Jump to content

எட்டு இடங்களில் உள்ளூர் விமான நிலையங்களை அமைக்க நடவடிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]airport1(1).jpg[/size]

[size=3](ஒலிந்தி ஜயசுந்தர)[/size]

[size=2][size=4]750 மில்லியன் ரூபா செலவில் எட்டு உள்ளூர் விமான நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய நிபுணர்கள் கொண்ட குழுவொன்றை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அமைக்கவுள்ளது.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கு உள்ளூர் விமான நிலையங்கள் உகந்த போக்குவரத்து கட்டமைப்பாக விளங்கும் எனவும் அவ்வமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உள்ளூர் விமான நிலையங்கள் பூர்த்தியாக்கப்பட்டவுடன் நாட்டில் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பான திட்ட அறிக்கையொன்றை திறைசேரி கோரியுள்ளதாக அமைச்சு அதிகாரிகள் கூறினர்.

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம், கண்டி, நுவரெலியா, கொக்கல, சிகிரியா ஆகிய இடங்களில் இவ்விமான நிலையங்களை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன குழுவொன்றை அமைத்துள்ளார்.

சீனாவின் எம்.ஏ. 60 மத்திய வீச்சு ரக பயணிகள் விமானங்களுக்கு ஏற்ற வகையில் ஓடுபாதைகள் அமைக்கப்படவுள்ளன. விமான நிலையங்களுக்கு அருகில் வாடிவீடுகள், ஹோட்டல்கள், அன்பளிப்பு பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் ஏனைய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

புத்தளம் பாலாவியில் உள்ளூர் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. 1000 மீற்றர் நீளமான ஓடுபாதை 1500 கிலோமீற்றராக விஸ்தரிக்கப்படுகிறது. கல்பிட்டி, வில்பத்து உட்பட பல சுற்றுலா பகுதிகளுக்கு அருகில் இவ்விமான நிலையம் அமைந்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...0-17-52-07.html[/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]தரம் குறைந்த டீசல் விற்பனை ஊடாக ஏற்கனவே வாகனங்கள் பழுதடைந்த நிலையில் விமானங்களுக்கான டீசலிலும் 'கலக்கப்படும்'. [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் எம்.ஏ. 60 மத்திய வீச்சு ரக பயணிகள் விமானங்களுக்கு ஏற்ற வகையில் ஓடுபாதைகள் அமைக்கப்படவுள்ளன. விமான நிலையங்களுக்கு அருகில் வாடிவீடுகள், ஹோட்டல்கள், அன்பளிப்பு பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் ஏனைய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ஒண்டு இரண்டில்லை....எட்டு இடத்திலை நிண்டு சீனாக்காரன் இந்தியாவுக்கு சீரியல் காட்டப்போறான் :lol:

Link to comment
Share on other sites

சிவசங்கர் மேனனும் துணைத் தூதுவர் மகாலிங்கமும் "பல்லால் இளில்" அமைத்த 150 அடிநீள ஓடுபாதைக்கு என்ன ஆயிற்று?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.