Jump to content

சொல்லாடற்களம்

Recommended Posts

சொல்லாடற்களம்
 
கள உறவுகளுக்கு புயலின் அன்பான வணக்கம்.
 
எம் தாய்த்தமிழில் ஓர்  ஆடுகளம்.
 
ஆடுகளத்தின் விபரம்.
 
ஒரு சொல் எம்மால் மறைத்து வைக்கப்படும். அச்சொல்லைக் கண்டு பிடிப்பதற்கான தரவுகள் தரப்படும். தரப்படும்
 
சகல தரவுகளுக்கும் பொருந்தக் கூடியவாறு மறைத்து வைக்கப்பட்டுள்ள சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.
 
அவ்வளவு தான்.
 
உறவுகளே முயற்சித்துத் தான் பார்ப்போமே!
 
எடுத்துக்காட்டு.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் அல்லோகல்லோலம்.
 
தரவுகள்.
 
1. இச்சொல்லின் நேரடி அர்த்தம் அமளிதுமளி எனச் சொல்லலாம்.
 
2. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
3. இச்சொல்லின் முதல் எழுத்தும் நான்காவது மற்றும் ஐந்தாவது எழுத்தும் சேர்ந்தால் விளக்கு என அர்த்தம் வரும்.
 
4. இச்சொல்லின் முதல் எழுத்தும் நான்கு, ஏழு மற்றும் எட்டாவது எழுத்தும் சேர்ந்தால் கணிதத்தில் பயன்படுத்தப்படும்  அளவு வரும்.
 
5. மூன்றாவது எழுத்தும் ஆறாவது எழுத்தும் ஒரே எழுத்து.
 
6. நான்காவது எழுத்தும் ஏழாவது மற்றும் எட்டாவது எழுத்தும் சேர்ந்தால் பாத்திரம் என அர்த்தம் வரும். 
 
களம் 01.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் -------------------
 
தரவுகள்.
 
1. இச்சொல்லின் நேரடி அர்த்தம் ஒரு குண இயல்பு எனக் கூறலாம்.
 
2. இச்சொல் ஆறு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
3. இச்சொல்லின் முதல் எழுத்தும் இரண்டாம் ஆறாம் எழுத்தும் சேர்ந்தால் மனம் என அர்த்தம் வரும்
 
4. முதல் எழுத்தும் மூன்றாம், இரண்டாம் ஆறாம் எழுத்தும் சேர்ந்தால் தேகம் என அர்த்தம் வரும்.
 
5 இரண்டாம் எழுத்தும் ஐந்தாம் ஆறாம் எழுத்தும் சேர்ந்தால் எமது உடலின் ஓர் அங்கத்தின் பெயர் வரும்.
 
6. இறுதி மூன்று எழுத்தும் சேர்ந்தால் அறுசுவைகளில் ஒரு சுவை வரும்.
 
எனவே ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • Replies 467
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின்   ஆடுகளத்தில் .  புதிய உத்திகளைபாவித்து  ...பல  போட்டிகளை  நடைமுறைபடுத்தும்  கள உறவு  புயல் அவர்களுக்கு என் மனமார்ந்த  பாராட்டுக்கள்  மென்மேலும்  வளர என் ஆக்கமும் ஊக்கமும் என்றும் இருக்கும். மற்றும் கள உறவுகளும் ஈடுபாட்டுடன் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?அகங்காரம் :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சொல்லாடற்களம்"  போட்டியை ஆரம்பித்து வைத்த புயலுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாடற்களம்
 
கள உறவுகளுக்கு புயலின் அன்பான வணக்கம்.
 
எம் தாய்த்தமிழில் ஓர்  ஆடுகளம்.
 
ஆடுகளத்தின் விபரம்.
 
ஒரு சொல் எம்மால் மறைத்து வைக்கப்படும். அச்சொல்லைக் கண்டு பிடிப்பதற்கான தரவுகள் தரப்படும். தரப்படும்
 
சகல தரவுகளுக்கும் பொருந்தக் கூடியவாறு மறைத்து வைக்கப்பட்டுள்ள சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.
 
அவ்வளவு தான்.
 
உறவுகளே முயற்சித்துத் தான் பார்ப்போமே!
 
எடுத்துக்காட்டு.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் அல்லோகல்லோலம்.
 
தரவுகள்.
 
1. இச்சொல்லின் நேரடி அர்த்தம் அமளிதுமளி எனச் சொல்லலாம்.
 
2. இச்சொல் எட்டு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
3. இச்சொல்லின் முதல் எழுத்தும் நான்காவது மற்றும் ஐந்தாவது எழுத்தும் சேர்ந்தால் விளக்கு என அர்த்தம் வரும்.
 
4. இச்சொல்லின் முதல் எழுத்தும் நான்கு, ஏழு மற்றும் எட்டாவது எழுத்தும் சேர்ந்தால் கணிதத்தில் பயன்படுத்தப்படும்  அளவு வரும்.
 
5. மூன்றாவது எழுத்தும் ஆறாவது எழுத்தும் ஒரே எழுத்து.
 
6. நான்காவது எழுத்தும் ஏழாவது மற்றும் எட்டாவது எழுத்தும் சேர்ந்தால் பாத்திரம் என அர்த்தம் வரும். 
 
களம் 01.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் -------------------
 
தரவுகள்.
 
1. இச்சொல்லின் நேரடி அர்த்தம் ஒரு குண இயல்பு எனக் கூறலாம்.
 
2. இச்சொல் ஆறு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
3. இச்சொல்லின் முதல் எழுத்தும் இரண்டாம் ஆறாம் எழுத்தும் சேர்ந்தால் மனம் என அர்த்தம் வரும்
 
4. முதல் எழுத்தும் மூன்றாம், இரண்டாம் ஆறாம் எழுத்தும் சேர்ந்தால் தேகம் என அர்த்தம் வரும்.
 
5 இரண்டாம் எழுத்தும் ஐந்தாம் ஆறாம் எழுத்தும் சேர்ந்தால் எமது உடலின் ஓர் அங்கத்தின் பெயர் வரும்.
 
6. இறுதி மூன்று எழுத்தும் சேர்ந்தால் அறுசுவைகளில் ஒரு சுவை வரும்.
 
எனவே ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?

நன்றி  புயல்

தொடர்ந்து யாழுக்கான  தங்களது நேரத்துக்கும் முயற்சிக்கும் வாழ்த்தக்களும்  நன்றிகளும்...

தொடருங்கள்

சிறு சந்தேகம்

அல்லோகல்லோலமா?

அல்லோகல்லோலமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லோல கல்லோலம் என்றுதான் நானும் அறிந்துள்ளேன்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகங்காரம்...! :)

ஆத்தா நான் பாஸாயிட்டேன்...! :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகங்காரம்...! :)

ஆத்தா நான் பாஸாயிட்டேன்...! :D :D

ஈ அடிச்சா  அண்ணா??? :lol:

அதுக்கு எவ்வளவு  சந்தோசம் :D  :D

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்ச்சி புயல்.  தொடர்ந்து போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு என் வாழ்த்துக்களுடன்  நன்றிகளும் உரித்தாகட்டும்!!!!

Link to comment
Share on other sites

நன்றி  புயல்

தொடர்ந்து யாழுக்கான  தங்களது நேரத்துக்கும் முயற்சிக்கும் வாழ்த்தக்களும்  நன்றிகளும்...

தொடருங்கள்

சிறு சந்தேகம்

அல்லோகல்லோலமா?

அல்லோகல்லோலமா???

விசுகுவின் சந்தேகத்திற்கான பதில்கள் இரண்டு என்னிடம் உள்ளது.
 
முதலாவது பதில் எனது தவறுக்கு வருந்துகின்றேன்.
 
இரண்டாவது பதில்: பிழை விடுவது போலப் பிழை விட்டால் எத்தனை நக்கீரர்கள் வந்து போவார்களெனப் பார்க்கலாமெனப் பிழை விட்டேன். இருந்தாலும் இனி மேல் மிகவும் கவனமாக கையாளுகின்றேன்.
 
என்னை மேன்மேலும் ஊக்கப்படுத்துவீர்களென நம்பகின்றேன்.
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஆதரவு தந்த நிலாமதி, கறுப்பி, விசுகு, மற்றும் தமிழினி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்தும் தங்கள் அனைவரதும் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

அகங்காரம்...! :)

ஆத்தா நான் பாஸாயிட்டேன்...! :D :D

வாய்யா நான் பெத்த மவராசா
 
என்ரை நஞ்சை புஞ்சை எல்லாம் ஒனக்குத் தான் ராசா
 
ஆதரவிற்கு நன்றி சுவி அண்ணா தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் அகங்காரம்
 
அகங்காரம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த நிலாமதிக்கும் சுவிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 02.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல்: ...........................
 
தரவுகள்.
 
1. இது நாங்கள் அன்றாடம் சமைக்கும் ஓர் மரக்கறியின் தமிழ்ப் பெயர்.
 
2. இச்சொல் ஏழு ஏழுத்துக்கள் கொண்ட சொல்
 
3. முதலாம் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் சேர்ந்தால் மனைவி என அர்த்தம் வரும்.
 
4. ஆறாவது எழுத்தும் மூன்றாம் எழுத்தும் சேர்ந்தால் வருவது சினைப்பெயர்.
 
5. இறுதி இரண்டு எழுத்தும் பழம் என்பதன் எதிர்ச்சொல்லாக வரும்.
 
6. முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் தவறு என்னும் அர்த்தம் வரும். 
 
இத்தரவுகளுக்கமைய ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழுதுணங்காய் (கத்தரிக்காய்) :D

Link to comment
Share on other sites

சொல்லாடற்களம் சிறப்பாக உள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சயமாக எனது பங்களிப்பு உண்டு.
 
தொடருங்கள் உங்களின் முயற்சியை
Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் வழுதுணங்காய்
 
வழுதுணங்காய் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த வாலிக்கும் முமுமதிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
 
Link to comment
Share on other sites

களம் 03.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ------------------ 
 
தரவுகள்.
 
1. இது நாங்கள் தாயகத்தில் கடந்து சென்ற பாதை
 
2. இச்சொல் ஐந்து எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
3. முதல் இரு எழுத்துக்களும் சேர்ந்தால் வருவது சினைப்பெயர்
 
4. முதலாம் நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் யானையின் ஒத்த சொல் வரும்.
 
5. முதலாம் மூன்றாம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றின் பெயர் வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டாயம் :D 

Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் கண்டாயம்.
 
கண்டாயம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 04.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ------------------  
 
நேரடி அர்த்தம் ஆந்தை என்பதன் ஒத்தசொல்.
 
தரவுகள்
 
1. இச்சொல் ஆறு எழுத்துக்கள் கொண்ட சொல்.
 
2. முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் குரங்கின் மறு பெயராக வரும்
 
3. முதலாம் மூன்றாம் நான்காம் ஆறாம் எழுத்துக்கள் சேர்ந்தால் துளசி, தாமரை போன்றவற்றின் ஒத்த சொல்லாகும்.
 
4. இறுதி மூன்று எழுத்தும் சேர்ந்தால் தண்ணீரைக் குறிக்கும்.
 
5. முதலாம் ஐந்தாம் ஆறாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பாத்திரம் என வரும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

களம் 04.
 
ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் ------------------  
 
நேரடி அர்த்தம் ஆந்தை என்பதன் ஒத்தசொல்.
 
தரவுகள்
 
1. இச்சொல் ஆறு எழுத்துக்கள் கொண்ட சொல். 
 
2. முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தால் குரங்கின் மறு பெயராக வரும் கபி
 
3. முதலாம் மூன்றாம் நான்காம் ஆறாம் எழுத்துக்கள் சேர்ந்தால் துளசி, தாமரை போன்றவற்றின் ஒத்த சொல்லாகும். கஞ்சம்
 
4. இறுதி மூன்று எழுத்தும் சேர்ந்தால் தண்ணீரைக் குறிக்கும். சலம்
 
5. முதலாம் ஐந்தாம் ஆறாம் எழுத்துக்கள் சேர்ந்தால் பாத்திரம் என வரும். கலம்
 
இத்தரவுகளுக்கமைய ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?

எனவே மறைந்துள்ள சொல் 
                                                                                     கபிஞ்சலம்
Link to comment
Share on other sites

மிகவும் சரியான சொல் கபிஞ்சலம்
 
கபிஞ்சலம் என்னும் சொல்லைக் கண்டுபிடித்த முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

களம் 05.
 
ஒழிக்கப்பட்டுள்ள சொல் --------------------------  
 
நேரடி அர்த்தம் எம் முன்னோர்கள் ஒரு விடயத்தை நம்பவில்லையெனின் கையாண்ட ஒரு சொல்.
 
தரவுகள்.
 
1. இச்சொல் ஐந்து எழுத்துக்கள் கொண்ட சொல்
 
2. முதலாம் மூன்றாம் எழுத்துக்கள் சேர்ந்தால் இந்திரனின் மனைவி இந்திராணி எனப் பொருள்படும்.
 
3. முதலாம் நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் வெற்றி எனப் பொருள்படும்.
 
4. முதலாம் இரண்டாம் ஐந்தாம் எழுத்துக்கள் இணைந்தால் சேர்ந்தால் ஒன்றுக்கு ஒன்று இணை எனப் பொருள்படும்.
 
5. முதலாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் எழுத்துக்கள் சேர்ந்தால் தானியம் எனப் பொருள்படும்.
 
இத்தரவுகளுக்கமைய ஒழித்து வைக்கப்பட்டுள்ள சொல் என்ன?
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.