Jump to content

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6

sathiri

Recommended Posts

டிபிகல் சாத்திரி கதை .மிக அருமை .எனக்கு சமகாலத்தில் சோபாவுக்கு போட்டி என்றால் சாத்திரிதான்.

நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

இல்லை

அர்ஜுன் அவர் பி(ற)ரபல புலம்பெயர் எழுத்தாளர் அவர் கூட சாத்திரியாரை எப்பிடி நீங்கள் ஒப்பிட முடியும் அவர் போல வரணும் எண்டால் புலிகளை கழுவி ஊத்தணும் புலிகள் தான் எல்லாத்துக்கும் காரணம் எண்டு சொல்லணும் ஏதும் செய்யாத அப்பாவியை முள்ளு கம்பி கூண்டில் அடைத்தாங்க எண்டு சொல்லணும் முன்னரங்குகளில் கொண்டே பங்கர் வெட்ட விட்டாங்க எண்டு சொல்லணும் புலிகள் பிள்ளை பிடி காரர் எண்டு சொல்லணும் எழுத்துகளில் இடைக்கிடை ஆண் பெண் உறுப்புகளை குறிக்க தமிழில் உள்ள நல்ல தூசன வார்த்தைகள் பாவிக்கணும் தாயை பழிக்குமாபோல நல்லசொற்களை எழுதணும் மனைவியை பறி கொடுத்தவன் பாடசாலை செல்லும் மாணவியை கூட்டி கொண்டு ஓடனும்... தொண்ணூறுகளின் முற்பகுதிகளிலேயே (90 -95) புலிகள் ஆட்லெறி அடித்தார்கள் என்ற உண்மையான வரலாறுகளை எடுத்து விடனும் சிங்களவன் நல்லவன் எல்லாமே இவங்களால தான் வந்தது எண்டு சொல்லாமல் சொல்லணும் இதுகள் எல்லாம் இல்லாமல் எப்பிடி உங்கள் பார்வையில் புலம்பெயர் இ(ள)லக்கிய முன்னோடிகளில் ஒருவரான அவர் கூட சாத்திரியாரை ஒப்பிடுவீங்க உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க அர்ஜுன் ...

Link to comment
Share on other sites

  • Replies 303
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனசாட்சியை தொட்டு சொல்லுங்க ...அது என்றால் என்ன என்று திருப்பி கேட்டால் பதிலை வைத்திரும்

அருமை, இது தானா காதல், காம எல்லோ அதிகமா இருக்கு சாத்தண்ணா?

சாறி, காளி,...இவர்களிடம் அடிவாங்காமல் படித்து இருக்க முடியுமா, காஞ்சடை இழுத்து வைச்சு மேசைக்குள் தலையை குனிய வைச்சு தானே சாத்துதல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட,நீங்க கணக்கில வீக்கா,சாத்திரியார்! :icon_mrgreen:

உங்களைப் போலவே என்னாலும், அந்தப் பெண்ணின் செயலைப் புரிந்து கொள்ள முடியவில்லை!

இதைத் தான் 'தமிழ்ப்பண்பாடு' என்று அழைக்கிறார்கள் போலும்!

கதையை நகர்த்திய விதம், அருமை சாத்திரியார்! நன்றிகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணே அசத்திறீங்கள்...உங்களை மாதிரி கதைகள் எல்லாம் எழுத ஆசைதான் ஆனால் எனக்கு எழுத தெரியுதில்லையே........... :rolleyes: :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணே அசத்திறீங்கள்...உங்களை மாதிரி கதைகள் எல்லாம் எழுத ஆசைதான் ஆனால் எனக்கு எழுத தெரியுதில்லையே........... :rolleyes: :rolleyes: :rolleyes:

இதென்ன அசோக் கதை...நீங்களும் தட்டச்சுங்கோ நினைவுகள் நெஞ்சினில் சுட்டு கதையாக வரும். :lol:

Link to comment
Share on other sites

இதென்ன அசோக் கதை...நீங்களும் தட்டச்சுங்கோ நினைவுகள் நெஞ்சினில் சுட்டு கதையாக வரும். :lol:

அதுக்கு கலர் புல்லான கடந்த காலம் இருக்க வேண்டுமே. :D

நாங்கள் எல்லாம் சுத்த வேஸ்ட்.

கலக்குறேள் சாத்திரி.

Link to comment
Share on other sites

அதுக்கு கலர் புல்லான கடந்த காலம் இருக்க வேண்டுமே. :D

நாங்கள் எல்லாம் சுத்த வேஸ்ட்.

ஈஸ் பொய்தானே சொல்றீங்கள் ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த வயது எல்லோரது நிலையும் இதுதான்.

எனக்கும் இப்படியொரு நிலைதான் வந்தது. எனக்கு முன்னால் 4 அக்காக்கள் 83 கலவரத்தால் பாதிக்கப்பட்ட அண்ணா கலவரத்தால் எல்லாம் இழந்த குடும்பநிலை அத்துடன் காதல் . நான் குடும்பத்தை தெரிந்தெடுத்தேன். காதலை இழந்ததற்காக சாத்திரியும் கவலைப்படுகிறார். குடும்பத்துக்காக நாட்டைவிட்டுவந்த நானும் கவலையோடு தான் வாழ்கின்றேன்.

இதற்கு முடிவு இல்லை. சக்கரம் போன்ற வாழ்க்கையில் எல்லாமே சுழன்றடிக்கும்.

அழகான அருமையான நிஐக்காதலை எழுதிய சாத்திரிக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்..

Link to comment
Share on other sites

குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த வயது எல்லோரது நிலையும் இதுதான்.

எனக்கும் இப்படியொரு நிலைதான் வந்தது. எனக்கு முன்னால் 4 அக்காக்கள் 83 கலவரத்தால் பாதிக்கப்பட்ட அண்ணா கலவரத்தால் எல்லாம் இழந்த குடும்பநிலை அத்துடன் காதல் . நான் குடும்பத்தை தெரிந்தெடுத்தேன். காதலை இழந்ததற்காக சாத்திரியும் கவலைப்படுகிறார். குடும்பத்துக்காக நாட்டைவிட்டுவந்த நானும் கவலையோடு தான் வாழ்கின்றேன்.

விசுகு உங்கள் காதலையும் எழுதுங்கோ. வாசிக்க காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

இல்லை

அர்ஜுன் அவர் பி(ற)ரபல புலம்பெயர் எழுத்தாளர் அவர் கூட சாத்திரியாரை எப்பிடி நீங்கள் ஒப்பிட முடியும் அவர் போல வரணும் எண்டால் புலிகளை கழுவி ஊத்தணும் புலிகள் தான் எல்லாத்துக்கும் காரணம் எண்டு சொல்லணும் ஏதும் செய்யாத அப்பாவியை முள்ளு கம்பி கூண்டில் அடைத்தாங்க எண்டு சொல்லணும் முன்னரங்குகளில் கொண்டே பங்கர் வெட்ட விட்டாங்க எண்டு சொல்லணும் புலிகள் பிள்ளை பிடி காரர் எண்டு சொல்லணும் எழுத்துகளில் இடைக்கிடை ஆண் பெண் உறுப்புகளை குறிக்க தமிழில் உள்ள நல்ல தூசன வார்த்தைகள் பாவிக்கணும் தாயை பழிக்குமாபோல நல்லசொற்களை எழுதணும் மனைவியை பறி கொடுத்தவன் பாடசாலை செல்லும் மாணவியை கூட்டி கொண்டு ஓடனும்... தொண்ணூறுகளின் முற்பகுதிகளிலேயே (90 -95) புலிகள் ஆட்லெறி அடித்தார்கள் என்ற உண்மையான வரலாறுகளை எடுத்து விடனும் சிங்களவன் நல்லவன் எல்லாமே இவங்களால தான் வந்தது எண்டு சொல்லாமல் சொல்லணும் இதுகள் எல்லாம் இல்லாமல் எப்பிடி உங்கள் பார்வையில் புலம்பெயர் இ(ள)லக்கிய முன்னோடிகளில் ஒருவரான அவர் கூட சாத்திரியாரை ஒப்பிடுவீங்க உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க அர்ஜுன் ...

சாத்திரி அண்ணையின் சில அரசியல் சார்த்த கட்டுரையிலும் நேராக இல்லாவிட்டிலும் சுற்றி சில தவறுகளை சுட்டிக் காட்டி இருக்கார். ஆனால் யாருக்கு பயந்தோ( மனைவியாக இருகலாம்) அவர் அரசியலை பற்றி தற்ப்போது எழுதுவதில்லை...

காதல் காமம் கையிலடி என வயதுவந்தவர்களுக்கு என்ற கதைகளை எழுதிக் கொண்டு இருக்கார் ஆனால் சாத்திரி அண்ணையின் அரசியல் பற்றிய கட்டுரையில் சோபா சக்தி போல மூக்கில் சளிவடிய மற்றவன் கண்ணில் பூளை என்ற மாதிரி மகா கேவலமாக இருக்காது( அரசியல் கட்டுரை)

விசுகு உங்கள் காதலையும் எழுதுங்கோ. வாசிக்க காத்திருக்கிறோம்.

குடும்பத்தில் குழப்பம் கொண்டுவரலாமா?

கூட இருந்தே குழிபறிக்கலமா?

Link to comment
Share on other sites

குடும்பத்தில் குழப்பம் கொண்டுவரலாமா?

கூட இருந்தே குழிபறிக்கலமா?

தம்பி இப்பிடிச் சொல்லலாமோ ? இனி விசுகுவின் மனைவி விசுகுவை ஒண்டும் செய்யப்போறதில்லை. விசுகுவும் தனது மனைவிக்கு எதையும் மறைக்காமலே திருமணம் செய்தார். அந்தநாள் ஞாபகங்களில் ஒன்றாக அந்தக் கதையையும் விசுகு பதிவு செய்வதில் தப்பில்லையே ? :lol:

Link to comment
Share on other sites

தம்பி இப்பிடிச் சொல்லலாமோ ? இனி விசுகுவின் மனைவி விசுகுவை ஒண்டும் செய்யப்போறதில்லை. விசுகுவும் தனது மனைவிக்கு எதையும் மறைக்காமலே திருமணம் செய்தார். அந்தநாள் ஞாபகங்களில் ஒன்றாக அந்தக் கதையையும் விசுகு பதிவு செய்வதில் தப்பில்லையே ? :lol:

பெண்களை நம்பி பழைய கதைகளை சொல்ல முடியாது.

ஒரு நாள் அன்பா விளையாட்டாக சொல்வார்கள்

அடுத்த நாள் ஏதும் கோவம் வரும் போதும் சொல்வார்கள் ஏன் வீண்வம்பு :)

Link to comment
Share on other sites

பெண்களை நம்பி பழைய கதைகளை சொல்ல முடியாது.

ஒரு நாள் அன்பா விளையாட்டாக சொல்வார்கள்

அடுத்த நாள் ஏதும் கோவம் வரும் போதும் சொல்வார்கள் ஏன் வீண்வம்பு :)

நல்லாத்தான் நொந்து போனியள் ? ஆனால் காதல்கதையை தினமும் இராகமாக பாடினால் நீங்கள் கிட்டிப்புள்ளுகளால் காயமடைந்திருக்க வாய்ப்புள்ளது.

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

அருமை, இது தானா காதல், காம எல்லோ அதிகமா இருக்கு சாத்தண்ணா?

சாறி, காளி,...இவர்களிடம் அடிவாங்காமல் படித்து இருக்க முடியுமா, காஞ்சடை இழுத்து வைச்சு மேசைக்குள் தலையை குனிய வைச்சு தானே சாத்துதல்

காளியிட்டையும் வாங்கியிருக்கிறீங்கள் போலை உடையார். நான் படிக்கேக்கை காளி நூலக பொறுப்பிலை இருந்தவர். விவசாயம் படிப்பித்த சிறி வாத்தியை தெரியுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளியிட்டையும் வாங்கியிருக்கிறீங்கள் போலை உடையார். நான் படிக்கேக்கை காளி நூலக பொறுப்பிலை இருந்தவர். விவசாயம் படிப்பித்த சிறி வாத்தியை தெரியுமா??

எனக்கு வகுப்பு வாத்தியாக இருந்தவர்.மிழகாய் கன்டு தக்காளி கன்டு எல்லாம் தருவார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஆக்கம் சாத்திரியார்.

ஏன் உங்களால யுரேக்காவை விளங்கிக்கொள்ள முடியவில்லை?

சிம்பிளா சொல்லுறதெண்டால் அவவுக்கு உங்களில இருந்த நம்பிக்கை போட்டுது.

Link to comment
Share on other sites

அற்புதமாக எழுதுகிறீர்கள். இன்று இப்பதிவில் பலவற்றை வாசித்தேன். 'நட்பு' என்ற தலைப்பில் அமைந்துள்ளதும் மிகச்சிறப்பாய் உள்ளது, மிகவும் கனதியாகவும் அற்புதமாகவும் உள்ளது. யுரேகா பாலு மகேந்திரா படம் பாத்தமாதிரி இருக்கு. யுரேக்கா ஆரென்றே தெரியாதபோதும் அப்பாத்திரத்திரம் மூடுபனி சோபா போன்று மனதுள் விரிகிறது. நுpச்சயமாக உங்கள் நாவலிற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளியிட்டையும் வாங்கியிருக்கிறீங்கள் போலை உடையார். நான் படிக்கேக்கை காளி நூலக பொறுப்பிலை இருந்தவர். விவசாயம் படிப்பித்த சிறி வாத்தியை தெரியுமா??

ஆமாம் நூலகத்தில் கதைத்து அடி வாங்கினான், நானும் விவசாயம் தான் எடுத்தனான் ஆனா ரீச்சர் தான் படிப்பித்தவா, எனக்கு சிறி வாத்தியை ஞாபகமில்லை இப்ப

Link to comment
Share on other sites

அற்புதமாக எழுதுகிறீர்கள். இன்று இப்பதிவில் பலவற்றை வாசித்தேன். 'நட்பு' என்ற தலைப்பில் அமைந்துள்ளதும் மிகச்சிறப்பாய் உள்ளது, மிகவும் கனதியாகவும் அற்புதமாகவும் உள்ளது. யுரேகா பாலு மகேந்திரா படம் பாத்தமாதிரி இருக்கு. யுரேக்கா ஆரென்றே தெரியாதபோதும் அப்பாத்திரத்திரம் மூடுபனி சோபா போன்று மனதுள் விரிகிறது. நுpச்சயமாக உங்கள் நாவலிற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்.

நன்றி

கருத்திற்கு நன்றிகள் இன்னுதொருவன் இப்படி ஆடிக்கொருகாக்கா அமாவாசைக்கு ஒருக்கா எண்டாலும் இந்தப் பக்கம் வாறது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்! "கவர்ச்சி,காதல்,காமம்,காட்சி,நட்பு காணாமல் காய்ஞ்சுவறண்டு கவிண்டு வந்தபாதை" எண்டு இன்னொரு திரியை நான் பத்தவைக்கலாமெண்டு யோசிக்கிறன் அதைப்பற்றி என்ன நினைக்கிறியள்?ஏனெண்டால் உந்த காதல்,கவர்ச்சி,காமம்,காட்சி எல்லாருக்கும் சரிவராதெல்லே :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சாத்திரி, உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் திறந்து விட்டாச்சு. உங்களா நீக்கியவற்றை வந்து ஒட்டுங்கோ

Link to comment
Share on other sites

கடந்துவந்தபாதை.

யூலை மாதம் 83 ம் ஆண்டு வழைமைபோலவே விடிந்தது அவனும் அந்த ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சை எடுக்கவிருப்பதால் நடத்தப்படும் விசேட வகுப்பிற்கு செல்வதற்காக பாடசாலைக்கு புறப்பட்டு போயிருந்தான். பெடியள் நேற்று இரவு தின்னவேலிச் சந்தியிலை ஆமி றக்கை பிரட்டிப் போட்டாங்களாம். ஆமி கனக்க செத்திட்டாங்களாம். சந்தியில் செய்தியொன்று வதந்தியாக பரவிக்கொண்டிருந்தது. செத்த ஆமிக்காரரின் தொகையை ஆளிற்கொன்றாய் மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார்கள். குண்டு வெடிச்ச இடத்திலை தண்ணி வாற அளவு பெரிய கிடங்கு எண்டும் ஒருத்தர் சொன்னார். எதுக்கும் பள்ளிக்கூடம் முடிய சைக்கிளை தின்னவேலிப்பக்கம் ஒருக்கா விட்டுப்பாப்பம் எண்டு நினைத்தபடி பள்ளிக்கூடத்தடி சந்திக்கு வந்திருந்தான் .யாழ்ப்பாணம் ரவுணுக்கை ஆமிக்காரர் சனத்துக்கு அடிக்கிறாங்களாம் என்று சைக்கிளில் வந்தவர்கள் சொல்லிக்கொண்டு போனார்கள்.அங்கு அவனது மற்றைய பள்ளி சினேதங்களும் அந்த சம்பவத்தை பற்றித்தான கதைச்சு கொண்டு நின்றார்கள். டேய் செய்தி தெரியுமோ யாராயிருக்கும் என்றார்கள் . தெரியேல்லையடா உவங்களுக்கு வேறை வேலையில்லை உப்பிடித்தான் சொட்டிப்போட்டு எங்கையாவது ஓடிடுவாங்கள் பிறகு அவங்கள் வந்து நிக்கிறவன் போறவன் எல்லாரையும் இழுத்துக்கொண்டு போவாங்கள். எதுக்கும் மத்தியானம் தின்னவேலிப்பபக்கம் போய் பாக்கலாம். என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு இருநூறு மீற்றர் தூரத்தில் சிவா சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். சிவா வாறான் அவனிட்டையும் ஏதும் புதினம் கொண்டருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மினபஸ் வந்துகொண்டிருந்தது. அதே நேரம் மாதகல் பக்கமிருந்து சண் மினிபஸ்சும் வந்து கொண்டிருந்தது யாழ்ப்பாணம் ரவுணில் ஆமி அடிக்கிறான் என்கிற செய்தியை எதிரேயாழ்ப்பாணம் நோக்கி போகும் பஸ்சிற்காக சொல்வதற்காக அவர் கோணடித்து வேகத்தை குறைத்தபொழுது எதிரே வந்துகொண்டிருந்த சண்பஸ் நின்றது அதிலிருந்து கீழே குதித்த ஒரு ஆமிக்காரன் மற்றைய பஸ்சை நோக்கி சட்டதோடு மட்டுமல்லமல் றோட்டில் நின்றிருந்தவர்களையும் நோக்கி சுடத்தொடங்கினான். அதே நேரம் பஸ்சில் இருந்த மற்றைய இராணுவத்தினரும் யன்னலால் கண்டபாட்டிற்கு சுட்டனர். சண் பஸ்சில் வந்தது ஆமி அவங்கள்தான் சுடுகிறாங்கள் என்று தெரிந்து திகைத்து நின்றவன் சைக்கிளை போட்டுவிட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்கட்டைகளிற்கு பின்னால் பாய்ந்து பதுங்கிக் கொண்டான் சனங்கள் அலறும் சத்தமும் யார் எங்கே போவது என்று தெரியாமல் சிதறிஓடியபடி இருந்தனர்.

எல்லாமே ஒரு சில நிமிடங்கள்தான் சண்பஸ் யாழ்ப்பாணம் நோக்கி போய்க்கொண்டிருந்தது. மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தான் சனங்கள் ஓடிக்கொண்டேயிருந்தனர். சிலபேர் நிலத்தில் விழுந்து கிடந்தனர். தோள்பட்டையில் காயமடைந்த வயதான ஒருத்தர் தேத்தண்ணி கடைக்குள் தண்ணி தண்ணி எண்டு கத்தியபடியே ஓடிவந்து மயங்கி விழுந்தார் இரத்தம் சீறிக்கொண்டிருந்தது. ஒரு வினாடியில் இந்த உலகத்திலிருந்து யாரோ அவனை யாரோ வேறொரு உலகத்திற்கு தூக்கி எறிந்து விட்டதுபோன்றதொரு பிரமை. துப்பாக்கியால் சுடுவதையும் மனிதர்கள் விழுந்து இறந்து போவதையும் அன்றுதான் முதன் முதலில் நேரே கண்களால் கண்டிருந்தான்.ஒரே ஓலமும் இரத்தமுமாயிருந்த வீதியில் தன்னை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முயன்றுகொண்டிருந்தான் கை காலெல்லாம் உதறியது விழுந்து கிடந்தவர்களிடையே அவனது வகுப்புத் தோழன் சிவாவும் ஒருத்தன். அவனது வெள்ளைச் சீருடை சிவப்பாகிப் போயிருந்தது.இவன் சண்டிலிப்பாய் மாகியம்பதி(மாசியப்பிட்டி) யை சேர்ந்தவன்.அவனோடு சேர்த்து வேறும் மூன்று மாணவர்கள் பொதுமக்கள் சிலரும் இறந்து போயிருந்தனர்.சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியவன் மருதடி பிள்ளையார் கோயில் தேர்முட்டி படிகளில் போய் குந்திக்கொண்டிருந்தான். அவனைச்சுற்றி நின்று கதைத்த மனிதர்களெல்லாம் மங்கலாகத் தெரிந்ததோடு சத்தம் மெதுவாக கேட்டது. சண்டிலிப்பாயிலையும் கனபேரை சுட்டுப் போட்டிருக்காம் மாதகல்லையிருந்து வெளிக்கிட்ட ஆமி றோட்டு றோட்டா சுட்டுகொண்டு போறாங்கள்.சைக்கிளை எடுத்து சண்டிலிப்பாய் பக்கமாக மிதித்தான் கட்டுடை சந்தியில் ஒருத்தரின் சடலம் கிடந்தது சண்டிலிப்பாய் சந்தியை கடந்தான் ஒரு மினி பஸ் நின்றிருந்தது அதில் ஏழுஉடல்களிற்கு மேல் கிடந்தது கொஞ்சத் தூரம் தள்ளி தலைசிதறி இறந்து கிடந்த ஒரு பெண்ணின் முளையை காகம் ஒன்று கொத்தி இழுத்துக்கொண்டிருந்தது.ஊர் இளைஞர்கள் உடலங்களை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர். ஊரெல்லாம் இதேபேச்சுத்தான்.

அன்றைய காலத்தில் ஊரில் யாராவது ஒரு கிழவனோ கிழவியோ எப்படா போய்ச்சேரும் எண்டு எதிர்பார்த்துக்கொண்டிருந்து அவர் செத்துப் போனாலே ஊர் ஒரு கிழைமையாவது சோகமாயிருக்கும் அப்படியான காலகட்டத்தில் இந்தக் கொலைகள் யாழ்ப்பாணத்தையே உலுக்கியிருந்தது. அவன் மனதில் மட்டும் ஒரே கேள்வி திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது ஏன்?? இவர்கள் கொல்லப்படுமளவிற்கு செய்த குற்றம் என்ன?? மறுநாள் மாகியம்பதிக்கு நண்பனின் மரணவீட்டிற்கு சென்றிருந்தான் அவனது அம்மா அவனது நண்பர்களை ஒவ்வொருத்தராய் கட்டிப்பிடித்து பாருங்கோ ஜயோ இவன் என்னடா செய்தவன் உங்களை மாதிரித்தானே பள்ளிக்கு வந்தவன். இவனுக்கு மட்டும் ஏன் இப்பிடி ?? கடவுளே உனக்கு கண்இல்லையா என்று மண்ணை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்து அவர் போட்ட ஓலம் பலநாட்களாகியும் காதிற்குள்ளேயே தங்கிவிட்டிருந்தது. தொடர்ந்து கொழும்பிலிருந்து செய்திகள் வெலிக்கடை என்று தொடங்கி மலையகம் அனுராதபுரம்வரை படுகொலைச் செய்திகள்தான். இலங்கை வானொலியிலும் றூபவாகினியிலும் தமிழ் செய்திகள் வாசித்தவர்கள் கூட காணாமல் போயிருந்தனர். காங்கேசந்துறையில் கப்பலில் தமிழர்கள் வந்திறங்கத் தொடங்கியிருந்தனர். அப்பொழுது பல இளவயதுக்காரர்களைப் போலவே அவனும் யோசித்தான் இவையெல்லாம் ஏன்?? தடுக்க முடியாதா??அடிக்கிறவனை திருப்பி அடிக்க முடியாதா?? முடியும் என்று ஊரில் சில இளைஞர்கள் சொல்லித் திரிந்தனர் நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பதான் அவங்களுக்கு புத்திவரும் என்றனர்.. அவனும் முடிவெடுத்தான் இயக்கதில் சேரலாம்.

00000000000000000000000000000

அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பிற்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டு போக்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண சமூகம் எப்பொழும் சாதி கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடைபோடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர் சாதிக்காரனாகவும் கல்வி கற்றவருமாகவும் இருந்தார். இவற்றிக்கு முன்னுரிமை கொடுத்தும். அதே நேரம் சந்ததியாரின் ஆளுமை மிக்க அரசியல் வேலைகள் பேச்சாற்றல் என்பவற்றாலும் புளொட் பெரும் வளர்ச்சியை கண்டிருந்ததுஇவனிற்கு புளொட்டிற்கு போக முடியாது காரணம் அவனது உறவுகள் பலர் புளொட்டின் முக்கியமானவர்களாக இருந்தனர் இவனை கண்டாலே போய் ஒழுங்கா படியடா என்று குட்டி அனுப்பிவிடுவார்கள். அடுத்த தெரிவு ஈ.பி.ஆர்.எல்.எவ். நவாலிப்பகுதியில் பகுதியில் போய் ஜேம்சை சந்தித்தான். வாங்கோ தோழர் என்று வரவேற்றவன் அவனது கையில் செஞ்சீனம்.கியூபாவிடுதலைப் போராட்டம் எண்டு இரண்டு புத்தகங்களை குடுத்து இதை படிச்சிட்டு வாங்கோ தோழர். அதிலை சில கேள்வியள் கேட்பன் சரியா பதில் சொன்னால் உங்களை பயிற்சிக்கு அனுப்பலாம். அடிக்கடி எங்கடை அரசியல் கூட்டத்துக்கும் வாங்கோ என்று வழியனுப்பிவைத்தான். கோயில் மடத்தில் வந்து குந்தியிருந்து செஞ்சீனத்தை புரட்டினான். அதை விளங்கிக் கொள்ள இன்னொரு தமிழ் அகராதி தேவைப்பட்டது. கியூபா புரட்சியை தூக்கிப்பார்தான் . புத்தகம் மொத்தமாயிருந்தது.

என்ன செய்யலாம் சுதுமலை பக்கம் போய் புலிகளின் அன்புவை சந்தித்தான். இடுப்பிலிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்த அன்பு இதுதான் கிளிப் இதை இழுத்திட்டு கையை நல்லா மேலை தூக்கி கிறிக்கற் பந்து எறியிறமாதிரி எறிஞ்சிட்டு விழுந்து படுக்கவேணும். என்றவன் இடுப்பு பக்கம் இருந்து எடுத்த றிவோலவரை அவன் கையில் கொடுத்து இப்பிடி நீட்டி ஒற்றைக்கண்ணை மூடி தலையை சரிச்சு குறிவைந்து இந்த ரிகரை அமத்தவேணும். செஞ்சீனத்தைவிட அது இலகுவாக அவனிற்கு புரிந்தது. கியூபா விடுதலை புதக்கத்தை விட பாரம் குறைந்தாகவும் இருந்தது. அன்புவின் அரசியலே பிடித்திருந்தது. எப்ப றெயினிங்குக்கு அனுப்புவியள்??. முதல் எங்களோடை சேந்து வேலையள் செய் அதே நேரம் இங்கையே வினோத் உனக்கு பயிற்சியளும் தருவான்.எல்லாத்துக்கும் முதல் நீ சோதினையை எடுத்தால் பிறகுதான் றெயினிங்குக்கு அனுப்பலாம்.

0000000000000000000000000000000000

பரந்து விரிந்து கிடந்த கொளத்தூர் மணிஅவர்களின் பண்ணையின் ஒரு பகுதிதான் அவர்களது பயிற்சி முகாம். முதல்நாள் பயிற்சி பற்றிய சில விளக்கங்களுடன் பயிற்சிக்கான முதல் விசிலை பயிற்சிஆசிரியர் ஊதினார். உடம்பில் எங்கெங்கு எத்தினை மூட்டுக்கள் இருந்ததோ அத்தனையும் நோவெடுக்கத்தொடங்கியது. ஏனடாவந்தோம் என்றிருந்தது. அவனுக்கு மட்டுமில்லை அங்கை பயிற்சியெடுக்க வந்த அனைவருக்குமே இதுதான் நிலைமை. சிலபேர் தப்பியோடலாமா எண்டு யோசிச்சினம். ஆனால் அது முடியாது அந்த ஒதுக்குப்புறமான கிராமபகுதிலை எங்கை ஓடினாலும் பிடிபடவேணும். . அப்பிடி பிடிபட்டால் தண்டனையை பற்றி சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்தில் பயிற்சி களைப்பு எல்லாரும் உடைனையே நித்திரையாயிடுவாங்கள். சிலநான் செல்லத்தான் பிரச்சனை தொடங்கியது.அப்பதான் அந்த ஆசிரியர் வந்து உனக்கு பிரச்சனையெண்டால் வந்து என்ரை இடத்திலை படுஎன்றார்.அவர்தான் அந்த முகாமில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பற்றி விளக்கும் பாடம் நடத்துபவர். மற்ற பயிற்சி வாத்திமார் மாதிரி கடுமையாக நடக்கமாட்டார். பயிற்சி ஆசிரியர்களிற்கு தனித்தனியாக கொட்டில்கள் இருக்கும். வசதியாக படுக்கலாமெண்டு அவனும் அவரின் கொட்டிலிற்குள் போய் படுத்தான். பின்னை காலத்தில் அவன் இயக்கத்தில் வெடிபொருட்பிரிவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்ததில் அவரின் பங்கு முக்கியமானது. அதற்காக அவனை தயார்படுத்தியவர் அவரே.

நிருவாகத்தின் வேண்டுகோளிற்கிணங்க இப்பதிவில் மாற்றங்களை செய்து இணைத்துள்ளேன்

Link to comment
Share on other sites

நிருவாகத்தின் வேண்டுகோளிற்கிணங்க இப்பதிவில் மாற்றங்களை செய்து இணைத்துள்ளேன்

நன்றி சாத்து... .. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சாத்திரி மீண்டும் இணைத்துள்ள கதை ஏற்கனவே நிர்வாகத்தால் நீக்கப்பட்டதாகும்.

அவரால் அல்ல.

(பல கள உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க).

நிர்வாகம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவே நினைக்கின்றேன். வேறு எதுவும் எழுதுவதற்கில்லை. :( :( :(

வணக்கம் விசுகு அவர்களே இங்கு யாழ் நிருவாகத்திற்கு சிக்கல் கொடுகக்கூடாது என்பதற்காக மேலும் சில பகுதிகளை நீக்கியுள்ளேன். ஆனால் நிருவாகம் ஏதோ விரல்சூப்பும் குழந்தை போலவும் அதற்கு நான் இனிப்பு வாங்கி கொடுத்து விட்டு அது ஏமாந்திருந்த வேளையில் எனது பதிவை மீண்டும் எழுதியிருப்பது என்பது சரியான நகைச்சுவையாக இருக்கின்றது. அது மட்டுமல்ல இங்கு எனது பதிவில் நீக்கக்கூடிய அளவிற்கு அப்:படி என்ன மோசமாக எழுதியிருக்கிறேன் என்பதனையும் அதன் காரணத்தால் தான் அந்தப் பதிவினை நீக்கவேண்டும் என்றும் நீங்கள் அந்த வசனங்களை அடிக்கோடிட்டு அதனால் யார் எங்கே எப்படி பாதிக்கப் படுகிறார்கள் என்று ஒரு பகிரங்க விவாதத்திற்கு வரத் தயாரா?? இங்கு விவாதிப்பதில் உங்களிற்கு சங்கடங்கள் ஏதும் இருப்பின் நாற்சந்தி பகுதியில் யாழ் உறவுகள் மட்டும் பார்கும்படி நாங்கள் விவாதத்தினை வைப்போம்.; அதில் நீங்கள் மட்டுமல்ல அந்த பதிவினை நீக்கச்சொல்லி நிருவாகத்திற்கு குடைச்சல் கொடுத்த அனைவரும் பங்கெடுக்கலாம். நீக்குவதற்கான தகுந்த காரணங்களை நீங்கள் முன்வையுங்கள் நானும் ஆதாரங்களுடன் என்தரப்பு வாதத்தினை முன் வைக்கிறேன்..

விசுகு நீங்கள் யாழில் அடிக்கடி எழுதுகின்ற வசனம் நாங்கள் நியை போசவேணும் நிறைய விவாதிக்கவேணும் என்கிற வசனத்தை உங்களை நோக்கியே திருப்பி விடுகிறேன். இததை சவாடலாக ஏற்:காமல் சவாலாகவே யாழில் உங்களிடம் வைக்கிறேன். அதற்காக தனித்திரி திறப்பதற்கு யாழ் நிருவாகத்திடமும் அனுமதி கோருகிறேன்.தமிழ் தேசியத்தின் போர்வைக்குள் ஒழிந்திருந்து கல்லெறிதலும் குனியும்வரை குத்துவதற்கு காத்திருத்தலும் வேண்டாம். என் பதிவை நீக்கக்கோரிய அனைவரும் வாருங்கள் நான் தயார். நீங்கள்????????????????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.