Jump to content

அலைவரிசை 4 இல் அறிமுகமான மாவீரன்!


Recommended Posts

பின் மண்டையில் சுடுபட்டு... நான் வீழ்ந்தபோது,

என் மூளைநரம்புகளின் அதிர்வுகளை...

நீங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்!!!

வெறும் செய்தியாகத்தான்.... அதுவும் உங்களுக்கு இருந்திருக்கலாம்!!!

சாகப் போகின்றோம்.... எனும்போது,

"கடைசி ஆசை" என்றொன்று..... எனக்கும் இருந்தது!

இயலாமையுடன் எதிர்ப்பட்ட எண்ணங்களில்... யாரேனும் எம்மை

காப்பாற்ற வரமாட்டார்களா? எனக் கூட, எண்ணத் தோன்றவில்லை!

அனாதையாகி நிற்கும் தாய்மண்ணில்....

நாங்களும் நாதியற்றுத்தான் நின்றோம்!!!

பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா....

விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று,

என் மூளை திருவி... வலக்கண் வழியே,

வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும்,

எனக்கு வலிக்கவேயில்லை!!!

செருகிக் கொண்டிருந்த என் ஒற்றை விழியிலும்...

அப்போதும் கடைசிக் கண்ணீர்த் துளியொன்று...... என் இனத்துக்காய்!!!

புறநானூறு பிறழ்ந்த தமிழனாய்...

பின் பிரடியில் புண் வாங்கி,

மண்மீது சரிந்த எங்களையும்,

என்றாவது ஒரு நாளேனும்... - விடிந்த

எம் மண்ணின்... மாவீரர் பட்டியலில் சேர்ப்பார்கள்....என்ற

கடைசி நப்பாசையுடன்,

இறுகிப்போன என் இதயம் -முதலும் கடைசியுமாய்,

தன் இயக்கத்தினை நிறுத்திக்கொள்ள,

என் ஒற்றை விழியும் மூடிக்கொண்டது.

இறுதியாக ஒரு வேண்டுகோள்...

"இப்பிடிச் செத்ததுக்கு... கழுத்தானைக் கடிச்சிருக்கலாம்!!!

ஏன் சயனைட் கடிக்கவில்லை???" என்று

தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!!

"இறுதிவரை நீங்கள் இருக்கின்றீர்கள்" என்ற நம்பிக்கையுடன்தான்...

அதையும் நான் மறந்திருந்தேன்'!!!

Link to comment
Share on other sites

உங்களுக்கு உள்ள கவி பாடும் வலிமை என்னிடம் இல்லை . வாழ்துக்கள் . இரண்டாவது எனது பச்சை :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது எனது.

பின்மண்டையில் சூடுபடுவதைப் பார்த்தபோது நாம் இயலாதவர்கள் என்று உச்சியில் உறைத்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்போது பச்சைப் புள்ளி போடக்கூடியதாக இருக்கிறது.

கவிதை உங்கள் கவிதை பற்றிய குறிப்பை சிறிதுநேரம் கழித்துப் போடுகின்றேன்

Link to comment
Share on other sites

இன்று 5வது பச்சைப்புள்ளியைத் தான் குத்த நேரம் வந்தது. ஆறுதலாக வருகிறேன் கருத்தெழுத.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைக்கு என்ன என்ன கருத்து எழுதுவது என்று தெரியவில்லை...முதலாவது பச்சை என்னோடது

Link to comment
Share on other sites

ஏன் சயனைட் கடிக்கவில்லை???"

கவிதை, கவிதையின் வரிகள், எங்கோ! யாரோ ஒரு போராளியைக் கேட்டதுமாதிரி ஒரு பிரமை. ஆன்மாக்களுடன் பேசுவதற்கு எனக்கும் ஆசை விரைவில் பேசுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா....

விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று,

என் மூளை திருவி... வலக்கண் வழியே,

வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும்,

எனக்கு வலிக்கவேயில்லை!!!

செருகிக் கொண்டிருந்த என் ஒற்றை விழியிலும்...

அப்போதும் கடைசிக் கண்ணீர்த் துளியொன்று...... என் இனத்துக்கா.......

....... எப்படி முடிகிறது இப்படி எழுத ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நினைத்துப் பார்க்கவே பயங்கரமா இருக்கிறதை, கவிதையில் படைத்துள்ளீர்கள், என்ன செய்ய, எம்மால் செய்யக் கூடியது மாவீரர் தினத்தை வியபாரமாக்கிவிட்டேம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்ந்து போன வீரர்களின் நினைவுகளை,

விலை பேசும், ஈனப் பிறவிகளின் நடுவில்,

வலி தெரியாமல்,

வாழ்விழந்த மாவீரன்,

வாழ்ந்திருப்பான்!

எங்கள் நினைவுகளில்,

வரலாறு உள்ள வரை!

உங்கள் கவிதை மூலம்!!!

நன்றிகள், கவிதை!!!

Link to comment
Share on other sites

என் ஒற்றை விழியும் மூடிக்கொண்டது.

கண் மூடி நின்மதியாக தூங்குகிறீர்கள்.உங்கள் மாவீரர் தினத்தை கொண்டாட நடக்கும் வெட்டுக்குத்துக்கள் ... சொல்ல வார்த்தையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை

இனத்தின் மீதான முழு நம்பிக்கையில் அவனுக்கு மரணத்தின் வலி தெரியவில்லை...கண்கள் பார்க்காத, காதுகளுக்கு எட்டாத செய்திகளாக எத்தனையோ மாவீரர்களின் ஆன்மாக்கள் இனவிடுதலையின் நேசிப்பால் காலவெளிகளில் கரைந்து போயிருக்கின்றன..... இப்படிச் செத்ததைக் காட்டிலும் அவன் குப்பி கடித்திருக்கலாம்தானே..... என்று நாக்கு வளைத்து நாலு விதமாகவும் பேசலாம்.. ஆனால் கொண்ட இலக்கை அடைவதற்காக இந்த வலிகளைக்காட்டிலும் எத்தனையோ வலிகளைத் தாங்கி இருக்கிறார்கள் போராளிகள். கடைசித்துளி கண்ணீரில் இருந்த நம்பிக்கைகளைச் சிதறடித்துக்கொண்டிருக்கிறார்கள் தேசியத்தின் பேரால் பிரிவுகளாகி குழுமங்கட்டியவர்கள்...

கடைசித்துளி கண்ணீர்..

கடைசி நிமிட ஆன்மதாகம்

கடைசிநேர உயிரின் துடிப்பு

அனைத்தையும் துடைத்துப் போட்டுவிட்டு பாகுபடுகிறது குறுகிய உள்ளங்கள்.

மன்னித்துவிடுங்கள் மாவீரர்களே...

இப்போது விடுதலைக்காய் எழும் சக்தியை தின்று கொண்டிருக்கிறது குழுமவாதங்கள்... இவர்களிடம் இருந்து விடுபட்டு எழவேண்டிய காலத்தில் இப்போது உங்களையெல்லாம் நேசிக்கும் நாங்கள்... :(

கவிதை உங்கள் கவிதைக்கு கருத்து எழுதத்தான் முயன்றேன் முடியவில்லை....

Link to comment
Share on other sites

தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!!

நன்றி வல்வை சாகரா. கவிஞர்கள் ஊடாக எங்கள் விடுதலைக்காக வீழ்ந்த சகல அமைப்புகளையும் சார்ந்த மாவீரர்களின் ஆன்மா மேலும் மேலும் ஒலிக்கவேண்டிய தருணமிது தோழி.

Link to comment
Share on other sites

தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!!

நன்றி வல்வை கவிதை. கவிஞர்கள் ஊடாக ஈழ விடுதலைக்காக வீழ்ந்த சகல தரப்பையும் சேர்ந்த மாவீரர்களின் ஆன்மா மேலும் மேலும் ஒலிக்கவேண்டிய தருணமிது தோழா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

இறுதியாக ஒரு வேண்டுகோள்...

"இப்பிடிச் செத்ததுக்கு... கழுத்தானைக் கடிச்சிருக்கலாம்!!!

ஏன் சயனைட் கடிக்கவில்லை???" என்று

தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!!

"இறுதிவரை நீங்கள் இருக்கின்றீர்கள்" என்ற நம்பிக்கையுடன்தான்...

அதையும் நான் மறந்திருந்தேன்'!!!

எமது இனத்தவர்களின் கேடு கெட்ட, எண்ணங்களை நாலுவரியில் சொல்லி விட்டீர்கள் கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா....

விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று,

என் மூளை திருவி... வலக்கண் வழியே,

வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும்,

எனக்கு வலிக்கவேயில்லை!!!

செருகிக் கொண்டிருந்த என் ஒற்றை விழியிலும்...

அப்போதும் கடைசிக் கண்ணீர்த் துளியொன்று...... என் இனத்துக்காய்!!!

கவிதைதானே என அநாசயமாக படித்துவிட்டுச் செல்ல முடியாத வலி சுமந்த வரிகள்..இன்றும் எம் கன்னங்களில் கண்ணீர் ரேகைகள்..

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றிகள் கவிதை..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதியாக ஒரு வேண்டுகோள்...

"இப்பிடிச் செத்ததுக்கு... கழுத்தானைக் கடிச்சிருக்கலாம்!!!

ஏன் சயனைட் கடிக்கவில்லை???" என்று

தயவுசெய்து..... எங்கள் ஆன்மாக்களை பழிக்காதீர்கள்!!!

"இறுதிவரை நீங்கள் இருக்கின்றீர்கள்" என்ற நம்பிக்கையுடன்தான்...

அதையும் நான் மறந்திருந்தேன்'!!!

வார்த்தைகள் வரவில்லை கவிதை(அண்ணா). :(

வலிகளைச் சுமந்தவர்களாய் நாம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதை

போரின் வடுக்களை கவிதையில் விகாரமாக்கியிருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

கவிதை உங்கள் கவியில் இருக்கும் கருத்தின் ஆழத்தை வருணிக்க எனக்கு வார்த்தையுமில்லை அருகதையுமில்லை. நாம் இருக்கின்றோம் என்று எமக்காக உயிர்துறந்த அந்த மாவீரர்கள் எங்கே - விட்டால் போதும் என்று ஓடி வந்து ஒழிந்திருக்கும் நாம் எங்கே. மாவீரர் வணக்கம் செய்ய அடிபடும் நாமும் தமிழ் இனத்தில் தான் பிறந்தோமா????? உங்கள் கவிதை நிட்சயம் ஒவ்வொரு தமிழனையும் சிந்திக்கவைக்கும். கவிக்கு நன்றிகள் கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் கவிதைக்கு என்னுடைய பதின் எட்டாம் புள்ளி.உங்கள் கவிக்கு என்ன கருத்தை எழுதுவது என்றே புரிய இல்லை.

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி ,

அதை சொன்ன விதமும் சொன்ன நேரமும் அதைவிட பக்குவம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி கவிதை

இதை தமிழர் மீதான கோபமாக பார்க்காமல் செய்தவன் செய்வித்தவன் மீதான கோபமாக மாற்றுவதே சிறந்தது. அல்லது தமிழர்கள் அதிலும் மாவீரர்கள் செய்த அனைத்தையும் தடுத்து இந்தநிலைக்கு ஆளாக்கியோரிடம் போகவேண்டிய செய்தி இது. தமிழர்களில் பெரும்பான்மையானோர் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் செய்தனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதை அனுமதித்திருந்தாலோ அல்லது இவர்கள் இதற்குள் தலையிடாக்கொள்கையை கடைப்பிடித்திருந்தாலோ நாம் வென்றிருப்போம். எமக்கான ஆதரவு அதிகரித்தபடியேதான் இருந்திருக்கும். யாரிடமும் நாம் பிச்சையேந்தவில்லை. எமது மக்களையும் மாவீரர்களையும் போராளிகளையும் தளபதிகளையும் காக்கும் சக்தி எம்மிடமிருந்தது. அதை அழித்து இந்தநிலைக்கு எம்மை விட்டவர் யார்??????????????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.