Jump to content

கைகளால் உணவருந்துவதற்கான, நல்ல காரணங்கள்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

21-1408599855-1food.jpg

 

கைகளால் உணவருந்துவதற்கான, நல்ல காரணங்கள்!!!

 

ஏன் கைகளால் உண்ணுவதை  விரும்புகிறார்கள் என என்றாவது எண்ணியுள்ளீர்களா? அதற்கு காரணம் வெறும் கைகளால் உணவுகளை உண்ணும் போது உணவின் சுவை கூடுதலாக இருக்கும். குழந்தைகளையும் கைகளாலேயே உண்ணுவதற்கு பழக்கப்படுத்துகின்றனர். இதனால் உணவருந்தும் மேஜையில் சிந்தி சிதறமால் உண்ணுவார்கள் அல்லவா?

 
கைகளால் உண்ணும் போது, அவை உணவின் அமைப்பை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் நமக்கு அளிக்கும். ஸ்பூன் மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி உண்ணும் போது இந்த அமைப்பை நம்மால் உணர முடிவதில்லை. பல இந்தியர்களுக்கு தங்கள் உள்ளங்கையால் உருளைக்கிழங்கை அல்லது இட்லியை சாம்பார் மற்றும் சட்னியுடன் பிசைந்து சாப்பிட மிகவும் விரும்புவார்கள்.

 

வெறும் கைகளால் உணவருந்தினால் மட்டுமே இந்த ஆசைகள் நிறைவேறும். இந்த பேரின்ப உணர்வை அனுபவிக்க வேண்டுமானால், முதலில் வெறும் கைகளால் உண்ண ஏன் இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்ற காரணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

 

கைகளால் உண்ணும் போது உணவின் ருசி அதிகரிக்கிறது.

கைகளால் உண்ணும் போது உணவின் ருசி அதிகரிக்கிறது. அடுத்த முறை உங்கள் முன்னால் ஒரு தட்டில் சாப்பாடுடன் ஸ்பூன் மற்றும் ஃபோர்க் ஆகியவைகள் வைக்கப்பட்டால், அவைகளை தவிர்த்து உங்கள் அழகான விரல்களால் உணவை அள்ளி சாப்பிட்டு பாருங்கள். பல வகை உணவுகளுக்கு பெயர் போனவர்கள் இந்தியர்கள். இந்திய உணவுகளின் வளமையை உணருவதற்கு கைகளால் அவைகளை உண்ணுவதே சிறந்த வழியாகும்.

 

வசதியாக உணர்வீர்கள்.

சாப்ஸ்டிக்ஸ் மற்றும் ஸ்பூன் போன்றவைகளை கொண்டு உண்ணுவதை விட கைகளால் உணவருந்தினால் தான் வசதியாக இருக்கும். இதனை ஒத்துக்கொள்வீர்கள் தானே? வசதியாக இருப்பதால் தான் இந்தியர்கள் கைகளால் உணவருந்துவதற்கு விரும்புகின்றனர். இதனால் அவர்கள் உணவை ரசித்து உண்ணவும் முடிகிறது.

 

கடைசி பருக்கை உணவை கூட வழித்து உண்ணுவீர்கள்.

உங்கள் உணவை நீங்கள் விரும்பினால் அதன் கடைசி பொட்டை கூட விடாமல் வசித்து சாப்பிடுவீர்கள். கைகளால் சாப்பிட்டாலே இது சாத்தியம். இப்படி சுவைமிக்க உணவை உண்ணும் போது, தட்டை சுற்றி விரலல்களால் துடைத்து எடுத்து கடைசி போட்டு உணவை கூட மிச்சம் வைக்கமாட்டீர்கள். கைகளை கொண்டு உணவருந்துவதால் கிடைக்கும் மற்றொரு பயன் இது.

 

நேர்மறையான ஆற்றல் திறனை உணவு அளிக்கிறது.

உணவில் பல வித வெளிப்புற ஆற்றல் திறன்கள் அடங்கியுள்ளது - நேர்மறை, எதிர்மறை, வலிகள், உணர்ச்சிகள், எண்ணங்கள் போன்ற பல. காய்கறி அல்லது மசாலா பொருட்கள் விற்பவர்கள், சமையல்காரர்கள், உணவாக பணியாளர்கள் என பல பேர்களின் கைகளுக்கு செல்கையில், அனைத்து வெளிப்புற ஆற்றல் திறன்களை சுத்தப்படுத்த இந்த கைகள் உதவுகிறது என நம்பப்படுகிறது. இதனால் மனித ஆத்மாவை இது பாதிக்காது.

 

பாக்டீரியாவின், சுவையை அறிந்து கொள்ள....

இயல்பான ஃப்ளோரா என்ற சில பாக்டீரியாக்களை நம் உள்ளங்கைகளில் காணலாம். இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்காது. இருப்பினும் சுற்றுச் சூழலில் உள்ள பல பாக்டீரியாக்களிடம் இருந்து இது நம்மை காக்கிறது. கைகளால் உண்ணும் போது கைகளில் உள்ள ஃப்ளோரா பாக்டீரியாக்களையும் நாம் விழுங்குகிறோம். இது நம் உடல் நலத்திற்கும் வாய், தொண்டை, குடல் போன்ற பல உடல் பாகங்களுக்கும் மிகவும் நல்லதாகும்.

 

மசாலா வாசனை.

கேட்க விந்தையாக இருந்தாலும் இது தான் உண்மை. கைகளால் உண்ணும் போது, எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் உங்கள் கைகளில் மசாலா வாசனை நீடித்து நிற்கவே செய்யும். கைகளால் உணவை உண்ணுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

அந்தக் காலங்களில் குளிர் நாடுகளில் சுடுநீர் கிடைப்பது அரிது. அதனால் மேட்டக்குடி வெள்ளை இனத்தவர்கள் கரண்டிகளைப் பயன்படுத்தினார்கள். குளிர் நீரில் கை கழுவ முடியாதுதானே..

காலப்போக்கில் அதை ஒரு சமூக ஏற்றமாகக் கருதி சாதாரண மக்களும் பாவிக்கத் தொடங்கினார்கள்..! இன்று நாமும் பாவிக்கிறோம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையால் உண்ணும் பொது கிடைக்கும் இன்பம் தனிதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக மக்கள் அனைவரும் உதடு, நாக்கு, பற்கள் மொத்தத்தில் வாயைத்தான் பயன்படுத்துவார்கள்.  எந்த மேட்டுக்குடியினரும் இதற்கு  விதிவிலக்கில்லை.  இதென்ன புதிதாகக் கைகளைப் பயன்படுத்துவது பற்றிப் பேசுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா நாட்களில் மீந்ததை அடுத்தநாள் ஒரு அத்தையோ , சித்தியோ பெரிய பாத்திரத்தில் போட்டுக் குழைத்துத் தர சுற்றி இருந்து இலைகளில் ஒவ்வொரு கவளமாய் வாங்கி சைட் டிஸ்சாய் ஊறுகாய் , வெங்காயம் , மிளகாய் , அப்பளம் என்டு தொட்டுச் சாப்பிட எவ்வளவு ருசியாய் இருக்கும்...! :)

Link to comment
Share on other sites

அந்தக் காலங்களில் குளிர் நாடுகளில் சுடுநீர் கிடைப்பது அரிது. அதனால் மேட்டக்குடி வெள்ளை இனத்தவர்கள் கரண்டிகளைப் பயன்படுத்தினார்கள். குளிர் நீரில் கை கழுவ முடியாதுதானே..

 

 

இதே காரணத்திற்காகத்தான்  Toilet tissue வும் வந்தது.   :rolleyes:

Link to comment
Share on other sites

நான் அலுவலகத்தில் தவிர மிச்ச அனைத்து இடங்களிலும் கைகளால் தான் சாப்பிடுவது. இட்டலி, தோசை கொண்டு போகும் நாட்களில் அலுவலகத்திலும் கையால தான் சாப்பிடுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அலுவலகத்தில் தவிர மிச்ச அனைத்து இடங்களிலும் கைகளால் தான் சாப்பிடுவது. இட்டலி, தோசை கொண்டு போகும் நாட்களில் அலுவலகத்திலும் கையால தான் சாப்பிடுவது.

 

இட்லி, தோசை.... எல்லாம் அலுவலகத்துக்கு கொண்டு போய்... சாப்பிடுவீர்களா?

அதை பின்னேரம் வந்து, ஆறுதலாய் சாப்பிட்டால்.... என்னவாம்? :D 

நாங்கள் பாண் தான்.... கொண்டு போவோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக்கு மா கையால் குழைப்பதும் தனி ருசியைத்தரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரன்டியால் சாப்பிடுவதால் ஒரு பொிய நன்மை உண்டு.எதுக்கும்யோசிக்கமால் காகம் துரத்தலாம்.  :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரன்டியால் சாப்பிடுவதால் ஒரு பொிய நன்மை உண்டு.எதுக்கும்யோசிக்கமால் காகம் துரத்தலாம். :lol::icon_idea:

ஊரை காட்டிக்குடுத்திட்டியே சஜீவா (உங்களையும் என்னையும் ஒரு கடல்தான் பிரிக்குது.)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரன்டியால் சாப்பிடுவதால் ஒரு பொிய நன்மை உண்டு.எதுக்கும்யோசிக்கமால் காகம் துரத்தலாம்.  :lol::icon_idea:

நாங்களும் இப்படித் தான்!  :D

 

monkeyfishing.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பம், சொதி, சம்பலுடன் கையில் சாப்பிடும் போது  அதன் சுவையே தனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரை காட்டிக்குடுத்திட்டியே சஜீவா (உங்களையும் என்னையும் ஒரு கடல்தான் பிரிக்குது.)

 

எனக்கும் தான்...

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.