Jump to content

நடக்க வேண்டியதைப் பார்ப்போம் – தினமணி கட்டுரை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடக்க வேண்டியதைப் பார்ப்போம் – தினமணி கட்டுரை [ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 10:40 GMT ] [ அ.எழிலரசன் ] dinamani.jpgபுலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. 

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் 30 March 2013 இரா. சோமசுந்தரம் எழுதிய கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தமிழீழம் அமைவது குறித்து இலங்கைத் தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா. மன்றத்தில் இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும், நட்புநாடு இல்லை என்று கூற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழர் உணர்வுகளுக்கு இதமாக இருப்பினும் இது சாத்தியமாகுமா என்ற சந்தேகத்துடன்தான் இப்பிரச்னையை அணுக வேண்டியுள்ளது. 

பொதுவாக்கெடுப்பு பல காரணங்களால் பல நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. அவை சட்டத்திருத்தம், அரசியலமைப்பு நிர்ணய சட்டத்தை மாற்றியமைத்தல், நாட்டின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுதல், புதிய வரிகள் என பல்வேறு காரணங்களுக்கானவை. 

ஒரு நாடு, இன்னொரு நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்ளலாமா என்பதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 1962-இல் சிங்கப்பூரை மலேசியாவுடன் இணைத்துக் கொள்ளலாமா, இணைத்துக்கொண்டாலும் தனிஅடையாளத்துடன் செயல்படலாமா என்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இணைத்துக்கொள்ளலாம் என்று பெரும்பான்மை வாக்கெடுப்பு கிடைத்தபோதிலும்கூட, சிங்கப்பூர் இணைப்பை மலேசியா துண்டித்துக்கொண்டுவிட்டது என்பது வேறுவிஷயம். 

இருப்பினும், ஒரு நாடு, தன்னில் ஒரு பகுதியைப் பிரித்து தனிநாடு அமைக்கும் முயற்சிக்காக பொதுவாக்கெடுப்பு நடத்துமா? நடத்த விரும்புமா? ஒரு அண்டை நாடு இன்னொரு நாட்டை பிளக்க முடியுமா? 

நாம் காஷ்மீரில் என்ன செய்தோம்? ஐ.நா பாதுகாப்புக் குழு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர் எந்த நாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க வசதியாக அங்கே இரு நாடுகளும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதானே! இதுவரை அது சாத்தியப்படவில்லை. அப்படியிருக்க, இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் கொடுக்க இந்தியாவுக்கு தார்மிக உரிமை இல்லை. ஆகவே இதுகுறித்து இந்தியா எந்த முயற்சியும் எடுக்காது. இது தெரிந்தும்கூட அரசியல் நடத்துவதற்காக இத்தகைய தீர்மானங்களை தமிழக அரசு கொண்டுவருகிறது. 

மேலும், ஒரு நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றால், அந்த மண்ணின் மைந்தர்கள்தான், குடியுரிமை பெற்றவர்கள்தான் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்கள் இதுபற்றி குரல் எழுப்பாமல் உள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. அதிலும்கூட மிகப்பெரிய போலித்தனம். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தா. பாண்டியன், சி.மகேந்திரன், டி.ராஜா ஆகியோர் தமிழீழத்துக்கும் ஆதரவாக இருக்கின்றனர். பாஜக-வில் இல.கணேசன் இது குறித்து ஆதரவு கருத்து தெரிவிக்கிறார். ஆனால், இவர்களின் தலைமை என்ன கருதுகிறது?. 

திமுக எழுப்பிய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தீர்மானமாக கொண்டுவருவதற்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்குகொண்ட சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக), குருதாஸ் குப்தா (சிபிஐ) ஆகியோர் கூறியதென்ன? "இது திமுகவுக்கும் ஐமுகூ-வுக்கும் இடையிலான பிரச்னை. இதற்கு ஏன் அனைத்துக் கட்சிக்கூட்டம்?' என்பதுதான். திமுகவின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமாகக் கொண்டுவருவதற்கும்கூட இந்த தேசியக் கட்சித் தலைமைகள் உடன்படவில்லை. ஆனால், மாநிலத் தலைவர்கள் பெருங்குரல் எழுப்புகின்றனர். தலைமையிடம் மதிக்காத இக் குரல் என்ன வலிமை சேர்க்கும்? 

இலங்கையில் தமிழீழம் உருவாக்குவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையினர் தாங்கள் வசிக்கும் நாடுகளின் குடியுரிமை பெற்று இரண்டாம், மூன்றாம் தலைமுறையினராக வாழ்கின்றனர். இந்தப் புதிய தலைமுறையில் மீண்டும் இலங்கை திரும்ப விருப்பம் உள்ளவர்கள் எத்தனை லட்சம் பேர்? இவர்களில் வாக்களிக்கும் தகுதியுடன் இன்னமும் இலங்கைக் குடியுரிமையைத் தக்க வைத்திருப்போர் எத்தனை லட்சம் பேர்? 

குறைந்தபட்சம் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத் தரவும் அக்கறை கொள்ளாத, ஆர்வம் இல்லாத தமிழக அரசியல்வாதிகள், எவ்வாறு அவர்களுக்காக தனிஈழம் பெற்றுத் தருவார்கள்? 

புலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இலங்கைத் தமிழப் பத்திரிகைகள் என்ன எழுதுகின்றன என்பதாகிலும் இவர்களுக்குத் தெரியுமா? 

கொடுங்கோலன் ராஜபட்ச ஆட்சியில் இலங்கைத் தமிழனால் பேசக்கூட முடியாதே, பிறகு அவன் எப்படித் தனி ஈழத்துக்காகக் குரல் எழுப்ப முடியும்? என்கிற கேள்வி 

நியாயம்தான். ஆனால், அந்த அளவுக்குத் தெம்பு இல்லாமல் கிடப்போரை தெம்பூட்டுவதற்கான முயற்சிகளைச் செய்வதுதான் தொப்புள்கொடி உறவுகளின் பணியாக இருக்க முடியுமே தவிர, அவர்களை மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக இருக்கும். குரல்வளை நெரிக்கப்பட்டு, அச்சத்திலும் வேதனையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் அனுப்பிய குறைவான நிவாரணங்கள்கூட போய்ச் சேர்வதில்லை என்கிறார்கள். அவர்களுக்கு அமைதியும் அதிகாரம் கிடைக்க இந்தியா உதவக் கோருவது மட்டுமே நாம் செயல்படுத்த வேண்டிய திட்டம்! நட்பு நாடாக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். 

பன்னாட்டு விசாரணை, மனித உரிமை மீறல் குறித்து இந்தியா தீர்மானம் கொண்டுவருவது என்பது மட்டுமே சாத்தியம். தமிழீழம் கோரிக்கையை இந்திய அரசு ஏற்காது. அதற்கான பொதுவாக்கெடுப்பும் கேட்காது. 

அதனால், தமிழீழம் குறித்து இலங்கையில் வாழும் தமிழர் பேசுவதுதான் முறையாக இருக்கும். அவர்கள் எழுப்பும் குரலுக்குத்தான் உலகம் செவிமடுக்கும்.

Link to comment
Share on other sites

இறுதியாக ஐ.நா. ஆதரவுடன் ய்லகம் வாழ் தென் சூடான் மக்கள் வாக்களித்து சூடானில் இருந்து பிரிந்து கொண்டனர்.

கொசாவா மக்கள் மேற்குலக ஆதவுடன் மட்டுமே பிரிந்து தனி நாடாகியுள்ளனர்.

எனவே, ஐ.நா. சாசனப்படி தமிழர்களும் பிரிய உரிமையும் வரலாற்று தேவையும் காரணமும் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களும், அரசியல் கட்சிகளும் இந்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், இந்தியாவை மேற்கு நாடுகளுடன் ஒன்று சேர்ந்து கொசோவா பிரிந்தது போல் தமிழ் ஈழம் பெற்று கொடுக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

Link to comment
Share on other sites

பொது வாக்கெடுப்பு ஆபத்தானது, உதாரணமாக கிழக்கு இலங்கையில் வைத்தால் 2/3 ஆல் தோல்வி அடையும்(முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் எதிர்த்து வாக்களிப்பர்), மற்றும் தமிழ் மக்கள் ஏன் வீண் வம்பு என வீட்டிலே முடங்கலாம், அதை விட ஒட்டுக் குழுக்கள் கள்ள வாக்களிக்கலாம், அதை விட கொழும்பில் முதலீடுகள் மேற்கொண்ட தமிழரும் இதற்கு எதிராகவே வாக்களிப்பர். எனவே வாக்கெடுப்பு ஆபத்தானது,இதை விட யூகொஸ்லாவிய பிரிந்த மாதிரி வாக்கெடுப்பு இல்லாமல் பிரிக்க வேண்டும்.(பொஸ்னியா,ஸ்லொவினியா,கிரோஸியா மாதிரி)

பொதுவாக வாக்கெடுப்பு முன்வைக்கப்படும் பொழுது ஒரு முன்னைய ஆண்டிலும் அதற்கு முன்னரும்  அங்கு வாழ்ந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே அண்மையில் குடியேறியவர்கள் மறுக்கப்படுவார்கள்.

உதாரணத்திற்கு ஆண்டு 1983 என நிர்ணயிக்கபட்டால் அதற்கு முன்னர் அங்கு வாழ்ந்தவர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் வாக்களிக்க உரிமை தரப்படுவார்கள்.

இது தான் சர்வதேச நியதி.

புலம்பெயர் தமிழர்களும் தமது ஈழத்து குடிமகன் என்ற உரிமையை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்த சுயநலவாதிகளாக இருக்க மாட்டார்கள்.

நடக்க வேண்டியதைப் பார்ப்போம் – தினமணி கட்டுரை [ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 10:40 GMT ] [ அ.எழிலரசன் ] dinamani.jpgபுலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. 

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் 30 March 2013 இரா. சோமசுந்தரம் எழுதிய கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தமிழீழம் அமைவது குறித்து இலங்கைத் தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா. மன்றத்தில் இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும், நட்புநாடு இல்லை என்று கூற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழர் உணர்வுகளுக்கு இதமாக இருப்பினும் இது சாத்தியமாகுமா என்ற சந்தேகத்துடன்தான் இப்பிரச்னையை அணுக வேண்டியுள்ளது. 

பொதுவாக்கெடுப்பு பல காரணங்களால் பல நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. அவை சட்டத்திருத்தம், அரசியலமைப்பு நிர்ணய சட்டத்தை மாற்றியமைத்தல், நாட்டின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுதல், புதிய வரிகள் என பல்வேறு காரணங்களுக்கானவை. 

ஒரு நாடு, இன்னொரு நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்ளலாமா என்பதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 1962-இல் சிங்கப்பூரை மலேசியாவுடன் இணைத்துக் கொள்ளலாமா, இணைத்துக்கொண்டாலும் தனிஅடையாளத்துடன் செயல்படலாமா என்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இணைத்துக்கொள்ளலாம் என்று பெரும்பான்மை வாக்கெடுப்பு கிடைத்தபோதிலும்கூட, சிங்கப்பூர் இணைப்பை மலேசியா துண்டித்துக்கொண்டுவிட்டது என்பது வேறுவிஷயம். 

இருப்பினும், ஒரு நாடு, தன்னில் ஒரு பகுதியைப் பிரித்து தனிநாடு அமைக்கும் முயற்சிக்காக பொதுவாக்கெடுப்பு நடத்துமா? நடத்த விரும்புமா? ஒரு அண்டை நாடு இன்னொரு நாட்டை பிளக்க முடியுமா? 

நாம் காஷ்மீரில் என்ன செய்தோம்? ஐ.நா பாதுகாப்புக் குழு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர் எந்த நாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க வசதியாக அங்கே இரு நாடுகளும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதானே! இதுவரை அது சாத்தியப்படவில்லை. அப்படியிருக்க, இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் கொடுக்க இந்தியாவுக்கு தார்மிக உரிமை இல்லை. ஆகவே இதுகுறித்து இந்தியா எந்த முயற்சியும் எடுக்காது. இது தெரிந்தும்கூட அரசியல் நடத்துவதற்காக இத்தகைய தீர்மானங்களை தமிழக அரசு கொண்டுவருகிறது. 

மேலும், ஒரு நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றால், அந்த மண்ணின் மைந்தர்கள்தான், குடியுரிமை பெற்றவர்கள்தான் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்கள் இதுபற்றி குரல் எழுப்பாமல் உள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. அதிலும்கூட மிகப்பெரிய போலித்தனம். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தா. பாண்டியன், சி.மகேந்திரன், டி.ராஜா ஆகியோர் தமிழீழத்துக்கும் ஆதரவாக இருக்கின்றனர். பாஜக-வில் இல.கணேசன் இது குறித்து ஆதரவு கருத்து தெரிவிக்கிறார். ஆனால், இவர்களின் தலைமை என்ன கருதுகிறது?. 

திமுக எழுப்பிய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தீர்மானமாக கொண்டுவருவதற்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்குகொண்ட சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக), குருதாஸ் குப்தா (சிபிஐ) ஆகியோர் கூறியதென்ன? "இது திமுகவுக்கும் ஐமுகூ-வுக்கும் இடையிலான பிரச்னை. இதற்கு ஏன் அனைத்துக் கட்சிக்கூட்டம்?' என்பதுதான். திமுகவின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமாகக் கொண்டுவருவதற்கும்கூட இந்த தேசியக் கட்சித் தலைமைகள் உடன்படவில்லை. ஆனால், மாநிலத் தலைவர்கள் பெருங்குரல் எழுப்புகின்றனர். தலைமையிடம் மதிக்காத இக் குரல் என்ன வலிமை சேர்க்கும்? 

இலங்கையில் தமிழீழம் உருவாக்குவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையினர் தாங்கள் வசிக்கும் நாடுகளின் குடியுரிமை பெற்று இரண்டாம், மூன்றாம் தலைமுறையினராக வாழ்கின்றனர். இந்தப் புதிய தலைமுறையில் மீண்டும் இலங்கை திரும்ப விருப்பம் உள்ளவர்கள் எத்தனை லட்சம் பேர்? இவர்களில் வாக்களிக்கும் தகுதியுடன் இன்னமும் இலங்கைக் குடியுரிமையைத் தக்க வைத்திருப்போர் எத்தனை லட்சம் பேர்? 

குறைந்தபட்சம் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத் தரவும் அக்கறை கொள்ளாத, ஆர்வம் இல்லாத தமிழக அரசியல்வாதிகள், எவ்வாறு அவர்களுக்காக தனிஈழம் பெற்றுத் தருவார்கள்? 

புலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இலங்கைத் தமிழப் பத்திரிகைகள் என்ன எழுதுகின்றன என்பதாகிலும் இவர்களுக்குத் தெரியுமா? 

கொடுங்கோலன் ராஜபட்ச ஆட்சியில் இலங்கைத் தமிழனால் பேசக்கூட முடியாதே, பிறகு அவன் எப்படித் தனி ஈழத்துக்காகக் குரல் எழுப்ப முடியும்? என்கிற கேள்வி 

நியாயம்தான். ஆனால், அந்த அளவுக்குத் தெம்பு இல்லாமல் கிடப்போரை தெம்பூட்டுவதற்கான முயற்சிகளைச் செய்வதுதான் தொப்புள்கொடி உறவுகளின் பணியாக இருக்க முடியுமே தவிர, அவர்களை மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக இருக்கும். குரல்வளை நெரிக்கப்பட்டு, அச்சத்திலும் வேதனையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் அனுப்பிய குறைவான நிவாரணங்கள்கூட போய்ச் சேர்வதில்லை என்கிறார்கள். அவர்களுக்கு அமைதியும் அதிகாரம் கிடைக்க இந்தியா உதவக் கோருவது மட்டுமே நாம் செயல்படுத்த வேண்டிய திட்டம்! நட்பு நாடாக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். 

பன்னாட்டு விசாரணை, மனித உரிமை மீறல் குறித்து இந்தியா தீர்மானம் கொண்டுவருவது என்பது மட்டுமே சாத்தியம். தமிழீழம் கோரிக்கையை இந்திய அரசு ஏற்காது. அதற்கான பொதுவாக்கெடுப்பும் கேட்காது. 

அதனால், தமிழீழம் குறித்து இலங்கையில் வாழும் தமிழர் பேசுவதுதான் முறையாக இருக்கும். அவர்கள் எழுப்பும் குரலுக்குத்தான் உலகம் செவிமடுக்கும்.

முக்குடைபட்டிருக்கும் ஹிந்தியக் கயவர்களுக்கு ஆதரவாக இருக்க இந்த கட்டுரையாளர்  இரா. சோமசுந்தரம் கடுமையாக வித்தியாசமான அணுகு முறையில் முயற்சித்துள்ளார்.

ஈழத்து நலனில் பெரும் அக்கறை உடையவர் போல காட்டிக் கொள்ளும் (முதலைக் கண்ணீர் விடும்) இவர்,  கட்டுரையின் இறுதிப் பகுதியை வாசிக்கும் போது  அவரது  சுயரூபம் வெளிப்படுகிறது. அவர் யாரின் கைக்கூலியாக இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் என்பதை விளங்குவது பெரும் சிரமம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.