Jump to content

நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவம் 01.08.2014 ஆரம்பம்.படங்கள்,காணொளிகளை இங்கே பார்க்கலாம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1.ம் திருவிழா......படங்கள் காணொளிகள் அவ்வப்போது எடுத்து வரப்படும்..

 

10482844_813702035337239_819035700383416

 

10562968_813702058670570_370791217222373

 

 

1560583_813702022003907_3325347954617349

 

10524585_544515672321426_903675636650197

 

1560741_544515685654758_2783602082113044

 

983753_544515738988086_33050202840976557

 

10391035_544515715654755_479254741978320

 

 

1622105_813701992003910_5632278620819526

 

10574250_689453997792196_593869560015239

 

 

10305957_689454017792194_322173651363298

 

10313567_689453904458872_243418767151861

 

 
*************************************************************************************************************************************************************************************************************
 
நல்லூர் திருவிழாவிற்கான வேலைகள் முடிவு;
அடியார்களே கலாச்சார ஆடையுடன் வாருங்கள்...

நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் அடியவர்கள்
கலாச்சார ஆடைகளை அணிந்து வருமாறு யாழ்.
மாநகர சபை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்....

எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூரானின்
வருடாந்த திருவிழா ஆரம்பமாக உள்ளது.
அதனை முன்னிட்டு இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நல்லூர்
கந்தனின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாக
உள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள்
அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

தமிழர்களுடைய கலாச்சாரம் அனைவராலும் விரும்பப்படுவது.
அதற்கு என தனிச்சிறப்பும் உண்டு.
எனவே விழாக்காலத்தில் வரும் எந்த
மதத்தத்தவர்களாக இருந்தாலும் கலாச்சார
ஆடைகளை அணிந்து வாருங்கள்.
குறிப்பாக பெண்கள் தங்களது ஆடைகளில்
மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் களவினை இம்முறையும்
குறைத்துக் கொள்ள பொலிஸார்
கடமைக்கு அமர்த்தப்படுவார்கள் அதேநேரம்
ஆலயத்திற்கு வரும் அடியவர்களும் தங்கள்
உடமைகளை பாதுகாக்க வேண்டும்.

மேலும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. பகல் 12 மணியில் இருந்து 2 மணிவரையான காலப்பகுதியிலேயே ஆலய சூழலில் வாகனங்கள் செல்ல முடியும். மற்றையநேரங்களில் எக்காரணம் கொண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
மாற்று பாதைகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
10547413_811939438846832_675390363986837
 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. இவ்வளவு சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படும் நல்லூர் கந்தனும் முள்ளிவாய்க்கால் பெருந்துயரினிலிருந்து மக்களை காக்க முன்வரவில்லை.. பாவம் ஈழமக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தனில்... இன்றும் எனக்குப் பிடித்தது,
ஒரு ரூபாய் அர்ச்சனை.
தனக்கு பணம் வேண்டும் என்றால்....  கொட்டிக் கொடுக்க எத்தனையோ வழிகள் இருந்தும்,

அர்ச்சனை சீட்டின் விலை பட்டியலை உயர்த்தவில்லை.
கோவிலுக்குள்... அரசன் போனாலும், ஆண்டி போனாலும் மேல் சட்டையை கழட்டி விட்டுத் தான் போக வேண்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

....  போனாலும் மேல் சட்டையை கழட்டி விட்டுத் தான் போக வேண்டும்.

 

 

ஏன் கழட்டணும்?

இங்கேயுள்ள பெரும்பாலான அறுபடை கோயில்களில் அப்படி இல்லையே?

ஒரே இறைவனுக்கு பல்வேறு வழிபாட்டு முறை தவறல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கழட்டணும்?

இங்கேயுள்ள பெரும்பாலான அறுபடை கோயில்களில் அப்படி இல்லையே?

ஒரே இறைவனுக்கு பல்வேறு வழிபாட்டு முறை தவறல்லவா?

 

ஒவ்வொரு கோவிலுக்கும். ஒவ்வொரு தனித்துவம் உள்ளது.

கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலுக்குப் போகும் போது, வேட்டி கட்ட வேணும்.

கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு செல்லும் போது.... அரைக் கால் சட்டை போடப் படாது.

என்று... கன சட்டங்கள் இருக்கும் போது....

நல்லூர் முருகன், தனது சண்டித்தனத்தை... இதில் தன்னும் காட்டுவதில்.... நான், பெருமை கொள்கின்றேன்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு கோவிலுக்கும். ஒவ்வொரு தனித்துவம் உள்ளது.

கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலுக்குப் போகும் போது, வேட்டி கட்ட வேணும்.

கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு செல்லும் போது.... அரைக் கால் சட்டை போடப் படாது.

என்று... கன சட்டங்கள் இருக்கும் போது....

நல்லூர் முருகன், தனது சண்டித்தனத்தை... இதில் தன்னும் காட்டுவதில்.... நான், பெருமை கொள்கின்றேன்.  :)

 

தவறு...

 

நீங்கள் கூறிய கோயில்களெல்லாம் தனியார் வசம் உள்ளவை அதாவது அவாள் வசம் செல்வாக்கில், நிர்வாகத்திலுள்ளவை..(சிதம்பரம், சுசீந்திரம் கோயில்கள் அவாள் வசம் உள்ளவை.)

 

தமிழ்நாடு அரசு ஏற்று, நெறிமுறைபடுத்தப்படும் எந்த கோயில்களிலும் இந்த சட்டையில்லாமல் தான் துதிக்கவேண்டும் என்ற விதிமுறை இல்லை.

 

ஆண்களை பொது இடத்தில் சட்டையில்லாமல் பார்க்க அருவருப்பாக இல்லை? :o

மற்ற பெண்கள் கோயிலுக்கு வரவேண்டாமா? :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு...

 

நீங்கள் கூறிய கோயில்களெல்லாம் தனியார் வசம் உள்ளவை அதாவது அவாள் வசம் செல்வாக்கில், நிர்வாகத்திலுள்ளவை..(சிதம்பரம், சுசீந்திரம் கோயில்கள் அவாள் வசம் உள்ளவை.)

 

தமிழ்நாடு அரசு ஏற்று, நெறிமுறைபடுத்தப்படும் எந்த கோயில்களிலும் இந்த சட்டையில்லாமல் தான் துதிக்கவேண்டும் என்ற விதிமுறை இல்லை.

 

ஆண்களை பொது இடத்தில் சட்டையில்லாமல் பார்க்க அருவருப்பாக இல்லை? :o

மற்ற பெண்கள் கோயிலுக்கு வரவேண்டாமா? :)

 

கோவிலுக்குப் போவதே.... ஒரு வேண்டுதலுடன் தான். :) 

மற்றவன் எப்படி வாறான், என்று பார்ப்பது தான்.... எமது வேலை என்றால்.....

கோவிலுக்குள் நுழையாமல் இருக்கலாம்.

இது... பெண்களுக்கும், ஆண்களுக்கும் பொருந்தும்.

 

 தமிழ்நாட்டு கோவில்களுடன் ஒப்பிடும் போது..... நல்லூர் கோவில், ஆயிரம் மடங்கு திறம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கழட்டணும்?

இங்கேயுள்ள பெரும்பாலான அறுபடை கோயில்களில் அப்படி இல்லையே?

ஒரே இறைவனுக்கு பல்வேறு வழிபாட்டு முறை தவறல்லவா?

ராசவன்னியன், 
 
நீங்கள் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சென்றதில்லையா அங்கு ஆண்கள் மேல் சட்டையை கழட்டி விட்டுத் தான் போக வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி யாயினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ராசவன்னியன், 
 
நீங்கள் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சென்றதில்லையா அங்கு ஆண்கள் மேல் சட்டையை கழட்டி விட்டுத் தான் போக வேண்டும்.

தமிழரசு, தென் தமிழ் நாட்டின் சில பகுதிகள் கேரள நம்பூதிரிகளின் ஆளுமையில் தொன்று தொட்டு இருந்து வந்தன. அவற்றின் நடைமுறைகள்தான் இன்றும் பின்பற்றப்படுகின்றன. திருச்செந்தூர், சுசீந்திரம், கன்னியாகுமரி, பத்மனாதபுரம் என எந்த கோயில்கள் சென்றாலும் கேரள நடைமுறைதான். இவற்றில் சில கோயில்களின் வழக்கங்களுக்கு இன்னமும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால்தான் நான் பெரும்பாலான கோயில்கள் என குறிப்பிட்டேன். பழங்கால கோயில் வழிபாட்டு முறைகள், கொடுமையானதும் மற்றும் அருவருப்பானதும் ஆகும். தற்பொழுதுதான் இந்த வழிபாட்டு முறைகள் மாற்றம் பெற்று வருகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலுக்குப் போவதே.... ஒரு வேண்டுதலுடன் தான். :) 

மற்றவன் எப்படி வாறான், என்று பார்ப்பது தான்.... எமது வேலை என்றால்.....

கோவிலுக்குள் நுழையாமல் இருக்கலாம்.

இது... பெண்களுக்கும், ஆண்களுக்கும் பொருந்தும்.

 

 தமிழ்நாட்டு கோவில்களுடன் ஒப்பிடும் போது..... நல்லூர் கோவில், ஆயிரம் மடங்கு திறம். :D

 

சிரித்துக்கொண்டேன்... :lol:

வாழ்க வளமுடன்...!

(நல்லவேளை, உள்ளாடையுடன் மட்டும் பக்தர்கள் வந்தால் போதும், ஏன் அவற்றை கவனிக்கிறீர்கள்..? என நீங்கள் கேட்பீர்கள் போலுள்ளது :o )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் ஆண்கள்  போல் இல்லாமல் தொப்பை வயிற்றை சொன்னேன்.  ஆண்கள் பார்க்க நன்றாக சிலிம்மாக  இருக்க வேண்டும்  தொப்பை வயிற்றை பார்க்கும் போது அருவருப்பாகதான் இருக்கும்  நல்லூர் கோவிலில் முருகனை  கும்பிட போனால் பிள்ளையாரல்லவா கும்பிட்டு வரவேண்டியதா கிடக்கு :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கல்லூரி மாணவன்
தன் சொந்த செலவிற்கு
தன் வீட்டிலேயே திருட
எது செய்தும் பலனளிக்காமல் போக
ஒரு தந்திரம் செய்தார் அவன் தந்தை.

பணத்தை அவன் புத்தகத்தில் வைத்துவிட
அது மிகவும் பத்திரமாக இருந்தது
அதை அவன் தொடுவதே இல்லை
அதன் பக்கம் திரும்புவதே இல்லை
இது புறம்

அது போலும் இறைவனும்
மனிதன் எந்தப் பக்கம் கவனம் திரும்புவதில்லையோ...
எங்கு தன் மனதை செலுத்துவதில்லையோ...
அங்கு சென்று ஒளிந்து கொண்டான்..
இறைவன் 
மனிதனின் அகத்திலே உள்ளத்திலே ஒளிந்து கொண்டான்..!

மனிதன் இன்னமும் புறத்திலேயும்,
கோவில்களிலும் சடங்குகளிலும் தேடிக்கொண்டிருக்கின்றான்!
அதனால் அவனும், மனிதன் கையில் சிக்குவதில்லை!!

 

இது நல்லூர் கந்தனுக்கும், நெல்லூர் சித்தனுக்கும், கண்டி கதிர்காமனுக்கும் etc.. பொருந்தும்.. :icon_idea:

 

-படித்து ரசித்தது (தமிழ்சிறிக்காக.. :))

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ சொன்ன பிழையான செய்தியை நம்பியிருக்கார் ராஜ வன்னியனண்ணை கதிர்காமம் கண்டியில் இல்லை .என்ன தெனாலி திரைப்படம் பார்த்ததோ

 

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ சொன்ன பிழையான செய்தியை நம்பியிருக்கார் ராஜ வன்னியனண்ணை கதிர்காமம் கண்டியில் இல்லை. .என்ன தெனாலி திரைப்படம் பார்த்ததோ :lol: :lol: :lol:

 

ஜீ....

 

கதிர்காமம் உவா பிரதேசத்தில், யால தேசிய வனப்பகுதியில், திஸமஹரம ஊருக்கு அருகில் இருக்கிறது.. தமிழகத்தில் நாங்கள் வேண்டுவது "கண்டி கதிர்காமா...கந்தா..." என்று ஒரு flow வில் சொல்வது..

 

இதற்கு ஏன் தெனாலியை இழுக்கிறீர்கள்..?

 

பழமொழியை சொன்னா ரசிக்கணும், ஆராயப்படாது, கண்டியளோ? :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

இது நல்லூர் கந்தனுக்கும், நெல்லூர் சித்தனுக்கும், கண்டி கதிர்காமனுக்கும் etc.. பொருந்தும்.. :icon_idea:

------

 

 

யாரோ சொன்ன பிழையான செய்தியை நம்பியிருக்கார் ராஜ வன்னியனண்ணை கதிர்காமம் கண்டியில் இல்லை .என்ன தெனாலி திரைப்படம் பார்த்ததோ

 

:lol: :lol: :lol:

 

நானும்... இதனை வாசித்தேன், முனிவர்.

ஆனால்.... கண்டி கதிர்காமன் என்றதை கவனிக்கமால் விட்டு விட்டேன்.

வன்னியன் வந்து  மாற்ற முதல், ஒரு பாதுகாப்புக்காக.... "கொப்பி" எடுத்து வைக்கப் பட்டுள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்... இதனை வாசித்தேன், முனிவர்.

ஆனால்.... கண்டி கதிர்காமன் என்றதை கவனிக்கமால் விட்டு விட்டேன்.

வன்னியன் வந்து  மாற்ற முதல், ஒரு பாதுகாப்புக்காக.... "கொப்பி" எடுத்து வைக்கப் பட்டுள்ளது. :D

 

நான் ஏனப்பு மாற்றப் போகிறேன்? :)

Never!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர் நாடுகளிலை இருக்கிற எங்கடை கோயில்வளியை நடக்கிற கூத்தை விட நல்லூர் ஆயிரம் மடங்கு திறம்..... :D
 
 
நல்லூர்கந்தனுக்கு அரோகரா...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொலிக்கு நன்றி  கு . சா...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு, தென் தமிழ் நாட்டின் சில பகுதிகள் கேரள நம்பூதிரிகளின் ஆளுமையில் தொன்று தொட்டு இருந்து வந்தன. அவற்றின் நடைமுறைகள்தான் இன்றும் பின்பற்றப்படுகின்றன. திருச்செந்தூர், சுசீந்திரம், கன்னியாகுமரி, பத்மனாதபுரம் என எந்த கோயில்கள் சென்றாலும் கேரள நடைமுறைதான். இவற்றில் சில கோயில்களின் வழக்கங்களுக்கு இன்னமும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால்தான் நான் பெரும்பாலான கோயில்கள் என குறிப்பிட்டேன். பழங்கால கோயில் வழிபாட்டு முறைகள், கொடுமையானதும் மற்றும் அருவருப்பானதும் ஆகும். தற்பொழுதுதான் இந்த வழிபாட்டு முறைகள் மாற்றம் பெற்று வருகின்றன.

உண்மையா?
 ஈழத்தில் எல்லா கோவில்களிலும் இந்த சட்டையை கழட்டும் பழக்கம் உள்ளது. அதை கடவுளுக்கு கொடுக்கும் ஒரு மரியாதையாக செய்து வந்திருக்கலாம். விதை நிலங்களில் செருப்புடன் செல்வதையே முன்பு விரும்புவதில்லை. நான் செருப்புடன் சென்று பழசுகளிடம் பலமுறை பேச்சு வாங்கி இருக்கிறேன். அதை அவர்கள் மண்ணுக்கு கொடுக்கும் ஒரு மரியாதையாக கருதி வந்தார்கள். இனி வரும் காலங்களில் இவை இல்லாமல் போய்விடுவதோடு..............      விவசாயத்துறை காலணிகள் கட்டாயம் அணிய வேண்டும் என்று ஒரு சட்டத்தை கூட பாதுகாப்பு கருதி நடைமுறை படுத்தலாம்.
அவர்களுடைய காலத்திற்கு ஏற்ப அவர்கள் அவர்களது நடைமுறைகளை வைத்திருந்தார்கள். எமது காலத்திற்கு உகந்தவையை நாம்தான் உருவாக்க வேண்டும்.
 
கேரள மக்களுக்கும் எமக்கும் நிறைய தொடர்பு இருக்கிறதே ....? இது எப்படி வந்திருக்கும்?
சேர மன்னனின் ஆட்சி ஈழத்திலும் பரந்து இருந்திருக்குமா?
தமிழகம்தான் எமக்கு மிகவும் அருகில் இருக்கிறது.
 
எனது தாயாரின் சொந்த இடம் நெடுந்தீவு .... இது ராமஸ்வரத்திட்கும் யாழ்பானத்திகும் இடையில் இருக்கும் ஒரு சிறிய தீவு. இவர்களுடைய தமிழுக்கும் மதுரை தமிழுக்கும்  நிறைய தொடர்பு இருக்கிறது  மதுரை தமிழர்கள்  பேசும் பல சொல்லாடல்களை எனது தாயரின் உறவினர்கள் பேசுவார்கள்.
 
அதேபோல் எனது தந்தையின் பாட்டி ....... என்ன மோனை பறையிறாய்? என்று மலையாளத்திலையே  பேசுவார். எமது ஊர் பாட்டிமார் நிறைய மலையாள சொற்கள் பாவிக்கிறார்கள். 
 
இப்போ மலையாளிகள்தான் எம்மை கொன்று குவிக்கிறார்கள். ஒன்றுமே புரியவில்லை.
ஆழமான ஆய்வை யாரும் சரியாக செய்யவில்லை என்பது மட்டும் தெரிகிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையா?
 ஈழத்தில் எல்லா கோவில்களிலும் இந்த சட்டையை கழட்டும் பழக்கம் உள்ளது. அதை கடவுளுக்கு கொடுக்கும் ஒரு மரியாதையாக செய்து வந்திருக்கலாம்.
 
......
 
இப்போ மலையாளிகள்தான் எம்மை கொன்று குவிக்கிறார்கள். ஒன்றுமே புரியவில்லை.
ஆழமான ஆய்வை யாரும் சரியாக செய்யவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

 

மல்லுகளிடமுள்ள ஒற்றுமை நம்மிடம் இல்லை. இதை நான் தினந்தோறும் இங்கே பார்த்து வருகிறேன். எந்த ஒரு புதிய இடத்திலும் அறிமுகமாகாதவர்கள் சந்தித்துக்கொண்டால், "மலையாளியோ...?" என கேட்டுவிட்டே மற்றவைகளை பேசுவர். ஒரே மல்லு இனமென்றால் காரியம் உடனே கைகூடிவிடும்..அவர்களின் நெட்நொர்கின் வலிமை அப்படி! :)

பழங்கால சேர நாட்டு மக்களே(மல்லு) தன் சுயமிழந்து சோரம்போன இனம்தான். வடக்கேயிருந்து பிழைக்க வந்த நம்பூதிரிகள், சேர நாட்டு சிற்றரசுகளை, தாங்கள் கடவுளின் தேவ பாசையை கற்ற இறை ஏஜெண்டுகளென மூளை சலவை செய்து, அரசனை கைக்குள் போட்டு தங்கள் விஷத்தை ஆகம விதிகள் என உருவாக்கி,  மக்களை பயமுறுத்தி ஆட்டுவிக்க அவர்கள் தோற்றுவித்த நடைமுறைகள்தான் இப்போதிருக்கும் கடவுளின் வழிபாட்டு முறைகள்..தென் தமிழ்நாட்டின் சில கோயில்களும் முன்பு நம்பூதிரிகளின் வழிகாட்டலின் கீழ் இருந்தன..

தான் ஆளுமையுடன் வாழ வகுத்த உயர்சாதி, கீழ்சாதி என்ற பாகுபாட்டு அநீதியை, நம்பூதிரி cum பிராமணாள் கூட்டு அடக்குமுறையை தட்டிக்கேட்டவர்கள் தான் ஈ.வெ.ரா. பெரியாரின் திராவிட கட்சியை சேர்ந்தவர்கள்.. இந்த விடயத்தில் பெரியாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்கள் இல்லையெனில், தமிழ் நாட்டில் இன்றும் கோயில்களில் அவாள்கள் அட்டகாசமே, அடக்குமுறை கொடுமையே மேலோங்கியிருக்கும்.

 

ஈழத்திலும் இந்த வழிபாட்டுமுறைகளின் தாக்கம் கலாச்சார பரிமாற்றம் மூலம் பரவி இருந்திருக்கும்..அங்கே இன்னொரு பெரியார் வந்து சுளுக்கெடுத்தால் தமிழகம் போல் வழிபாட்டு முறை எல்லாம் மேம்பட்டுவிடும்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் எல்லா கோவில்களிலும் இந்த சட்டையை கழட்டும் பழக்கம் உள்ளது

அத்துடன் பாதணி

 

இதனால் சிலர் கோயிலுக்குள் வராமல் தவிர்ப்பதுமுண்டு :( 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் எல்லா கோவில்களிலும் இந்த சட்டையை கழட்டும் பழக்கம் உள்ளது

அத்துடன் பாதணி

 

இதனால் சிலர் கோயிலுக்குள் வராமல் தவிர்ப்பதுமுண்டு :( 

 

எனது ஊரிலும், அண்டைய ஊர்களிலும் மேற்சட்டையுடன் வருபவர்களை வெளியேற்றுவதற்கென்றே ஒரு குழு தனியாக இயங்கும். :D
 
Spoiler
திருவிழாவிலை பந்தா காட்டுறதுக்கெண்டே சேட்டுக்கு கஞ்சிபோட்டு முறுக்கி  அயன் பண்ணிக்கொண்டு வருவினம். :lol: 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

....

இப்போ மலையாளிகள்தான் எம்மை கொன்று குவிக்கிறார்கள். ஒன்றுமே புரியவில்லை.
ஆழமான ஆய்வை யாரும் சரியாக செய்யவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

 

பூகோள ரீதியாக ஒன்றையொன்று சார்த்திருக்க வேண்டிய சூழலில், போட்டி,பொறாமையில் ஒற்றுமையில்லாத வரலாற்று பாரம்பரியமிக்க நம் இனத்தை அவர்கள் வயிற்றெரிச்சலில்  போட்டுப் பார்ப்பது விந்தையல்ல.. (எல்லை தகராறு, நதி நீர் தகராறு, உணவு, மின்சாரம் பகிர்தலில் வேற்றுமை, நம் பழமையான மொழியின் பால் உள்ள பொறாமை என பல காரணிகள் இவற்றுள் அடங்கும்.)

 

மொத்தத்தில், காலச் சூழலால் தினமும் சோரம் போன மாதருக்கு, அருகே இருக்கும் பத்தினியைக் கண்டால் வரும் வழக்கமான வயிற்றெரிச்சல் பொறாமை தான்.. :lol:

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.