Jump to content

எத்தைகைய ஒழுங்குமற்ற எனது கவிதை...!!


Recommended Posts

 
எத்தைகைய ஒழுங்குமற்ற எனது சொற்றொடர்களை நீங்கள் கவிதை எனக் கொள்க.
பின் நவீனத்துவம் எனக் கொண்டாலும் நலமே..!!
 
சாமத்தில் வீடுசேர்ந்து வைகறையில் தலைசாய்ந்து 
நண்பகலில் கண்விழித்து - தாமதமுணர்ந்து தவித்து 
அரக்கபரக்க அங்கம் கழுவி மடித்துவைத்த உடுப்பணிந்து
அழுக்கேறிய இருசக்கரத்திலமர்ந்து 
சாலையோர பெட்டிக்கடை தேடி 
 
சிகரெட்டுடையும்  சிறுசமோசாவையும் சிற்றுண்டியாக்கி 
சிக்னலில் சிக்ககூடாதென சிரம்தாழ்த்தி சிவன் தொழுது 
அண்ணாசாலை நோக்கி வாகனம் பாய 
 
வழியில் குறுக்கிடும் வழிப்போக்கர்களை வைது
வெம்மையால் வியர்வை வழிய - ஓடோடி 
அலுவலகத்தின் வாசல் கதவை திறக்க 
சில்லெனப் பாயும் குளிர்காற்று !!
Link to comment
Share on other sites

சென்னை போன்ற பெரு நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல்லாயிரகனக்கான இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையை அழகாய் கவிதையாய் வடித்துள்ளீர்கள்.

சென்னையின் இளைஞனை எதர்த்தமாய் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

சென்னை போன்ற பெரு நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல்லாயிரகனக்கான இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையை அழகாய் கவிதையாய் வடித்துள்ளீர்கள்.

சென்னையின் இளைஞனை எதர்த்தமாய் காட்டுகிறது.

 

வரவுக்கு நன்றி ராஜன்...

 

பிடிக்குதோ பிடிக்கலையோ தேநீரும் சிகரெட்டும் தவிர்க்க முடியாத தருணங்கள் அவை..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை போன்ற நெரிசலான இடங்களில் சயிக்கிள் தான்  சரியான நேரத்துக்கு , இடத்துக்கு கொண்டுபோய் சேர்க்கும்...!

 

கவிதைக்கு நன்றி  நன்பரே...!! :)

Link to comment
Share on other sites

சில்லெனப்பாயும் குளிர்காற்று....தாமதத்தால்...சுள்ளென்று பாயும்..முகாமைத்துவர் என்று எழுதாமல் விட்டீர்களே...கவிதைக்கு சொல் கூட தேவையில்லை..அவள் பெயர் போதும்...என்கிற கவிஞனைக்கூட ரசிக்கிறார்கள்..சொல்லுக்குள் பொருள்...சந்தம்..நடை எளிமை..எல்லாம் வைத்திருக்கிறீர்கள்..இதை ஏன் கவிதை இல்லை என்று யாரும் சொல்லப்போகிறார்கள்..ஆதித்ய இளம்பிறையன்..உங்கள் பெயர் அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சாமத்தில் வீடுசேர்ந்து
வைகறையில் தலைசாய்ந்து 
நண்பகலில் கண்விழித்து
தாமதமுணர்ந்து தவித்து 
 
அரக்கப்பரக்க அங்கம் கழுவி
மடித்துவைத்த உடுப்பணிந்து
அழுக்கேறிய இருசக்கரத்திலமர்ந்து 
சாலையோரம் பெட்டிக்கடை தேடி 
 
சிகரெட்டும்  சிறுசமோசாவும்
சிற்றுண்டியாக்கி 
சிக்னலில் சிக்கக்கூடாதென
சிரம்தாழ்த்தி சிவன் தொழுது 
அண்ணாசாலை நோக்கி
வாகனம் பாய ..........
 
வழியில் குறுக்கிடும்
வழிப்போக்கர்களை வைது
வெம்மையால்
வியர்வை வழிய - ஓடோடி 
அலுவலக வாசல் திறக்க 
சில்லெனப் பாயும் குளிர்காற்று !!
 
இப்போ கவிதையாச்சு இளம்பிறையன்
Link to comment
Share on other sites

நன்றி சுவி, விகடகவி மற்றும் சுமேரியர்.
 
 

சில்லெனப்பாயும் குளிர்காற்று....தாமதத்தால்...சுள்ளென்று பாயும்..முகாமைத்துவர் என்று எழுதாமல் விட்டீர்களே...கவிதைக்கு சொல் கூட தேவையில்லை..அவள் பெயர் போதும்...என்கிற கவிஞனைக்கூட ரசிக்கிறார்கள்..சொல்லுக்குள் பொருள்...சந்தம்..நடை எளிமை..எல்லாம் வைத்திருக்கிறீர்கள்..இதை ஏன் கவிதை இல்லை என்று யாரும் சொல்லப்போகிறார்கள்..ஆதித்ய இளம்பிறையன்..உங்கள் பெயர் அழகு

 
"சில்லெனப்பாயும் குளிர்காற்று....
தாமதத்தால் சுள்ளென்று பாயும் முகாமைத்துவர்"
 
நீங்கள் முடித்த விதம் அழகாக இருக்கிறது.
 

 

சாமத்தில் வீடுசேர்ந்து
வைகறையில் தலைசாய்ந்து 
நண்பகலில் கண்விழித்து
தாமதமுணர்ந்து தவித்து 
 
அரக்கப்பரக்க அங்கம் கழுவி
மடித்துவைத்த உடுப்பணிந்து
அழுக்கேறிய இருசக்கரத்திலமர்ந்து 
சாலையோரம் பெட்டிக்கடை தேடி 
 
சிகரெட்டும்  சிறுசமோசாவும்
சிற்றுண்டியாக்கி 
சிக்னலில் சிக்கக்கூடாதென
சிரம்தாழ்த்தி சிவன் தொழுது 
அண்ணாசாலை நோக்கி
வாகனம் பாய ..........
 
வழியில் குறுக்கிடும்
வழிப்போக்கர்களை வைது
வெம்மையால்
வியர்வை வழிய - ஓடோடி 
அலுவலக வாசல் திறக்க 
சில்லெனப் பாயும் குளிர்காற்று !!
 
இப்போ கவிதையாச்சு இளம்பிறையன்

 

 

ஒன்றன் கீழ் ஒன்று .. அடடே கவிதையாயிற்று !! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.