Jump to content

களத்தில் குதித்தார் ஹிலாரி கிளிண்டன்! அதிர்ச்சியில் சிறிலங்கா


Recommended Posts

http://naathamnews.com/?p=4532

HRC-hillary1.jpg

ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு, சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முயற்சிகளை மேற்கொள்வதாக, ஆங்கில ஊடகமொன்றின் செய்தியினை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள செய்தியின் பின்னணி குறித்து, Tamil News Circle செய்திச் சேவைக்கு கிடைத்த தகவல்களை தொகுப்பாக தருகின்றோம் :

naatham-logo.jpgசிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக, 22 நாடுகள் ஆதரவாக வாக்களிக்கும் நிலை தற்போது உள்ளது.

மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற மொத்தம் 47 நாடுகளில், லிபியாவுக்கான வாக்களிக்கும் தகமை தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 46 நாடுகளே வாக்களிக்கும் தகமையைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் தற்போது 22 நாடுகள் குறித்த பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதா தெரிவிக்கப்படும் சூழலில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இவ்விவகாரத்தை நேரடியாக கையாள்வதற்கு, தற்போது களத்தில் குதித்துள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன், தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்கள், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு சினத்தை ஏற்படுத்தியிருந்ததோடு, அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு முஸ்லிம் மக்களை, சிறிலங்கா பாவித்தமை அமெரிக்காவுக்கு கோபத்தை அதிகரித்ததாக அறியமுடிகின்றது.

இந்நிலையிலேயே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், கீழ் நிலை இராஜாங்க மட்டத்தில் இருந்த சிறிலங்கா தொடர்பிலான பிரேரணை விவகாரத்தை, தற்போது கையில் எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக சிறிலங்கா மேற்கொண்ட சகல விடயங்களை உன்னிப்பாக கவனித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சிறிலங்காவுக்கு இவ்விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைச் சபையில் கடுமை அதிர்சியைக் கொடுப்பதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய சூழிலிலேயே, சிறிலங்காவினுடைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமைச் சபைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே வொஷிங்டன் வருமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு, ஹிலாரி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இருப்பினும் குறித்த இந்தக் கடிதத்துக்கு ஜீ.எல்.பீரிஸ் பதிலளிக்கவில்லை நிலையில், தற்போது சிறிலங்கா அரச தரப்பால் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், கைகூடுவதற்குரிய வாய்ப்புக்கள் குறைவென்றே தெரியவருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிலாரி கிளின்ரனின் மனத்தில் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எட்டப்படவேண்டும் என்ற எண்ணம் இன்று நேற்றல்ல ஆரம்பகாலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. புலிகளைப் பயங்கரவாதம் என்ற தலைப்பினுள் அமெரிக்கா அடக்கியிருந்த போதிலும் 'ஆயுதம் ஏந்திய எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல" என்று ஒரு கருத்தை முன்வைத்தவர். எனவே ஹிலாரியின் தனித்துவமான போக்கு தமிழர்களுக்கு எதிரானதாக இருக்காது. உனவே ஹலாரி இதில் இறங்கியிருப்பது தமிழர்களுக்குச் சாதகமான தீர்வுகளை எதிர்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிலாரி கிளின்ரனின் மனத்தில் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எட்டப்படவேண்டும் என்ற எண்ணம் இன்று நேற்றல்ல ஆரம்பகாலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. புலிகளைப் பயங்கரவாதம் என்ற தலைப்பினுள் அமெரிக்கா அடக்கியிருந்த போதிலும் 'ஆயுதம் ஏந்திய எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல" என்று ஒரு கருத்தை முன்வைத்தவர். எனவே ஹிலாரியின் தனித்துவமான போக்கு தமிழர்களுக்கு எதிரானதாக இருக்காது. உனவே ஹலாரி இதில் இறங்கியிருப்பது தமிழர்களுக்குச் சாதகமான தீர்வுகளை எதிர்பார்க்கலாம்.

மற்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, பேர்ல், டாக் போன்ற அமைப்புகளும் அம்மையாரின் மனதை கரைத்து விட்டார்கள். 

சிறப்பாக செயல்படும் நமது உலக தமிழ் அமைப்புகளுக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

கிளறி ஊடாக அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கையில் ஆசியா முக்கிய இடம் பிடிக்க உள்ளது என்பது தெளிவாகின்றது.

தமிழர்கள், அவர்கள் தேசம் அமெரிக்காவுக்கு நம்பிக்கையாக உள்ளது. கணவர், முன்னைய சனாதிபதி, பில் கிளிண்டன் கூட நேரடியாக சுனாமி நேரம் தமிழர் தரப்பின் ஆளுமையை, நேர்மையை கண்ணால் கண்டவர்.

Link to comment
Share on other sites

கிளறி ஊடாக அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கையில் ஆசியா முக்கிய இடம் பிடிக்க உள்ளது என்பது தெளிவாகின்றது.

தமிழர்கள், அவர்கள் தேசம் அமெரிக்காவுக்கு நம்பிக்கையாக உள்ளது. கணவர், முன்னைய சனாதிபதி, பில் கிளிண்டன் கூட நேரடியாக சுனாமி நேரம் தமிழர் தரப்பின் ஆளுமையை, நேர்மையை கண்ணால் கண்டவர்.

ஆமாம் நிச்சயமாக அகூதா அண்ணா. ஆரோக்கியமான கருத்துகளை பகிர்ந்து எமது விடுதலை பாதையில் நாம் என்றும் சரியான வழியில் பயணிக்க உறுதுணை புரியும் அகூதா அண்ணாவுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

இது அமெரிக்காவின் ஒரு நீண்ட கால திட்டம். மிக நிதானமாக உறுதியாக காயை நகர்த்துகிறார்கள். நல்லிணக்க குழுவின் பரிந்துரையை கூட சிங்களவன் நிறைவேற்றமாட்டான் என்று அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். நாம் செய்ய வேண்டியது உலக தமிழர் எல்லோரும் ஒற்றுமையாக திரண்டு இந்தியாவை ஓரம் கட்டி முற்று முழுதாக அமெரிக்க சார்பான நகர்வுகளை மேற்கொண்டு அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டு எமது இலட்சியங்களை அடைவதுதான் வரலாறு எமக்கு இட்ட ஒரேயொரு சாத்தியமான வழி. அமெரிக்கா தமது பிராந்திய நலன் சார்ந்து இதனை செய்தாலும் அதிலிருந்து நாம் எமது இலக்கை அடைய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, பேர்ல், டாக் போன்ற அமைப்புகளும் அம்மையாரின் மனதை கரைத்து விட்டார்கள்.

சிறப்பாக செயல்படும் நமது உலக தமிழ் அமைப்புகளுக்கு நன்றி.

கடந்த அமெரிக்கா தேர்தலில் ஒபாமா இருக்கும் கட்சியில் வேட்பாளாருக்கான தேர்தலில் ஒபாமாவுடன் கிலாரி கிளிண்டனும் போட்டியிட்டார். அப்பொழுது தமிழர்கள் கிலாரி கிளிணடனுக்கான தமிழர் அமைப்பினை ஆரம்பித்து கிலாரிக்கு ஆதரவு தந்தார்கள். அத்தேர்தலில் கிலாரி தோற்றபின்பு தமிழர்கள் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினை ஆரம்பித்தார்கள்.

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்த பத்திரிகைகளில் ஒன்றான 'வால் ஸ்ட்ரீட் ஜெர்னானில்' ஜெனீவா பற்றி எழுதப்பட்டுள்ளது

U.S. Push for an Independent Probe on War Crimes Seen Getting U.N. Support

U.S. officials said they gained a key ally in their effort to push Sri Lanka to allow an independent investigation of government atrocities carried out at the climax of the country's 26-year civil war against the Tamil Tigers in 2009.

Eileen Donahoe, U.S. ambassador to the United Nations Human Rights Council in Geneva, said the council this week is set to accept a U.S. resolution to that affect during a meeting in Geneva that ends Friday, despite Sri Lanka's attempt to block it.

Sri Lanka is looking increasingly isolated in that effort. On Monday, Prime Minister Manmohan Singh of India, a country with warm ties to the Sri Lankan government, said India was "inclined" to back the resolution.

"We don't think of this as a symbolic vote," Ms. Donahoe said in an interview. "We see this as a meaningful effort to encourage the Sri Lankan government to take credible steps…We fear the government of Sri Lanka might fail to take those credible steps."

The motion, if successful, won't legally bind Sri Lankan President Mahinda Rajapaksa's government to any policy.

But Washington views it as a way of exhorting Sri Lanka not to cover up abuses by government soldiers during the final months of the war, a period during which a U.N. panel has said up to 40,000 civilians died.

Robert Blake, U.S. assistant secretary of state for South Asia and Central Asia, said some of the commission's recommendations were sound—such as pushing the government to demilitarize Tamil areas and publish names of detainees—but even on these Sri Lanka has yet to take action.

"We think they've had quite a lot of time to develop an action plan and we're disappointed they haven't done so," Mr. Blake said in an interview.

The U.S. resolution will ask for Sri Lanka to set a timeframe for implementing the recommendations of its commission, as well as calling for Colombo to allow a truly independent investigation of war crimes.

A panel appointed by U.N. Secretary General Ban Ki-moon, in a report a year ago, also criticized Sri Lanka for failing to properly investigate war crimes and recommended an independent inquiry.

Sri Lanka deserves some credit for building schools and roads in Tamil areas, Mr. Blake said. "But much remains to be done to ensure that Tamils, especially in the north, can live in peace."

<a href="
"'>
" style="font-size: 1.4em; line-height: 1.5em; ">
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.