Jump to content

கம்பன் விழா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் விழா

IMG_1974.JPG

உரையரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் என மூன்று நிகழ்வுகளாக நடைபெற்ற கம்பன் விழாவில் கம்பன் காப்பியத்தில் தனிப் புலமை பெற்ற இலங்கையின் கம்பவாரிதி ஜெயராஜ் ‘கம்பன் கண்ட மானுடம்’ எனும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். தலைமைப் பண்புகள் சிறு வயதிலிருந்தே வளர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் இராமனின் சிறுவயது நடவடிக்கைகளை கம்பன் விவரிப்பதை எடுத்துக் காட்டினார்.தமிழகத்தின் பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் ‘மும்மடங்கு பொலிந்தன’ எனும் தலைப்பில் இராவணன் பற்றி உரையாற்றினார். இராவணன் மிகச் சிறந்த தலைவன் என்றும் அவன் அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டதால் வீழ்ந்தான் என்றும் பிறன்மனை நோக்காப் பேராண்மை வேண்டும் என்றும் அவர் பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டிக் கூறினார்.

மலேசியாவில் கம்பன் விழா நடத்திப் புகழ்பெற்ற கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவரும் துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் ‘கம்பனும் கண்ணதாசனும்’ எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். உரையரங்கத்திற்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞர் பேராசிரியர் சுப. திண்ணப்பன் தலைமையேற்றார். பிற்பகலில் பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் தலைமையில் ‘பாத்திரங்கள் பேசினால்’ எனும் தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது. அதில் உள்ளூர்க் கவிஞர்கள் பங்கேற்றனர்.

‘தம்பியரில் சிறந்தவன் பரதனா? இலக்குவனா?’ எனும் தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் உள்ளூரின் பிரபல பேச்சாளர்கள் பங்கேற்றனர். இறுதியில் தீர்ப்பளித்த கம்பவாரிதி திரு. ஜெயராஜ், இராமனே, பரதன் இலக்குவனைவிடச் சிறந்தவன் என்று கூறி தீர்ப்பு வழங்கினார். சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட சுமார் 250 பார்வையாளர்கள் விழாவைப் பாராட்டினர்.

தமிழ் முரசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒருவகையில் இனத்தைவிற்றுப் பிழைக்கும் கேவலமான பிழைப்புத்தான்.

அங்க ஒண்டும் இராவணன் பிறன்மனை விழையவில்லை, சொந்த மனைவியை சந்தேகிக்கும் இராமன் சீதையைத் தனித்துவிட்டுப் போக இல்க்குவனும் போக இராவணனிடம் அடைக்கலம் புகுகின்றாள் சீதை. அதைவிட சீதை இராவணனுக்கு மகள் முறைவேணும் என்பதை இந்த கேவலம் கெட்ட இழிபிறவிகள் இலகுவில் மறைத்துவிடுகிறார்கள்.

இதற்கு ஏதாவது நம்ப தகுந்த ஆவணமிருக்கா?

Link to comment
Share on other sites

இதற்கு ஏதாவது நம்ப தகுந்த ஆவணமிருக்கா?

Indonesia Jakarta Ramayana says sita is daughter of ravana but written after valmiki ramayana
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பனை.. இராமனை.. சீதையைப் புகழ்ந்தமா.. காசை வாங்கி பையில போட்டமா.. கொஞ்சம் பெரிய தலைகளை கைக்குள்ள போட்டமா.. கொலரை இழுத்து விட்டுக் கொண்டு போனமா.. இதுதான் குடுமியரின்.. கம்பன் கழக அரசியல் சூத்திரமே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற பிரச்சனைக்குள் இது ரொம்ப அவசியம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரம்

தியாகம்

நட்பு

தேசப்பற்று............  இவை  அனைத்துமே 

எம் கண்முன்னே நடந்தன

அவை  பற்றி  பேசாமல்

புனைகதைகளையும்

கேள்விப்பட்ட வாசித்த விடயங்களையும் பெருமை பேசி

அதை வியாபாரமாக்கும் இவர்கள்

வாயிருந்தும் ஊமைகள்

காதிருந்தும் செவிடர்கள்

கண்ணிருந்தும் குருடர்கள்.......... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாயிருந்தும் ஊமைகள்

காதிருந்தும் செவிடர்கள்

கண்ணிருந்தும் குருடர்கள்.......... :(  :(  :(

இவை எதுவும் இல்லை அண்ணா.. பழுத்த சுயநல சந்தர்ப்பவாதிகள். அவ்வளவே..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒருவகையில் இனத்தைவிற்றுப் பிழைக்கும் கேவலமான பிழைப்புத்தான்.

அங்க ஒண்டும் இராவணன் பிறன்மனை விழையவில்லை, சொந்த மனைவியை சந்தேகிக்கும் இராமன் சீதையைத் தனித்துவிட்டுப் போக இல்க்குவனும் போக இராவணனிடம் அடைக்கலம் புகுகின்றாள் சீதை. அதைவிட சீதை இராவணனுக்கு மகள் முறைவேணும் என்பதை இந்த கேவலம் கெட்ட இழிபிறவிகள் இலகுவில் மறைத்துவிடுகிறார்கள்.

இலங்கை இந்திய உறவு அண்ணன் தம்பி உறவு என அரசியல்வாதிகள் இதை வைத்துதான் சொல்கின்றார்களோ :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.