Jump to content

இலங்கைத் தமிழர்கள் தொகையும் புலம் பெயர்ந்தவர்களின் அண்டப் புளுகுகளும்


Recommended Posts

பல்வேறு அமைப்புக்கள் கூறும் நம்பத் தகுந்த அறிக்கையின் ஊடாக பார்க்கும் போது, இலங்கை யுத்தம் மற்றும் சுனாமி பேரிடர் ( 6000 தமிழர்கள் ) போன்றவற்றால் கிட்டத்தட்ட 100, 000 தமிழ் பொது மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள், இதர தமிழ் போராளிகள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர்.

 

--------------------------------------------------

உலகம் முழுவதும் இன்று எவ்வளவு இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதை முறையாக யாரும் ஆராயவில்லை என்றே சொல்லலாம். விடுதலைப் புலி ஆதரவு இயக்கங்கள் பெரும்பாலும் இந்த தொகையை அதிகரித்தே சொல்வார்கள். ஆனால் உண்மையான ஆதாரங்கள் கிடைப்பதில்லை. விக்கிபீடியா போன்ற தளங்களிலும் தவறான தொகையை கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பொய்களில் ஒன்று கனடா, ஐரோப்பாவில் இலங்கைத் தமிழர்கள் லட்சம் லட்சமாக இருப்பதாக கூறுவது. ஆனால் அண்மையக் காலக் மக்கள் தொகைக் கருத்துக் கணிப்புக்கள் இந்தக் கூற்றுகளை பொய்யாக்கிவிட்டுள்ளன. பதிவுலகிலும் இவ்வாறே சிலர் அளந்து கொண்டு இருக்கின்றனர்.

முதலில் ஒரு சிறிய முன்னோட்டத்தைக் காண்போம். இலங்கைத் தமிழர்கள் யார் என்பது குறித்தும், இலங்கையில் உள்ள தமிழர்கள் யார் என்பது குறித்தும் ஒரு சிறிய விளக்கத்தைக் கூறிவிட்டுத் தொடரலாம்.

இலங்கை மக்கள் தொகை மொத்தம் 2 கோடியே 27 லட்சம் ஆகும். இவற்றில் 74.9 % பேர் சிங்கள மொழி மக்கள் ஆவார்கள். மிச்சம் உள்ளோர் தமிழ் மொழி மக்கள் மற்றும் இதர மக்கள் ஆவார்கள். தமிழ் மொழி பேசுவோரின் சதவீதம் 24.6 % பேர் ஆவார்கள். இவர்கள் முறையே இலங்கைத் தமிழர்கள் (11.21%) , இந்திய தமிழர்கள் (4.16%) , இலங்கை முஸ்லிம்கள் (9.23%) என தனித் தனி தேசிய இனங்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இதர பிரிவில் (0.14%) கொழும்புச் செட்டிகள், பரதவர்கள், இந்திய முஸ்லிம்கள், இலங்கை மலாய்கள், ஐரோப்பிய வம்சாவளியினர், கறுப்பினத்தவர்கள் என்போர் உள்ளடங்குகின்றனர்.

இனி இலங்கைத் தமிழர்கள் குறித்து நமது பார்வையை திருப்புவோம். இலங்கைத் தீவை 1815-யில் முழுமையாக பிரித்தானியர் கைப்பற்றிக் கொண்டனர். பிரித்தானியர் இலங்கையை முழுமையாக கைப்பற்ற முன்னர் இலங்கையிn வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேறிய, வாழ்ந்து வந்த தமிழர்களை இலங்கைத் தமிழர்கள் என கூறுகின்றார்கள். ஆரம்ப காலத்தில் இலங்கைத் தமிழர்கள் மலபார்கள், மழவர்கள் என்றே அழைக்கப்பட்டனர். பின்னர் சிலோன் தமிழர்கள் என அழைக்கப்படலாயினர். இன்று இவர்கள் ஸ்ரீலங்காத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

இலங்கைத் தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைப் பூர்விகமாக கொண்டவர்கள். முறையே யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் இவர்கள் வசிக்கின்றனர். வட கிழக்குக்கு வெளியே கொழும்பு, கண்டி உட்பட பல சிங்கள பகுதிகளிலும் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

1981-யில் எடுக்கப்பட்ட இலங்கையின் யுத்தத்திற்கு முந்தைய முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் இலங்கையில் 12.62% பேர் அதாவது, 2,124,000 பேர் வாழ்ந்திருந்தனர். அதற்கு பின்னர் விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்துக்கு ஏற்பட்ட 30 ஆண்டு கால யுத்தத்தினால் பல இலங்கைத் தமிழர்கள் வடகிழக்குக்கு வெளியே சிங்கள மாவட்டங்களிலும், இந்தியாவின் தமிழகத்திலும், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளிலும் அகதிகளாக சென்று குடியேறி யுள்ளனர்.

இன்று இலங்கை யுத்தம் முடிந்த பின் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணிப்பில் 2011-ம் ஆண்டு, 11.21% பேர் அதாவது 2,270,924 லட்சம் பேர் இலங்கைத் தமிழர்கள் இலங்கை முழுவதும் வசிக்கின்றனர். வடக்கு மாகாணத்தில் 987,692 பேரும், கிழக்கு மாகாணத்தில் 609,584 பேரும், மேற்கு மாகாணத்தில் 335,751 பேரும், மத்திய மாகாணத்தில் 128,263 பேரும் பிற சிங்கள மாகாணங்களில் 209,634 பேரும் வசிக்கின்றனர். அதாவது 673,648 பேர் சிங்கள மாகாணத்தில் வசிக்கின்றனர். இது இலங்கையில் வாழும் மொத்த இலங்கைத் தமிழ் மக்களில் 30 % பேர் ஆவார்கள்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் 1,597,276 பேர் வசிக்கின்றார்கள். இது ஒட்டு மொத்த இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர்களில் 70 சதவீதம் ஆகும். வடக்கு மாகாணத்தில் தான் இலங்கைத் தமிழர்கள் மிக அதிகமாக 987,692 பேர் வசிக்கின்றனர். இந்த மாகாணம் ஒன்றில் தான் இலங்கைத் தமிழர்கள் மிகப் பெரும்பான்மையான மக்களாக அதாவது 93.86% ஆக இருக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் 609,584 இலங்கைத் தமிழர்கள் ஆவார்கள். அது அம் மாகாணத்தின் 39.79% ஆக இருக்கின்றது. 1981-யில் இருந்து 2011 வரையில் இலங்கையில் இலங்கைத் தமிழர்களின் தொகை பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. முக்கியக் காரணங்கள் யுத்தத்தில் உயிரிழந்தது, வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றது, பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் பிறப்பு வீதம் வீழ்ச்சி கண்டது போன்ற காரணங்களைச் சொல்லலாம். இந்த முப்பது ஆண்டு காலப் பகுதியில் சிங்கள மக்களின் தொகை 12,437,000 ஆக இருந்து 15,173,820 ஆக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி வீதம் 1.04% ஆக இருக்கின்றது. முஸ்லிம் மக்கள் தொகை 1,249,000 என்பதில் இருந்து 1,869,820 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் வளர்ச்சி வீதம் 1.87 ஆகும்.

1981 - 2001 காலப் பகுதியில் அதிகளவு மக்கள் தொகை வளர்ச்சி கண்ட பகுதிகளாக இருப்பது வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணமே. கிட்டத்தட்ட 2 % வரையில் மக்கள் தொகை வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம் அதே காலப் பகுதியில் இருந்து இலங்கைத் தமிழர்கள் வெளியேறிக் கொண்டும் இருந்துள்ளார்கள். பிறப்பு இறப்பு வீதமும் வடக்கில் கணிசமான உயர்வு நிலையில் இருந்துள்ளது. கிட்டத்தட்ட 14 % முதல் 26 % வரையில் காணப்படுகின்றது. அதே போல வறுமை வீதமும் இலங்கைத் தமிழர்களிடம் ஏனைய சமூகத்தை விட சற்றே அதிகம் காணப்படுகின்றது 22% பேர் வறியவர்கள் ஆவார்கள்.

யாழ்ப்பாணத்தில் 1981-யில் 835, 000 இலங்கைத் தமிழர்கள் இருந்துள்ளனர். இன்று வெறும், 679, 000 ஆக இருக்கின்றது. ஏனைய தமிழ் பேசும் மாவட்டங்களை விடவும் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவு மக்கள் தொகை வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையின் மக்கள் தொகை வளர்ச்சி ஊடாக கணித்தால் இன்று, 10,45, 000 பேராக இருந்திருக்க வேண்டும். ஆனால் கிட்டத்தட்ட 365, 000 பேர் குறைந்துள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் 1981-யில் கிட்டத்தட்ட 211, 000 இலங்கைத் தமிழர்கள் இருந்தனர். இன்று, இது 304, 000 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் ஊடாக கணித்தால் 263, 000 ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால் 39, 000 பேர் அதிகமாக உள்ளனர். இது யாழ்ப்பாணத்தில் இருந்து இங்கு வந்து குடியேறியோரின் தொகையினால் அதிகரித்துள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1981-யில் 410,156 இலங்கைத் தமிழர்கள் இருந்தனர். இன்று 617, 000 தமிழர்கள் இருக்கின்றனர். இலங்கை மக்கள் தொகை வளர்ச்சி வீதம் ஊடாக கணித்தால் 512, 000 தமிழர்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் 617, 000 பேர் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், கிழக்கில் பிறப்பு வீதம் மிக அதிகமாக காணப்படுவதே. தமிழர்கள் மட்டுமின்றி ஏனைய சமூகத்தினரிடமும் அங்கு பிறப்பு வீதம் அதிகமாக உள்ளது. அத்தோடு பெருமளவிலான கிழக்குத் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கோ, வெளிநாடுகளுக்கோ புலம் பெயரவில்லை என்பதும் காரணம்.

மேற்கு மாகாணத்தில் 1981-யில் இலங்கைத் தமிழர்கள் 228,516 பேர் இருந்துள்ளனர். 2011-யில் இலங்கைத் தமிழர்கள் தொகை 335,751 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை மக்கள் தொகை வளர்ச்சி வீதம் ஊடாக பார்த்தால் இலங்கைத் தமிழர்கள் தொகை 285, 000 ஆக இருந்திருக்க வேண்டும் ஆனால் 50, 000 பேர் அதிகமாக உள்ளனர். இவர்கள் பெரும்பான்மையோனோர் வட கிழக்கில் இருந்து குறிப்பாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து குடியேறியவர்கள் ஆவார்கள்.

ஆனால் அதே காலப் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்திய தமிழர்களின் மக்கள் தொகை வீழ்ச்சிக் கண்டுள்ளது. 2,124,000 ஆக இருந்த இலங்கைத் தமிழர்கள் தொகை 2,270,924 ஆக உயர்ந்துள்ள போதும், வளர்ச்சி பெறவில்லை. 1.41% குறைவடைந்துள்ளது. இந்திய தமிழர்கள் 873,000 என்பதில் இருந்து 842,323 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 1.03% வீழ்ச்சி கண்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் மக்கள் தொகை வீழ்ச்சிக் கண்டதன் முக்கிய காரணம் புலம் பெயர்தல் மற்றும் யுத்தகாலத்தில் மரணமடைந்தல் ஆகிய காரணங்கள் ஆகும். இந்திய தமிழர்கள் வீழ்ச்சி கண்டதன் காரணம் கணிசாமானோர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்ததன் காரணமே. இந்தியாவில் வாழும் அகதி முகாம்களில் உள்ளோர் கணிசமானோர் இந்திய தமிழர்கள் ஆவார்கள்.

இலங்கைத் தமிழர்கள் எவ்வளவு பேர் எந்தந்த மாவட்டங்களில் குறைந்துள்ளனர் என்பதை பார்ப்போம். 1981-யில் இலங்கைத் தமிழர்கள் அதிகமானோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் 738,788 பேர் வாழ்ந்திருந்தனர். வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 1,021,006 பேர் வாழ்ந்திருந்தனர். 2011-யில் வடக்கு மாகாணத்தில் 993,741 பேர் வாழ்கின்றனர். இது 1.83% உயர்வடைந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 410,156 ஆக இருந்த இலங்கைத் தமிழர்கள், 2011-யில் 617,295 உயர்வடைந்த போதும், வளர்ச்சி வீதம் 2.27% குறைந்துள்ளது. மேற்கு மாகாணத்தில் 238,728 ஆக இருந்த இலங்கைத் தமிழர்கள் 2011-யில் 450,505 ஆக உயர்வடைந்துள்ளது. 1.65% ஆக அதிகரித்துள்ளது.

இனி இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் வாழ்வோர் குறித்து கணிக்கலாம். அதற்கு முன் இலங்கைத் தமிழர்கள் தொகை எவ்வளவு தோராயமாக இருந்திருக்க வேண்டும் என்பதைக் காண்போம். 1981-யில் 12.62% இருந்தனர். அதே அளவில் இருந்திருந்தால் இன்றைய இலங்கை மக்கள் தொகையான 2 கோடி பேரில் கிட்டத்தட்ட 25 லட்சம் 55 ஆயிரம் பேராவது இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்சமயம் 22 லட்சம் 70 ஆயிரம் பேர் தான் இருக்கின்றார்கள். கிட்டத்தட்ட 280, 000 பேர் குறைந்துள்ளனர். 3 லட்சம் என வட்டமிட்டுக் கொள்வோம்.

இதர சமூகங்களில் பிறப்பு வீதம் மற்றும் போருக்கு முந்தைய இலங்கைத் தமிழர்களின் பிறப்பு வீதம் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிட்டால் ஓரளவு அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர் தொகையை கணிக்கலாம். சரி பிறப்பு இறப்பு வீத மக்கள் தொகை வளர்ச்சியின் ஊடாக இலங்கைத் தமிழர்களின் வளர்ச்சி என்பதை ஒரு சதவீதம் என்று வைத்துக் கொண்டாலும்,

மொத்த இலங்கை மக்கள் தொகை 25 சதவீதமாக வளர்ந்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் தொகையும் அதே அளவு வளர்ந்திருந்தால் 630, 000 பேர் அதிகரித்திருக்க வேண்டும், அப்படியானால் மொத்த தொகை 27 லட்சம் 50 ஆயிரமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் ஒரே மாதிரியான பிறப்பு வீதம் அனைத்து சமூகத்தினரிடமும் காணப்படவில்லை. ஆனாலும் இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அப்படி பார்த்தால் இலங்கையில் தமிழர் தொகை 484,000 பேர் குறைவாக இருக்கின்றது. இதனை ஒரு 5 லட்சம் என வட்டமிட்டுக் கொள்வோம்.

பல்வேறு அமைப்புக்கள் கூறும் நம்பத் தகுந்த அறிக்கையின் ஊடாக பார்க்கும் போது, இலங்கை யுத்தம் மற்றும் சுனாமி பேரிடர் ( 6000 தமிழர்கள் ) போன்றவற்றால் கிட்டத்தட்ட 100, 000 தமிழ் பொது மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள், இதர தமிழ் போராளிகள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். ஆக குறைவடைந்த 3 லட்சம் பேரில் ஒரு லட்சம் பேரை கழித்துக் கொண்டால், மிச்சமுள்ளது 2 லட்சம் பேர் தான். இவர்கள் தான் இலங்கைக்கு வெளியே புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ் அகதிகளாக இருப்பர் என்பது ஊகம். அல்லது 5 லட்சம் என்ற கணக்கின் அடிப்படையில் பார்த்தால் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் தான் வெளியில் அகதிகளாக இருந்திருக்க வேண்டும் அல்லவா. இலங்கை இந்தியத் தமிழர்களும் இதே காலக் கட்டத்தில் சுமார் 40, 000 பேர் குறைவடைகின்றனர். இவர்கள் இந்தியாவுக்கு சென்றுவிட்டதாக அறியப்படுகின்றது. சிலர் அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.

இனி இலங்கைக்கு வெளியில் கிடைக்கப்பெறும் நம்பகமான தரவுகளை சேகரிப்போம். இந்தியாவில் கிட்டத்தட்ட 101, 000 இலங்கைத் தமிழர்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். அகதி முகாம்களுக்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் 16, 000 பேர் வசிப்பதாக தமிழக அரசின் அறிக்கைகள் பல கூறுகின்றன.

தமிழகத்துக்கு அடுத்த நிலையில் நம்பகமான தரவுகள் கிடைப்பது கனடாவில், கனடா புள்ளிவிவர திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் தமிழர்கள் 143, 000 ஆகவே தெரிவிக்கின்றது. 2007-யில் 114, 000 தமிழர்களே இலங்கைத் தமிழர்களாக இருப்பதாக தெரிவித்து இருந்தது.

இதே போல பிரித்தானியா கணக்கெடுப்பின் பிரகாரம் 1 லட்சம் பேர் தமிழ் பேசுவோராக இருக்கின்றனர். பிரித்தானியாவில் அதிகளவு இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற போதும் இந்திய தமிழ் வம்சாவளியினரும் இருக்கின்றனர். ஆகவே இங்கு சிக்கல் உண்டு. இந்த ஒரு லட்சம் பேரும் கூட இலங்கைத் தமிழர்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது கனடா, தமிழ்நாடு, பிரித்தானியா ஆகிய நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களின் தொகையானது கிட்டத்தட்ட 3 லட்சம் 60 பேர் உள்ளனர். ஆஸ்திரேலிய கணக்கெடுப்பின் பிரகாரம் இலங்கைத் தமிழர்களின் தொகை 5,182 என கூறுகின்றது. அது போக பிரான்சு, நெதர்லாந்து, ஜெர்மன், சுவிஸ், இத்தாலி, டென்மார்க், நோர்வே, சுவீடன், நியுசீலாந்து, மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களின் மொத்த தொகையை ஒரு அறுபதாயிரம் என தோராயமாக எடுத்துக் கொண்டால் மொத்த தொகை 4, 20, 000 இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு வெளியே வாழ்வதாக கணக்கிடலாம். இப்போது இலங்கையில் வீழ்ச்சிக் கண்ட இலங்கைத் தமிழர்களின் தொகையும் இதுவும் கிட்டத்தட்ட பொருந்து போகின்றது அல்லவா?! ஆனால் புலம் பெயர் அமைப்புக்களின் கூற்றின் படி பார்த்தால் இதனை கிட்டத்தட்ட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக்கி சொல்கின்றனர். அது நகைப்புக்குரியதாகும்.

http://www.kodangi.net/search/label/விமர்சனம்

Link to comment
Share on other sites

இந்த கோடங்கி இணையக் கோமாளி ஆய்வாளரை நினைத்து அனுதாபப்படத்தான் தோன்றுகிறது.இப்பொழுதெல்லாம் புள்ளி விபரங்கள் மற்றும்  வார்த்தை சாலங்களை காட்டிவிட்டால்  தாங்கள் சிறந்த ஆய்வாளர்கள் என்று சிலர் நினைத்துக்கொள்கிறார்கள்.அதை நம்புவதற்கும்  சிலர் இருக்கிறார்கள்.
இந்த கோடங்கி ஊடகத்தில் இந்த ஆய்வை எழுதிய கோமாளி ஆய்வாளர் பௌத்த சிங்கள பேரிவாத அரசின் புள்ளிவிபரங்களை வைத்துக்கொண்டு யானையை பார்த்த பார்வையற்றவனின் கணக்காத கதை சொல்ல முற்படுகிறார்.
முதலாவது இலங்கைத் தமிழர்கள் வந்தேறு குடிகளல்ல.அவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டே இலங்கைத் தீவில் வாழ்ந்து வரும் பூர்வீக குடி மக்கள்.
சிங்கள இனம்  ஒரு இனமாக தோற்றம் பெறுவதற்கு முன்பே அனுராத புரத்தில் தமிழ் மக்கள் வாழ;ந்ததற்காக தொல்லியல் மற்றும் வரலாற்று சான்றுகள் இருக்கின்றன.அதே போல இலங்கைத் தீவின் பன்வேறு புகதிகளிலும் தொல் தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தும் (பெருங்காற்கால பண்பாடு) தொல்பொருள் சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
சிங்கள இனத்தின் தோற்றம் கிபி. 6ம் நூற்றாண்டுக்கும் 7 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகும்
பிரித்தானியர் ஆட்சிக்காலம் வரை கிழக்கே தேவந்திர முன் எனப்படும் தெவிநுவர முதல் வட மேற்கே சிலாபம் நீர்கொழம்பு வரையிலும்  வடமத்தியிலே மதவாச்சி அனுராத புரம் வரையிலும் தமிழ் மக்கள் வாழந்திருக்கிறார்கள்.19 ம் நாற்றாண்டில் தோற்றம் பெற்ற பௌத்த சிங்கள பேரனவாதம் மேற்கொண்ட பௌத்த சிங்கள மயமாக்கலால் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழந்த தமிழ் மக்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள். செயவர்த்தன பணடாரநாயக்கா சிறமாவோ முதலான சிங்கள ஆட்சியளர்களின் முதாதையர்கள் தமிழர்கள்.இது கதையல்ல உண்மை வரலாறு.
கோடங்கிக்கும்  அதில் ஆய்வு என்ற பெயரில் பௌத்த சிங்கள பேரனிவாத கருத்தியலை வாந்தியெடுக்கும் அய்வாளருக்கும் ஒரு பகிரங்க வேண்டுகோள் முடிந்தால்  இலங்கை தீவின் மாநிடவியல் வரலாறு சிங்கள பௌத்த மயமாக்கலின் வரலாறு என்பவற்றை பௌத்த சிங்கள பேரவாத தளத்தில் இல்லாமல் மக்கள் தளத்தில் நின்று ஆராயுங்கள்
Link to comment
Share on other sites

இவர் ஒரு நவீன சுப்பிரமணிய சாமி. குறிப்பாக இவருக்கு புலம்பெயர் தமிழர்களை கண்ணில் காட்டக் கூடாது. அசல் இந்திய அதிகாரவர்க்க முகம்.

 

இறுதி யுத்தத்தில் இறந்த மக்களும் போராட்டத்தில் இறந்த புலிகளுமே 100 000 யிரத்துக்கும் அதிகம். ஆனால் 35 வருட யுத்ததில் இறந்த அத்தனை பேரும் மற்றும் காணாமல் போனவர்கள் போதாக்குறைக்கு சுனாமியால் இறந்தவர்களும் சேர்த்து நுறாயிரம் என்று ஒரு கணக்கை போடுகின்றார். நான் நினைக்கவில்லை சிங்களவர் கூட இப்படி கணக்குப் போடுவார்கள் என்று. இவரை அறிந்துகொள்ளும் முகமாகவே இந்த பாதிவை இங்கு இணைத்தேன்.

 

Link to comment
Share on other sites

அது சரி இந்த ஆய்வின் நோக்கம் என்ன? இதன் மூலம் ஆய்வாளர் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

Link to comment
Share on other sites

சிங்களவனால் கூட இப்படி சிந்திக்க முடியாது !! இது நிச்சயமாக தமிழன் வேடமிட்டு வாழும் ஒரு தெலுங்கராகத் தான் இருக்கும், இனியாவது இந்த தெலுங்கர்களது திராவிட மாயையை உடைத்து எறிய வேண்டும், இப்போதாவது ஏன் மக்கள் வன்னியில் இறந்த போது கருணாநிதி அமைதியாக இருந்தார் என்று உங்களுக்கு விளங்கும். அதை விட மற்றைய கட்டுரைகள வாசித்தபோது மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி அல்லவா இருக்கிறது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.