Jump to content

பேஸ்புக் மார்ச் 15இல் மூடப்படமாட்டாது


Recommended Posts

பேஸ்புக் மார்ச் 15இல் மூடப்படமாட்டாது

பிரதான நிறைவேற்று அதிகாரியான மார்க் சுக்கெபேக் தனது பழைய வாழ்வுக்கு திரும்ப விரும்புவதாலும் இந்த பைத்தியத்துக்கு முடிவு வேண்டும் என விரும்புவதாலும் பேஸ்புக் இணையத்தளம் மார்ச் 15ஆம் திகதியுடன் மூடப்படவுள்ளதாக இணையத்தில் தவறான வதந்தி பரவிவருகின்றது. இது முற்றுமுழுதான பொய்த்தகவல் என பேஸ்புக் நிறுவனத் தொடர்பாடல் பணிப்பாளர் லரி யூ உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதை மூடிவிடுமாறு எமக்கு முன்மொழிவு எதுவும் வரவில்லை. எமக்கு நிறைய வேலை இருக்கிறது. எனவே நாம் எப்போதும் போல வேலை செய்வோம் என அவர் கூறினார்.

பல்வேறு பிரபல நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு நிதி கிடைத்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் நாம் ஏன் பேஸ்புக்கை மூட வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.

வேற்றுலக விண்வெளிக்கலங்கள் பூமியை தாக்கவுள்ளன, மிச்செல்; ஒபாமா கர்ப்பமாக உள்ளார் போன்ற பொய்யான தகவல்களை வெளியிட்ட ஒரு இணையத்தளத்துக்கு பேஸ்புக் இணைப்பை வழங்க மறுத்துவிட்டது. இந்த இணையத்தளமே இப்படி வீண் புரளியை கிளப்பிவிட்டது என அவர் கூறினார். இவ்வளவு விரைவாக இந்த பொய் பரவியதை பார்க்கும்போது எதைச் சொன்னாலும் இந்த மக்கள் நம்பிவிடுவார்களோ என யோசிக்க வேண்டியுள்ளது என அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/36086--15-.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகநூல்பற்றி அனேகமாக ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் இப்படியான செய்திகள் வருவது வளமையாகிட்டு..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.