிமுத்தே

கண்ணுக்கோ கண்ணாடி காலுக்கோ பொற்சிலம்பு

வண்ணத்து மேனியிலே வாசமுள்ள மல்லிகையாம்….

புpள்ளையின் பெருமை பேசவும் அதை எப்படி பாதுகாப்போம் என்பதை?யும் கூட தாய் உரைக்கத்தவறவில்லை

காக்கா பறவாம கரிக்குருவி நாடாம

உல்லான் பறவாம ஊர்க்குருவிநாடாம

கண்ணால் வலையடைச்சு காத்திருப்பே ராசாவ…

கோட்டை கொத்தளமாம் கோடி சனம் பாத்திருக்கா.

மாட மாளிகையாம் மனசறிஞ்ச சேவுகராம்

பல்லக்கு பரிவாரம் பாத்தெடுக்க ஆயிரமாம்

கண்ணே கண்ணுறங்கு கண்மணியே நீயுறங்கு..

இத்தனை பாங்காக வளரும் பிள்ளை தலை தூக்கி அமர கைவீச சாய்ந்தாட கைகொட்ட எல்லாமே தன் முதல் ஆசானான தாயிடமும் சூழலிலும் கற்கிறது வளரட்டும் பார்க்கலாம்

http://malaigal.com/?p=5443

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டார்கலைகள் 3

– தமிழ்க்கவி

தொடடி;ல் பிள்ளை தொட்டிலிலேயே கிடப்பதில்லை அது மௌ;ள கையசைத்துக் கையசைத்து சிரிக்கும் கால்களை அசைத்து உடலைப் புரட்டிப்போடும் சில நாட்களில் கால்களைக் கூட்டி தவழ முனையும். புpள்ளையின் இயல்பூக்கம் உணவு மட்டும் தானே கையில் கிடைப்பதையெல்லாம் வாயிலே வைக்கும்.

இந்தக்காலத்துப் பிள்ளைகளில் அநேகமான பிள்ளைகள் மண்ணில் தவழும் பாக்கியம் அற்றவர்கள். கட்டிலிலோ தொட்டிலிலோ அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். நான் பேசுவதெல்லாம் மண்ணின் மணத்தோடு கூடிய மண்ணுண்ணும் பேறுபெற்ற கிராமத்துக் குழந்தைகளைத்தான். தாய் எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டேயிருப்பாள் கிராமத்தில் அவ்வளவு வேலைஇருக்கும் இல்லாவிட்டாலும் மாவாட்ட நீரிறைக்க, நெல்குத்திச்சோறாக்க. தானியம் காயப்போட அள்ள கூட்ட கொளிக்கவென்று எவ்வளவு வேலைகள?; இதோடு குழந்தையையும் கவனிக்க வேண்டும் தரை அடுப்பில் சமைப்பாள் பக்கத்திலேயே குழந்தை; உடகார்ந்து விளையாடும் காய்கறிகளைக் கடித்துத் துப்பும். வேண்டாத பொருளை எடுத்து விட்டாலோ அடுப்பிலே வேலை செய்யும் தாய் என்ன செய்வாள் அதையும் விடமுடியாது இதையும் விடமுடியாது.

அவள் அதற்கான முன்னேற்பாடாக குழந்தையைப் பயிற்றுவித்துவிடுவாள் பிள்ளையை மூன்றாம் மாதம் அதுவாக தலையைத ;திருப்ப முயன்ற பின்தான் நிமிர்த்திப் பிடிப்பார்கள. மடியிலே சாத்தி வைத்து

‘ சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயற்கிளியே சாய்ந்தாடு

குத்துவிளக்கே சாய்ந்த்தாடு; கோயிற்புறாவே சாய்ந்தாடு

மயிலே குயிலே சாய்ந்தாடு மாடப்புறாவே சாய்ந்தாடு என்று சாய்தாடப்பழக்குவாள் சந்தத்தோடு ஆடும் குழந்தை தாளத்தையும் லயத்தையும் கூடக் கிரகிக்கும்.

அப்படியே ‘ கைவீசம்மா கைவீசு கடைக்குப்போகலாம் கைவீசு

மிட்டாய் வாங்கலாம் கைவீசு மெதுவாத் தின்னலாம் கைவீசு.

புpள்ளை வீசுகிற வீச்சில் கையிலெடுத்தபொருள் கழன்று விழுந்து விட பிள்ளை பாடலில் மெய்மறந்து கை வீசும்..இது என் அனுபவம்கூட. பாடலிலே கையிலெடுத்தது தீது என்ற கருத்துப்பட கைவீசு கடைக்குப்போகலாம் மிட்டாய் வாங்கலாம். ஏன பிள்ளையின் கவனத்தைத் திசை திருப்ப பாடலும் கைகொடுக்கிறது .

கைகளைக்கொட்டிச்சிரிக்கும் குழந்தையைப் பார்த்திருப்பீர்கள் இதையும்கூடப் பாடி ஊக்குவிப்பார் ; தாயோ தந்தையோ பாட்டியோ பேரனோ பாட்டுக்கு வசப்படுத்தி வைப்பர் குழந்தையை.

சுhளை சாளை குண்டாளம் சாளை கொட்டுமாம் சப்பாணி

சுப்பாணி சப்பாணி முத்துப்பிள்ளை

ஏப்ப வருவான்சப்பாணி

கொட்டியும் பூத்து குளமும் நிரம்ப

அப்ப வருவான் சப்பாணி.

இப்படி வளரும் பாடலில் இடம் பெறுவதெல்லாம் கிராமத்தின் சூழலிலுள்ள பொருட்களும் காலநிலையும் மட்டுமே

புpள்ளை வளர வளரப் பாடலும் மாறிக்கொண்டிருக்கும் தூக்கி குழந்தையைக் கையில் வைத்து நிறுத்திப் ;பிடியுங்களேன் குழந்தை துள்ள ஆரம்பிக்கும். ம்…..

கூத்துக்கூத்து குமரப்பா

குரக்கனைக் கொடடி;க்கொண்டு உமலைத் தா

கொட்டிக்கிழங்குக்கு பெட்டி யெடுக்க

கோவிச்சுக்கொண்டாராம் பண்டாரம்

அவிச்சு உரிச்சு முன்னாடி வைக்க

சிரிச்சுக்கொண்டாராம் பண்டாரம் கூத்துக் கூத்து குமரப்பா

இந்தப்பாடலிலே முன்னேவரும் ‘உமல்’ என்ற பொருள் பழங்காலத்தே பொருட்கள் வாங்கிப்போட சந்தைக்குக் கொண்டு செல்லும் ஓலையால் பின்னப்பட்ட பையாகும். ம்…இப்போதெல்லாம் சந்தைக்கோ கடைக்கோ பை யார் கொண்டு போகிறார் பொருட்களெல்லாம் பொலித்தீன்பைகளில் போட்டே தருகிறார்கள் உலக உற்பத்திகளின் குப்பைமேடாகிக் கொண்டிருக்கிறது நாடு

‘ கொட்டியும்பூத்து’ என முன்னே வருகிறது குளங்களுக்கு மழை பெய்து நீர் வந்ததுமே கொட்டி முளைத்து குளம் நிறைய கொக்குப்போல வளைந்து பூத்துவிடும் இந்த ஊதாப்பூக்கள் கொள்ளை அழகுதரும் குளங்களுக்கு

நல்ல உறவுகள் பற்றி விளக்க ஒளவையார் பாடும்போது இந்தக் கொட்டி பற்றி ஒரு சொல் வரும்.

ஆற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைபோல்

உற்றுளித்தீர்வர் உறவல்லர். -அக்குளத்தே

கொட்டியும் ஆம்பலும் போலவாம்

ஒட்டியுறுவார் உறவு

கொட்டி நீர் வற்றும் காலத்தே நிலத்துள் அப்படியே படுத்துவிடும். ஆதன் இரட்டை இலைகளை அடையாளம் வைத்து அதற்கு நேரே விரலை வைத்துக் கிளறினால் சிறிய கிழங்கு கட்டைவிரல் பருமனில் கிடைக்கும். அதை கழுவி அவித்து உரித்தால் கமகமவென வாசனை பிறக்கும் தின்ன ;சுவையோசுவை. முற்காலத்தே சந்தையில் விற்பர் தெருவிலும் கூவி விற்பர் .

நினைவிருக்கோ சோழனுடைய சபையிலே கம்பனுக்கும் அவர் மகன் அம்பிகாபதிக்கும் விருந்து அம்பிகாபதியின் காதலி அரசகுமாரி அவர்களுக்குப் பரிமாற வட்டிலிலே சோறு சுமந்து ஒயிலாக நடந்து வருகிறாள் காதலியின் அழகு அம்பிகாபதியைத் தூண்ட அம்பிகாபதி பாடத் தொடங்கிவிட்டான்

‘இட்டஅடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க

வுட்டில் சுமந்து மருங்கசைய…..

கம்பர் விழித்துக் கொண்டார் அடப்பாவி அரசனிடம் மாட்டிக் ;கொள்வானே. ஏன அவர் பாடலைத்தான் தொடர்ந்தார்…

கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூவுவாள்

நாவில் வழங்கோசை வையம் பெறும். ஏன்று பாடலை கொடடிக்கிழங்கு விற்கும் பெண்ணுக்கு மாற்றிவிட்டார்.

நாட்டார் பாடல்களுக்கு அகராதி வைக்கவேண்டிய காலமிது.

அடடா குழந்தை உணவு உண்ணுவதற்குத்தான் எவ்வளவு ஏமாற்றுகிறது திற வாயை என்றால் திறக்குமா?’ ஆ’க்காட்டு எனபதற்கு நிலாக்காட்ட வேண்டும். அதோ குருவி…அதோ நாய் அங்கே பார் மயில் இப்படி உலகக் கல்வியும் ஆரம்பமாகிவிடும் இங்கேதான்

நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா

மலை மேல ஏறிவா மல்லிகைப்பூக் கொண்டுவா என ஆரம்பிக்கின்றனர்.

பிள்ளையும் பேச ஆரம்பிக்குமே…என்பதல்ல பிரச்சனை பிள்ளைக்காக பெரியவர்கள் மழலை பேச ஆரம்பிப்பார்களே அதுதான் தன் வசமிழந்துபோன பாசம்.

அம்மா சொல்வாள்

‘என் சுட்டிக்குட்டிக்கு சோச்சா வேணுமா? பாப்பா குடிக்கிறியா? உச்சாபோறியா? ‘ பிள்ளையோடு துள்ளிக்குதித்து ஓடிப்பிடித்து எப்படியெல்லாம் களிப்பாரகள்.

நிலா நிலா எங்க போறாய்?

காட்டுக்க போறேன்

காடடை ஏன்?

கேட்டி வெட்ட

கேட்டி ஏன்?

மாடுசாய்க்க

மாடு ஏன்?

சாணிபோட

சாணி ஏன்?

வீடுமெழுக

வீடு ஏன்?

புpள்ளை பெற

புpள்ளை ஏன?

எண்ணைக்கிண்ணத்தில போட்டு சுண்டிச்சுண்டிவிளையாட ..

என்ன நடக்கிறது பிள்ளைக் எண்ணைக்குளியல் இலகுவாக முடிகிறது. பேசும் பயிற்சி தொடங்கும் போதே நாக்கை உழட்டி ஒலிஏழுப்பும் குழந்தை. அதை ஓழுங்குபடுத்தி ஒலிவடிவம் கொடுப்பாள் அம்மா.

மனனப்பயிற்சி மிக முக்கியமானது அந்தக்காலத்து மக்கள் எல்லாவற்றையும் பாட்டில் வைத்ததற்கும் அதுவே காரணம் மனனம் செய்ய எதையெல்லாம் கையாண்டார்கள்.

சொற்களிலே எதுகையும் மோனையும் பாடலிலே தாளம் சந்தம் என விழுந்தது ஒளவையாரை திருவள்ளுவரை நாலடியாரை வள்ளலாரை திருப்பாவை திருவெம்பாவை தேவார திரு வாசகங்கள் சித்தர்களையெல்லாம் நினைவில்கொள்ள பாடலின் எதுகை மோனையும் சந்தமும் கை கொடுத்ததல்லவா குழந்தைப்பாடல்களில் நாக்கும் பயிற்சியும் மனனப்பயிற்சியும் எப்படி கொண்டுவந்தார்கள். நாட்களும் வளரட்டுமே

http://malaigal.com/?p=5479

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டார் கலைகள் 4

- தமிழ்க்கவி

“ கடற்கரையில உரல் உருளுது பிரளுது

கண்ட புலிக்குத் தொண்டை கறுப்பு” மெதுவாக ஆரம்பித்து வேகத்தைக் கூட்டிக்கொண்டே போக நாக்கு சறுக்க ஆரம்பிக்கும்.

“சுடச்சுடசோழத்தோசை சுட்டெடுத்தா எட்டுத்தோசை , அதில ஒரு தீய்ஞ்ச தோசை”…இதேமிக அதிகம் சிலரால் “தசரதச்சக்கரவா்த்தி“ என்பதை தொடர்ந்து சொல்ல முடிவதில்லை. காலையில் பல் விளக்கும் போது . நாக்குவழிக்கிறதில்லையா என்று ஆசிரியா் கண்டிப்பார்.

Sixty five என்பதை உச்சரிப்புபிசகாமல் சொல்ல சிலர் கஷ்டப்படுவார்கள்.

வீட்டிலே பல் விளக்க, அப்போதெல்லாம் பற்பசைகளோ பற்பொடிகளோ இல்லை. ஒரு கரித்துண்டு,செங்கற்பொடி, தும்பு, குருமணல் இவைதான் பயன்படும். ஆனால் இவையெல்லாம் பல்லுக்கு கெடுதல் என்பது சித்தர் வாக்கு

“கல்லும் மணலும் கரியுடன் பாளைகளும்

வல்லதொரு வைக்கோலும் வைத்து நிதம் – பல்லதனை

தேய்ப்பாரே யாமாகில் சேராளே சீதேவி

வாய்த்திடுவாள் மூதேவி வந்து”

இவ்வளவுதான் கிராமத்து மக்களுக்கு இது போதும் காரண மெல்லாம் கேட்க மாட்டார்கள். பல்லிலே வலி வந்தால் எப்பிடிங்க? பார்க்கிறவர் மேலேயெல்லாம் எரிந்து விழுந்து கொண்டு முகத்தைக் கோணிக்கொண்டு பார்க்க நல்லாவா இருக்கும். பல்லில் பிரச்சனை வரக்கூடாது எனவே பல் தேய்க்க சித்தர்களே வழியும் சொல்கிறார்.

“வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்குப் பல்லுறுதி

பூலுக்குப் போகம் பொழியும் காண்- ஆலுக்கு

தண்டாம ரையாளும் சேர்வளே ( தண் தாமரையாள் இலட்சுமி)

நாயுருவி கண்டால் வசீகரமாங்காண்” இப்படி ஆரோக்கியத்தைப்பேண வேலமரப்பட்டை ,வேப்பங்குச்சி,பூல்வேர், ஆலமரவிழுது,நாயுருவி இவைதான் பற்களைப்பாதுகாக்க இப்போது தயாராகும் பற்பசைகளிலும் கலந்திருக்கும் என்பதை அப்போதே அநேக சித்தர் பாடல்களிலேயே துணையாகக் கொண்டனா்.

நாங்கள் விட்ட இடத்திற்கு வருவோமே..மனனப்பயிற்சி அக்காலத்தில் முக்கியமானதாகையால் சிறு சிறு பாடல்களில்நினைவுப்பயிற்சி வந்தது.

பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசி இல்லை.

முற்றிய நெற்கதிரே அரிசி கொஞ்சம் தருவாயோ?

இதற்கு நெற்கதிர் நானெப்படித்தர முடியும்? என்னை வளா்க்கும் வயலிடம் போய்க் கேள் என்றது வயலிடம் போன எலியார்

பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசியில்லை முற்றிய நெற்கதிரே நெல்லை வளர்த்த வயலே கொஞசம் அரிசி தருவாயா? என்று கேட்டது அதற்கு வயல் “நானெப்படி தர முடியும் என்னை ஈரமாக்கி உதவும் நீரைப் போய்க் கேள்.. என்றது நீரிடம் போன எலியார்

பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசியில்லை

முற்றிய நெற்கதிரே நெல்லைவளர்த்த வயலே வயலில் பாய்ந்த நீரே கொஞ்சம் அரிசி தருவாயோ என்றது.அதற்கு வயல் நானெப்படித் தரமுடியும் என்னை வரம்பு கட்டி இங்கே பாய விட்ட உழவனைப் போய்க் கேள் என்றது.உழவனிடம் போன எலியார் பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசியில்லை முற்றிய நெற்கதிரே கதிரைவளா்த்த வயலே வயலை நனைத்த நீரே நீரைப்பாய்ச்சிய உழவா கொஞ்சம் அரிசி தருவாயோ?என்று கேட்டது உழவனும் எலியாருக்கு அரிசி கொடுத்தார். எலியார் பாயாசம் வைத்தார் பார்க்கப் பொன எங்களுகும் தந்தார் சுவையோ சுவை.

அக்காவீட்ட போனேன் பழஞ்சோறு தந்தாள்

வேண்டாமென்று வந்தேன் வழியெல்லாம் பாம்பு

பாம்பு அடிக்கத்தடிக்குப்போனேன் தடியெல்லாம் தேன்

தேன் எடுக்கச் சட்டிக்குப் போனேன் சட்டியெல்லாம் ஊத்தை

ஊத்தை கழுவ தண்ணிக்குப் போனேன் தண்ணியெல்லாம் மீன்.

மீன்பிடிக்க வலைக்குப் போனேன். வலையெல்லாம் ஓட்டை

ஓட்டை தைக்க ஊசிக்குப்போனேன். ஊசியெல்லாம் வெள்ளி.

வெள்ளியடி வெள்ளி ,பொயிலக்காம்பு நுள்ளி”….நுள்ளி என்று சொல்லும் போதே பக்கத்திலிருந்து கதை கேட்வரைக் கிள்ளிவிடுவா்.

இன்னுமொன்று

“ காலையில என்ன சாப்பிட்டாய் ?”

“பழஞ்சோறு்”

“என்ன பழம் ? ”வாழைப்பழம்”

“என்னவாழை?” “திரி வாழை”

“என்ன திரி? ” “விளக்குத் திரி”

”என்ன விளக்கு ?” குத்து விளக்கு”

“என்ன குத்து ?” இந்தக் குத்து” என்ற வாறே எதிரில் கதை கேட்டவரை குத்திவிட்டு ஓடிவிட வேண்டும்.

இதே போல கதைப்பாடல்களும் உண்டு இவை பாடலாகவோ கதையாகவே வந்தாலும் ஞாபகத்தில் வைப்பதே பிரதானமானது.

ஒரு நாள் ஒரு எலி சோகமாக ஒரு ஆலமரத்தின் கீழ் இருந்தது. அந்த ஆலமரம் எலியே எலியே ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு எலி காலையிலே என் மனைவி கொசுமாமி ரசம் வைத்தாள். ரசம் கொதிக்கிறதா என்று பார்க்க சட்டியை எட்டிப்பார்த்தவள் சட்டியில் விழுந்து செத்துப்போனாள். அந்ததுயரம்தான் என்றது. ஆலமரம் துயரைப் பகிர தன் இலைகளை உதிர்த்துவிட்டது. அந்த மரத்தில் தினமும் வந்தமரும் கொக்கு வந்து பார்த்துவிட்டு “ஆலமரமே ஏன் இலைகளை உதிர்த்தாய் என்று கேட்டது.. ஆலமரம்,” எலியண்ணன் பெண்டாட்டி கொசுமாமி செத்துப்போனா எலி சோகமா இருக்கே நானும் இலையைக் கொட்டி விட்டேன். என்றது கொக்கு தன் சிறகுகளை உதிர்த்துவிட்டது.அப்படியே பறந்து குளத்துக்குப் போனது குளம் கொக்கைப் பார்த்ததும் .“கொக்காரே கொக்காரே எதற்கு உன் சிறகுகளை உதிர்த்துவிட்டாய் என்று கேட்டது கொக்கும் விபரிக்க ஆரம்பித்தது

“ எலியண்ணன் பெண்சாதி கொசுமாமி செத்திட்டா எலி சோகமாக. ஆலமரம் இலையுதிர்க்க நான் சிறகுதிர்த்தேன்.” என்றது. குளம் தன் நீரை வற்றச் செய்தது் இப்படியே தொடரும் கதையில் ஒவ்வொரு சம்பவத்திலும் முன்கதை சொல்லிச் சொல்லியே வர வேண்டும். முடிவில் “எலியண்ணா்பெண்சாதி கொசு மாமி சாக எலியண்ணர் சோகமாக, ஆலமரம் இலையுதிர்க்க , கொக்கு சிறகுதிர்க்க,குளம் தண்ணீா்வற்ற,மாடு காலுடைக்க, உழவன் ஏர் உடைக்க , உழவன்மனைவி கஞ்சிப்பானையை உடைக்க, உழவன்மகன் பாடசாலை சிலேட்டை உடைக்க , பாடசாலை ஆசிரியர் பாடசாலைக்கு நெருப்பை வைத்துவிட்டு சிறைக்குப்போனாராம்” என்று முடியும்.

நாட்டார் பாடல்களில் விளையாட்டுப்பாடல்களுக்கும் இடமுண்டு எதைச் சொல்வதாயினும் மனப்பாடம் செய்ய இலகுவாக எதுகை மோனையுடன் வரும் சிறு சுலோகங்கள்போல வரும்.

கண்ணாரே கடையாரே காக்கணம் பூச்சியாரே

ஈயாரே எறும்பாரே

எண்ணுாறுமுட்டையிட்டு என்கொன்றும் தராவிட்டால்

கண்ணைக்கட்டி காட்டிலவிட்டேன். எங்கயிருக்கு? என்று கூவியதும் எதிர்முனையிலிருந்து“தேடிப்பிடி” என்று குரல் கொடுப்பார்கள்.குரல் வந்த திசையில் தேடஆரப்பிப்பா்.

கருவாட்டுக்கிழவி. என்றொரு விளையாட்டு,

“பாட்டிபாட்டி எங்கபோறே? “ ,

” கருவாடுவாங்க”

இதோ இங்க இருக்கு , வட்டமாக கால்நீட்டி அமர்ந்திருக்கும் சிறுவர்களின் கால் கூட்டமே கருவாடு எனப் பாவனை செய்யப்படும். பாட்டி எல்லாவற்றையும் எண்ணி சரிபார்த்துவிட்டு.“சரி வச்சிருங்க நான் குளிச்சிட்டு வந்து எடுக்கிறன்” என்றுவிட்டுப் போவார். சற்றுத்துாரம் போய்விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது பிள்ளைகள் கால்களை மடித்துக்கொள்வார்கள் .,

”எங்க கருவாடு?“ “காகம் கொண்டுபோயிற்றுது”

“காகம் எங்க?” ” மரத்தில“

“மரமெங்க?” “தறிச்சாச்சு”

“தறிச்ச கொப்பெங்க?“ “எரிச்சாச்சு“

“எரிச் சாம்பலெங்க?” “ வெள்ளங் கொண்டுபோயிற்றுது” இப்படி பாட்டியைக் கலாய்க்க பாட்டி பிள்ளைகளை விரட்டிவிரட்டி அடிப்பார்.அடிபட்டவர் அடுத்தபாட்டி.

மழைகாலத்தில் வீட்டுக்குள்ளேயே விளையாட நுள்ளாம்பு கிள்ளாம்பு கொக்கா தலையில என்னபூ ? “முருக்கம்பூ” முருக்கம்பூவத்தின்னவனே முளகுசாறு குடிச்சவனே பாதி விளாம்பழம் தின்னவனே பவளக்கொடி கெயெடு“இது கைகளைப்பரத்தி வைத்து விளையாடுவது

இந்தப்பாடல்களில் அா்த்தம் உள்ளதோ இல்லையோ இவை மனனம் செய்யப்பட்டு பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வருவதுதான்.

கொக்கு பறபற கோழி பறபற ஆலாபறபற அம்மி பறபற.என்று விளையாடும் ஆட்டத்தில் பறபற என்னும் போது பறப்பது போல அபிநயிக்க வேண்டும். ஆனால் பறக்க முடியாத பொருள் வரும் போது கையைத் துாக்கினால் ….போச்சு தண்டனைதான். ம்….தொடர்ந்து விளையாடுவோம்.

••••

http://malaigal.com/?p=5603

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டார் கலைகள் 5

– தமிழ்க்கவி

“பாலன் பஞ்சம் பத்து வருசம்” என்பது பழமொழி ஒரு குடும்பத்தில் பையன் பிறந்துவிட்டால் அவனுக்கு பத்துவயது வரும்வரைதான் பெற்றோரில் தங்கியிருப்பான் அதற்கப்பால் அவனும் தந்தையோடு மாடு சாய்த்துக்கொண்டு தொழிலுக்குப் புறப்பட்டுவிடுவான்.ஆறு ஏழு வயது வந்தாலே காட்டு வேலைக்கு கஞ்சி கொண்டு போக அவனால் முடியும்.

முற்காலத்தே கலியாணமாகி ஊர்விட்டுப்போனவரை பல நாள் கழித்து சந்தையில் பார்த்தாலோ வேறெங்காகிலும் பார்த்தாலோ பெரியவா்கள் கேட்கும் முதல் கேள்வி.“என்னப்பா சௌக்கியமா பிள்ள குட்டிங்க சுகமா? ம்…. எத்தின பிள்ளையள் ?”

பதில், “ நாலு பையன் ரெண்டு பெண்ணுங்க”

“ஆ….அப்பறம் என்ன? அவன் பிழைச்சுக்குவான் ” என்பார்கள்.

காட்டு வேலைக்கும் வீட்டு வேலைக்கும் ஆட்கள்தான் வேண்டும். குடும்பம் பெருகப் பெருக அவனுக்கு வசதிதான் விவ சாயிக்கு உணவுப்பாடு் பஞ்சமில்லை. எல்லோரும் பாடுபட்டு உழைப்பார்கள்.

இப்போது பாலன்பஞ்சம் இருப்த்தெட்டு வருடம் கூடப் போய்விடுகிறது. பிள்ளைகள் கல்வி கற்க பெற்றவர்கள் உழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். பத்துப்பிள்ளைகளைப் பெற்று அசங்காமல் வளர்த்த எம் மூதாதையர்கள், ஒன்றிரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு தடுமாறும் தமது இளைய சந்ததியைப் பார்த்து வியந்து போகிறார்கள் .

கதை சொல்லிச்சொல்லியே வேலை வாங்குவதில் எமது பாட்டியும் சரி அப்பாவும் சரி விண்ணர்கள்.

தகப்பனாரை அப்பு , ஐயா, என அழைப்போம் ஆனால் நாட்டார் கதைகளில் அப்பு தான் வரும்.

ஒரு சில நாட்களுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் நாட்டுப்புறக் கலைஞர்களை ஒருவா் பேட்டி கண்டார். அதில் ஒரு கேள்வி

“ நாட்டார் பாடல்களில் எல்லாம் அதிகமாக ஒரேமாதிரியான மெட்டுக்களே வருதே….எப்பிடிங்க?“

?நம்ப என்ன பண்ணமுடியுங்க பரம்பரை பரம்பரையாவாற வழக்கமுங்க ” என்றார் .

சிறுவர் பாடல்களுக்கு அடுத்தபடியாக நாம் தொழிற் பாடல்களைப் பார்க்கப்போகிறோம். கிராமத்து தொழில்களில் மட்டுமல்ல எந்தத் தொழில் செய்கிறார்களோ…அந்தத் தொழிலின் அசைவுக்கு ஏற்ற சந்தமே பாடலுக்கு வாய்த்திருக்கும். குத்துப்பாட்டுக்கு நெல்அறுவடை செய்யமுடியுமா? துடுப்பு வலித்து படகோட்ட முடியுமா?இயலாதில்லையா?

பாலர் பாடும் பாடல்களில் பாடசாலைக்குப்போகும் போது தாயார் பாடும் ஒரு பாடல்,

“ குடைபிடித்து செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு

குடுகுடென நடந்து வரும் குழந்தைகளே கேளும்

மழைகாலம் வழி வழுக்கும் மிகக் கவனம் மக்காள்

வழியருகே வெள்ளமுண்டு விலகி வர வேண்டும்

வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாட வேண்டாம்.

வீண்சண்டையால் வழுக்கி விழுந்தெழும்ப நேரும்்

கண்மணிகாள் நீர்ச்சிரங்கு காலில் வரும் கவனம்

கண்ணுறக்கமில்லாமல் கதறியழ நேரும்.” பாடசாலை செல்லும் பிள்ளைகள் தாயை நோக்கிப்பாடும் ஒரு பாடல்இது, இதன்சந்தம் பிள்ளைகளின் துள்ளுநடையை ஒத்திருக்கும்.

காலைத்துாக்கி கண்ணிலொற்றி கட்டிக்கொஞ்சும் அம்மா

பாலைக்காய்ச்சி சீனி போட்டு பருகத்தந்த அம்மா

புழுதி துடைத்து நீருமாட்டி பூவும் சூட்டும் அம்மா

அழுதிடாமல் பள்ளிக்கூடம் அடையச்செய்யும் அம்மா

பள்ளிக்கூடம் விட்டநேரம் பாதிவழிக்கு வந்து

துள்ளிக்குதிக்கும் என்னைத்துாக்கித் தோளில் போடும் அம்மா.

இந்தப்பாடலின் சந்தமும் துளிளித்துள்ளி நடக்கும் குழந்தையின் நடையை ஒத்திருக்கும். அவ்வளவுதான் .

“அம்மா மெத்தப் பசிக்கிறதே அப்பம் ரெண்டு இப்போ தா”

தந்தால் உடனே பசிதீரும் தாகம் தீர மோரும் தா….

தலையை வாரிக் கட்டிவிடு தளர்வாய்ப் பொட்டும் இட்டு விடு

பட்டுச்சட்டை போட்டுவிடு பாலும் சோறும் ஊட்டிவிடு

பாலர் போறார் பள்ளிக்கு பட்சமாக விடம்மா….

இதேவகையில் பெரியவர்கள் பாடும் பாடல்கள் தொழில் செய்யும் போது களைப்பைப் போக்கப்பாடுவது அது தொழிலின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது. எனவே பாடலின் சந்தமும் தொழிலுக்கேற்ப வேக மெடுக்க வேண்டும்்

வயலை உழவு செய்ய மாடுகளை கொண்டு போய் கலப்பையில் பூட்டி,

தந்ததான தானானே…

.பாரக்கலப்பையடா….செல்லனுக்கு

பாரம் மெத்த தோணுதடா…

எட்டி நட கண்டே…ஏர்பாயும் தேசமெல்லாம

பார்த்து நட கண்டே…பார் பாத்து சால்வழியே….

என்று ரொம்பமெதுவாக மாடுகளின் நடைக்கேற்ப நகரும் பாடல் .

ஏற்றப்பாடலுக்கு எதிர் பாட்டுக் கிடை்யாது என்பார்கள் இப்படி ஒரு ஏற்றம் இறைத்தவனுடைய பாடலில் கம்பனே தன் மமதை இழந்ததாக ஒரு செய்தி இருக்கிறது. ஏற்றம் இறைப்பவன் சாலிலே நீர் கோலி வெளியே இழுக்கும் போது வேகமாக மாடுகளைச் சாய்த்து ஓட்டமும் நடையுமாகக் கலைப்பான் கொஞ்சம் வேகம் குறைந்தாலும் சாலின் நீர்ப்பாரம் மாடுகளையும் உழவனையும் சேர்த்து கிணற்றுள் தள்ளிவிடும். ஆனால் வேகமாக சென்று நீரைச்சரித்தபின் கீழ் தும்பிக் கயிற்றை மெல்ல இழுத்து கையில் சுருட்டியவாறே“ ங்ஙாஆ…..” என தன பாடலைத் தொடங்குவான்.பெரும்பாலும் அவன் இழுக்கும் சால்களின் எண்ணிக்கையை பாடலோடு சேர்த்துக்கொள்வான். ஒவ்வொரு வயலும் எத்தனை சாலில் நிறையும் என்பதும் அவனுக்கு மனப்பாடமாக இருக்கும்.

வழக்கம் போல அவரவர் சாமிக்கே முதல் வரி அர்ப்பணம்்“

“ங்ஙாஆ….. மயிலேறிவா சாமீ…..ஒம்பதோடா சாலுா……” .அவ்வளவுதான் கிணற்

றுள்நீா் முட்டிவிடும்.அடுத்தசால் கோலிவிடும் . த்தா….கை…ச்த்தா…என மாடுகளை உரப்பி விரட்டிச் சென்று நீரைச் சரிப்பான். மீண்டும் தும்பிக் கயிற்றை இழுத்துச் சுற்றியவாறே மறுபடி ஆரம்பிப்பான்.

ங்ஙா….மயிலேறி வா….சாமீ…..பத்தாவதோ சாலுா…..” நீங்களே சொல்லுங்கஇந்தப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு எப்படிப் பாடுவது. இதே போலதான் கமபன் மாட்டினானாம். கதை தெரியாதவர்களுக்காக

அதை சுருக்கமாக சொல்கிறேன். கம்பன் சோழனோடு கோபித்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறினான் . பசி வருத்த ஒரு தோட்டக்கரையில் நிழலில் ஓதுங்கினான். அங்கு ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தவன் பாடினான்

ஒரு தடவை நீர் கோலியாயிற்று “மூங்கில் இலைமேலே…… .. அடுத்த தடவை …துாங்கும் பனீ…நீரேஏ…… அவ்வளவுதான் திருப்பிப் திருப்பிப் பாட அன்றைய இறைப்பு முடிந்துவிட்டது .கம்பன் யோசித்தான் மூங்கில் இலைமேலே துாங்கும் பனி நீரே இது எப்படி அடுத்த அடியைக் கட்டுவான் இந்த படிப்பறிவில்லாத உழவன் என தனக்குள்

“ ச்சமூங்கில் இலைக்கும் விவசாயத்துக்கும் என்ன தொடர்பு….“மறுநாளும் கம்பன் அங்கே வந்து காத்திருந்தான்.

உழவன் பாடலைத் தொடர்ந்தான் “மூங்கிலிலைமேலே துாங்கும் பனிநீரே…. துாங்கும் பனி நீரை ….வாங்கும் கதிரோனே….” ம்….கதிரவனானசூரிய தேவனுக்கு அா்ப்பணித்தான் முதல் வரியை.

”வானம் கறுக்க வேணும் மழை வயல்காடெல்லாம் பெய்யவேணும் ”

“மண்வெட்டியத்தோளில வச்சு மடை திறக்கப்போற மச்சான்

மடையத்திறந்துவிடு மங்கையர்கள் நாத்துநட“

தானே னன்னன்னன்னானா னானேனன்னன்ன னானா.இந்தப்பாடல்களிலெல்லாம் விரவி நிற்கும் சந்தம் தொழிலின் அசைவுக்கேற்றவை. மண்வெட்டி வீசி வேலை செய்யவும். நாற்று நடவும் தோதானவை.

அருவிவெட்டுதல் என இலங்கையில் பேசப்படும் தொழில் தென்னிந்தியாவில் அறுவடை என்று குறிப்பிடப்படுகிறது . அருவி வெட்டுக்களம் வன்னி மட்டக்களப்பு பிர தேசங்களில் ஒரு திருவிழாக்காலம் போல திகழும் .

பரத்தை வெட்டு என ஒரு முறையுண்டு ஒரு குளத்தின்கீழுள்ள அனைத்து பங்காளர்களும்கூடி ஒருவருடைய வயலில் இறங்கி அறுவடை செய்வா். ஒருபுறம் உடுக்கையடித்து அருவி வெட்டுப்பாடல்களைப் பாட ஒரு குழு நிற்கும்.வயலில் இறங்கியோர் வரிசை தப்பாமல்அரிவாளைவீசி வெட்டுவார்கள் வீச்சுக்கேற்ப பாடலின் சந்தம் இருக்கும் . பாடலைப் பாடம் பண்ணாதவர்கள் அதே மெட்டை தருப்போடுவார்கள்.

“முடியோடு தேங்காயைக் கையில் எடுத்தோம்

மூத்ததோர் கணபதியைத் தோத்திரம் செய்தோம்.” என தொடங்கினால் பாடலும் கைகளும் சேர அசையும். பள்ளுப்பாடல்களும் சிந்துவகையும் துாள்பறக்கும் . பள்ளர்கள் பாடுவதால் பள்ளு என்றானதா ? பள்ளர்களை ப்பாடுவதால் பள்ளு என்றானதா? பள்ளன் எனப்படுபவன்யார் அவனே இந்த அகிலத்துக்கெல்லாம் உணவூட்டும் பெரியவன்அவர்கள் ஏன் அடிமையானார்கள். யோசிப்போம்

••••

http://malaigal.com/?p=5624

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டார் கலைகள் -6

தமிழ்க்கவி

விக்கா வுக்கா வித்தா விப்போய்

விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்

இக்கா யத்தா சைப்பா டுற்றே

யுpற்றோ டிப்போய் நிற்பீர் வைப்பீர்

அக்கா டப்பேய் தொக்கா டச்சூழ்

ழப்பா டத்தீ வெப்பாட பூண்

நெக்கா டக்கா னத்தாட பேர்

நெய்த்தா னத்தா னைச்சே வித்தே

இந்தப்பாடலை வாசியுங்கள் ஒரே தடவையில் பிழையின்றி வாசித்துவிட்டால் நீங்கள் ஒரு சிறந்த வாசிப்பாளர் என்ற

அறிவிப்புடன் முன்னொரு காலத்தில் குமுதத்தில் வந்தது . எனினும் இவை முன்னரே என் பூட்டன் எனக்கு சொல்லித் தந்திருந்தார். அவரைநான் மறக்காமலிருப்பதற்கு அவர் சொல்லித்தந்த விகடக் கதைகளும் புதிர்களும் விடுகதைகளும் இன்றும் மனதிலுள்ளன

எனது மேடைநிகழ்ச்சிகளில் நான் இந்தப்பாடலை அநாயாசமாச் சொல்லும்போது இது என்ன மொழி என்பார்கள் .தெளிவான உச்சரிப்பு தடங்கலற்ற வாசிப்பு. செறிவான கருத்தைப் புரிதல் என மூன்று பயிற்சி இதில் உண்டு.

பார்ப்போம்.. விக்காவுக்க (விக்கித்தளர்நது) ஆவி தாவி (வெளியே) போய் விட்டால் அட்டார் (அயலவர் சுடலைக்குகொண்டு சென்று)

சுட்டுவிட்டு ஊர்புகுவார் இக்காயத்து ஆசைப்பாடுற்றே (இற்றுப் போகும்வரை)தேடிப்போய் நிற்பீர் சேர்த்துவைப்பீர். ஆக்காட பேய் தொக்காட சூழப் பாடும் தீயின் கனலாட அணிந்த பூண்(ஆபரணங்கள்) நெகிழ்ந்துஆடகானகத்திலே ஆடும் பேர் பொருந்திய நெய்த்தானத்திலே அமர்ந்த ஈசனைச் சேவித்து உய்வீராக….

ம்….புரியிது உட்டாலக்கிடி எனறுதானே பார்த்தீர்கள். இது தமிழ்க்கவி..

பள்ளு இலக்கியம் தனியாக தனக்கொரு இடத்தை வகித்தாலும் அதன் பாடுபொருளாக கிராம மக்களின் வாழ்விலே தொடர்பு பட்டவையே அடங்குகின்றன கிராமியப்பாடல்களுக்கு ஒரு வரைவிலக்கணத்தை வழங்க முடியாது என்றாலும்

அவை வாய்மொழி இலக்கியங்களே என முன்னோர் கருத்திட்டுள்ளனர். கிராமத்தில் மக்களால் பாடப்பட்டு வந்தாலும் ஏடும் எழுத்தும் வாய்க்கப்பெறாத காலம் இருந்தபோது இந்தக்கூற்றை ஏற்கலாம் இன்று அப்படியல்ல கிராமியப்பாடல்களும் நூலிலே இடம்பெறுகின்றன. ‘கதிரையப்பர் பள்ளு’போன்ற உயர்கல்விமான்களால் எழுதப்பட்ட பள்ளு வகைகள் எழுதியபோதே ஏட்டுக்குள் இற்ங்கின அதை நாம் செம்மை இலக்கியத்துள் வைப்போம் இன்றும் பாடலில் பாடப்படும் பள்ளு எமது மக்களின் சாதிப்பிரிவினைகளைச் சுட்’டும் ஆண்டான் அடிமைப் பாரம்பரிய காலத்தை வெளிப்படுத்திய சுவைநிரம்பிய பாடல்களைக் காணலாம் இவற்றைப்பேசாமல் பள்ளு பாட முடியாது என்பது என் கருத்து .

நாடகப் பாணியிலமைந்த பாடல்களாக இவை வருகின்றன. நில உடைமையாளன் ஆண்டை எனப்படுகிறான். பள்ளன் அவன் வயலைப் பயிரிடுபவன் அங்கு கூலிமட்டும் பெறுபவனல்ல அவனுடைய குடும்பமே ஆண்டைக்கு அடிமை

பள்ளன் வயலிலே வேலை செய்கிறான் காலையிலே கஞ்சி கொண்டு வரவேண்டிய பள்ளி இன்னும் வரவில்லை. எட்டி வழியைப்பார்ப்பதும் வேலை செய்வதுமாக கழிகிறது அவன் பொழுது. பள்ளி ஒரு வழியாக ஆடி அசைந்து வருகிறாள்.

புள்ளன் தன கோபத்தில் பாடிக்கொண்டு போகிறான்

‘எனடி பள்ளிநீ ஏகாந்தக்காறி

இந்நேரம் மட்டும் என்னடி செய்தாய்’ என்றவாறே கஞ்சிப் பானையைக் காலாலே தட்டிவிடுகிறான் . அவள் என்ன செய்வாள் பாவம் தன் ஆண்டையிடம் முறையிடுகிறாள்.

‘ஆறுபோந்தங்கு தண்ணீருமள்ளி

அழுத பிள்ளைக்கு பாலும் புகட்டி

சீறு பூறென்று சிறு நெல்லுக் குத்தி

கமுகம்பூப்போல அரிசியுந் தீட்டி

காலத்தாலே நான் காய்ச்சின கஞ்சியைக்

காலாலே தட்டிப் போறானே ஆண்டே…’.

‘ம்….அப்படியா? கூப்பிடு அந்தப்பள்ளனை’ஆண்டையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பள்ளன் வருகிறான் . ‘என்ன நடந்தது? ஏன் கஞ்சியைத் தட்டிவிட்டாய். ?’

ஏன்ன? இவளா இவளைப்பற்றி உங்களுக்குத் தெரியாது ஆண்டே…

அருக்குவாள் சற்றே விழிக்கு மையெழுதுவாள்

அழகான கூந்தலை அள்ளி முடிப்பாள்

செருக்குவாள் சற்றே செல்லங் கொண்டாடுவாள்

தேனுடன் கொஞ்சம் பாலும் கலப்பாள்

உருக்குவாள் ஊரிற் பொடியள் எல்லோரையும்

உச்சியம் பொழுது ஊணுக்கழைப்பாள்

நொருக்குவேன் கையில் மண்வெட்டியாலே நான்

ஆண்டைக்காகப் பொறுத்து விட்டேனே ……என்றானே பார்க்கலாம் . இந்தப் பள்ளனுக்கு இரண்டு மனைவியுள்ள கதையெல்லாம் உண்டு.

பள்ளி பள்ளி பள்ளன் எங்கடி போனா…ன்?

பள்ளம் பார்த்துப் பயிர் செய்யப்போனான் ..

கொத்தப்போனான் குழலூதப்போனான்

கோழிக் கூட்டுக்கு மண்வெட்டப்போனான்…’

கறுத்தக்காளை ஓரிணை பூட்டீ கமுகடி வயல் உழுகைக்கே

கறுத்தப் பள்ளியார் எறிந்த நாத்து கமல குண்டலம் வீசுதே

சிவத்தக்காளை ஓரிணை பூட்டி சேந்து நாங்கள் உழுகைக்கே

சிவத்தப்பள்ளியார் எறிந்த நாத்து சோழக மண்டலம் வீசுதே

இவர்களுக்கு வேலை செய்யுமிடத்துக்கு ஆண்டை அனுப்பும் உணவு இருக்கிறதே…

‘ நெல்லருவி வெட்டவென்று; பொடியளுக்குச் சொல்லி

நெத்தலியிலே ஒரு ஆணமும் காச்சி

புல்லருவி வெட்டவென்று பொடியளுக்குச் சொல்லி

புழுத்த கருவாட்டிலொரு ஆணமும் காச்சி…. எனவரும் பாடலடிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவைப்பற்றி தெரிவிக்கிறது

பள்ளுப்பாடல்களில் மிகவும் நகைச்சுவையாகவும் பொருள் பொதிந்ததாகவும் ஆக்கப்பட்டுள்ள பாடல்கள் வன்னி வள நாட்டில் பாடப்படும் ‘பன்றிப்பள்ளு’ பாடல்களாகும்

ஒரு விவசாயியின் வயற்கால வாழ்க்கையை மட்டுமன்றி அவனுடைய வயற் காவலை மீறி உடைத்து உள்ளே வரும் பன்றிகளின் மனநிலையை தத்ரூபமாக சொல்லிச் செல்கிறது பன்றிப்பள்ளு. பன்றியின் குடும்பம், அதன் அழகிய மனைவி பற்றிய வருணனை குழந்தைப்பாசம் அவற்றுக்கு காட்டில்விளைந்த உணவைவிட மானிடர்கள் செய்த நெல்லை தின்பதில் ஏற்படப்போகும் ஆபத்துகள் மகிழ்ச்சி இவைபற்றியெல்லாம் அருமையாகச் சித்தரிக்கின்றன இந்தப்பாடல்கள்.

வனத்திலே படுத்திருந்த பன்றிகள் உறங்குகின்றன அப்போது பெண்பன்றி ஒரு கனவுகாண்கிறது கனவுகண்டு திடுக்கிட்டெழுந்து கணவனிடம் தான் கண்ட கனவைச் சொல்கிறது. கனவைக் கேட்ட ஆண்பன்றி மனைவியைத் தேற்றி ‘அடீ…அஞ்சாதே…நாட்டிலே மானிடர்கள் செய்யும் பயிர் விளைந்து விட்டது அதனால்தான் இப்படிக் கனவு வருகிறது. இந்தக் காட்டுப் பிழைப்பைப் போட்டுவிட்டு வயலில் இறங்கலாம் வாடி என்கிறது பெண்பன்றியும் உடனே புறப்பட. ஆண்பன்றி கோபித்துக் கொள்கிறது உன் பருத்த வயிறு மட்டும்தான் உனக்கு நினைவிலிருக்கிறதா? அடிபாவி நமது கண்ணுக்கினிய மக்களை அழைக்கத் தோன்ற வில்லையா . இப்படி ஒவ்வொரு பாடலிலும் சுவை ததும்புகிற தொகுப்ப பன்றிப்பள்ளு. பன்றிகள் நன்றிகெட்டதனமாக வயலில் இறங்கவில்லை. அவை மானிடர்களிடம் மிக பவ்வியமாக அனுமதி கேட்கின்றன.

‘வனத்தையறுத்து நெருப்பைக் கொழுத்தி மரத்தின் தடிகள் பொறுக்கியே

வளைத்து வேலி நிரைத்துக் கட்டி வளர் நெல் விதைகள் தூவியே

புனத்தில் அடரும் கரி கண்டுடனே புள்ளிமான் பல சாதிக்கு

பிரித்துக் கொடுத்து தனக்கு மிஞ்சின பொருள் கொண்டேகும் மனிதரே!

இனத்தில் பெரிய சாதி நாங்கள் பிழைக்க வழியில்லாமலே

எவர்க்கும் பெருமை கொடுக்கும் செந்நெல் விளைவு தறைக்குள் ஏகினோம்

கனக்க விளைவிங்(கு) கிருக்கும் செய்தியை நமக்கிங(கு); கொருவர் உரைத்திடார்.

கன்னி துயிலில் கண்ட கனவை களரக்கேளும் மனிதரே’

ஆயிற்றா? ஏங்களுக்கு யாரும் சொல்லவில்லை . என்மனைவியின் கனவிலே கண்ட செய்திதான் இது என்ற பன்றி தன் மனைவி கண்ட கனவை சொல்வதாக அமைகின்றன அடுத்’து வரும் பாடல்கள்

‘நானும் நம்மட பெண்டிலும் பிள்ளையும் ‘

நடுவனத்தில திரியக்கே(திரியும் போது)

நயந்து கவலைக் கிழங்கு கிண்டி நாங்கள் தின்று திரியக்கே

வானிலிருந்து மழைகள் பொழிய மாரி வெள்ளம் பெருகவும்

கானிலிருந்து மயிலும் குயிலும் கலந்து ஏசல் பாடவும்

காட்டுக்கிளியும் கூட்டுப்புறாவும் கடிந்து ஒருசொல் கூறவும்

தேனிலினிய மனைவி அருண்டு திடுக்கிட்டெழுந்து என்னிடம்

செப்பிடப் பொருள் தேர்ந்து பார்த்துநான் தேவியரிடம் கூறினேன்.

ஆமாம் கனவு கண்டு திடுக்கிட்டெழுந்தவளிடம் அதன் பலனைத் தெரிந்து கூறினேன். ஏன்கிறது குடும்பத்தலைவனான பன்றி. ஆந்தப் பலன்தான் என்னவோ? அடுத்த பாடலில்

கன்னல் தளையும் செந்நெல் விளையும் காலமென்ற றிவாயடி

காட்டுப் பிழைப்பைப் போட்டு மானிடர் நாட்டில் சென்றிடலாமடி

மண்ணில் நமது கண்ணுக்கினிய மக்களைத் துரந்தழையடி

வண்ண வயலில் செல்லப்பயிரில் நெல்லருந்திடலாமடி.’

மகிழ்ச்சியாக இருக்கும் போதுதான் கணவனுக்கு மனைவியின் அழகு பல மடங்காகத் தெரியுமாம் இங்கே நெல்லருந்தும் நினைவே பெருமகிழ்ச்சியாகி விட பன்றி தன் மனைவியை மிக அன்போடு அழைக்கிறது

‘பன்னும் அடியும் நுனியும் தறித்த பனந்துண்டம் போல் அழகியே

பாவை எனது ஆசைக்குகந்த பருத்த உரல்போல் இடையினாய்

மண்ணில் நமது கண்ணுக்கினிய மக்களைத் துரந்தழையடி

வன்ன வயலில் செல்லப்பயிரில் நெல்லருந்திடலாமடி’

சொன்ன படியே உடனே கமத்தை சூழ்ந்து பண்டிகள் யாவரும்

சுறுக்கு விளையும் தரைக்குள் வந்தோம் துரத்த வேண்டாம் மனிதரே’

இப்படி விநயமாக விண்ணப்பம் செய்த பன்றிகள் விளைந்த தரைக்குள் புகுவதும் ஒரு கட்டிய விருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது

களகளத்த சுரிதனிலே காலை யோட்டி

கனத்ததோர் சூழ்தடியைக் கையிலேந்தி

குழை குழைத்த மண்ணெடுத்து உண்டை செய்து

கவணிலே குறி வைத்து கொண்டுபோக

பளபளென நிலவெறிக்கப் பனியுந்தூற

பண்டியனார் தரைக்குள் வந்து பாய்ந்திட்டாரே…’

இன்னும் இவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ பார்க்கலாம்.

•••

http://malaigal.com/?p=5722

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பன்றிப்பள்ளு – தமிழ்க்கவி

பன்றி எனற விலங்கை இந்தியாவில் ‘பன்னி’ என விளிக்கின்றனர்.பன்றியை இறைச்சிக்காக வளர்க்கவும் செய்கிறார்கள். வன்னிக் காடுகளில் இவை மிக அதிகம். காலத்துக்குகாலம்அந்த விலங்குகள் விவசாயிகளின் பயிர்களில் நுழைந்து பெரும் அழிவை ஏற்படுத்திவிடும். இதனால் விவசாயிகளுக்கு இந்த விலங்கின் மீது பெரும் குரோதமே உண்டு அப்படி இருந்தும் ஒரு கவி;ஞன் அந்த விலங்குகளின் நடவடிக்கைகளை சுவை ததும்ப பாடி வைத்திருக்கிறான்.

இதே போல குருவிப்பள்ளு எனபனவும் சிந்துவகைகளில் குருவிச்சிந்து விறுமன்சிந்து முறிகண்டியான் சிந்து ஐயனார் சிந்து கோழிச்சிந்து மயில்சிந்து என பல வகைச் பாடல்களில் வன்னியின் பாரம்பரியம் பொதிந்து கிடக்கிறது.பெரும்பாலும் தொழிற்பாடல்களில் தொழிலுக்கேற்ற சந்தங்களே அமைகின்றன.

‘அந்தியும் சந்தியும் அறிந்தே பல

விந்தைகள் சிந்தைகள் புரிந்தே பெரும்

பந்துகள் போலவே உருண்டே

பன்றிகள் ஓடி வந்தனவே

காலையும் மாலையும் பார்த்தே

கரும் மேகம் போல கிளை சேர்த்தே

பாலரும் தாய்களுமாக பன்றி

கூட்டத்தோடு ஓடி வந்ததுவே ‘ பன்றிகள் உள்ளே வரும் போது காவல் காரன் பயிர் நிலத்தில் சுற்றி காவல் செய்கிறான். ஏன்றாலும் என்ன அவனைப் பார்க்காமல் பன்றிகள் உள்ளே வந்து விடுகின்றன. மின்சாரம் இல்லாத காலம் மின்கலங்களும் இல்லை டார்ச் லைற்றம் இல்லை. சூள் கொளுத்தி அதன் மினுக்கம் வெளிச்சத்தில் காவல் காரன் போகிறான்.

‘கச்சையை கட்டி இறுக்கி

கைதனில் சூள் தனை மினுக்கி

பட்சமதாகவே நடக்கும் ஆளைப்

பாராமல் பன்றி வந்ததுவே’ இந்த காவல்காரன் காணாதபடி உள்ளே வரும் பன்றிகளை அவை எப்படி வருகின்றன என விபரிக்கிறது பின்வரம் பாடல்கள் பன்றியின் கால்கள் கட்டையாக சிறியதாக இருக்கும் வால்களோ சுருண்டு அருவெறுப்பாக இருக்கும். பருத்த உடலுக்கு மிக கட்டையான கால்கள் பன்றி நடக்கும் போது அது உருளுவது போல தோற்றம் அளிக்கும்.

‘குட்டியும் தாய்களுமாக

குறங்கொள்ளி போல் கால்களும் நோக

ஒட்டி மறைந்து நின்றேதான்

ஒய்யார பன்டியும் வந்ததுவே’

‘நாலுகால் சத்தமும் அடக்கி

நாய் குட்டி போல் மேனியை ஒடுக்கி

கூளைவால் கொள்ளியை மினுக்கி

பண்டி கூட்டத்தோடி வந்ததுவே’ இதனுடைய சூழ்ச்சி எப்படிப் பட்டது என்பதையும் கவி;ஞர் கூற தவறவில்லை.

‘மூண்டு முழத்துக்குள் வைத்த

ஆமை முட்டையை சோதிக்கும் வித்தை

தோண்டி அருந்திய சொத்தை (கன்னம்)

கொண்டு சூழ்ச்சிய பன்டியும் வந்ததுவே பன்றிப்பள்ளு படிக்கும் தோறும் இன்பம் பயப்பது வார்த்தை ஞாலங்கள் அற்ற பேச்சுத் தமிழில் அதுவும் ஈழத்து தமிழில் அனேக சொற்கள் தனித்துவமானவை.

‘பொத்திக் கட்டிப் போட்ட பறி போல’ இந்த சொல் ஈழத்திற்கே உரியது. இதே போல ‘தோண்டி அருந்திய சொத்தை’ சொத்தை என்ற சொல் ஈழத்தில் கன்னம் என்று பொருள் படும். அதுவே தமிழ் நாட்டில் காய்கறிகளில் ஏற்படும் புழுத்தாக்கத்தை குறிக்கும் இங்கே கத்தரிக்காய் சொத்தை என்பார்கள். ஈழத்தில் சூத்தை என குறிப்பிடுவர். இப்படி இந்த பகுதியில் ஏராளமான சொற்கள் வந்திருக்கலாம்.

‘ஒட்டும் கச்சையும் கட்டி இருப்பான்

உண்டி சுழினால் ஊட்டி முறிப்பான்.

குட்டி என்றும் மனமிரங்கான்

குறங் கொள்ளியால் உயிர் கொள்ளுவான் மக்காள்

தாங்கொனாத பசியின் துயரால்

தளைக்கும் சென்னல் தரைக்குள் வந்தோம்

எங்கும் புண் கொண்ட எருதின் மீது

இரங்குமோ புண் அருந்திய காகம்

மீண்டும் உங்கள் பசித் துயராலே

விலகி மானிடர் கைவசமானால்

பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை

பறிக்குமோ சொல் அபத்தம் என் மக்கள்’ வயலில் இறங்கப் போகும் தன் குட்டிகளுக்கு செய்யும் எச்சரிக்கும் வார்த்தைகள் இவை பன்றிகளினுடைய வாழ்க்கையை மனித வாழ்க்கையோடு ஒப்பிட்டு மனைவி பிள்ளைகளென பாசம் காட்டும் ஒரு தந்தைப் பன்றியை சித்தரிக்கின்ற பாடல்கள் இவை

பன்றி ஒரு தடவையில் பதினாறு குட்டிகள் ஈனும் ஆயினும் என்ன இந்த பன்றி தன் பிள்ளைகளை தவமிருந்து பெற்றதாக கூறுகிறது. அதுவும் சிவலிங்கப் பிள்ளையாரை வேண்டுதல் செய்து பிள்ளைகளை பெற்றுக் கொண்டதாக கூறுகிறது. தன் மனைவிக்கு பிள்ளைகள் மீது சற்றும் அக்கறை இல்லை என அது சினந்தும் கொள்கிறது ஆயினும் மனைவியை அன்போடு கண்டிக்கிறது.

‘வங்கண வடிவே என் கிளி மொழியே

வஞ்சியரே குணரஞ்சிதமே

பண்புடன் உனது பருவயிறது தான்

பருகிற நினைவது தானோடி

கண் படும் எனது மைந்தரை தனியே

கடு வழி நீ விடலாமோடி .ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஎனத் தொடர்கிறது பாடல்

பழமொழிகள்; அனுபவங்களை வைத்தே உருவாகியுள்ளன.

ஏப்பொழுதும் கடன் பட்டுக் கொண்டேயிருந்தான் ஒருவன் ஆனால் அவன் ஃவேலைக்குப் போக மாட்டான். ஒரு நாள் காலையிலே இவன் விளையாடுவதற்காக புளியங் கொட்டைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான் அப்போது அவனுக்கு கடன் கொடுத்வன் வீட்டுக்கு வந்து விட்டான். ‘எப்பா எம் பணத்தைக் கொடு’ என்றான்.

‘அடடா அதை நான் மறந்து போவேனா என்ன இதோ புளியங் கொட்டைகள் தயார் நடப்போகிறேன் . முளைத்து மரமாகி முதல் பழம் உலுப்பியதும் உங்கள் கடனைத்தான் முதலில் கொடுப்பேன்.’ என்றான்.

அப்படியா…சரி சரி வேலையப்பார்’ என்றுவிட்டு கடன்காரன் போய்விட்டான்.

இதையெல்லாம் உள்ளே இருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்த அவன் மனைவி வெளியே ஓடிவந்தாள்.அவள் கணவனிடம் கொஞ்சலாக”என்னங்க அவரோட கடனை அடுத்த போகத்தில கொடுத்துக் கொள்ளலாம். ஒரு பசுமாடு வாங்கி பால் கறந்து குடிக்க வேணும் என்று எனக்கு எவ்வளவு நாளாக ஆசை முதல் ஈத்தில் ஒரு மாடு வாங்கிக்கொடுங்க’ என்றாள். அவனும்’ அதற்கென்ன வாங்கித்தர்ரேன்.’என்றான்.

புளியங்கன்று முளைவிட்டு இரண்டு இலைப் பருவம் வந்தது அந்த வீட்டுக்காரி சந்தைக்குப் போனாள். ஆங்கே அயலூரில் வசிக்கும் அவளுடைய அண்ணனைக் கண்டாள். ‘என்னம்மாநல்லாருக்கியா?’ என்று கேட்டான் அவன்.

‘இருக்கேன் …எம் புருஷஷன் நான் கேடதெல்லாம் வாங்கித் தர்ரேன்னு சொல்லியிருக்காரே எனக்கென்ன

கொறைச்சல’; என்றாள்.

அப்படியா ? எனறான் அண்ணன்காரன். ‘ஆமாண்ணே… எம்புருஷன் புளியங்கன்று நட்டிருக்கிறார். அதுவும் முளைத்திருக்கு முதல் பழம்உலுப்பியதும் எனக்கு பசுமாடு வாங்கித் தருவார் நான் அதில பால்கறந்து குடிப்பேனே’ என அங்கலாப்பாக சொன்னாள். அவளுடைய அண்ணனும் உடனே ‘ தங்கச்சி தங்கச்சி எனக்கு தயிர் சாப்பிடணும்னு ரொம்ப நாளா ஆசை பால் கறந்ததும் எனக்கு தயிர் போட்டுக் குடுக்கிறியா?’ எனறு கேட்டான்

‘என்னண்ணே அத நீ கேக்கணுமா? குடுத்தாப்போச்சு ‘என்று அவளும் கூறிவிட்டாள். உடனேயே அவளுடைய அண்ணன் சந்தையில் ஒரு புதுசட்டி வாங்கிதயிர் போடுவதற்காக அவளிடம் கொடுத்துவிட்டான்.

ஆன்று இரவு சாப்பிடும் போதுதான் அவளுடைய கணவன் அந்த சட்டியைக் கண்டான்.

‘ஏதடி புதுச்சட்டி ?’ எனறு கேட்டான்.

‘அதுவா…. நாங்க பசு மாடு வாங்கப்போற கதைய சந்தையில எங்கண்ணன் கிட்ட சொன்னனா… தனக்கு தயிர் போட்டுக் குடுக்கச்சொல்லி சட்டி வாங்கிக் குடுத்திச்சா….அதாங்க இது’என்றாள்.

அவளுடைய கணவனுக்கும் அவள்அண்ணனுக்கும் பகை. இதைக்Nகுட்டதும் அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.’ம்கும்….யார் புளியங்கன்று நடுறது யார் தயிர் சாப்பிடறது? ம்….என்று கோபத்தோடு வெளியே ஓடி புளியங்கன்றைப் பிடுங்கி எறிந்தான் அவன்

புளிவளர்த்துக் கடன் கொடுத்தவன்கதைபோல’ என்பது பழ மொழி இது. எமது மண்ணில் யாழ்ப்பாணப் பகுதியில் இதை

‘வடலி வளர்த்து கள்ளுக்குடிக்க நினைப்பது ‘ என்று கூறுவர் வடலி பனையின் இளங்கன்று. பனையும் புளியமரமும் காய்ப்பதற்கு நீண்டகாலம் எடுக்கும். பனை ஏறககுறைய இருபத்தைந்து வருடங்களும் புளி பதினெட்டு வருடங்களும் செல்லும்.

‘நாய் பாக்கிற வேலைய கழுதை பார்த்த மாதிரி’ எனபது பழமொழி

ஒருவன் ஒரு நாயையும் கழுதையையும் வளர்த்து வந்தான். இரண்டையும் நன்கு கவனித்து வந்தான் என்றாலும் இரண்டொரு நாட்களாக அவன் நாய்க்கு சரியாக உணவும் கொடுக்காமல் கட்டிப்போட்டு வைத்திருந்தான். நாயும் அவன்மீது கோபமாக இருந்தது. அன்றிரவு அந்த வீட்டில் திருடுவதற்காக ஒருதிருடன் வந்து வெளியே பதுங்கியிருந்தான். நாயும் கழுதையும் அதைக் கண்டாலும் நாய் பேசாமல் படுத்து விட்டது.

கழுதை அந்த நாயிடம் ‘ஏன் படுத்திருக்கிறாய் திருடனைக் காணவில்லையா? சத்தமாக குரைத்து எசமானை எழுப்பு’ என்றது.

நாய் ‘என் வேலையை எனக்கு பார்க்கத் தெரியும் நீ பேசாமல் இரு’ என்றது.திருடன் மெதுவாக வீட்டிற்குள் செல்ல முயன்றான். நாய் அசையவில்லை. ஆனால் திருடன் உள்ளே செல்வதை பொறுக்காத கழுதை தன் கடூரமான குரலால் கத்தவாரம்பித்தது.வீட்டுக்காரனும் அயலவர்களும் தூக்கம் கலைந்தனர். கழுதையின் சத்தத்தால்..திருடன் ஓடிவிட்டான். ஆனால் தூக்கம் கலைந்த ஊரவர்கள்எசமானைத் திட்டவே எசமான் கழுதையை நனகு அடித்தான். அடிவாங்கிய கழுதை அழுதது நாய் இப்போதும் சொன்னது. நாய் பாக்கிற வேலைய கழுதை பார்த்தா இப்படித்தான் எனறு

(இன்னும் வரும்)

http://malaigal.com/?p=5973

Link to comment
Share on other sites

பல வருடங்களுக்கு முன் எனது இளவயதில் [இப்போதும் இளவயதுதான் :)  ] மூத்த ஒரு கலைஞ்சரிடம் கலை சம்பந்தமாக பழகும் ஒரு வாய்ப்பு கிடைத்தது .அவர் எமது கூத்து க்கலையின் ஒரு பிதா ..அற்புதமான கலைஞ்சர் .அருமையான குரல்வளம் கூட கொண்டவர் . அவர் அன்று கூறினார் தம்பி எமது இசை இந்த கூத்துப்பாடல்களிலும் ,நாட்டார் பாடல்கலிலுமே மறைந்து கிடக்குது .அதை தேடி இசை வடிவங்கள் உருவாக்கப்படும்போது எமது இசையின் சிறப்பு தெரியும் என்றார் .........இன்று வரை அவர் கூறியதை தேடிக்கொண்டிருக்கிறேன் .முடியவில்லை ....... :D

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டார் கலைகளில் 8 / தமிழ்க்கவி

தொழிற் பாடல்களைக் கடந்து போகுமுன் ..தென்னிந்தியாவிலிருந்து பிழைப்புத்தேடி இலங்கைக்கு வந்த மலையகத்தமிழர்களின் பாடல்களையும் நாம் அதில் சேர்த்தாக வேண்டும்.

காதல் வீரம் இன்பம் துன்பம் எல்லாமே பாடல்களில் பரிமளிக்கிறது. காலையிலிருந்து மாலைவரை தேயிலைத் தோட்டங்களில் அட்டைகளும் எஜமானர்களுமாக மாறிமாறி இவர்களது ரத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறார்கள். களத்தில் வேலை செய்யும்போது இவர்கள் தம் துயரைப் பாட்டாக வடிக்கிறார்கள். கல்வியறிவற்ற பெண்கள் தமது வாயில் வரும் வார்த்தைகளையே பாட்டாக்கிவிடுகிறார்கள்.

தமது சொந்த ஊரில் சாதிசனத்தோடு வாழ்ந்தவர்கள் இங்கே பல குழுக்களாக கலந்து வாழ்கிறார்கள் தோட்டத் துரைமார்களின் எடுபிடிகளான கங்காணிமார்(கண்காணிப்பவர்) துரைமாருடைய லாபத்தைப் பெருக்கி தாம் நற் பெயiரை கொள்ள இவர்களை வருத்துகிறார்கள்.

கண்டி கண்டி எங்காதீங்க

கனத்த பேச்சுப் பேசாதீங்க

சாதி கெட்ட கண்டியில சக்கிலியன் கங்காணி என்ற பாடல் மட்டுமல்ல எப்போதாவது தமது சொந்த ஊருக்கு திரும்பிய மக்களை நீராட்டி தீட்டுக்கழித்தே வீட்டுக்குள் சேர்ப்பார்களாம் தென்னிந்திய உறவுக்காரர்.

பணிய லயத்துச்சாவல் பாசமுள்ள கொண்டைச்சேவல்

காலு வளந்த சேவல் கண்டாலும் பேசுதில்ல

கொந்தரப்புகாரக் குட்டி கொழுந்தெடுக்கும் சின்னக்குட்டி

கொழுந்தெடுக்கும்கையில எம் மனசெடுத்து போறதென்ன.

கவ்வாத்துக் காரப்பையா கத்தி வெட்டும் பாண்டி மன்னா

ஒங்கத்தியென்ன மின்னுறதுஉங் கவ்வாத்தென்ன பிந்திறது. இவ் வகையிலான காதற் பாடல்களும. அருமையான தாலாட்டுப் பாடல்களும் இவர்களிடம் உண்டு.கடைந்தெடுத்த அயோக்கியர்களாக பல கங்காணிகள் இருந்ததும் அவர்களைக் தூற்றிப்பாடப்பட்ட பல பாடல்களும் மலையகத்தில் பிறந்தன.

வாறாரய்யா வாறாரு நம்ப கங்காணி அய்யா வாறாரு

கையில கொடைபிடிச்ச கழண்ட கங்காணி…

கண்ணடிச்சே வேல வாங்குங் கறுத்த கங்காணி.

வாசல கூட்டி வெய்யி சாணியக் கரைச்சுவெய்யி…

அய்யாவர நேரத்துக்கு ஆலாத்தி சுத்த வேணும்.

கோட்டு நல்ல கோட்டு நம்ப கோடாங்கிக்காரங் கோட்டு.

கேட்டு வாங்கிப் போட்டு ரெண்டு பொங்கலாச்சு என்ற வகையில் கேலிப்பாடல்களும் .நிரம்பியிருக்கும் மலையகத்தின் பாடல்கள் வரலாற்றைப் பதிவு செய்யவும் மறக்கவில்லை.

1964 மலையகத்து மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையெங்கும் பரந்து வாழ்ந்த இந்திய மக்களுக்கு பேரிடர் நேர்ந்த காலம். 1827ம் ஆண்டிலே மலையகத்தின் காடுகளை அழித்து பெருந்தோட்டங்களை உருவாக்க வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட தென்னிந்திய மக்கள் ஏறக்குறைய பதினாறாயிரம் பேர் என வரலாறு சொல்கிறது. அந்த பதினாறாயிரம் மக்களின்உழைப்பே இன்றைய இலங்கையின் பொருளாதாரத்தின் கருவூலம். இந்தமக்களின் 150 வருட கால சந்ததி வளர்ச்சியை இலங்கையின் அரசால் ஏற்க முடியவில்லை. காரணம் அரசியல. 1947ல் இலங்கை சுதந்திரமடைந்து தேர்தல் நடந்தபோது, மலையகப்பகுதியிலிருந்து ஏழு பிரதிநிதிகளை(தமிழர்கள்) அந்த மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் முற்றாக தமிழர்களே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். பாளுமன்றத்தில் தமிழர்கள் கணிசமான அளவுக்கு இருந்தமை சிங்களத்தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. மலையக மக்கள் வேலைக்காக கொண்டுவரப்பட்டவர்கள். அவர்களுக்கு நமது பாராளுமன்றத்தில் அதிகாரம் இல்லை எனவே அவர்களது வாக்குரிமையை ரத்துச் செய்கிறோம் என அறிவித்து விட்டனர்.

காலப் போக்கில் இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷம் வலுத்தது. 1964லிருந்து குடியுரிமையற்றவர்களைக் கைது செய்து வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது. ஏராளமான மக்கள் திடுதிப்பெனக் கைது செய்யப்பட்டு மன்னாருக்கு கோச்சி எனப்படும் கோச் வண்டிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு அங்கிருந்து தனுஸ்கோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர.;

இலங்கையை மட்டுமே தெரிந்திருந்த ..இதுவே நமது நாடு என எண்ணியிருந்த இந்தியாவை ஒருமுறைகூட பார்த்தறியாத மக்கள் அநேகர் உடுத்த உடையுடன் மட்டும் கண்ணீரோடு கடல் கடந்தனர். இதே நிலையில் இலங்கைப்பெண்ணைத் திருமணம் செய்தவர்கள் பிரித்தே அனுப்பப் பட்டனர். இலங்கையைச்சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்த பெண்கள் இலங்கையராகக் கருதப்பட்டனர்.

இப்படியான ஓர் இளங் குடும்பத்தலைவனை பிரித்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக அவன் தன காதலியிடம் பாடுவதாக அமைந்த ஒரு பாடல் பிரபலமானது.

மன்னாருக் கோச்சியேற மனசு சரியில்லே..என்

மனசுக்குகந்த கண்ணே உன்னை மறக்க முடியவில்லை

வாழ வந்த பொண்ணே என்னை மதி மயக்கிய கண்ணே

பூமரத்து சிட்டே என் புனுகுசாந்துப் பொட்டே

கண்டிமெலைச் சீமைக்குநாங் கால்கடுக்க நடந்து வந்தோம்

காடுவெட்டி பாடுபட்டு காடு செழிக்க வச்சோம்

கைகால் அசந்து போச்சு காரியமும் முடிஞ்சுபோச்சு

கை வெலங்க மாட்டுறாங்க கண்ணே ரஞ்சிதமே.நம்ப

கண்ணீரத்தான் யார் தொடைப்பா பொண்ணே ரஞ்சிதமே

எல்லே எளங்கிளியே எம்மனசு கேக்கலியே

எப்புடித்தான் உயிர் விடுவேன் இங்க ஒன்ன

எடுத்துக்கிட்டு போகலைன்னா அங்க

என்ன இக்கரை இருக்க ஒட்டார்

ஒன்ன அக்கரை சேர ஒட்டார் இது

இமிக்கிரேசன் சட்டம் அது எனக்கும் ஒனக்கும் நட்டம்.

மலையகத்தில் தொழிலாளர் போராட்டத்தில் முதல் களப் பலியாக சுட்டுக் கொல்லப்பட்ட சிவணு லட்சுமணனின் வரலாறு பாடலாக எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயம்தான்

மலையக மக்களின் பாடல்களில் தாலாட்டு ஒப்பாரி என்பவை தென்னிந்திய பாடல்களை ஒத்திருக்கும்

மட்டப் பனையோலை மயிலடையும் பூஞ்சோலை.

மயிலத்தாம் வெரட்டினமா மயில் கூட்டக் கலச்சமா

குட்டப்பனையோலை குயிலடையும் பூஞ்சோலை

குயில்கூட்டைப் பிரிச்சமா குயிலத்தாம் வெரட்டினமா? ஏன்ன சிரிப்பா மேற்குறித்த இரண்டு பறவைகளும் கூடுகட்டி வாழ்வதில்லை . அவைகளுக்கான கூட்டை நாட்டார் பாடல்தான் கட்டிக் கொடுக்கிறது;

பத்து லச்சம் பொன்னொதுக்கி பத்துலச்சம் பொன்னொதுக்கி…

பாவக் கொடி பாவவிட்டேன். பாவக்கொடி பாவ விட்டேன்

பாவக்கொடி பாவ விட்டு பாவக்கொடி பாவவிட்டு..

நான் பார்வதியக் காவல் வெச்சேம் பார்வதியெக் காவல் வெச்சேன்

பாவக்கொடி படந்து பாவக் கொடி படந்து

பத்துலச்சம்பூவாகி பத்துலச்சம் பூவாகி இன்னைககு

பந்தல் தலைமாறி பாவக் கொடியழிஞ்சு

பார்பதியா பெத்த மக்கா இன்னைக்கு பரிதவிச்சு நிக்கறதே…இதேபோல வேறு மரக்கறிப்பயிர்களையும் உவமை சொல்லி சந்தர்ப்பத்துக் கேற்ப பாடலை மாற்றி மாற்றி சொருகும் பணபு நாட்டார் பாடல்களில் காணலாம்.

காடு வெட்டி தோட்டமிட்டு கத்தரியப் பாவு விட்டேன்

கத்தரியுங் காக்கலியே. காடோ கருகிடுச்சே..

ஒரு பெண்பார்க்கும் படலம் பெண்ணைப் பார்த்து விட்டு வநதவளிடம் ஊர்ப் பெண்கள் என்ன பொண்ணு அழகா எப்பிடி அலங்காரம் பண்ணியிருந்தா? சீர் என்னவாம்? கேட்பாரகள்தானே.அதற்கு பதில் இப்படி வருகிறது

அசோசா ரோசாப்பட்டு டிமிக்கிலோரியா சேலை

முழுக்கறுப்பு முத்து வண்ணம் டிமிக்கித்தையில் பாவாடை

இத்தனையுங் கொண்டு என் இளைய மயில் செண்டு

தலைக்கு நெறைஞ்ச தொரு ஜடைபில்லை நெத்திச்சுட்டி

ஜடைலாக்கொடி பின்னல் குஞசம்

கழுத்துக்கு நெறைஞ்சதொரு காசுமாலை கண்டசரம்

அட்டியல் பதைக்கம் சங்கிலி சோடி வேணும்

ரொம்ப ரொம்ப பரிசப்பணம் நாங்க கேக்கிறதில்ல

மனசில மனவருத்தம் வெக்க வேணாம்.

காதுல ஜிமிக்கி வாளி குடை கம்மல்சரம் காதுமாட்டி நீளம்வேணும்

கைக்கு நெறைஞ்சதொரு கடகம் மட்டைக்காப்பு

பூட்டு வளைவியோட மணிக்கட்டு மறைஞச வகை

கல்வளையல் கலந்து ரொப்ப வேணும்.

ரொம்ப ரொம்ப பரிசப்பணம் நாங்க கேக்கிறதில்ல

மனசில மன வருத்தம் வெக்க வேணாம்.

இடுப்புக்கொரு ஒட்டியாணம் இழைச்சுவைச்ச வைரக்கல்லு

காலுக்கு நெறைஞ்சதொரு கால்மெட்டி

தண்டைசிலம்பு பல சலங்கைக் கொலுசுவகை

இதோட போகாதே சிர் வரிசை கொண்டு

அஞ்சுவண்டி செலவும் ஆறுவண்டி சனமும்

சனத்துக்கு தேவையான சாப்பாடு வகையும்.

ரொம்ப ரொம்ப பரிசப்பணம் நாங்க கேக்கிறதில்ல

மனசில மனவருத்தம் வெக்க வேணாம்

இப்படியான வேடிக்கை விநோதங்களும் நிரம்பியுள்ளது நாட்டார் பாடல்கள். தொடர்ந்து பார்ப்போமே..

http://malaigal.com/?p=6215

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.