Jump to content

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய பயணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று தியாகி முத்துக்குமார் நினைவு நாளில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பித்து பல ஐரோப்பிய நாடுகளை கடந்து 10.3.2014 அன்று ஐ.நா ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் சென்றடையும் .

எதிர்வரும் மார்ச் 3ஆம் நாள் தொடக்கம் 28ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 25ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. (இதன்போது, ஈழத்தமிழர்கள் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், அடக்குமுறைகள் மற்றும் யுத்த மீறல்கள் குறித்து சிறீலங்காவிற்கு எதிராக சர்வதேச நாடுகளால் பல்வேறு அழுத்தங்கள், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பொருட்டு எதிர்வருதம் மார்ச் மாதம் 10ஆம் திகதி சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் ஐரோப்பா வாழ் தமிழ்மக்கள் அனைவரும் எழுச்சிகொண்டு, மக்கள் போராட்டம் ஒன்றை நிகழ்த்துவதற்காக தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கிறோம்.

ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று தியாகி முத்துக்குமார் நினைவு நாளில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பித்து பல ஐரோப்பிய நாடுகளை கடந்து 10.3.2014 அன்று ஐநா ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் சென்றடையும் .

அதேபோல் நீதிக்கான பிரச்சார தமிழ் வான் 24.2.2014 அன்று ஓஸ்லோ நகரில் நார்வே பாராளுமன்றத்துக்கு முன்பாக ஆரம்பித்து பல ஐரோப்பிய நாடுகளை கடந்து 10.3.2014 ஐநா ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் சென்றடையும் .

எமது சுதந்திரத்துக்காக மண்டியிடாது தொடர்ந்து ஓயாது போராடிவரும் தமிழர்களாகிய நாம், சர்வதேச நாடுகள் ஒன்றுகூடுகின்ற இந்த காலப்பகுதியில் இனவழிப்புக்கு உட்பட்டுவரும் எமது மக்களுக்கான நீதியை வலியுறுத்தியும், எமது வரலாற்றுத் தார்மீக உரிமையை வலியுறுத்தியும் பல்வேறு எழுச்சி மிகு மக்கள் போராட்டங்களை ஓயாது தொடர்ந்து நிகழ்த்தவேண்டியிருப்பது இன்றைய வரலாற்றுத் தேவையாக இருக்கின்றது.

அழிக்கப்பட்டுவரும் எமது தேசிய இனத்தை காப்பதற்காக தமிழர்களுடைய தார்மீக வரலாற்று உரிமையை, தமிழ்த் தேசியத்தை, தமிழரின் இறைமையை தமிழர்களாகிய நாமே போராடி மீட்கவேண்டியிருப்பது என்பது ஒவ்வொரு தமிழனும் தனது இனத்துக்காக செய்யவேண்டிய ஒப்பற்ற கடமையாகும்! உலகிலே நாம் மிகவும் தொன்மையான, வீரமான, தனித்துவமான கலாச்சார பண்பாட்டு நெறிமுறைகளைக் கொண்ட ஓர் தேசிய இனம். நாம் எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரனால் வீரமூட்டி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறை.

'தார்மீக அடிப்படையில் நாம் உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட இலட்சியம் நியாயமானது. சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனியரசு அமைக்கும் தகுதி பெற்றவர்கள். அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது'.

என்ற எமது தேசியத் தலைவரின் சத்திய வாக்குக்கு அமைய, எமது தலைமை எமக்குக் காட்டுகின்ற வழியில், உலக ஓட்டங்களுக்கு இசைவாக, புவி அரசியல் அசைவுகளை நுணுகி ஆராய்ந்து, எமது தேசிய விடுதலைப் போராட்த்துக்கான பாதையில், காலம் எமக்கிட்ட பரிமாணத்தில் நாம் தொடர்ந்து போராடிவருகிறோம். 

எமது அன்புக்குரிய தமிழ் மக்கள் கடந்த காலங்களில் நிகழ்த்திய ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்கள் வாயிலாக உலக அரங்கில் தமிழர்களுடைய தேசிய விடுதலை அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை உங்களால் அவதானிக்க முடிகிறது. முள்ளிவாய்க்காலை அடுத்து, எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்டு, உலக அங்கீகாரத்துக்காக ஒரு வெற்றிகரமான பரிமாணத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

இது எமது மக்களின் போராட்டம். எமது மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டம். மக்கள்சக்தி வாய்ந்த போராட்டங்களை எந்த சக்தியாலும் அடக்கிவிட முடியாது என்னும் நியதி உண்டு. நாங்கள் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக எழுச்சிபெற்று, எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் காட்டிய பாதையில் இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம்! நிச்சயமாக வீரமிகு போராட்டங்களை நிகழ்த்தி சுதந்திர தமிழீழம் மீட்போம்!

எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால், ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஜெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தாயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.

பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மக்களாகிய நாம் இந்த மக்கள் சக்திப் போராட்டங்களை நிகழ்த்தவுள்ளோம் :

1. பல தசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி.

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.'

walk%20for%20justice%202014.jpg

http://www.sankathi24.com/news/37730/64//d,fullart.aspx

Link to comment
Share on other sites

வழி 5 நீங்கள் வாழும் நாடுகளில் அதிகமாக பார்க்கபடும் ஊடங்கங்களில் உங்கள் நாடுகளில் நடக்கும் இலங்கை சம்பந்தமான ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்களின் செய்திகள் வரும்படி பார்த்துக்கொள்ளுங்கள்... முன்பாக ஒவ்வொரு ஊடங்களுக்கும் விளக்கமான அறிவித்தல் கடிதங்களை இலத்திறன்(ஈ-மெயில்) மூலமாக இலகுவாக,அல்லது தபால் மூலம் அனுப்பி பின்னர் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களின் வருகைகளை உறுதிப்படுத்துங்கள். வரும் செய்தி நிருபர்களுக்கும் நல்ல விளக்கங்கள் கொடுக்கப்படல் வேண்டும்.. இதனை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.. இவற்றை செய்து பாருங்கள் நாளடைவில் அந்த நாடுகளின் எல்லாமக்களுக்கும், அரசு,எல்லா அரசியற்கட்சிகளுக்கும் இலகுவில் செய்திகள் சென்றடையும்... ஊர்வலங்கள் நடக்கும் போது எதற்காக இது என்பது துண்டுப்பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்தல் வேண்டும் அல்லது முயற்சிகள் வீண்விரையமாகும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உந்த‌ இஸ்கோர‌ பார்த்து  ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது   கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை......................................... ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................
    • வணக்கம் வாத்தியார்.........! பெண் குழு : சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க சிலு சிலு சிலு சா்க்கர நிலவே மாலைய மாத்திக்க { மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுள வச்சுக்க } (2) பெண் : { கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தொியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ } (2) பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம் பிறை முகம் பாா்த்தது கொஞ்சம் பெண் : ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது மூங்கில் காடென்று மாறினள் மாது பெண் : ஒரு மின்சாரம் பாா்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன் பெண் : என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை உன்னை இழந்துவிட்டால் எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன் உன்னைப் பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் ......! --- கண்ணாளனே எனது கண்ணை ---
    • உண்மைதான். ஆனால் ஏமாற்றப்படுகிறார் என்றே நான் நினைக்கிறேன். நிச்சயமாக தன்நலத்தின் பால் இதை அவர் செய்வதாக நான் நினைக்கவில்லை. அப்படி என்றால் என்றோ செய்திருக்கலாம்.
    • சா......என்னா அடி ........ நாய்  பேய் அடி அடிக்கிறார்கள்....... பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கு...... ஷாரூக்கானைப் பார்க்கத்தான் கஷ்டமாய் இருக்கு....... ஆனால் நானும் கே.கே.ஆர் தான் வெல்லும் என்று பதிந்து இருக்கின்றேன்.........!  😂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.