Jump to content

இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2014


Recommended Posts

இந்திய அணி சரண்டர்: மூன்றாவது டெஸ்டில் படுதோல்வி
ஜூலை 31, 2014.

 

சவுத்தாம்ப்டன்: சவுத்தாம்ப்டன் டெஸ்டின் கடைசி நாளிலும், இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி ‘சரண்டர்’ ஆக, இங்கிலாந்து அணி 266 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இளம் வீரர் ரகானே மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார்.

 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில், இந்தியா, 1–0 என, முன்னிலை வகித்தது.                                                                               மூன்றாவது டெஸ்ட், சவுத்தாம்ப்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 569/7 ரன்கள் குவித்து, ‘டிக்ளேர்’ செய்தது. இந்தியா 330 ரன்கள் மட்டும் எடுத்தது.

 

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205/4 ரன்கள் எடுத்து, ‘டிக்ளேர்’ செய்தது. பின், 445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, நான்காவது நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து, 333 ரன்கள் பின்தங்கியிருந்தது. ரகானே(18), ரோகித் சர்மா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.     

 

விக்கெட் மட மட...:

நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ரோகித் சர்மா (6) நேற்று சந்தித்த 3வது பந்திலேயே அவுட்டாகி, அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில், கேப்டன் தோனி (6), வந்த வேகத்தில் வெளியேற, இந்திய அணியின் தோல்வி உறுதியானது.

பின் ரகானேயுடன் இணைந்த ஜடேஜா சற்று தாக்குப்பிடித்தார். ரகானேவுக்கு கைகொடுப்பார் என்ற எதிர்பார்த்த நிலையில்,  மொயீன் அலியின் சுழலில், ஜடேஜா 15 ரன்னுக்கு போல்டாகினார்.

 

இதே ஓவரில் புவனேஷ்வர் குமாரும் ‘டக்’ அவுட்டாக, இங்கிலாந்து வெற்றியை நெருங்கியது. தொடர்ந்து அசத்திய மொயீன் அலி, முகமது ஷமியையும் (0) போல்டாக்கினார்.

ரகானே அரைசதம்:

மறுமுனையில் மனம் தளராத ரகானே, மொயீன் அலி ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்தார். இவர் டெஸ்ட் அரங்கில் 4வது அரைசதம் கடந்தார்.

கடைசியில் பங்கஜ் சிங்கும் (9) போல்டாக, உணவு இடைவேளைக்கு முன்பாகவே,இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்னுக்கு சுருண்டு, 266 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ரகானே (52) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 6, ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

கடைசியாக பங்கேற்ற 10 டெஸ்டில் ஒரு வெற்றி கூட பெறாமல் இருந்த இங்கிலாந்து அணியின் சோகம், 11வது டெஸ்டில் வெற்றி பெற்றதுடன் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து டெஸ்ட் தொடர் 1–1 என, சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட், வரும் 7ம் தேதி, மான்செஸ்டரில் துவங்குகிறது.

 

இஷாந்த் இல்லை

லார்ட்ஸ் டெஸ்டில் அசத்திய இஷாந்த் சர்மா, கணுக்கால் காயத்தால் மூன்றாவது டெஸ்டில் (சவுத்தாம்ப்டன்) பங்கேற்கவில்லை. இவரது காயம் சரியாகவில்லை என்பதால், வரும் 7ம் தேதி மான்செஸ்டரில் துவங்கும் நான்காவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார்.

மோசமான தோல்வி

கடந்த 2011ல் நாட்டிங்காம் டெஸ்டில் 319 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில்மோசமான தோல்வியை பதிவு செய்திருந்தது. தற்போது, இரண்டாவது முறையாக இங்கு மோசமாக தோற்றுள்ளது.

 

 

http://sports.dinamalar.com/2014/07/1406826627/dhoniindiacricket.html

Link to comment
Share on other sites

மொயீன் அலியிடம் இந்தியா விக்கெட்டுகளைக் கொடுத்தது ஆச்சரியமாக உள்ளது: இயன் சாப்பல்
 

 

3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குக் காரணமானவர்களில் முதன்மையான இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் மொயீன் அலியிடம் இந்திய பேட்ஸ்மென்கள் சரணடைந்தது ஆச்சரியமளிக்கிறது என்று இயன் சாப்பல் கூறியுள்ளார்.

 

இஎஸ்பின் கிரிக் இன்ஃபோ இணையதள டாக் ஷோ ஒன்றில் அவர் இந்திய பேட்டிங் பிரச்சினைகள் பற்றி கூறியதாவது:

இந்திய பேட்ஸ்மென்களின் பிரச்சினை என்னவெனில் குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ஒரே விதத்தில் திரும்பத் திரும்ப ஆட்டமிழப்பதுதான். அதாவது பவுலர்கள் இந்த பேட்ஸ்மென்களை வீழ்த்தும் முறையை கண்டுபிடித்துள்ளனர் என்று அர்த்தம். அதனை முறியடிக்க இவர்கள் ஏதும் செய்யாமல் இருப்பது கவலையளிப்பதாகும்.

ஒரேவிதமாக ஆட்டமிழக்கக் காரணம் என்னவென்பதைக் கண்டுபிடித்து அதற்குத் தக்கவாறு அட்ஜெஸ்ட்மெண்ட்களை அவர்கள் செய்து கொள்ளவேண்டும். ஆனாலும் ஒரேவிதத்தில் ஆட்டமிழப்பது ஒரு மிகப்பெரிய கவலைதான்.

 

இதற்கு ஏதாவது வழிமுறையை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். விராட் கோலி, புஜாராவிடம் அந்தத் திறமை உள்ளது. அவர்களிடம் அதற்கான ஸ்ட்ரோக்குகள் உள்ளன. இதனை அவர்கள் சரிசெய்யாத வரை அவர்கள் தன்னம்பிக்கையுடன் ஆடுவது கடினமே.

ஷிகர் தவான் 2வது இன்னிங்ஸில் ஓரளவுக்கு சரியாகவே ஆடினார். அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். சில நல்ல பந்துகள் விழும் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் மொயீன் அலியை அவர்கள் விளையாடத் திணறியதுதான் ஆச்சரியமாக உள்ளது. ஒட்டுமொத்த இந்த டெஸ்ட் போட்டியிலும் எனக்கு அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

 

இந்தியப் பிட்ச்களில் ஆடுவது போலவே ஆடுகின்றனர். இது பிரச்சனைதான். இங்கு அணுகுமுறை வேறுமாதிரியாக இருக்க வேண்டும். இந்தியப் பிட்ச்களில் முன்னால் சென்று டிரைவ் ஆடுவது வெகு சுலபம், ஆனால் இங்கு குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்றவர்கள் இருக்கும்போது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்துகளை முன்னால் சென்று டிரைவ் ஆடுவது சிறந்த தேர்வு அல்ல.

இந்தப் பிட்ச் நல்ல பிட்ச், அனைவருக்கும் வாய்ப்பு இருந்தது. இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/article6268554.ece

Link to comment
Share on other sites

4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.

கடந்த போட்டியில் 266 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்ட இந்திய அணி, அதிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்திலும், 10 போட்டிகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கும் இங்கிலாந்து, வெற்றியைத் தொடரும் முனைப்பிலும் களம் காணுகின்றன.

 

இந்திய அணி கடந்த போட்டியில் 7 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியபோதும் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 330 மற்றும் 178 ரன்களுக்கு சுருண்டது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியாவின் பந்துவீச்சு எடுபடாமல் போனது.

 

அஸ்வினுக்கு வாய்ப்பு

4-வது போட்டியைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் இதுவரை ஒரு போட்டியில்கூட ஆடாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. அவர் களமிறங்கும்பட்சத்தில் ரவீந்திர ஜடேஜா அல்லது ரோஹித் சர்மா நீக்கப்படலாம். கடந்த ஆட்டத்தில் மோசமான ஷாட்களை கையாண்ட ரோஹித் சர்மா நீக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.

 

இதேபோல் பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் தடுமாறி வரும் ஷிகர் தவன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கௌதம் கம்பீர் சேர்க்கப்படலாம். ஒரு வேளை ரோஹித் சர்மா நீக்கப்படாத பட்சத்தில் ஷிகர் தவனை மட்டும் நீக்கிவிட்டு, அவருக்குப் பதில் அஸ்வின் சேர்க்கப்படலாம். அதேநேரத்தில் கம்பீருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அப்படியொரு சூழல் ஏற்படும்பட்சத்தில் முரளி விஜயும் புஜாராவும் இணைந்து இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கலாம்.

 

தடுமாறும் கோலி, புஜாரா

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் முரளி விஜய், அஜிங்க்ய ரஹானே ஆகியோர் மட்டுமே நம்பிக்கையளிக்கின்றனர். கேப்டன் தோனி ஓரளவு ஆடி வருகிறார். மிடில் ஆர்டரில் புஜாரா, விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து மோசமாக ஆடி வருவது கவலையளிப்பதாக உள்ளது. முரளி விஜய், ரஹானே, கோலி, புஜாரா ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் ரன் குவிப்பு அமையும்.

 

கவலையளிக்கும் பந்துவீச்சு

கடந்த போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு மெச்சும்படியில்லை. புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட அனைத்து பௌலர்களுமே துல்லியமாக பந்துவீசவில்லை. ஆனால் இவர்களைவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் உள்ளது இந்தியா. கணுக்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் புவனேஸ்வர் குமார் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவர் களமிறங்குவது குறித்து டாஸ் போடும் நேரத்திலேயே முடிவு செய்யப்படும்.

 

கடந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங்கிற்கு ஒரு விக்கெட்கூட கிடைக்காமல் போனது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதனால் இந்தப் போட்டியில் அவருக்குப் பதிலாக வருண் ஆரோன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக முகமது சமி களமிறங்குகிறார்.

கடந்த போட்டியில் இந்தியா படுதோல்வி கண்டதற்கு பீல்டிங்கும் ஒரு காரணம். ஸ்லிப் திசையில் கிடைத்த கேட்சுகளையெல்லாம் இந்திய வீரர்கள் கோட்டைவிட்டதால் வாழ்வு பெற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வலுவான ஸ்கோரை குவித்தனர். எனவே இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு சவால் அளிக்க இந்தியாவின் பீல்டிங்கில் துல்லியமாக அமைவது அவசியம்.

 

பார்மில் இங்கிலாந்து

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் குக், இயான் பெல் ஆகியோர் மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது அந்த அணியின் மிகப்பெரிய பலமாகும். மிடில் ஆர்டரில் கேரி பேலன்ஸ் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இதுதவிர விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் பின்வரிசை பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்.

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து அபாரமாக பந்துவீசி வருகிறார். ஜடேஜாவை தள்ளிவிட்டதாக எழுந்த சர்ச்சையிலிருந்து எவ்வித தண்டனையுமின்றி தப்பித்தஆண்டர்சன், இந்திய பௌலர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் ஜோர்டான் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர்.

 

சுழற்பந்து வீச்சில் மொயீன் அலியை நம்பியிருக்கிறது இங்கிலாந்து. கடந்த போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்தியாவின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மொயீன் அலி, இந்தப் போட்டியிலும் அதே உத்வேகத்தில் பந்துவீசுவார் என நம்பலாம்.

 

இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், முரளி விஜய், கௌதம் கம்பீர், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி, அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது சமி, புவனேஸ்வர் குமார், ஈஸ்வர் பாண்டே, பங்கஜ்சிங், வருண் ஆரோன், நமன் ஓஜா.

இங்கிலாந்து: அலாஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் ஜோர்டான், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் ராப்சன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஸ்டீவன் ஃபின்.

 

 

 

http://tamil.thehindu.com/sports/4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6290527.ece

Link to comment
Share on other sites

பிராட் 6 விக்கெட்டுகள்; இங்கிலாந்து வேகத்தில் 152 ரன்களுக்கு சுருண்டது இந்தியா

 

மான்செஸ்டரில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்தியா 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்ற தோனி, ஆஸ்திரேலியா போல் ஈரப்பதத்துடன் கடினமாக இருந்த பிட்சில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அவரது முடிவை அவரது பேட்டிங்கும்,அஸ்வினின் அதிரடியுமே காப்பாற்றியது. ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 6 பேட்ஸ்மென்கள் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்து டெஸ்ட் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளது இந்தியா.

பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகி எழும்பத் தொடங்கியது முதல் ஓவரிலிருந்து இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கடைசி ஓவர் வரை நீடித்தது. காரணம் இந்தியா 46.4 ஓவர்களிலேயே ஆட்டமிழந்தது. பந்தின் சிவப்பு நிறம் மாறவேயில்லை. அதற்குள் இந்தியா ஆல் அவுட் ஆனது.

 

8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்:

தவனுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட கம்பீர் 2 லெக் திசைப் பந்துகளை தலா 2 ரன்கள் எடுத்து 4 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டூவர்ட் பிராட் வீசிய அருமையான எழும்பி வந்த பந்தை உள்ளே வருகிறது என்று நினைத்து லெக் திசையில் ஆடுமாறு மட்டையைத் திருப்பினார் ஆனால் பந்த் ஸ்விங் ஆகி வெளியே செல்லும் போது கம்பீர் மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் திசையில் ஜோ ரூட் கையில் கேட்ச் ஆனது.

 

14 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காத முரளி விஜய் 3வது டெஸ்ட் வரை ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கர்களைக் கணித்து ஆடாமல் விட்டு வந்தார். ஆனால் இன்று ஆண்டர்சன் பந்து ஒன்று உள்ளே வந்து பிட்ச் ஆகி வெளியே செல்ல விஜய் கிரீசில் நின்றபடி அரைகுறை ஃபுட்வொர்க்கில் மட்டையை நீட்ட எட்ஜ் ஆகி குக் கையில் எளிதான கேட்ச் ஆனது.

அதே ஓவரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவின் விராட் கோலி ரன் எடுக்காத நிலையில் ஆண்டர்சன் வீசிய அவுட் ஸ்விங்கருக்கு ஆஃப்-காக் ஃபார்வர்டில் மட்டையைத் தொங்க விட பந்து விளிம்பில் பட்டு குக்கிடம் மீண்டும் கேட்ச் ஆனது. கோலி மிகுந்த வருத்தத்துடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

புஜாரா 6 பந்துகள் விளையாடி ரன் எடுக்காத நிலையில் பிராட் வீசிய பந்தை தரையில் ஆட முடியாமல் போக அது நேராக ஜோர்டானிடம் கேட்ச் ஆனது. ஜோர்டான் அதனை அற்புதமாகப் பிடித்தார்.

 

தோனி-ரஹானே மீட்பு முயற்சி:

6வது ஓவரிலேயே தோனி களமிறங்கியது இதுவே முதல்முறையாக இருக்கலாம். அவரும் ரஹானேயும் இங்கிலாந்து பந்து வீச்சின் உச்சபட்ச தாக்குதலை எதிர்கொண்டு ஓரளவுக்கு திறமையுடன் ஆடினர்.

ரஹானே இரண்டு மிட் ஆஃப் டிரைவ்களை அபாரமாக ஆடினார். இருவரும் ஸ்கோரை மெதுவே 50-ஐ தாண்டி நகர்த்தினர். ரஹானே 52 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய ஸ்கோர் 61ஆக இருந்தது.

 

அப்போது ஜோர்டான் வீசிய பந்தை அவர் ஆடியிருக்கவே வேண்டாம். ஸ்விங் ஆகிக் கொண்டிருக்கும் போது ஏதோ இந்திய பிட்ச்களில் ஆடுவதுபோல் அரைகுறை ஃபுட்வொர்க்கில் வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆட முயன்றார். இந்திய பிட்சாக இருந்திருந்தால் அது கவர் திசையில் பறந்திருக்கும். ஆனால் இங்கு பந்து மட்டையின் விளிம்பில் பட்டு பெல்லிடம் எளிதான கேட்ச் ஆனது. வலைப்பயிற்சியில் ஸ்லிப் கேட்சிங் பயிற்சி அளிப்பது போல் இருந்தது அவர் ஷாட். பெரும்பாலான இந்திய பேட்ஸ்மென்களின் ஷாட்களும் அத்தகைய கேட்சிங் பயிற்சிகளே என்பதைக் கூறத் தேவையில்லை. இந்தியா 62/5 என்று ஆனது.

 

இன்னிங்ஸின் 4வது டக்:

ஜடேஜா களமிறங்கினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மீதான தீர்ப்பு யாருக்கு அதிக வலியை ஏற்படுத்தியிருக்குமோ என்னவோ ஜடேஜாவுக்கு ஏற்படுத்தியிருக்கும் குறைந்தது அவரிடம் விக்கெட் கொடுக்க மாட்டார் என்றே எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் ஜடேஜாவை சொல்லி வைத்து லீக் பிளேயர் போல் எடுத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஆம்! இரண்ட்டு பந்துகளை அவுட் ஸ்விங்கராக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசி விட்டு, ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தார், பந்து முழு அளவில் விழுந்தது. ஜடேஜா அதனை பிளிக் செய்ய முயன்று நேராக காலில் வாங்க நடுவர் வானை நோக்கி ஆள்காட்டி விரலை உயர்த்தினார். இந்தியாவின் இந்த இன்னிங்ஸின் 4வது டக்கை எடுத்துச் சென்றார்

ஜடேஜா பெவிலியனுக்கு.

அஸ்வின் அதிரடி:

 

63/6 என்ற நிலையில் அஸ்வின் களமிறங்கினார். உண்மையில் இந்த அதிவேக பிட்சில் இதுவரை ஆடாமல் ஆடவந்த வீரர் போல் அவர் ஆடவில்லை. முறையான பேட்ஸ்மென் போல் ஆடினார். அதுவும் லூஸ் பந்துகளை அடித்து ஆடினார்.

3 பவுண்டரிகள் அடித்த அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஷாட் பிட்ச் பந்து ஒன்றை சிக்சருக்கும் தூக்கினார். பேக்ஃபுட் பஞ்ச் ஷாட்டையும் அவர் ஆடினார். ஒரு கேட்ச் அவருக்கு விடப்பட்டது என்றாலும் அவரது ஆட்ட முறை கவருவதாக அமைந்தது.

 

42 பந்துகளைச் சந்தித்த அஸ்வின் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 40 ரன்களை எடுத்தார். தோனியும், இவரும் சேர்ந்து 14 ஓவர்களில் 66 ரன்களைச் சேர்த்தனர்.

ஸ்கோர் 129 ரன்களை எட்டியபோது பிராட் வீசிய பவுன்சரை புல் ஷாட் ஆடி ராப்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அஸ்வின். இந்தியா 129/7 என்று ஆனது.

தோனியின் பொறுப்பான டெஸ்ட் இன்னிங்ஸ்:

இந்தியாவுக்கு வெளியே குறிப்பாக இங்கிலாந்தில் தோனியின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் இன்று கைகூடியது. 8/4 என்ற நிலையில் களமிறங்கிய தோனி ஓரிரு ஷாட்களை எட்ஜ் செய்தாலும் பெரும்பாலும் சரியாகவே ஆடினார்.

 

அவர் தனது 15 பவுண்டரிகளில் 10 பவுண்டரிகளையாவது அபாரமாக ஆடினார் என்று கூறலாம். சக்தி வாய்ந்த கட் ஷாட். கவர் மற்றும் மிட் ஆஃப் திசையில்டிரைவ் மற்றும் புல் ஷாட், பிளிக் என்று அவர் பவுண்டரிகளை அடித்தார்.

133 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த தோனி, பிராட் வீசிய பந்தை மிட் விக்கெட்டில் ஒரு டுவெண்டி 20 ஷாட் ஆட நினைத்தார். ஆனால் அங்கு ஜோர்டான் கேட்ச் பிடித்தார்.

 

புவனேஷ் குமார் உள்ளே வந்த பந்தை ஸ்டம்பை கவர் செய்யாமல் ஆடாமல் விட்டு ஸ்டம்ப்களை இழந்தார். பங்கஜ் சிங்கையும் பிராட் வீழ்த்தினார்.

ஸ்டூவர்ட் பிராட் 13.4 ஒவர்கள் வீசி 6 மைடன்களுடன் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ஜோர்டான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் நாள் ஆட்டத்தில் இன்னமும் 41 ஓவர்கள் உள்ள நிலையில் இங்கிலாந்து களமிறங்கியுள்ளது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-152-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6291860.ece

 

Link to comment
Share on other sites

சுருண்டது இந்திய அணி: தோனி ஆறுதல் அரைசதம்
ஆகஸ்ட் 07, 2014.

 

மான்செஸ்டர்: நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி 152 ரன்களுக்கு சுருண்டது. ‘வேகத்தில்’ மிரட்டிய ஸ்டூவர்ட் பிராட் 6, ஆண்டர்சன் 3 விக்கெட் கைப்பற்றினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் தோனி மட்டும் அரைசதம் அடித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், தொடர் 1–1 என சமநிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட், மான்செஸ்டரில் நேற்று துவங்கியது.

 

காம்பிர் வருகை:

இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோர் நீக்கப்பட்டு, கவுதம் காம்பிர், அஷ்வின், வருண் ஆரோன் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். மழை மற்றும் மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக, போட்டி அரைமணி நேரம் தாமதமாக துவங்கியது.

 

திணறல் துவக்கம்:

இந்திய அணிக்கு காம்பிர், முரளி விஜய் ஜோடி துவக்கம் கொடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், டெஸ்ட் அணியில் இடம் பிடித்த காம்பிர் (4), ஸ்டூவர்ட் பிராட் ‘வேகத்தில்’ அவுட்டானார். ஆட்டத்தின் 5வது ஓவரை வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், முரளி விஜய், விராத் கோஹ்லி ஆகியோரை வெளியேற்றி, ‘இரட்டை அடி’ கொடுத்தார். அடுத்து வந்த புஜாரா (0), பிராட் பந்தில் ‘பெவிலியன்’ திரும்ப, முதல் இன்னிங்சில் இந்திய அணி 8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

 

ரகானே ஆறுதல்:

பின் இணைந்த அஜின்கியா ரகானே, கேப்டன் தோனி ஜோடி நிதானமாக ஆடியது. இங்கிலாந்து பந்துவீச்சை கவனமாக கையாண்ட இவர்கள், விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்க முயற்சித்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த போது, ரகானே (24) அவுட்டானார். ஆண்டர்சன் பந்தில் ரவிந்திர ஜடேஜா (0) சரணடைந்தார்.

 

தோனி அரைசதம்:

அடுத்து வந்த அஷ்வின், துவக்கத்தில் இருந்து ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினார். ஆண்டர்சன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய அஷ்வின், கேப்டன் தோனிக்கு ‘கம்பெனி’ கொடுக்க, அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. ஏழாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த போது, பிராட் பந்தை துாக்கி அடித்த அஷ்வின், 40 ரன்களுடன் ‘பெவிலியன்’ திரும்பினார். கிறிஸ் வோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தோனி, டெஸ்ட் அரங்கில் தனது 32வது அரைசதத்தை பதிவு செய்தார். பிராட் ‘வேகத்தில்’ புவனேஷ்வர் (0) போல்டானார்.

பொறுப்பாக ஆடிய தோனி (71) ஆறுதல் தந்தார். அடுத்து வந்த பங்கஜ் சிங் (0) ஏமாற்றினார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 152 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. வருண் ஆரோன் (1) அவுட்டாகாமல்  இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 6, ஆண்டர்சன் 3, ஜோர்டான் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பெல் அபாரம்:

பின், முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு சாம் ராப்சன் (6), கேப்டன் அலெஸ்டர் குக் (17) ஜோடி ஏமாற்றியது. அடுத்து இணைந்த கேரி பேலன்ஸ், இயான் பெல் ஜோடி பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த போது, கேரி பேலன்ஸ் (37) அவுட்டானார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. பெல் (45), ஜோர்டான் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் வருண் ஆரோன் 2, புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

261

‘வேகத்தில்’ மிரட்டிய ஸ்டூவர்ட் பிராட், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலர்கள் பட்டியலில், சுவானை (255 விக்கெட்) முந்தி, 6வது இடம் பிடித்தார். இதுவரை பிராட், 73 டெஸ்டில் 261 விக்கெட் வீழ்த்தியுள்ளார். முதலிரண்டு இடத்தில் இயான் போத்தம் (383 விக்கெட்), ஜேம்ஸ் ஆண்டர்சன் (374 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

 

1000

நேற்று, கேப்டன் தோனி, தனது 23வது ரன்னை எட்டிய போது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில், ஆயிரம் ரன்கள் எடுத்த, 11வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை தோனி, 20 டெஸ்டில் 1048 ரன்கள் எடுத்துள்ளார். முதல் மூன்று இடங்களில், சச்சின் (2535 ரன்கள்), கவாஸ்கர் (2483), டிராவிட் (1950) ஆகியோர் உள்ளனர்.

 

6

முதல் இன்னிங்சில் இந்தியா சார்பில் முரளி விஜய், விராத் கோஹ்லி, புஜாரா, ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பங்கஜ் சிங் என 6 பேர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்கள். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில், ஒரு இன்னிங்சில், அதிக வீரர்கள் ‘டக்–அவுட்’ ஆன அணிகள் வரிசையில் முதலிடத்தை, பாகிஸ்தான் (எதிர்–வெஸ்ட் இண்டீஸ், 1980), தென் ஆப்ரிக்கா (எதிர்–இந்தியா, 1996), வங்கதேசம் (எதிர்–வெஸ்ட் இண்டீஸ், 2002) அணிகளுடன் பகிர்ந்து கொண்டது. இந்த நான்கு அணிகள் சார்பில் தலா 6 பேர் ‘டக்–அவுட்’ ஆகினர்.

 

http://sports.dinamalar.com/2014/08/1407431839/kohliindiacricket.html

 

Link to comment
Share on other sites

மழையால் இந்தியா நிம்மதி:ஆரோன், புவனேஷ்வர் அசத்தல்

ஆகஸ்ட் 08, 2014.

மான்செஸ்டர்: நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட இந்திய வீரர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்தியாவின் வருண் ஆரோன், புவனேஷ்வர் குமார் வேகப்பந்துவீச்சில் அசத்தினர். பொறுப்பாக ஆடிய இயான் பெல் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், தொடர் 1–1 என சமநிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட், மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 152 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. இயான் பெல் (45), கிறிஸ் ஜோர்டான் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

பெல் அரைசதம்:

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் இயான் பெல், டெஸ்ட் அரங்கில் தனது 42வது அரைசதத்தை பதிவு செய்தார். ‘நைட் வாட்ச்மேனாக’ களமிறங்கிய கிறிஸ் ஜோர்டான், பங்கஜ் சிங் வீசிய 39வது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 23 ரன்கள் சேர்த்த போது ஜோர்டான் (13) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய பெல் (58), புவனேஷ்வர் ‘வேகத்தில்’ வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி (13), வருண் ஆரோன் பந்தில் போல்டானார்.

மழை குறுக்கீடு:

பின் இணைந்த ஜோ ரூட், ஜாஸ் பட்லர் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டு, முன்னிலை பெற்றுத் தந்தனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்து, 85 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த போது, மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மைதானத்தில் தேங்கி இருந்த தண்ணீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக, போட்டியை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. ஜோ ரூட் (48), ஜாஸ் பட்லர் (22) அவுட்டாகாமல் இருந்தனர். மழை தயவில், இங்கிலாந்து தொடர்ந்து முன்னிலை பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், இந்திய வீரர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்தியா சார்பில் வருண் ஆரோன், புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

http://sports.dinamalar.com/2014/08/1407518013/dhoniindiacricket.html

Link to comment
Share on other sites

மீண்டும் பேட்டிங் சொதப்பல்: இந்தியாவுக்கு அதிர்ச்சி இன்னிங்ஸ் தோல்வி
 

 

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் 215 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 161 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

 

இரண்டரை நாட்களில் டெஸ்ட் முடிந்துள்ளது. ஏனெனில் 2ஆம் நாள் ஆட்டம் உணவு இடைவேளைக்குப் பிறகு நடைபெறவில்லை. நேற்றும் இன்னும் 18 ஓவர்கள் மீதமிருந்தன.

இதன் மூலம் இங்கிலாந்து தொடரில் 2-1 என்று முன்னிலை வகித்தது. நேற்று அதிகம் விக்கெட்டுகளை விடாமல் இருந்திருந்தால் இன்று இங்கிலாந்தில் புயல், மழை எச்சரிக்கை நிலவுகிறது.

புயலை விடவும் அவசரகதியில் இந்திய பேட்ஸ்மென்கள் விக்கெட்டுகள் சரிந்தன. செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்தனர். இத்தனைக்கும் ஸ்டூவர்ட் பிராட், ஆரோன் பவுன்சரில் மூக்குடைபட்டு பந்து வீச வரவில்லை.

 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு 9 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா, புவனேஷ் குமார் ரன் அவுட், கம்பீர், தோனி ஆகியோரது ஷாட்கள் பயங்கரம். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு லீக் கிரிக்கெட்டை விட மோசமாக இருந்தது இந்திய பேட்டிங்.

 

முரளி விஜய், கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்.பி. ஆனார். உள்ளே வரும் பந்துக்கு ஒரு சரியான உத்தி அவரிடம் எப்போதும் இல்லை என்பது தெரிந்தது.

கம்பீரும், புஜாராவும் தட்டுத்தடுமாறி இன்னிங்ஸ் ஸ்கோரை 53/1 என்று உயர்த்தினர். கம்பீர் தடுமாற்றத்துடன் ஆடியதால் அவரது இருப்பு எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் போகலாம் என்றே தெரிந்தது. இந்த நிலையில் ஆண்டர்சன் ஒரு பவுன்சரை வீச அதனை சுலபமாக ஆடாமல் விட்டிருக்கலாம் ஆனால் கம்பீர் அதை ஆட முயல பந்து கிளவ்வில் பட்டு அவுர் ஆனார்.

 

அடுத்த ஓவர் முதல் பந்தில் புஜாரா, மொயீன் அலி பந்தில் எல்.பி. ஆனார். ரீப்ளே பந்து ஸ்டம்பில் படாது என்று காண்பித்தாலும் அவராலும் எத்தனை நேரம் தோல்வியிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். ஆகவே நடுவரைக் குறைகூறிப் பயன் இல்லை.

 

அஜிங்கிய ரஹானே மிகவும் மோசமான தளர்வான ஷாட் ஒன்றை ஆடி மொயீன் அலி பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

விராட் கோலி, ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஏதோ கடன் பட்டிருப்பார் போல் தெரிகிறது. மீண்டும் அவரிடமே அவுட். ஒரு மாற்றத்திற்காக ஆண்டர்சன் வீசிய இன்ஸ்விங்கரை எட்ஜ் செய்தார். 2வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது 7 ரன்களில் அவர் பரிதாபமாக வெளியேறினார்.

 

ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உகந்தவரா என்பதை முடிவு செய்யவே சில காலம் தேவைப்படும். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஜேம்ஸ் ஆண்டர்சனை மேலேறி வந்து அடித்தார். ஆனால் மொயீன் அலியின் சாதுவான பந்திற்கு எட்ஜ் செய்து அவுட் ஆகி வெளியேறினார்.

மொயீன் அலிக்கு நாம் அதிக மரியாதை கொடுக்கிறோம் என்று கூறிய தோனி அவரை அடித்து ஆட முயன்றார் அவரது மிட்விக்கெட்டை நோக்கிய 20-20 ஷாட் கேரி பாலன்ஸைத் தாண்டவில்லை. வெளியேறினார்.

 

அஸ்வின் மட்டுமே ஒரு டெஸ்ட் பேட்ஸ்மெனுக்கான அத்தனை தகுதிகளுடன் விளையாடினார். கட், புல் என்று அவர் அசத்தினார். மேலும் மொயீன் அலியை அவர் மேலேறி வந்து லாங் ஆனில் ஒரு சிக்சரையும் விளாசினார். 56 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்த அவர் 46 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

புவனேஷ் குமார் 10 ரன்கள் எடுத்து நன்றாகவே ஆடினார். ஆனால் தேவையில்லாத 2வது ரன்னிற்குச் சென்று அவுட் ஆனார்.

இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகள் வீழ்த்த, ஆண்டர்சன், ஜோர்டான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வோக்ஸ் ஒரே விக்கெட்டைக் கைப்பற்றினார்.

மொத்தமே இந்தியா 2 இன்னிங்ஸ்களிலும் 90 ஓவர்களை ஆடவில்லை. இதுதான் இந்திய பேட்டிங் தரத்தை விவரிக்கும் சாராம்சமாகும்.

ஆட்ட நாயகனாக ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்யப்பட்டார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6300930.ece

Link to comment
Share on other sites

கை கொடுக்குமா கடைசி டெஸ்ட்: எழுச்சி பெறுமா இந்தியா

ஆகஸ்ட் 14, 2014.

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று துவங்குகிறது. இஷாந்த் சர்மா மீண்டும் அணிக்கு திரும்புவதால், இந்திய அணி எழுச்சி பெற்று, டெஸ்ட் தொடரை சமன் செய்ய முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. அடுத்து லார்ட்சில் இந்திய அணி வென்றது.

பின் நடந்த மான்செஸ்டர் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற, 1–2 என, இந்திய அணி பின் தங்கியுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், இன்று ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.

டெஸ்ட் தொடரில் 1–0 என முன்னிலை பெற்ற நிலையில், இந்தியாவுக்கு திடீரென பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டுள்ளது. மான்செஸ்டரில் ஸ்டூவர்ட் பிராட் காயம், ஆண்டர்சன் உடல் நலமில்லாத நிலையிலும், பொறுப்பற்ற முறையில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், இன்று தொடரை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடம் பெற்ற காம்பிர், சற்று நிலைத்து விட்டால் இங்கிலாந்துக்கு தொல்லை தரலாம். முதல் இரு டெஸ்டில் சதம் (146), அரைசதம் (95) கடந்த முரளி விஜய், அடுத்து ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

‘மிடில் ஆர்டரில்’ வரும் புஜாரா, ஒரு அரைசதம் (55) அடித்ததுடன் சரி, இதன் பின் தொடர்ந்து சறுக்கல் தான். ஒருநாள் தொடரில் இடம் பெறாத இவர், தனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோல, இழந்த ‘பார்மை’ மீட்க போராடி வரும் விராத் கோஹ்லி, ஒரே மாதிரியாக அவுட்டாவதை தவிர்த்தாலே போதும். பின் வரிசையில் கேப்டன் தோனி, ரகானேயுடன் ஜடேஜா (4 டெஸ்ட், 9 விக்.,) அல்லது அஷ்வின் என, இருவரில் ஒருவருக்கு மட்டுமே இன்று வாய்ப்பு கிடைக்கும். இந்த இடத்தில் ஸ்டூவர்ட் பின்னி வரலாம்.

இஷாந்த் வருகை:

லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி தேடித்தந்த இஷாந்த் சர்மா, கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டுள்ளார். பங்கஜ் சிங்கிற்குப் பதில் இவர் அணியில் சேர்வது, புவனேஷ்வர் குமார், வருண் ஆரோன் கூட்டணிக்கு கூடுதல் உற்சாகம்.

இலங்கைக்கு எதிராக சொந்தமண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி, தொடர்ச்சியான 10 டெஸ்ட் தோல்வி என, சோர்ந்திருந்தது இங்கிலாந்து.

தற்போது, அடுத்தடுத்து இரு டெஸ்டில் வென்றதால், அலெஸ்டர் குக் கேப்டன் பதவிக்கான ஆபத்து நீங்கியது. இயான் பெல், பேலன்ஸ், பட்லரும் தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்க்கின்றனர்.

பவுலிங்கை பொறுத்தவரை, ஆண்டர்சனுடன், ‘மூக்குடைந்த’ ஸ்டூவர்ட் பிராட் மறுபடியும் கைகோர்க்கிறார். இவர்களுக்கு மொயின் அலி (19 விக்.,) சுழலும் உதவுவதால், மற்றொரு வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

கங்குலி சாதனை சமன்

அன்னிய மண்ணில் 28 டெஸ்டில் கேப்டனாக செயல்பட்ட கங்குலி, 11 வெற்றி, 10 தோல்வி, 7 போட்டிகளை ‘டிரா’ செய்தார். இன்று இந்த சாதனையை சமன் செய்யவுள்ளார் கேப்டன் தோனி. இருப்பினும், இதுவரை 27 டெஸ்டில் 6 வெற்றி மட்டுமே கிடைத்தது. 8 ‘டிரா’ அடுத்து 13ல் தோல்விதான் கிடைத்துள்ளது.

0

கடந்த 2011, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்குப் பின், இதுவரை களமிறங்கிய 31 இன்னிங்சில், ஒரு முறை கூட இந்திய அணியின் துவக்க ஜோடி, 50 ரன்கள் எடுக்கவில்லை.

1

ஓவல் மைதானத்தில் இந்திய அணி 1936ல் முதல் முறையாக டெஸ்டில் பங்கேற்றது. இதன் பின் தற்போது வரை 11 டெஸ்டில் விளையாடியது. இதில் ஒரு டெஸ்டில் மட்டும் (1971) மட்டும் தான் வென்றது. 7 போட்டியை ‘டிரா’ செய்த இந்திய அணி, 3ல் தோற்றுள்ளது.

2

2011ல் இந்திய அணி உலக கோப்பை (50 ஓவர்) வென்றது. இதன் பின் அன்னிய மண்ணில் பங்கேற்ற 19 டெஸ்டில், 2ல் மட்டும் தான் வென்றது. 12ல் தோற்றது.

12

இத்தொடரில் இதுவரை இந்திய அணி வீரர்கள் 12 ‘அவுட்’ வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இதில் அதிகபட்சமாக தோனி 4, விராத் கோஹ்லி 2 முறை கிடைத்த வாய்ப்பை வீணடித்தனர்.

38

விக்கெட் கீப்பர் பணியில் தோனி சொதப்புகிறார். 2 ‘கேட்ச்’, ஒரு ‘ஸ்டம்பிங்’, ‘ரன் அவுட்’ வாய்ப்பை வீணாக்கிய இவர், இங்கிலாந்துக்கு அணி கடந்த 6 இன்னிங்சில், மொத்தம் 38 ரன்களை ‘பை’ (உதிரி) முறையில் எடுக்க விட்டுள்ளார்.

http://sports.dinamalar.com/2014/08/1408035822/kohlidhawan.html

Link to comment
Share on other sites

இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: தோனி ஆறுதல் அரைசதம்
ஆகஸ்ட் 15, 2014.

 

ஓவல்: ஓவலில் நடக்கும் ஐந்தாவது டெஸ்டில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் அசத்த, காம்பிர், கோஹ்லி உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் தோனி, 82 ரன்கள் எடுத்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் இந்திய அணி 148 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1–2 என பின்தங்கி உள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கியது.     

                                    

இஷாந்த் வருகை: இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா, பங்கஜ் சிங் நீக்கப்பட்டு, ஸ்டூவர்ட் பின்னி, இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மைதானம் ஈரப்பதமாக இருந்ததால், அரைமணி நேரம் தாமதமாக ‘டாஸ்’ போடப்பட்டது. இதில் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.         

                                

‘டாப்–ஆர்டர்’ ஏமாற்றம்: முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு, முதல் ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண்டர்சன் வீசிய இந்த ஓவரின் 4வது பந்தில், காம்பிர் ‘டக்–அவுட்’ ஆனார். அடுத்து வந்த புஜாரா (4), ஸ்டூவர்ட் பிராட் ‘வேகத்தில்’ போல்டானார். விராத் கோஹ்லி (6), மீண்டும் சொதப்பினார். ‘மிடில்–ஆர்டரில்’ களமிறங்கிய அஜின்கியா ரகானே (0), கிறிஸ் ஜோர்டானிடம் சரணடைந்தார். நிதானமாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் (18), கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவுட்டானார்.       

                             

தோனி ஆறுதல்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டூவர்ட் பின்னி (5), கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறினார். பவுண்டரி அடித்து, தனது ரன் கணக்கை துவக்கிய அஷ்வின் (13) நிலைக்கவில்லை. அடுத்து வந்த புவனேஷ்வர் குமார் (5), வருண் ஆரோன் (1), சொற்ப ரன்னில் ‘பெவிலியன்’ திரும்பினர்.

ஒரு கட்டத்தில், இந்திய அணியால் 100 ரன்களை எட்டுவது கடினமாக இருந்தது. ஆனால், தனிநபராக மனம் தளராமல் போராடிய கேப்டன் தோனி, அணிக்கு மூன்று இலக்க ஸ்கோரை பெற்றுத் தந்தார். பொறுப்பாக ஆடிய தோனி, வோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, டெஸ்ட் அரங்கில் தனது 33வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 82 ரன்கள் எடுத்த போது பிராட் பந்தில் அவுட்டானார்.

 

முதல் இன்னிங்சில் இந்திய அணி 148 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இஷாந்த் சர்மா (7) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஜோர்டான், வோக்ஸ் தலா 3, ஆண்டர்சன், பிராட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
‘டக்–அவுட்’

நேற்று காம்பிர், ரகானே ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானதன்மூலம், இத்தொடரில் இதுவரை இந்திய வீரர்கள் 14 முறை ‘டக்–அவுட்’ ஆனார்கள். இங்கிலாந்து சார்பில், பென் ஸ்டோக்ஸ் மட்டும் மூன்று முறை ‘டக்–அவுட்’ ஆனார்.

* ரகானே, டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

* காம்பிர், டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக, முதல் பந்தில் ‘டக்–அவுட்’ ஆனார்.

 

மீண்டும் 66/6                 

மான்செஸ்டர் டெஸ்டின் முதல், இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 66 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தது.

*கடைசி டெஸ்டில் சுதாரித்துக் கொள்வர் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம் தான் மிஞ்சியது. நேற்று 44 ரன்னுக்கே 6 விக்கெட்டுகளை இழக்க, மீண்டும் (66/6) அதிர்ச்சி தான் கிடைத்தது.

 

கவாஸ்கரை முந்திய குக்

நேற்று இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக், தொடர்ச்சியாக 107 வது டெஸ்டில் களமிறங்கி, இந்தியாவின் கவாஸ்கர் (106 டெஸ்ட்) சாதனையை முந்தினர். தவிர, இவர், மார்க் வாக் (107) சாதனையை சமன் செய்தார். தொடர்ச்சியாக 153 டெஸ்டில் பங்கேற்ற ஆலன் பார்டர் (ஆஸி.,) முதலிடத்தில் உள்ளா

 

 

 

http://sports.dinamalar.com/2014/08/1408121991/OvalTestIndiaEnglandCricketDhoni.html

Link to comment
Share on other sites

இக்கட்டான நிலையில் இந்தியா: இங்கிலாந்து வலுவான முன்னிலை
ஆகஸ்ட் 16, 2014.

ஓவல்: ஓவல் டெஸ்டில் இந்திய அணி இக்கட்டான நிலையில் சிக்கித் தவிக்கிறது. முதல் இன்னிங்சில் 237 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, வலுவான நிலையில் உள்ளது.      

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1–2 என, பின்தங்கிஉள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 148 ரன்கள் மட்டும் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்திருந்தது.கேப்டன் அலெஸ்டர் குக் (24), சாம் ராப்சன் (33) அவுட்டாகாமல்இருந்தனர்.   

              

குக் அபாரம்: நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. வருண் ஆரோன் தனது முதல் ஓவரில் ராப்சனை (37) போல்டாக்கி நம்பிக்கை தந்தார்.           

இதை, பின் வந்த பவுலர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறினர். இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் பவுலிங்கை இங்கிலாந்தின் அலெஸ்டர் குக், பேலன்ஸ் சிறப்பாக எதிர்கொண்டனர். ஆரோன் ஓவரில் இரு பவுண்டரிகள் விளாசிய பேலன்ஸ், புவனேஷ்வர், ஸ்டூவர்ட் பின்னி பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார். மறுமுனையில் இஷாந்த் மற்றும் அஷ்வின் பந்துகளில் பவுண்டரி அடித்த அலெஸ்டர்  குக், டெஸ்ட் அரங்கில் 34வது அரைசதம் எட்டினார். இவருக்கு கைகொடுத்த பேலன்ஸ் தன் பங்கிற்கு டெஸ்ட் அரங்கில் 3வது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்த நிலையில், இரு முறை தப்பிப்பிழைத்த அலெஸ்டர் குக் (79) ஒருவழியாக அவுட்டானார்.      

 

திடீர் திருப்பம்: இதன் பின் ஆட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அஷ்வின் சுழலில் பேலன்ஸ் (64) சிக்கினார். பெல்லை (7) இஷாந்த் வெளியேற்றினார். மீண்டும் அசத்திய அஷ்வின் மொயீன் அலியை (14) போல்டாக்கினார்.     

மீண்டும் ஆதிக்கம்: அடுத்து இணைந்த பட்லர், ஜோ ரூட் ஜோடி கைகொடுக்க இங்கிலாந்து அணி 300 ரன்களை எளிதாக கடந்தது. இந்நிலையில் பட்லர் (45), வோக்ஸ் (0) அடுத்தடுத்து கிளம்பினர். இருப்பினும், ஜோ ரூட் தனது 8வது அரைசதம் கடந்தார். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 387 ரன்கள் எடுத்து, 237 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஜோ ரூட் (92), ஜோர்டன் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் வருண் ஆரோன், அஷ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.      

 

வலுவான இலக்கு:           

இன்னும் 3 நாட்கள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில், வலுவான முன்னிலை பெற்றுள்ளது. இதனால், ஓவல் டெஸ்டிலும் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதே பெரிய விஷயம் தான்.

 

மீண்டும் ஏமாற்றம்                 

இங்கிலாந்து தொடரில் இந்திய வீரர்களின் பீல்டிங் மோசமாக  சொதப்புகிறது. முதல் 4 டெஸ்டில் 12 ‘அவுட்களை’ கோட்டை விட்டனர். இது 5வது டெஸ்டிலும் தொடர்கிறது. 9 ரன்னில் ‘எல்.பி.டபிள்யு.,’ அவுட்டில் இருந்து தப்பிய குக், 65 ரன்னில் கொடுத்த எளிய ‘கேட்சை’ முரளி விஜய், கை நழுவ விட்டார். அடுத்து இவர் 70 ரன்கள் எடுத்த போது, ரகானேயும் ‘கேட்ச்’ செய்யாமல் விட்டது, பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

கவாஸ்கரை முந்திய தோனி     

இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த கவாஸ்கர் (14 ) சாதனையை, ஓவல் டெஸ்டில் முந்தினார் கேப்டன் தோனி (15).      

* கடந்த 2008–09 ஆஸ்திரேலிய தொடருக்குப் பின், தோனி தொடர்ந்து நான்கு இன்னிங்சில், 50 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்துள்ளார்.     

* முதல் இன்னிங்சில் 82 ரன்கள் எடுத்த தோனி, இங்கிலாந்துக்கு எதிராக 12 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த அணிக்கு எதிராக அதிக அரைசதங்கள் அடித்தும், ஒரு சதம் கூட அடிக்காத முதல் வீரர் தோனி தான். இதற்கு முன் மான்டி நோபிள் (ஆஸி.,) 8 அரைசதம் அடித்த போதும், ஒரு சதம் கூட அடிக்கவில்லை.     

* கேப்டன் ஆன பின், டெஸ்ட் அரங்கில் 24 அரைசதம் (மொத்தம் 33) அடித்துள்ளார். டெஸ்ட் தொடரில் தோனி இப்போது தான் அதிக ரன்கள் (349) எடுத்துள்ளார். இதற்கு முன் 2012–13ல் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் 326 ரன்கள் எடுத்ததே அதிகம்.   

  

2

மான்செஸ்டரில் தோனி 71 (உதிரிகள் 12 சேர்த்து ஸ்கோர் 152 ரன்கள்), ஓவலில் 82 ரன்கள் (ஸ்கோர் 148) எடுத்தார். அதாவது கடந்த இரு இன்னிங்சில், இந்திய அணியின் 10 வீரர்கள் எடுத்த ரன்களை விட, தோனி அதிக ரன்கள் எடுத்துள்ளார்.

 

466     

இத்தொடரில் இரு அணிகளிலும் சேர்த்து 10 வது விக்கெட்டுக்கு மொத்தம் 466 ரன்கள் எடுத்தது புதிய சாதனை ஆனது. இதற்கு முன் 1924–25ல் இங்கிலாந்து–ஆஸ்திரேலிய தொடரில் 458 ரன்கள் எடுக்கப்பட்டு இருந்தது.

 

704

இங்கிலாந்து தொடரில் இதுவரை தோனி மொத்தம் 704 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதற்கு முன் கடந்த 2012–13ல் இங்கிலாந்துக்கு எதிராக 481 பந்துகளை சந்தித்ததே அதிகமாக இருந்தது.

 

அன்று 300, இன்று 200     

கடந்த 2011ல் இங்கிலாந்து மண்ணில் பங்கேற்ற டெஸ்ட் (4) தொடரில் இந்திய அணி விளையாடிய 8 இன்னிங்சில், 7 முறை 300 ரன்களை எட்டவில்லை. ஒரு முறை மட்டும் தான் 300 ரன்கள் எடுத்தது.      

 

தற்போது, முதல் இரு டெஸ்டில் அசத்திய இந்திய அணி, கடைசியாக களமிறங்கிய 4 இன்னிங்சில் 178, 152, 161, 148 என, 200 ரன்களை எட்டவே தடுமாறுகிறது.

 

http://sports.dinamalar.com/2014/08/1408208870/IndiaEnglandOvalTestCricket.html

 

Link to comment
Share on other sites

இந்தியா இன்னிங்ஸ் தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து
 

 

 

இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

லண்டனில் நடந்து முடிந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்திய - இங்கிலாந்து அணி களுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

 

இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து இந்தப் போட்டியை டிரா செய்தாலே தொடரைக் கைப்பற்றிவிடலாம். ஆனால் இந்திய அணியோ தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை ஏற்கேனவே இழந்துவிட்ட நேரத்தில் தொடரை சமனில் முடிக்கவேண்டுமெனில் 5-வது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், பரிதாபத் தோல்வியுடன் தொடரை இழந்துள்ளது இந்தியா.

 

ஆட்டத்தின் 3-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்திய அணி 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 94 ரன்களில் மிகவும் மோசமாக சுருண்டது.

துவக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் 2 ரன்னிலும், கம்பீர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா 11 ரன்களையும், விராட் கோலி 20 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரஹானே 4 ரன்களை மட்டுமே எடுத்தார். தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அஸ்வின் 7 ரன்களும் புவனேஷ்வர் குமார் 4 ரன்களும் மட்டுமே எடுத்தனர். ஆரோன் ஒரு ரன்னிலும், இஷாந்த் சர்மா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார்.

 

இங்கிலாந்து தரப்பில் ஜோர்டன் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், பிராட் மற்றும் வோக்கீஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக, இப்போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 148 ரன்களுக்கு சுருண்டது. அதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ்சை ஆடிய இங்கிலாந்து 116.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 486 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ரூட் ஆட்டமிழக்காமல் 149 ரன்களைக் குவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6326176.ece

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது உள்ள இந்தியா அணி பல்லு இல்லாத பாம்பு..............இப்படி ஒரு கேவலம் கெட்ட விளையாட்டை என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை...........குட்டி நாடான இலங்கை வீரர்களிடம் இருந்து இந்தியன் வீரர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கு.........இரண்டு மாதத்துக்கு முதல் இலங்கை அணி இங்கிலாந்து சென்று எப்படி விளையாடினார்கள்.................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.