Jump to content

மனைவியிடம் நாலு வார்த்தை மனம் விட்டுப் பேசுங்கள்...தி மு க பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எம்.பியின் அருமையான பதிவு சற்று நீளம் தான் முடிந்தால் படியிங்கள்


Recommended Posts

மனைவியிடம் நாலு வார்த்தை மனம் விட்டுப் பேசுங்கள்...தி மு க பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எம்.பியின் அருமையான பதிவு சற்று நீளம் தான் முடிந்தால் படியிங்கள் .....

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள்.

1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுளிக்காமல் ஒருமணி நேரத்திலேயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள்.

இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த என்னிடம் வந்து, பிள்ளையைக் காட்டி விட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.

என்னை காண வருவோர் அத்தனை பேருக்கும் உணவு படைத்த அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம். தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி; பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.

பண்டிகைகளும், திருநாள்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை. இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்தும், ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்திருக்காது.

நேரம் இல்லை என்பார்கள், பொய். 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்த்துவதற்குத்தானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.

காலம் கடந்து பயன்படுத்தினால் பயனற்றுப் போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிப்படுத்தாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி', 'காதல்' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது. விலையும் இருக்காது.

இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன். ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாயே.

ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைந்ததாக செய்தி கிடைத்தது. வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்து இருந்ததை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தால் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.

நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் இரண்டும் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.

பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிறவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசி இருந்தால்...........

முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன். எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருத்தப்படாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப்படுத்தினார். நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குறிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிப்பவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக, கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமே இல்லையே என சொன்னேன்.

ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோ ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது. காலங்கடந்து நான் உணர்கிறேன்.

தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள்

தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள். என் மனைவிக்கு என்னை உணர்த்தாமலே, என் உள்ளத்தை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழ வைக்காமலேயே அனுப்பி வைத்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன்

உங்களுக்காகவே, உங்கள் பிள்ளைகளை, உங்கள் பிரச்சனைகளை, உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிறபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கீகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!

நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்று  பகிர்வுக்கு நன்றி ........... வாசிக்கும்  கணவர்களுக்கு  புரிந்தால் சரி ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்று  பகிர்வுக்கு நன்றி ..

 

மிகவும் நன்று  பகிர்வுக்கு நன்றி ........... வாசிக்கும்  கணவர்களுக்கு  புரிந்தால் சரி ...

 

அதே சிக்கல்  பாட்டி...? :D

நாங்கள் திருந்துவதாக இல்லை.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்று  பகிர்வுக்கு நன்றி ..

 

 

அதே சிக்கல்  பாட்டி...? :D

நாங்கள் திருந்துவதாக இல்லை.. :(

 

ஆண்கள் ஒரு வார்த்தையை முடிப்பதற்குள் நான்கு வார்த்தையை அள்ளிவிடும் மனைவிகளிடம் எப்பாடியாம் நாலு வசனத்தையும் ஆண்கள் கூறி முடிப்பது ? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் ஒரு வார்த்தையை முடிப்பதற்குள் நான்கு வார்த்தையை அள்ளிவிடும் மனைவிகளிடம் எப்பாடியாம் நாலு வசனத்தையும் ஆண்கள் கூறி முடிப்பது ? :D:lol:

 

"வீட்டுக்கு... வீடு வாசல் படி." என்று சும்மாவா.... சொன்னார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் ஒரு வார்த்தையை முடிப்பதற்குள் நான்கு வார்த்தையை அள்ளிவிடும் மனைவிகளிடம் எப்பாடியாம் நாலு வசனத்தையும் ஆண்கள் கூறி முடிப்பது ? :D:lol:

 

 

வணக்கம் ராசா

 

எப்பொழுதும் என்னிடமுள்ள  குறைகளை நான் எடைபோட்டுக்கொள்வது வழமை

அந்தவகையில் மனைவியிடம்  அரிதாக பேசுதல் என்பது என்னிடமுள்ள  மிகப்பெரிய  குறை

இதில் குறிப்பிட்டுள்ள  அனைத்தும் உண்மை

எம்மில் பலருக்கு இது பொருந்தும்

நானும் இதற்குள் அடக்கம்...

இதை நாம்  ஏற்றுக்கொண்டு

நிவாரணம் தேடணும் ராசாக்களா....

அதுவே எனது விருப்பம்

 

உலகிலுள்ள

நாம் கண்ட

காணாத யீவராசிகள் அனைத்தையும் நாம் நேசிக்கின்றோம்

அருகில் இருக்கும் மனைவியை  விட்டுவிடுவோமா..

ஆனால் அதைச்சொல்வதில்லை

இனியாவது சொல்லங்கள் ராசாக்களா

பேசுங்கள் ராசாக்களா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ராசா

 

எப்பொழுதும் என்னிடமுள்ள  குறைகளை நான் எடைபோட்டுக்கொள்வது வழமை

அந்தவகையில் மனைவியிடம்  அரிதாக பேசுதல் என்பது என்னிடமுள்ள  மிகப்பெரிய  குறை

இதில் குறிப்பிட்டுள்ள  அனைத்தும் உண்மை

எம்மில் பலருக்கு இது பொருந்தும்

நானும் இதற்குள் அடக்கம்...

இதை நாம்  ஏற்றுக்கொண்டு

நிவாரணம் தேடணும் ராசாக்களா....

அதுவே எனது விருப்பம்

 

உலகிலுள்ள

நாம் கண்ட

காணாத யீவராசிகள் அனைத்தையும் நாம் நேசிக்கின்றோம்

அருகில் இருக்கும் மனைவியை  விட்டுவிடுவோமா..

ஆனால் அதைச்சொல்வதில்லை

இனியாவது சொல்லங்கள் ராசாக்களா

பேசுங்கள் ராசாக்களா.

 

உண்மை விசுகு அண்ணா  இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தும்

எனக்கும் கூட இது 100 வீதம் பொருந்தும் ஆனால் என்ன செய்வது

நேரம் ஓடிக்கொண்டிருக்கின்றது. நாங்களும் ஓடிக்கொண்டிருக்கின்றோம். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசியிடம் இந்தக் கட்டுரையைக் கொஞ்சம் படிக்கச் சொல்லி அப்பப்ப என்னைக் கொஞ்சம் பாராட்டப்பா என்டு சொல்ல வேணும்...! :unsure::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.