Jump to content

இதுவரை நான் நடித்த படங்களில் இது சிறந்த சாதனை: சூர்யா பெருமிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
soorya-200-seithycinema.jpg

'அஞ்சான்' பாக்ஸ் ஆபிஸில் மூன்று நாட்களில் 30 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. 'இதுவரை நான் நடித்த படங்களில் இது சிறந்த சாதனை' என கூறியுள்ளார் சூர்யா. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான 'அஞ்சான்' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து சூர்யா சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

  

"ஒவ்வொரு மனிதனும் ஒரு படத்தை விமர்சிப்பது அவரவர் உரிமை. தனிமனிதனின் எண்ணங்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன். 'சிங்கம்' வெளியான போது சிலருக்கு அது ஒரு சாதாரண கதையாகவே தோன்றியது. கண்டிப்பாக 'சிங்கம்' மேல்தட்டு மக்களுக்கு பிடித்திருக்க வாய்ப்பில்லை. அதே போல 'அஞ்சான்' படமும் சிலரைக் கவராமல் இருக்கலாம். ஆனால், 'அஞ்சான்' எல்லா தரப்பு மக்களையும் மனதில் வைத்து உருவாக்கிய படம். இந்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் தற்போது படத்தின் வெற்றியை வெளிப்படுத்தியுள்ளது" என்று சூர்யா கூறியுள்ளார் அவர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=115221&category=EntertainmentNews&language=tamil

Link to comment
Share on other sites

இந்தப்படம் தோல்வி என்பதுபோல யாரோ இங்கு எழுதியிருந்தார்களே.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் அவார்ட்ஸ் பார்த்ததிலிருந்து......இந்த தமிழ் நாட்டு கோமாளி ஹீரோக்கள்  எல்லாம் எவ்வளவு மண்டை கர்வத்தில் திரியுதுகள் என்று தெரிந்தது.

ஒருவருக்கு மற்றவர் பின்பக்கத்தை காட்டியவாறு அருகிலேயே குந்திக்கொண்டிருப்பதும், நான் இவரை இதற்க்கு முன் கண்டதே இல்லையே என்றவாறு வேறொரு பக்கம் பார்த்துக்கொண்டிருப்பதுமாக சகிக்கவே முடியவில்லை. ரசிகர்களுக்கிடையில்தானே சண்டை இவர்களுக்கிடையில் இல்லையே. அனால் இதே விஜய் அவார்ட்ஸ் ஒரு நல்ல மனிதனையும் இனங்காட்டியது. King Khan எவ்வளவு பெரிய நடிகர் அவரது ஒரு படத்திற்கு எத்தனை கோடிகளில் வியாபாரம் நடக்கிறது.மனுஷனிடம் ஒரு துளி பந்தா இல்லை 
ஒரு நடிகரையும் தாண்டி ஒரு சிறந்த மனிதனாக உண்மையாக உயர்ந்து நின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப் படத்தை இணையத்தின் பார்த்தேன்.லிங்குசாமி இயக்கிய படம்,சூரியா நடித்த படம் என நம்ப முடியாமல் உள்ளது...மொக்கைப் படம்:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்க்கக் கிளம்பும்போதே ஒரு தம்பி அன்பாக ‘ஏன்ணே சுதந்திர தினம் அன்னிக்கு ஜெயிலுக்குப் போறீங்க?’ன்னு கேட்டார். அப்பவே சகுனம் சரியில்லையேன்னு உஷார் ஆகியிருக்கணும்..ஆனேனா? இல்லியே…இல்லியே!ஹும்..ஏற்கனவே பீமா படத்துலேயே லிங்குசாமி அண்ணனுக்கு டான் கதை வரலியே..அப்புறம் வராத கழுதையை வா, வான்னா எப்படி வரும்?தியேட்டருக்கு பாட்டு சீனுக்கு எந்திரிச்சுப் போறதைப் பார்த்திருக்கேன்..பாதிப் படம் ஓடும்போதே, வெளியே பத்து நிமிசம் காலாற நடந்துட்டு வர்றதை இன்னுக்குத் தான்யா பார்க்கிறேன். திரும்பி வந்து பக்கத்து சீட் ஆள்கிட்ட ‘என்ன மாப்ளை…ராஜூ பாய் என்ன சொல்றாரு?’ன்னு நக்கலா கேள்வி வேற கேட்குறாங்க..எவ்ளோ அவமானம் இது.

 

மன்னிச்சிருங்க மக்களே..இன்னிக்கு முழுசா விமர்சனம் எழுதறதா இல்லை. படத்துக்கு விமர்சனம் எழுதலாம். ஆனால் காவியத்துக்கு?

எதை எழுதன்னு எனக்கு நிஜமாவே புரியலை. கதைன்னு ஏதாவது இருந்தால், அதை விளக்கலாம். திரைக்கதைன்னு ஏதாவது இருந்தால், உரிக்கலாம். ஆனால்….என்னத்தைச் சொல்ல?

வசனங்கள் பிரமாதம். உதாரணத்துக்கு...

டேய்..

ஏண்டா இப்படி…

ஹா..ஹா..சூப்பரு..சூப்பரு.(இது செண்டிமெண்ட் சீன்ல!)

யம்மா..

அய்யய்யோ.

கொல்றாங்களே.
ஓடிடலாமா? (இண்டர்வெல் டயலாக்)

உஸ்ஸ். (இது தான் அதிகத் தடவை)

தெரியாம வந்துட்டோம்டி!

- இதெல்லாம் படத்துல வந்த வசனம் இல்லை மக்கா…படம் பார்க்கும்போது தியேட்டர்ல வந்த வசனம். ஸ்க்ரீனைப் பார்த்து, அப்படித் திட்டுறாங்க..பச்சை பச்சையா திட்டறாங்க…அதை இங்கே எழுத முடியாது..கட்டுப்பாடான குவைத் தியேட்டர்லயே இப்படின்னா, ஊர்ல என்ன ஆகப் போகுதோ?

ராஜூ பாயைத் தேடி அவர் தம்பி கிருஷ்ணா பாய் வர்றார்.

பாய் வீட்ல பர்தா போட்டு ஒரு பொண்ணு, ராஜு பாயை உத்து, உத்துப் பார்க்குது.

- இந்த ரெண்டுலயும் பயங்கர ட்விஸ்ட் ஒளிஞ்சிருக்குதாம்…எவனாலயும் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. கிருஷ்ணா வந்த கொஞ்ச நேரத்துலயே, அவர் யாருன்னு தியேட்டர்ல கத்திச் சொல்லிட்டாங்க. பர்தா பொண்ணையும் ‘அவ தானே நீ..சஸ்பென்ஸாம்!”-ன்னு நக்கல் விடறாங்க.

மும்பைல சில பேரை ராஜூ பாய் கொல்றாரு.

வில்லன் ராஜூ பாயோட ஃப்ரெண்டை கொல்றாரு.

ராஜூ பாய், துரோகி-1-ஐக் கொல்றாரு.

ராஜூ பாய், துரோகி-2-ஐக் கொல்றாரு.

ராஜூ பாய், துரோகி-3-ஐக் கொல்றாரு.

ராஜூ பாய் வில்லனோட (மினிமம் 100) அடியாட்களைக் கொல்றாரு.

ராஜூ பாய் வில்லனைக் கொல்றாரு.

மறுபடியும் ராஜூ பாய் துரோகிகளைக் கொல்றாரு.

கொல்றாருய்யா…கொல்றாரு…மிச்சம் இருக்கிற நம்மையும் கொல்றாரு…உஸ்ஸ்..ராஜ்ஜூ ப்பாய்…ராஜ்ஜூ ப்பாய்..அய்யோ, இப்படித் தனியா புலம்ப விட்டுட்டாங்களே!

பிள்ளையார் கோயில்ல சுண்டல் வாங்க ஓடற மாதிரியே, புதுப்படம் வந்தால் பார்க்கிறதுக்கு ஓடறது….ஏதோ விமர்சனமாம்…எழுதியே ஆகணுமாம்..இப்போ, அய்யோ-அம்மா வலிக்குதேன்னா…வலிக்கத் தான் செய்யும்..பின்னே, சினிமா விமர்சகர்ன்னா சும்மாவா?

ஒரு சீனைக் கூட எவனும் ரசிச்சிடக்கூடாதுன்னு கங்கணம் கட்டி வேலை பார்த்திருப்பாங்க போல..நல்லா இருங்கய்யா..எத்தனை பேரு உழைப்பு..எத்தனை கோடி காசு…இதை எடுக்கவா இம்புட்டு அலப்பறை?

ஃபேஸ்புக்ல இதுவரை வடிவேலுவின் ‘போறியா..இல்லை வாய்க்குள்ள கத்தியை விட்டு ஆட்டவா?’ ஸ்டில்லு தான் ஃபேமஸ். இனிமே ‘போறியா..ராஜ்ஜூ பாய்கிட்ட பிடிச்சுக்கொடுக்கவா?’ன்னு ஒரு ஸ்டில் தான் ஃபேமஸ் ஆகப்போது!

நான் விமர்சனம் எழுதலியேன்னு வருத்தப்படாதீங்கய்யா…வருவான்…எவனாவது ஒருத்தன் வருவான். வந்து, ‘இது ஒரு ஒழக சினிமா…இந்தப் படத்தை இப்படிப் பார்க்கக்கூடாது..சீட்ல ரைட் சைடு சாய்ஞ்சுக்கிட்டு, லெஃப்ட் டிக்கியை தூக்கிட்டுப் பார்க்கணும்..இங்க யாருக்கும் அறிவில்லை’-ன்னு சொல்ல ஒருத்தன் வருவான்..அப்படிப்பட்ட புண்ணியவானுக்காகத் தான் நான் வெயிட்டிங்…நீங்களும் வெயிட் பண்ணுங்க.

ராஜ்ஜூ ப்பாய்…ராஜ்ஜூ ப்பாய்!

http://www.aanthaireporter.com/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.