Jump to content

உலக டெஸ்ட் அரங்கில் தனது 10 ஆவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார் சங்ககாரா


Recommended Posts

உலக டெஸ்ட் அரங்கில் தனது 10 ஆவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார் சங்கா

உலக டெஸ்ட் அரங்கில் தனது 10 ஆவது இரட்டைச் சதத்தை பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் சற்றுமுன்னர் பதிவு செய்தார் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் குமார சங்கக்கார.

இதனூடாக டெஸ்ட் வரலாற்றில் இரட்டைச் சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் மேற்கிந்தியத்தீவுகளின் ப்ரைன் லாரைவைப் பின்தள்ளி 2 ஆம் இடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்தள்ளார்.

ஆஸ்திரேலியாவின் டொனால்ட் ப்ரட்மன் 12 இரட்டைச்சதங்களைப் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

குமார் சங்கக்காரவின் இரட்டைச் தங்கள்

1. பாகிஸ்தான் 2002 மார்ச் 230
2. சிம்பாப்வே 2004 மே 270
3.தென்னாபிரிக்கா 2004 ஓகஸ்ட் 232
4. தென்னாபிரிக்கா 2006 ஜுலை 287
5. பங்களாதேஷ் 2007 ஜுலை 200
6. பங்களாதேஷ் 2007 ஜுலை 222
7. இந்தியா 2010 ஜுலை 219
8. பாகிஸ்தான் 2011 ஒக்டோபர் 211
9. பங்களாதேஷ் 2014 பெப்ரவரி 319
10. பாகிஸ்தான் 2014 ஓகஸ்ட் 200

தவறவிடப்பட்ட இரட்டைச் சதங்கள்

1. பாகிஸ்தான் 2006 மார்ச் 185
2. அவுஸ்திரேலியா 2007 நவம்பர் 192
3. பாகிஸ்தான் 2012 ஜுன் 199
4. பாகிஸ்தான் 2012 ஜுலை 192

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=576013311609196014#sthash.aYMkwyOT.dpuf

Link to comment
Share on other sites

பிரையன் லாரா சாதனையை முறியடித்த சங்கக்காரா
 

 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 10வது இரட்டைச் சதத்தை எடுத்த குமார் சங்கக்காரா மேற்கிந்திய நட்சத்திரம் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்தார்.

 

லாரா 9 இரட்டைச் சதங்களை அடித்திருந்தார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் 12 இரட்டைச் சதங்களை அடித்துள்ளார்.

ஆனால் 190 ரன்களுக்கும் அதிகமாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் ரன்கள் எடுத்த வகையில் சங்கக்காரா 13 முறை எடுத்து டான் பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 221 ரன்களை எடுத்தார் சங்கக்காரா. சதங்கள் கணக்கில் 37-ஐ எட்டியுள்ளார் சங்கக்காரா.

டாப் இரட்டை சத நாயகர்கள்:

 

டான் பிராட்மேன் - 12

குமார் சங்கக்காரா - 10

பிரையன் லாரா - 9

வாலி ஹேமண்ட் (இங்கிலாந்து): 7

மஹேலா ஜெயவர்தனே: 7

சச்சின் டெண்டுல்கர் - 6

ரிக்கி பாண்டிங் - 6

விரேந்திர சேவாக் - 6

மர்வான் அட்டப்பட்டு - 6

ஜாவேத் மியாண்டட் - 6

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/article6301157.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.