Jump to content

யுவராஜ் சிங் அணியுடனடான கிரிக்கெட் போட்டியில்5 சிக்ஸர்கள் அடித்து வென்ற யூஸைன் போல்ட்: 100 மீற்றர் ஓட்டத்தில் போல்ட்டை முந்தினார் யுவராஜ்


Recommended Posts

யுவராஜ் சிங் அணியுடனடான கிரிக்கெட் போட்டியில்5 சிக்ஸர்கள் அடித்து வென்ற யூஸைன் போல்ட்: 100 மீற்றர் ஓட்டத்தில் போல்ட்டை முந்தினார் யுவராஜ்
sio2bjox.jpg

100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் உலக சம்பியனும் ஒலிம்பிக் சம்பியனுமான  ஜமைக்கா வீரர் யூஸைன் போல்ட், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தலைமையிலான அணியுடனான கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் 5 சிக்ஸர்களை அடித்து தனது அணியை வெற்றிபெறச் செய்துள்ளார்.

இந்தியாவின் பெங்களூர் நகரிலுள்ள சின்னஸ்வாமி அரங்கில் நேற்றுமுன்தினம் இக்கண்காட்சி போட்டி நடைபெற்றது.

ec6iujtp.jpg
பியூமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான அணியும் உசைன் போல்ட் தலைமையிலான அணியும் மோதின.

தலா 4 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யுவராஜ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 58 ஓட்ங்களைப் பெற்றது. யுவ்ராஜ்  14 பந்துகளில் ஒரு சிக்ஸர் உட்பட 24 ஓட்ங்களைப்பெற்றார்.r7wfiwi9.jpg

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யூசைன் போல்ட் அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.  யூஸைன் போல்ட் 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பௌண்ட்ரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களைக் குவித்தார்.6ctsn7t9.jpg

அதேவேளை 100 மீற்றர் ஓட்டப்போட்டியொன்றிலும் யூஸைன் போல்ட்டும் யுவராங் சிங்கும் பங்குபற்றினர். இப்போட்டியில்,  உலக சாதனை வீரரரான யூஸைன் போல்;ட்டை யுவராஜ் சிங் முந்திச்சென்றமை வேடிக்கையானதாக இருந்தது.b3fwsiwq.jpg

 

j7bvvb89.jpg

(படங்கள்: ஏ.எவ்.பி)
- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=6707#sthash.R9KZQ3nf.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.