Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் + பாசிபருப்பு சாம்பார்

ponal.jpg

பச்சரிசி - 400 கிராம்

பாசிபருப்பு- 100 கிராம்

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம்- 1 ஸ்பூன்

முந்திரிபருப்பு- 10

நெய் அல்லது டால்டா - 25 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய் முறை

அடுப்பில் சாதம் வடிப்பது போல ஒரு பானையில் 1 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.. கொதிவந்தவுடன் அதில் அரிசையும் பருப்பையும் நன்றாக கலந்து போடவும்.. சாதம் பாதி வெந்திருக்கையில் மிளகை ஒன்றிரண்டாக உடைத்து போடவும் சீரகத்தினை சுத்தம் செய்து அப்படியே போடவும் நன்கு வெந்தவுடன் உப்பு போட்டு நன்றாக கிளறவும்... சாதம் நன்றாக குழைந்து பக்குவதிற்கு வந்தவுடன் சிறிது நெய்யில் அல்லது டால்டாவில் முந்திரியை வருத்து போடவும்... மீண்டும் அடிப்பிடிக்காமல் கிளறவும் .. நன்றாக பக்குவத்திற்கு வந்த உடன் இறக்கவும்..

குக்கரில் செய்பவர்களுக்கு: அதே செய்முறை... 4 விசில் வந்த வுடன் இறக்கவும்.. கடைசியில் நெய்யில் மிளகு சீரகம் முந்திரி ஆகியவற்றை வறுத்து சேர்க்கவும்... நன்றாக கிளறி பிறகு சிறிது நேரம் மூடிவைத்து பிறகு பரிமாறவும்..

பின்குறிப்பு : பொன்னி அரிசியில் செய்தால் சுவை டாப்பு டக்கர்..

+

பாசிபருப்பு சாம்பார்

பாசிபருப்பு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

பூண்டு - 3 பல்

சாம்பார் பொடி - 1 ஸ்பூன்

புளி- சிறிதளவு

உப்பு தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணைய் - 2ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

உளுந்து - 1/2 ஸ்பூன்

கறுவேப்பிள்ளை- சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

செய்யும் முறை:

பாசிபயறு அல்லது தட்டை பயறு எண்ணைய் விடாமல் லேசாக வறுத்து 2 டம்பளர் தண்ணீர்விட்டு வேகவிடவும்.. புளி உப்பை ஊற வைக்கவும்..வெங்காயம்... தக்காளியை நறுக்கிகொள்ளவும். பயிறு பாதி வெந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை போடவும்.. பயிறு நன்றாக வெந்த பின்பு புளி. உப்பு கரைத்து ஊற்றி சாம்பார் பொடியை போட்டு பூண்டு பல்லை தோல் உரிக்காமல் நன்றாக நசுக்கி போடவும். நன்கு கொதி வந்த வுடன் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு கடுகு சீரகம். உளுந்து கருவேப்பிலை கொட்டி தாளித்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை கிள்ளி போட்டு இறக்கவும்..கம கம பாசிபருப்பு சாம்பார் ரெடி.

இதை பூரிக்கும் தொட்டுகொள்ள சுவையாக இருக்கும்..

நன்றி: ராஜஸ்வரி பதிப்பகம் சிவகாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரி + உருளை கிழங்கு குருமா

Poori+masala+2.jpg

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப்

மைதா மாவு -சிறிதளவு

சீரக பொடி - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடலை எண்ணெய் - ஒரு ஸ்பூன்

கடலை எண்ணெய் - 1/2 லிட்டர்.. (பொரிப்பதற்கு.)

வெதுவெதுப்பான நீர் - மாவு பிசைவதற்கு.

செய்முறை:

கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாக கலந்து சீரக பொடி,உப்பு சேர்த்து கலக்கவும். நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும். பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய் படுமாறு தடவவும்.ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக்கவும். எண்ணையை வாணலில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.

மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளம் போன்று வட்டவடிவு வருமாறு...தேய்க்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள வட்ட வடிவான மாவு உருண்டைகளை.. போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும். ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் ஓரத்திலிருந்து மறுபக்கம் திருப்பவும்..இரு பக்கங்களும் சிவந்ததும் அதை எடுக்கவும்... சுவையான பூரி தயார்.இப்படி ஒவ்வென்றாக ...தேவையான அளவிற்கு சுட்டு வைத்து கொள்ளவும்..பூ‌‌ரி ந‌ன்றாக உ‌ப்‌பி வர வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், பூ‌ரி மா‌வி‌ல் வறு‌த்த ரவையை சே‌ர்‌த்தா‌ல் போது‌ம்.

+

உருளை கிழங்கு குருமா..

தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு - 1

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய்- 8

தக்காளி - 2

பூண்டு - 1

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சோம்பு- 1 ஸ்பூன்

கருவேப்பிலை- கொஞ்சம்

எண்ணை - சிறிதளவு

செய்யும் முறை:

முதலில் உருளை கிழங்கை வேகவைத்து உரித்து வைத்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பூண்டு உரித்தது ஆகியவற்றை பச்சை மிளகாய் நைசாக நறுக்கிவைத்து கொள்ளவும் ..வாணலில் சிறிது எண்ணையை விட்டு காய்ந்தாவுடன் கடுகு உளூந்து சோம்பு கருவேப்பிலை போட்டு தாளித்து சிவந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி பூண்டு மஞ்சள் தூள் இவற்றை போட்டு வதக்கவும் .. நன்றாக வதங்கியவுடன் .. உரித்த உருளையை கையால் பிசைந்தவாறே வாணலில் போடவும். பிறகு சிறிது நீர் விட்டு கொதிக்கவிடவும் ... அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.. பததிற்கு வந்த வுடன் இறக்கவும்..

சுவையான பூரி + உருளை கிழங்கு குருமா தயார்..

நன்றி: ராஜஸ்வரி பதிப்பகம் சிவகாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளுந்து வடை

urudalvada-400x300.jpg

தேவையான பொருட்கள்

தோலுரித்த உளுந்து - 200கிராம்

பச்சரிசி - கைப்பிடி

வெங்காயம்- 1

பச்சமிளகாய்- காரம் தேவைபடும் அளவிற்கு

கருவேப்பிலை கொத்தமல்லி- சிறிதளவு

செய்யும் முறை:

உளுந்தையும் பச்சரிசையும் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்த பின்பு உளுந்தையும் அரிசியையும் போட்டு அத்துடன் உப்பு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக நைசாக அரைக்க வேண்டும் பிறகு கொத்த மல்லி,கருவேப்பிலை.. வெங்காயம் மூன்றையும் பொடிப்பொடியாக நறுக்கி மாவில் பிசைந்து கொள்ளவும்..வாணலில் எண்ணை ஊற்றி காயந்தவுடன் வடைகளை தட்டி போடவும் செந்நிறமாக மாறியவுடன் எடுத்து சாப்பிடவும்...

பின் குறிப்பு ... நடுவில் ஒட்டை போட்டால் ஒட்டவடை.. இல்லாவிட்டால் சாதா வடை... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை உணவு தந்த புரட்சிகரமான தமிழ் தேசியனுக்கு நன்றிகள்

இந்த பூரி + உருளை கிழங்கு இருக்கிறதே. எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இதெல்லாம் காலைஉணவாக உண்பது இல்லை. காலையில் எப்போதும் பான்தான். சமைக்க பஞ்சி எண்டாலும் பசிக்கு பான் தான் கை கொடுக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சேமியா உப்புமா + தேங்காய் பொட்டுகடலை சட்னி...

DSC01153.JPG

தேவையான பொருள்கள்:

சேமியா – 200 கிராம் (1 பாக்கெட்)

வெங்காயம் – 1

தக்காளி – 2

குடமிளகாய் – 1

பச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது)

பச்சை மிளகாய் – 4

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

எண்ணை – 1 டேபிள்ஸ்பூன்

பனீர் – 150 கிராம்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க -

எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

* பாக்கெட்டில் சொல்லியிருக்கும்படி சேமியாவை வேகவிடவும் அல்லது ஒரு லிட்டர் கொதிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணை, சிறிது உப்பு சேர்த்து, பின் சேமியாவையும் சேர்த்து வேகவிடவும்.

* நன்கு வெந்ததும் வடிதட்டில் வடித்து, பின் ஒரு கப் குளிர்ந்த நீர் சேர்த்து வடிய விடவேண்டும்.(*)

* வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, உடைத்த முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.

* அதனுடன் நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து, வதக்கவும்.

* நன்றாக வதங்கியதும், பொடியாக அரிந்த தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும். உதிர்த்த பனீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

* மேலே வேகவைத்தை சேமியாவைச் சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கலக்கும்வரை ஓரிரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

* எந்த ப்ராண்டாக இருந்தாலும் சேமியாவைத் தனியாக வேகவைத்து குளிர்ந்த நீரில் அலசி, பின் உபயோகித்தாலே சேமியா ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். நேரிடையாக வாணலியில் சேர்த்து வேகவைத்தால் உதிரியான உப்புமா கிடைக்காமல் களி கிண்டியதுபோல் ஆகலாம். இது மிக முக்கியம்.

http://koottanchoru.wordpress.com/2010/04/05/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

+

தேங்காய் சட்னி...

thenga+satni.jpg

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் - அரை கப்

பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்

பச்சைமிளகாய் - 3

இஞ்சி - 1இன்ச் துண்டு

கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை

-சிறிது

உப்பு

தாளிக்க

தேங்காயெண்ணெய் -1ஸ்பூன்

கடுகு -1/2ஸ்பூன்

உளுந்துப் பருப்பு - 1/2ஸ்பூன்

கறிவேப்பிலை - 4இலைகள்

செய்முறை

தேங்காய் முதல் உப்பு வரையுள்ள பொருட்களை கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும்.

எண்ணெய் காய வைத்து தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்துக் கொட்டவும்.

சுவையான தேங்காய் சட்னி தயார்..இது இட்லி,தோசை,சுடுசாதம் இவற்றுக்கு நன்றாக இருக்கும்.

http://mahikitchen.blogspot.com/2010/03/1_07.html

Link to comment
Share on other sites

காலை உணவுகளைப் பார்க்க ஆசையாகத் தான் இருக்கு... :D ஆனால் யார் செய்து தருவீங்கள்? :D காலையில் நேரத்துக்கு எழும்பினால் 3 கோப்பியோட வீட்டிலிருந்து வெளியேறிவிடுவேன், பிந்தி எழும்பினால் ஒண்டும் இல்லாமல் தான் போறது... :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் குட்டி நானும் அப்படித்தான் இருந்தேன்... இப்ப தோசை மாவு பாக்கட் வாங்கி தோசை போட ஆரம்பித்துவிட்டேன்...அங்கு தோசை மாவு பாக்கட் கிடைக்குது அல்லவா? அப்படியாயின் தோசை மாவு மற்றும் நான் சொன்ன காம்பினேசனில் எதாவது ஒரு சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்கள் தோழர்.. சுவையோ சுவை.. :lol:

Link to comment
Share on other sites

காலை உணவை சாப்பிடாமல் விட்டே பல வருடங்களாகி விட்டது... விடுமுறை நாட்களில் நேரம் இருக்கும் போது மதிய உணவை செய்து சாப்பிடுவேன். உங்கள் முறையில் சட்னி கட்டாயம் செய்து பார்க்கத் தான் இருக்கு... :lol: நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

புரட்சி, உங்கள் காலை உணவு செய்முறைகள் நன்றாக உள்ளன.

ஆனால், இங்கு அதிகமானோர் காலை உணவுக்கு நேரம் செலவளிப்பதில்லை.

இந்த உணவுகளை சாப்பிட்டு போனால்... வேலை இடத்தில் நித்திரை தான் வரும்.

இவைகள் தான்...... இங்கு காலை உணவுக்கு ஏற்றது.

250px-Wurst_Brot.jpgwurst.jpgcornflakes400.jpgLow-Fat-Corn-Flakes.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

புரட்சி, உங்கள் காலை உணவு செய்முறைகள் நன்றாக உள்ளன.

ஆனால், இங்கு அதிகமானோர் காலை உணவுக்கு நேரம் செலவளிப்பதில்லை.

இந்த உணவுகளை சாப்பிட்டு போனால்... வேலை இடத்தில் நித்திரை தான் வரும்.

இவைகள் தான்...... இங்கு காலை உணவுக்கு ஏற்றது.

250px-Wurst_Brot.jpgwurst.jpgcornflakes400.jpgLow-Fat-Corn-Flakes.jpg

நன்றி தோழர் தமிழ்சிறி அட்லீஸ்ட் வார விடுமுறை நாளான ஞாயிறு அன்றாவது வயிறாற காலை உணவு உண்ண வேண்டும் என தோழர் தமிழ்சிறிக்கு அன்புகட்டளை விடுக்கிறேன்.... :D:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர் ஸ்பெசல் மசால் தோசை..

India-Cafe-Masala-Dosai.jpg

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 2 கப்,

பச்சரிசி - 2 கப்,

உளுத்தம்பருப்பு - முக்கால் கப்,

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,

ஜவ்வரிசி - ஒரு டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய், நெய், உருளைக்கிழங்கு மசாலா - தேவையான அளவு..

செய்முறை:

அரிசி வகை, பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நைஸாக அரைத்து, உப்பு போட்டுக் கரைத்து, 10 மணி நேரம்

புளிக்கவைக்கவும். மாவு பொங்கிவரும் பட்சத்தில் தோசை வார்க்கலாம். தோசைக்கல்லில் நடுவில் மாவை ஊற்றி, அடி தட்டையாக இருக்கும் கரண்டியில் நிதானமாக வட்டமாக தேய்த்துக் கொண்டே வந்தால் தோசை பார்க்க அழகாக இருக்கும்.பின்பு அதன் மீது ஒரு தேக்கரண்டி காரத்தை தடவி நடுவில் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து இரண்டு புறமும் மடித்து, சாம்பாருடன் மேலும் சட்னியை வைத்து சூடாக பரிமாறவும்.

இந்த தோசைக்கு திருப்பிப் போடவேண்டிய அவசியமில்லை. நெய்யும் எண்ணெயும் கலந்து வைத்துக்கொண்டு தோசை வார்க்க வேண்டும். ஹோட்டல் தோசை போன்று அருமையாக இருக்கும்.

காரம்...செய்வதற்கு..

தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய் -காரம் தேவைப்படுக் அளவிற்கு..

பூண்டு - 1 முழுது உரித்தது..

வெங்காயம் - 1 உரித்தது...

செய்முறை:

வெங்காயம் ... உரித்த பூண்டு.. காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணையில் லேசாக வதக்கி வெங்காயம் பொன்னிறமானதும்... அதை அப்படியே மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி.. சட்னி போல அரைத்து கொள்ளவேண்டும்...

உருளைக்கிழங்கு மசாலா

உருளை கால் கிலோ ( வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்)

தாளிக்க

எண்ணை - ஒரு மேசைகரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரைதேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி

கடலை பருப்பு - அரை தேக்கரண்டி

முந்திரி - 4 ( பொடியாக அரிந்தது

கருவேப்பிலை - 15 இலைகள் இரண்டாக கிள்ளியது

பூண்டு - ஒரு பல் (பொடியாக அரிந்தது))

வெங்காயம் - முன்று

தக்காளி - ஒன்று

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி (5 கிராம்)

பச்ச மிளகாய் - ஒன்று

உப்பு -தேவைக்கு

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

கொத்துமல்லி தழை - சிறிது

நெய் + எண்ணை - தேவைக்கு

செய்முறை

தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் , தக்காளி, பச்சமிளகாய், சேர்த்து நன்கு கிளறி மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது ஒரு சேர கிளறி ஐந்து நிமிடம் மசிய விட்டு , வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள உருளையை சேர்த்து நன்கு கிளறி ஒரு கை பிடி அளவு தண்ணீர் தெளித்து, மீண்டும் சிம்மில் வைத்து , கடைசியாக கொத்து மல்லி தழை தூவி இறக்கவும்.

7k5.jpg

:wub::D :D

--------------------------------------------------------------------------------------------

Link to comment
Share on other sites

தோழரே தோசை பதிவுக்கு நன்றி, அது என்ன வாழை இலையா? அல்லது பீங்கானா ( சாப்பாட்டுத் தட்டா)? அல்லது வாழை இலை மாதிரி இருக்கும் பீங்கானா (தட்டா)? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழரே தோசை பதிவுக்கு நன்றி, அது என்ன வாழை இலையா? அல்லது பீங்கானா ( சாப்பாட்டுத் தட்டா)? அல்லது வாழை இலை மாதிரி இருக்கும் பீங்கானா (தட்டா)? :wub:

வாழை இலை எல்லாம் பிளாஸ்டிக் ரூபத்திலே எப்பவோ வந்துவிட்டது தோழர் குட்டி இங்கு.. :D

Link to comment
Share on other sites

வாழை இலை எல்லாம் பிளாஸ்டிக் ரூபத்திலே எப்பவோ வந்துவிட்டது தோழர் குட்டி இங்கு.. :D

ஓ... அது பிளாஸ்டிக்கா வாழை இலை மாதிரி இருந்துது அது தான் கேட்டனான்... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... அது பிளாஸ்டிக்கா வாழை இலை மாதிரி இருந்துது அது தான் கேட்டனான்... :wub:

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளியோதரை (புளியஞ்சாதம்)

recipe-rice-puliyogare.jpg

எண்ணைய் போடாமல் வெறும் சட்டியில் வறுத்துப் பொடி செய்ய

கடலைப் பருப்பு-1/2 கப்

கொத்தமல்லி விதை(தனியா)-1/2 கப்

மிளகு-1 தேக்கரண்டி

சீரகம்-1 டீஸ்பூன்

இவையெல்லாவற்றையும் தனித்தனியாக ஒரு சூடான சட்டியில் வறுத்துப் பொடி செய்யவும்.

1/4 கப் எண்ணெயில் வறுத்துப் பொடிக்க

எள்-2 தேக்கண்டி

காய்ந்த மிளகாய்-10

பெருங்காயம்-1 டீஸ்பூன்

வெந்தயம்-1/2 ஸ்பூன்

மேற்கண்ட சாமன்களை தனித்தனியாக எண்ணெயில் வறுத்து சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

புளி ஒரு ஆரஞ்சு பழ அளவு (50 கிராம்) அல்லது கூயஅஉடிn 6 டீஸ்பூன் எடுத்து சிறிது தண்ணீரில் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

வேர்க்கடலை-2 கப்

கறிவேப்பிலை-1 கப்

எண்ணெயில் வறுத்து தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நல்லெண்ணெய்-2 கப்

கடுகு-2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய்-10(கிள்ளியது)

மஞ்சள் பொடி-1 ஸ்பூன்

எண்ணெய் சுட வைத்து, கடுகு தாளித்து மஞ்சள் பொடி, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, புளியைக் கரைத்து, பொடித்து வைத்த பொடிகளையும் சேர்த்துக் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து இறக்கி வைத்தால் புளிக்காய்ச்சல் ரெடி.

புளியோதரை தயாரிக்க:

தயார் செய்த சாதத்தைத் தட்டில் கொட்டி பரப்பி, உப்பு, மஞ்சள் பொடி தூவி, நல்லெண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்துக் கலந்து ஆற வைக்கவும். இப்போது வேர்க்கடலை, கறிவேப்பிலை இவற்றையும் புளிக்காய்ச்சல் சிறிதையும் கலந்து ஒரு அகலக் கரண்டியால் கலக்கவும். புளிக்காய்ச்சலைக் கொஞ்சம் கொஞ்சமாக தேவையான அளவு கலந்து செய்து பிறகு உப்போ காரமோ சேர்த்துக் கொள்ளலாம். பொடிகளும் மொத்தமாகக் கலக்க வேண்டுமென்பதில்லை. கொஞ்சம் பாட்டிலில் போட்டு வேண்டும் போது தயார் செய்து கொள்ளலாம்.

பிக்னிக் எல்லாவற்றிற்கும் மிகவும் உகந்தது. தொட்டுக் கொள்ள பொறித்த அப்பளம், வடாம் இவற்றுடன் அவியலுடனோ, கூட்டுடனோ சேர்த்துச் சாப்பிடலாம்.

http://tamil.webdunia.com/miscellaneous/cookery/indian/0706/06/1070606024_1.htm

:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.