Jump to content

பாலியல் பிரச்சினை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை பாலியல் பிரச்சினை காலையில் பத்திரிகைகளை புரட்டினால் வன்முறைகள்,கொலைகள்,பாலியல் வல்லுறவுகள் சிறுவர்துஸ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளை அதிகம் காணலாம் சாதரண குடிமகன் தொடக்கம் ,அரசியல் வாதிகள்,கல்லூரி அதிபர்கள்  ஆசிரியர்கள் ,அலுவலகர்கள் ,மதகுருமார்கள் இவற்றில் சம்மந்தப்பட்டிருப்பார்கள்

 பெண்கள் ,சிறுவர்கள் , ,முதியவர்கள் என இப்பிரச்சினை பாதித்து கொண்டே வருகிறது. காரணம் பாலியல் பற்றிய அறிவு இல்லாததும், தொழிநுட்ப வளர்ச்சியும். தொழிநுட்ப வளர்ச்சி என்னும் போது படிக்கும் மாணவர்கள் கைகளில் இன்று புதிய புதிய கைதொலைபேசிகள் ,மடிக்கணணிகள்,இருப்பதனால் இதனை பயன் படுத்தி சில பாலியல் சார்ந்த இணையத்தளங்களுக்கு சென்று பலானா பலானா படங்களை பார்த்து  கெட்டுபோகிறார்கள் இன்னும் பலரையும் கெடுக்கிறார்கள் .

பாலியல் கல்வி என்னும் போது பலியல் பற்றி பூரண அறிவு இல்லாததுதான் பாலியல் கல்வி இலங்கையில் இன்று பாடத்தில் சேர்க்கப்டாவிட்டாலும் எதிர்காலத்தில்  கட்டாயம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று நான் இலங்கையில் படிக்கும் போது

குடும்ப சுகாதாரம் என்ற பாடம் வரும் போது ஏதாவதை சொல்லிக்கொடுப்பார்கள் என்று பார்த்தால் இல்லை எதையும் சொல்லி கொடுக்கவில்லை

11ம் தரத்தில் விஞ்ஞான பாடத்தில் இனப்பெருக்கம் என்னும் பாடம் இருக்கிறது அதிலையாவது சொல்லிகொடுப்பார்கள் என்று பார்த்தால் இல்லை .வாத்தியார் வந்து நாளைக்கு இனப்பெருக்கம் என்னும் பாடம் இருக்கிறது அந்த பாடத்தை முழுமையாக வாசித்து வாருங்கள் என்றார் நான் அன்றுதான் இரவு 12 மணிவரை படித்தேன்  என்றால் பாருங்களன். :)  அடுத்த நாள் பாடசாலைக்கு வராதவனுகள் எல்லாம் வந்தானுகள் இனப்பெருக்கம் படிக்க ஆனால் பாடத்திற்கு வந்த வாத்தியாரோ நான் நீங்கள் எல்லாம் பிறந்ததுதான் இனப்பெருக்கம் என்றார்  அப்பதொடக்கம் இன்னும் சரியான பூரணமான விளக்கம் தெரியாது பாருங்கள் :rolleyes:எனக்கே இப்படியென்றால் சாதாரண மக்களுக்கு ?? :blink:

 

புள்ளி விபரப்படி பார்த்தால் இலங்கையில்

2012 –

330 -பாலியல் வல்லுறவு

1750 – சிறுவர் ,சிறுமிகள் பாலியல் வல்லுறவு

1194- சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்

5475- சிறுவர் பாலியல் வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன இதற்க்கான காரணங்கள்  என்ன ,இதற்கு நாம் எவ்வாறான வழிவகைகளை செய்யலாம் சொல்லுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுள்ள நிலைமையில் பாலியல் கல்வி பற்றிய அறிவுறுத்தல்கள் வயதுவந்தோருக்கும், முதியோருக்கும்தான்  அவசியம் தேவையாய் இருக்கின்றது.

 

சிறுவர்களைச் சிறுவர்களாக இருக்க விட்டாலே பெரும் புண்ணியமாய்ப் போகும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணை மத்திய கிழக்கில் உள்ளது போல் பாலியல் இணையத்தளங்களை தடை செய்தால் இளைய சமுதாயத்தை கொஞ்சம் சரி செய்யலாம்

மற்றும் தண்டனைகளை அதிகரித்தால்  ஓரளவு குறைக்கலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.