Jump to content

சென்னையின் டேஸ்ட்டான ஹோட்டல்கள்


Recommended Posts

27-1380262256-hsb.jpg

 

ஹோட்டல் சரவணபவன்
 
காலையில் வாக்கிங் போயிட்டு வந்து சரவணபவன்ல காப்பி குடிக்கிற சுகமே சுகந்தான். தேன் போல தித்திக்கிற காப்பி மாதிரியே நம்ம ஊரு பஜ்ஜி, சொஜ்ஜிலயிருந்து, பானிபூரி, கட்லட், பாம்பே அல்வா, அமெரிக்கன் பீஸா வரைக்கும் ஒரே அமர்க்களம்தான். இதுபோக இன்னும் இன்னும் பல பதார்த்தங்களை அறிமுகப்படுத்திக்கிட்டே இருக்காங்க. சென்னையின் பல பகுதிகளில் இதன் கிளைகள் இருந்தாலும் வடபழனி முருகன் கோயில்ல சாமி தரிசனம் பண்ணிட்டு அதுக்கு மிக அருகிலேயே இருக்குற சரவணபவன்ல குடும்பத்தோட சாப்பிட்டு பாருங்க உங்களால அத மறக்கவே முடியாது!
 
 
27-1380262331-anjappar.jpg
 
அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல
 
செட்டிநாடு சமையல பிடிக்கதாவங்க யாராவது இருக்க முடியுமா?...அந்த காரைக்குடி மணம் சென்னையில அடிக்கிற இடம்தான் நம்ம அஞ்சப்பர் ஹோட்டல். சைவமோ, அசைவமோ எதுவா இருந்தாலும் நல்லா காரசாரமா வளைச்சுகட்டி அடிக்கலாம் இங்க. நாட்டுக்கோழி ரசமா இருந்தாலும், ஸ்வீட் கார்ன் சூப்பா இருந்தாலும் அஞ்சப்பர் சமையல் தனிரகம்தான்.
 

27-1380262364-thalappakatti.jpg

 

திண்டுக்கல் தலப்பாக்கட்டி
 
உலகம் முழுக்க ஒரு பிரியாணிக்கு மவுசு இருக்குன்னா அது கண்டிப்பா தலப்பாக்கட்டி பிரியாணிதாங்க. திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் மற்ற உணவகங்களை போல் அல்லாமல் சீரக சம்பாவில் பிரியாணி செய்கிறார்கள். இது மசாலா பொருட்களின் சுவையினை முழுவதுமாக உறிஞ்சிக்கொள்வதால் ருசி பிரமாதமாக இருக்கிறது. அதோடு சுவைமிக்க கன்னிவாடி ஆட்டு இறைச்சி வேறு!...அடாடாடாடா என்னத்த சொல்ல?!!...வந்து சாப்பிட்டு பாருங்க!!!

 
27-1380262397-ponnusamy.jpg
 
பொன்னுசாமி ஹோட்டல்
சென்னையில் பொன்னுசாமி ஹோட்டல் இருக்கற பக்கம் போனீங்கனாலே உள்ளயிருந்து வர்ற வாசனை தன்னாலே உங்கள உள்ள இழுத்திரும். செட்டிநாடு, சைனீஸ், தந்தூரி, கான்டினென்டல் என்று பூந்து விளையாடுறாங்க பொன்னுசாமி ஹோட்டலில். அதனால இங்க எப்பப்பாத்தாலும் கூட்டம் ஜேஜேன்னுதான் இருக்கும். அதுவும் சனி, ஞாயிறுல நீங்க பொன்னுசாமி ஹோட்டல் போறீங்கன்னா முன்பதிவு செஞ்சிக்கறது நல்லது.
 
27-1380262434-nammavvb.jpg
 
நம்ம வீடு வசந்தபவன்
நம்ம வீடு வசந்தபவன்னு சும்மா பேரு வைக்கலங்க..நிஜமாவே நம்ம வீட்டு சமையல் மாதிரி சுத்தபத்தமா, அக்கறையோட செஞ்ச உணவு வகைகளை அன்போட பரிமாறுறாங்க இங்க..சுடச்சுட மணக்க மணக்க இந்த சமையல சாப்பிடும்போது நம்ம அம்மாவோட கைப்பக்குவம் மாதிரியே இருக்குதுன்னு தோணும்!
 
27-1380262473-rathnacafe.jpg
 
ரத்னா கஃபே
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயில் எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு ரத்னா கஃபேவும் பிரபலம். அப்படியே ஜாலியா ஜிலுஜிலுன்னு மெரினா பீச்சுல காத்து வாங்கிட்டே நடந்து வந்து ரத்னா கஃபேயில காப்பி குடிக்கிறது அடடா தேவாமிர்தம்தான் (2010-ஆம் ஆண்டு NDTV அவார்ட் வாங்கிய காப்பி). அதோட சுடச்சுட இட்லி சாம்பாரும் சாப்பிட்டு பாருங்க அப்பறம் குட்டிபோன பூனை மாதிரி அங்கேயேதான் சுத்திகிட்டு இருப்பீங்க!
 
27-1380262292-buhari.jpg
 
புஹாரி ஹோட்டல்

சென்னையின் பழமையான ஹோட்டல்களில் ஒன்று புஹாரி ஹோட்டல். அசைவ பிரியர்களின் நாடி நரம்புகளை சுண்டி இழுக்கும் புஹாரி சிக்கன தெரியாதவங்க சென்னையில ஒருத்தரும் இருக்க முடியாது. புஹாரிங்கற பேரச் சொன்னாலே நாக்குல எச்சு ஊறுற அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப பிரபலம். ஒரு வாட்டி இங்க வந்து பாருங்க அதுக்கப்புறம் உங்க பொண்டாட்டி சமையலயே மறந்துடுவீங்க. அவங்களும் சமைக்கிற தொந்தரவு இல்லாம ஜாலியா வீட்ல சீரியல் பாக்கலாம்ல?!!

 

http://tamil.nativeplanet.com/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே குறிப்பிட்டுள்ள பல ஓட்டல்கள் முதலில் மக்களுக்கு அறிமுகமான போது தரமும் சுவையும் இந்ததென்னவோ உண்மைதான், ஆனால் நாள்பட நாள்பட வாடிக்கையாளர்கள் அதிகரித்ததும் தங்களின் குறுக்குவழி வியாபார புத்தியை காட்டி கொள்ளையடிக்கிறார்களென்பதே உண்மை.

 

தற்பொழுது தரமும், சுவையும் சுமார்தான், ஏனெனில்  வியாபர யுக்தி என்ற பெயரில் தன்னுடைய பிரபல பெயரை மற்றவர்களுக்கு பயன்படுத்திகொள்ள அனுமதிக்கும் ஃப்ரான்சைஸ்(Franchise)  முறை. புதிதாக ஓட்டல் தொழில் தொடங்குபவர்கள், மேற்கண்ட ஓட்டல் உரிமையாளருக்கு வருடம் இவ்வளவு தொகை என ஒப்பந்தம் செய்துகொண்டு தன்னுடைய உணவு தயாரிக்கும் முறையை பயன்படுத்திக்கொள்ளாமென ஒப்பந்தம் செய்து வெற்றி பெற்ற பெயரில் போலிகளை சந்தைகளில் புகுத்தி மக்களை ஏமாற்றுவது.

 

பிரபலமான கே.எஃப்.ஸி யும் அப்படியே!

மேற்கூறிய ஓட்டலகளில் முதன்முதலில் எங்கே தொழில் முறையில் வெற்றி பெற்றனரோ அந்த இடத்தில் வேண்டுமானால் ஓரளவு தரமும், சுவையும் இருக்கலாம். மற்ற கிளைகள் அனைத்தும் சுத்த மோசம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.