Jump to content

நடந்தது இது தான் .... "சம்பவம் தொடர்பான எனது வாக்கு மூலம்" .. மயூரப்பிரியன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தது இது தான் ....

சம்பவம் தொடர்பான எனது வாக்கு மூலம் ..

கடந்த வெள்ளிக்கிழமை, ஊடக பயிற்சி நெறிக்கு ஒன்றுக்காக கொழும்பு செல்லவேண்டும் மாலை 5.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தில் இருந்து வாகனம் வெளிக்கிடும் 5.30 மணிக்கு எல்லோரும் ஊடக அமையத்தில் நிற்குமாறு அறிவித்தல் தரப்பட்டது.

அதன் படி நானும் அங்கே நின்றேன். ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும் மாலை 6.30 மணியளவில் எமது நண்பர் குழாம் 6 பேர் ஒரு வாகனத்திலும் ஏனையவர்கள் 6 பேர் மற்றுமொரு வாகனத்திலுமாக அங்கிருந்து கிளம்பினோம்.

எம் வாகனம் மற்றைய வாகனம் கிளம்பி 10 நிமிடங்களுக்கு பிறகே அங்கிருந்து கிளம்பியது. நாம் கச்சேரியடியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எமது வாகனத்தை இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்ததை அவதானித்தோம்.

அவர்கள் எதேச்சையாக எம் பின்னால் வருகின்றார்கள் என்று கருதி அதனை நாம் பெரிதுபடுத்தவில்லை. வந்தவர்களையும் கைதடி சந்திக்கு அப்பால் நாம் காணவில்லை.

நாம் எமது பயணத்தை தொடர்ந்தோம். இரவு 8 மணியளவில் எமக்கு முன்னால் வாகனத்தில் சென்றவர்கள் தாம் முறிகண்டியில் நிற்பதாகவும் எம்மை விரைந்து வருமாறு தொலைபேசியில் கூறினார்.

நாம் முறிகண்டியை 8.15 மணியளவில் சென்றடைந்தோம். எமக்கு முன்னால் சென்றவர்கள் வன்னியை சேர்ந்த 3 ஊடவியலாலர்களை தம்முடன் அழைத்து சென்று எமக்காக காத்திருந்தார்கள்.

முறிகண்டி பிள்ளையாரை தரிசித்து விட்டும் தேநீர் அருந்தி விட்டும் எமது பயணத்தை தொடரும் போது எமது வாகனத்தில் எமது நண்பர்களில் ஒருவரான வன்னியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரையும் இணைத்து கொண்டு எமது பயணத்தை தொடர்ந்தோம்.

முறிகண்டியில் இருந்து கிளம்பும் போதும் மற்றைய வாகனத்தை முன்னால் செல்ல விட்டே நாம் அவர்கள் பின்னால் சென்றோம். அப்போதும் எமது வாகனத்தின் பின்னால் மோட்டார் சைக்கிள் ஒருவர் வந்தார். அவர் மாங்குள சந்திக்கு அருகில் வந்ததும் எம்மை முந்தி சென்று மாங்குள சந்தியில் உள்ள இராணுவ பொலிஸ் சோதனை சாவடிக்கு முன்னால் போய் நின்றார்.

அதனை தொடர்ந்து மாங்குள சந்தியில் உள்ள இராணுவ பொலிஸ் சோதனை சாவடியில் நாம் இரவு 9.20 மணியளவில் இராணுவ பொலிசாரினால் மறிக்கப்பட்டோம்.

 

எம்மை மறித்த இராணுவ பொலிசார் எமது சாரதியிடம் ஆணையிறவில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் உங்களை இராணுவத்தினர் மறித்த போது ஏன் வாகனத்தை நிறுத்த வில்லை என கேட்டார் அதற்கு எமது சாரதி வாகனத்தை யாருமே மறிக்கவில்லை எனக் கூறினார்.

அவ்வேளை எமது வாகனத்தை சிவில் உடையில் இருந்தவர்கள் சுற்றி வளைத்து நின்றனர் அதில் ஒருவர் யாருடனோ தொலைபேசியில் உரையாடிக்கொண்டு இருந்தார்,

பின்னர் அவரும் எமது வாகன சாரதியிடம் ஏன் ஆனையிறவில் மறிக்கும் போது வாகனத்தை நிறுத்த வில்லை என கேட்டார் அவருக்கும் சாரதி வாகனத்தை யாரும் மறிக்கவில்லை என கூறினார்.

அதன் பின்னர் குறித்த நபர் வாகனத்தினுள் இருந்த எம்மை யார் என சாரதியிடம் கேட்டார்கள் அதற்கு சாரதி இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் கொழும்பு செல்கின்றனர் நான் ஹயருக்கு வந்ததாக கூறினார்.

அதனை அடுத்து அவர்கள் முன் இருக்கையில் இருந்த என்னிடம் கேட்டார்கள் எங்கே போகின்றீர்கள் என அதற்கு நான் சொன்னேன் கொழும்புக்கு ஒரு friend வீட்டை போறாம் ஏன் கேட்கின்றீர்கள் என கேட்டதும், உங்களை ஆனையிறவில் மறித்த போது நிற்காமல் வந்ததாக எமக்கு தகவல் கிடைச்சது அதனால தான் கேட்டோம் என்றார்கள்.

(சிவில் உடையில் நின்றவர்கள் எம்மிடம் விசாரணை நடத்தும் போது இராணுவ பொலிசார் எதுவுமே கதைக்கவில்லை அத்துடன் எம்மிடம் விசாரணை மேற்கொண்டவர்கள் தமிழிலையே விசாரணை மேற்கொண்டார்கள்)

 

பின்னர் எம்மிடம் விசாரணை மேற்கொண்ட சிவில் உடையில் நின்றவர் தொலைபேசியில் யாருடனோ தொடர்பு கொண்டு கதைத்த பின்னர் யாராவது ஒருவர் ic யை பதிந்து விட்டு செல்லுங்கள் என கூறினார்.

 

அதனை அடுத்து நான் இறங்கி சென்று எனது ic பதிவினை சோதனை சாவடியில் மேற்கொண்டு இருந்த போது

 

(எனது ic பதிவை சிவில் உடையில் இருந்தவரே மேற்கொண்டார். அப்போதும் எனது உள் மனசு சொன்னது ஆணையிறவில் வாகனத்தை மறித்த போது நிறுத்தாது வந்திருந்தால் அது சாரதியின் தவறு எதற்காக எமது பதிவினை மேற்கொள்ள வேண்டும் என கேள் என்று பிறகு யோசித்தேன் இதில் நின்று இவனுங்கவுடன் எதற்காக முரன்படுவான் என விட்டு விட்டேன் )

 

எனது பதிவினை மேற்கொண்டு இருந்தவரிடம் தொலைபேசியில் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த சிவில் உடைதாரி வந்து கூறினார் வானில் இருக்கும் மிகுதி 6 பேரின் icயையும் வாங்கி பதியுமாறு கூறிவிட்டு அவர் என்னிடம் கூறினார் வானில் இருந்து மற்றவர்கள் இறங்க தேவையில்லை அவர்களில் ic யை மட்டும் வாங்கி வருமாறு

நான் அதனை வாகனத்தில் இருந்தவர்களிடம் கூறிய போது முன்னுக்கு இருந்தவர்கள் தாம் இறங்கி வந்ததுடன் பின்னுக்கு இருந்தவர்கள் தமது ic தந்து விட்டு வாகனத்தினுள் இருந்தார்கள்

 

எங்கள் 7 பேரின் ic யையும் சிவில் உடையில் இருந்த ஒருவர் பதிவினை மேற்கொண்டு கொண்டிருந்த போது மற்றைய சிவில் உடைதாரி வேறு யாருடனையோ தொலைபேசி தொடர்பிலையே இருந்தார்.

 

அப்போதும் நாங்கள் கேட்டோம் எதற்காக இந்த பதிவு என அதற்கு அவர் ஆணையிறவில் இந்த வாகனத்தை மறித்த போது நிறுத்தாமல் வந்தற்காகவே என கூறினார் அப்போது நாம் கேட்டோம் வேறு ஏதாவது பிரச்சனை இல்லை தானே என அதற்கு அவர் இல்லை என்றே கூறினார்

ஆனாலும் எமது ic பதிவினை மேற்கொண்ட போது வழமைக்கு மாறாக பிறந்த திகதி எல்லாம் பதிந்தார் (வழமையாக ic பதியும் போது பெயர் , ic இலக்கமும், விலாசம் என்பவற்றையே பதிவார்கள்)

 

எமது பதிவுகளை முடித்த பின்னர் எங்களை அங்கிருந்து செல்ல அனுமதித்தார்கள். அங்கிருந்து எமது பயணத்தை தொடர்ந்தோம்

 

ஓமந்தை இராணுவ சாவடியை இரவு 9.50 மணியளவில் சென்றடைந்தோம். அங்கு எமது வாகனத்திற்கு மட்டும் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு ஒரு 2ம் லெப்டினன் தர அதிகாரியின் தலைமையில் 5 இராணுவத்தினர். எமது வாகனத்தை சுற்றி வளைத்து எம்மை வாகனத்தை விட்டு கிழே இறங்க பணித்தனர். (மற்றைய வாகனத்தில் சாரதி மட்டும் இறங்கி சென்று பதிவினை மேற்கொண்டு விட்டு வாகனத்தை எடுத்து செல்கின்றனர்)

 

கீழே இறங்கிய எங்கள் 7 பேரின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டது அத்துடன் 3 இராணுவத்தினர் எமது வாகனத்தில் ஏறி சோதனை (ஒரு ஹயஸ் ரக வாகனத்தினுள் 3 பேர் ஏறி என்னத்த தேடினாங்கலோ)

 

அதன் பின்னர் வாகனத்தில் தேடுதல் நடத்தியவர்கள் வாகனத்தின் பின்னல் உள்ள எமது பொதியைத் ( bag) க சோதனை செய்ய வேண்டும் அதனை திறந்து காட்டும் மாறு எமக்கு கூறினார்கள் அதன் போது நானும் இன்னும் மூவருமாக சென்று எமது Bag கை திறந்து காட்டிக்கொண்டு இருந்த போது எம்முடன் வந்த இருவர் வாகனத்தினுள் ஏறி பின் இருக்கையில் அமர்ந்து இருந்துள்ளார்கள். மற்றும் ஒருவர் எமது வாகனத்திற்கு முன்னால் நின்று எமது வாகனத்தை பார்த்து கொண்டு நின்றார்.

 

அவ்வேளை ஒருவிதமான தாடி கட்டுடன் இராணுவ சீருடையில் (இராணுவ சீருடை அணிபவர்கள் வித்தியாசமான தாடி கட் விட முடியாது என நினைக்கிறேன் ) வந்த ஒருவர் சாரதியின் இருக்கை பக்கம் உள்ள வாகன யன்னல் வழியாக ஏதோ ஒன்றை போட்டு விட்டு எமது வாகனத்தை கடந்து சென்றார் அதனை வாகன பின் இருக்கையில் இருந்த இருவரும் வாகனத்தின் முன்னால் நின்ற ஒருவரும் கண்டுள்ளனர்.

 

குறித்த இராணுவ சிப்பாய் என்னத்த யன்னல் வழியாக உள்ளே போட்டார் என்பதை எடுத்து பார்க்க முதல் எங்கிருந்தோ வந்த இரு பொலிசார் அந்த பொருளை (சிகரெட் பெட்டி) தூக்கினார்கள்.

 

(அதெப்படி சரியா வந்தவுடன் அந்த பெட்டியை சரியா அடையாளம் கண்டு உடனே தூக்கினாங்களோ )

 

பொலிசார் தாம் அங்கிருந்து எடுத்த சிகரெட் பெட்டியினை எடுத்து கொண்டு வந்து வாகனத்தின் முன்னால் நின்றவரிடம் நீயா இந்த வாகனத்தில் வந்தனீ என கேட்டார் அதற்கு அவரும் ஓம் என்றார் இதற்குள் (சிகரெட் பெட்டி) என்ன இருக்கின்றது என தெரியுமா ? என அடுத்த கேள்வியை கேட்டார் அதற்கு அவர் போட்டவரை தான் கேட்கணும் என கூறி எமது வாகனத்தினுள் அந்த பொட்டியை போட்டவரை அடையாளம் காட்டினார்.

அவ்வேளை எங்கிருந்தோ வந்த சிவில் உடையில் (கட்டை கற்சட்டையுடனும் SLRC நுவரெலியா என பதிவிட்ட t சேட்டுடனும்) எம்மை நோக்கி தூசணத்தால் பேசியபடி வந்தவர் எம்முடன் நின்ற ஒருவரின் கையை பிடித்து இழுத்து தூசணத்தால் பேசிய படி வா என்றார். (சந்தேக நபரை தூசணத்தால் பேசலாம் என ஏதாவது இலங்கை சட்டம் சொல்கின்றதா ?)

 

அப்போது அருகில் நின்ற நாம் கேட்டோம் எதற்காக அவரை இழுத்து செல்ல முற்படுகின்றீர்கள் ? நீங்கள் யார் என கேட்டோம் அதற்கு அவர் நான் தான் ஓமந்தை பொலிஸ் si என்று பெயர் சொன்னார் (அது தற்போது ஞாபகம் இல்லை) கஞ்சா கொண்டு சென்றதற்காக கைது செய்கின்றேன் என்றார்.

 

அப்போ நாங்கள் சொன்னோம் இந்த வாகனத்தில் இந்த 7 பேரும் தான் வந்தோம் அப்படியாயின் எங்கள் 7 பேரையும் கைது செய்யுங்கள் என்று அதற்கு அவர் அப்ப 7 பேரும் நடவுங்க என கூறிய போது எம்முடன் இருந்த ஒருவர் தனது தொலைபேசியில் முன்னால் சென்ற வாகனத்தில் இருந்தவர்களுக்கு அறிவிக்கும் நோக்குடன் தொலைபேசியை எடுத்து காதில் வைத்தும் பொலிஸ் si ஒரு கையினால் அவரின் முகத்தை தள்ளி மறுகையால் அவருடைய தொலைபேசியை பறித்து எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு நடவுங்கள் என தூசணத்தால் பேசினார்.

 

( ஒருவரை கைது செய்தால் அவர் தனது கைது தொடர்பாக பிறிதொருவருக்கு அறிவிக்கும் உரிமை உண்டு தானே? )

 

நாங்கள் வாறோம் என்று சொல்லி சம்பவத்தை எமது சாரதியிடம் சொல்ல போனால் சாரதி அதுவரை பதிவை மேற்கொள்ளவில்லை

 

(ஓமந்தை சோதனை சாவடியில் இவ்வளவு பிரச்சனையும் 20 நிமிடங்களுக்கு மேல் நடக்கும் வரை எமது வாகனத்தை சோதனை சாவடியில் இருந்த இராணுவ சிப்பாய் பதிவினை மேற்கொள்ளாமல் திட்டமிட்டு புறக்கணித்துள்ளார்.)

 

வாகனம் வரும் நீங்க நடவுங்கள் என தூசணத்தால் எம்மை பொலிஸ் si பேசினார் அதனை அடுத்து நான் ஓமந்தையில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியை நோக்கி (200 மீற்றர்) நடந்து கொண்டிருந்த போது எம்முடன் வந்த மற்றுமொருவர் தொலைபேசியில் முன்னுக்கு வாகனத்தில் சென்றவர்களுக்கு அறிவிக்க முற்பட்ட போது குறித்த si அவருடைய கழுத்தில பிடித்து அவரின் தொலைபேசியையும் பறித்தெடுத்தார்.

 

அதன் பின்னர் கடைசியாக சென்ற இருவரில் ஒருவர் முன்னால் சென்ற பொலிசாருக்கு தெரியாமல் தொலைபேசியில் முன்னுக்கு வாகனத்தில் சென்றவர்களுக்கு அறிவிக்க நான் பொலிசாருக்கு தெரியாமல் எனது தொலைபேசியில் இருந்து tweet பண்ணினேன்.

 

அதோடு எம்மை ஓமந்தை சோதனை சாவடியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் மறித்து வைத்து அங்கிருந்த புத்தகம் ஒன்றில் சிவப்பு பேனாவால் ஏதோ சிங்களத்தில் எழுதி கொண்டு இருக்க எனது tweet பார்த்த ஒருத்தன் எனது தொலைபேசிக்கு உடனே போன் பண்ணினான். அதோட எனது தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஏனைய அனைவரினது தொலைபேசி மற்றும் அடையாள அட்டைகள் என்பன பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

 

(முறைப்பாட்டை பதிவு செய்ய முன்னர் சந்தேக நபர்களின் தொலைபேசி மற்றும் அடையாள அட்டைகளை பறிக்கும் உரிமை பொலிசாருக்கு உண்டா ?)

 

அதன் பின்னர் எங்கே சிவப்பு பேனையால் ஏதோ சிங்களத்தில் பதிவினை மேற்கொண்டு விட்டு சிவில் உடையில் இருந்த si பொலிஸ் சீருடைக்கு மாறி எம்மை மீண்டும் தூசணத்தால் பேசி நடவுங்கள் என்றார்.

 

எம்மை எமது வாகனத்தில் ஏற்றி தானும் ஓமந்தையில் எங்கள் வாகனத்தில் இருந்து கஞ்சா சிகரெட் போட்டியை மீட்ட இரு பொலிசாரையும் அழைத்து கொண்டு எம்மை எங்கோ அழைத்து சென்றார்

 

அதன் போது நாம் எங்களை எங்கே அழைத்து செல்கின்றீர்கள் என்ற கேட்ட போது அது போனதுக்கு அப்புறம் தெரியும் வாயை மூடுங்கள் என்று தூசணத்தால் பேசினார்.

(பொலிசார் எம்மை கைது செய்து கொண்டு செல்லும் போது எங்கே கொண்டு செல்கின்றோம் என்பதை எம்மிடம் கூற தானே வேண்டும் ? )

 

நேராக எம்மை ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று எம்மை அங்கே உட்காரும் படி பணித்ததுடன் எம்மை நாளை நீதிபதி முன்னால் முற்படுத்தியே விடுதலை செய்வோம் என கூறினார்

அப்போது நாம் இன்னும் இரவு சாப்பாடு சாப்பிட வில்லை எமக்கு பசிக்குது சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்யும் படி பொலிசாரிடம் கேட்டோம்.

 

(அதிலையும் நம்ம பயலுங்க தமக்கு பொலிசாரின் சோறும் சம்பலும் வேண்டாம் பிரைட் ரைஸ் அல்லது ரொட்டியும் இறைச்சி கறியும் வேணும் என்றாங்க )அவர்கள் அதற்கு பதிலே சொல்லவில்லை பச்சை தண்ணியே தந்தார்கள்.

 

(பொலிசார் சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்கும் போது அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க தானே வேண்டும்)

 

அவ்வேளை எமக்கு முன்னால் வாகனத்தில் சென்றவர்கள் திரும்பி ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள் வந்து சிறிது நேரத்தில் வவுனியா ஊடகவியலாளர்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தார்கள்.

 

அதனை அடுத்து ஓமந்தை பொலிஸ் நிலையம் பரபரப்பு அடைந்தது. அதை அடுத்து எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட எமது கைத்தொலைபேசிகள் , அடையாள அட்டைகள் என்பன எம்மிடம் திருப்பி தரப்பட்டு ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி எம்முடன் சமர பேச்சுக்களை நடாத்த தொடங்கினார்.

 

எமது உடமையில் இருந்து கஞ்சா பொட்டி கைப்பற்றபடாததால் எங்கள் 7 பேரையும் விடுதலை செய்வதாகவும் வாகன சாரதியினையும் வாகனத்தையும் நீதவான் முன் முற்படுத்தி விடுவிப்பதாகவும் கூறினார்

 

அத்துடன் மீட்கபட்ட கஞ்சா சிறிய அளவு என்பதனால் உடனேயே பிணையில் எடுக்கலாம் எனவே நீங்கள் இவை பற்றி கவலை படாமல் செல்லுங்கள் நான் வேணும் என்றால் நீங்கள் செல்ல வேறு வாகன வசதி செய்து தருவதாகவும் கூறினார்.

 

எம்மை ஓமந்தை சோதனை சாவடியில் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் எம்முடன் அநாகரிகமாக நடந்துகொண்ட si மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்ஸ் இருவரும் ஓமந்தை பொலிஸ் நிலையம் பரபரப்பு அடைந்து சிறிது நேரத்தில் காணாமல் போய் விட்டார்கள்

அதன் பின்னரே சாரதி இலக்கானார் (சுமார் ஒரு மணி நேரம் நாங்கள் 7 பேருமே பொலிசாரின் இலக்காக இருந்தோம் அந்த ஒரு மணி நேரம் வரை சாரிதியின் தொலைபேசியோ அடையாள அட்டையோ பறிமுதல் செய்யப்படவும் இல்லை அவரிடம் எந்த விதமான விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை ஏன் அவ்வளவு தூசணத்தால் எங்களை பேசிய பொலிஸ் si கூட சாரதியை ஒரு வார்த்தை கூட பேசவில்லை)

 

அவரின் இந்த சமரச முயற்சிக்கு நாம் உடன் பட மறுத்தோம். ஏனெனில் இராணுவத்தினர் போட்ட கஞ்சா பொட்டியினை தான் பொலிசார் மீட்டனர் வாகன சாரதியை விடுவிக்கா விட்டால்.நாம் முறைப்பாடும் செய்வோம் இராணுவத்தினர் போட்ட கஞ்சாவை தான் பொலிசார் மீட்டதாக எனவே எமது முறைப்பாட்டை நீங்கள் பதிவு செய்ய வேண்டும் என கோரினோம்

 

அதற்கு அவர் உங்கள் முறைப்பாட்டை பதிய வேண்டும் ஆயின் ஓமந்தை இராணுவ சாவடியில் உள்ள இராணுவத்தினரின் வாக்கு மூலம் பெற வேண்டும் என கோரி ஒரு பொலிஸ் குழுவை அங்கு அனுப்பி வைத்தார்.

 

(சிவில் பொலிசார் இராணுவத்தினரை விசாரித்து வாக்கு மூலம் பெறலாமா ?)

 

ஓமந்தை சோதனை சாவடிக்கு இராணுவத்தினரின் வாக்கு மூலம் பெற்று வருவதாக கூறி சென்ற பொலிஸ் குழுவினர் சுமார் 3 மணிநேரம் ஆகியும் வராததால் நாம் பொறுமை இழந்தோம்.

 

ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் A 9 வீதியை இரவு 2 மணியளவில் மறித்து எமது முறைப்பாட்டை பொலிசார் ஏற்க வேண்டும் என போராட்டம் நடாத்தினோம்.

எமது போராட்டத்தை அடுத்து இரவு 2.30 மணியளவில் எமது முறைப்பாட்டை ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து நாம் எமது போராட்டத்தை கைவிட்டோம்.

 

பின்னர் இரவு 3 மணியளவில் எமது முறைப்பாட்டை பொலிசார் ஏற்றுக்கொண்டார்கள் அந்த முறைப்பாட்டில் இராணுவத்தினர் வைத்த கஞ்சா பொட்டியினை தான் பொலிசார் மீட்டார்கள் என குறிப்பிட்டதுடன் பொலிசார் எம்மை தாக்கமுற்பட்டமை தொடர்பிலும் தாகத வார்த்தைகளால் எம்மை பேசியமை மற்றும் எம்முடன் அநாகரிகமாக நடந்து கொண்டமை தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்தோம்.

 

அதனை தொடர்ந்து எம்மை 4.30 மணியளவில் செல்ல பொலிசார் அனுமதித்தார்கள்.

ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக எம்மை தடுத்து வைத்திருந்த போது எமக்கு பல உதவிகளையும் எமக்கு ஆதரவாகவும் வவுனியாவை சேர்ந்த 3 ஊடகவியலாளர்கள் செயற்பட்டனர். 6 மணிநேரமாக எம்முடன் நின்ற அவர்களுக்கு எமது நன்றிகள் ...

 

அத்துடன் நேரில் வந்து எமக்கு ஆதரவாக நின்ற வடமாகாண சபை உறுப்பினர் Dr. சிவமோகன் அவர்களுக்கும் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களுக்கும், எம்மை தடுத்து வைத்தமை தொடர்பாக செய்திகளை வெளியிட்டவர்களும் எமது நன்றிகள் ...

பொலிசார் எம்மை விடுவித்த பின்னர் அதிகாலை 5 மணியளவில் பிறிதொரு வாகனத்தை வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஒழுங்கமைத்து தர நாம் அதில் கொழும்பு நோக்கி பயணித்தோம்

 

கொழும்பு இதழியல் கல்லூரியை சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்றடைந்து அங்கு தேநீர் அருந்தி விட்டு நாம் எமது தங்குமிடம் நோக்கி சென்று 30 நிமிடங்களில் இதழியல் கல்லூரிக்கு முன்னால் சிங்கள அமைப்பு ஒன்று பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்காதே என போராட்டம் நடாத்தியது.

 

அதனை அடுத்து எமது பயிற்சி திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு எமது தங்குமிடத்திலேயே தங்க வைக்கப்பட்டோம் அதனை அடுத்து மறுநாள் காலை (நேற்று ஞாயிற்று கிழமை) கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்து மாலை 6 மணியளவில் யாழை வந்தடைந்தோம்.

 

இது தான் சம்பவம் தொடர்பான எனது வாக்கு மூலம் ...

 

அதேவேளை ஓமந்தை பொலிசாரினால் இன்று மதியம் (28) எமக்கு தொலைபேசி அழைப்பின் ஊடக நாளை செவ்வாய் கிழமை மதியம் 11மணிக்கு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எமது முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

https://www.facebook.com/mayurapriyan104

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவு மயூரப்பிரியனின் Facebook இல் இருந்து அவரது அனுமதியுடன் இங்கு பகிரப்படுகின்றது.

Link to comment
Share on other sites

ஜனநாயக நாடுகள் வரிசையில் சிறிலங்கா முன்னணி வகிப்பதை மேற்படி சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முளைவிட்ட ஜனநாயகம் திரும்பவும் கருகிவிட்டது.அர்ஜூன் அண்ணா கவனத்திற்கு கொஞ்சம் தண்ணி ஊத்திவிடவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முளைவிட்ட ஜனநாயகம் திரும்பவும் கருகிவிட்டது.அர்ஜூன் அண்ணா கவனத்திற்கு கொஞ்சம் தண்ணி ஊத்திவிடவும்

 

அங்கு ஜனநாயகம் இல்லை என்பது எனக்கும்தெரியும் உலகுக்கும் தெரியும்,ஆனால் புலிகள் ஜனநாயகத்தை மீறும்பொழுது நீங்கள் அதை தடுக்கவில்லை ,மற்றவர்கள் மீறும்பொழுது அதைதடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு,.....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு ஜனநாயகம் இல்லை என்பது எனக்கும்தெரியும் உலகுக்கும் தெரியும்,ஆனால் புலிகள் ஜனநாயகத்தை மீறும்பொழுது நீங்கள் அதை தடுக்கவில்லை ,மற்றவர்கள் மீறும்பொழுது அதைதடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு,..... :D

 

நல்லவற்றை  பின்னே  சொல்

தீயவற்றை எதிரே சொல் என்பார்கள்

அதைத்தான்  நாம் செய்கின்றோம் (சிங்களவனுக்கு)......

இது கூடப்புரியலையா?? :lol:  :D

Link to comment
Share on other sites

இலங்கை ஜனநாயக நாடு என்பதால் தான் இவர்கள் உயிரோடு வந்து இப்படி எழுதவாவது முடிகிறது...கடைசியில் எல்லாரும் விடுதலை செய்யப்பட்டும் உள்ளார்கள்...இதில் இவர் எழுப்பிய சந்தேகங்களைஎல்லாம் புலிகளால் கைதுசெய்யபட்டிருந்தால் கேட்டிருப்பாரா? :) அது தான் புலிகள் ஜனநாயக வாதிகள் இல்லை என்கிறீர்களா...அதுவும் சரிதானே.....

 

எத்தனை எத்தனை வான் கள் இப்போது யாழ்-கொழும்பு என்று பறக்கின்றன ...எல்லாருக்கும் இப்படி தானா??

Link to comment
Share on other sites

இலங்கை ஜனநாயக நாடு என்பதால் தான் இவர்கள் உயிரோடு வந்து இப்படி எழுதவாவது முடிகிறது...கடைசியில் எல்லாரும் விடுதலை செய்யப்பட்டும் உள்ளார்கள்...இதில் இவர் எழுப்பிய சந்தேகங்களைஎல்லாம் புலிகளால் கைதுசெய்யபட்டிருந்தால் கேட்டிருப்பாரா? :) அது தான் புலிகள் ஜனநாயக வாதிகள் இல்லை என்கிறீர்களா...அதுவும் சரிதானே.....

 

எத்தனை எத்தனை வான் கள் இப்போது யாழ்-கொழும்பு என்று பறக்கின்றன ...எல்லாருக்கும் இப்படி தானா??

 

 

 

புலிகளால் கைது செய்யப்பட்டவர்கள் திரும்பி வர தேவையில்லாதவர்கள் தான்.   :icon_mrgreen: மற்றது  இலங்கை ஜனநாயக நாடு என்பதால் உயிரோடு திரும்பி வராதவர்களை கேட்டாலும்  திருப்பி தருவார்களா?? :D
 
உங்களுக்கு  பயங்கரவாதிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஜனநாயகவாதிக்கும்  வித்தியாசம் தெரியவில்லை. பேர் மட்டும் நான்தான். :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புலிகளால் கைது செய்யப்பட்டவர்கள் திரும்பி வர தேவையில்லாதவர்கள் தான்.   :icon_mrgreen: மற்றது  இலங்கை ஜனநாயக நாடு என்பதால் உயிரோடு திரும்பி வராதவர்களை கேட்டாலும்  திருப்பி தருவார்களா?? :D
 
உங்களுக்கு  பயங்கரவாதிக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஜனநாயகவாதிக்கும்  வித்தியாசம் தெரியவில்லை. பேர் மட்டும் நான்தான். :D

 

 

அப்படிப் போடு..... அருவாளை. :D  :lol:

Link to comment
Share on other sites

இலங்கை இப்போது தான் பயங்கரவாதிகளின் தாக்கத்திலிருந்து மீளுகின்றது...கொஞ்ச காலம் (இன்னும் ஒரு பத்து வருடம் :) ) பொறுங்கள்...

நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இப்போது தான் பயங்கரவாதிகளின் தாக்கத்திலிருந்து மீளுகின்றது...கொஞ்ச காலம் (இன்னும் ஒரு பத்து வருடம் :) ) பொறுங்கள்...

நன்றி...

 

அருமையானதொரு  கருத்து

நான் இங்கு முகங்கள் தெரியும் காலம் என்று  எழுதுவது இதைத்தான்...

 

இங்கு எவரும் புலிகளுக்காக வக்காலத்து வாங்குவதில்லை

இலங்கையில் யார் பயங்கரவாதி  என்று எல்லோருக்கும்தெரியும்

தலைவர் அடிப்படையை  உணர்த்தவே

உண்மையான புத்தனாக சிங்களவர் இருந்தால் எனது கையில் ஆயுதம் இராது என்றார்.

இது புலிகளுக்கான  வசனம் அன்று

ஒட்டுமொத்த  தமிழருக்குமானது

ஏன் இசுலாமியர்

சிங்களவருக்குமானது...

 

ஒரு படுபாதகத்தை தட்டிக்கேட்பவனை எவரும் பயங்கரவாதி  என்று சொல்வதில்லை

எமது இனத்தை  தவிர

எந்த இனமும் இவ்வாறு தனது அடிப்படை  உரிமையை  உணராது இல்லை.

அதைக்கேலி  செய்வதில்லை.

 

இங்கு  நாங்கள் பேசுவது தமிழருக்கான உரிமை பற்றியது

அது இலங்கையில் மறுக்கப்பட்டதால் பேசுகின்றோம்

பேசுவோம்

அது மறுக்கப்படும்வரை அதற்கு எதிராக பேசுவோம் போராடுவோம்

உண்மையைச்சொன்னால் நாம் பேசுவது  கேட்பது இலங்கை முழுவதற்கும் நல்லது

இலங்கையை  அமைதியாக வைத்திருக்க  உதவுவது....

தமிழரை அழித்துக்கொண்டு

இசுலாமியரை வெருட்டிக்கொண்டு 

இலங்கையில் அமைதியைக்கொண்டு வரமுடியாது

இதையே

செல்வநாயகமும் சொன்னார்

தலைவரும் சொன்னார்

இன்று விக்கியரும் சம்பந்தரும் சொல்கின்றார்கள்...

இதையே  நாமும்  சொல்கின்றோம்

 

ஆனால் நீங்கள் இங்கு பேசுவது  புலிகளுடனான உங்களது முரண்பாடுகள்

உங்களது புலி  வாந்தி

அது சிங்களத்துக்கு மேலும் ஊக்கத்தையும்

தமிழருக்கு மேலும் அழிவையும் தருமேயன்றி

இலங்கையில் அமைதிக்கு உதவாது

ஏனெனில் சிங்களவன் பயங்கரவாதியாக  உள்ளான்

அழிவையும் அடக்குமுறையையும்  மட்டுமே அவன் தமிழருக்கு விட்டு வைத்தள்ளான்

எந்தவித தீர்வும் அவனிடமில்லை.

 

இலங்கையில் உண்மையான  பயங்கரவாதி  யார் என்றால்

மகிந்த 

அவரது குடும்பமும்

சிங்கள  உறுமய

மற்றும் பொதுசேனா  போன்றவை தான்..

இவைதான் இன்றைக்கு இலங்கையின் அழிவுகளுக்கும் 

நாட்டின் பிரிவினைகளுக்கும் காரணம்...

 

நானிருப்பேனோ தெரியாது

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

 

தமிழருக்கு ஒரு தீர்வைத்தராது  சிங்களம் முரண்டுபிடித்து

இவ்வாறு  தொடருமாயின்

இலங்கை தமிழருக்கும் இல்லாது

சிங்களவருக்குமில்லாது (அடிபட்டு அழிந்து)

இசுலாமியருக்கே  சொந்தமாகும்.........

இதற்கு காரணம்

தமிழரோ

புலிகளோ  கிடையாது

முழுக்கமுழுக்க  சிங்களபயங்கரவாதமே கராணமாகும்...

Link to comment
Share on other sites

விசுக்கு கவலைபடாதீர்கள்..இன்னும் இருநூறு வருடங்கள் ஆனாலும் (அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆளுக்காள் அணுகுண்டு வீசி விளையாடாவிட்டால்) இலங்கையில் தமிழர்கள் இருப்பார்கள்....நம்பிக்கை கொள்ளுங்கள்....இன்னும் பூச்சாண்டி காட்டாமல் இருங்கள்..எல்லாம் நன்றாக நடக்கும்......

இஸ்ரேலை சுரண்ட வெளிகிட்ட ஐ.நா மனித உரிமை நிறுவனம்...இனி கோவிந்தா :)

 

எல்லாம் தெரிஞ்ச தலைவர் பாதி கிணறு தான் தாண்டினார்...முடிவு தொபுக்கடீர் என்று கிணத்துக்குள்ளே... :)

Link to comment
Share on other sites

விசுக்கு கவலைபடாதீர்கள்..இன்னும் இருநூறு வருடங்கள் ஆனாலும் (அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆளுக்காள் அணுகுண்டு வீசி விளையாடாவிட்டால்) இலங்கையில் தமிழர்கள் இருப்பார்கள்....நம்பிக்கை கொள்ளுங்கள்....இன்னும் பூச்சாண்டி காட்டாமல் இருங்கள்..எல்லாம் நன்றாக நடக்கும்......

இஸ்ரேலை சுரண்ட வெளிகிட்ட ஐ.நா மனித உரிமை நிறுவனம்...இனி கோவிந்தா :)

 

எல்லாம் தெரிஞ்ச தலைவர் பாதி கிணறு தான் தாண்டினார்...முடிவு தொபுக்கடீர் என்று கிணத்துக்குள்ளே... :)

 

கடைசி அரைக்கிணறாவது அந்தாள் தாண்டினார். புகை விட்ட கொஞ்சப்பேர் இப்பவும் புகை விட்ட படி தான். :)  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.